வாலு பட ரிலீசுக்கு அப்படி என்னதான் உதவி செய்தார் விஜய்?- டி ராஜேந்தர் பேட்டி

வாலு படம் வெளியாக நடிகர் விஜய் பெரும் உதவி செய்ததாக மீடியா எழுதி வந்தது. அதை சிம்புவும் உறுதி செய்து, விஜய் என் கூடப் பிறக்காத சகோதரர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அப்படி என்னதான் உதவினார் விஜய்?

இன்று நடந்த பிரஸ் மீட்டில் டி ராஜேந்தர் சொன்னது இது:

சிம்பு, அஜித்தின் தீவிர ரசிகர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். சினிமாவில் எவ்வளவு நடிகர்கள் இருந்தாலும், சிம்பு படத்துக்கு பிரச்சினை என்று வந்தபிறகு யாரும் உதவ முன்வரவில்லை. விஜய் தானாக முன்வந்து இப்படம் வெளிவருவதற்கு மிகவும் உதவியாக இருந்தார்.

What is Vijay's role in Vaalu issue?

அதேபோல், அவரது மேனேஜரும் தயாரிப்பாளருமான பி.டி.செல்வகுமார் மற்றும் கோவை விநியோகஸ்தர் சிவக்குமார் ஆகியோர் இந்தப் படம் ரலீசாக துணை நின்றனர்.

விஜய் எனக்குப் பண உதவி செய்ததாக சிலர் கூறுகின்றனர். நிச்சயம் அப்படியெல்லாம் நான் யாரிடமும் இனாம் வாங்கவில்லை. அப்படி வாங்கக் கூடியவன் அல்ல நான் என்பது இந்த திரையுலகத்துக்கு நன்கு தெரியும்.

விஜய்யும், புலி படத் தயாரிப்பாளரும், கோவை சிவகுமாரும் வாலு படம் வெளியாக சில விநியோகஸ்தர்களிடம் பேசி சம்மதிக்க வைத்தனர்," என்றார்.

விஜய் ‘வேலாயுதம்' படத்தில் எனக்கு டி.டி.ஆர் எல்லாம் தெரியாது. டி.ஆர். மட்டும்தான் தெரியும். நான் அவரோட தீவிர ரசிகர் என்று சொல்வார். உண்மையில் நான்தான் அவருடைய தீவிர ரசிகன். அவருக்கு நான் நிறைய நன்றிக் கடன்பட்டிருக்கிறேன். விஜய் மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். ஏனென்றால், அவர்தான் உண்மையான தமிழன்," என்று கூறினார்.

 

என்னது மகேஷ் பாபு சூப்பர் ஸ்டாரா? அது எப்படிப் போடலாம்?- ரஜினி ரசிகர்கள் காட்டம்

சூப்பர் ஸ்டார் என்ற இந்தப் பட்டப் பெயர் இளம் நடிகர்களைப் படுத்தும் பாடு கொஞ்சமல்ல. அவரவருக்கென்று ஒன்றுக்கு நான்கு பட்டப்பெயர் வைத்திருந்தாலும், சூப்பர் ஸ்டார் என்று அடுத்தவருக்கு சூட்டப்பட்டு, அவர் புகழின் உச்சத்தில் இருக்கும்போதே அந்தப் பெயர் தங்களுக்கும் கிடைக்காதா என ஏங்குகின்றனர்.

அந்த லிஸ்டில் இப்போது தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவும் சேர்ந்துவிட்டார் போலிருக்கிறது.

Rajini fans angry on Mahesh Babu

மகேஷ்பாபு நடித்து தெலுங்கில் வெளியாகியிருக்கும் படம் ஸ்ரீமந்துடு. செல்வந்தன் என்ற பெயரில் தமிழ்நாட்டிலும் ரிலீஸாகி ஓடிக்கொண்டிருக்கிறது.

