அழகன் அழகி ஷூட்டிங்... மணல் புயலில் சிக்கிய நடிகை கஸ்தூரி!


திருச்செந்தூர் அருகே தேரிக் குடியிருப்பில் படப்பிடிப்பு நடந்தபோது மணல்புயலில் சிக்கினார் நடிகை கஸ்தூரி.

முன்னாள் ஹீரோயினான கஸ்தூரி இப்போது குணச்சித்திர வேடத்துக்கு மாறிவிட்டார். குத்தாட்டமும் போட்டு வருகிறார்.

தற்போது கிரீன் டூ சினிமா என்னும் பட நிறுவனம் அழகன் அழகி என்ற படத்தை தயாரித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு திருச்செந்தூர் அருகில் உள்ள தேரி குடியிருப்பில் செம்மண் வெளியில் நடந்தது. கஸ்தூரி கவர்ச்சி நடனம் ஆடுவது போன்ற பாடல் காட்சி அங்கு படமாக்கப்பட்டது.

வெயில் அதிகமாக இருந்தும் தொடர்ந்து 4 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. 4வது நாள் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென்று மணல் புயல் வீசியது. கஸ்தூரி உள்பட படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் மணல் புயலில் சிக்கினார்கள். இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
 

விஜயகாந்த் பிறந்த நாளில் 159 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்!


தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி வருகிற 25-ந் தேதி 159 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்க ஏற்பாடு செய்துள்ளனர் அவரது கட்சியினர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்த தினம் ஆகஸ்ட் 25-ம் தேதி வருகிறது. அன்று பிறக்கும் 159 குழந்தைகளுக்கு மத்திய சென்னை தேமுதிக சார்பில் தலா 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படுகிறது. வட பழனி கோவிலில் தங்கத் தேர் இழுத்து வழிபாடு நடக்கிறது. மாநில இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ் நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார்.

புரசைவாக்கம் மாநகராட்சி பள்ளிக் கூடத்துக்கு ரூ.50 ஆயிரம் நன்கொடை வழங்கப்படுகிறது. வில்லிவாக்கம் பஸ் நிலைய பகுதியில் 1059 மரக்கன்றுகள் நடும் முகாம் நடக்கிறது. மத்திய சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 7 பகுதிகளில் 70 ஆயிரம் பேருக்கு வேட்டி-சேலைகளும் வழங்கப்படுகிறது. 50 ஆயிரம் பேருக்கு சமபந்தி விருந்தும், இனிப்பும் வழங்கப்படுகிறது.

59 ஏழைப் பெண்களுக்கு தையல் எந்திரங்களும், 59 ஊனமுற்றோருக்கு 3 சக்கர வண்டிகளும் மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மாநில இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ், மத்திய சென்னை மாவட்ட தே.மு.தி.க. தலைவர் க.செந்தாமரைக்கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
 

ஒருவழியாக கமல் ஜோடியானார் அனுஷ்கா!


விஸ்வரூபம் படத்தில் கமலுக்கு ஜோடி யார் என்பதில் நீடித்த இழுபறி ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது.

தெலுங்கு - தமிழில் முன்னணியில் உள்ள அனுஷ்காதான் விஸ்வரூபம் பட நாயகி.

கமல் இயக்கி ஹீரோவாக நடிக்கும் புதிய படம் விஸ்வரூபம். இந்தப் படத்தில் ஆரம்பத்தில் சோனாக்ஷி சின்ஹா நாயகியாக நடிப்பார் என அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் திடீரென படத்திலிருந்து விலகிக் கொண்டார்.

படம் துவங்க மிகவும் தாமதமாகிக் கொண்டிருப்பதால், இந்தி வாய்ப்புகள் பறிபோவதாகக் கூறி அவர் விலகிக் கொண்டார்.

எனவே தீபிகா படுகோன் உள்பட பலரிடமும் பேசி வந்தனர். இந்த நிலையில் இப்போது அனுஷ்காவை நாயகியாக்கியுள்ளனர்.

படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. ஐரோப்பா மற்றும் கனடாவில் இந்தப் படத்துக்காக பிரமாதமான லொகேஷன்களை பார்த்துவிட்டு வந்துள்ளார் கமல்ஹாஸன்.
 

மங்காத்தாவுக்கு யு / ஏ... கிடைக்குமா வரிவிலக்கு?


அஜீத்தின் மங்காத்தா படம் இன்று சென்னையில் தணிக்கை செய்யப்பட்டது. இந்தப் படத்துக்கு யு / ஏ சான்று அளித்துள்ளனர் அதிகாரிகள்.

இதனால் இந்தப் படத்துக்கு தமிழக அரசின் வரிவிலக்கு கிடைக்காது என்று தெரிகிறது.

செவ்வாய்க்கிழமை இந்தப் படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள், படம் நல்ல பொழுதுபோக்காக இருப்பதாக பாராட்டு தெரிவித்தனர். ஆனால் எந்த கட்டும் தரவில்லை.

இதுகுறித்து பேசிய படத்தின் புதிய உரிமையாளரான ஞானவேல் ராஜா, "மங்காத்தா சென்சாராகி வந்திருப்பதில் மகிழ்ச்சி. திட்டமிட்டபடி ஏப்ரல் 31-ம் தேதி படம் வெளியாகும்," என்றார்.

இயக்குநர் வெங்கட் பிரபு, மங்காத்தா படத்துக்கு யுஏ கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அஜீத் ரசிகர்களே ஆட்டத்துக்கு தயாராகுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் புதிய அறிவிப்பின்படி, யு சான்று பெற்ற படங்களுக்கு மட்டுமே வரிச்சலுகைகள் கிடைக்கும். ஆனால் யுஏ சான்று கிடைத்துள்ள மங்காத்தாவுக்கு இந்த சலுகை கிடைக்காது என்று கூறப்படுகிறது.
 

