நடிகை சோனம் கபூர் கழட்டி வைத்த ரூ. 5 லட்சம் வைர நெக்லஸ் மாயம்!

மும்பை: இந்தி நடிகை சோனம் கபூர் தனது வைர நெக்லஸைக் காணவில்லை என மும்பைப் போலீசில் புகார் அளித்துள்ளார்.

பிரபல இந்தி நடிகை சோனம் கபூர். இவர் மும்பை ஜூகு 7-வது சாலையில் உள்ள பங்களா வீட்டில் தனது தாய் சுனிதாவுடன் வசித்து வருகிறார்.

நடிகை சோனம் கபூர் கழட்டி வைத்த ரூ. 5 லட்சம்  வைர நெக்லஸ் மாயம்!

கடந்த 4-ந்தேதி சோனம் கபூர் பாந்திராவில் நடந்த விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். பின்னர், அதிகாலை 2 மணியளவில் வீடு திரும்பிய சோனம், தனது அறையில் இருந்த மேஜையில் தான் அணிந்திருந்த வைர நகைகளைக் கழற்றி வைத்துள்ளார்.

அந்த நகைகளை மும்பையில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றிடம் ஒப்பந்த அடிப்படையில், நடிகை சோனம் கபூர் வாங்கியிருந்தார். அவர் அணிந்து கொள்வதற்காக நகைக்கடை நிர்வாகம் 6 பெட்டிகளில் பல லட்சம் மதிப்புள்ள வைர நகைகளை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மறுநாள் காலை சம்பந்தப்பட்ட நகைக்கடை விற்பனை பிரதிநிதிகள் நகைகளை வாங்கிச் செல்வதற்காக சோனம் கபூரின் வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது நகைகளை எடுத்து கொடுப்பதற்காக நடிகை சோனம் கபூர் மேஜையை திறந்தபோது, அதில் வைர நெக்லஸ் ஒன்று காணாமல் போயிருந்தது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ.5 லட்சம் என்று கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த சோனம் கபூர், தனது வைர நெக்லஸைக் காணவில்லை என ஜூகு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடிகை சோனம் கபூரின் வீட்டு வேலைக்காரர்களிடம் விசாரணை நடத்தினார்கள். மேலும் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் அன்றைய தினம் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். ஆனால் வேலைக்காரர்கள் யாரும் அன்றைய தினம் நடிகை சோனம் கபூரின் அறைக்கு செல்வது போன்ற காட்சிகள் எதுவும் பதிவாகவில்லை.

இதனால், விருந்து நிகழ்ச்சியில் சோனம்கபூர் தனது நெக்லஸைத் தவற விட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே, விருந்து நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் மற்றும் அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

காணாமல் போன வைர நெக்லஸின் மதிப்பு ரூ. 5 லட்சம் எனக் கூறப்படுகிறது.

 

20ம் தேதி ஊழிப் பெருங்காற்றாய் தியேட்டர்களை மிரள வைக்க வருகிறது ”சண்டமாருதம்”!

20ம் தேதி ஊழிப் பெருங்காற்றாய் தியேட்டர்களை மிரள வைக்க வருகிறது ”சண்டமாருதம்”!  

நான்கு வருடங்களுக்குப் பிறகு சரத்குமார் தனி ஹீரோவாக இந்தப் படத்தில் நடித்துள்ளார். இதில் இவருக்கு இரண்டு வேடங்கள். இப்படத்திற்கு சரத்குமார் கதை எழுத அதற்கு ராஜேஷ் குமார் திரைக்கதை அமைத்துள்ளார். இப்படத்தினை ஏ.வெங்கடேஷ் இயக்கியுள்ளார்.

20ம் தேதி ஊழிப் பெருங்காற்றாய் தியேட்டர்களை மிரள வைக்க வருகிறது ”சண்டமாருதம்”!

ஓவியா, மீரா நந்தன் என இரு ஹீரோயின்கள். இவர்களுடன் ராதிகா சரத்குமார், தம்பி ராமையா, சிங்கம் புலி, டெல்லி கணேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர். ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ளார்.

20ம் தேதி ஊழிப் பெருங்காற்றாய் தியேட்டர்களை மிரள வைக்க வருகிறது ”சண்டமாருதம்”!

ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் தந்து எடுத்திருக்கும் இந்தப் படத்தை வரும் 20 ஆம் தேதி வெளியிடுகின்றனர். மேஜிக் பிரேம்ஸ் சார்பில் சரத்குமார், ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளனர்.

