ஹவுஸ்புல் 2-ல் குத்தாட்டம்: அடுத்த ரவுண்டுக்கு தயாராகும் கரிஷ்மா!


திருமணத்திற்குப் பிறகு நடிப்புக்கு குட்பை சொல்லியிருந்த கரிஷ்மா கபூர் தற்போது ஹவுஸ்புல் 2 படத்தில் குத்துப்பாட்டுக்கு ஆடவிருக்கிறார்.

நடிகை கரிஷ்மா கபூர் தனது நீண்ட நாள் நண்பர் சஞ்சய் கபூரைத் திருமணம் செய்த பிறகு நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டார். அவர்களுக்கு சமைரா என்ற மகளும், கியான் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் கரிஷ்மா கபூர் தனது கணவரை விவாகரத்து செய்யப்போதாக செய்திகள் வெளியாகின.

இத்தனை நாட்கள் பாலிவுட்டை விட்டு விலகி இருந்த கரிஸ்மா தற்போது விக்ரம் பட்டின் 'டேஞ்ஜரஸ் இஷ்க்' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதயைடுத்து கரிஷ்மாவின் நீண்ட கால நண்பரான சஜித் நாதியத்வாலாவின் ஹவுஸ்புல் 2 என்ற படத்தில் குத்துப் பாட்டுக்கு ஆட சம்மதித்துள்ளார்.

முதலில் இந்த பாட்டிற்கு ஆட ராணி முகர்ஜியிடம் தான் கேட்டிருந்தனர். ராணி மறுக்கவே அந்த வாய்ப்பு கரிஷ்மாவுக்கு வந்துள்ளது.
 

சக்சேனா மீண்டும் புழல் சிறையிலடைப்பு!


சென்னை: மிரட்டல் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த சன் பிக்சர்ஸ் சக்சேனாவின் இரண்டு நாள் போலீஸ் காவல் முடிந்ததால் மீண்டும் சிறையிலடைக்கப்பட்டார்.

நுங்கம்பாக்கத்தை சேர்ந்த டிஜிட்டல் கிராபிக்ஸ் கலைஞர் அருள்மூர்த்தி நுங்கம் பாக்கம் போலீசில் ஒரு புகார் கொடுத்தார்.

அதில், "சிந்தனை செய் என்ற படத்தை அம்மா ராஜசேகர் என்பவர் தயாரித்து இருந்தார். இந்த படத்தில் எனக்கு கிராபிக்ஸ் செய்யும் பணி கொடுக்கப்பட்டது. இதற்காக ரூ.22 லட்சம் சம்பளம் தருவதாக கூறினார்கள்.

அதில் ரூ.11 லட்சம் மட்டுமே கொடுத்தனர். மீதி பணத்தை திருப்பி கேட்டபோது அம்மா ராஜசேகர் மற்றும் படத்தின் வினியோகஸ்தர் சன்பிக்சர்ஸ் சக்சேனா, அவரது உதவியாளர் அய்யப்பன் ஆகியோர் மிரட்டினர்," என்று கூறி இருந்தார்.

இது தொடர்பாக நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து சக்சேனா, அய்யப்பனை கைது செய்தனர். இந்த வழக்கில் 2 நாட்கள் காவலில் எடுத்து சக்சேனா மற்றும் அய்யப்பனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களது போலீஸ் காவல் இன்றுடன் முடிந்தது.

இதைத்தொடர்ந்து இன்று மதியம் 1 மணிக்கு இருவரும் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை ஆகஸ்ட் 5-ந் தேதி வரை ஜெயிலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் மீண்டும் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
 

கிசு கிசு - நடிகையின் எஸ்எம்எஸ் கலாட்டா

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
நடிகையின் எஸ்எம்எஸ் கலாட்டா

7/27/2011 2:55:34 PM

நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

பிசின் நடிகை எஸ்எம்எஸ் பிரியையாம். நட்பை வளக்கிறதும் முறிப்பதும் எஸ்எம்எஸ்லதானாம். பாலிவுட்ல நீல் நிதின் ஹீரோவுடனான நட்பை எஸ்எம்எஸ்லேயே முறிச்சிக்க¤ட்டாராம்... முறிச்சிக்கிட்டாராம்... அதுக்கு பதிலா பாப்புலர் ஹீரோ ஒருத்தரை நட்பாக்கிட்டாராம். நடிகையோட இந்த எஸ்எம்எஸ் கலாட்டா பற்றித்தான்
பாலிவுட்ல பேச்சா கிடக்காம்... கிடக்காம்...