ஹசாரேவுக்கு ரஜினிகாந்த் ஆதரவு!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஹசாரேவுக்கு ரஜினிகாந்த் ஆதரவு!

8/23/2011 3:37:05 PM

ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து வரும் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக, நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஊழல் எல்லா விதத்திலும் தடுக்கப்படவேண்டியது. எனவே ஊழலுக்கு எதிராக போராடிவரும் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவளிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

 

யுவன் சங்கர் ராஜா மீண்டும் திருமணம்?


தமிழின் நம்பர் ஒன் இசையமைப்பாளர் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ள யுவன் சங்கர் ராஜாவுக்கு மீண்டும் திருமணம் செய்ய ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன.

தமிழ் சினிமாவில் சமீப காலமாக அதிக வெற்றிப் படங்களுக்கு இசையமைத்தவர், அதிகப் படங்களை கைவசம் வைத்திருப்பவர் என்றால் அது யுவன் சங்கர் ராஜாதான்.

இவருக்கு ஏற்கெனவே சுஜன்யா ராவ் என்ற பெண்ணுடன் திருமணமானது. ஆனால் இந்தத் திருமண உறவு குறுகிய காலத்திலேயே முடிவுக்கு வந்துவிட்டது. இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர்.

அன்றிலிருந்து யுவனுக்கு பெண் பார்த்து வருகின்றனர் யுவனின் தந்தை இளையராஜா மற்றும் குடும்பத்தினர்.

இந்த நிலையில் யுவனுக்கும் ஷில்பா என்ற பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஷில்பா திரையுலகைச் சேர்ந்தவரில்லை. ஆனால் அவர் யுவனுக்கு மிகப் பொருத்தமான ஜோடி என யுவனின் நண்பர்கள் கூறி வருகின்றனர்.

விரைவில் இந்த திருமணம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்கிறார்கள்.
 

ரவி கே.சந்திரன் இயக்கத்தில் தனுஷ்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ரவி கே.சந்திரன் இயக்கத்தில் தனுஷ்!

8/23/2011 12:37:18 PM

இந்திய அளவில் அதிக சம்பளம் பெறும் ஒளிப்பதிவாளர் என்ற பெருமை ரவி கே.சந்திரனுக்கு உண்டு. இந்தியாவின் தலைச்சிறந்த இயக்குனர்களான மணிரத்னம், ஷங்கர் என பல முன்னணி இயக்குனர் படங்களில் ஒளிப்பதிவராக பணியாற்றி உள்ளார். அதுமட்டுமின்றி அமிதாப், அமீர்கான், ஷாரூக்கான் என முன்னணி நடிகர்களுடன் பணியாற்றி உள்ளார். தற்போது 7ஆம் அறிவு படத்துக்கு இவர்தான் ஒளிப்பதிவு. பிஸியான ஷெட்யூலுக்கு நடுவில் ஸ்கி‌ரிப்ட் ஒன்றை தயார் செய்திருக்கிறாராம். தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்று அவ‌ரிடம் கதை சொல்லி, கால்ஷீட்டும் பெற்றிருக்கிறார். இசை ஹாரிஸ் ஜெயரா‌ஜ். ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை. இன்னும் பெய‌ரிடப்படாத இந்தப் படத்தை நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி தயா‌ரிக்கலாம் என்று கூறப்படுகிறது.

 

காஞ்சனா காட்டில் மழை?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

காஞ்சனா காட்டில் மழை?

8/23/2011 12:26:11 PM

இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் காஞ்சனா. படத்தை இயக்கி நடித்திருக்கும் லாரன்ஸே இப்படியொரு வெற்றியை எதிர்பார்த்திருக்க மாட்டார். தமிழில் பிரமாத கலெக்ச‌‌ன் என்றால் தெலுங்கில் பேய்த்தனமான கலெக்சன். இந்தப் படத்தை இந்தியில் சல்மான் கானை வைத்து ‌ரீமேக் செய்யவிருப்பதாக படம் வெளியாகும் முன்பே லாரன்ஸ் தெ‌ரிவித்திரு‌ந்தார். அப்போது ‌ரீமேக் உ‌ரிமையாக ஐம்பது லட்சங்கள் கேட்டிருந்தனர். படம் பேய் ஓட்டம் ஓடுவதால் ‌ரீமேக் உ‌ரிமையின் விலையும் உயர்ந்திருக்கிறது. இப்போது இரண்டு கோடிகள் கேட்கிறாராம் லாரன்ஸ். படத்தை இந்தியில் இயக்க தனியாக நான்கு கோடிகள். காஞ்சனா காட்டில்தான் இப்போது மழை.

 

பில்லா-2வில் இளமையாக தோன்றும் அஜீத்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பில்லா-2வில் இளமையாக தோன்றும் அஜீத்!

