ரஜினி - கமல் படங்களுக்கு இன்சூரன்ஸ்!

12 Tamil Producers Keen On Insuring Movies

சென்னை: நாளுக்கு நாள் சினிமா தொழில் நுட்பம் வளர வளர, படங்களின் நஷ்டத்திலிருந்து பாதுகாப்பாகக் கரையேறும் உத்திகளையும் சினிமாக்காரர்கள் முன்ஜாக்கிரதையாகக் கடைப்பிடிக்க ஆரம்பித்துவிட்டனர்.

ரிஸ்க் அதிகமுள்ள தொழில்களில் ஒன்றான சினிமாவுக்கு இப்போது இன்சூரன்ஸ் செய்வது வாடிக்கையாகி வருகிறது.

ரஜினி, கமல் உள்பட பெரிய நடிகர்களின் படங்களுக்கு இப்போது கட்டாய இன்சூரன்ஸ் என்பதில் தயாரிப்பாளர்கள் மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட நடிகர்களே கவனமாக உள்ளனர்.

இந்த காப்பீட்டால் படங்களின் ஷூட்டிங்குகளின் போது ஏற்படும் விபத்துக்களுக்கு ஓரளவு நஷ்ட ஈடு கிடைக்கிறது.

முன்பு ரஜினியின் சிவாஜி, எந்திரன் படப்பிடிப்புகளின்போது நடந்த சிறு விபத்துக்களுக்கு நஷ்ட ஈடு கிடைத்தது. அதேபோல மணிரத்னத்தின் ராவணன் பட செட் வெள்ளத்தில் அடித்துப் போய்விட்டது. அதற்காக ரூ 30 லட்சம் இழப்பீடு கிடைத்தது.

இப்போது ரஜினி நடிக்கும் 'கோச்சடையான்', கமல் நடிக்கும் 'விஸ்வரூபம்', ஆர்யாவின் 'இரண்டாம் உலகம்', மணிரத்னம் இயக்கும் 'கடல்', பாலா இயக்கும் 'பரதேசி' படங்கள் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளன.

 

அஜீத்தின் வாலிதான் என்னோட ஃபேவரைட் - சொல்கிறார் ஸ்ரீதேவி

Ajith S Vaali Is One My Favorites   

அஜீத் நடித்த படங்களில் எனக்குப் பிடித்தமான படம் வாலி என்று கூறியுள்ளார் நடிகை ஸ்ரீதேவி.

ஸ்ரீதேவி மறுபிரவேசம் செய்துள்ள படம் இங்கிலீஷ் விங்கிலீஷ். இந்தப் படத்தில் அவருடன் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் அஜீத். பணம் வாங்காமல், தன் சொந்த செலவில் நடித்துக் கொடுத்தாராம் அஜீத்.

இதனால் அஜீத் மீது தனி மரியாதை வந்துவிட்டதாம் ஸ்ரீதேவிவிக்கு.

அஜீத் மிகச் சிறந்த நடிகர் என்றும், அவர் நடித்த படங்களில் தனக்கு வாலி படம் மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார் ஸ்ரீதேவி. "அஜீத் மிகச் சிறந்த பண்பாளர். இரண்டு நாள்தான் அவருடன் பழகினேன். ரொம்ப அருமையானவர். இவ்வளவு படங்கள் செய்த பிறகும் மிக எளிமையாக நடந்து கொள்கிறார்," என்றார்.

மேலும் அவர் கூறுகையில், "தமிழ் சினிமாக்களை நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன். இன்றைய நடிகர்கள் மிகவும் திறமையானவர்கள். அவர்களின் படங்கள் ரொம்பவே சுவாரஸ்யமாக உள்ளன. சூர்யாவின் கஜினி கூட எனக்கு ரொம்பப் பிடிக்கும். தனுஷ், விக்ரம் படங்களும் பிடிக்கும் (எதுக்கும் போட்டு வைப்போம்... அடுத்த படங்களுக்கு உதவும்!)" என்றார்.

 

வீரப்பன் படம்... பார்க்க மறுக்கும் முத்துலட்சுமி!

