கமல் ஹாசன் 57வது பிறந்த நாள்- ரசிகர்கள் ரத்ததானம், உடல் உறுப்புதானம்
நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 57வது பிறந்தாளை வழக்கம் போல எளிமையாக கொண்டாடுகிறார். கமல் பிறந்தாளையொட்டி அவரது நற்பணி மன்றத்தினர் ரத்ததானம், உடல் உறுப்பு தானம் செய்தனர்.
நடிகர் கமல்ஹாசனுக்கு இன்று 57வது பிறந்த நாளாகும். தனது பிறந்த நாளின்போது நற்பணிகள் செய்யுமாறு கமல்ஹாசன் பல ஆண்டுகளுக்கு முன்பே அறிவுறுத்தியுள்ளதால் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நற்பணிகளை செய்துவருகின்றனர் ரசிகர்கள்.
அந்த வகையில், இந்த ஆண்டும் உலகநாயகன் கமல்ஹாசனின் பிறந்த நாள் விழாவை தமிழ்நாடு முழுவதும் அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
சென்னையில் பல்வேறு இடங்களில் கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பில் ரத்ததானம், உடல் உறுப்புதானம் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான ரசிகர்கள் பங்கேற்று ரத்தானம் உடல் உறுப்புதானம் செய்தனர்.

சிவாஜி மகன் ராம்குமாரின் மகன் துஷ்யந்த் கல்யாணம்- திரையுலகம் வாழ்த்து
நடிகர்திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமாரின் மகன் துஷ்யந்த் திருமணம் சென்னையில் இன்று நடந்தது. அதில் திரையுலகினர் பலர் திரளாக கலந்து கொண்டு வாழ்த்தினர்.
துஷ்யந்த்தும் முன்பு நடிகராக இருந்தவர்தான். மச்சி, சக்சஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது சிவாஜி பிலிம்ஸ் நிறுவனப் பொறுப்பில் இருக்கிறார்.
துஷ்யந்த்துக்கும் சென்னையைச் சேர்ந்த அபிராமிக்கும் திருமணம் நிச்சயமானது. இவர்களின் திருமணம் இன்று மேயர் ராமநாதன் செட்டியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
திருமணத்தில் திரையுலகினர் பலர் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
முன்னதாக நேற்று நடந்த திருமண வரவேற்பில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு துஷ்யந்த், அபிராமியை வாழ்த்தினார். அப்போது சசிகலாவும் உடன் இருந்தார்.

கெளதம் மேனன் நாயகிகளின் 'கெளரவ' மோதல்!
கெளதம் மேனனின் நாயகிகள் இருவருக்கு இடையே பனிப்போர் மூண்டுள்ளதாம். யார் பெரியவர், யாருக்கு கிராக்கி அதிகம் என்பதில் இந்த மோதல் மூண்டு புகைச்சல் அதிகமாகியுள்ளதாம்.
கெளதம் மேனனால் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டவர் சமீரா ரெட்டி. அதேபோல கெளதம் மேனன் கைப்பிடித்து தூக்கி விட்டவர் சமந்தா. சமீரா ரெட்டி, வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார் சமீரா. அதேபோல தெலுங்கு விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் நாயகியாக நடித்தவர் சமந்தா.
நடுநிசி நாய்கள் படத்தில் சமீரா நாயகியாக நடித்தார். அதேசமயம், சமந்தாவையும் ஒரு முக்கிய வேடத்தி்ல கெளரவ வேடத்தில் நடிக்க வைத்தார் கெளதம் மேனன். அதாவது தனித் தனியாக இயக்கிய இவர்கள் இருவரையும் ஒரே படத்தில் சேர்த்து இயக்கினார் கெளதம். அங்குதான் புகைச்சலாகி விட்டதாக கூறுகிறார்கள்.
சமந்தா மீதுதான் கெளதம் மேனன் அதிகம் அக்கறை காட்டுவதாக நினைக்கிறாராம் சமீரா ரெட்டி. தன்னை தற்போது ஓரம் கட்டுவது போல கெளதம் மேனன் நடந்து கொள்கிறார். மாறாக சமந்தாவுக்குத்தான் அதிக நேரம் ஒதுக்கிறார் என்று குமுறுகிறாராம் சமீரா.