மலையாள மனோஜான வில்லன் நடிகரை தல நடிக்கும் பார்ட் 2 படத்துல நடிக்க கேட்டாங்களாம். சமீபத்துல நடிகரை ஐதராபாத்துக்கு இயக்கம் வரச் சொன்னாராம்... சொன்னாராம்... நடிகரும் ஃபிளைட் பிடிச்சி, பொறுப்போட ஏர்போர்ட்டுக்கு வந்திறங்கினாராம். ஆனா அவரை கூட்டிட்டு போக வர்றதா சொன்ன ஆள் வரலையாம்... வரலையாம்... உர்ரான நடிகரு, அடுத்த ஃபிளைட்லேயே ஊருக்கு திரும்பிட்டாராம்... திரும்பிட்டாராம்...

தன்னோட சொத்து சம்பந்தமான உண்மையான விவரங்களை சொல்ல மம்மூ நடிகரு முன்வந்திட்டாரு. ஆனா லால் நடிகரு முரண்டு பிடிக்கிறாராம்... பிடிக்கிறாராம்... இதனால லால்
நடிகரை தொடர்ந்து விசாரிக்க ஐடி ஆபிசருங்க முடிவு பண்ணியிருக்காங்களாம்... பண்ணியிருக்காங்களாம்...




 

பிரபு தேவாவின் டபுள் டென்ஷன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பிரபு தேவாவின் டபுள் டென்ஷன்

7/27/2011 2:54:14 PM

பிரபு தேவா கூறியது: 'எங்கேயும் காதல்’ படத்தை தொடர்ந்து 'வெடி’ படத்தை இயக்கி வருகிறேன். தமிழகத்தை சேர்ந்த ஒரு குடும்பம் கொல்கத்தாவில் வாழ்கிறது. ஹீரோ விஷால் அங்கு ஒருவரை தேடுகிறார். இதன் பின்னணியில் கதை செல்கிறது. கொல்கத்தா, கதைக்கு ஏற்ற லொகேஷன் மட்டுமல்ல இங்கு படமாக்கப்பட்ட படங்கள் ஹிட்டாகி உள்ளது. விஷாலுடன், சமீரா ரெட்டி, விவேக் முதன்முறையாக இணைகின்றனர். இப்படத்துக்கு நான் நடனம் அமைக்கவில்லை. வரும் ஆகஸ்ட் மாதம் முதல் அக்ஷய் குமார் நடிக்கும் 'ரவுடி ரத்தோர்’ பட ஷூட்டிங் தொடங்க உள்ளது. மீண்டும் எப்போது நடிக்கப்போகிறீர்கள்? என்கிறார்கள். படத்தை இயக்கும் வேலையே எனக்கு நிறைய டென்ஷனை கொடுக்கிறது. இதில் நடிக்கவும் தொடங்கினால் டபுள் டென்ஷனுக்கு ஆளாகிவிடுவேன்.

 

படப்பிடிப்புக்கு டிமிக்கி: நடிகை மீரா ஜாஸ்மினுக்கு நீதிமன்றம் சம்மன்!


கோழிக்கோடு: கொடுத்த கால்ஷீட்படி படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் டிமிக்கி கொடுத்த நடிகை மீரா ஜாஸ்மினுக்கு கேரள நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

ஸ்வப்னமாலிகா என்ற மலையாளப் படத்தில் நடிக்க தயாரிப்பாளர் தேவராஜன் என்பவரிடம் ரூ 5 லட்சம் அட்வான்ஸ் பெற்றுள்ளார் நடிகை மீரா ஜாஸ்மின்.

ஆனால் சொன்னபடி அந்தப் படப்பிடிப்புக்கு போகவில்லை அவர். இதனால் கோபமடைந்த அவர் கோழிக்கோடு முதன்மை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மீராவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இதில் மீரா ஜாஸ்மினுக்கு சம்மன் அனுப்பியது கோர்ட்.