Muthulakshmi Refuses Watch Vanayudham

சந்தனக்காட்டு வீரப்பன் குறித்து எடுக்கப்பட்டுள்ள படமான வனயுத்தத்தை பார்க்க மறுத்துவிட்டார் அவர் மனைவி முத்துலட்சுமி.

போலீசால் சுட்டுக் கொல்லப்பட்ட வீரப்பனின் கதையை வனயுத்தம் என தமிழிலிலும், அட்டஹாசா என கன்னடத்திலும் படமாக்கியுள்ளனர்.

இதில் வீரப்பன் வேடத்தில் கிஷோர், வீரப்பனை வேட்டையாடும் போலீஸ் அதிகாரியாக அர்ஜுன், வீரப்பன் மனைவி முத்துலட்சுமி வேடத்தில் விஜயலட்சுமி, வீரப்பன் தந்தையாக யோகி தேவராஜ் நடித்துள்ளனர். மற்றும் லட்சுமிராய், சிகா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து படம் திரைக்கு வரத் தயாக உள்ளது.

இந்த நிலையில் ‘வனயுத்தம்' படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என்று வீரப்பன் மனைவி முத்துலட்சுமி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். படத்தில் தனது பாத்திரத்தை தவறாக சித்தரித்து உள்ளதாகவும் இதன் மூலம் தன் குழந்தைகள் எதிர்காலம் பாதிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, படத்தை முத்துலட்சுமிக்கு போட்டுக் காட்ட வேண்டும் என இயக்குநருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி முத்துலட்சுமிக்கு படத்தைத் திரையிட்டு காட்ட இயக்குனர் முன் வந்தார். ஆனால் அவர் படம் பார்க்க மறுத்துவிட்டாராம்.

இதுகுறித்து இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் கூறுகையில், "நீதிமன்ற உத்தரவுபடி ‘வனயுத்தம்' படத்தை முத்துலட்சுமிக்கு திரையிட்டு காட்ட இரண்டு நாட்கள் தயாராக இருந்தேன். அவர் படம் பார்க்க வரவில்லை. படத்தால் குழந்தைகள் நலன் பாதிக்கும் என்கிறார். வீரப்பனை வில்லனாக சித்தரித்து இருப்பதாகவும் கூறி வருகிறார். படத்தை பார்த்து விட்டு சொல்லுங்கள் என்றால் வர மறுக்கிறார்.

நடந்த சம்பவங்களைத்தான் படத்தில் வைத்துள்ளேன். யாரையும் புண்படுத்தும் காட்சிகள் இல்லை," என்றார்.

இந்தப் படத்தின் திரைக்கதையை வீரப்பனைச் சுட்டுக் கொன்ற காவல் துறை அதிகாரி விஜயகுமாருக்கு காட்டிவிட்டுத்தான் இயக்குநர் ரமேஷ் படமாக்கினார் என்று கூறப்படுகிறது. வீரப்பனை ஹீரோவாகக் காட்ட போலீஸ் அதிகாரிகள் எப்படி ஒப்புக் கொள்வார்கள்... முடிந்தவரை கேவலமாகத்தானே காட்டியிருக்கப் போகிறார்கள்? என்பது முத்துலட்சுமியின் வாதம்.

நியாயம்தானே!!

 

6 லட்சம் சம்பளம்... 6 கோடி செலவு... அதெப்டி நாராயணா!!

அவர் ஒரு டிவி நடிகர். விநாயகரின் பெயர்தான் அவருக்கும் (அந்தப் பேர் கொண்டவங்க எப்பவும் இந்த மேட்டர்ல ஸ்ட்ராங் போல!). ஒரு நாளைக்கு அதிகபட்சம் ரூ 20 ஆயிரம் சம்பளம் கிடைத்தாலே பெரிய விஷயமாம்.