சமீரா தற்போது வேறு வேறு படங்களில் நடித்து வருகிறார். அதேசமயம், தொடர்நது கெளதம் மேனன் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார் சமந்தா. இதுவும் கூட சமீராவுக்கு புகைச்சலைக் கொடுத்துள்ளதாக கூறுகிறார்கள்.
தற்போது சமந்தா தனது புதிய படங்களை ஒப்புக் கொள்வதிலிருந்து, யாருடன் ஜோடி போடுவது என்பதிலிருந்து, எவ்வளவு சம்பளம் வாங்கலாம் என்பது வரை அனைத்துக்கும் கெளதம் மேனனிடம் ஆலோசனை கேட்பதாக தெலுங்குத் திரையுலகில் பேசிக் கொள்கிறார்கள்.
இப்படி சமந்தா ஒருபக்கம் படு வேகமாக முன்னேறிக் கொண்டிருப்பதாலும், வெடி போன்ற சூப்பர் டூப்பர் பிளாப் படங்களை தான் கொடுத்துக் கொண்டிருப்பதாலும் டென்ஷனாக இருக்கிறாராம் சமீரா.
இந்த சண்டை எங்கு போய் முடியும், வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்புடன் இரு மொழித் திரைத்துறையினரும் காத்துள்ளனர்.

ரசிகர்களின் ரசனை உயர்ந்தால் நானும் உயர்வேன் - கமல் பிறந்த நாள் செய்தி
சென்னை: ரசிகர்களின் ரசனை உயர வேண்டும். ரசனை உயர்ந்தால் நானும் உயர்வேன், என்று கமல்ஹாஸன் தனது பிறந்த நாள் செய்தியாக கூறியுள்ளார்.
கமல்ஹாஸன் இன்று தனது 57 வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.
இந்த பிறந்த நாளுக்கு அவர் ரசிகர்களுக்கு விடுத்துள்ள செய்தி:
பிறந்த நாளுக்காக ரசிகர்களுக்கு விடுக்கும் செய்தி என்னவென்று கேட்கிறார்கள். ரசனையைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும். அதுதான் முக்கியம் உங்களுக்கு நல்ல ரசனை இருக்க வேண்டும். அப்போதுதான் என் தொழில் நல்ல தொழிலாக இருக்கும். உங்கள் ரசனை உயர உயர நானும் உயர்வேன்.
என்னுடைய தனிப்பட்ட கூட்டம் ஒன்றுள்ளது. அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வதெல்லாம், சினிமா, நடிகன், நட்சத்திரம், அந்தஸ்து என்பதெல்லாம் தற்காலிகமானது என்று திண்ணமாக நம்புபவன் நான். அதையும் தாண்டி, ஒரு நிலையை நாம் வாழ்ந்தோம் என்பதற்கு சின்னமாக, நாம் வாழ்ந்ததற்கான சாயல்களை வடுவாக இல்லாமல் சின்னமாக விட்டுச் செல்ல வேண்டுமானால், அது வரும் சந்ததியினர் - சமுதாயம், நாம் வாழ்ந்த இடங்களை சுத்தமாக வைத்திருப்பது போன்றவைதான். அதைத்தான் என் சகோதரர்களுக்கு, நானும் கற்றுக் கொண்டு அவர்களுக்கும் கற்றுத் தர முயற்சித்து வருகிறேன்.
முடிந்தவரை என் வாழ்க்கையை அப்படி வாழ்வதற்கான முயற்சிகளில் நான் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். அவர்களையும் ஈடுபடுத்துகிறேன். இதான் நான் என் ரசிகர்களுக்கு சொல்லுவது. நானும் என் ரசிகன்தான். என்னுடைய கடுமையான விமர்சகனும்கூட. அப்படித்தான் நீங்களும் இருக்க வேண்டும்.
கமல் வழங்கும் பிறந்த நாள் செய்தி- வீடியோ

என்னை விட ஹன்சிகா அழகு..குஷ்பு பாராட்டு
என்னை விட அழகாக இருக்கிறார் ஹன்சிகா மோத்வானி. எனவே அவருடன் என்னை ஒப்பிடக் கூடாது என்று கூறியுள்ளார் குஷ்பு.
மும்பையிலிருந்து வந்த மொழு மொழு ஹீரோயின் ஹன்சிகா. இவரைப் பார்ப்பவர்கள் எல்லாம், அப்படியே அச்சு அசல் குஷ்பு போலவே இருக்கீங்க என்று கூறி ஹன்சிகாவை நெளிய வைக்கிறார்களாம்.
