காயம் ஏற்பட்ட போதிலும் விஜய் வலியோடு நடித்தார்: முருகதாஸ்

Vijay Acts Unmindful Pain Murugado   

துப்பாக்கி ஷூட்டிங்கில் சண்டை காட்சியில் உயரத்தில் இருந்து குதித்தபோது விஜய்க்கு கால் இடறி மூட்டுப்பகுதியில் காயம் ஏற்பட்டதாகவும், வலியையும் பொருட்படுத்தாமல் அவர் நடித்ததாகவும் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தெரிவி்த்துள்ளார்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் நடித்து வரும் படம் துப்பாக்கி. இந்த படத்தின் ஷூட்டிங்கில் விஜய்க்கு காயம் ஏற்பட்டு தற்போது அவர் லண்டனில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் விஜயக்கு காயம் எப்படி ஏற்பட்டது என்று முருகதாஸ் கூறுகையில்,

துப்பாக்கி படத்திற்காக சண்டை காட்சி ஒன்றை படமாக்கினோம். அந்த காட்சிக்காக விஜய் உயரத்தில் இருந்து குதிக்க வேண்டும். அவரும் உயரத்தில் இருந்து குதித்தார். ஆனால் திடீர் என்று கால் இடறியதில் அவரது மூட்டுப்பகுதியில் காயம் ஏற்பட்டது. அவர் குதித்தபோது மூட்டு பெல்ட் அணியவில்லை. காலில் காயம் ஏற்பட்ட போதிலும் வலியோடு அந்த காட்சியை நடித்துக் கொடுத்தார். அதன் பிறகே சிகிச்சைக்கு சென்றார் என்றார்.

விஜய் இன்னும் ஓரிரு நாட்களில் ஷூட்டிங்கிற்கு வருவார் என்று கூறப்படுகிறது. இன்னும் 4 நாட்கள் ஷூட்டிங் தான் பாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

படமாகும் விவேகானந்தர் வாழ்க்கை: 20 மொழிகளில் ரிலீஸ்

New Film On Swami Vivekanandas Life

சுவாமி விவேகானந்தரின் வாழ்கையை இயக்குனர் டூட்டு தாஸ் திரைப்படமாக எடுக்கிறார்.

இயக்குனர் டூடு தாஸ் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்கிறார். தி லைட்- விவேகானந்தா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் விவேகானந்திரன் சிறு வயது முதல் உலகப் புகழ் பெற்ற போதகரானது வரை படமாக்குகிறார்கள். இதில் நாடகங்களில் நடிக்கும் தீப் பட்டாசார்யா விவேகானந்தராக நடிக்கிறார். கார்கி ராய் சவுத்ரி என்பவர் சாரதாவாகவும், பிரேமன்கூர் சட்டோபத்யாய் ராமகிருஷ்ணராகவும், கலிபோர்னியாவைச் சேர்ந்த கோர்ட்னி ஸ்டீபன்ஸ் புரூக் நிவேதிதாவாகவும் நடிக்கிறார்கள்.

பெஙகாளி மற்றும் இந்தியில் எடுக்கப்படும் இந்த படத்தை 18 மொழிகளில் டப் செய்து வெளியிடுகிறார்கள். 1983ம் ஆண்டு ஆர்ட் இன்ஸ்டிடியூட் ஆப் சிகாகோவில் விவேகானந்தர் ஆற்றிய உலகப் புகழ் பெற்ற உரை கொல்கத்தாவில் உள்ள சரித்திரப் புகழ் பெற்ற டவுன் ஹாலில் எடுக்கப்படுகிறது.

விவேகானந்தரின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் எடுக்க வேண்டும் என்று தான் கடந்த 3 ஆண்டுகளாக நினைத்துக் கொண்டிருந்ததாக இயக்குனர் தெரிவி்ததார். இந்த படத்தில் 8 பாடல்கள் உள்ளனவாம்.

விவேகானந்தர் ராமேஸ்வரம் சென்றது அங்கிருந்து கன்னியாகுமரி சென்று ஒரு பாறையில் அமர்ந்து நாட்டு நடப்பு பற்றி பேசியது உள்ளிட்டவையும் இந்த படத்தில் உள்ளனவாம். ஆனால் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறைக்கு பதிலாக வேறு ஒரு பாறையில் படப்பிடிப்பு நடக்கிறது.

 

தபாங், கப்பார் சிங் ஹிட், ஒஸ்தி மட்டும் ஊத்திக்கிட்டதேன்?

Why Did Osthi Fail   

சல்மான் கான், சோனாக்ஷி சின்ஹா நடித்த தபாங் படமும் ஹிட், அதன் தெலுங்கு ரீமேக்கான கப்பார் சிங்கும் ஹிட். ஆனால் தமிழ் ரீமேக்கான ஒஸ்தி மட்டும் ஓடவில்லையே.

சல்மான் கான், சோனாக்ஷி சின்ஹா ஜோடி சேர்ந்த தபாங் படம் வசூலை அள்ளிக் குவித்தது. ஒரே நாளில் சோனாக்ஷி புகழின் உச்சிக்கே சென்றுவிட்டார். அந்த படத்தில் வந்த முன்னி பத்னாம் பாடலும் பட்டி, தொட்டியெல்லாம் பரவியது. இப்படி கண்டமேனிக்கு ஓடிய தபாங்கை தமிழில் ரீமேக் செய்தனர். இதில் சல்மான் கான் கதாபாத்திரத்தில் சிம்புவும், சோனாக்ஷி ரோலில் ரிச்சாவும் நடித்தனர். இந்தியைப் போன்று தமிழிலும் ஓடிவிடும் என்று நினைத்தனர். ஆனால் படம் நகரக் கூடவில்லை.