8/23/2011 12:23:06 PM

பில்லா படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடக்கிறது. சக்‌ரி டோலட்டி படத்தை இயக்கி வருகிறார். சாதாரண டேவிட் என்ற இளைஞனாக இருந்தவன் எப்படி அனைவரும் பயப்படும் பில்லாவாக மாறினான் என்பதே பில்லா இரண்டாம் பாகத்தின் கதை. இதனால் பில்லா முதல் பாகத்தைவிட இரண்டாவது பாகத்தில் இளமையாக தெ‌ரிய வேண்டிய கட்டாயம் அ‌‌ஜீத்துக்கு. அவரும் உடற்பயிற்சி மூலம் இளமை தோற்றத்துக்கு மாறியிருக்கிறார். கணிசமான எடையும் குறைந்திருக்கிறது. இந்தப் படத்தில் ஹுமா குரோஷி நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இவர் டெல்லியை சேர்ந்த மாடல். இன்னொரு ஹீரோயினும் படத்தில் உண்டு. அவரை பிரெசிலிலிருந்து தேர்வு செய்திருக்கிறார்கள். இவர் பிரபல மாடல். பெயர் புருனா அப்துல்லா. கோவா, புது‌ச்சே‌ரி, ரஷ்யா ஆகிய இடங்களிலும் பில்லாவின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

 

இளையராஜா இசையில் பிரகாஷ்ரா‌ஜ் படம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

இளையராஜா இசையில் பிரகாஷ்ரா‌ஜ் படம்

8/23/2011 12:16:10 PM

பிரகாஷ்ரா‌ஜ் பல படங்கள் தயா‌ரித்திருக்கிறார். ஆனால் இதுவரை எந்தப் படத்துக்கும் இளையராஜா இசையமைத்ததில்லை. மராத்தி படம் ஒன்றை தமிழில் பிரகாஷ்ரா‌ஜ் தயா‌ரித்து இயக்கவிருப்பது தெ‌ரிந்திருக்கும். இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். இயக்குனராக பிரகாஷ்ராஜுக்கு இது இரண்டாவது படம். முதல் படம் கன்னடத்தில். ராதாமோகன் இயக்கிய அபியும் நானும் படத்தை கன்னடத்தில் பிரகாஷ்ரா‌ஜ் இயக்கினார். இப்போது மராத்திப் படமொன்றை தமிழில் ‌ரீமேக் செய்கிறார். பிரகாஷ்ரா‌ஜின் மொழி, பயணம் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கே.வி.குகன் இந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்கிறார்.

 

தெலுங்கில் பட்டை கிளப்பும் தமிழ் படங்கள்-!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தெலுங்கில் பட்டை கிளப்பும் தமிழ் படங்கள்-!

8/23/2011 12:13:24 PM

சமீபத்தில் வெளியான தமிழ் படங்கள் தற்போது தெலுங்கிலும் டப் செய்யப்படுகிறது. இதனால் அதிக தெலுங்கு திரையரங்குகளில் தமிழ் படங்கள் ஓடி வருகின்றன. சமீபத்தில் தமிழில் ஹிட்டான ‘நான் மகான் அல்ல’, ‘தெய்வத்திருமகள்’ என பல தமிழ் திரைப்படங்கள் மொழி மாற்றம் செய்யப்பட்டன. அதுமட்டுமின்றி இந்த படங்களுக்கு தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்தது. இதனால் தமிழ் இயக்குனர்களின் மதிப்பும் தெலுங்கில் உயர்ந்துள்ளது. அந்தவகையில் சுசீந்திரன் இயக்கிய நான் மகான் அல்ல படம் ஜுனியர் என்டிஆரை வெகுவாக கவர்ந்திருக்கிறது. சுசீந்திரனை தொடர்பு கொண்ட அவர் தனக்கு ஒரு படம் இயக்கித் தரும்படி கேட்டிருக்கிறார். தற்போது விக்ரமை வைத்து ராஜபாட்டை படத்தை இயக்கி வருகிறவர் அப்படம் முடிந்ததும் ஜுனியர் என்டிஆருக்காக ஸ்கி‌ரிப்ட் தயார் செய்வதாக உறுதியளித்துள்ளார். ஜுனியர் என்டிஆர் மட்டுமின்றி, தெலுங்கின் சூப்பர் ஸ்டார்கள் தமிழ் இயக்குனர்களையும், தமிழ்ப் படங்களையும் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.

 

கௌதம் வாசுதேவ் மேனனின் "நித்யா"

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கௌதம் வாசுதேவ் மேனனின் 'நித்யா'

8/23/2011 12:04:27 PM

விஜய்யை வைத்து யோஹன். அத்தியாயம் ஒன்று படத்தை அடுத்த வருடம் தொடங்குகிறார் கௌதம் வாசுதேவ் மேனன். அதற்கு முன் ஜீவாவை வைத்து படமெடுக்க கௌதம் திட்டமிட்டுள்ளார். விண்ணைத்தாண்டி வருவாயா இந்தி ரீமேக் முடிந்த பிறகு ஜீவாவின் படம் தொடங்கள்ளதாக தெரிகிறது. படத்துக்கு நித்யா என்று பெயர் வைத்துள்ளார். ஹீரோயின் சமந்தா. படத்துக்கு இசைப்புயல் ஏ,ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். கௌதம் வாசுதேவ் மேனன், ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியின் விண்ணைத்தாண்டி வருவாயா பாடல்கள் இன்று வரை ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது. இதனையடுத்து மிகுந்த எதிர்பார்ப்புப்ழு இடையே மீண்டும் இந்தக் கூட்டணி இணைகிறது. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் பணிபு‌ரிந்தவர்களே இந்தப் படத்திலும் பணியாற்ற உள்ளனர். கேமரா மனோ‌ஜ் பரமஹம்சா, பாடல்கள் தாமரை, எடிட்டிங் ஆண்டனி. விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.




 

மங்காத்தாவை வாங்கிய சூர்யா உறவினர் ஞானவேல் ராஜா!


அஜீத் குமாரின் 50 வது படமான மங்காத்தாவை வாங்கியுள்ளார் நடிகர் சூர்யாவின் உறவினரும் பிரபல தயாரிப்பாளருமான ஞானவேல் ராஜா.

