நடிகை வனிதாவுக்கு ஐகோர்ட் கண்டனம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நடிகை வனிதாவுக்கு ஐகோர்ட் கண்டனம்
1/5/2011 11:04:01 AM
நடிகை வனிதா, உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எலிப்பிதர்ம ராவ், அரிபரந் தாமன் ஆகியோர் 'குழந்தை விஜய் ஸ்ரீஹரியை இரண்டு வாரத் துக்குள் நடிகை வனிதா­விடம் ஒப்படைக்க வேண்டும்' என ஆகாஷுக்கு உத்தர விட்டனர். இந்நிலையில், ஆகாஷின் வக்கீல் இதய துல்லா, உயர்நீதிமன்ற நீதிபதிகள் எலிப்பிதர்ம ராவ், அரிபரந்தாமன் ஆகியோர் முன்பு நேற்று ஆஜராகி, 'குழந்தை விஜய் ஸ்ரீஹரியை வனிதாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற காலக் கெடு நாளை யுடன் முடி வடைகிறது.
உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மனு, உச்சநீதிமன்றத்தில் நாளை (இன்று) விசாரணைக்கு வருகிறது. எனவே, இந்த கெடுவை மேலும் மூன்று வாரம் நீட்டிக்க வேண்டும்' என்றார். இதை கேட்ட நீதிபதிகள், வனிதா தரப்பின் கருத்தை கேட்டுத்தான் முடிவு செய்ய முடியும் என்று கூறி வழக்கை பிற் பகலுக்கு தள்ளி வைத் தனர். அதன்படி அதே நீதிபதிகள் முன்பு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது வனிதா நேரில் ஆஜராகி, "காலக் கெடுவை நீடிக்க கூடாது" என்றார். இதை கேட்ட நீதிபதிகள், "இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது பத்திரிகையாளர்களை அழைத்துக்கொண்டு ஏன் சென்னை விமான நிலையம் போனீர்கள்? இது நீதிமன்ற அவமதிப்பு செயல் இல்லையா? தாத்தாவிடம் இருந்த குழந்தையை பிடுங்கியதால், அவன் கதறி அழுத காட்சியை டிவியில் பார்த்தோம். குழந்தையின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? யோசிக்க வேண்டாமா? கோர்ட் உத்தரவின் காலக்கெடு முடியும் வரை காத்திருக்க வேண்டாமா? நீங்கள் கூறுவது ஏற்க முடியாது. நாங்கள் விதித்த காலக்கெடுவை மேலும் 2 வாரத்துக்கு நீடிக்கிறோம்'' என்று உத்தரவிட்டனர்.


Source: Dinakaran
 

மீண்டும் ரிலீஸ் ஆகிறது ‘தா’

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
மீண்டும் ரிலீஸ் ஆகிறது 'தா'
1/5/2011 10:59:07 AM
சமுத்திரக்கனி உதவியாளர் சூரியபிரபாகர் இயக்கிய படம் 'தா'. புதுமுகங்கள் ஸ்ரீஹரி, நிஷா நடித்திருந்தனர். ராஜேஷ் உத்தமன் தயாரித்த இந்த படம், கடந்த மாதம் ரிலீஸ் ஆனது. விமர்சகர்களின் பாராட்டைப்பெற்ற இந்த படம், சரியான தியேட்டர்கள் கிடைக்காததால் ஹிட்டாகவில்லை. இதையடுத்து இந்த படத்தை மீண்டும் ரிலீஸ் செய்கின்றனர். 'படம் பார்த்தவர்கள் புதிய காட்சிகளாக இருக்கிறது என்று பாராட்டினர். இதனால் அனைவரும் படத்தை பார்க்கும் பொருட்டு இம்மாத இறுதியில், படத்தை மீண்டும் ரிலீஸ் செய்கிறோம்' என்றார் இயக்குனர் சூரிய பிரபாகர்.