திரையரங்குகளில் படத்தைப் பார்த்தவர்கள் டென்ஷன் ஆனது தான் மிச்சம். தமிழில் ஊத்திக்கிட்டாலும் தபாங்கை தெலுங்கில் சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண், ஸ்ருதி ஹாசனை வைத்து எடுத்தனர். படம் ஆஹா, ஓஹோ என்று ஓடி வசூலில் சாதனை படைத்தது. நீண்ட நாட்களாக ஹிட் கொடுக்காத பவன் கல்யாணுக்கு இது ஒரு திருப்புமுனையாக அமைந்தது. தெலுங்கில் ஹிட் கொடுக்காத ஹீரோயினாக இருந்த ஸ்ருதிக்கு இந்த படம் முதல் ஹிட்டானதுடன் அவருக்கு நல்ல பெயரும் வாங்கிக் கொடுத்தது. மேலும் தபாங் இரணடாம் பாகமும் எடுக்கவிருக்கின்றனர்.

இப்படி தபாங்கும், கப்பார் சிங்கும் ஹிட்டாக ஒஸ்தி மட்டும் ஊத்திக்கிட்டதேன். தேசிய விருது வேண்டாம், கை தட்டல் போதும், சீரியசான படம் வேண்டாம் மாஸ் படம் போதும் என்ற சிம்புவின் இந்த மாஸ் மட்டும் ஏன் ஒர்க் அவுட் ஆகவில்லை. இது தான் தற்போது கோலிவுட்டில் பலரும் கேட்கும் கேள்வி.

ஒஸ்தி ஓடாடததற்கு என்ன காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? எங்களுக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன்...

 

777 சினிமா இயக்குநர்களின் புதிய அவதாரம்

Polimer Tv Telecast New Serial 777

சீரியல் என்றாலே அதை வருடக்கணக்கில் இழுக்க வேண்டும் என்று எழுதப்படாத விதியாகிவிட்டது. அதை உடைத்து புதிய வரலாறு படைத்துள்ளது பாலிமர் டிவி. 777 என்ற பெயரில் புதிய முயற்சியை தொடங்கியுள்ளது. வெள்ளித்திரையில் வெற்றிக் கொடி நாட்டிய இயக்குநர்கள் அகத்தியன், மனோபாலா, `சிட்டிசன்' சரவணசுப்பையா, தாய் செல்வா ஆகியோர் ஒவ்வொரு வாரமும் ஒரு கதையை இயக்குகின்றனர்.

கதையின் தலைப்பே வித்தியாசமாக இருக்கிறது. அம்மி மிதிச்சாச்சு, அருந்ததி பார்த்தாச்சு என்ற கதையில் சின்னத்திரை தம்பதிகள் பிரஜீன் - சான்ட்ரா நடித்துள்ளனர். அதேபோல் அட்சதை தொடரும் அருமையான கதை அமைப்புடன் அன்பை உணர்த்தும் கதையாக அமைந்துள்ளது.

777 மினி தொடரை பிரபுநேபால் தயாரித்துள்ளார். பிரபல நட்சத்திரங்கள் நடிக்கும் இந்த தொடர் திங்கள் முதல் ஞாயிறுவரை ஒளிபரப்பாகிறது. 777 தொடர் ஆரம்பத்திலேயே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

 

சிரஞ்சீவி மகன் கல்யாணத்துக்கு போகும் ரஜினி-கமல்

Rajini Kamal Grace Chiranjeevi Son Wedding

தெலுங்கு நடிகரும், அரசியல்வாதியுமான சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜாவின் திருமண விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், கமல் ஹாசனும் கலந்து கொள்கின்றனர் என்று கூறப்படுகிறது.

தெலுங்கு நடிகரும், அரசியல்வாதியுமான சிரஞ்சீவியின் மகனும், தெலுங்கு நடிகருமான ராம்சரண் தேஜா வரும் 14ம் தேதி அப்போலோ மருத்துவமனைகளின் உரிமையாளர் பிரதாப் ரெட்டியின் பேத்தி உபசனா கமினேனியை மணக்கிறார். திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகிறது. இந்த திருமண விழாவில் தென்னிந்திய திரையுலகினர் தவிர பாலிவுட்டைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

சிரஞ்சீவி தனது நெருங்கிய நண்பர்களான ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசனை திருமண விழாவிற்கு அழைத்துள்ளார். அவர்கள் வரும் 14ம் தேதி ஹைதராபாத்தில் நடக்கும் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

ராம் சரணின் திருமண கொண்டாட்டங்கள் இன்று சங்கீத நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. அண்ணபூர்ணா ஸ்டுடியோசிஸ் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகைகள் ஸ்ரேயா சரண், தமன்னா, நடிகர் அல்லு அர்ஜுன் உள்ளிட்டோர் நடனமாடவிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சிரஞ்சீவி மகன் கல்யாணத்துக்கு போகும் ரஜினி-கமல்

Rajini Kamal Grace Chiranjeevi Son Wedding

தெலுங்கு நடிகரும், அரசியல்வாதியுமான சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜாவின் திருமண விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், கமல் ஹாசனும் கலந்து கொள்கின்றனர் என்று கூறப்படுகிறது.

