'மச்சான்ஸ்' நமீதாவுக்கு இன்று பிறந்த நாள்!

Namitha Celebrates Her Birthday Chennai   
மச்சான்ஸ் என்ற வார்த்தையை தமிழ்ப்படுத்தி அதற்கு புது அர்த்தமும் சொன்ன கவர்ச்சிக் குண்டு நமீதாவுக்கு இன்று பிறந்த நாள்.

ஒரு தனியார் வானொலி நிலையம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் இன்று தன் பிறந்த நாளை சென்னையில் கொண்டாடினார் நமீதா.

நமீதா நடிக்க வந்து 8 ஆண்டுகள் ஆகின்றன. முதல் படம் எங்கள் அண்ணா.

ஆரம்பத்திலிருந்தே சீனியர் நடிகர்களுடன் மட்டுமே நடித்து வந்த நமீதா, பின்னர் அஜீத், விஜய்யுடனும் தலா ஒரு படம் நடித்தார். ஒரு கட்டத்தில் நமீதாவுக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள். ஆறடி உயர ஆல்கஹால் பாட்டில் என்றே அவரை வர்ணித்தனர்.

ஆனால் தொடர் தோல்விகள் காரணமாக 2010-க்குப் பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தன.

இப்போது கன்னடம் மற்றும் தெலுங்குப் படங்கள் சிலவற்றில் மட்டுமே நடித்து வருகிறார். தமிழில் மீண்டும் பிஸியாகும் நோக்கத்தோடு சென்னையில் உள்ள தன் வீட்டிலேயே தங்கியிருக்கிறார் நமீதா.

ஆண்டுதோறும் தன் பிறந்த நாளின்போது சென்னையில் இருக்கும்படி பார்த்துக் கொள்வார் நமீதா. இந்த ஆண்டும் சென்னையில் ஒரு தனியார் வானொலி நிலையம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினார். அந்த வானொலி மூலம் மச்சான்ஸ்களுடன் போனில் பேசி 'கிக்'கேற்றினார்!
 

நான்காவது முறையாக 'டாக்டரான' இசைப்புயல்!

Miami University Conferred Fourth Doctorate Ar Rahman
தேசிய விருது வாங்குவதில் மட்டுமல்ல, டாக்டர் பட்டம் வாங்குவதிலும் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் சாதனைப் படைத்துள்ளார்.

அமெரிக்காவின் ஒஹையோ மாகாணத்தில் உள்ள மியாமி பல்கலைக் கழகம் அவருக்கு இந்த முறை டாக்டர் பட்டம் வழங்கு கவுரவித்துள்ளது. இது அவர் பெறும் நான்காவது டாக்டர் பட்டமாகும்.

இந்த விழாவில் நேரில் பங்கேற்ற ஏ ஆர் ரஹ்மான், "25 ஆண்டுகளுக்கு முன், அமெரிக்க அதிபர் என்னை வெள்ளை மாளிகைக்கு அழைப்பார், கிறிஸ்துமஸுக்கு அவரிடமிருந்து வாழ்த்து அட்டை வரும் என்றெல்லாம் நான் கற்பனை கூட செய்து பார்க்கவில்லை.

அமெரிக்காவில் நான் பெறும் முதல் டாக்டர் பட்டம் இதுதான். மியாமி பல்கலைக்கழகத்துடன் நானும் என் இசையும் கடந்த 10 ஆண்டுகளாக மிகவும் நெருக்கமாகியுள்ளோம். மியாமி மாணவர்கள் எனது கேஎம் மியூசிக் கன்சர்வேடரியில் இணைந்து எனக்கு உதவி வருகிறார்கள். அவர்களுக்கு நன்றி," என்றார்.

தன்னை திரையுலகுக்கு முதல் முதலில் அறிமுகப்படுத்திய மணிரத்னத்துக்கு இந்த மேடையில் நன்றி சொல்லவும் ரஹ்மான் தவறவில்லை.
 

யுனெஸ்கோ பிராந்திய ஆலோசகராக திமுகவின் அசன் முகமது ஜின்னா நியமனம்!!

Unesco Centre Has Appointed Hasan Mohammed Jinnah
ஐ.நா.வின் யுனெஸ்கோ (மனித உரிமைகள்-தகவல் தொழில்நுட்பப் பிரிவு) ஆசிய - பசிபிக் பிராந்தியத்தின் ஆலோசகராக திமுகவின் இளைஞரணி மாநில துணைச் செயலர் அசன் முகமது ஜின்னா நியமிக்கப்பட்டுள்ளார்.

திமுக பொருளாளார் மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் நிர்வாக இயக்குநர் இந்த ஜின்னா. சட்டப்படிப்பில் முதுநிலைப் பட்டம் பெற்று வழக்கறிஞராகப் பணியாற்றுகிறார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆயிரம் விளக்குத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார் ஜின்னா என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2004ம் ஆண்டு 'இளம் அரசியல் தலைவர்' என்று அமெரிக்க கவுன்சிலால் கவுரவிக்கப்பட்டிருக்கிறார் ஜின்னா. மாணவி சரிஹாசா ஈவ்டீசிங் வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தந்தவர் ஜின்னா என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது நியமனம் குறித்து யுனெஸ்கோ அமைப்பு தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள குறிப்பில், "நன்கு படித்த, சமூக அக்கறை கொண்ட, பெண்கள் முன்னேற்றதுக்காக பாடுபடும் இளம் அரசியல் தலைவரான ஜின்னாவின் நியமனம், ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு உதவும்," என்று குறிப்பிட்டுள்ளது.

பிரிட்டிஷ் வர்ஜீனிய தீவில் உள்ள யுனெஸ்கோ சென்டர் இதனை அறிவித்துள்ளது.
 

மாஸ்டருடன் சேர்ந்து இரவு பகலாக 'Walts' கற்று வரும் ஆசின்!!

Asin Learn Walts Dance   
இருக்கிற டான்ஸ் போதாது என்று ஆசின் இப்போது ஒரு புது டான்ஸை கற்றுக் கொள்ள ஆரம்பித்துள்ளாராம். வால்ட்ஸ் டான்ஸ்தான் அது.

இந்த டான்ஸை ஹாலிவுட் படங்களில் பார்த்திருக்கலாம், அந்தக் காலத்து தமிழ்ப் படங்களில் கூட பார்த்திருக்கலாம். பார்ட்டிகளின்போது ஜோடி ஜோடியாக ஆடுவார்கள். அதுதான் வால்ட்ஸ் டான்ஸ். அதைத்தான் தற்போது ஆசின் மெனக்கெட்டு கற்று வருகிறார்.

ஆசின் உடல் வாகுக்கு ஏற்ற டான்ஸ்தான் இது. இதற்காக ஒரு ஸ்பெஷல் மாஸ்டரை நியமித்து அவருடன் சேர்ந்து இரவு பகல் பாராமல், விடிய விடிய கூட விழித்திருந்து சற்றும் சோர்வுறாமல் கற்றுக் கொண்டிருக்கிறாராம்.

சரி எந்தப் படத்திலாவது வால்ட்ஸ் டான்ஸ் ஆடப் போகிறாரா ஆசின் என்று கேட்டால், அப்படியெல்லாம் இல்லீங்க, கத்து வச்சுக்கிட்டா கூடுதல் தகுதியாகுமே அதனால்தான் கற்றுக் கொள்கிறார் என்கிறார்கள் ஆசின் தரப்பினர்.

பரவாயில்லையே...!
 

ஜூனில் விஸ்வரூபம் ஆடியோ?

Vishwaroopam Audion June   
கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படத்தின் சிறப்பு ஒலி மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

இவற்றில் பெரும்பகுதியை அமெரிக்காவில் வைத்து முடித்துவிட்டாராம் கமல். எப்போதும்போல இந்த முறையும் அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளார் விஎப்எக்ஸ் மது.