Source: Dinakaran
 

ஹீரோ ஆனார் இயக்குனர் ராம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஹீரோ ஆனார் இயக்குனர் ராம்
1/5/2011 10:55:08 AM
ஜீவா, அஞ்சலி நடித்த 'கற்றது தமிழ்' படத்தை இயக்கியவர் ராம். இப்போது 'தங்க மீன்கள்' படத்தை இயக்கி, ஹீரோவாக அறிமுகமாகிறார். போட்டோன் கதாஸ், ஆர்.எஸ் இன்போடெயின்மென்ட் இணைந்து படத்தை தயாரிக்கிறது. ஒளிப்பதிவு, அரபிந்த் சாரா. இசை, யுவன்சங்கர்ராஜா. பாடல்கள், நா.முத்துக்குமார். ஹீரோவாக நடிப்பது குறித்து ராம் கூறியதாவது:
டெல்லியிலுள்ள நேஷனல் ஸ்கூல் ஆப் டிராமா கல்லூரியில், 40 நாட்கள் நடிப்புப் பயிற்சி பெற்றேன். பிறகு 'கற்றது தமிழ்' மூலம் இயக்குனரானேன். 'தங்க மீன்கள்' கதையை உருவாக்கியபோது, அதில் அமைந்த கேரக்டருக்கு நானும், என் தோற்றமும் பொருத்தமாக இருந்ததால் ஹீரோவாக நடிக்கிறேன்.
ஒரு கெட்ட மகன், நல்ல அப்பா ஆன கதை. முக்கிய கேரக்டரில் நடிக்க 8 வயது சிறுமி தேவை. பல மாதங்கள் தேடி, கடைசியில் சென்னையை சேர்ந்த சாதனாவை தேர்வு செய்தேன். ஹீரோயின் மற்றும் இதர கேரக்டர்களில் நடிப்பவர்கள் அனைவருமே புதுமுகங்கள். 18&ம் தேதி நாகர்கோயிலில் ஷூட்டிங் தொடங்குகிறது.


Source: Dinakaran
 

வெளிநாட்டு தமிழர்களுக்காக இசை ஆல்பம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
வெளிநாட்டு தமிழர்களுக்காக இசை ஆல்பம்
1/5/2011 10:56:47 AM
'வம்சம்' படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் தாஜ்நூர். தற்போது 'போராளி', 'எத்தன்', 'ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி', 'மல்லுக்கட்டு' உட்பட பல படங்களுக்கு இசை அமைத்து வருகிறார். இதற்கிடையே வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்காக, தமிழ் இசை ஆல்பம் ஒன்றை உருவாக்கி வருகிறார்.
தமிழ் மொழியின் பெருமை, தமிழ்நாட்டின் புகழ், தமிழ் மக்களின் ஒற்றுமை, உலக தமிழர்களின் ஏக்கம் இவற்றை பிரதிபலிக்கும் வகையில் இந்த ஆல்பம் உருவாகி வருகிறது. இதற்கான பாடலை வைரமுத்து எழுதியுள்ளார். எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சித்ரா, அனுராதா ஸ்ரீராம் உட்பட 15 முன்னணி பாடகர்கள் பாடி உள்ளனர். இந்த பாடலுக்கான படப்பிடிப்பு தமிழ்நாடு முழுவதும் நடந்து வருகிறது. இதன் பணிகள் முடிந்ததும் இதன் வெளியீட்டு விழா, வெளிநாடு ஒன்றில் பிரமாண்டமாக நடத்தப்பட இருக்கிறது என தாஜ்நூர் தெரிவித்தார்.


Source: Dinakaran
 

யாருக்கும் போட்டியில்லை :ரம்யா நம்பீசன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
யாருக்கும் போட்டியில்லை : ரம்யா நம்பீசன்
1/5/2011 11:01:52 AM
எடையை குறைத்து ஸ்லிம்மாகியிருக்கிறார் ரம்யா நம்பீசன். சென்னை ஸ்டூடியோ ஒன்றில் போட்டோசெஷனில் இருந்தவரிடம், "என்ன திடீரென்று போட்டோசெஷன்?' என்றபோது அதற்கான காரணத்தை சொன்னார். "சினிமாவுக்கு வரும் முன்பு வாய்ப்பு தேடுவதற்காக போட்டோசெஷன் நடத்தினேன். பிறகு படத்தின் போட்டோக்கள்தான் வெளிவந்தது. கிராமத்து பெண் கேரக்டர், குடும்ப பாங்கான கேரக்டர் படங்களாக அமைந்ததால் அதுபோன்ற போட்டோக்கள்தான் வந்து கொண்டிருந்தது. அதோடு கொஞ்சம் வெயிட் போட்டுவிட்டதாக, தோழிகள் சொன்னார்கள். அதனால் கடந்த 3 மாதமாக, பயிற்சிகள் செய்து எடையை குறைத்து ஸ்லிம்மாகியிருக்கிறேன். புது ரம்யா எப்படி இருக்கிறேன் என்று காட்டுவதற்காக இந்த போட்டோசெஷன்''
கவர்ச்சியாக நடிக்க மறுக்கீறீர்களாமே?
நடிப்பில் கவர்ச்சி என்ற ஒரு பகுதியை பிரிப்பதில் உடன்பாடில்லை. கேரக்டருக்கு என்ன தேவையோ அதை செய்வதுதான் நடிப்பு. சில கேரக்டர்களை என்னால் செய்ய முடியாது. குறிப்பாக மிக குறைந்த உடையில் நடிக்க வேண்டிய கேரக்டரை மறுத்துவிடுவேன். அதற்காக கவர்ச்சியாக நடிக்க மறுத்து விட்டதாக கூறமுடியாது. அப்படி நடிக்க வேண்டிய கேரக்டருக்கு நான் பொருத்தமானவள் இல்லை.
'இளைஞன்' படத்தில் மீரா ஜாஸ்மினுக்கு போட்டியாக நடித்துள்ளீர்களாமே?
நான் யாருக்குமே போட்டியில்லை. அதுவும் மீரா சீனியர் நடிகை. நேஷனல் அவார்ட் வாங்கியவர். அவருடன் நடிப்பதே பெருமை என்று நினைக்கிறபோது போட்டியாக எப்படி நினைப்பேன்? இப்போது மட்டுல்ல, எப்போதும் யாருக்கும் போட்டியாக இருக்க மாட்டேன்.
மலையாள நடிகைகள் தமிழில் நடிக்க அதிகம் ஆர்வம் காட்டுகிறீர்களே?
மற்றவர்கள் பற்றி எனக்குத் தெரியாது. நான் அப்படியில்லை. இப்போதும் மலையாளத்தில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். 'டிராபிக்' என்ற படம் வெளிவர இருக்கிறது. அடுத்து இரு படங்களில்  ஒப்பந்தமாகியிருக்கிறேன். தமிழில் இளைஞனுக்கு பிறகு 'குள்ளநரி கூட்டம்' என்ற படத்தில் விஷ்ணு ஜோடியாக நடிக்கிறேன். இந்தப் படத்தில் கொஞ்சம் காமெடியாக நடிக்க முயற்சிக்கிறேன். நடிப்புக்கு மொழி முக்கியமில்லை. நல்ல கேரக்டர் எங்கு கிடைக்கிறதோ அங்கு நடிப்பேன்.


