தனி ஒருவன் தெலுங்கு ரீமேக்கில் மகேஷ் பாபுவா ராம் சரணா?

தனி ஒருவன் படத்தை முதலில் தெலுங்கில் ரீமேக் செய்யத் தயாராகிவிட்டார் மோகன் ராஜா.

Thani Oruvan (U): இப்போதே உங்கள் டிக்கெட்டை புக்செய்யுங்கள்!

இந்தப் படத்தை தெலுங்கு, இந்தியில் ரீமேக் செய்ய பல முன்னணி நடிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Mahesh Babu in Thani Oruvan remake

சமீபத்தில் சல்மான் கான் இந்த படத்தை பற்றி அறிந்து, இதன் இந்தி ரீமேக்கில் நடிக்க விருப்பம் தெரிவித்தாக கூறப்படுகிறது.

தற்போது தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபு ‘தனி ஒருவன்' படத்தை பற்றி புகழ்ந்ததாகவும் இதன் ரீமேக்கில் நடிக்க விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே மகேஷ்பாபு ஒரு நிகழ்ச்சியில் மோகன் ராஜா இயக்கத்தில் நடிக்க விருப்பம் இருப்பதாக தெரிவித்திருந்தார். அனேகமாக ‘தனி ஒருவன்' தெலுங்கு ரீமேக்கில் மகேஷ் பாபு நடிப்பார் என்று ஏதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதே நேரம், இந்தப் படத்தில் நடிக்க சிரஞ்சீவி மகன் ராம்சரணும் ஆர்வம் காட்டி வந்தார். ஆனால் இந்தப் படத்தைப் பொறுத்தவரை மகேஷ் பாபுவை வைத்து இயக்கவே மோகன் ராஜா ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.

 

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் தொடங்கியது பாகுபலி 2 படப்பிடிப்பு!

ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் பாகுபலி இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் தொடங்கியது.

ராஜமௌலி இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வசூலில் பெரும் சாதனை நிகழ்த்திய படம் பாகுபலி. தமிழ், தெலுங்கில் நேரடிப் படமாக வெளியாகி ரூ 600 கோடி வசூலைக் குவித்தது. ராணா, பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

Bahubali 2 shooting started at Athirapalli

இந்திய சினிமா வரலாற்றில் தனி இடம் பிடித்த பாகுபலி, இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியுள்ளது. கேரளாவில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் இப்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் பிரபாஸ் சம்பந்தப்பட்ட ஒரு பாடல் காட்சியைப் படமாக்கி வருகிறார்கள்.

இந்த இரண்டாம் பாகத்தில்தான் பாகுபலி ஏன் கொல்லப்பட்டார், அனுஷ்கா ஏன் சிறைப்பிடிக்கப்பட்டார் போன்ற முடிச்சுகள் அவிழ இருக்கின்றன.

வரும் 2016 அக்டோபருக்குள் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

 

'நல்லா படம் பண்ணு... எச்சரிக்கையா செலவு பண்ணு' - உதவியாளருக்கு ரஜினி அட்வைஸ்

நடிகர் ரஜினிகாந்திடம் உதவியாளராக இருந்த ஜெயராமன், 'கிருமி' படத்தின் மூலமாக தயாரிப்பாளராகி இருக்கிறார், ரஜினியின் வாழ்த்துகளுடன்!

ஜேபிஆர் பிலிம்ஸ் கோவை வழங்கும் இந்தப் படம் இம்மாதம் வருகிற 24-ஆம் தேதி வெளியாகிறது.

Kirumi to release on Sep 24th

இப்படத்தில் 'மதயானைக்கூட்டம்' படத்தில் நாயகனாக நடித்த கதிர் நாயகனாக நடித்துள்ளார். ரேஷ்மி மேனன்தான் நாயகி. சார்லி, வனிதா, தென்னவன், யோகி பாபு, டேவிட் சாலமன், தீனா, 'நான்மகான் அல்ல' மகேந்திரன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இவர் பி.சி.ஸ்ரீராமின் மாணவர். கே இசை அமைத்திருக்கிறார்.