தொடர் தோல்விகளால் நிச்சயம் ஹிட் கொடுத்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் மகேஷ்பாபு, படம் வெளியாகும் இறுதி நேரத்தில் தெலுங்கு மட்டுமின்றி தமிழிலும் டப் செய்து வெளியிட திட்டமிட்டார். இதற்காக இருமுறை சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

தமிழில் வெளியான செல்வந்தன் படத்தின் டைட்டிலில் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு என்று போட்டிருக்கிறார்கள். இதனால் ரஜினி ரசிகர்கள் கடுப்பாகி, தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

தெலுங்குப் பட உலகில் முன்னணி நடிகர்கள் பலருக்கும் பல பட்டப்பெயர்கள் உள்ளன. ஆனால் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என எந்த மொழி சினிமாவிலும் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் ரஜினிக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் பட்டத்தை மகேஷ் பாபு எப்படிப் பயன்படுத்தலாம் என்று ரஜினி ரசிகர்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்திய சினிமாவைப் பொறுத்தவரை சூப்பர் ஸ்டார் பட்டம் ரஜினிக்கு மட்டும் தான். வேறு யாரும் அதைப் பயன்படுத்துவது அநாகரீகம் என்று ரஜினி ரசிகர்கள் சமூக வலைத் தளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

வாலு படம் வெளியாவதற்காக ரூ 26 கோடி கடனை ஏற்றேன்! - ராஜேந்தர்

அனைத்து தடைகளும் நீங்கி, வரும் ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி தமிழகம் முழுவதும் வெளியாகிறது சிம்பு நடித்த வாலு திரைப்படம்.

வாலு படம் நான்காண்டுகளுக்கு முன்பு நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தியால் மீடியம் பட்ஜெட்டில் ஆரம்பிக்கப்பட்டது. விஜய் சந்தர் இயக்கியுள்ள இந்தப் படம் முடிவதற்கு மூன்றாண்டுகளுக்கு மேலாகிவிட்டது.

T Rajendar releasing Vaalu with 26 cr deficit

படம் தயாராகி முடிந்தாலும், வெளியிடுவது சாத்தியமில்லை என்ற நிலை ஏற்பட்டது. காரணம் இந்தப் படம் மற்றும் வேட்டை மன்னன் படங்களின் மீது நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி ஏராளமான கடன் வாங்கியிருந்தாராம். அந்த கடன்கள் மற்றும் சக்கரவர்த்தியின் வேறு சில படங்களில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக வாலு படத்தை வெளியிட முடியவில்லையாம்.

இதுகுறித்து ராஜேந்தர் கூறுகையில், "வாலு படம் எப்படியாவது வெளியாக வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக அனைத்துக் கடன்களையும் நான் ஏற்றுக் கொண்டேன். சக்கரவர்த்தியின் சொந்தக் கடனைக் கூட நான் ஏற்றிருக்கிறேன். படத்துக்கு சம்பந்தமே இல்லாத யார் யாரோ வந்து பிரச்சினை செய்கிறார்கள்.

T Rajendar releasing Vaalu with 26 cr deficit

இன்றைய நிலவரப்படி ரூ 26 கோடி கடனை, இந்தப் படம் வெளியாக வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக நான் ஏற்றிருக்கிறேன்.

எனது இந்த சுமையை வாலு படம் போக்கிவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது," என்றார்.

 

"காக்கி"யை கையில் எடுக்கும் விஜய் சேதுபதி...!

சென்னை: 2010 ம் ஆண்டு சீனு ராமசாமியின் இயக்கத்தில் தென்மேற்குப் பருவகாற்று திரைப்படத்தில், நாயகனாக அறிமுகமான விஜய் சேதுபதி இன்று தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறியிருக்கிறார்.

சூது கவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம், புறம்போக்கு என்கின்ற பொதுவுடைமை போன்ற படங்களில் வித்தியாசமான வேடங்களில் நடித்த விஜய் சேதுபதி தொடர்ந்து நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரங்களில் நடித்து வருகிறார்.

Vijay Sethupathi's Next Movie Update

சமீபத்தில் வெளியாகிய ஆரஞ்சு மிட்டாய் திரைப்படத்தில் 55 வயது முதியவராக நடித்து அசத்திய விஜய் சேதுபதி, அடுத்ததாக போலீஸ் வேடத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்த மாகியிருக்கிறார்.

பண்ணையாரும் பத்மினியும் அருண்குமார் இயக்கத்தில் ஒரு வலுவான காவல்துறை அதிகாரியாக இந்தப் படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய் சேதுபதி, படத்திற்கு காசேதுபதி எனப் பெயரிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காக்க காக்க படத்தில் சூர்யா நடித்தது போன்ற ஒரு வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார் என்று கூறுகிறார்கள்.