படத்தின் முதல் ஸ்டில் வெளியானதிலிருந்து, விஸ்வரூபம் குறித்த கமல் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு எக்கச்சக்கமாகிவிட்டது.

அதுபுரிந்து, பெரிய விலைக்கு வியாபாரம் பேசி வருகிறாராம் கமல்ஹாஸன்.

இந்தப் படத்தை வாங்கி ரிலீஸ் செய்யப் போகிறது ஜெயா டிவி என முதலில் செய்திகள் வந்தன. இப்போது அதில் குழப்பம். ஜெயா டிவி இல்லை... சன் டிவிதான் வாங்கப் போகிறது என யூக செய்திகள் வெளியாகிவருகின்றன.

விஸவரூபம் படத்துக்கு சங்கர் எசான் லாய் இசையமைத்துள்ளார்கள். ஏற்கெனவே ஆளவந்தானுக்கு இவர்கள்தான் இசை தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடல்களை ஜூனில் வெளியிட கமல் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஜூலை இறுதிக்குள் படத்தை வெளியிடப் போகிறார்களாம்!
 

பெட்டி படுக்கையுடன் வீட்டை விட்டு அனன்யா ஓட்டம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பெட்டி, படுக்கையுடன் வீட்டை விட்டு அனன்யா ஓடி விட்டதாக, கேரளாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழில், 'நாடோடிகள்' படத்தில் அறிமுகமானவர் மலையாள நடிகை அனன்யா. மலையாளம் மற்றும் தமிழ்ப் படங்களில் நடித்து வரும் அவர் கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகிலுள்ள பெரும்பாவூரில் பெற்றோருடன் வசித்துவருகிறார். இவருக்கும் திருச்சூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஆஞ்சநேயன் என்பவருக்கும் பிப்ரவரி மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. நிச்சயதார்த்தம் முடிந்தபிறகுதான் ஆஞ்சநேயனுக்கு ஏற்கனவே திருமணமான விஷயம் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அனன்யாவின் பெற்றோர், திருமண மோசடி செய்ததாக ஆஞ்சநேயன் மீது பெரும்பாவூர் போலீஸில் புகார் செய்தனர். விசாரணையில், ஏற்கனவே ஒரு பெண்ணை திருமணம் செய்திருந்த ஆஞ்சநேயன் அவரிடம் இருந்து விகாரத்துக்கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தது தெரியவந்தது. இதனால் இவர்கள் திருமணம் நடைபெறாது என்று அனன்யாவின் பெற்றோர் கூறிவந்தனர். ஆனால் அனன்யா, ஆஞ்சநேயனைத்தான் திருமணம் செய்வேன் என்று கூறிவந்தார்.

இது தொடர்பாக அனன்யாவுக்கும் அவரது பெற்றோருக்கும் பிரச்னை இருந்து வந்தது. இதற்கிடையில் ஆஞ்சநேயனும் அனன்யாவும் ரகசியமாக காதல் வளர்த்து வந்தனர். இந்நிலையில், பெட்டி படுக்கையுடன் வீட்டை விட்டு வெளியேறி ஆஞ்சநேயனின் வீட்டுக்கே அனன்யா சென்றுவிட்டதாக கேரளாவில் செய்திகள் வெளியாகியுள்ளன. அங்கிருந்துதான் தற்போது நடித்து வரும் படங்களின் ஷூட்டிங்குக்கு அனன்யா சென்று வருகிறார். இந்தப் பிரச்னையால் அனன்யாவின் பெற்றோர் தங்கள் முடிவை மாற்றியுள்ளனர். ஆஞ்சநேயனுக்கே அனன்யாவை திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்துள்ளனர். இதுபற்றி அனன்யாவின் அம்மா பிரஸிதா கூறும்போது, ''நிச்சயதார்த்தம் முடிந்தவரின் வீட்டுக்கு அனன்யா சென்றதை எப்படி தவறு என்று கூற முடியும். இருவருக்கும் விரைவில் திருமணம் செய்து வைக்க இருக்கிறோம். இதுபற்றி மேலும் பேச விரும்பவில்லை'' என்றார்.


 

மும்பைக்கு இடம்பெயர்கிறார் பிரபுதேவா

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
இந்திப் படங்களில் கவனம் செலுத்த மும்பையில் செட்டிலாக இருப்பதாக பிரபுதேவா கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது: தற்போது இந்தியில் 'ஏபிசிடி' படத்தில் நடித்துவருகிறேன். இது நடனம் தொடர்பான படம். நான் இயக்கியுள்ள 'ரவுடி ரத்தோர்' விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இதில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளேன். விஜய், கரீனா கபூரும் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர். எப்போதும் சினிமாவில் நடித்துக்கொண்டிருக்க விரும்புகிறேன். ஆனால் டைரக்ஷனுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பேன். அப்படியென்றால் டான்ஸ்? என்று கேட்கிறார்கள். நடனம் எனது உயிர். அது எப்போதும் என்னுடனேயே இருக்கும். என்னை மட்டுமே சிறந்த டான்சராக நான் கருதவில்லை. இங்கு சிறந்த நடன கலைஞர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். டிவி. நிகழ்ச்சிகள் உட்பட நம்மை சுற்றி திறமையான நடன கலைஞர்களை அதிகமாகப் பார்க்க முடிகிறது. மூன்று வருடத்துக்குப் பிறகு 'ரவுடி ரத்தோர்' மூலம் மீண்டும் இந்திக்கு வருகிறேன். தமிழில் கவனம் செலுத்தியதால் இந்திக்கு வரமுடியவில்லை. இந்திப் படங்களில் கவனம் செலுத்துவதற்காக மும்பையில் செட்டிலாகும் திட்டமும் என்னிடம் இருக்கிறது.


 

புதிய வகை நடனம் கற்கிறார் அசின்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
வால்ட்ஷ் என்ற புதிய வகை நடனத்தை கற்று வருகிறார் அசின். இந்தி படங்களில் நடித்துவரும் அசின், ஏற்கனவே பரதநாட்டியம் கற்றவர். இப்போது வால்ட்ஷ் என்ற நடனத்தை கற்று வருகிறார். இது, விருந்து நிகழ்ச்சிகளில் ஆடப்படும் நடனத்தோடு நாட்டுப்புற நடனமும் இணைந்த வகையாம். ஷூட்டிங் நடந்தாலும் கிடைக்கும் இடைவெளியில் இந்த நடனத்தை கற்றுவருகிறார். இதற்காக பிரத்யேக மாஸ்டர் ஒருவரையும் அவர் படப்பிடிப்புக்கு அழைத்துவருகிறார். ''இந்த நடனத்தை கற்றால் சினிமாவில் ஆடுவதற்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இரவு பகலாக கற்றுவருகிறார் அசின்'' என்று அசினுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.