அனுசரண் இயக்குநராக அறிமுகம் ஆகிறார். இவர் ஆஸ்திரேலியாவில் திரைப்படம் சார்ந்த படிப்பை முடித்ததுடன் பல குறும்படங்கள் ,மியூசிக் வீடியோக்கள் இயக்கியுள்ளார்.

Kirumi to release on Sep 24th

'கிருமி' படம் பற்றி இயக்குநர் கூறும் போது "இது முழுக்க முழுக்க சென்னைப் பின்னணியில் உருவாகியுள்ள படம். நல்ல வேலைக்காகக் காத்திருக்கும் கீழ்த்தட்டு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு திறமைசாலி இளைஞனுக்கு நடக்கும் சில சம்பவங்கள். அவன் கடந்து போகும் சில அத்தியாயங்கள்தான் கதை. நாயகியும் நடுத்தர வர்க்கம்தான். அவள் வேலைக்குப் போகிறாள்.

"கிருமி' என்று நான் சொல்வது இன்று சமுதாயத்தில் இந்த அமைப்பில் பரவி இருக்கும் ஒரு பிரச்சினையைத்தான். அது என்னவென்று படம் பார்த்தால் புரியும்," என்கிற அனுசரண், "சினிமாத்தனம் இல்லாமல் யதார்த்தத்துக்கு நெருக்கமான விதத்தில் படம் உருவாகி இருக்கிறது. நமக்கு நடப்பதைப் போல எல்லாரையும் உணர வைக்கும் கதையாக இது இருக்கும். தொழில்நுட்பரீதியிலும் நேர்த்தியான படமாக இருக்கும்," என்கிறார் அனுசரண்.

நாயகன் கதிர் பேசும் போது, "மதயானைக் கூட்ட'த்துக்குப் பிறகு நல்லகதை தேடினேன். 60 கதை கேட்டேன். இது பிடித்திருந்தது. இதில் என் கேரக்டர் பக்கத்து வீட்டுப் பையன் போல இருக்கும். அவ்வளவு எளிமை யதார்த்தம். இதைத் தேர்வு செய்ய எனக்கு வழிகாட்டி உதவியாக இருந்து ஜிவி பிரகாஷ் வழிநடத்தினார்," என்கிறார்.

படத்தில் 5 பாடல்கள். இதுவரை 45 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

தன் நண்பர்கள் கே. ஜெயராமன், எல்.பிருத்திவிராஜ், எஸ். ராஜேந்திரன் ஆகியோரை இணைத்துக் கொண்டு தயாரித்திருக்கிறார் 'ரஜினி' ஜெயராமன்.

Kirumi to release on Sep 24th

தயாரிப்பாளரான அனுபவம் பற்றி 'ரஜினி' ஜெயராமன் கூறும் போது, "இது எங்கள் முதல் முயற்சி. கதை பிடித்திருந்தது. இந்தக் காலத்துக்கும் ஏற்றமாதிரி இருந்தது. படம் தயாரிப்பது பற்றி ரஜினி சாரிடம் கூறினேன். மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அவர் இல்லாமல் எனக்கு எதுவும் இல்லை. இந்தப் பெயர், முகவரி அவர் கொடுத்ததுதான். 'நல்லா பண்ணு... இந்தக் காலத்துக்கு ஏற்றமாதிரி படம் இருக்கட்டும். செலவு செய்வதில் கவனமாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,' என்று கூறி வாழ்த்தினார்," என்றவர், இன்னொன்றையும் கூறினார்.