தெலுங்கு நடிகரும், அரசியல்வாதியுமான சிரஞ்சீவியின் மகனும், தெலுங்கு நடிகருமான ராம்சரண் தேஜா வரும் 14ம் தேதி அப்போலோ மருத்துவமனைகளின் உரிமையாளர் பிரதாப் ரெட்டியின் பேத்தி உபசனா கமினேனியை மணக்கிறார். திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகிறது. இந்த திருமண விழாவில் தென்னிந்திய திரையுலகினர் தவிர பாலிவுட்டைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

சிரஞ்சீவி தனது நெருங்கிய நண்பர்களான ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசனை திருமண விழாவிற்கு அழைத்துள்ளார். அவர்கள் வரும் 14ம் தேதி ஹைதராபாத்தில் நடக்கும் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

ராம் சரணின் திருமண கொண்டாட்டங்கள் இன்று சங்கீத நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. அண்ணபூர்ணா ஸ்டுடியோசிஸ் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகைகள் ஸ்ரேயா சரண், தமன்னா, நடிகர் அல்லு அர்ஜுன் உள்ளிட்டோர் நடனமாடவிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

டிவி சீரியல் நடிகையை சித்ரவதை செய்த கணவர்-உதடு கிழிந்தது!

Tv Actress Rucha Gujrati Faces Dome

இந்தி சீரியல் நடிகை ருச்சா குஜராத்தியின் கணவரும் மாமனாரும் அவரை அடித்து கொடுமை படுத்துவதாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொழிலதிபர் மிட்டல் சாங்கவியை திருமணம் செய்தார் இந்தி சீரியல் நடிகை ருச்சா குஜராத்தி. இவருடைய திருமண வாழ்க்கையில் கடந்த சில மாதங்களாகவே புயல் வீசி வருவதாக கிசு கிசு எழுந்தது. தற்போது அந்த தகவல் உண்மையாகியுள்ளது.

ரிச்சாவிற்கு பிரச்சினை தேனிலவின் போதே தொடங்கிவிட்டதாம். அவர்களின் ஹனிமூன் செலவில் பாதியை ரிச்சா வீட்டினர் கொடுக்கவேண்டும் என்று மிட்டல் குடும்பத்தினர் கேட்டுள்ளனர்.அப்போது தொடங்கிய பிரச்சினை தற்போது படுக்கை அறையில் அடைத்து வைத்து அடித்து கொடுமைப் படுத்தும் அளவிற்கு அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த நான்கு ஆண்டுகளாகவே தன்னுடைய செலவிற்கு ரிச்சா பணம் கொடுத்து வந்துள்ளார். இருப்பினும் ரிச்சாவின் சேமிப்பில் இருந்து பணத்தை கேட்டு மிட்டலும் அவரது தந்தையும் தலைமுடியை பிடித்து அடித்து கொடுமைபடுத்தியுள்ளனர். இதில் ரிச்சாவின் உதடு கிழிந்துபோனதாகவும் இதனையடுத்தே ரிச்சாவின் மாமியார் போலீசில் தகவல் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து ரிச்சாவின் வீட்டிற்கு வந்த போலீசார் அவரை வீட்டுச் சிறையில் இருந்து விடுவித்தனர். ரிச்சாவின் கணவர் மற்றும் மாமனாரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

கருணாநிதி தொகுத்து வழங்கும் தமிழருவி

Kalainar Karunanithi Hosting Tamizhvi

சங்கத்தமிழ் பாடல்களை எளிய தமிழ்நடையில் கேட்க வேண்டுமா? ஞாயிறுக்கிழமை இரவு பத்துமணிக்கு கலைஞர் தொலைக்காட்சி பார்க்கலாம்.

இலக்கிய பாடல்களை எளிய தமிழ் நடையில் டாக்டர் கலைஞர் வழங்குகிறார். நிகழ்ச்சியின் தலைப்பிற்கு ஏற்ப கலைஞர் கருணாநிதியிடம் இருந்து வார்த்தைகள் தமிழருவியாய் கொட்டுகின்றன

இரும்பொறை மன்னன் துயிலும் முரசுக் கட்டில் என அறியாது அதில் படுத்து துயின்றார் புலவர் மோசிகீரனார் இரும்பொறை மன்னனோ அவர் தூக்கம் கலைக்க விரும்பாமல் குளிர்சாமரம் வீசி தமிழுக்கு தொண்டு செய்தான். சங்கப்புலவர் மோசி கீரனார் பாடிய புறநூனுற்றுப்பாடலில் இந்த சம்பவம் அவரால் பாடலாக்கப் பட்டிருக்கிறது. இந்தப் பாடலின் சாராம்சத்தை எளிய தமிழ் நடையில் கலைஞர் வழங்கினார்.

அதேபோல் புலியை முறத்தால் விரட்டிய வீரப் பெண்ணின் பெருமையை இனிமையாய், எளிமையாய் எடுத்துரைத்தார் கலைஞர்.

இன்றைய தொகுப்பாளர்கள் அவரிடம் டியூசன் கற்றுக்கொண்டார் தமிழாவது தப்பிப் பிழைக்கும்.

 

கருணாநிதி தொகுத்து வழங்கும் தமிழருவி

Kalainar Karunanithi Hosting Tamizhvi

சங்கத்தமிழ் பாடல்களை எளிய தமிழ்நடையில் கேட்க வேண்டுமா? ஞாயிறுக்கிழமை இரவு பத்துமணிக்கு கலைஞர் தொலைக்காட்சி பார்க்கலாம்.

இலக்கிய பாடல்களை எளிய தமிழ் நடையில் டாக்டர் கலைஞர் வழங்குகிறார். நிகழ்ச்சியின் தலைப்பிற்கு ஏற்ப கலைஞர் கருணாநிதியிடம் இருந்து வார்த்தைகள் தமிழருவியாய் கொட்டுகின்றன

இரும்பொறை மன்னன் துயிலும் முரசுக் கட்டில் என அறியாது அதில் படுத்து துயின்றார் புலவர் மோசிகீரனார் இரும்பொறை மன்னனோ அவர் தூக்கம் கலைக்க விரும்பாமல் குளிர்சாமரம் வீசி தமிழுக்கு தொண்டு செய்தான். சங்கப்புலவர் மோசி கீரனார் பாடிய புறநூனுற்றுப்பாடலில் இந்த சம்பவம் அவரால் பாடலாக்கப் பட்டிருக்கிறது. இந்தப் பாடலின் சாராம்சத்தை எளிய தமிழ் நடையில் கலைஞர் வழங்கினார்.