 

ஹீரோக்களின் நண்பன் : சூரி மகிழ்ச்சி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஹீரோக்களின் நண்பனாக நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று காமெடி நடிகர் சூரி கூறினார். அவர் மேலும் கூறியதாவது: 'வெண்ணிலா கபடி குழு' படம் மூலம் அறிமுகமானேன். இதில் வரும் எனது பரோட்டா காமெடி இன்றும் பேசப்படுகிறது. அடுத்து தொடர்ந்து நடித்த படங்கள் என்னை ரசிகர்களிடம் நன்றாக அடையாளம் காட்டியுள்ளன. நான்கு பேரில் ஒருவனாக வந்து காமெடி செய்துகொண்டிருந்தேன். அப்படி காமெடி செய்யும் போது சில நேரங்களில் நமக்குள் இருக்கும் முழுத் திறமைகளும் வெளியே தெரியாமல் போய் விடுகிறது. இப்போது ஹீரோக்களின் நண்பனாக பல படங்களில் நடித்து வருகிறேன். இதை எனக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறேன். இதற்காக என் இயக்குனர்களுக்கு நன்றி. இப்போது எழில் இயக்கியுள்ள 'மனம் கொத்திப் பறவை', வின்சென்ட் செல்வா இயக்கும், 'துள்ளி விளையாடு', சசிகுமாரின் 'சுந்தரபாண்டியன்' உட்பட பல படங்களில் நடித்து வருகிறேன். ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதமான வேடங்கள். அந்தந்த படங்கள் ரீலிஸ் ஆகும் போது வித்தியாசத்தை பார்க்கலாம். இவ்வாறு சூரி கூறினார்.


 

கார்த்தி படத்துக்கு அடுத்தடுத்து சிக்கல்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கார்த்தி நடிக்கும் 'சகுனி படம், அடுத்தடுத்து சிக்கலை சந்தித்து வருகிறது. 'பருத்திவீரன் கார்த்தியின¢ படங்கள் சமீபகாலமாக பிரச்னையில் சிக்கி வருகிறது. அவருக்கு நேரம் சரியில்லை என்று ஜோதிடர்கள் கூறியதையடுத்து சீன வாஸ்து பொருட்களை வாங்கி வீட்டில் வைத்திருக்கிறார். அவர் நடித்து வரும் 'அலெக்ஸ் பாண்டியன் பட ஷூட்டிங்கில் பெப்சியினர் புகுந்து பிரச்னை செய்தனர். இதை எதிர்த்து தயாரிப்பாளர்கள் ஒருநாள் ஸ்டிரைக் நடத்தினர். இந்நிலையில் கார்த்தி நடித்து வரும் 'சகுனியும் அடுத்தடுத்து பிரச்னைகளை சந்தித்து வருகிறது. இப்பட ஹீரோயின் பிரணிதா கால்ஷீட் பிரச்னை செய்ததால் ஷூட்டிங் தடைபட்டது. இதையடுத்து வில்லனாக நடித்துக் கொண்டிருந்த சலீம் கவுஸின் காட்சிகள் இயக்குனரை கவரவில்லை. இதனால் படத்திலிருந்து அவர் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக பிரகாஷ் ராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு ரீ ஷூட் நடத்தப்பட்டது.

இப்பிரச்னைகளுக்கு இடையே படத்தின் பாடல் கேசட் வெளியீட்டு விழா நாளை நடக்கப்போகிறது என்ற அறிவிப்பு வெளியானது. இதையடுத்து பட யூனிட் நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஆனால் அந்த நிகழ்ச்சியும் தற்போது தள்ளிப்போய் இருக்கிறது. நிகழ்ச்சி தள்ளிப்போனதை இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி இருக்கிறார்.


 

போலி டாக்டராக வடிவேலு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'மறுபடியும் ஒரு காதல்' படம் மூலம் வடிவேலு மீண்டும் வருகிறார். பிலிம் மீடியா சார்பில் வாசு பாஸ்கர் தயாரித்து இயக்கும் படம், 'மறுபடியும் ஒரு காதல்'. அனிருத், ஜோஸ்னா, வாணி கிஷோர், சுமன், மயில்சாமி உட்பட பலர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு கண்ணன், இசை, ஸ்ரீகாந்த் தேவா. இந்த மாத இறுதியில் படம் வெளிவருகிறது. படம் பற்றி வாசு பாஸ்கர் கூறியதாவது: எல்லா கமர்சியல் அம்சங்களும் நிறைந்த காதல் படம். கட்டாய திருமணம் செய்து வைக்கப்படும் இருவரில் கணவன் தன் காதலியுடனும், மனைவி தன் காதலுடனும் சேர விரும்புகிறார்கள். இதனால் குடும்ப வாழ்க்கை கசக்கிறது. இறுதியில் இருவரும் ஒரு முடிவுக்கு வந்து அவரவர் காதலர்களுடன் இணைவது என்று முடிவு செய்கிறார்கள். அது நடந்ததா என்பதுதான் கதை. காதலின் மகத்துவத்தையும், குடும்ப உறவின் சிக்கல்களையும் சொல்லும் படம். வடிவேலு இதில் போலி டாக்டராக நடித்துள்ளார். அவர் செய்யும் சிகிச்சைகள் ஏற்படுத்தும் விளைவுகள். இதனால் அவர் படும் அவஸ்தைகள் என்று படம் முழுக்க சிரிக்க வைக்கிறார். வடிவேலுவின் காமெடியை நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்கள் ரசித்து சிரிக்கலாம். ஸ்ரீகாந்த் தேவா 6 பாடல்களை கொடுத்துள்ளார். அவருக்கும் இந்தப் படம் திருப்புமுனையாக அமையும். தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கி உள்ளது.


 

மலையாளத்துக்கு முக்கியத்துவமா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஒரே நேரத்தில் 3 மலையாளப் படங்களில் நடித்து வருகிறார் பசுபதி. அவர் கூறியதாவது: 'அரவான்' படத்துக்காக சில தமிழ் படங்களை ஒப்புக்கொள்ள முடியாமல் போய்விட்டது. இப்போது மலையாளத்தில் நிறைய வாய்ப்புகள் வருகிறது. நல்ல கேரக்டர்கள் அமைகிறது. அதை தவறவிட்டுவிடக் கூடாது என்பதற்காக அங்கு நடித்து வருகிறேன். இப்போது தமிழ் படங்களுக்கு கதை கேட்டு வருகிறேன். அடுத்து தமிழில், 'லட்சுமி' என்ற படத்தில் நடிக்கிறேன். இதில் வித்தியாசமான கேரக்டர். ஒரு படத்தில் நிறைய வேலை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். நடிப்பது கொஞ்ச காலம்தான். அதற்குள் விதவிதமான கேரக்டர்களில் நடிக்க விருப்பம். வழக்கமான வில்லன், அண்ணன் கேரக்டர்களை தவிர்க்கிறேன். சுவாரஸ்யமான, சவாலான கேரக்டராக இருந்தால் சின்ன படம், பெரிய படம் என்று பார்ப்பதில்லை. புதுமுகம் ஹீரோவாக இருந்தாலும் நடிப்பேன்.


 

வாலு படத்தில் சென்னை இளைஞனாக சிம்பு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சிம்பு நடிக்கும் படத்துக்கு 'வாலு' என்று தலைப்பிடப் பட்டுள்ளது. நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி தயாரிக்கும் படம், 'வாலு'. இதில் சிம்பு, ஹன்சிகா ஜோடியாக நடிக்கின்றனர். மற்றும் சந்தானம், கணேஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். 'தினம்தோறும்' நாகராஜ் உதவியாளர் விஜய் சந்தர் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது: இதில் சென்னை இளைஞனாக சிம்பு நடிக்கிறார். எப்போதும் துறு துறுவென்று இருக்கும் கேரக்டர். இதே கேரக்டர் கொண்ட ஹீரோயின். இருவருக்குமிடையே நடிக்கும் கதைதான் படம். இதன் திரைக்கதை பரபரப்பாக இருக்கும். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கிறோம். ஒரு நிமிடம் ஓடும் படத்துக்கான டீஸரை ரெடி பண்ணிவிட்டோம். தமன் இசை அமைக்கிறார். சக்தி ஒளிப்பதிவு செய்கிறார். அடுத்த மாதம் முதல் ஷூட்டிங் தொடங்குகிறது. படம் தீபாவளிக்கு வெளிவரும். இவ்வாறு விஜய் சந்தர் கூறினார். நிக் ஆர்ட்ஸ் தயாரிப்பில், ஏற்கனவே 'வேட்டை மன்னன்' படத்தில் நடித்துவருகிறார் சிம்பு. இந்தப் படத்தின் அடுத்த ஷெட்யூல் வெளிநாடுகளில் நடக்க இருப்பதாலும் போஸ்ட் புரொடக்ஷ்ஸ் வேலைகள் அதிகமாக இருப்பதாலும் பொங்கலுக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