"நான் அவருடன் 24 ஆண்டுகள் கூடவே இருந்திருக்கிறேன். அது மறக்க முடியாத காலங்கள். அவர் சிங்கப்பூரிலிருந்து உடல் நிலைசரியாகி வந்த போது இடையில் எனக்கும் உடல் நிலை சரியில்லாமல் இருந்ததைக் கேள்விப்பட்டு அங்கிருந்து வந்ததும் முதலில் கூப்பிட்டது என்னைத்தான். அவர் வந்தவுடன் என்னைக் கூப்பிட்டதும் எனக்கும் அழுகை வந்து விட்டது. எதுவும் பேசத் தோன்றவில்லை. என்னைப் பார்த்ததும் அவரும் கண் கலங்கி விட்டார். அவர் ஆசியும் அன்பும் எனக்கு என்றும் உண்டு," என்கிறார் நெகிழ்ச்சியுடன்.

'கிருமி' வரும் 24ஆம் தேதி திரைக்கு வருகிறது.

 

கபாலியில் எனக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா? - கேட்கும் சிவாஜி வில்லன்

ரஜினியுடன் கபாலி படத்தில் நடிக்க ஆசையாக உள்ளது. வாய்ப்புக் கிடைக்குமா? என்று வெளிப்படையாகக் கேட்டுள்ளார் நடிகர் சுமன்.

சேலத்தில் நடந்த ஒரு பள்ளி விழாவில் பங்கேற்ற மோகன் பேசுகையில், "சிவாஜி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிசாருடன் நடித்தது என் வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாது. அந்தளவிற்கு எனக்கு அந்த படம் பெயர் பெற்று தந்தது.

Sivaji villain wants to act with Rajini in Kabalai

இந்தப் படத்தில் நடித்த பிறகுதான் நான் மீண்டும் பிஸியாகி பல படங்களில் நடித்துக் கொண்டுள்ளேன். இந்தியில் எனக்கு நடிக்க வாய்ப்பு வந்ததும் சிவாஜியால்தான். எல்லாவற்றுக்குமே ரஜினி சார்தான் காரணம்.

தற்போது ரஜினிசார் கபாலி படத்தில் நடிக்கிறார். இதிலும் எனக்கு நடிக்க ஆசை. வாய்ப்பு தந்தால் கட்டாயம் நடிப்பேன்.

சினிமா இண்டஸ்டிரி நாளுக்கு நாள் முன்னேற வேண்டும். நடிகர்கள், நடிகைகள் நன்றாக இருக்க வேண்டும் என எண்ணுபவர் ரஜினி சார். அவர் இன்னும் பல படங்களில் நடிக்க வேண்டும். இதைத்தான் அவரது ரசிகர்களும் என்னைப் போன்ற அவரது அபிமானிகளும் விருக்கிறோம்," என்றார்.

 

தள்ளிப் போன "புலி" பாடல்... ஸாரி கேட்ட "தேவி ஸ்ரீ பிரசாத்"

சென்னை: புலி திரைப்படத்தின் ப்ரோமோ சாங் ஒன்றை நேற்று வெளியிடுவதாக புலி படக்குழுவினர் மற்றும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர்.

Paayum Puli (U): இப்போதே உங்கள் டிக்கெட்டை புக்செய்யுங்கள்!

இந்த அறிவிப்பை புலி படத்தின் பாடல்களை வாங்கியிருக்கும் சோனி மியூசிக் நிறுவனமும் உறுதி செய்தது, நேற்று நள்ளிரவு 12 மணியளவில் படத்தின் பாடலை வெளியிடத் திட்டமிட்டு இருந்தனர்.

ஆனால் புலி படத்தின் பாடலை நேற்று வெளியிட முடியவில்லை என்று படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.


இது குறித்து அவர் கூறும்போது எதிர்பாராமல் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புலி படத்தின் ப்ரோமோ சாங்கை நேற்று வெளியிட முடியவில்லை.

இதற்காக விஜய் ரசிகர்கள் அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இன்று நண்பகல் 12 மணியளவில் படத்தின் பாடல் வெளியிடப்படும் என்று கூறியிருக்கிறார்.