ஆனால் அவரது ஆடம்பரத்தின் ரேஞ்ச் கோடிகளில்…

அவர் உபயோகிப்பது ரூ 3 கோடி மதிப்புள்ள ஜாகுவார் லேண்ட் ரோவர் கார். புதிதாக திறக்கப்பட்ட ஏழு நட்சத்திர ஹோட்டலில்தான் வாசமாம். அதுவும் ஒரு நாளைக்கு ஒரு சின்னத்திரை நடிகைகள் அல்லது பெரிய திரையில் வாய்ப்பு குறைந்த நடிகைகளுடன்தான் வருகிறாராம்.

‘எப்படி இவருக்கு மட்டும் இது சாத்தியமாகிறது? இந்த வருவாயின் பின்னணி என்னவாக இருக்கும்?’ என்று மூளையைக் கசக்கித் தேடியும் விடை கிடைக்காத சக நடிகர்கள், கொஞ்சம் விசாரித்து சொல்லுங்களேன் என்று வருமான வரித்துறை அதிகாரிகளின் தயவை நாடியுள்ளார்களாம்!!

 

போதைக்கு எதிரான பிரச்சாரம்: ஆமீர் கானை பிராண்ட் அம்பாசிடர் ஆக்கும் மராட்டிய அரசு!

Maharashtra Govt May Rope Aamir As Brand Ambassador

மும்பை: போதைப் பழக்கத்துக்கு எதிரான மாநில அரசின் பிரச்சாரத்துக்கு நடிகர் ஆமீர்கானை பிராண்ட் அம்பாசிடர் ஆக்க முடிவு செய்துள்ளது மராட்டிய அரசு.

அரசுத் தரப்பில் தன்னுடன் இதுபற்றி பேசியிருப்பதாகக் கூறியுள்ள ஆமீர்கான், இன்னும் தனது ஒப்புதலைத் தெரிவிக்கவில்லை.

ஆனால் சமூக அக்கறை கொண்ட நடிகரான ஆமீர் நிச்சயம் தன் ஒப்புதலைத் தெரிவிப்பார் என்று மாநில சமூக நலத்துறை அமைச்சர் சிவாஜிராவ் மோகே தெரிவித்தார்.

மாநிலம் தழுவிய அளவில் நடத்தப்படவிருக்கும் போதை ஒழிப்புப் பிரச்சாரம் குறித்த முதல் கூட்டம் வரும் அக்டோபர் 2-ம் தேதி புனேயில் தொடங்குகிறது. இந்தக் கூட்டத்துக்கு நடிகர்கள், எழுத்தாளர்கள் என அறிவுசார்ந்த பலரும் அழைக்கப்பட உள்ளனர்.

நாடகங்கள், கட்டுரைகள், செய்திகள் மூலம் சரியான முறையில் போதை விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை முன்னெடுப்போருக்கு உரிய ரொக்கப்பரிசுகள் வழங்கவும் மராட்டிய அரசு முடிவு செய்துள்ளது.

 

நானியின் அடுத்த தமிழ்ப் படம்- ஜோடி ப்ரணீதா!

Naani Do Tamil Film Next   

நான் ஈ புகழ் நானி தனது அடுத்த படத்தை தமிழில் செய்கிறார். அவருடன் ஜோடி சேர்கிறார் ப்ரணீதா.

நானியின் முதல் நேரடி தமிழ்ப் படம் வெப்பம். கவுதம் மேனன் உதவியாளர் இயக்கிய அந்தப் படம் பெரிதாகப் போகவில்லை. அடுத்த படம் நான் ஈ. தமிழ் – தெலுங்கில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியை இந்தப் படம் பெற்றது. விரைவில் நூறாவது நாளைத் தொடவிருக்கிறது.

இவர் அடிப்படையில் தெலுங்கு நடிகராக இருந்தாலும், தனது அடுத்த படம் தமிழில் இருக்க வேண்டும் என விரும்புகிறாராம்.

பாலிவுட் படம் ஒன்றினை இதற்காக தமிழில் ரீமேக் செய்கிறார்கள்.

விஷ்ணுவர்தனின் உதவியாளர் கோகுல் இந்தப் படத்தை இயக்குகிறார்.