 

அசின் மைக்ரோமேக்ஸ் ராகுலை காதலிக்க இவர் தான் காரணமாம்!

மும்பை: நடிகை அசின் மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் ஷர்மா மீது காதலில் விழ பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தான் காரணமாம்.

கஜினி இந்தி ரீமேக் மூலம் பாலிவுட் சென்றவர் அசின். அதோடு பாலிவுட்டிலேயே தங்கிவிட்டார். அவர் பாலிவுட்டின் முன்னணி நடிகரான அக்ஷய் குமாருடன் சேர்ந்து நடித்தார். அக்ஷய் குமாரும், மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் ஷர்மாவும் நெருங்கிய நண்பர்கள்.

Asin to marry Micromax honcho Rahul Sharma; Akshay Kumar plays matchmaker!

இந்நிலையில் அக்ஷய் அசினை ராகுலுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். அவர்கள் இருவரும் காதலில் விழ அக்கி தான் காரணம் என்று கூறப்படுகிறது. அசின் ராகுல் ஷர்மாவை காதலிப்பதாக பல மாதங்களாக பாலிவுட்டில் பேச்சு அடிபட்டு வந்தது. ஆனால் அதை சம்பந்தப்பட்ட இருவருமே கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் தான் அசின் ராகுலை திருமணம் செய்ய உள்ளார். இந்தி படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் அசின் புளியங்கொம்பாக பார்த்து பிடித்துவிட்டார் என்கிறார்கள் பாலிவுட்காரர்கள்.

திருமணத்திற்கு பிறகு அசின் படங்களில் நடிக்க மாட்டார் என்று கூறப்படுகிறது.

 

வாலு விவகாரம்... டி ராஜேந்தரின் 'அவசர பிரஸ் மீட் 2'... யார் தலை உருளப் போகுதோ!

வாலு விவகாரம் அனுமார் வாலை விட அதிகமாகவே நீண்டு கொண்டு போகிறது.

முதலில் இந்தப் படம் சீக்கிரம் வெளிவராமல் இருக்கக் காரணமே சிம்புதான் என்று தயாரிப்பாளர் குறை கூறி வந்தார். இதோ அதோ என இழுத்தடித்த சிம்பு, ஒருவழியாக நடித்துக் கொடுத்தார். படம் வெளியாகப் போகிறது என்று எதிர்ப்பார்த்த நேரத்தில், தேதிகள் சரிப்பட்டு வரவில்லை என்று தயாரிப்பாளர் தள்ளிப் போட்டார்.

T Rajendar calls for urgent press meet for Vaalu

இந்த நேரத்தில் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் தங்களை ஏமாற்றி படத்தை வேறு நிறுவனம் மூலம் விநியோகிப்பதாகக் கூறி 6 வழக்குகளை இந்தப் படத்துக்கு எதிராகத் தொடர்ந்து இடைக்காலத் தடைப் பெற்றனர். படம் வெளியாவது குறித்த பேச்சுகள் கிட்டத்தட்ட அடங்கிவிட்டன.

இந்த நிலையில் படத்தை தானே வெளியிடுவதாகக் கூறி களத்தில் இறங்கினார் சிம்புவின் தந்தை டி ராஜேந்தர். இதையும் எதிர்த்து வழக்குத் தொடர்ந்தனர்.

ஒரு வழியாக அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டன. படம் ரீலீசாவது குறித்த பேச்சுகள் மீண்டும் எழுந்தன. அப்போதுதான் டி ராஜேந்தர் ஒரு அவசர பிரஸ் மீட்டுக்கு அழைப்பு விடுத்தார். அவர் வீட்டிலேயே நடந்த அந்த சந்திப்பில் சிம்பு கலந்து கொள்ளவில்லை. தன் மகனுக்கு எதிராக பெரும் சதி நடப்பதாகக் குமுறித் தீர்த்தார் டிஆர். அடுத்த நாள் சிம்புவும் தன் அப்பா சொன்னதையே ட்விட்டரில் போட்டு பரபரப்பு கிளப்பினார். அப்போது தனுஷின் மாரி வெளிவரவிருந்தது. மாரி படத்துக்கு அதிக அரங்குகள் கிடைக்க தனுஷ் செய்யும் வேலையால்தான் வாலு வரவில்லை என சிம்பு ரசிகர்கள் ஒருபக்கம் கிளம்பினர்.