மங்காத்தாவின் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி. இவரது க்ளவுட் நைன் மூவீஸ்தான் மங்காத்தாவைத் தயாரித்தது, சோனியுடன் இணைந்து ஆடியோவையும் வெளியிட்டது.

ஆனால் தமிழகத்தில் நிகழ்ந்த அரசியல், ஆட்சி மாற்றங்கள் காரணமாக இப்போது தயாநிதி அழகிரி மங்காத்தாவின் தயாரிப்பாளராக தொடர முடியாத நிலை. அவரது பேனரில் படம் வெளியானால் பாதுகாப்பு இருக்குமா என விநியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும் தயங்கவே, படத்தின் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

இன்னொரு பக்கம் ரசிகர்களின் அதிகபட்ச எதிர்ப்பார்ப்பு படத்தின் ரிலீஸை தள்ளிப் போட முடியாத அளவுக்கு இருந்தது.

இந்த நெருக்கடியைத் தீர்க்கும் வகையில், மங்காத்தா படத்தை வாங்கி ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் பேனரில் வெளியிடுகிறார் கே இ ஞானவேல் ராஜா. பருத்தி வீரன், சிங்கம், சிறுத்தை உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர் இவர். நடிகர் சூர்யாவின் நெருங்கிய உறவினர்.

இதற்கிடையே, மங்காத்தா திரைப்படம் உலகெங்கும் ஆகஸ்ட் 31-ம் தேதி வெளியாவதை உறுதி செய்துள்ளது, படத்தின் சர்வதேச வெளியீட்டு உரிமை பெற்றுள்ள அய்ங்கரன் நிறுவனம்.

இந்த திடீர் மாறுதல்கள் அஜீத் ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.

 

நவம்பரில் ராமராஜன் மகள் திருமணம்


சென்னை: நடிகரும் அதிமுக முன்னாள் எம்பியுமான ராமராஜனின் மகள் அருணா திருமணம் வரும் நவம்பர் மாதம் சென்னையில் நடக்கிறது.

நடிகர் ராமராஜன்-நளினி தம்பதிகளின் மகள் அருணா. இவர் எம்.ஏ., பி.எல். பட்டதாரி ஆவார். அருணாவுக்கும், குவைத்தில் ஒரு நட்சத்திர ஓட்டலில் மானேஜராக இருக்கும் ராமச்சந்திரன் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இவர்களது திருமணம் வருகிற நவம்பர் மாதம் 30-ந் தேதி சென்னையில் நடைபெறுகிறது. திருமண ஏற்பாடுகளை ராமராஜனும், நளினியும் சேர்ந்தே செய்து வருகிறார்கள்.

இந்த திருமணத்துக்கு முதல்வர் ஜெயலலிதா நேரில் வருவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

தொடங்கியது சினிமாக்காரர்கள் உண்ணாவிரதம்...சூர்யா தவிர்த்த முன்னணி நடிகர்கள் 'ஆப்சென்ட்'!


சென்னை: அன்னா ஹசாரேவின் ஜன் லோக்பாலுக்கு ஆதரவாக தமிழ் சினிமாக்காரர்களின் உண்ணாவிரதம் இன்று சென்னை பிலிம்சேம்பரில் தொடங்கியது.

ஆனால் சூர்யா தவிர்த்த முன்னணி நடிகர்கள், முக்கிய தயாரிப்பாளர்கள் என யாரும் இதில் பங்கேற்கவில்லை.

சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வளாகத்தில் இந்த உண்ணாவிரதம் தொடங்கியது. அங்கு சாமியானா பந்தல் போடப்பட்டு, அதில் அன்னா ஹசாரே உருவப்பட பேனர் கட்டி இருந்தனர்.

காலை 9 மணிக்கு உண்ணாவிரதம் துவங்கியது.

நடிகர்கள் சூர்யா, பிரபுதேவா, தியாகு, நடிகை ரோகினி, இயக்குனர்கள் சேரன், மனோபாலா, தயாரிப்பாளர்கள் கே.ஆர்., சித்ராலட்சுமணன், ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் உள்ளிட்டோர் அன்னா ஹசாரேக்கு ஆதரவு தெரிவித்தும் வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தியும் உண்ணாவிரத பந்தலில் பேசினார்கள்.

 

லோக்பால் மசோதாவுக்காக பொது இடத்தில் நிர்வாணமாக நடனம்- மாடல் அழகி எச்சரிக்கை


டெல்லி:  மத்திய அரசு ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றாவிட்டால் பொது இடத்தில் நிர்வாணமாக நடனமாடப் போவதாக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மாடல் அழகி சலினா வாலி கான் தெரிவி்த்துள்ளார்.

சலினா வாலி கான் (23). ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த மாடல் சாதிக் கான் என்பவரை இந்த ஆண்டு தான் மணந்தார். திருமணத்திற்குப் பிறகு தான் அர்ஜுனுக்கு சாதிக் கானுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பது சலினாவுக்கு தெரிய வந்ததாம்.

இதையடுத்து கணவனும், மனைவியும் பிரிந்து வாழத் தொடங்கினர். இந்நிலையில் ஊழலுக்கு எதிராக டெல்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருக்கும் அன்னாவுக்கு ஆதரவாக தானும் உண்ணாவிரதம் இருந்து வருகிறார் சலினா.