என்னைப் போய் குஷ்பு மேடத்துடன் இணைத்துப் பேசுகிறார்கள். இது எனக்குப் பெருமையாக உள்ளது. அதேசமயம், நான் எங்கே அவர் எங்கே என்று அடக்கத்துடன் கூறி வருகிறார் ஹன்சிகா.
இதற்கிடையே, தன்னுடன் ஹன்சிகாவை ஒப்பிட்டுப் பேசுவது குறித்து குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டர் மூலம் அவர் வெளியிட்டுள்ள கருத்தில், உண்மையைச் சொல்வதாக இருந்தால், என்னை விட அழகாக இருக்கிறார் ஹன்சிகா. நான் நடிக்க வந்தபோது எப்படி இருந்தேனோ அதை விட அழகாக இருக்கிறார். அருமையாக நடிக்கிறார். எனவே என்னை அவருடன் ஒப்பிட முடியாது என்று கூறியுள்ளார் குஷ்பு.
குஷ்பு சொன்னா சரியாகத்தான் இருக்கும்.!

சிம்புவின் ஆட்ட ஸ்டைல் அதிசயிக்க வைக்கிறது- மல்லிகா ஷெராவத்
சிம்புவின் ஆட்ட ஸ்டைல் அபாரமாக இருக்கிறது, அதிசயிக்க வைக்கிறது என்று மல்லிகா ஷெராவத் சிலாகித்துக் கூறியுள்ளார்.
ஒஸ்தி பாடலில் சிம்பவுடன் சேர்ந்து ஒரு குத்தாட்டப் பாட்டுக்கு செமத்தியான ஆட்டம் போட்டிருக்கிறார் மல்லிகா ஷெராவத் என்பது நினைவிருக்கலாம். அந்த அனுபவம் குறித்து தற்போது சிலாகித்துப் பேசியுள்ளார் மல்லிகா. சிம்புவின் ஆட்டத் திறமையும், ஸ்டைலும் வியக்க வைப்பதாகவும், அதிசயிக்க வைப்பதாகவும் அவர் பாராட்டித் தள்ளியுள்ளார்.
மணிரத்தினத்தின் குரு படம் மூலம் தமிழுக்கும் வந்தார் மல்லிகா. பின்னர் தசாவதாரம் படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்தார். தற்போது சிம்வுடன் குத்தாட்டம் போட்டுள்ளார்.
ஒஸ்தி படத்தில் மல்லிகா செமத்தியான ஆட்டம் போட்டிருக்கிறாராம். ஆனால் அவரோ சிம்பு குறித்து சிலாகித்துக் கொண்டிருக்கிறார்.
இதுகுறித்து அழர் கூறுகையில், சிம்புவின் ஆட்டத் திறமையும், அவரது ஸ்டைலும் கலக்கலாக இருக்கிறது. அதைப் பார்த்து நான் பிரமித்துப் போய் விட்டேன். அதிசயித்தேன்.
எந்த ஹீரோவும் இப்படி ஒரு அசாத்தியமான திறமையுடன் இருப்பதை நான் இதுவரை பார்த்ததே இல்லை. ஒஸ்தி படப் பாடல்கள் செம ஹிட்டாகும் என்பதில் சந்தேகம் இல்லை.
சிம்புவின் டான்ஸைப் பார்த்து அசந்து போன நான் இதற்கு முன்பு அவர் நடித்த படங்களின் டான்ஸ் காட்சிகளையும் வீடியோவில் பார்த்து ரசிக்க ஆர்வமாக உள்ளேன். அந்த அளவுக்கு சிம்புவுக்கு நான் ரசிகையாகி விட்டேன்.
என்ன மாதிரியான ஸ்டைலில் ஆடச் சொன்னாலும் அசத்தி விடுகிறார் சிம்பு. ஒரு அபாரமான டான்ஸர் அவர் என்று புல்லரித்துப் பேசுகிறார் மல்லிகா.
அடடா, மல்லிகாவை அசத்திய அப்படிப்பட்ட ஆட்டத்தை சீக்கிரமாக ரசிகர்களுக்கும் காட்டுங்கப்பா...

கமல் என்ற சகாப்தம்... சக கலைஞர்களின் வாழ்த்து மழை!
இன்று பிறந்த நாள் காணும் கமல் ஹாஸனுக்கு தமிழ் திரையுலகினர் வாழ்த்துக்களைக் கூறி வருகின்றனர்.