இந்த சம்பவம் நடந்த ஒரு மாதம் ஆன பிறகு, வரும் வெள்ளிக்கிழமையன்று வாலு வெளியாகும் என்று அறிவித்திருந்தனர். ஆனால் இப்போதும் படத்துக்கு சிக்கல். போதிய தியேட்டர் கிடைக்கவில்லையாம். காரணம் அதே தேதியில் வெளியாகவிருக்கும் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படம். இதனை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார். இந்தப் படத்துக்காக தன் கைவசம் உள்ள அரங்குகள் அனைத்தையும் ஒதுக்கியுள்ளார். உடனே சிம்புவும் அவர் ரசிகர்களும், வாலு படத்தை வெளியிடவிடாமல் உதயநிதி சதி செய்வதாக புலம்ப ஆரம்பித்துவிட்டார்கள்.

வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தின் ரிலீஸ் தேதி இரண்டு மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டு அறிவிக்கப்பட்டுவிட்டது. அதை தன் வசம் உள்ள அரங்குகளில், தன் பேனரில் வெளியிடுவதாக உதயநிதியும் அறிவித்துவிட்டார். ஆனால் ரிலீஸ் தேதி எப்போது என்றே தெரியாமல், திடீர் திடீரென தேதி அறிவித்து ரத்து செய்து கொண்டிருந்த வாலு படத்தை உதயநிதி தடுப்பதாக எப்படிக் குற்றம் சாட்டலாம் என திரையுலகில் உள்ளவர்களே கடுமையாகக் கேட்க ஆரம்பித்துள்ளனர்.

ஒவ்வொரு முறை தன் படம் வெளியாகாமல் நிற்கும்போதும் யாரையாவது குறை சொல்வதை சிம்புவும் அவர் தந்தையும் வழக்கமாக வைத்திருப்பதாக மீடியாவில் விமர்சனம் எழுந்துள்ள நிலையில், இன்று அவரச மீடியா சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார் டி ராஜேந்தர்.

அவர் வீட்டுக்குள்ளேயே நடக்கும் இந்த சந்திப்பில் அடுத்து யாரை குற்றம் சாட்டப் போகிறார்களோ!

 

தூம் 3 சாதனை காலி.. இந்திய அளவில் வசூலில் 3வது இடத்தைப் பிடித்தது பாகுபலி

சென்னை: கடந்த மாதம் 3 ம் தேதி வெளியான பாகுபலி திரைப்படம் திரையிட்ட இடமெல்லாம் வெற்றிவாகை சூடியது. வசூலில் சாதனை தென்னிந்திய மொழிகளில் அதிகம் வசூலித்து சாதனை மிக வேகமாக 200 கோடியைக் கடந்து சாதனை என பல்வேறு சாதனைகளைப் படைத்த பாகுபலி தற்போது மேலும் ஒரு புதிய சாதனையை படைத்து இருக்கிறது.

Baahubali - The Beginning (Tamil) (U/A): இப்போதே உங்கள் டிக்கெட்டை புக்செய்யுங்கள்!

இந்திய அளவில் அதிகம் வசூலித்த திரைப்படங்களில் எஸ்.எஸ்.ராஜமௌலியின் பாகுபலி 3 ம் இடத்தைப் பிடித்து இருக்கிறது, சுமார் 545 கோடிகளை வசூலித்து இந்த சாதனையைப் பாகுபலி படைத்து இருக்கிறது.

Baahubali: 3rd Highest Grossing Indian Film

முதல் 2 இடங்களில் முறையே அமீர்கானின் பிகே சல்மான் கானின் பஜ்ரங்கி பைஜான் ஆகிய ஹிந்திப் படங்கள் உள்ளன, மூன்றாவது இடத்தில் முதன்முறையாக ஒரு தென்னிந்தியத் திரைப்படம் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளது.

இதற்கு முன்பு அமீர்கானின் தூம் 3 உலகம் முழுவதும் 542 கோடியை வசூலித்து அதிகம் வசூலித்த படங்களின் பட்டியலில் 3 ம் இடத்தில இருந்தது, தற்போது பாகுபலி 3 கோடி ரூபாய் அதிகம் வசூலித்து தூம் 3 யை பின்னுக்குத் தள்ளி இந்தப் பட்டியலில் முன்னுக்கு வந்துள்ளது.