அதேபோல் புலியை முறத்தால் விரட்டிய வீரப் பெண்ணின் பெருமையை இனிமையாய், எளிமையாய் எடுத்துரைத்தார் கலைஞர்.

இன்றைய தொகுப்பாளர்கள் அவரிடம் டியூசன் கற்றுக்கொண்டார் தமிழாவது தப்பிப் பிழைக்கும்.

 

சண்டை காட்சியில் விஜய் காயம் : லண்டனில் சிகிச்சை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'துப்பாக்கி' பட ஷூட்டிங்கில் சண்டை காட்சியில் நடித்த விஜய்க்கு முட்டியில் காயம் ஏற்பட்டது. அதற்காக லண்டனில் சிகிச்சை பெறுகிறார் என்றார் இயக்குனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் 'துப்பாக்கி'. சமீபத்தில் இதன் ஷூட்டிங் மும்பையில் நடந்தது. சண்டை காட்சிகளை படமாக்கிக்கொண்டிருந்தார் இயக்குனர். உயரமான இடத்திலிருந்து விஜய் குதிக்கும் காட்சி படமாக்கப்பட்டது. உயரத்தில் இருந்து விஜய் குதித்த வேகத்தில் அவரது கால் இடறியது. இதில் தரையில் அவர் கால்மோதி முட்டியில் காயம் ஏற்பட்டது. வலியால் துடித்தார். இதையடுத்து ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது. தற்போது விஜய் குடும்பத்தினருடன் லண்டன் சென்றிருக்கிறார். அங்குள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெறுகிறார். இதுபற்றி முருகதாஸ் கூறும்போது,''சண்டை காட்சி படமாக்கிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. உயரத்தில் இருந்து குதித்தபோது கால் இடறி காயம் ஏற்பட்டது. எதிர்பாராத விதமாக இந்த சம்பவம் நடந்தது. கால் முட்டியில் வழக்கமாக அணியும் பாதுகாப்பு கவசத்தை அவர் அணியாமல் நடித்ததுதான் இதற்கு காரணம். ஆனாலும் குறிப்பிட்ட காட்சியை வலியோடு செய்து முடித்தார். காயத்துக்காக லண்டனில் சிகிச்சை பெறுகிறார்'' என்றார். இன்னும் 4 நாள் ஷூட்டிங் பாக்கி இருக்கிறது. லண்டனில் இருந்து விஜய் திரும்பியவுடன் அதில் நடிக்கிறார். இதையடுத்து கவுதம் மேனன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.


 

இளையராஜாவையும் ஹாலிவுட்டுக்கு கூட்டிச் செல்வாரா கமல்ஹாசன்?

Will Kamal Choose Ilayaraja As His Music Director    | விஸ்வரூபம் படங்கள்  

ஆஸ்கர் நாயகன், உலக நாயகன் என்று தனது ரசிகர்களால் அழைக்கப்படும் கமல்ஹாசன் இன்று ஹாலிவுட் நாயனாகியுள்ளார். ஆஸ்கர் விருது குறித்து கமல் இப்போதெல்லாம் பேசுவதில்லை. காரணம், அது நமக்கு சம்பந்தமில்லாத ஒரு விருது என்பது அவரது கருத்து.

இந்த நிலையில், இன்று ஹாலிவுட்டுக்கு கிளம்புகிறார் கமல். சாதாரண நடிகராக மட்டுமல்லாமல், இயக்குநராகவும் ஹாலிவுட்டில் அறிமுகமாகப் போகிறார். இது தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாமல், இந்தியத் திரையுலகிலேயே முதலாவது முயற்சியாகும்.

இதற்கு முன்பு இந்தியாவைச் சேர்ந்த ஷேகர் கபூர் இயக்குநராக மட்டும் லண்டன் வரை போயுள்ளார். ஆனால் இந்தியாவைச் சேர்ந்த ஒரு நடிகர் நடிகராகவும், இயக்குநராகவும் ஒரே நேரத்தில் ஹாலிவுட் படத்தில் அறிமுகமாவது என்பது இதுவே முதல் முறை என்று தெரிகிறது. அந்த வகையில் கமல் செய்யப் போகும் இந்த புதிய படம் ஒரு சாதனை முயற்சி என்று தாராளமாக கூறலாம்.

இந்த நேரத்தில் சின்னதாக ஒரு ஏக்கமும், எதிர்பார்ப்பும் தமிழ்த் திரையுலக ரசிகர்களிடம் எழுந்து நிற்கிறது. அது இசைஞானி இளையராஜாவையும், தன்னுடன் கலைஞானி கமல்ஹாசன் ஹாலிவுட்டுக்குக் கூட்டிச் செல்வாரா என்பதே.

இந்த எதிர்பார்ப்பு என்பது உரிமையுடன் கூடியதாகவே இருக்கிறது. காரணம், இளையராஜாவையும், கமல்ஹாசனையும் இணைந்து ரசித்தவர்களுக்கு, ஏன் கமல்,ராஜாவை கூட்டிச் செல்லக் கூடாது என்ற உரிமையுடன் கூடிய கேள்வி எழுவதால்.