 

இந்த ஆண்டு திருமணம்: சாயாசிங்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'திருடா திருடி' படம் மூலம் அறிமுகமானவர் சாயாசிங். 'வல்லமை தாராயோ', 'அனந்தபுரத்து வீடு' உட்பட பல படங்களில் நடித்தார். அவருக்கு அவரது பெற்றோர்கள் மாப்பிள்ளை தேடிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி சாயாசிங் கூறியதாவது: தற்போது  பெங்காலி படத்தில் நடித்து வருகிறேன். குடும்பத்துக்காக உழைத்து வாழ்க்கையை தியாகம் செய்யும் பெண்ணின் கேரக்டர். பெங்காலியில் இது இரண்டாவது படம். இதுதவிர போஜ்புரி, மலையாள படங்களில் நடித்து வருகிறேன். வீட்டில் பெற்றோர்கள் திருமணம் செய்து கொள்ள தொடர்ந்து வற்புறுத்தி வந்தனர். இப்போது சம்மதம் தெரிவித்திருக்கிறேன். அவர்கள் மாப்பிள்ளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடக்கும். நான் யாரையும் காதலிக்கவில்லை. பெற்றவர்கள் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது ஏற்கெனவே எடுத்த முடிவு.


 

ஓவியா மானேஜர் அடிக்க பாய்ந்தார் தீபா ஷா பகீர் புகார்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஷூட்டிங் ஸ்பாட்டில் ஓவியாவின் மானேஜர் தன்னை தாக்க வந்ததாகப் பரபரப்பு புகார் கூறியுள்ளார் நடிகை தீபா ஷா. தமிழில், 'யுத்தம் செய்' படத்தில் அறிமுகமானவர் தெலுங்கு நடிகை தீபா ஷா. இப்போது, 'சில்லுனு ஒரு சந்திப்பு' படத்தில் விமல் ஜோடியாக நடித்து வருகிறார். ரவி லவ்லின் என்பவர் இயக்கும் இந்தப் படத்தில் இன்னொரு ஹீரோயினாக ஓவியாவும் நடிக்கிறார். இதன் ஷூட்டிங் திங்கட்கிழமை மாதவரத்தில் நடந்தது. அப்போது தீபா ஷாவுக்கும் ஓவியாவுக்கும் பிரச்னை ஏற்பட்டதால் ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து தீபா ஷா வெளியேறியதாக செய்தி வெளியானது. நடந்தது என்ன என்பது பற்றி தீபா ஷாவிடம் கேட்டபோது கூறியதாவது:

இந்தப் படத்தில் எனது காட்சிகள் கடந்த சில நாட்களாக படமாக்கப்பட்டு வந்தது. எனக்காக கேரவன் கொடுத்திருந்தனர். திடீரென்று அங்கு ஓவியா வந்தார். 'அரை மணி நேரம் மட்டும் ஓவியா உங்கள் கேரவனில் தங்குவார், அட்ஜஸ்ட் செய்துகொள்ளுங்கள்' என்று பட யூனிட்டை சேர்ந்தவர்கள் கூறினர். நானும் பரவாயில்லை என்று இருந்தேன். மலேசிய சேனல் ஒன்றுக்காக அவர் வீடியோ பேட்டி கொடுக்க இருப்பதாகக் கூறினார். நான் மேக்கப் போட்டுக்கொண்டிருந்தேன். கேரவனுக்குள்ளேயே கேமராவை கொண்டு வந்தனர். இது பிரச்னையாக இருக்கும் என்று சொன்னேன். ஐந்து நிமிடம்தான் என்றார்.

பிறகு இருபது நிமிடம் வரை போய்க்கொண்டிருந்தது. எனக்கு அடுத்த ஷாட் இருப்பதால் மேக்கப் போடுவதற்கு இடைஞ்சலாக இருந்ததை சொன்னேன். வெளியே போகச் சொன்னார்கள். இது எனக்காக கொடுக்கப்பட்ட கேரவன். நான் ஏன் வெளியே போகவேண்டும் என்றேன். பேசிக்கொண்டிருக்கும்போதே ஓவியாவின் மானேஜர் அருண், என்னை அடிக்கப் பாய்ந்தார். எனது மேக்கப் மேன் ஓடிப்போய் அவரை தடுத்தார். எனக்கு ஷாக் ஆகிவிட்டது. இப்படியொரு மோசமான சூழ்நிலையை எதிர்பார்க்கவில்லை. இதையடுத்து நான் வெளியேறிவிட்டேன். பிறகு பட யூனிட், ஓவியாவையும் அருணையும் மன்னிப்புக் கேட்க வைத்தபிறகு நான் ஷூட்டிங்கில் கலந்துகொண்டேன். இதுதான் நடந்தது. நான், 'யுத்தம் செய்' படத்தில் நடித்தபோதே எனக்கு மானேஜராக இருக்கிறேன் என்று அருண் கேட்டார். மறுத்துவிட்டேன். அந்த கோபத்தில் இந்த சம்பவத்தை பயன்படுத்தி மீடியாவுக்கு என்னை பற்றி தவறான செய்தியை அளித்துள்ளார். இதுபற்றி நடிகர் சங்கத்தில் புகார் கொடுக்க இருக்கிறேன்.
இவ்வாறு தீபா ஷா கூறினார்.

ஓவியாவின் மானேஜர் அருணிடம் கேட்டபோது, 'கேரவனில் ஓவியா பேட்டி அளித்தபோது, தீபா ஷா செல்போனில் சத்தமாகப் பேசினார். உடனே ஓவியா, 'பத்து நிமிஷம் அமைதியாக இருங்கள்' என்றார். என்றாலும், அவர் பேசிக்கொண்டே இருந்ததால், இடைஞ்சலாக இருந்தது. நான் தீபா ஷாவிடம், அமைதியாக இருக்கும்படி சொன்னேன். அப்போது தீபா ஷாதான் என்னையும், ஓவியாவையும் தகாத வார்த்தையால் பேசினார். இது அங்கிருந்தவர்களுக்குத் தெரியும்' என்றார்.


 

வழக்கு எண் படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'வழக்கு எண் 18/9' படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க தமிழ அரசு ஆவண செய்ய வேண்டும்' என்று இயக்குனர் லிங்குசாமி கோரிக்கை வைத்தார். லிங்குசாமியின் சகோதரர் என்.சுபாஷ் சந்திரபோஸ், ரோனி ஸ்க்ரூவாலா தயாரிப்பில் ரிலீசான படம், 'வழக்கு எண் 18/9'. பாலாஜி சக்திவேல் இயக்கியிருந்த இந்தப் படம், கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆனது. இந்தப் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது லிங்குசாமி பேசியதாவது:

அனைத்து தரப்பினரும் ரசிக்கும் இந்தப் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள். இதனால், கேளிக்கை வரிச்சலுகை கிடைக்கவில்லை. ஒட்டுமொத்த மீடியாவும் பாராட்டிய இப்படத்துக்கு வரிச்சலுகை வழங்க, அரசு ஆவண செய்ய வேண்டும். நானும், பாலாஜி சக்திவேலும் பதினெட்டு வருட நண்பர்கள். நான், சென்னை வந்ததும் முதலில் சந்தித்த நபர் அவர். உலக சினிமாவை எனக்கு கற்றுக் கொடுத்தவர் அவர்தான். 'வழக்கு எண் 18/9' மன நிறைவை தந்த படம். இது போல தரமான படங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளேன். இவ்வாறு லிங்குசாமி கூறினார்.