இதனை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார் மீரா ஜாஸ்மின். தேவராஜன் தன்னிடம் சொன்ன கதை வேறு, இப்போது எடுப்பது வேறு என்றும் எனவே இந்த சம்மனை முதலில் ரத்து செய்ய வேண்டும் என்றும் மீரா கேட்டுக் கொண்டார்.

மீராவின் மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், அவரது தரப்பு வாதத்தை ஏற்கவில்லை. வரும் 8-ம் தேதிக்குள் இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது.

எனவே வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி கோழிக்கோடு கோர்ட்டில் ஆஜராகிறார்.

இப்போதைய நிலவரப்படி மீரா ஜாஸ்மின் மலையாளப் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். தமிழில் பிரசாந்துடன் மம்பட்டியான் மற்றும் ஆதிநாராயணா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
 

தமிழ் சினிமாவில் திருப்பம்: ரூ 2014 கோடிக்கு யுடிவியை வாங்கும் டிஸ்னி!!


இந்திய பொழுதுபோக்குத் துறையில் முக்கிய நிறுவனமாகத் திகழும் யுடிவியை ரூ 2014 கோடி கொடுத்து வாங்குகிறது உலக அளவில் பிரபல நிறுவனமான வால்ட் டிஸ்னி.

யுடிவி நிறுவனத்தில் ஏற்கெனவே டிஸ்னி 50.44 பங்குகளை வாங்கியுள்ளது. இந்த நிலையில் மீதியுள்ள பங்குகளை தலா ரூ 1000 வீதம் வாங்க முடிவு செய்து ஒப்பந்தமும கையழுத்தானது.

யுடிவியின் புரமோட்டர்களான ரோனி ஸ்க்ரூவாலா மற்றும் அவரது குடும்பத்தினர் வசமுள்ள பங்குகளையும் சேர்த்து வாங்கிக் கொள்கிறது டிஸ்னி.

இதன் மூலம் புதிதாக $ 454 மில்லியன் டாலர் அதாவது ரூ 2014 கோடியை முதலீடு செய்கிறது வால்ட் டிஸ்னி.

யுடிவி இந்தியில் மட்டுமல்லாது தமிழிலும் பலமாக காலூன்றி வரும் ஒரு நிறுவனமாகும். இப்போது டிஸ்னி வசம் முற்றாக இந்த நிறுவனம் செல்வது, தமிழ் சினிமாவில் ஆரோக்கியமான போக்கை உருவாக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

டிஸ்னி மூலம் தமிழ் சினிமாவுக்கான சர்வதேச மார்க்கெட் பெரிதாகவும் பிரகாசமான வாய்ப்புள்ளது.

ஏற்கெனவே யுடிவி வெளியிட்ட தெய்வத் திருமகள் நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டுள்ளது. அடுத்து வேட்டை, வழக்கு எண் 18/9 மற்றும் கும்கி படங்களின் உரிமையையும் யுடிவி பெற்றுள்ளது. இந்தப் படங்கள் இனி வால்ட் டிஸ்னி பேனரில் வெளியாகும் எனத் தெரிகிறது.

யுடிவியின் நேரடித் தயாரிப்பில் உருவாகும் முகமூடி படமும் வால்ட் டிஸ்னி தயாரிப்பாக வெளியாகிறது.

ஏற்கெனவே வார்னர் பிரதர்ஸ் தனது துணை நிறுவனம் மூலம் நேரடி தமிழ் படங்களைத் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

கொலை மிரட்டல்... கலாநிதி மாறன் மீது புதிய புகார்!


ராமநாதபுரம்: ரூ.15 லட்சம் பெறுமானமுள்ள பொருள்களை அபகரித்து தனக்கு போனில் கொலை மிரட்டல் விடுத்ததாக சன் குழும தலைவர் கலாநிதி மாறன் மீது ராமநாதபுரத்தைச் சேர்ந்த கேபிள்டிவி ஆபரேட்டர் புகார் கூறியுள்ளார்.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த நாகராஜன் என்பவர், ராமநாதபுரம் எஸ்பி அனில்குமாரிடம் கலாநிதி மாறன் மற்றும் சுமங்கலி கேபிள் ஆபரேட்டர்கள் இருவர், ஏசி குமாரவேல் ஆகிய நால்வர் மீது இன்று காலை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

அந்தப் புகார் மனுவில், "நான் 1998 முதல் கேபிள் ஆபரேட்டராக இந்தப் பகுதியில் தொழில் செய்துவந்தேன்... 2008ல் இங்கே ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்க ரூ. 15 லட்சம் செலவில் தேவையான சாதனங்களை வாங்கி வைத்திருந்தேன்.

