ரஜினி, அமிதாப் இருவரில் யாருடைய குரல் சிறப்பானது என்ற கேள்விக்கு பதிலளித்த தனுஷ், 'இருவரையும் எந்த வகையிலும் ஒப்பிடவே கூடாது,' என்றார்.
ஷமிதாப் படத்தின் அறிமுக நிகழ்ச்சி டெல்லியில் நடந்தது. அப்போது தனுஷிடம் இந்தக் கேள்வியைக் கேட்டார் நிகழ்ச்சி நடத்தியவர்.
அதற்கு பதிலளித்த தனுஷ், "எதற்காக இப்படி ஒரு கேள்வி என்று புரியவில்லை. ரஜினியும் அமிதாப்பும் பெரும் சாதனையாளர்கள். இருவரையும் எந்த வகையிலும் ஒப்பிடவே கூடாது. தேவையற்றது," என்றார்.
பிப்ரவரி 6-ம் தேதி ஷமிதாப்பும், 13-ம் தேதி அனேகன் படமும் வெளியாகின்றன.
இதுகுறித்து தனுஷ் கூறுகையில், "ஷமிதாப் மீதுதான் இப்போது என் முழு கவனமும். இது மிகப்பெரிய மார்க்கெட். பெரிய அளவில் வெளியாகிறது.
அனேகனைப் பொறுத்தவரை ஒரு வாரம் படத்தை புரமோட் செய்தால் போதும். நான்கைந்து பேட்டிகள் தரவேண்டியிருக்கும். ஆனால் ஷமிதாப்புக்கு 527 பேட்டிகள்.. நாடு முழுவதும் சுற்ற வேண்டும்..." என்றார்.