 

கரீனா படத்தில் ரஜினி பாடல் நஷ்டஈடு கேட்டு திடீர் வழக்கு

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
கரீனாவும் அவரது காதலன் சைப் அலிகானும் நடித்துள்ள இந்தி படத்தில் ரஜினி பாடல் பயன்படுத்தியதை எதிர்த்து நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரப்படுகிறது. நீண்ட வருட காதலர்கள் கரீனாவும், சைப் அலிகானும் விரைவில் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதற்கிடையில் சைப் தயாரித்து நடித்த 'ஏஜென்ட் வினோத் என்ற இந்தி படத்தில் ஹீரோயினாக நடித்தார் கரீனா. இப்படத்தில் ரஜினியின் 'தளபதி படத்தில் இடம்பெற்ற 'ராக்கம்மா கைய தட்டு.. பாடல் இடம் பெற்றுள்ளது. இப்படம் வெளியாகி ஒரு மாதம் ஆன நிலையில் திடீரென்று பெங்களூரை சேர்ந்த பாடல் கேசட் நிறுவனம், அனுமதி இல்லாமல் Ôராக்கம்மா கைய தட்டுÕ பாடலை பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி சைப்பிடம் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர முடிவு செய்துள்ளது.

இது பற்றி பாடல் கேசட் கம்பெனி நிர்வாகி வேலு கூறும்போது, 'ராக்கம்மா கைய தட்டு பாடலின் சர்வ தேச உரிமையை எங்கள் நிறுவனம் பெரிய தொகை கொடுத்து வாங்கி வைத்திருக்கிறது. இந்நிலையில் சைப் அலிகான் தனது படத்தில் இப்பாடலை பயன்படுத்தி இருக்கிறார். இதற்காக எங்களிடம் அனுமதி பெறவில்லை. இதையடுத்து பட குழுவினர் மீது நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.



 

கதையைத் திருடிவிட்டார் - ராம்கோபால் வர்மா மீது போலீசில் புகார்!

Police Complaint Against Ram Gopal Varma
மும்பை: என் கதையை திருடி டிபார்ட்மெண்ட் படத்தை எடுத்துள்ளார் என ராம் கோபால் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார் எழுத்தாளர் தனிஷ் ரஸா.

புதிய எழுத்தாளர்கள், படைப்பாளிகளின் கதைகளைக் கேட்டு, அந்த 'நாட்'டை அப்படியே சுட்டு, படம் செய்யும் பிரபலங்கள்தான் இன்றைக்கு இந்திய சினிமாவில் அதிகம். அதுவும் பாலிவுட்டில் இது சகஜம். பிரச்சினையாகிவிட்டால், புகார் கொடுத்தவர் யாரென்றே தெரியாது என டபாய்த்து விடுவது வழக்கம்.

சர்ச்சைக்குரிய இயக்குநர் ராம் கோபால் வர்மா இதில் கில்லாடி. சுட்டுப் படம் எடுப்பதில் இவருக்கு டாக்டர் பட்டமே தரலாம். கேட்டால் இன்ஸ்பிரேஷன் என்று தப்பித்துக் கொள்வது இவர் ஸ்டைல்.

அமிதாப் பச்சன் - சஞ்சய் தத் நடித்துள்ள படம் டிபார்ட்மெண்ட். ராம் கோபால் வர்மா இயக்கியுள்ள இந்தப் படம் விரைவில் வரவிருக்கிறது.

இந்த நிலையில் இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் தன்னுடையது என்றும், சேர்ந்து பணியாற்றலாம் என அழைத்து தன் கதையை வாங்கிக் கொண்டு பணம் தராமல் ராம் கோபால் வர்மா ஏமாற்றிவிட்டதாகவும் தனிஷ் ரஸா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனிஷ் ரஸா அளித்துள்ள மோசடி புகாரில், "ராம் கோபால் வர்மாவின் உதவியாளர் நீரஜ் சர்மா என்பவர் கடந்த 2010 ஜூன் மாதம் என்னைச் சந்தித்தார். டிபார்ட்மென்ட் படத்தின் திரைக்கதை தொடர்பாக என்னுடன் பேச விரும்புவதாகக் கூறினார். நான் உடனடியாக ராம் கோபால் வர்மாவின் அலுவலகத்துக்கு சென்றேன். எனது சில ஸ்க்ரிப்டுகளைப் படித்த பிறகு, நாம் சேர்ந்து பணியாற்றலாம் என்று கூறினார் ராம்கோபால். உடனே வேலையை ஆரம்பிக்கச் சொன்னார். நான் ஜூலை 19-ம் தேதி டிபார்ட்மென்ட் படத்துக்கான திரைக்கதையின் முதல் பகுதியை அவருக்கு அனுப்பி வைத்தேன். அதை ஓகே செய்தார்.

அடுத்த பகுதியை எழுத ஆரம்பித்தபோது, ராம் கோபால் வர்மா என்னுடன் டிஸ்கஸ் செய்து சில காட்சிகளை உருவாக்கினார். அப்போதுதான் எனக்கு சம்பளம் பேசப்பட்டது. ஆனால் ஒப்பந்தம் எதையும் போடவில்லை ராம் கோபால். நான் ஒப்பந்தம் போடுமாறு கேட்டுக் கொண்டே இருந்தேன். ஆனால் அவர்கள் இழுத்தடிப்பது தெரிந்ததால், எழுதுவதை நிறுத்திவிட்டேன். உடனே எனக்கு இமெயில் மூலம் ஒரு ஒப்பந்தத்தை அனுப்பினர். ஆனால் தபாலில் அதன் பிரதியை அனுப்பவில்லை.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 2011-ல் டிபார்ட்மென்ட் படம் கைவிடப்பட்டதாக ராம் கோபால் வர்மாவின் உதவியாளர் எனக்கு தகவல் தெரிவித்தார். எனவே நான் பணம் கேட்பதை நிறுத்திவிட்டு, வேறு வேலை நிமித்தமாக டெல்லிக்கு வந்துவிட்டேன். ஆனால் இப்போது, அதே டிபார்ட்மென்ட் படத்தை எடுத்து ரிலீஸ் செய்யப் போவதாக விளம்பரங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.

இந்தப் படத்தின் கதை, திரைக்கதை என்னுடையதுதான் என்பதற்கு என்னிடம் அனைத்து ஆதாரங்களும் உள்ளன. நான் எழுதிக் கொடுத்த திரைக்கதையில் ராம் கோபால் தன் கைப்பட எழுதியதன் பிரதி கூட என்னிடம் உள்ளது. அனைத்துக்கும் மேல், அந்த ஒப்பந்த நகலும் உள்ளது," என்று கூறியுள்ளார்.

தனிஷ் ரஸா யாரென்றே தெரியாது!

இந்தப் புகார் குறித்து ராம் கோபால் வர்மாவிடம் கேட்டபோது, "இந்த தனிஷ் ரஸா யாரென்றே எனக்குத் தெரியாது. ஒரு நாளைக்கு ஐந்துக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களைச் சந்திப்பதால் எனக்கு எதுவும் நினைவில் இல்லை. என் அலுவலகம் இதையெல்லாம் டீல் செய்துகொள்ளும்," என்றார்.
 

இனி புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் - விஜய் மீண்டும் உறுதி

Vijay Assures Not Smoking Forthcoming Films
பசுமைத் தாயகம் விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து இனி புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன், என மீண்டும் உறுதி கூறியுள்ளார் நடிகர் விஜய்.