இந்நிலையில், கலாநிதி மாறன் தூண்டுதலில் என்னை மதுரை மதிச்சியம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீஸார், என்னை மிரட்டினர். அந்தக் கட்டுப்பாட்டு அறையை மூடிவிடு, இல்லை என்றால் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் சிலவற்றை உன் பேரில் எழுதி உள்ளே தள்ளிவிடுவேன் என்று ஏசி குமாரவேல் மிரட்டினார். அதைத் தொடர்ந்து, கலாநிதி மாறன் என்னை ஃபோனில் மிரட்டினார்.

என்னிடமிருந்து வலுக் கட்டாயமாக ரூ. 15 லட்சம் பெறுமான பொருள்களை அபகரித்துக் கொண்டு, என்னை மேலும் தொழிலில் ஈடுபட முடியாமல் தடுத்து விட்டனர். கடந்த 4 வருடங்களாக நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன்.

என்னை ஃபோனில் மிரட்டி மன உளைச்சலுக்கு உள்ளாக்கிய கலாநிதி மாறன், சுமங்கலி கேபிள் விஷன் விநியோகஸ்தர்கள் சரவணன் மற்றும் கமலக்கண்ணன், ஏசி குமாரவேல் ஆகியோர் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், கேபிள் தொழிலில் ஈடுபட்டிருந்த சுமார் 150க்கும் மேற்பட்டோர் சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனத்தினாரால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்டுள்ளனர், அல்லது காணாமல் போயுள்ளனர். அவர்கள் குறித்த விசாரணையை போலீஸார் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று புகார் அளித்துள்ளார்.
 

விஜய் படப்பிடிப்பில் பெரும் ரகளை... கேரவனை அடித்து நொறுக்கிய ரசிகர்கள்


சென்னை: நடிகர் விஜய்யின் நண்பன் படப்பிடிப்பில் ரசிகர்கள் திடீரென்று புகுந்த ரகளை செய்தனர். கேரவனை அடித்து நொறுக்கினர்.

இந்தியில் ஹிட்டான அமீர்கானின் 3 இடியட்ஸ் படம் தமிழில் நண்பன் என்ற பெயரில் தயராகிறது. விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கின்றனர். எந்திரனுக்குப் பிறகு ஷங்கர் இயக்கும் படம் இது.

சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு சில தினங்களாக படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இன்றைய படப்பிடிப்பின்போது 200 பேர் திடீரென அந்தக் கல்லூரிக்குள் நுழைந்துவிட்டனர். அவர்கள் விஜய் உள்ளிட்ட நடிகர்களை பார்க்க முண்டியடித்தனர்.

நிலைமையை உணர்ந்து விஜய், ஜீவா போன்றோர் ரசிகர்களைச் சந்தித்து கையசைத்து விட்டுச் சென்றார்கள்.

ஆனால் கூட்டத்தினர் திரும்பிச் செல்லவில்லை. அவர்கள் படப்பிடிப்பு அரங்குக்குள் நுழைந்து நடிகர்களின் கைகளை பிடித்து இழுக்க துவங்கினர். இதனால் படப்பிடிப்பை ஷங்கரால் நடத்த இயலவில்லை.

ரசிகர்களிடம் கலைந்து செல்லும்படி வேண்டினார். அவர்கள் போகவில்லை. அரங்குகளை சேதப்படுத்தி ரகளை செய்தனர். கேரவன் கண்ணாடிகளையும் உடைக்க ஆரம்பித்தனர். அவர்களின் இந்த நடவடிக்கையால் படப்பிடிப்பு குழுவினர் அதிர்ச்சியானார்கள்.