அமீர்கானின் பிகே திரைப்படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு சீனா போன்ற நாடுகளில் வெளியானதைப் போல பாகுபலியும் வெளியானால், பிகே படத்தின் வசூலை முறியடித்து முதல் இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு பாகுபலிக்கு இருக்கிறது பார்க்கலாம்.

 

ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீசாகிறது வாலு... அறிவித்தார் டி.ஆர்.

சென்னை: சிம்பு நடித்த வாலு படம் ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீசாவதாக அவருடைய தந்தையும், நடிகர், இயக்குநருமான டி.ராஜேந்தர் அறிவித்துள்ளார்.

விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம் நடித்துள்ள படம் 'வாலு'. நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் வெளியிட இருக்கிறது.

ஜூலை 17-ம் தேதி 'வாலு' படம் ரிலீஸ் ஆகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், 'வாலு' படத்தை தடை செய்ய வேண்டும் என்று மேஜிக் ரேஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

VAALU TO ARRIVE FINALLY !

உயர் நீதிமன்றம் தடை விதித்ததால் வாலு' ரிலீஸ் ஆகவில்லை. தற்போது, மேஜிக் ரேஸ் நிறுவனம் தனது வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொண்டது. இதனால், படம் ரிலீஸ் ஆவதில் இருந்த சிக்கல் விலகியது.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் டி.ராஜேந்தர். அப்போது அவர் கூறியதாவது:-

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள வாலு படம் அனைத்து வழக்குகளிலும் வென்று இம்மாதம் 14ம் தேதி ரிலீசாகிறது. நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்திக்கும், மேஜிக் ரேஸ் நிறுவனத்திற்கும் இடையேயான வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இது மட்டுமல்ல வாலு படம் தொடர்பான அனைத்து வழக்குகளும் முடிவுக்கு வந்துள்ளன. இதற்கு உறுதுணையாக இருந்த மீடியா உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.

முன்னதாக, 'வாலு' படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதற்காக நடிகர் விஜய் பண உதவி செய்தது குறிப்பிடத்தக்கது.

 

சின்ன நம்பர் நடிகை, உயர்ந்த நடிகர் இடையே மீண்டும் காதல்?

சென்னை: சின்ன நம்பர் நடிகையும் அவரது முன்னாள் காதலருமான உயர்ந்த மனிதரும் மீண்டும் ஒன்று சேர்ந்துவிட்டார்கள் என்று பேச்சாக கிடக்கின்றது.

சின்ன நம்பர் நடிகையும் உயரமான அந்த தெலுங்கு நடிகரும் தான் பல காலமாக காதலித்து வந்தார்கள். அவர்கள் சேர்வதும் பிரிவதுமாக இருந்து வந்தனர். இந்நிலையில் தான் சின்ன நம்பர் நடிகை தெலுங்கு நடிகரை பிரிந்தார்.

அவரை பிரிந்த வேகத்தில் சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபரை காதலித்தார், நிச்சயதார்த்தம் கூட நடந்தது. ஆனால் நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு அவர்கள் பிரிந்துவிட்டனர். இந்நிலையில் நடிகை விருது விழாவில் கலந்து கொள்ள துபாய் சென்றுள்ளார்.

அங்கு தனது முன்னாள் காதலரை சந்தித்த நடிகை பழையவற்றை எல்லாம் மறந்து பேசியுள்ளார். இருவரும் சேர்ந்து பார்ட்டிக்கு எல்லாம் சென்றுள்ளனர். நடிகரும் பலரை காதலித்து பிரிந்து தற்போது சிங்கிளாகத் தான் உள்ளார்.

அதனால் இருவருக்கும் இடையே மீண்டும் காதல் மலர்ந்துள்ளதாக பேசப்படுகிறது.

 

மீண்டும் நீந்த நினைக்கும் வாளமீன்... சான்ஸ் கிடைக்குமா?

சென்னை: முதல் படத்திலேயே தனது பெயரில் பாடல் வரும் அளவிற்கு படு அமர்க்களமாக அறிமுகமானவர் இந்த ‘விகா' நடிகை. ஆனால், தொடர்ந்து நல்ல படங்கள் அமையாததால், தமிழில் நிலையான இடத்தைப் பிடிக்க இயலவில்லை.