20ம் தேதி ஊழிப் பெருங்காற்றாய் தியேட்டர்களை மிரள வைக்க வருகிறது ”சண்டமாருதம்”!

சண்டமாருதம் என்றால் ஊழிப்பெருங்காற்று என்று அர்த்தமாம். அப்படி ஒரு திகில் கலந்த நகைச்சுவை படமாக சண்டமாருதம் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர் படக்குழுவினர்.

 

அப்பா மயில்சாமி காமெடிதான்.. ஆனா மகன் ஹீரோவாயிட்டாரே!

சென்னை: காமெடி மட்டுமின்றி குணச்சித்திர வேடங்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் திறமையான நடிகர் என்ற பெயரைப் பெற்றவர் நடிகர் மயில்சாமி. தற்போது இவரது மகன் அன்பு தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார்.

இன்னும் பெயரிடப்படாத அப்படத்தை பட்டியல் சேகர் தயாரிக்கிறார். இவர் நடிகர் கிருஷ்ணா மற்றும் இயக்குனர் விஷ்ணுவர்தனின் தந்தையாவார்.

அப்பா மயில்சாமி காமெடிதான்.. ஆனா மகன் ஹீரோவாயிட்டாரே!

இப்படம் குறித்து பட்டியல் சேகர் கூறியதாவது :-

இப்படம் முழுக்க முழுக்க காமெடி பொழுது போக்கு படமாக உருவாக இருக்கிறது. இப்படத்தை ஜான்சன் என்னும் அறிமுக இயக்குனர் இயக்கவுள்ளார்.

வேலையில்லாமல் ஜாலியாகவும் அதிர்ஷ்டசாலியாகவும் ஊர் சுற்றும் வாலிபன் பிராமணப் பெண் மீது காதல் வயப்படுகிறான் என்பதை மையக்கருவாக வைத்து சுவாரஸ்யமாக எடுக்கவுள்ளோம். இதில் அன்பு கதாநாயகனாவும், பாப்ரி கோஷ் கதாநாயகியாகவும் நடிக்க இருக்கிறார்கள். மேலும் இவர்களுடன் கிரண், ஜெயஸ்ரீ, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 16ம் தேதி தொடங்கவுள்ளது. சென்னையை சுற்றியே இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த உள்ளோம் என்றார்.

இந்தப் படத்துக்காக அன்புவின் பெயரை மாற்ற திட்டமிட்டுள்ளாராம் பட்டியல் சேகர். நல்ல பெயராக பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம்.

 

'ரஜினி முருகன்' தியேட்டர் வெளியீட்டு உரிமையை வாங்கியது ஸ்டுடியோ கிரீன்

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை இயக்கிய பொன்ராம், நடித்த சிவகார்த்திகேயன் - சூரி கூட்டு சேர்ந்திருக்கும் இரண்டாவது படமான ரஜினி முருகன் தியேட்டர் வெளியீட்டு உரிமையை ஸ்டுடியோ கிரீன் வாங்கியுள்ளது.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். டி.இமான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தை இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

'ரஜினி முருகன்' தியேட்டர் வெளியீட்டு உரிமையை வாங்கியது ஸ்டுடியோ கிரீன்

இந்தப் படத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள 'என்னம்மா.. இப்படி பண்றீங்களேம்மா..' பாடல் பற்றித்தான் கோலிவுட் முழுக்க பேச்சாக உள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகிறது. படத்தின் வெளியீட்டு உரிமையை ஈராஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. வருகிற ஏப்ரலில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்குகளின் உரிமையை மட்டும் ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் பெற்றுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இந்த நிறுவனமே இப்படத்தை விநியோகம் செய்யவுள்ளது.

 

திருமணம் கிடையாது.. மக்கள் பணி செய்ய காத்திருக்கிறேன் - நமீதா புது விளக்கம்

திருமணம் செய்து கொள்ளும் எண்ணமே எனக்கு கிடையாது. மக்கள் பணி செய்யக் காத்திருக்கிறேன், என்று திருமணம் கிடையாது.. மக்கள் பணி செய்ய காத்திருக்கிறேன் - நமீதா புது விளக்கம்  

அதற்கு விளக்கம் அளித்துள்ளார் நமீதா.

அதில், "நான் திருமணம் செய்து கொள்வது பற்றி யாருக்கும் பேட்டி அளிக்கவில்லை. தானாகப் பரவி வரும் செய்திகளுக்கு நான் பொறுப்பல்ல. திருமணம் என்ற பேச்சுக்கே என் மனதில் இடமில்லை.