உடனடியாக போலீசார் வரவழைக்கப்பட்டனர். பின்னர் லேசான தடியடி நடத்தி ரசிகர்களை வெளியேற்றினர். இந்த சம்பவத்துக்கு பிறகு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்.
 

அஜீத்தை அதிர வைத்த விமலா ராமன்!


'இரண்டாவது ஹீரோயின் வாய்ப்பா... வேண்டவே வேண்டாம்!' - அஜீத்தை அதிர வைத்த விமலா ராமன்

அஜீத்தின் பில்லா 2 படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடிக்க மறுத்துவிட்டார் நடிகை விமலா ராமன்.

அஜித் நடிப்பில் சக்ரி இயக்கும் படம் 'பில்லா 2'. ரூ 35 கோடியில் மும்பை நிறுவனம் தயாரிக்கிறது.

சில தினங்களுக்கு முன் ஹைதராபாதில் ஷூட்டிங் தொடங்கியது. தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் ஹீரோயினாக மும்பை மாடல் ஹூமா குரேஷி நடிக்கிறார்.

இன்னொரு ஹீரோயின் வேடத்துக்கு விமலா ராமனிடம் பேசினார்கள். அவர் உடனே ஒப்புக் கொண்டதாக தகவல் தெரிவித்தனர்.

ஆனால் உண்மையில், 'பில்லா 2'-வில் இரண்டாவது ஹீரோயினாக நடிக்க தனக்கு விருப்பமில்லை என விமலா ராமன் மறுத்து விட்டது இப்போது தெரிய வந்துள்ளது.

தெலுங்கில் முன்னணி நடிகை பட்டியலில் இருக்கும் விமலா ராமனுக்கு இந்தியில் தனி ஹீரோயின் வாய்ப்பு வந்துள்ளது. இந்த நேரத்தில் கும்பலோடு ஒருவராக நடிப்பது, மற்ற வாய்ப்புகளை பாதிக்கும் என பயப்படுகிறாராம் விமலா.

அவரது இந்த முடிவு அஜீத்தின் படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து விமலா ராமன் கூறுகையில், "தெலுங்கில் பிஸியாக உள்ளேன். ஹிந்தியிலும் ஒரு படத்தில் ஒப்பந்தமாகிவிட்டேன். இப்போதைக்கு வேறு பட வாய்ப்புகளை ஏற்கும் நிலையில் இல்லை. தமிழில் பின்னர் நல்ல வாய்ப்பு வந்தால் நடிக்கத் திட்டமிட்டுள்ளேன். அஜீத் படத்தில் எனக்கு முக்கியத்துவம் இல்லை. இதற்கான கால்ஷீட்டும் என்னிடம் இல்லை ," என்றார்.
 

உழைப்பெல்லாம் வீணா போகுதே! - கவலையில் மேக்னா


கஷ்டப்பட்டு உழைச்சு நடிச்ச கிருஷ்ண லீலை படம் வெளியாகாதது வருத்தமாக உள்ளது. என்னைப் போன்ற பலரின் உழைப்பும் வீணாகப் போகிறதே, என கவலையுடன் தெரிவித்தார் நடிகை மேக்னா ராஜ்.

ஜீவன், மேக்னாராஜ் ஜோடியாக நடித்த படம் கிருஷ்ணலீலை ஸெல்வன் இயக்கியுள்ளார். இப்படம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் ரிலீஸ் ஆகவில்லை என ஷெல்வன் புகார் கூறினார். படத்தை வெளியிட வலியுறுத்தி தயாரிப்பாளர் வீட்டு முன் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் அறிவித்தார்,

இப்போது படத்தின் நாயகி மேக்னா ராஜும் தனது வருத்தத்தை வெளிப்படையாக கூற ஆரம்பித்துள்ளார்.

அவர் கூறுகையில், "கிருஷ்ண லீலை படம் சிறப்பாக வந்துள்ளது. அப்படம் இன்னும் வெளியாகாமல் முடங்கி இருப்பது வருத்தமாக உள்ளது. இயக்குனர் நடிகர், நடிகை தொழில்நுட்ப கலைஞர்கள் உழைப்பெல்லாம் இதனால் வீணாகிக் கொண்டிருக்கிறது. இந்தப் படம் சீக்கிரம் வர வேண்டும். இதில் நடித்த, பணியாற்றிய அத்தனை பேருக்குமே பிரேக் தரும் இந்தப் படம் என்று எல்லோருமே எதிர்பார்க்கிறார்கள்.

