மறுபடியும் மெளலி படத்தில் கமல்.. "கிச்சுகிச்சு" படமாகஉருவாகிறதாம்!

சென்னை: இயக்குனரும் தமிழின் சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவருமான மௌலி தனது அடுத்த படத்தில் நடிகர் கமலை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த 2002 ம் ஆண்டில் வெளிவந்த பம்மல் கே சம்பந்தம் படத்தில் கமலை இயக்கிய மௌலி, 13 வருடங்கள் கழித்து மீண்டும் உலகநாயகனை இயக்கவிருக்கிறார்.

சமீபத்தில் இயக்குனர் மௌலி நடிகர் கமலை சந்தித்து புதிய படத்திற்கான கதை பற்றி விவாதித்தாகவும், மௌலி கூறிய கதை பிடித்துப்போனதால் கமல் அவருடைய இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Mouli and Kamal May be Join Again

விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது, கமல் நடித்த ‘பம்மல் கே.சம்பந்தம்' படத்தைப் போன்று இப்படமும் முழுக்க முழுக்க காமெடியாக இருக்குமாம்.

கமல் தற்போது ‘தூங்காவனம்' படத்தின் டப்பிங் பணிகளில் பிசியாக இருக்கிறார். இதுதவிர, இந்தியில் சயீப் அலிகானுடன் சேர்ந்து நடிக்கவிருக்கும் ‘அமர் ஹை' என்ற படமும் இவரது கைவசம் உள்ளது. இவ்விரு படங்களையும் முடித்துவிட்டு, மௌலியுடன் இணைவார் என்று தகவல் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

மௌலி சார் படத்துல காமெடி கொஞ்சம் தூக்கலா இருக்கட்டும்........

 

புலி டிரெய்லரை யூடியூப்பில் பார்த்த 35 லட்சம் பேர்: விஜய் ஹேப்பி அண்ணாச்சி

சென்னை: விஜய் நடித்துள்ள புலி படத்தின் டிரெய்லரை இதுவரை 30 லட்சத்து 47 ஆயிரத்து 263 பேர் யூடியூப்பில் பார்த்துள்ளனர்.

கோலிவுட்டில் தொடர்ந்து பேய் படங்கள் வெளியாகி வரும் வேளையில் ஃபேன்டஸி படமாக விஜய்யின் புலி படம் ரிலீஸாக உள்ளது. சிம்புதேவன் இயக்கத்தில் முதன்முறையாக விஜய் நடித்துள்ள இந்த வித்தியாசமான படத்தின் ட்ரெய்லரே மெர்சலாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Puli trailer gets 3.5 million views on YouTube

யூடியூப்பில் புலி டிரெய்லரை பார்ப்போரின் எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து வருகின்றது. இதுவரை அந்த டிரெய்லரை 30 லட்சத்து 47 ஆயிரத்து 263 பேர் யூடியூப்பில் பார்த்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.


இந்நிலையில் இது குறித்து விஜய் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

3.5 மில்லியன் வியூஸ்! 75 ஆயிரம் லைக்ஸ் #PuliTrailer #Puli #Vijay https://youtu.be/U9kCY9psgOc என்று தெரிவித்துள்ளார்.

புலி டிரெய்லரின் வெற்றியை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அழுக்குச் சட்டையுடன் ஜீவா.. சற்றும் சம்பந்தம் இல்லாமல் நயன்தாரா.. முடிந்தது திருநாள்

சென்னை: ஈ படத்தில் ஜோடி சேர்ந்த நடிகர் ஜீவா - நயன்தாரா இருவரும் மீண்டும் 9 வருடங்கள் கழித்து இணைந்திருக்கும் திரைப்படம் திருநாள்.

இயக்குநர் பி.எஸ். பிரமோத் இயக்கி வந்த இத்திரைபடத்தின் படப்பிடிப்புகள் தற்போது முடிவடைந்து உள்ளன, கும்பகோணத்தை கதைக் களமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படம் ஆக்க்ஷன் படமாக உருவாகியிருக்கிறது.


ஜீவா இந்தப் படத்தில் ரவுடியாகவும், நயன்தாரா டீச்சராகவும் நடித்திருக்கின்றனர், யான் திரைப்படத்தின் மாபெரும் தோல்விக்குப் பின்னர் ஜீவா நடித்து வரும் படமென்பதால் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

தற்போது திருநாள் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து இருக்கின்றன, இறுதிநாள் படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை படப்பிடிப்புக் குழுவினர் சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கின்றனர்.