ராஜா மீது கமல்ஹாசனுக்கு உள்ள நட்பு, மரியாதை, உரிமை, உறவு அனைவரும் அறிந்ததே. கமல்ஹாசனுக்கு எத்தனையோ படங்களில் ஏற்றம் கொடுத்தவர் இளையாராஜா. அதேபோல இளையராஜாவின் இசைப் பசிக்கும், திறமைக்கும் சரியான தீனி போட்டுக் கொடுத்தவர் கமல். இருவரும் இணைந்த படங்கள் எல்லாமே இமயம் தொட்டவை. கடைசியாக இருவரும் சேர்ந்து மிரட்டிய விருமாண்டி படத்தின் பாடல்களும் சரி, பின்னணி இசையும் சரி இன்று வரை ரசிகர்களின் மனதில் இன்னும் ரீங்காரமிட்டபடியே இருக்கின்றன.

இன்று அருமையான வாய்ப்பு ஒன்று 57வது வயதில் கமல்ஹாசனைத் தேடி வந்திருக்கிறது. ஹாலிவுட்டுக்குள் நுழைவது அதிலும் இயக்குநராகவும், நடிகராகவும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது என்பது சாதாரண விஷயமல்ல. அந்த வாய்ப்பு கமல்ஹாசனைத் தேடி வந்திருக்கிறது.

தேவர் மகனைப் போல, அபூர்வ சகோதரர்களைப் போல அருமையான ஒரு ஜனரஞ்சகமான படத்தை ஹாலிவுட் ஸ்டைலில் தரப் போவதாக கமல்ஹாசன் கூறியுள்ளார். அப்படியானால் மேற்கண்ட இரு படங்களையும் சூப்பர் ஹிட்டாக்க உதவிய இன்னொரு கரமான இளையராஜாவும் இந்த ஹாலிவுட் படத்தில் இணைவாரா என்ற சுவாரஸ்யமான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும் இந்தக் கதை இந்திய பின்னணியுடன் கூடிய மேற்கத்திய கதை என்று பேரி ஆஸ்போர்ன் ஏற்கனவே சொல்லியுள்ளார்.அப்படி இருக்கும்போது கமல்ஹாசன் ரசனை புரிந்த, ராஜா இசையமைப்பதே பொருத்தமாக இருக்கும் என்று இருவரின் ரசிகர்களும் எதிர்பார்ப்பாக உள்ளது.

அப்படி நடந்தால், கமல் அதைச் செய்தால், பாரெங்கும் ஏற்கனவே பரந்து விரிந்து வலம் வந்து கொண்டிருக்கும் நமது ராஜாவின் இசைக்கு மேலும் ஒரு அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். இளையராஜாவின் இசை மாயாஜாலத்தை ஹாலிவுட்டினரும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு உருவாகும்.

கமல்ஹாசனும், இளையராஜாவும் இணைந்து பணியாற்றி, இசை விருந்தளித்து எட்டு வருடங்கள் ஓடி விட்டன. இப்போது ஹாலிவுட் படம் மூலம் இருவரும் இணையும் வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏகமாகியுள்ளது.

கமல் செய்வாரா...?

 

'கவுதமுக்கு 19; சமந்தாவுக்கு 27 - எப்படி 'செட்' ஆகும்?'

Inside Story Samantha Withdrawal   

மணிரத்னம் இயக்கும் கடல் படத்திலிருந்து சமந்தா விலகிக் கொண்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் உண்மையில் சமந்தா விலகவில்லை என்றும், மணிரத்னம் மற்றும் ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் ஆகியோர்தான் அவரை வேண்டாம் என்று கூறிவிட்டதாக இப்போது செய்திகள் வெளியாகியுள்ளன.

இதற்கான காரணமாக சொல்லப்படுவது, சமந்தாவின் வயது. கதாநாயகனாக அறிமுகமாகும் கார்த்திக்கின் மகன் கவுதமுக்கு வயது 19. சமந்தாவுக்கோ வயது 27. இதனால் நாயகனை விட சமந்தா அதிக வயதுடையவராகத் தோற்றமளித்ததாகவும், அதனால் வேண்டாம் என சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது. படத்தில் சமந்தாவின் வேடத்துக்கு வயது 13 என்பது குறிப்பிடத்தக்கது.

சமந்தாவை வைத்து சில காட்சிகளை எடுத்த மணிரத்னமும் ஸ்ரீராமும், பின்னர் அவற்றைப் போட்டுப் பார்த்து திருப்தியடையாததாலேயே அவரை நீக்கிவிட்டதாகக் கூறுகிறார்கள்.

ஆனால் சமந்தாவோ, வழக்கம் போல கால்ஷீட் பிரச்சினையை காரணம் காட்டி விலகியதாகக் கூறுகிறார்.

எது உண்மை என்று அந்த 'கடலு'க்கே வெளிச்சம்!

 

அதிக சம்பளம் கேட்டதால் மோகன்லால் படத்திலிருந்து த்ரிஷா நீக்கம்!!

Trisha Drops From Mohan Lal Movie   

அதிக சம்பளம் கேட்டதால் மோகன்லாலின் மலையாளப் படத்திலிருந்து நடிகை த்ரிஷா நீக்கப்பட்டுள்ளார்.

சமர் படத்தில் விஷால் ஜோடியாக நடிக்கிறார் திரிஷா. பூலோகம், என்றென்றும் புன்னகை என மேலும இரு படங்கள் அவர் கைவசம் உள்ளன.

இந்நிலையில் மோகன்லால் ஜோடியாக மலையாள படமொன்றில் நடிக்க திரிஷாவுக்கு வாய்ப்பு வந்தது. அவர் இதுவரை மலையாளப் படத்தில் நடிக்கவில்லை. முன்பு அப்படி வந்த பல வாய்ப்புகளை த்ரிஷா கண்டுகொள்ளவே இல்லை.