இதனை புலி படத்தின் தயாரிப்பு நிறுவனமான எஸ்கேடி ஸ்டுடியோஸ் நிறுவனமும் உறுதி செய்துள்ளது. இதனால் நேற்று பாடல் வெளியாகும் என்று காத்திருந்த விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

அவர்களின் வாட்டத்தை போக்கும் வகையில் இன்னும் சற்று நேரத்தில் புலி படத்தின் ப்ரோமோ சாங் வெளியாகவிருக்கிறது.

புலி படத்தின் வெளியீட்டுத் தேதி ஏற்கனவே தள்ளிப்போன நிலையில், தற்போது படத்தின் ப்ரோமோ சாங் வெளியீடும் தள்ளிப் போயிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

அஜீத்தின் வார்த்தைகள் என் வாழ்க்கையை மாற்றியது - சிவகார்த்திகேயன்

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான "அஜீத்தை சந்தித்தது மற்றும் அவரிடம் பேசியது ஆகியவை எனது வாழ்க்கையை மாற்றிய தருணங்கள்" என்று இளம் நடிகர் சிவகார்த்திகேயன் கூறியிருக்கிறார்.

ஒரு அன்பான சகோதரன் அல்லது அப்பா என்னருகில் இருந்து எனது முதுகில் தட்டிக் கொடுத்தது போன்று அவரின் வார்த்தைகள் எனக்கு உற்சாகம் கொடுத்தன.

I Have Started Seeing Myself as a Different Person after Meeting Ajith - says Sivakarthikeyan

நான் அவரைச் சந்தித்து பேசியது பற்றி இதுவரை நான் யாரிடமும் தெரிவித்தது இல்லை, ஏனெனில் அது ஒரு இலவச விளம்பரம் போன்று ஆகிவிடக்கூடாது.

நாங்கள் சந்தித்துப் பேசியபோது மிகவும் குறைவான நேரம் மட்டுமே நாங்கள் சினிமாவைப் பற்றி விவாதித்தோம். அவர் எனக்கு எந்தவித அறிவுரையும் வழங்கவில்லை.

அவரின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை பற்றி என்னிடம் பகிர்ந்து கொண்டார். நான் ஒரு மிகப்பெரிய நடிகரைச் சந்தித்தேன் என்று கூறுவதைவிட நல்ல ஒரு மனிதனை சந்தித்தேன் என்றுதான் கூறவேண்டும்.

அவரைச் சந்தித்த பின்பு எனது வாழ்க்கை மாறியது போன்று உணர்கிறேன்" என்று அஜீத்தை சந்தித்த தருணத்தைப் பற்றி உருகிக் கரைந்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

அஜீத்தோட பிரியாணி பத்தி ஒண்ணுமே சொல்லலையே?

 

நடிகர் சங்கத் தேர்தல்: சூறாவளி பிரச்சாரத்தில் 'பாண்டவர் அணி!'

நடிகர் சங்க தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து பிரச்சாரத்தில் இன்னும் வேகமெடுத்திருக்கிறது விஷால் அணி.

திரையுலகின் அத்தனைப் பிரபலங்களையும் அடுத்தடுத்து சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறது.

Pandavan Ani's non stop campaign for Nadigar Sangam election

நேற்று முன்தினம் ஆச்சி மனோரமாவைச் சந்தித்தவர்கள், அடுத்து ரம்யா கிருஷ்ணனைச் சந்தித்து ஆதரவு கேட்டனர்.

நேற்று கவுண்டமணி, வடிவேலு, விவேக் என காமெடி உலகில் சிகரம் தொட்ட மூன்று கலைஞர்களையும் சந்தித்து வாக்குக் கேட்டனர். இவர்களில் வடிவேலுவும் விவேக்கும் தம்ப்ஸ் அப் என்பது போல சிம்பல் காட்டி ஆதரவை உறுதி செய்தனர்.