ஆனபோதும், கிடைத்த வேடங்களில் நடித்து அவ்வப்போது நானும் உள்ளேன் ஐயா என தமிழ் சினிமாவில் ஆஜராகிக் கொண்டிருந்தார். பின்னர், சினிமாவில் இருந்து விலகி திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.

இந்நிலையில், மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆசை இப்போது இவருக்குள் துளிர் விட்டுள்ளதாம். இதனால், சமீபத்தில் சென்னைக்கு ஒரு விசிட் அடித்த நடிகை, தனது பழைய நண்பர்களைச் சந்தித்து நட்பை புதுப்பித்துச் சென்றுள்ளார்.

அதிலும், குறிப்பாக தன்னை மீனாக ஆட விட்ட கண்ணாடி இயக்குநரையும், தனக்கு பிடித்த கலர் பிளாக் தான் என பாட வைத்த இயக்குநரையும் அவர் சந்தித்து சென்றுள்ளார்.

இதன் எதிரொலியாக கருப்பு கண்ணாடி இயக்குநரின் சலூன் கடை கத்தி படத்தில் நாயகி நடிக்கலாம் எனக் கூறப்படுகிறது.

 

கமலின் தூங்கா வனம் படத்தை திருப்பதி பிரதர்ஸ் வாங்கவில்லை! - லிங்குசாமி மறுப்பு

கமல் ஹாஸனின் தூங்கா வனம் படத்தை திருப்பதி பிரதர்ஸ் வாங்கவில்லை என்று இயக்குநர் லிங்குசாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.

லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உத்தம வில்லன் படத்தில் நடித்தார் கமல் ஹாஸன். அந்தப் படத்தின் நஷ்டத்தை ஈடுகட்ட ரூ 30 கோடி பட்ஜெட்டில் ஒரு புதிய படம் நடித்துத் தருவதாக அவர் லிங்குசாமிக்கு எழுத்துப்பூர்வ உறுதி அளித்திருந்தார்.

We haven't bought Thoonga Vanam - Lingusamy

இந்த நிலையில் தூங்கா வனம் படத்தை தன் சொந்த பேனரில் ஆரம்பித்த கமல், அதனை மிகக் குறுகிய காலத்தில், 38 நாட்களில் முடித்து வெளியிடத் தயாராகி வருகிறார்.

லிங்குசாமிக்கு ரூ 30 கோடிக்கு செய்து தருவதாகக் கூறிய படத்துக்கு பதில், தூங்காவனம் படத்தின் வெளியீட்டு உரிமையை கமல் தந்ததாக செய்திகள் வெளியாகின.

ஆனால் இந்தத் தகவல்களை லிங்குசாமி மறுத்துள்ளார்.

'கமல் ஹாஸனின் தூங்கா வனம் படத்தின் சென்னை மற்றும் என்எஸ்ஸி ஏரியாக்களின் உரிமையை திருப்பதி பிரதர்ஸ் வாங்கியதாக வந்துள்ள செய்திகள் தவறானவை. எங்களது அடுத்த வெளியீடுகள் ஜிகினா, ரஜினி முருகன் மற்றும் இடம் பொருள் ஏவல் மட்டும்தான்,' என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

சினேகா - பிரசன்னா தம்பதிக்கு ஆண் குழந்தை

நடிகை சினேகா - நடிகர் பிரசன்னா தம்பதிக்கு நேற்று இரவு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர் சினேகா. பத்தாண்டுகளுக்கு மேல் நாயகியாக நடித்து வந்த சினேகாவுக்கும், நடிகர் பிரசன்னாவுக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

Male baby for Sneha - Prasanna

திருமணத்துக்குப் பிறகும் சினேகா சில படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் அவர் கருவுற்றார். அதன் பிறகு படங்களில் நடிப்பதையும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் நிறுத்திக் கொண்டார்.

இந்த நிலையில், நேற்று இரவு சினேகாவுக்கு தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தைப் பிறந்தது.

சினேகாவும் குழந்தையும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனையில் தெரிவித்தனர். ஆண் குழந்தைப் பிறந்த மகிழ்ச்சியை இனிப்பு வழங்கிக் கொண்டாடினார் நடிகர் பிரசன்னா.