உண்மையில் எனக்கு கிருஷ்ணலீலைதான் முதல் படம். எனவே இந்தப்படம் விரைவில் வரவேண்டும் என்று விரும்புகிறேன். இயக்குனருக்கும் அந்த படத்தை வைத்துதான் புதுப்பட வாய்ப்புகள் வரும் எனவே உடனே ரிலீஸ் செய்ய வேண்டும்," என்றார்.

கிருஷ்ண லீலை படத்தை கே பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

'தேர்தலில் சொன்னதை செயலில் காட்டி விட்டார் ஜெ!' - கலைப்புலி சேகரன் ஐஸ்!


சென்னை: தரமான, யு சான்றிதழ் பெற்ற நேரடி தமிழ் படங்களுக்கு மட்டுமே வரிவிலக்கு கொடுத்ததன் மூலம், முதல்வர் ஜெயலலிதா தேர்தலில் சொன்னதை செயலில் காட்டி விட்டார் என்று திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் 'கலைப்புலி' ஜி.சேகரன் கூறியிருக்கிறார்.

சென்னை-காஞ்சீபுரம்-திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் `கலைப்புலி' ஜி.சேகரன் விடுத்துள்ள அறிக்கை:

"எந்த ஒரு செயலும், தொழிலும் காட்டாற்று வெள்ளம் போல் கரையற்ற-முறையற்ற வழியில் சென்றால், அதன் விளைவுகள் சிறப்பாகவும் செம்மையாகவும் இருப்பதில்லை. கட்டுப்பாடு என்ற ஒரு கரைக்குள் தெளிந்த ஆறாக ஓடும்பொழுதுதான் தன்னை சார்ந்து உயிர்வாழும் ஜீவராசிகளுக்கும், இயற்கை நிகழ்வுகளுக்கும் நல் ஆதாரமாக, உயர்வாக, வளர்ச்சியாக அமையும்.

சரியான படத்துக்கு வரி விலக்கு

அதைப்போல் திரைப்பட தொழிலில் அனைவரும் குழந்தைகளுடன் பார்க்க வேண்டிய வகையில் தமிழ் தலைப்புகளுடன், தமிழ் கலாசாரம் சார்ந்த 'யு' சான்றிதழ் பெற்ற தமிழ் நேரடி திரைப்படங்களுக்கு வரிவிலக்கும், மற்ற சான்றிதழ் பெற்ற படங்களுக்கு நிலுவையில் உள்ள வரியான மாநகராட்சி மற்றும் 'ஏ' கிரேட் நகராட்சி பகுதிகளுக்கு 15 சதவீதமும், மற்ற நகராட்சி, ஊராட்சி பகுதிகளுக்கு 10 சதவீதமும் அறிவித்த தமிழக முதல்வருக்கு, இதுதொடர்பாக ஏற்கனவே கோரிக்கை விடுத்த சென்னை காஞ்சீபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கம் எல்லையில்லா நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.

சொன்னதைச் செய்தார்

ஒட்டுமொத்தமாக அனைத்து திரைப்படங்களுக்கும் அபரிமிதமான வரி வரப்போகிறது என்ற செவி வழி செய்திகளை பொய்யாக்கி, என்றும் நன்மைக்கும், நல்லவைக்கும் பக்க துணையாக இருந்து திரைப்பட துறைக்கு நல்வழி காட்டுவேன் என்று தேர்தல் பிரசாரத்தின்போது சொன்னதை செயலில் காட்டிய முதல்வர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

சிறிய தயாரிப்பாளர்கள், சிறிய வினியோகஸ்தர்கள், சிறிய திரையரங்க உரிமையாளர்கள் வாழ்வு நலம்பெற 'டிஜிடல் ஹோம்' தியேட்டருக்கு அனுமதி அளித்து, அவர்கள் வாழ்க்கையில் மேலும் ஒளிபெற செய்ய கேட்டுக்கொள்கிறோம்.''

இவ்வாறு அந்த அறிக்கையில் ஜி.சேகரன் கூறியிருக்கிறார்.
 