இந்த நிலையில் மோகன்லால் படத்துக்கு திரிஷா பொருத்தமாக இருப்பார் என இயக்குநர் ஜோஷி கருதியதால் அவரை ஒப்பந்தம் செய்ய பேசியுள்ளனர்.

திரிஷாவும் நடிக்க ஒப்புக்கொண்டாராம். சம்பளம் பற்றி பேசியபோது திரிஷா ரூ. 40 லட்சம் கேட்டதாக கூறப்படுகிறது. மலையாள திரையுலகின் மார்க்கெட் சிறியது. 40 லட்சம் சம்பளம் கொடுத்தால் கட்டுப்படியாகாது என தயாரிப்பாளர் கருதினார். மம்முட்டி, மோகன்லாலுக்கே அதிகபட்சம் ரூ 1 கோடி வரைதான் சம்பளம் தரப்படுகிறது.

இதையடுத்து படத்தில் இருந்து திரிஷா நீக்கப்பட்டதாக மலையாள பட உலகில் செய்தி பரவியுள்ளது. ஆனால் திரிஷாவின் தாய் உமாவிடம் இதுகுறித்து கேட்டபோது, "திரிஷாவுக்கு மலையாளத்தில் இருந்து நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் அவரிடம் கால்ஷீட் இல்லை. அவர் மலையாளப் படம் எதிலும் நடிக்கவே இல்லையே," என்று ஒரே போடாகப் போட்டார்!!

 

ராம்சரண் தேஜா - உபாசனா திருமணம்.. விருந்துகள் ஆரம்பம்!

Ram Charan Marriage It Is Party Time

சிரஞ்சீவி மகனும் தெலுங்கின் முன்னணி நடிகருமான ராம்சரண் தேஜாவுக்கு வரும் வியாழக்கிழமை ஜூன் 14-ம் தேதி திருமணம் நடக்கிறது. அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டியின் பேத்தி உபாசனாவை அவர் மணக்கிறார்.

இரு பெரிய குடும்பத்து மணவிழா என்பதால், அதை இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் நடத்தத் திட்டமிட்டு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

இந்த திருமணத்தையொட்டி, மணமகன், மணமகள் வீட்டார் தத்தமது நெருங்கிய உறவுகள், நண்பர்களை அழைத்து பிரமாண்ட விருந்துகளை அளித்து வருகின்றனர்.

முதல் விருந்தை அளித்தவர் சிரஞ்சீவியின் மைத்துனரும், படத்தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த். மணமகனின் தாய்மாமன் இவர். ஹைதராபாத் புறநகரில் உள்ள பண்ணை வீட்டில் நடந்த இந்த விருந்தில் மத்திய அமைச்சர் ஜெய்பால்ரெட்டி கலந்து கொண்டார்.

மேலும் பிரபல நடிகர் நாகேஸ்வர ராவ் உள்பட முன்னணி நடிகர், நடிகைகள் பலர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள். அனைவரையும் சிரஞ்சீவி, அவரது மனைவி சுரேகா, பிரதாப்ரெட்டி ஆகியோர் வரவேற்று உபசரித்தனர்.

 

'இளவரசர் கமல்'... - ஓவியர் ஸ்ரீதர் தந்த பரிசு!

An Artist S Gift Prince Kamal

கமல் ஹாஸனை ஓவியங்களாக வரைந்து தள்ளியவர் பிரபல ஓவியர் ஏ பி ஸ்ரீதர். சமீபத்தில் இவரது ஓவியக் கண்காட்சியை, போயஸ் கார்டனில் திறந்து வைத்ததோடு, அவரை தன் சகோதரர் என்று கூறி பெருமைப்படுத்தினார்.

கமலின் இந்த பெருந்தன்மைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இன்னொரு ஓவியத்தை வரைந்துள்ளார் ஸ்ரீதர்.

இதில் கமல்ஹாஸனின் தந்தை சீனிவாசனை மன்னரைப் போலவும், கமல் ஹாஸனை இளவரசர் மாதிரியும் சித்தரித்துள்ளார்.

"கமல் சார் எனக்கு கண்ணன் மாதிரி. நான் அவருக்கு குசேலன். என்னால் அவருக்கு தர முடிந்ததெல்லாம் இதுபோன்ற கலைப் பரிசுதான்," என்று ஸ்ரீதர் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் கமல்ஹாஸனைச் சந்தித்த ஸ்ரீதர் இந்த ஓவியத்தை அவருக்கு அளித்தபோது, மிகவும் மகிழ்ந்துபோனாராம் கமல்!

காதல் இளவரசன் என்ற பழைய பட்டப் பெயர் நினைவுக்கு வந்திருக்குமோ!

 