களத்தூர் கண்ணம்மாவில் தனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கி இன்று விஸ்வரூபம் எடுத்து நிற்கும் உலக தமிழ் நாயகன் கமல்ஹாஸனுக்கு இன்று சூப்பர் ஸ்டார் ரஜினி வாழ்த்துத் தெரிவித்தார்.
அவருடன் மேலும் பல பிரபலங்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். அவர்கள் விவரம்:
சரத்குமார் - தலைவர், திரைப்பட நடிகர் சங்கம்
பத்மஸ்ரீ கமல் ஹாஸன் அவர்களுக்கு எனது இதயப்பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துக்கள். தமிழர்களுக்கு மிகவும் பெருமையைத் தந்துள்ள மாபெரும் கலைஞர் அவர். இன்னும் பல்லாண்டுகள் திரையுலகில் புதுப்புது சாதனைப் படைக்க வாழ்த்துகிறேன்.
ஏ ஆர் முருகதாஸ் - இயக்குநர்
கமல் சார் பற்றி பேசும்போதெல்லாம் நான் பெருமையாக உணர்வேன். திறமையான, சாதனைப் படைத்த கலைஞர் என்பதையும் தாண்டி, ஒரு தமிழராக நம்மை நெஞ்சு நிமிர வைத்த நாயகன் அவர். அவர் காலத்தில் நான் ஒரு தமிழ் சினிமா இயக்குநராக இருந்தேன் என்பதே பெருமை. அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்வது மகிழ்ச்சியான தருணம்!
சூர்யா - நடிகர்
கமல் சார் பற்றி நான் சொல்லி தெரியும் நிலை இல்லை. கலை உலகின் பிதாமகன் அவர்தான். அவரைப் பார்த்து நடிக்கக் கற்றுக் கொண்டவன். அவருக்கு வாழ்த்து சொல்லும் அளவு நான் பெரிய ஆள் இல்லை. ஆனால் அவரை வணங்கும் தகுதி உள்ளது. கமல் சார்... உங்கள் மூலம் நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.
அசின் - நடிகை
கமல் சாருக்கு எனது மனப்பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துக்கள். என் வாழ்க்கையில் ஒரு மிகப் பெரிய லட்சியம் நிறைவேறியது. அதற்கு காரணம் நம்ம கமல் சார்தான். ஆம். தசாவதாரத்தில் அவருடன் நடித்ததன் மூலம் என் கனவு நிறைவேறியது. நன்றி சார்.

விஸ்வரூபமாய் வளர்ந்து நிற்கும் உலகநாயகன் கமல்!
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
அன்புடனே ஆதரிக்கும் அன்னையும் நீயே…
என்ற பாடலை கண்ணீர் மல்க முருகனை பார்த்து பாடும் குழந்தையை பார்க்கும் எவரும் ஒரு கணம் அவர்களை மறந்து அந்த பாடலில் லயித்து விடுவர். சுட்டிக்குழந்தையாய் முகத்தில் அத்தனை பாவங்களையும் தேக்கி தன் வேண்டுதலை முருகனிடம் தெரிவித்த அந்த குழந்தைதான் உலகநாயகனாய் இன்றைக்கு விஸ்வரூப வளர்ச்சி எடுத்துள்ள 'நாத்திகர்' கமல்ஹாசன்.
ரசிகர்கள் நெஞ்சத்தை கொள்ளை கொண்டவர்
குழந்தையாய் அறிமுகமான படத்திலேயே அனைவரின் உள்ளங்களையும் கொள்ளை கொண்டவர். காதல் இளவரசனாகி இளசுகளின் நெஞ்சங்களை கவர்ந்தவர். இன்றைக்கு காலத்தை வென்ற நாயகனாக உயர்ந்திருக்கிறார்.
தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம், இந்தி என பல மொழி திரைப்படங்களிலும் நடித்து தமிழரின் பெருமையை இந்தியா முழுவதும் பறைசாற்றிய முதல் தமிழர் அவர்.
சினிமா என்பது பொழுதுபோக்கு சாதனம்தான். ஆனால் அதனை மக்களுக்கு உணர்த்தும் வகையில் சிறப்பு வாய்ந்த கதாபாத்திரங்கள் மூலம் மக்களை சென்றடையச்செய்தவர் இவர். களத்தூர் கண்ணம்மா தொடங்கி மன்மதன் அம்பு வரை கமல்ஹாசன் ஏற்று நடித்த ஒவ்வொரு பாத்திரமும் ஒரு சரித்திரத்தை உள்ளடக்கியிருக்கும்.