Source: Dinakaran
 

நல்ல கதை இல்லையா?வீட்டில் சும்மா இருக்கலாம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நல்ல கதை இல்லையா? வீட்டில் சும்மா இருக்கலாம்
1/4/2011 11:59:20 AM
'வல்லக்கோட்டைÕ படத்தில் நடித்த ஹரிபிரியா கூறியது: சேரன் நடிக்கும் ‘முரண்’ படத்தில் பேஷன் டிசைனராக நடிக்கிறேன். நடிப்புக்கு தீனி போடும் வேடம். இந்த ஆண்டில் திரைக்கு வருகிறது. இது நான் நடிக்கும் 3வது படம். தெலுங்கில் 'பில்லா ஜமீன்தார்Õ என்ற படத்தில் நடிக்கிறேன். கன்னட படத்தில்தான் எனது நடிப்பு வாழ்க்கை தொடங்கியது. ஆனால் இப்போது கைவசம் ஒரு கன்னட படம் கூட இல்லை. நான் கதையைத்தான் நம்புகிறேன். நல்ல கதைதான் அழகான திரைக்கதையாக அமையும். தமிழ், தெலுங்கு மொழிகளில் மாறுபட்ட கதை அம்சங்கள் வருகிறது. ஆனால்
கன்னடத்திலிருந்து அப்படிப்பட்ட கதை கொண்ட படங்கள் எனக்கு வரவில்லை. நிறைய பேர் கதை சொல்கிறார்கள். ஆனால் வித்தியாசமானது மட்டும்தான் எனது தேர்வு. ஸ்கிரிப்ட் சரியில்லாத படங்களில் நடிப்பதைவிட வீட்டில் சும்மா உட்கார்ந்திருக்கலாம். அதனால் எனக்கு கவலை இல்லை. எனக்கு வரும் வாய்ப்புகளை கண்மூடித்தனமாகவும் ஒப்புக்கொள்வதில்லை. இவ்வாறு ஹரி பிரியா கூறினார்.


Source: Dinakaran
 

ஆயிரத்தில் ஒருவன் 2ம் பாகத்தில் நடிக்கவில்லை!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஆயிரத்தில் ஒருவன் 2ம் பாகத்தில் நடிக்கவில்லை!
1/4/2011 11:45:27 AM
'ஆயிரத்தில் ஒருவன்’ 2ம் பாகத்தில் நடிக்கவில்லை என்றார் தனுஷ். அவர் கூறியது: ஒரே நேரத்தில் 2க்கு அதிகமான படங்களில் நடிப்பது நல்ல அனுபவம். நடிப்பில் நிறைய வ¤ஷயங்களையும் இயக்குனர்களின் மாறுபட்ட டேஸ்ட்டையும் அறிய முடிகிறது. அடுத்து செல்வராகவன் இயக்கும் 'இரண்டாம் உலகம்’ என்ற படத்தில் நடிக்கிறேன். ஆண்ட்ரியா ஜோடி. இப்படம் 'ஆயிரத்தில் ஒருவன்Õ படத்தின் 2ம் பாகம் என்கிறார்கள். அது உண்மையல்ல. ஹரியுடன் பணியாற்றும் 'வேங்கை’ ரிலீஸுக்கு பிறகு இப்படம் வெளிவரும். மீண்டும் அண்ணன் செல்வராகவனுடன் பணியாற்றவது சந்தோஷமாக உள்ளது. தனது ஒவ்வொரு படத்திலும் அவர் என்னை புது மாதிரியாக காட்டுவார். அதே போல் ‘இரண்டாம் உலகம்’ படத்திலும் புது தனுஷை ரசிகர்கள் பார்க்கலாம்.