இந் நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில், நானும் ஊழலால் பாதிக்கப்பட்டவள் தான். அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் நடக்காது. ரேஷன் கார்டு வாங்க நான் ரூ. 500 லஞ்சமாகக் கொடுக்க வேண்டியதாகிவிட்டது. எங்கு பார்த்தாலும் லஞ்சம், ஊழல். எனவே, ஊழலுக்கு எதிரான ஜன் லோக்பால் மசோதாவை அரசு நிறைவேற்றாவிட்டால் நான் பொது இடத்தில் நிர்வாணமாக நடனம் ஆடுவேன்.

சிலரைப் போன்று பெயருக்காகவோ, பிரபலமாகவோ நான் இவ்வாறு கூறவில்லை. அன்னா நேர்மையானவர். அவர் என்ன அவருக்காகவா உண்ணாவிரதம் இருக்கிறார். இல்லையே, அதனால் தான் அவருக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. சாதி, மத, வேறுபாடுகளைத் தாண்டி பெரும்பாலானோர் அன்னாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்றார்.

 

கனடா சர்வதேச திரைப்பட விழாவில் ஆடுகளம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கனடா சர்வதேச திரைப்பட விழாவில் ஆடுகளம்!

8/23/2011 10:11:35 AM

சன் பிக்சர்ஸின், 'ஆடுகளம்', கனடா நாட்டில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு ஏராளமான ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது. தனுஷ், டாப்ஸி, கிஷோர், எழுத்தாளர் ஜெயபாலன் உட்பட பலர் நடித்துள்ள படம், 'ஆடுகளம்'. சன் பிக்சர்ஸின் இந்த படத்தை வெற்றி மாறன் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். தமிழில் மெகா ஹிட்டான இந்தப் படம், 6 தேசிய விருதுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம், கனடா நாட்டில் நடக்கும் சர்வதேச பட விழாவில் திரையிடப்பட்டது. 18ம் தேதி தொடங்கிய இப்பட விழாவில் கடந்த நான்கு நாட்களாக, 'ஆடுகளம்' திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த வெளிநாட்டு விமர்சகர்கள், இயக்குனர்கள், சினிமா ரசிகர்கள் வெகுவாக ரசித்து பாராட்டியுள்ளனர். இதுபற்றி கனடாவில் இருக்கும் இயக்குனர் வெற்றிமாறன் கூறியதாவது:

உலகில் நடக்கும் பல்வேறு பட விழாக்களில் முக்கியமானது இந்த கனடா சர்வதேச பட விழா. 35வது ஆண்டாக நடக்கும் இவ்விழாவுக்கு ஐயாயிரம் படங்கள் அனுப்பப்பட்டன. அதில் அந்தந்த நாட்டு கலாசாரத்தை பிரதிபலிக்கும் 300 படங்கள் திரையிட தேர்வாயின. அதில் ஒன்று, 'ஆடுகளம்'. இந்தப் படத்தை வெளிநாட்டு சினிமா இயக்குனர்கள், நடிகர்கள், ரசிகர்கள் பார்த்துவிட்டு வெகுவாகப் பாராட்டினர்கள். இவ்வாறு வெற்றிமாறன் கூறினார். வெற்றிமாறனுடன் தயாரிப்பாளர் கதிரேசன், இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோரும் கனடா சென்றுள்ளனர்.

 

அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு : தமிழ் திரையுலகத்தினர் இன்று உண்ணாவிரதம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு : தமிழ் திரையுலகத்தினர் இன்று உண்ணாவிரதம்!

8/23/2011 9:14:19 AM

அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்து, தமிழ்த் திரையுலகம் சார்பில் சென்னையில் இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் நடக்கிறது. வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி, சமூக சேவகர் அன்னா ஹசாரே டெல்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதமிருந்து வருகிறார். அவருக்கு ஆதரவு தெரிவித்து மாணவர்கள், சமூக சேவை நிறுவனங்கள், பொதுமக்கள், திரையுலகினர் உட்பட பல்வேறு அமைப்புகள் நாடு முழுவதும் உண்ணாவிரதம் இரு ந்து வருகின்றனர். தமிழ்த் திரையுலகம் சார்பில் அன் னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்து, இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருக்கின்றனர்.

அண்ணா சாலையிலுள்ள பிலிம்சேம்பர் வளாகத்தில், இன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் உண்ணாவிரதத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடிகர்-நடிகைகள், இயக்குனர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கேற்கின்றனர். இதுகுறித்து, பிலிம் சேம்பர் வளாகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் சங்க துணைத் தலைவர் சேரன், ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர்கள் சித்ரா லட்சுமணன், கேயார் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் நிருபர்களிடம் ஆர்.கே.செல்வமணி கூறுகையில், ''இந்திய மக்களின் உணர்வுகளை அன்னா ஹசாரே பிரதிபலிக்கிறார். அவர் சொல்வது போல், வலுவான லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்.

இது, மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் இல்லை. இதற்கு அரசியல் சாயமும் பூச வேண்டாம். இன்று நடக்கும் உண்ணாவிரதத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கிறார்கள். இன்று வழக்கம் போல் படப்பிடிப்புகள் நடக்கும்'' என்றார். கேயார் பேசுகையில், 'எல்லாருடைய கருத்துகளையும் கேட்டுத்தான் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம். இது உணர்வுப்பூர்வமான விஷயம். எல்லா அமைப்பும் ஆதரவு தெரிவித்துள்ளது' என்றார்.

 

பாலிவுட்டுக்கு முக்கியத்துவமா? இலியானா மறுப்பு!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பாலிவுட்டுக்கு முக்கியத்துவமா? இலியானா மறுப்பு!