நடிகர் விஜய் தனது அடுத்த படமான துப்பாக்கிக்காக சுருட்டுப் பிடிப்பது போல போஸ் கொடுத்தாலும் கொடுத்தார், அதுவே அந்தப் படத்துக்கு பெரிய பப்ளிசிட்டியாகிவிட்டது.

இந்த விளம்பரத்தைக் கண்டித்து பாமகவின் பசுமைத் தாயகம் களத்தில் இறங்க, துப்பாக்கியில் புகைப் பிடிக்கும் காட்சிகளே இருக்காது என்று அறிவித்துவிட்டார் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ்.

அப்படியும் பாமக விடவில்லை. 2007-ம் ஆண்டு புகைப்பிடிக்க மாட்டேன் என்று வாக்குறுதி அளித்த விஜய், அதை மீறும் வகையில் நடந்து கொள்ளலாமா? என்று கேள்வி எழுப்பி அறிக்கைவிட்டது.

இப்போது, அதற்கும் பலன் கிடைத்துவிட்டது.

"இனி எந்தப் படத்திலும் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகளில் நான் தோன்ற மாட்டேன். இந்த உறுதியைக் காப்பாற்றுவேன்," என கூறியுள்ளார் விஜய்.

அப்படியே பஞ்ச் டயலாக்குக்கும் ஒரு சத்தியம் வாங்கிட்டா தேவலை!!
 

கவுண்டமணியை இமிடேட் பண்ணவில்லையாம்! - சொல்கிறார் சந்தானம்

Santhanam Denies Imitating Goundamani
சத்தியமாக நான் கவுண்டமணியை இமிடேட் செய்து காமெடி பண்ணவில்லை. என்னுடைய ஸ்டைல் தனி, என்று கூறியுள்ளார் இன்றைக்கு முன்னணியில் உள்ள காமெடியன் சந்தானம்.

தமிழ் சினிமா காமெடியன்களில் தனிச் சிறப்பு கவுண்டமணிக்கு உண்டு. காட்சியை சொன்னாலே போதும், இன்ஸ்டன்டாக வசனத்தை கொட்டும் ஆற்றல் படைத்தவர் கவுண்டர். அதேபோல, 'லொள்ளு' என்ற வார்த்துக்கு 100 சதவீத அர்த்தமாக திரையில் கலக்கியவர்.

ஒரு கட்டத்துக்குப் பிறகு, வந்த வாய்ப்புகளையும் வேண்டாம் என்று கூறி ஒதுங்கிக் கொண்டார் கவுண்டமணி. அது வடிவேலுவுக்கு சாதகமாகிவிட்டது. அவர் உச்சத்துக்குப் போனார்.

அரசியல் பிரச்சினையில் கட்டாய, ஆனால் தற்காலிக ஓய்வுக்கு வடிவேலு தள்ளப்பட, சந்தானத்துக்கு கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்ட ஆரம்பித்துவிட்டன வாய்ப்புகள். இன்றைய தேதிக்கு அவர்தான் நம்பர் ஒன் காமெடியன்.

ஆனால் ஆரம்பத்திலிருந்தே அவர் கவுண்டமணியைக் காப்பியடித்து காமெடி செய்வதாக விமர்சனங்கள் எழுந்தன. ஆரம்பத்தில் இதை ஒப்புக் கொண்டவர்தான் சந்தானம்.

ஆனால் ஒரு கட்டத்தில், கவுண்டமணி பெயரை உச்சரிப்பதைக் கூட தவிர்த்தார் சந்தானம். எனக்குப் பிடித்த காமெடி நடிகர் தங்கவேலுதான் என்று கூற ஆரம்பித்தார். அட ங்கொக்கா மக்கா... இப்படி தெரிஞ்சே புளுகறாரே என்று பலரும் கமெண்ட் அடித்த நிலையில், ஆனந்த விகடனில் வாசகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார் சந்தானம்.

அந்த கேள்வியும் சந்தானம் அளித்த பதிலும்...

''நீங்க கவுண்டமணியைப் பயங்கரமா இமிடேட் பண்றீங்கனு நான் சொல்றேன்... கரெக்டா?''

''அது என்ன மாய மந்திரம்னு தெரியலை... விகடன் ஆளுங்க எடுக்குற பேட்டியில மட்டும் இந்தக் கேள்வி ரிப்பீட் ஆகிட்டே இருக்கு. இதை வாசகர்கள்தான் கேக்குறாங்களா, இல்ல... விகடன்ல உள்ளவங்களே எழுதிப்போட்டுக் கேக்குறாங்களானு தெரியலை. பரவாயில்லை... இந்தவாட்டியும் சமாளிப்போம். என் முதல் படம் 'மன்மதன்’. அதுல ஃபர்ஸ்ட் ஹாஃப் முழுக்க கவுண்டமணி சார்தான் காமெடி. செகண்ட் ஹாஃப்லதான் என் காமெடி. மகுடேஸ்வரன் சொல்ற மாதிரி, அவரை நான் இமிடேட் பண்ணி இருந்தா, படம் முடிஞ்சதுமே, 'அடேய்... இந்த சந்தானம் பய கவுண்டமணி மாதிரியே பண்றான்ப்பா’னு சொல்லி அப்பவே காலி பண்ணியிருப்பாங்க. ஆனா, அப்படில்லாம் எதுவுமே நடக்கலையே நண்பா.

ஒருவேளை நான் சப்ஜாடா எல்லாரையும் கலாய்க்கிறதால, நீங்க இப்படிச் சொல்றீங்கனு நினைக்கிறேன். வழக்கமா கவுண்டமணி சார் செந்திலை மட்டும்தான் அதிகமாக் கலாய்ப்பார். நான் என்கூட நடிக்கிற எல்லாரையுமே செந்திலா நினைச்சுக் கலாய்க்கிறேன். அதனால, அவரைஇமிடேட் பண்ற மாதிரி உங்களுக்குத் தோணலாம். ஆனா, உங்க கிரீடம் மேல சத்தியமா நான் அவரை இமிடேட் பண்ணலை!''

சந்தானம் சொல்றது சரிதானா.. மக்களே, நீங்களே பாத்துக்கங்க!
 

மண் மணம் கமழும் மக்கள் தொலைக்காட்சியின் பாரம்பரிய சமையல்!

Makkal Tv Takes Tamils Parampariya Samayal
தூதுவளை குழம்பு, மூலிகை பானம் என தமிழகத்தின் பாரம்பரிய சமையலை செய்து காட்டி மக்களை பழமைக்கு அழைத்துச் செல்கிறது மக்கள் தொலைக்காட்சி.

இன்று பிட்சாவுக்கும், பர்கருக்கும், பதப்படுத்திய உணவுக்கும் தமிழன் பழகிவிட்டான். அதனால் பல்வேறு நோய்களுக்கும் ஆளாகி வருகிறான்.

நோய்கள் ஏற்படாமல் தடுப்பதில் உணவுக்கு முக்கிய பங்குண்டு. அதனால்தான் பண்டைய காலத்தில் உணவே மருந்து என்று கூறியுள்ளனர்.

இன்றைய சமையல் முறையில் அதிக எண்ணெய் ஊற்றி சத்தில்லாத உணவுகளே சமைக்கப்படுகின்றன. அவற்றை உண்பதன் மூலம் உடல்நலம்தான் கெடுகிறது. இதை கருத்தில் கொண்டே சராசரி சமையல் நிகழ்ச்சியை வழங்காமல் பாரம்பரியத்தை உணர்த்தும் சமையலை மீண்டும் அறிமுகப்படுத்துகிறது மக்கள் தொலைக்காட்சி.

