கவர்ச்சி நடிகை மாயாவின் மகன் விக்னேஷ்குமார். இவர் குடித்துவிட்டு போதையில் பொது இடத்தில் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து விருகம்பாக்கம் போலீசில் அப்பகுதிவாசிகள் புகார் செய்தனர். இதைத் தொடர்ந்து விக்னேஷ்குமார் கைது செய்யப்பட்டார். அவர் மீது பொது இடத்தில் தகராறு செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஏற்கெனவே இவர் இதே போன்ற காரணங்களுக்காக போலீசாரால் எச்சரிக்கப்பட்டுள்ளார்.
மாயா மற்றும் அவரது உறவினர்கள் தொடர்ந்து பல காரணங்களுக்காக போலீசாரால் கைது செய்யப்பட்டோ எச்சரிக்கப்பட்டோ வந்துள்ளனர். நடிகை சீதாவுடன் தகராறு, விபச்சார குற்றச்சாட்டு, பக்கத்து வீட்டுக்காரர்களுடன் தகராறு என பல்வேறு பிரச்சினைகளில் இவர்கள் காவல் நிலையம் சென்று வந்துள்ளனர். மாயாவின் உறவினர் கவர்ச்சி நடிகை பாபிலோனாவும் இதில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.