Pandavan Ani's non stop campaign for Nadigar Sangam election

சில பல வதந்திகளை வென்று சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியிருக்கும் வினுச்சக்கரவர்த்தியையும் நேற்று சந்தித்து ஆதரவு கேட்டனர்.

Pandavan Ani's non stop campaign for Nadigar Sangam election

தங்கள் அணியைச் சேர்ந்த வேட்பாளர்களில் ஒருவரான கார்த்தியின் தந்தைதான் என்றாலும், அவரையும் சந்தித்து ஆதரவு கேட்டனர்.

Pandavan Ani's non stop campaign for Nadigar Sangam election

'இவர்களின் இந்த வேகத்தைப் பார்த்தால், இந்த அணிதான் நடிகர் சங்கத்தைக் கைப்பற்றும் போல' என்கிற ரீதியில் பேச்சு கிளம்பியிருக்கிறது கோடம்பாக்கத்தில்.

 

மறுபடியும் "தாடி" பாலாஜி.. "அதே" செய்திதான்.. ஆனால் இப்போதும் வதந்திதானாம்

சென்னை: பிரபல காமெடி நடிகரும், தொகுப்பாளருமான பாலாஜியை குறி வைத்து ஏன்தான் இப்படி செய்திகள் பரவுகிறதோ தெரியவில்லை. அவர் தற்கொலைக்கு முயன்றார் என்ற வதந்தி மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சின்னத்திரையில் செல்லமாக "தாடி" பாலாஜி என்றழைக்கப்படும் பிரபல காமெடி நடிகர் பாலாஜி. இவரை பற்றி கடந்த சில மாதங்களாகவே வதந்தி பரவி வருகிறது. ஏற்கனவே இயக்குனர் பாலாஜி யாதவ் தற்கொலை செய்து கொண்டார். அப்போது, தாடி பாலாஜிதான் தற்கொலை செய்து கொண்டதாக வதந்தி பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

hoax rounding actor balaji

இந்நிலையில், தாடி பாலாஜி தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் பரவியது. பாலாஜி குறித்த செய்தி திரையுலகினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், வதந்திக்கு தாடி பாலாஜி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். "பிரஷர் காரணமாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டேன். இந்த பரிசோதனைக்கு பிறகு வீட்டிற்கு சென்று விட்டேன். என்னை பற்றி திரும்ப திரும்ப வதந்தி வருவது வருத்தம் அளிக்கிறது" என்று விளக்கம் அளித்துள்ளார்.

 

கவுண்டமணி, நயன்தாரா படங்களுடன் மோதும் விக்ரம்!

வரும் செப்டம்பர் 17-ம் தேதி வரவிருந்த படங்களில் லிஸ்டில் அதிரடி மாற்றங்கள்.

அக்டோபர் மாதம் வருவதாக இருந்த விக்ரமின் பத்து எண்றதுக்குள்ள, வரும் செப்டம்பர் 17-ம் தேதியே வருகிறது. விக்ரம் - சமந்தா நடித்துள்ள பத்து எண்றதுக்குள்ள படத்தை விஜய் மில்டன் இயக்கியுள்ளார். ‘கோலி சோடா' படத்திற்கு பிறகு விஜய் மில்டன் இயக்கியுள்ள படம் இது.

Paththu Endratrathukkulla joins in Deepavali race

ஆனால் அன்றைக்கு வெளியாகும் என பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் திடீரென தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

அன்றைய தேதியில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள புதிய ‘மாயா' படம் வெளியாகவிருக்கிறது. திகில் நிறைந்த பேய் படமாக உருவாகியுள்ளது மாயா.

இப்படத்துடன் கவுண்டமணி நீண்ட இடைவெளிக்கு பிறகு கதாநாயகனாக நடித்திருக்கும் ‘49 ஓ' என்கிற படமும் வெளிவரவிருக்கிறது.

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா' படமும் இதே தேதியில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.