விருதுக்கு விருது கிடைத்த பெருமை
குழந்தையாக அறிமுகமான படத்திலேயே அற்புதமான நடிப்பால் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான குடியரசுத் தலைவரின் தங்கப் பதக்க விருது பெற்றார். பின்னர் மூன்றாம்பிறை, நாயகன், இந்தியன் என மூன்று படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மூன்று முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்று பெருமை சேர்த்தவர் கமல்.
பதினெட்டுமுறை பிலிம்பேர் விருதுகளைப் பெற்று புதிய சாதனை படைத்தவர். எனக்கு இனி விருதே வேண்டாம் என்று எழுதிக் கோரியவர். பல மாநில அரசுகளின் விருதுகளையும் வாங்கிக் குவித்தவர். விருதுகளுக்கு புது அர்த்தமும், பெருமையும் பெற்றுத் தந்தவர் உலக மகாநாயகன் கமல்ஹாசன்.
நற்பணி செய்ய மன்றம்
விசிலடிக்கவும், பாலபிஷேகம் செய்யவும் மட்டும்தான் ரசிகர்கள் என்றிருந்த நிலையை மாற்றி ரசிகர்கர்களை நற்பணி செய்யத் தூண்டினார். அதற்கு தலைவராக தாமே இருந்து ரசிகர்களை நல்வழி நடத்துகிறார். ரசிகர்களை நற்பணி நாயகர்களாக திருப்பிய முதல் நடிகர் கமல்ஹாசன்தான்.
நற்பணி இயக்கத்தில் உள்ள அனைவரும் இரத்ததானம் செய்ய வைத்த நடிகர். இன்றைக்கு இந்தியாவிலேயே ரத்ததானம் செய்யும் திரை ரசிகர்களில் முதலிடத்தில் இருப்பவர்கள் கமல் ரசிகர்கள் மட்டுமே.
இன்று கமல்ஹாசன் பிறந்த நாள். 1960 களில் தொடங்கிய உலகநாயகனின் கலைப்பயணம் 2011 வரை 50 ஆண்டுகளையும் கடந்து நீடிப்பதற்கு அவரது தீராத கலை தாகம்தான். உலகநாயகன் என்ற பெருமையோடு தமிழன் என்ற பெருமிதத்தோடு நாம் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறுவோம்.

புதிய பாடகர்கள் திறமைசாலிகள் - பி சுசீலா பாராட்டு
புதிதாக பாட வந்துள்ள பாடகர்கள் நல்ல திறமைசாலிகளாக உள்ளனர், என்றார் பி சுசீலா.
சேலத்தில் பள்ளி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற சுசீலா கூறுகையில், "இன்றைக்கும் எனது குரல் நன்றாக இருப்பதாக பாராட்டுகிறார்கள். அது இறைவன் கொடுத்த வரம் என்றுதான் கூறமுடியும்.
இப்போது உள்ள பாடகர்கள் எங்களை விட திறமைசாலிகள். நன்றாக பாடுகிறார்கள். பாடல்களும் நன்றாக இருக்கின்றன.
இங்கு நடனம் ஆடியவர்களை பார்த்து வியந்து போனேன். அவ்வளவு திறமைகளிடம் உள்ளன. இதைப் பார்க்க கொடுத்து வைத்திருக்கவேண்டும். இதுபோல் அனைத்து குழந்தைகளிடமும் ஒவ்வொரு திறமை இருக்கும். இதை வெளிக்கொண்டு வர வேண்டும். மாணவ, மாணவிகளை ஊக்குவிப்பதில் பெரும் பங்கு பெற்றோருக்கு உண்டு. மாணவ, மாணவிகள் செய்ய விரும்புவதை பெற்றோர்கள் அனுமதிக்கிறார்கள்.
இதனால் மாணவ, மாணவிகள் பெற்றோர் விரும்புவதை நிறைவேற்றி வைக்க வேண்டும்," என்றார்.
எவ்வளவோ பாடல்களை பாடி உள்ளீர்கள். உங்களால் மறக்க முடியாத அனுபவம் உள்ளதா? என்று நிருபர்கள் கேட்டபோது, "நிறைய இருக்கிறது. இதை உங்கள் முன் பகிர்ந்து கொள்ள இயலாததற்கு வருந்துகிறேன்," என்றார்.