அழிந்து கொண்டு வரும் தமிழகத்தின் பாரம்பரிய உணவு வகைகளை மீண்டும் உயிர்ப்பிக்கும் நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகிறது இந்த பாரம்பரிய சமையல். உண்மையிலேயே ஒரு பெரிய வணக்கம் சொல்ல வைப்பதாக இந்த அருமையான நிகழ்ச்சி அமைந்துள்ளது.

மக்கள் தொலைக்காட்சியில் திங்கள் தோறும் மதியம் 1.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியை ஆர்த்தி தொகுத்து வழங்குகிறார். இதில் பண்டைய தமிழர்களின் சிறந்த உணவுவகைகளை சமைத்துக் காட்டுகிறார்கள் சித்தமருத்துவர்கள் கிருபாகரன் மற்றும் செந்தில் கருணாகரன்.

மேலும் நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் பொருட்களின் மகத்துவத்தையும் விளக்கிக் கூறுகிறார்கள். சாப்பிட மறக்கறீங்களோ இல்லையோ, கண்டிப்பாக இந்த நிகழ்ச்சியைப் பார்க்க மறக்காதீங்க...அவ்வளவு பயனுள்ள நிகழ்ச்சி இது.
 

சின்னத்திரையிலும் இணைந்து கலக்குவார்களா மஞ்சுளாவும், விஜயக்குமாரும்?

Will Manjula Join With Vijayakumar In Tv Serials
சினிமாவில் நடித்து வாழ்க்கையிலும் ஒன்றாக இணைந்தவர்கள் விஜயகுமார், மஞ்சுளா தம்பதியர். திருமணத்திற்குப் பிறகும் இருவரும் இணைந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளனர்.

இவர்கள் ஜோடியாக நடித்த பல படங்களை பட்டியலிட்டால் பெரிய லிஸ்ட்டாக வரும். இப்போது இருவருமே சினிமாவில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டு விட்டனர். மஞ்சுளா கூண்டுக்குள் கிளியாக வீட்டோடு இருந்து வந்தார்.

தற்போது சின்னத்திரையில் இருவரும் தனித்தனியாக களம் இறங்கியுள்ளனர். சன் டிவியில் ஒளிபரப்பாகும் தங்கம் நெடுந்தொடரில் விஜயகுமார் நடித்து வருகிறார். அதேபோல் மெகா டிவியில் சந்திரலேகா என்ற புதிய தொடரில் கலக்கலாக களம் இறங்கியுள்ளார் மஞ்சுளா. முதன் முறையாக அவர் சின்னத்திரைக்கு அறிமுகமாகும் தொடர் இது.

இந்த தொடர் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது. நிஜத்தில் தம்பதியான இவர்கள் தனித்தனியாக தொடர்களில் கலக்கும் நிலையில் சினிமாவைப் போலவே, நிஜ வாழ்க்கையைப் போலவே டிவியிலும் இணைந்து கலக்குவார்களா என்ற எதிர்பார்ப்பு டிவி சீரியல்களை விரும்பிப் பார்க்கும் இல்லத்தரசிகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

சத்யமேவ ஜெயதேவுக்காக கேரள விசிட் - மோகன்லால் வீட்டில் அமீர்கான்!

Aamir Khan Visits Mohanlal House
ஒரே நாளில் இந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்ட 'சத்யமேவ ஜெயதே' டிவி நிகழ்ச்சியின் புரமோஷன் பணிகளில் பிஸியாகிவிட்டார் நடிகர் அமீர்கான்.

இதற்காக தனது சினிமா வேலைகளைக் கூட விட்டுவிட்டு நாடு முழுவதும் சுற்றி வருகிறார் அமீர் கான்.

நேற்று முன்தினம் சத்யமேவ ஜெயதேவுக்காக ஒருநாள் சுற்றுப்பயணமாக கேரளா சென்றார். அப்போது கொச்சியில் உள்ள மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் வீட்டுக்கு திடீரென சென்றார்.

அமீர்கானை மோகன்லாலும், மலையாள நடிகர் திலீப்பும் வரவேற்றனர். மோகன்லால் வீட்டை அமீர்கான் சுற்றி பார்த்தார். மோகன்லால் பாதுகாத்து வைத்துள்ள பழங்கால பொருட்களை வியப்போடு பார்த்தார் அமீர்கான். பின்னர் மோகன்லால் - திலீப்புடன் விருந்தும் சாப்பிட்டார்.

பின்னர் நீண்ட நேரம் இருவரும் மலையாள மற்றும் இந்தி திரையுலகம் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். அதன்பிறகு அங்கிருந்து அமீர்கான் புறப்பட்டுச் சென்றார். அமீர்கானை காண மோகன்லால் வீட்டின் முன்னால் ஏராளமான ரசிகர்கள் திரண்டார்கள். அவர்கள் அனைவரையும் பார்த்து கையசைத்தபடி சென்றார்.

ராஜஸ்தான் முதல்வருடன் சந்திப்பு:

தனது பயணத்தின் அடுத்த நிகழ்ச்சியாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டை நேற்று சந்தித்தார் அமீர்கான்.

பெண் சிசுக் கொலைக்கு எதிராக தான் நடத்தும் நிகழ்ச்சி பற்றி அவரிடம் கூறிய அமீர்கான், ராஜஸ்தான் மாநிலத்தில் பெண் சிசுக் கொலைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தார்.

நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் அசோக் கெலாட் உறுதியளித்தார்.
 

1000 ரூபாய் தண்ணீர் தொட்டி, லட்ச ரூபாய்க்கு பப்ளிசிட்டி! - பலே டெக்னிக்கைப் பிடித்த பவர் ஸ்டார்!!

Power Star Launches Water Campaign
சாம் ஆண்டர்சனுக்குப் பின் சினிமாவையும் இணையத்தையும் கலக்கிக் கொண்டிருக்கும் பவர் ஸ்டார் டாக்டர் சீனிவாசன், அடுத்து சீஸனுக்கேற்ற சேவை ஒன்றிலும் குதித்துள்ளார்.

அது, 1000 ரூபாய் தண்ணீர்ப் பந்தல் திறந்து லட்ச ரூபாய்க்கு பப்ளிசிட்டி பார்ப்பது!

இன்று காலை வெள்ளையும் சொள்ளையுமாக கூலர் அணிந்து தன் பாப்புலர் பல் வரிசை தெரிய சிரித்துக் கொண்டே வந்த பவர் ஸ்டார், கோயம்பேடு அருகே ஒரு சின்டெக்ஸ் டேங்க் குழாயைத் திறந்து வைப்பது போல விதவிதமாக போஸ் கொடுத்தார்.

அந்த டேங்கில் பெரிதாக பவர் ஸ்டார் என்று ஸ்டிக்கர் அடிக்கப்பட்டிருந்தது. தன்னைப் பார்க்க வந்தவர்களுக்கு ஒரு பெரிய கூஜா நிறைய ஜூஸ் வரவழைத்துக் கொடுத்தார் பவர் ஸ்டார்.

இந்த தண்ணீர் தொட்டி திறப்பு விழாவுக்கு பவர் ஸ்டார் அடுத்து நடிக்கும் மன்னவன் படத்தின் இயக்குநர் மற்றும் படக்குழுவினர் வந்திருந்து, ''பலம்' காட்டினர்.
 

இனிமையும், மென்மையும், கலந்த கலவை நான்- நடிகர் ராஜ்காந்த் சிறப்பு பேட்டி!

Actor Rajkhanth Interview
உறவுகள் தொடரில் இரு மனைவிகளின் கோபக்கார கணவனாகவும், செல்லமே தொடரில் அன்பான, பாசமான கணவன் வாசுவாகவும், வைராக்யம் தொடரில் காமெடி ஹீரோவாகவும் கலக்குபவர் நடிகர் ராஜ்காந்த். இவரது வளர்ச்சி ஒரே நாளில் வந்ததல்ல 19 வருட போராட்டம் என்கிறார்.