Source: Dinakaran
 

குறையும் வாய்ப்புகள் சோகத்தில் தமன்னா!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
குறையும் வாய்ப்புகள் சோகத்தில் தமன்னா!
1/4/2011 3:00:15 PM
மைனா படத்தின் ஹிட் பிறகு உயரத்திற்கு வந்துள்ளார் அமலா பால். இப்போது கோலிவுட்டில் அவருக்குத்தான் செம கிராக்கி ஏற்பட்டுள்ளது. அதேபோல விஜய்யுடன் வேலாயுதம், ஜெயம் ரவியுடன் எங்கேயும் காதல் படத்தில் இணைந்துள்ள ஹன்சிகாவுக்கும் பெரும் கிராக்கியாகியுள்ளது. மேலும், அமலா மற்றும் ஹன்சிகா கவர்ச்சியாக நடிக்க சற்றும் வெட்கப்படுவதோ, தயங்குவதோ கிடையாதாம். இதனால்தான் அவர்களுக்கு பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. மறுபக்கம் அமலா பால் பிசியாகி வருகிறார். அவரைத் தேடி பிரபல நடிகர்களின் படங்களும் ஓடி வர ஆரம்பித்துள்ளன. இதனால் வருகிற வாய்ப்புகளை வளைத்துப் போட ஆரம்பித்துள்ளார் அமலா. இதனால் தமன்னாவிற்க தேடி வரும் சில பட வாய்ப்புகள் குறைந்துவிட்டதாம். தனக்கு வர வேண்டிய சில வாய்ப்புகள் அமலாவைத் தேடி போனதால் அப்செட் ஆகி விட்டாராம் தமன்னா. இந்தப் போட்டியை சமாளிக்கவும், தனது நிலையை ஸ்திரமாக்கவும் அவர் சில திட்டங்களுடன் தீவிரமாகியுள்ளதாக கூறப்படுகிறது.


Source: Dinakaran
 

ஜன.5முதல் தூங்கா நகரம் இசை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஜன.5 முதல் தூங்கா நகரம் இசை
1/4/2011 4:10:39 PM
தயாநிதி அழகிரியின் தூங்கா நகரம் பேஷாகத் தயாராகிவிட்டது. கே.எஸ்.ரவிக்குமாரின் அஸோஸியேட்டான கௌரவ் இயக்கும் இந்தப் படம் பசங்க புகழ் விமல், பரணி, நிஷாந்த், அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர். அஞ்சாதே படத்துக்கு இசையமைத்த சுந்தர்.சி.பாபுதான் தூங்கா நகரத்துக்கும் இசையமைத்திருக்கிறார். தூங்கா நகரம் படம் மதுரை பின்னணியை கொண்டது என்பதை பு‌ரிந்து கொள்ளலாம். வரும் 5ஆம் தேதி படத்தின் பாடல்களை வெளியிட உள்ளனர்.


Source: Dinakaran
 

இன்னொரு மகனையும் ஹீரோவாக்கும் டி.ஆர்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இன்னொரு மகனையும் ஹீரோவாக்கும் டி.ஆர்
1/4/2011 4:05:25 PM
தன்னுடைய மூத்த மகன் சிம்புவை கரை சேர்த்த டி.ராஜேந்தர், தற்போது இன்னொரு மகனையும் ஹீரோவாக்கும் கோதாவில் இறக்க முயிற்சி எடுத்து வருகிறார். டி.ஆ‌ரின் புதிய படமான ஒரு தலைக்காதல் அடுத்த மாதம் தொடங்குகிறது. இதில் டி.ஆர். நாயகன். இந்தப் படத்தையடுத்து தனது 2வது மகன் குறளரசன் நடிக்கும் படத்தை டி.ஆர். இயக்குகிறார். குறளரசன் பல படங்களில் நடித்திருந்தாலும், அதெல்லாம் குழந்தை நட்சத்திரமாக திரையில் தோன்றியவைதான். இனி டி.ஆர். இயக்கத்தில் நடிப்பது ஹீரோவாக.


Source: Dinakaran