பிறகு அவர் உன்னை காணாத, ஆலய மணி போன்ற பாடல்களை பாடினார்.

'ஸ்வீட்டி' அனுஷ்காவுக்கு இன்று பிறந்த நாள்!
ரசிகர்களால் செல்லமாக ஸ்வீட்டி என்று அழைக்கப்படும் அனுஷ்காவுக்கு இன்று பிறந்த நாள்.
கோலிவுட, டோலிவுட் என கிட்டத்தட்ட தென்னகத்தின் கனவுக் கன்னியாகத் திகழ்பவர் அனுஷ்கா. நயன்தாரா, அசின் போன்றவர்கள் இல்லாத சூழலில் நம்பர் ஒன் நடிகை. நடிப்பில் மட்டுமல்ல, சர்ச்சையிலும் நம்பர் ஒன் இவர்தான். திமிர் பிடித்தவர் என்ற கூடுதல் தகுதி வேறு!
தமிழில் மூன்று பெரிய படங்களில் நடிக்கிறார். அஜீத்தின் அடுத்த பட நாயகியும் அவர்தான். தெலுங்கிலும் மூன்று பெரிய படங்கள். இன்னும் அரை டஜன் வாய்ப்புகள் அவர் கையெழுத்துக்காக நிற்கின்றன. சம்பளம் ரூ 1.25 கோடி, இன்றைய தேதிக்கு. அடுத்த படம் வந்ததும் ஏறிவிடக் கூடும்!
இன்று பிறந்த நாள் காணும் அவர், இன்று இரவு தனக்கு நெருக்கமானவர்களுடன் ஒரு மெகா பார்ட்டி கொண்டாடப் போகிறார், ஹைதராபாதில் உள்ள நட்சத்திர ஓட்டலில்.
அந்த நெருக்கமானவர்கள் லிஸ்டில் இங்கிருந்து இருவர் இடம்பெற்றுள்ளனர், ஒருவர் இயக்குநர் விஜய், இன்னொருவர் இப்போதைய அவரது ஹீரோ விக்ரம்!

பாரதிராஜாவின் அன்னக்கொடி படத்தின் நாயகியானார் 'கோ' கார்த்திகா
பாரதிராஜா இயக்கப் போகும் கனவுப் படமான அன்னக்கொடியும் கொடி வீரனும் படத்தின் நாயகியாக கோ பட நாயகியும், முன்னாள் நாயகியும், பாரதிராஜாவின் மோதிரக் கையால் குட்டுப்பட்டு நாயகியாக அறிமுகமானவருமான ராதாவின் மகளுமான கார்த்திகா நடிக்கப் போவதாக தகவல்கள் கூறுகின்றன.
பழம்பெரும் நாயகியான ராதாவின் மகள்தான் கார்த்திகா. இவர் கோ படம் மூலம் தமிழில் அறிமுகமாகி நல்ல கிராக்கிக்குள்ளாகியுள்ளார். அவரைத் தேடி பல பட வாய்ப்புகள் போனபோதும் கோ படம் போல நல்ல கதையம்சம் உள்ள படமாக பார்த்துக் கொண்டிருப்பதால் புதிய படம் எதையும் ஒப்புக் கொள்ளாமல் இருந்தனர் ராதாவும், கார்த்திகாவும்.
இந்த நிலையில் பாரதிராஜாவின் அன்னக்கொடியும், கொடி வீரனும் படத்தின் நாயகியாக கார்த்திகா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் நாயகியாக, இனியா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகிருந்தது நினைவிருக்கலாம். முதலில் பிரியா மணியைத்தான் யோசித்திருந்தார் பாரதிராஜா. பின்னர் வாகை சூட வா படத்தைப் பார்த்த பின்னர் இனியாவை தனது நாயகியாக அவர் தேர்வு செய்தார் என தகவல்கள் தெரிவித்தன.
இந்த நிலையில் கார்த்திகா அந்த வேடத்திற்குத் தேர்வாகியுள்ளதாக கூறப்படுகிறது. இடையில் என்ன நடந்தது என்பது தெரியவில்லை. இனியா நிராகரிக்கப்பட்டுள்ளாரா அல்லது கார்த்திகா இன்னொரு ஹீரோயினாக நடிக்கப் போகிறாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.