நிச்சயம் இப்படி ஒரு நிலை வரும் என்று சிவகார்த்திகேயன் நினைத்திருப்பாரோ இல்லையோ, நிச்சயம் தனுஷ் எதிர்ப்பார்த்திருப்பார்.
சினிமாவில் அவர் வாய்ப்புக் கொடுத்து வளர்த்துவிட்ட சிவகார்த்திகேயன் படம், இப்போது அவரது படத்துடனே மோதவிருக்கிறது.
வரும் காந்தி ஜெயந்தியன்று வெளியாகவிருக்கும் தனுஷின் விஐபி 2 படத்துக்கு மெயின் போட்டியே சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன்தானாம்.
வேலையில்லா பட்டதாரி 2 விறுவிறுவென தயாராகிவிட்டது. ஆனால் எப்போதோ தயாராகிவிட்ட ரஜினிமுருகன், வெளியாவது தள்ளித் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. முதலில் இந்தப் படம் மே இறுதியில் வெளியாகும் என்றார்கள். அடுத்து ஜூன், ஜூலை என தள்ளிப் போனது. ஜூலையில் வெளியான மாரியுடன் ரஜினிமுருகன் மோதும் என்றனர்.
இப்போது அந்த மோதல் தள்ளிப் போடப்பட்டுள்ளது. அக்டோபர் 2-ம் தேதி வெளியாகும் வேலையில்லா பட்டதாரி 2 படத்துடன் ரஜினிமுருகன் மோதுகிறது!