ஹாலிவுட்டில் களமிறங்குகிறேன் : கமல்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஹாலிவுட் படத்தில் கதாநாயகனாக நடிப்பதுடன், அந்த படத்தை இயக்குகிறேன். அதற்கான வேலைகள் நடக்கின்றன," என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் கமல்ஹாஸன். சிங்கப்பூரில் சர்வதேச இந்திய திரைப்பட அகடமி விழா நடைபெறுகிறது (ஐஃபா). இந்த விழாவில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ள 'விஸ்வரூபம்' படத்தின் முன்னோட்டக் காட்சியுடன் சில ஆக்ஷன் காட்சிகளும் திரையிடப்பட்டன. இதே விழாவில் லார்ட் ஆப் தி ரிங்ஸ் பட தயாரிப்பாளர் பேரி ஆஸ்போன் கலந்து கொண்டார். இருவரும் சந்தித்துப் பேசினர். விழா முடிந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்திறங்கிய கமல்ஹாஸன் நிருபர்களிடம் பேசியது: எல்லாம் நல்லபடியாக வந்து கொண்டிருக்கிறது. ஐஃபா விழாவில் விஸ்வரூபம் படத்தின் காட்சிகளுக்கு மிகச் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படம் மூலம் ஹாலிவுட் படம் இயக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. தயாரிப்பவர் பேரி ஆஸ்போன். இவர் ஹாலிவுட்டில் பல வெற்றி படங்களை தயாரித்தவர் 'மேட்ரிக்ஸ்', `லாட் ஆப் தி ரிங்ஸ்', 'கிரேட் கேட்ஸ்பி' ஆகிய படங்களை அவர் தயாரித்துள்ளார். நானும், அவரும் சந்தித்து பேசி கொண்டிருந்தபோது அவரிடம் நான் 9 கதைகளை சொன்னேன். நான் மூன்றாவதாக சொன்ன கதை அவருக்கு பிடித்திருந்தது. இது சர்வதேச தரத்திலான கதை என்றும், எனவே இந்த கதையை ஹாலிவுட்டில் தயாரிக்க விரும்புவதாகவும் பேரி ஆஸ்போன் தெரிவித்தார்.


 

விஜய் - அமலா 'காதல்' முறிவு!

{image-11-amala-paul-vijay-love56-300.jpg tamil.oneindia.in}
கோடம்பாக்கத்தில் ரொம்ப நாளாக பேசப்பட்டு வந்த சமாச்சாரம் இயக்குநர் விஜய் - அமலா பால் காதல். விஜய் படங்களில் மட்டுமல்ல, விஜய் வீட்டு விசேஷங்களிலும் அமலா பால்தான் ஆஸ்தான நாயகி!

இருவரும் பெற்றோர் ஆசியுடன் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருப்பதாக செய்திகள் கூட வந்தன.

ஆனால் இப்போது இருவரும் பிரிந்துவிட்டார்களாம்.

சமீபத்தில் ஹைதராபாதில் நடந்த ராம்சரண் தேஜாவின் திருமணத்துக்கு தனியாகவே கிளம்பிப் போய்விட்டாராம் அமலா. இத்தனைக்கும் அவர் இருந்தது விஜய் இயக்கும் தாண்டவம் படப்பிடிப்பில்!

இன்னொரு பக்கம் விஜய்க்கு அவர் வீட்டில் பெண் பார்க்க ஆரம்பித்துவிட்டார்களாம். ஆக, விஜய் - அமலா பிரிவு என்பதை செய்தியாக்க இதைவிட வேறென்ன வேண்டும் என்கிறார்கள் கோடம்பாக்கம் ஏரியாவில்!

அமலா பால் தெலுங்கு சினிமாவே கதி என்று கிடப்பதன் பின்னணி கூட, விஜய்யுடனான உறவு முறிவுதான் என்கிறார்கள்.

ஏற்கெனவே ஒரு காதல் விவகாரம்தான் தமன்னாவை கோடம்பாக்கத்துக்கு வரவிடாமல் செய்துவிட்டது. இப்போது அந்தப் பட்டியலில் அமலாவும் சேர்ந்துவிட்டார் புோல!
 

நரைத்த தலை, பெருமளவு வெளுத்த தாடி, சோடாபுட்டி கண்ணாடி- அஜீத் 'லுக்' எப்பூடி!

Ajith S Get Up Vishnuvardhan Movie   

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஏஎம் ரத்னம் தயாரிப்பில் உருவாகும் பிரமாண்ட புதிய படத்தில் நடிக்கும் அஜீத்தின் தோற்றம் எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்வதில் ரசிகர்களுக்கு பெருத்த ஆர்வம்...

இதோ... இங்கே வெளியாகியிருப்பது போலத்தான் அவரது தோற்றம் இருக்குமாம்!

நரைத்த தலை, பெருமளவு வெளுத்த தாடி, சோடாபுட்டி கண்ணாடி... இதுதான் 'தல'யின் புதிய தோற்றம்.

ரஜினிக்குப் பின் தன் புறத்தோற்றம் பற்றி கவலையே இல்லாத நடிகர் என்ற நிலையிலிருந்து இன்னும் ஒரு படிமேலே போய்விட்டார் அஜீத். தான் நிஜத்தில் எப்படி இருக்கிறோமோ அதையே திரையிலும் காட்ட அவர் முயற்சிக்கிறார் இந்தப் படத்தில்.

ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி நடிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

அதே நேரம், சாதாரண ரசிகனின் மனநிலையைக் கருத்தில் கொண்டு, அவருக்கு சினிமாவுக்கே உரிய இன்னொரு கெட்டப்பும் இருக்கும் என்கிறார்கள்.

ஆனாலும் இப்போது படப்பிடிப்பில் இந்த சோடாபுட்டி கண்ணாடி தோற்றத்தில் உள்ள அஜீத்தைத்தான் பார்க்க முடிகிறது!

 

நிஜமாகவே உலக நாயகன் ஆன கமல் - ஹாலிவுட் படத்தை இயக்கி நடிப்பதாக அறிவிப்பு!

சென்னை: ஹாலிவுட் படத்தில் கதாநாயகனாக நடிப்பதுடன், அந்த படத்தை இயக்குகிறேன். அதற்கான வேலைகள் நடக்கின்றன," என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் கமல்ஹாஸன்.

சிங்கப்பூரில் சர்வதேச இந்திய திரைப்பட அகடமி விழா நடைபெறுகிறது (ஐஃபா). இந்த விழாவில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ள 'விஸ்வரூபம்' படத்தின் முன்னோட்டக் காட்சியுடன் சில ஆக்ஷன் காட்சிகளும் திரையிடப்பட்டன.

kamal announced his hollywood movie    | விஸ்வரூபம் படங்கள்   | விஸ்வரூபம் வால்பேப்பர்   | விஸ்வரூபம் ட்ரெய்லர்  
Close
 


இதே விழாவில் லார்ட் ஆப் தி ரிங்ஸ் பட தயாரிப்பாளர் பேரி ஆஸ்போன் கலந்து கொண்டார். இருவரும் சந்தித்துப் பேசினர்.