8/22/2011 11:26:20 AM

தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள இலியானா, ஷங்கர் இயக்கும் 'நண்பன்' படம் மூலம் மீண்டும் கோலிவுட்டுக்கு வருகிறார். இதற்கிடையில் அனுராக் பாசு இயக்கும் 'பார்ஃபி' என்ற படம் மூலம் இந்தியில் அறிமுகமாகிறார். இதில் ரன்பீர் கபூர், பிரியங்கா சோப்ராவும் நடிக்கிறார்கள். இதுபற்றி இலியானா கூறியதாவது: என்னைப் பற்றி நிறைய வதந்திகள் வருகின்றன. இந்தி படங்களில் நடிப்பதற்காக எனது சம்பளத்தை பாதியாக குறைத்துக்கொண்டதாகவும் ஒரு கோடிக்கு மேல் சம்பளம் கேட்கிறேன் என்றும் ஏராளமான செய்திகள் வருகின்றன. இந்த விஷயத்தில் ஒருபோதும் நான் கருத்துக்கூறவோ, அல்லது மறுக்கவோ மாட்டேன். பலர் பலவிதமாக தொடர்ந்து எழுதிகொண்டுதான் இருக்கப் போகிறார்கள். ஆனாலும் என் தகுதிக்கேற்ற சம்பளத்தையே பெறுகிறேன். இனி, பாலிவுட்டுக்குதான் முக்கியத்துவமா என்றும் கேட்கிறார்கள். அப்படியில்லை. நடிப்பு என் தொழில், அதனால் படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறேன். அது எந்த மொழி என்று பார்க்கவில்லை. தமிழில் ஷங்கர் இயக்கத்தில் நடிப்பது வித்தியாசமாக இருக்கிறது. இந்தியில் '3 இடியட்ஸ்' படத்தை பலமுறை பார்த்திருக்கிறேன். அதில் கரினா கபூரின் நடிப்பு எனக்கு பிடித்திருந்தது. இருந்தாலும் அவர் நடித்தது போல நடிக்க மாட்டேன். இவ்வாறு இலியானா கூறினார்.

 

புலிவேஷத்துக்கு யு/ஏ

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

புலிவேஷத்துக்கு யு/ஏ

8/22/2011 11:22:58 AM

'புலிவேஷம்' படத்துக்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது. ஆர்.கே வேர்ல்ட்ஸ் தயாரித்துள்ள படம், 'புலிவேஷம்'. இதில் ஆர்.கே ஹீரோ. சதா ஹீரோயின். முக்கிய வேடங்களில் கார்த்திக், திவ்யா பத்மினி, கஞ்சா கருப்பு உட்பட பலர் நடிக்கின்றனர். 26ம் தேதி ரிலீசாகும் படம் பற்றி ஆர்.கே கூறியதாவது: ஒவ்வொரு மனிதனுக்கு உள்ளேயும் பசு குணமும், புலி குணமும் மறைந்திருக்கிறது. சூழ்நிலைகளைப் பொறுத்தே அந்த குணங்கள் வெளிப்படும். அப்பாவியைச் சீண்டினால், என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதே படத்தின் மையக்கரு. பி.வாசு, ஜனரஞ்சகமான விஷயங்களை கமர்சியலாக தரும் இயக்குனர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. 'எல்லாம் அவன் செயல்', 'அழகர் மலை', 'அவன் இவன்' படங்களில் பார்த்த ஆர்.கேவா இது என்று, ரசிகர்கள் வியப்பார்கள். அந்தளவு விசுவாசம் மிகுந்த வேலைக்காரனாக என்னை மாற்றியிருக்கிறார். சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் நடித்துள்ளேன். ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளன. படத்தைப் பார்த்த சென்சார் குழு, யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது.  200 பிரிண்டுகளுக்கு மேல் போட்டுள்ளோம். இதை தெலுங்கிலும் வெளியிட முடிவு செய்துள்ளோம்.

 

பாரதிராஜாவின் அன்னக்கொடியும் கொடிவீரனும்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பாரதிராஜாவின் அன்னக்கொடியும் கொடிவீரனும்!

8/22/2011 10:57:11 AM

நானா படேகர், காஜல் அகர்வால், அர்ஜுன் நடித்த 'பொம்மலாட்டம்' படத்துக்குப் பிறகு பாரதி ராஜா இயக்கும் படம், 'அன்னக்கொடியும் கொடிவீரனும்'. இதில் பார்த்திபன், 'பூ' பார்வதி, பிரியாமணி, மீனாள் உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். ஏராளமான புதுமுகங்கள் அறிமுகமாகிறார்கள். இதற்காக தேனி, ஆண்டிப்பட்டி பகுதிகளில் நடிகர், நடிகை தேர்வில் பாரதிராஜா ஈடுபட்டுள்ளார். அடுத்த மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது. இது ''கிழக்கு சீமையிலே' படம் மாதிரியான மண் சார்ந்த கதை. தமிழ் சினிமாவுக்கு, புதிய முயற்சி படமாக இருக்கும். புதுமுகங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க இருப்பதால் இயக்குனர் பாரதிராஜாவே நேரடியாக நடிகர், நடிகை தேர்வில் கவனம் செலுத்தி வருகிறார்'' என்று பட வட்டாரங்கள் தெரிவித்தன.