மக்கள் பணியில் என்னை இணைத்துக் கொள்ளவே எண்ணம். அதற்கான தருணத்துக்காக காத்திருக்கிறேன்," என்று கூறியுள்ளார்.

அரசியலில் குதிக்கப் போவதாக கடந்த மக்களவைத் தேர்தலின் போதே கூறி வருகிறார் நமீதா என்பது நினைவிருக்கலாம்.

 

நாகார்ஜுனா - கார்த்தி படம்... அமலா க்ளாப் அடித்து தொடங்கி வைத்தார்!

நாகார்ஜுனாவும் கார்த்தியும் இணைந்து நடிக்கும் புதிய படத்தை நடிகை அமலா க்ளாப் அடித்து தொடங்கி வைத்தார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் இந்தப் படம் உருவாகிறது. தெலுங்கில் காஷ்மோரா என தலைப்பிடப்பட்டுள்ளது.

நாகார்ஜுனா - கார்த்தி படம்... அமலா க்ளாப் அடித்து தொடங்கி வைத்தார்!

கார்த்தி நடித்த சில படங்கள் தெலுங்கிலும் ரீமேக்காகி வெற்றி பெற்றிருக்கின்றன.

கார்த்தி-நாகர்ஜூனா நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பை அன்னப்பூர்ணா ஸ்டுடியோவில் நேற்று நாகர்ஜூனாவின் மனைவியும், நடிகையுமான அமலா கிளாப் அடித்து தொடங்கி வைத்தார். நாகார்ஜுனாவின் மகன்கள் நாக சைதன்யா, அகில் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நாகார்ஜுனா - கார்த்தி படம்... அமலா க்ளாப் அடித்து தொடங்கி வைத்தார்!

இப்படத்தை பிவிபி சினிமாஸ் தயாரிக்கிறது. வம்சி பிடிபாலி இயக்குகிறார்.

இப்படத்தின் பிற நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் விரைவில் வெளியாக உள்ளது.

 

தம்ஸ் அப் விளம்பர தூதரானார் விஷால்

தம்ஸ் அப் குளிர்பானத்தின் விளம்பரத் தூதராக ஒப்பந்தமாகியுள்ளார் நடிகர் விஷால்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்கிறார் விஷால். படத் தயாரிப்பிலும் பிஸியாக உள்ளார்.

தம்ஸ் அப் விளம்பர தூதரானார் விஷால்

இப்போது சுசீந்திரன் இயக்கத்தில் புதிய படம் தயாரித்து நடித்து வருகிறார்.

நட்சத்திர கிரிக்கெட் சென்னை அணியின் தலைவராக இருந்தவர், இந்த ஆண்டு அதிலிருந்து விலகிக் கொண்டார்.

இப்போது இந்தியாவின் பிரபல குளிர் பானங்களில் ஒன்றான தம்ஸ் அப்பின் விளம்பரத் தூதராக ஒப்பந்தமாகியுள்ளார்.

தம்ஸ் அப் இந்தியாவில் நீண்ட காலம் பிரபலமாகவும், சந்தையில் அதிக ஆதிக்கத்தையும் செலுத்திவரும் கோலா பானம் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் விஷால் இந்த குளிர்பானத்துக்காக நடித்த விளம்பரப் படங்கள் வெளியாக உள்ளன.

 

மே இறுதிக்குள் விஜய்யின் புலி?

இந்த கோடை விடுமுறையில் வெளியாகவிருக்கும் பெரிய படங்கள் என்று பார்த்தால், கமல் படம் தவிர வேறு எதுவும் இல்லை. கமலின் உத்தம வில்லன் ஏப்ரல் மாதம் வெளியாகிறது.

அந்தப் படத்துக்குப் பிறகு பெரிய படம் என்று பார்த்தால் சூர்யாவின் மாஸ்தான். ஆனால் வெளியீட்டுத் தேதி முடிவாகவில்லை.

மே இறுதிக்குள் விஜய்யின் புலி?

இந்த சூழலில் சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புலி படம்தான் இப்போதைக்கு பெரிய படம். புலியை மே மாதமே வெளியிட்டுவிட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் தீவிரமாக உள்ளனர். காரணம், தமிழ் சினிமாவின் பெரிய சீஸன் கோடை விடுமுறைதான். மே மாதம் வெளியிட்டால் ஒரு மாத காலத்துக்கு வசூலை அள்ளலாம்.

எனவே மே இறுதிக்குள் படத்தை வெளியிட தீவிரமாக வேலை பார்த்து வருகின்றனர். இன்னொரு பக்கம் இந்தப் படம் ஜூலையில்தான் வெளியாகும் என்று கூறி வருகின்றனர்.