விழா முடிந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்திறங்கிய கமல்ஹாஸன் நிருபர்களிடம் பேசியது:

எல்லாம் நல்லபடியாக வந்து கொண்டிருக்கிறது. ஐஃபா விழாவில் விஸ்வரூபம் படத்தின் காட்சிகளுக்கு மிகச் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்தப் படம் மூலம் ஹாலிவுட் படம் இயக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. தயாரிப்பவர் பேரி ஆஸ்போன்.

இவர் ஹாலிவுட்டில் பல வெற்றி படங்களை தயாரித்தவர் 'மேட்ரிக்ஸ்', `லாட் ஆப் தி ரிங்ஸ்', 'கிரேட் கேட்ஸ்பி' ஆகிய படங்களை அவர் தயாரித்துள்ளார்.

நானும், அவரும் சந்தித்து பேசி கொண்டிருந்தபோது அவரிடம் நான் 9 கதைகளை சொன்னேன். நான் மூன்றாவதாக சொன்ன கதை அவருக்கு பிடித்திருந்தது. இது சர்வதேச தரத்திலான கதை என்றும், எனவே இந்த கதையை ஹாலிவுட்டில் தயாரிக்க விரும்புவதாகவும் பேரி ஆஸ்போன் தெரிவித்தார்.

இயக்கமும் நானே...

நாங்கள் இருவரும் இணைந்து பணிபுரியும் ஹாலிவுட் படத்தில், நானே கதாநாயகனாக நடித்து இயக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். முதலில் இவ்வளவு பெரிய பொறுப்புகளை நாம் எடுத்து கொள்ளலாமா? என்று தயங்கினேன். ஆனால் அவர் தொடர்ந்து வலியுறுத்தியதால் படத்தை நான் இயக்கி, நடிக்க சம்மதித்துள்ளேன்.

விஸ்வரூபத்தை இயக்கிய உங்களுக்கு ஆங்கிலப் படம் இயக்குவது பெரிய விஷயமல்ல என்று அவர் ஊக்கமளித்தார்.

இதுதவிர என் சொந்த பட நிறுவனமான ராஜ்கமல் பிலிம்சுடனும் இணைந்து படம் தயாரிக்க பேரி ஆஸ்போன் தயாராக இருக்கிறார். நான் ஹாலிவுட்டுக்கு வர வேண்டும் என்றும், தொடர்ந்து ஆங்கில படங்களில் நடித்து இயக்க வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார்.

பெருமை

நேற்று அவர் சிங்கப்பூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது, கமல்ஹாசனின் சினிமா, இலக்கியம், வரலாறு பற்றிய அவருடைய ஞானம் வியக்க வைக்கிறது என்று கூறினார். கமல்ஹாசன் மிகச் சிறந்த கலைஞர் என்று பாராட்டினார். அதை கேட்பதற்கு பெருமையாக இருந்தது.

இத்தனை விஷயங்களுக்கும் வித்திட்டது 'விஸ்வரூபம்' படம்தான். நாங்கள் சந்தித்தது தற்செயலாகத்தான். விஸ்வரூபம் படத்தின் 'சவுண்ட் மிக்ஸிங்' வேலைகளை நான் சிங்கப்பூரில் செய்து கொண்டிருந்தபோது, பேரி ஆஸ்போன் என்னை வந்து சந்தித்தார். என்ன படம் செய்கிறீர்கள்? என்று என்னை கேட்டார்.

மூன்றுமுறை பார்த்தார்...

நான் 'விஸ்வரூபம்' படத்தின் சில காட்சிகளை அவருக்கு காட்டினேன். அதை பார்த்த அவர் என் மகளையும் அழைத்து வந்து இன்னொரு முறை பார்க்கலாமா? என்று என்னிடம் கேட்டார். நான் சம்மதம் சொன்னதும் அவர் மகளுடன் வந்து 2-வது முறையாக விஸ்வரூபம் படத்தை பார்த்தார்.

அவருடைய பங்குதாரரை அழைத்து வந்து 3-வது முறையாக விஸ்வரூபம் படத்தை பார்த்தார். 3 முறை அவர் முழுமையாக அந்த படத்தை பார்த்து ரசித்தார்.

சிங்கப்பூரில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் விஸ்வரூபம் படத்தின் `டிரெய்லரை' வெளியிட்டபோது பேரி ஆஸ்போன் முன்கூட்டியே வந்து அரங்கில் அமர்ந்து கொண்டார். ஹாலிவுட் படத்திற்கான கதையை நான் எழுத ஆரம்பித்து விட்டேன். மாதத்தில் 7 நாட்கள் பேரி ஆஸ்போன் எனக்காக ஒதுக்கி விட்டார்.

தேவர் மகன் ஸ்டைலில்...

இந்த படம் தொடர்பான சில புத்தகங்களை படிக்க அவருக்கு நான் சிபாரிசு செய்து இருக்கிறேன். நாங்கள் இருவரும் இணைந்து உருவாக்கும் `ஹாலிவுட்' படம் தேவர் மகன், அபூர்வ சகோதரர்கள் பாணியில் ஜனரஞ்சகமான படமாக இருக்கும். உலக தரத்துடன் இந்த படம் உருவாகும். அதற்கான வேலைகள் தொடங்கி விட்டன," என்றார்.

Posted by: Shankar