 

மங்காத்தாவுக்கு 4 இசை அமைப்பாளர்கள் ரீரெக்கார்டிங்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மங்காத்தாவுக்கு 4 இசை அமைப்பாளர்கள் ரீரெக்கார்டிங்

8/22/2011 11:24:22 AM

அஜீத்தின், 'மங்காத்தா' படத்துக்கு 4 இசை அமைப்பாளர்கள் ரீரெக்கார்டிங் செய்து வருகின்றனர்.  இதுபற்றி இயக்குனர் வெங்கட் பிரபு கூறும்போது, 'முதல்முறையாக, யுவன்சங்கர்ராஜா, கார்த்திக்ராஜா, பவதாரிணி, பிரேம்ஜி ஆகிய 4 பேர் பின்னணி இசை அமைத்து வருகின்றனர். கடந்த 18 நாட்களாக இந்த பணி நடக்கிறது. இது படத்துக்கு பெரிய பலமாக இருக்கும். இதை தொடர்ந்து, 'நேரடி ஒளிபரப்பு' என்ற கதையை, 3 டி படமாக உருவாக்க திட்டமிட்டுள்ளேன். இது மெகா பட்ஜெட் படம்' என்றார்.

 

3டி படம் இயக்குவேன்: சேரன் தகவல்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

3டி படம் இயக்குவேன்: சேரன் தகவல்

8/22/2011 11:28:45 AM

கே.டி.வி.ஆர் கிரியேட்டிவ் ரீல்ஸ் நிறுவனத்துக்காக லோகநாதன் தயாரிக்கும் 3 டி படம், 'அம்புலி'. முக்கிய வேடத்தில் பார்த்திபன் நடிக்கிறார். அஜெய், ஸ்ரீஜித் ஹீரோக்கள். சனம், ஜோதிஷா ஹீரோயின்கள். இசை: கே.வெங்கட் பிரபு சங்கர், சாம் சி.எஸ்., சதீஷ், மெர்வின். ஹரி ஷங்கர், ஹரீஷ் நாராயண் இணைந்து இயக்குகின்றனர். இப்படத்தின் பாடல் சிடி வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் பங்கேற்ற கலைஞர்கள் பாடல்களை வெளியிட்டனர். பிறகு இப்பட நிறுவனம் சார்பில், தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு ரூ.10 ஆயிரம் வழங்கினர். இயக்குனர் சேரன் பேசியதாவது:

'மை டியர் குட்டிச்சாத்தான்' 3 டி படத்துக்குப் பிறகு விஜயகாந்த் நடித்த 'அன்னை பூமி' 3 டி படம் வந்தது. டெக்னிக்குகள் நிறைய வளர்ந்திருக்கும் இந்த காலகட்டத்தில், தமிழில் ஏன் அதிகமாக 3 டி படங்கள் உருவாகவில்லை என்று தெரியவில்லை. நானும் 3 டி படம் இயக்கப் போகிறேன். அதற்கான கதையையும் தயார் செய்து விட்டேன். கலையை ரசிக்கும் எண்ணம் மாறி, பொழுதுபோக்கிற்காக மட்டுமே ரசிகர்கள் படம் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வெவ்வேறு புதிய முயற்சிகள் செய்து, எங்களை நாங்களே காப்பாற்றிக் கொள்கிறோம். மாறி வரும் ரசனைகளுக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொண்டு படங்கள் தர வேண்டும். இவ்வாறு சேரன் பேசினார். விழாவில் பார்த்திபன், நமீதா, கலைப்புலி எஸ்.தாணு, பி.எல்.தேனப்பன், யுடிவி தனஞ்செயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

விஷால் ஜோடி த்‌ரிஷா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

விஷால் ஜோடி த்‌ரிஷா?

8/22/2011 9:52:50 AM

வெடி படத்தில் நடித்து வரும் விஷால் அடுத்து திரு இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். திரு தீராத விளையாட்டு பிள்ளை படத்தை இயக்கியவர். இந்தப் படத்தின் கதையை சொல்லி த்‌ரிஷாவிடம் கால்ஷீட் கேட்டுள்ளனர். அவரும் ஓகே சொன்னதாக‌த் தெ‌ரிவிக்கிறார்கள். தமிழில் ஒரு படம் நடிக்கிறேன். யார் ஹீரோ என்பதை இயக்குனரே தெ‌ரிவிப்பார் என்று த்‌ரிஷா சொல்லி வருகிறார். இதுதானா அந்தப் படமும், இயக்குனரும்?

 

பாலிவுட்டுக்கு முக்கியத்துவமா? இலியானா மறுப்பு!

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news

பாலிவுட்டுக்கு முக்கியத்துவமா? இலியானா மறுப்பு!

8/22/2011 11:29:47 AM

தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள இலியானா, ஷங்கர் இயக்கும் 'நண்பன்' படம் மூலம் மீண்டும் கோலிவுட்டுக்கு வருகிறார். இதற்கிடையில் அனுராக் பாசு இயக்கும் 'பார்ஃபி' என்ற படம் மூலம் இந்தியில் அறிமுகமாகிறார். இதில் ரன்பீர் கபூர், பிரியங்கா சோப்ராவும் நடிக்கிறார்கள். இதுபற்றி இலியானா கூறியதாவது: என்னைப் பற்றி நிறைய வதந்திகள் வருகின்றன. இந்தி படங்களில் நடிப்பதற்காக எனது சம்பளத்தை பாதியாக குறைத்துக்கொண்டதாகவும் ஒரு கோடிக்கு மேல் சம்பளம் கேட்கிறேன் என்றும் ஏராளமான செய்திகள் வருகின்றன. இந்த விஷயத்தில் ஒருபோதும் நான் கருத்துக்கூறவோ, அல்லது மறுக்கவோ மாட்டேன். பலர் பலவிதமாக தொடர்ந்து எழுதிகொண்டுதான் இருக்கப் போகிறார்கள். ஆனாலும் என் தகுதிக்கேற்ற சம்பளத்தையே பெறுகிறேன். இனி, பாலிவுட்டுக்குதான் முக்கியத்துவமா என்றும் கேட்கிறார்கள். அப்படியில்லை. நடிப்பு என் தொழில், அதனால் படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறேன். அது எந்த மொழி என்று பார்க்கவில்லை. தமிழில் ஷங்கர் இயக்கத்தில் நடிப்பது வித்தியாசமாக இருக்கிறது. இந்தியில் '3 இடியட்ஸ்' படத்தை பலமுறை பார்த்திருக்கிறேன். அதில் கரினா கபூரின் நடிப்பு எனக்கு பிடித்திருந்தது. இருந்தாலும் அவர் நடித்தது போல நடிக்க மாட்டேன். இவ்வாறு இலியானா கூறினார்.