சின்னத்திரை நடிகரானது எதிர்பாராத நிகழ்வு என்று கூறும் அவர் இன்றைக்கு சின்னத்திரை சங்கத்தின் பொதுச்செயலாளராக உயர்ந்துள்ள ராஜ்காந்த். தன்னுடைய நடிப்பு பற்றியும், தனக்கு பிடித்தவை பற்றியும் தட்ஸ் தமிழுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார் நீங்களும் தெரிந்து கொள்ளுங்களேன்.

கேள்வி: ஒரே நாளில் கோபக்கார கணவராகவும், அன்பான கணவராகவும் நெடுந்தொடர்களில் எப்படி நடிக்க முடிகிறது?

ராஜ்காந்த்: இந்த வித்தியாசம்தான் என்னை ரசிகர்களுக்கு அடையாளப்படுத்தியிருக்கிறது. வில்லனாக நிறைய தொடர் நடித்து விட்டேன்.

ஹீரோ போல சில கேரக்டர்கள் நடித்துள்ளேன். உறவுகள் தொடரை விட செல்லமே வாசுதான் அனைவரின் மனதிலும் நிற்கிறது. அதற்கு அந்த கதாபாத்திரம்தான் காரணம்.

கேள்வி: வைராக்யம் தொடரில் திடீர்னு காமெடி பண்றீங்களே எப்படி?

ராஜ்காந்த்: என்னுடைய நீண்ட நாள் ஆசை இது. எத்தனையோ பேட்டிகளில் கூட சொல்லியிருக்கிறேன். எனக்கு நகைச்சுவை உணர்வு இருக்கிறது. அதை வெளிப்படுத்தும் விதமாக எனக்கு வைராக்யம் தொடர் அமைந்திருக்கிறது. இருப்பதிலேயே காமெடிதான் கஷ்டமானது ஆனால் அதுதான் எனக்கு இஷ்டமானது.

கேள்வி: சீரியல் நடிக்கும் ஆர்வம் எப்படி வந்தது ?

ராஜ்காந்த்: இது எதிர்பாராத நிகழ்வு. நான் நடிக்க ஆரம்பித்து 22 வருடங்கள் ஓடிவிட்டன. எனக்கு முதன் முதலாக நடிகராக ஓபனிங் கிடைத்த தொடர் சக்தி. 98ல் சன் டிவியில் ஒளிபரப்பானது. அப்புறம் ஏவிஎம்மின் நம்பிக்கை தொடரில் அப்பா, தாத்தா கேரக்டர் செய்தேன் அது அனைவரும் பாராட்டும் படியாக அமைந்தது.

கேள்வி: மெட்டி ஒலி தொடர்தானே உங்களை தமிழக ரசிகர்களிடம் அறிமுகம் செய்தது?

ராஜ்காந்த்: என்னுடைய நடிப்பு பரிமாணத்தை வெளிக் கொண்டு வந்த தொடர் அது. என்னுடைய நடிப்புத்திறமையை வெளிக்கொண்டுவந்த இயக்குநர் திருமுருகன் சாருக்கு இந்த நேரத்தில் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் மேகலா தொடரிலும் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. இப்பொழுது நடித்துக்கொண்டிருக்கும் தொடர்களில் உறவுகள், செல்லமே, வைராக்கியம் ஆகிய மூன்றுமே வெவ்வேறு விதமான நடிப்புத்திறமையை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது. அதுதான் ரசிகர்களுக்கும் பிடித்திருக்கிறது.

கேள்வி: நடிப்பு தவிர வேறு பொழுது போக்குகள் ?

ராஜ்காந்த்: நடனமாட எனக்கு பிடிக்கும். கலா மாஸ்டரிடம் நடனம் கற்றிருக்கிறேன். மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடனமாடி பரிசு வென்றிருக்கிறேன். வீட்டில் இருக்கும் போது மியூசிக் சேனல்தான் விரும்பி பார்ப்பேன்.

கேள்வி: உங்களுடைய வாழ்நாள் சாதனை என்று ஏதாவது உண்டா?

ராஜ்காந்த்: குறிப்பிட்டு சொல்லும்படியாக எதுவும் கிடையாது. நடிகரான எனக்கு எந்த கேரக்டர் என்றாலும் சிறப்பாக செய்யவேண்டும் என்ற எண்ணம் உண்டு. சாதாரண நடிகராக அறிமுகமான நான் இன்றைக்கு சின்னத்திரை சங்கத்தின் பொதுச்செயலாளர் அளவிற்கு உயர்ந்திருக்கிறேன் என்றால் என்மீது ரசிகர்கள் வைத்திருக்கும் நம்பிக்கைதான். என்னைவிட சீனியர் நடிகர்கள் எல்லாம் இருக்கிறார்கள். எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதற்கு ரசிகர்களின் ஆதரவும், சங்கத்து உறுப்பினர்கள் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கையும்தான்.

உங்கள் மீது நாங்களும் நம்பிக்கை வைத்திருக்கிறோம் ராஜ்காந்த். உங்கள் நடிப்பு பயணத்தில் மேலும் உயர தட்ஸ் தமிழ் வாழ்த்துகிறது.
 

கவர்ச்சியா நடிக்கமாட்டேன்னு நான் எப்போ சொன்னேன்? - ரம்யா நம்பீஸன்

Ramya Nambeesan Ready Go Glam
பீட்ஸா விற்கும் கடையில் வேலை பார்க்கும் ஒரு இளைஞன் என்னென்ன பிரச்சினைகளைச் சந்திப்பான்?

இதையெல்லாம் ஒரு சினிமாவாகக் காட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார் ஒரு இளைஞர். அவர் பெயர் கார்த்திக் சுப்பாராவ். படத்துக்குப் பெயரே பீட்ஸா-தான்.

தென்மேற்குப் பருவக்காற்று படத்தில் நாயகனாக அசத்திய விஜய் சேதுபதி இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

அட்டகத்தி என்ற படத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கும் திருக்குமரன்தான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார்.

படத்தின் நாயகியாக நடிப்பவர் ரம்யா நம்பீஸன். குள்ளநரிக் கூட்டத்துக்குப் பிறகு அவர் நடிக்கும் படம் இது.

இந்தப் படத்தில் தனது வேடம் பற்றி ரம்யா கூறுகையில், "என்னுடைய நடிப்பு திறமையைக் காட்ட நல்ல வாய்ப்பு இந்தப் படம். மொழி பிரச்சினை காரணமாக இதுவரையான படங்களில் டப்பிங் பேசவில்லை.முதன்முறையாக இப்படத்தில் தமிழ் கற்றுக் கொண்டு டப்பிங் பேசப்போகிறேன்.

தமிழில் எனக்கென்று தனி இடம் கிடைக்கும் என்று நம்புகிறேன். கிளாமர் ரோல்களில் நடிப்பதில் தவறில்லை. நான் அப்படி நடிக்கமாட்டேன் என்று ஒருபோதும் சொல்லவில்லை. எனக்கு இதுவரை அந்த மாதிரி கவர்ச்சி வேடம் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். நீச்சல் உடைகளில் நடிப்பதில்தான் கொஞ்சம் யோசனையாக உள்ளது," என்றார்.

சரி... நீங்க நடிக்கும் படத்துக்குப் பெயர் பீட்ஸா.. உங்களுக்குப் பிடிச்ச ஐட்டம் அதுதானா? என்றதற்கு,

"ம்ஹூம்... எனக்கு பீட்ஸாவெல்லாம் பிடிக்காது. பிரியாணி அதுவும், சிக்கன் பிரியாணிதான் ரொம்ப பிடிக்கும்," என்றார்.