அதேநேரம் இப்போது நானியின் கைவசம் 3 தெலுங்குப் படங்கள் இருப்பதால், இந்தப் படத்தை உடனடியாகத் தொடங்க முடியாது என்று தெரிவித்துள்ளாராம்.

 

ஹைய்யா மோகன்லாலுடன் நடிக்கிறேன் - குதூகலிக்கும் சோனா

Sona Turns Villain Mohan Lal   

நடிகை சோனா ஒரு மலையாளப் படத்தில் வில்லியாக நடிக்கிறார். இந்தப் படத்தில் ஹீரோவாக நடிப்பவர் மலையாள முன்னணி நடிகர் மம்முட்டி.

தமிழில் ஓரிரு படங்களை மட்டுமே வைத்திருக்கும் சோனா, இப்போது பிற மொழியில் ஏதாவது தேறுமா என முயற்சித்து வருகிறார்.

இன்னொரு பக்கம் தனது வாழ்க்கையை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதற்கான திரைக்கதையை உருவாக்கும் பணி நடக்கிறது. தனது கேரக்டரில் நடிக்கும் நடிகையை தேர்வு செய்யும் பணியிலும் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

சொந்த வாழ்க்கையை படமாக்க கூடாது என்று சோனாவுக்கு செல்போனில் மிரட்டல்களும் வந்தாலும் அவர் அசருவதாக இல்லையாம்.

இந்த நிலையில் மலையாளத்தில் ‘கர்ம யோதா’ என்ற படத்தில் நடிக்க சோனா ஒப்பந்தமாகியுள்ளார். இதில் மோகன்லால் நாயகனாக நடிக்கிறார். மேஜர் ரவி இயக்குகிறார்.

மோகன்லால் கமாண்டோ வீரர் கேரக்டரில் வருகிறார். சோனாவுக்கு வில்லி வேடமாம்.

இந்த வாய்ப்பு குறித்து அவர் கூறுகையில், “மோகன்லால் ஒரு லெஜன்ட். அவரைப் போன்றவர்களுடன் நடிப்பதன் மூலம் என் நீண்ட நாள் கனவு நனவாகிவிட்டது,” என்றார்.

 

ஹைதராபாத் விருந்தில் மணிக்கணக்கில் கட்டிப்பிடித்தபடி காட்சி தந்த த்ரிஷா - ராணா!

Rana Trisha Party Hard Hyderabad   

திரிஷாவும், தெலுங்கு நடிகர் ராணாவும் சமீபத்தில் நடந்த விருந்தில் பங்கேற்றனர். இருவரும் தனிமையில் நெருக்கமாக அமர்ந்தபடி பல மணி நேரம் பேசிக் கொண்டிருந்ததை தெலுங்கு பத்திரிகைகள் படங்களுடன் வெளியிட்டுள்ளன.

ராணாவுக்கும் த்ரிஷாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகியுள்ளன.

நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்ற இந்த நிச்சயதார்த்தத்தில், த்ரிஷாவுக்கு ராணா மோதிரம் அணிவித்தாராம். ஆனால் த்ரிஷா இதை மறுத்ததோடு, நாங்க இன்னும் ப்ரெண்ட்ஸ்தான் என்று கூறி வருகிறார்.

இந்த நிலையில் ஹைதராபாத்தில் நடந்த பிறந்த நாள் விருந்து நிகழ்ச்சியொன்றில் இருவரும் அருகருகே நெருக்கமாக அமர்ந்து கொஞ்சிக் கொண்டிருந்தார்களாம்.

இந்த விருந்துக்கு திரிஷாவும், ராணாவும் ஒரே காரில் ஜோடியாக வந்தார்கள். வந்ததும் ஒரு வாழ்த்து சொல்லிவிட்டு, தனியாகப் போய் கட்டி அணைத்தபடி உட்கார்ந்து பல மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

விருந்துக்கு வந்தவர்கள், இந்த ஜோடியின் நெருக்கத்தைப் பார்த்து, அருகில் செல்லாமல் தூரத்திலிருந்தே ஒரு ஹாய் சொல்லிவிட்டுக் கிளம்பினார்களாம்!

  Read in English: Read In English