 

முத்தக்காட்சியில் நடிக்க மும்பை ஹீரோயின் மறுப்பு!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
முத்தக்காட்சியில் நடிக்க மும்பை ஹீரோயின் மறுப்பு!

8/22/2011 11:31:12 AM

நிலா படைப்புலகம் சார்பில் டாக்டர் பி.ஆனந்தன், கோ.ஆனந்த சிவா, வி.பன்னீர்செல்வம் தயாரிக்கும் படம், 'பரிதி'. ரிஷி, கரீனா ஷா, சிங்கமுத்து, ஆதேஷ் நடிக்கின்றனர்.  படத்தை இயக்கும் கோ.ஆனந்த சிவா கூறியதாவது: ராமோஜிராவ் பிலிம் சிட்டியில், 'இத்தனை நாட்கள் அத்தனை அழகை எங்கே பதுக்கி வைத்தாய்?' என்ற பாடல் காட்சியை படமாக்கினேன். இது இறையன்பு எழுதிய பாடல். இந்த காட்சியில் ரிஷி, கரீனா ஷா பங்கேற்றனர். இந்தப் பாடலில், முத்தக்காட்சியில் நடிக்க கரீனாவிடம் சொன்னேன். மறுத்தார். பிரச்னையில் ஈடுபட வேண்டாம் என்று, காட்சியை மாற்றிப் படமாக்கினேன். இது சைக்கோ ஹீரோ கதை. தான் காதலித்தவன் நல்லவன் என்று நம்புகிறாள், ஹீரோயின். அவனோ பயங்கர வில்லன். இறுதியில் அவனைப்பற்றி ஹீரோயினுக்கு தெரிகிறது. அதிர்ச்சி அடையும் அவள், என்ன முடிவு செய்கிறாள் என்பது கதை. சைக்கோத்தனம் குறித்து ஆலோசனை பெறுவதற்காக, மனநல மருத்துவர் ஆனந்தனை சந்தித்தேன். நான் சொன்ன கதையை ரசித்த அவர், தானே இப்படத்தை தயாரிப்பதாக சொன்னார். இப்போது ஷூட்டிங் முடிந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.




 

சினிமாக்காரர்கள் இன்று உண்ணாவிரதம்... ஆதரவளிப்பாரா ரஜினி?


சென்னை: அன்னா ஹஸாரேவுக்கு ஆதரவாக தமிழ் சினிமாக்காரர்களில் ஒரு பிரிவினர் இன்று நடத்தும் உண்ணாவிரதத்தில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொள்ளவில்லை. ஆனால் அன்னா தான் என் ஹீரோ என்று அறிக்கை ரஜினி வெளியிட்டுள்ளார்.

ஊழலுக்கு எதிரான அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ் திரையுலகினர் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இதில் ரஜினிகாந்த் கலந்துகொள்ளக்கூடும் என்று கூறப்பட்டது. இதனால் ரஜினி எப்பொழுது வருவார் என்று பலர் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் ரஜினி வரவில்லை. மாறாக அவர் அன்னாவுக்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது,

நாடாளுமன்றத்தில் ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி போராடி வரும் அன்னா குழுவினரை நான் மனதாரப் பாராட்டுகிறேன். ஊழலுக்கு எதிராகப் போராட அன்னா ஹஸாரே என்னும் திறமையான தலைவர் கிடைத்துள்ளதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

ரத்தமில்லாத இந்த புரட்சிக்கு ஆதரவு தெரிவித்து வருபவர்களை நான் பாராட்டுகிறேன். சத்யாகிரகம் பிறந்த இந்தியாவில் தான் இது போன்ற அமைதியான இயக்கங்கள் செயல்பட முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
 

ஹசாரேவுக்கு ஆதரவான உண்ணாவிரதம்: விஜய் தந்தை புறக்கணிப்பு


அன்னா ஹசாரேவுக்கு எதிராக பட அதிபர்கள் இன்று நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில், தனக்கு உடன்பாடு இல்லை என்றும், தான் இதில் பங்கேற்கப் போவதில்லை என்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொறுப்பு தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறினார்.

அவர், மேலும் கூறுகையில், "அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக, இவ்வளவு அவசரமாக பட அதிபர்கள் உண்ணாவிரதம் இருப்பது தேவையற்றது.

தமிழ் திரையுலகின் எல்லா பிரிவினருடனும் கலந்து பேசி ஒரு முடிவு எடுத்த பின், இந்த உண்ணாவிரதத்தை மிகப்பெரிய அளவில் நடத்தியிருக்கலாம். இவ்வளவு அவசரமாக நடத்த வேண்டிய தேவையில்லை. எனவே, எனக்கு அந்த உண்ணாவிரதத்தில் உடன்பாடு இல்லை. அதில் நான் கலந்து கொள்ளவும் மாட்டேன்'', என்றார்.

இன்று பிலிம்சேம்பர் வளாகத்தில் நடக்கும் இந்த உண்ணாவிரதத்துக்கான ஏற்பாடுகளை தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன்தான் முன்னின்று செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.