ஜீவா ரத்தக்கறை படிந்த சட்டையுடன் அமர்ந்திருக்க அதற்கு சற்றும் சம்பந்தமில்லாமல் அருகில் அழகாக அமர்ந்திருக்கிறார் நயன்தாரா, சமூக வலைதளங்களில் தற்போது ஒரு ரவுண்டு வந்து கொண்டிருக்கிறது இந்தப் புகைப்படம்.

திருநாள் ஜீவாவிற்கு திருநாளாக மாறுமா?

 

பெட்டு, படுக்கையோடு எங்கப்பா கிளம்பிட்டாங்க அஜீத்தும், லட்சுமி மேனனும்...?

சென்னை: தல 56 படத்தின் சமீபத்திய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது, பெட்டி படுக்கைகளுடன் அஜீத் மற்றும் லட்சுமி மேனன் நடந்து வருவது போன்ற அந்த புகைப்படம் ரசிகர்களிடம் தற்போது மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத், சுருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் சூரி ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கும் அஜீத்தின் 56 வது படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.

படத்தின் கதை காட்சிகள் என அனைத்தையும் பரம ரகசியமாக படபிடிப்புக் குழுவினர் வைத்திருக்கின்றனர், எனவே படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்நிலையில் தற்போது வெளியான தல 56 படத்தின் புகைப்படம் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது, குறிப்பாக அஜீத் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை அதிகளவில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

புகைப்படத்தில் தெருவின் இருபுறங்களிலும் மக்கள் மேள தாளங்களுடன் கைதட்டிக்கொண்டு இருக்க நடுவே அஜித்தும், லட்சுமிமேனனும் கையில் பெட்டி படுக்கைகளுடன் நடந்து வருகின்றனர்.

படத்தின் முக்கியமான ஒரு காட்சி அல்லது இறுதிக் காட்சி இரண்டில் ஏதேனும் ஒரு காட்சியின் ஆரம்பமாகவோ அல்லது முடிவாகவோ, இந்தப் புகைப்படம் இருக்கலாம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்தாலும் தாடி, மீசை எதுவும் வைக்காமல் மிகவும் இளமையுடன் காட்சியளிக்கிறார் அஜீத், இது அஜீத்தின் ரசிகர்களை மிகவும் கவர்ந்து இருக்கிறது.

எனவே இந்தத் தீபாவளியன்று வெளியாக இருக்கும் தல 56 படத்தை பெரியளவில் கொண்டாடத் தீர்மானித்து இருக்கின்றனர் அஜீத்தின் ரசிகர்கள், இந்தத் தீபாவளி அஜீத்தின் ரசிகர்களுக்கு தல தீபாவளி தான்...

 

துரை செந்தில்குமாரின் புதிய படத்தில் இரட்டை வேடம் ஏற்கும் தனுஷ்?

சென்னை: எதிர்நீச்சல் இயக்குநர் துரை செந்தில்குமாரின் இயக்கத்தில் முதல்முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கவிருக்கிறார் தனுஷ் என்று புதிய செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

மாரி படத்திற்குப் பண்பு வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வந்த வேலையில்லாப் பட்டதாரி படத்தின் படப்பிடிப்பு, தற்போது நிறைவடைந்து இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கத்தில் தற்போது நடித்து வரும் தனுஷ், அடுத்ததாக இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

Dhanush to Team Up with ‘Edhir Neechal’ Director Next

துரை செந்தில்குமாரின் புதிய படத்தில் தனுஷ் 2 வேடங்களில் நடிக்கவிருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன, துள்ளுவதோ இளமையில் ஆரம்பித்து மாரி வரை சுமார் 33 படங்களில் நடித்து இருக்கிறார் தனுஷ்.

30க்கும் அதிகமான படங்களில் நடித்திருந்தாலும் இதுவரை 2 வேடங்களில் நடித்தது இல்லை தனுஷ், முதல்முறையாக இந்தப் படத்தில் இரட்டை வேடம் ஏற்பதால் அவரது ரசிகர்களுக்கு இந்தப் படம் ஒரு புதிய அனுபவத்தைக் கொடுக்கும் என்று படக்குழுவினர் கூறியிருக்கின்றனர்.

மேலும் தனுஷ் 2 வேடங்களில் நடிக்கும் இந்தப்படம் அரசியல் கலந்த த்ரில்லர் படமாக உருவாகவிருப்பதாகவும் செய்திகள் கசிந்துள்ளன.

ஏற்கனவே துரை செந்தில்குமார் இயக்கிய எதிர்நீச்சல், காக்கிச்சட்டை போன்ற படங்களைத் தயாரித்திருந்த தனுஷ், 3 வது முறையாக துரை செந்தில்குமாரின் படத்தைத் தானே நடித்து தயாரிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.