பாபா ராம்தேவை கல்யாணம் பண்ணுவேன்! - ராக்கி சாவந்த் அதிரடி


மும்பை: பிரபல கார்ப்பரேட் சாமியார் பாபா ராம்தேவை திருமணம் செய்ய விரும்புவதாக கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் அதிரடி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பாலிவுட்டின் பிரபல கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த். அதிரடிக்குப் பெயர் போனவர். இவர் ஏற்கனவே டெலிவிஷன் மூலம் சுயவரம் நடத்தி மாப்பிள்ளை தேர்வு செய்து பரபரப்பு ஏற்படுத்தியவர். கனடாவில் தன் மாமியார் வீடு வரை போய் வந்த அவர், பின்னர் அவரை திருமணம் செய்து கொள்ளாமல் துரத்திவிட்டார்.

மும்பையில் நேற்று நடந்த நடன நிகழ்ச்சியொன்றுக்கு ராக்கி சாவந்தை அழைத்து இருந்தனர். அரங்கில் ஏராளமான ரசிகர்கள் கூடி இருந்தனர். அவர்கள் மத்தியில் ராக்கி சாவந்திடம் சினிமா சம்பந்தமாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

ராக்கியும் சளைக்காமல் பதில் அளித்தார். திடீரென ஊழலுக்கு எதிராக உண்ணா விரத போராட்டங்கள் நடத்தி வரும் யோகா சாமியார் பாபா ராம்தேவ் பற்றி கேள்வி வந்தது. அப்போது ராம்தேவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக திடீரென பதில் அளித்து கூட்டத்தினரை அதிர வைத்தார்.

ராக்கி சாவந்த் மேலும் கூறுகையில், " பாபா ராம்தேவை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் மற்றவர்களுக்குதான் பாபா. எனக்கு அப்படியில்லை. அவரைப் பார்க்க வேண்டும் என ஆசையாக உள்ளது. எப்போதும் அவர் கூடவே சீடராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அவர் என்னை மணக்க சம்மதித்தால், சந்தோஷமாக உடனே திருமணம் செய்து கொள்வேன்," என்றார்.

ஏதாவதொரு வழியில், சாமியாரை மாமியார் வீட்டுக்கு அனுப்பாம விடமாட்டாங்க போல!
 

கோலிவுட்டில் கோட்டை கட்ட காஜல் அகர்வால் ஆசை!


தமிழில் நம்பர் 1 இடத்தைப் பிடிக்க ஆசை என்று தெலுங்கு முன்னணி நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு திரையுலகை ஆண்டு வரும் நடிகைகளில் இரண்டு பேரை குறிப்பிட்டுச் சொல்லலாம். அவர்கள் இலியானாவும், காஜல் அகர்வாலும் தான்.

தற்போது இந்த இருவருமே தமிழ் படங்களில் ஒப்பந்தமாகியுள்ளனர். இலியானா ஷங்கரின் நண்பன் படத்தில் நடித்து வருகிறார். காஜல் கேவி ஆனந்த் படத்தில் சூரியாவுடன் நடிக்கவிருக்கிறார்.

காஜல் அகர்வால் அவ்வப்போது கோலிவுட்டில் வந்து தலையைக் காட்டிச் செல்வது வழக்கம். தற்போது அம்மணிக்கு தமிழில் நம்பர் 1 நடிகையாகும் ஆசை வந்துள்ளது. ஏற்கனவே தெலுங்கில் அருந்ததி மூலம் பிரபலமான அனுஷ்கா தற்போது தமிழில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

அதே வரிசையில் தானும் சேர நினைக்கிறார் காஜல். தமிழில் தனக்கும் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்த படம் என்று அவர் நினைப்பது நான் மகான் அல்ல படத்தை. இப்போது இந்தியில் சிங்கம் படத்தில் நடித்துள்ள காஜல், தன்னைத் தென்னிந்திய நடிகை என்று அழைப்பதையே விரும்பாதவர். இருந்தாலும் தென்னிந்தியப் படங்கள்தான் தொடர்ந்து அவருக்கு கை கொடுத்து வருகின்றன.

இதைப் புரிந்து கொண்டோ என்னவோ தமிழ், தெலுங்கில் தொடர்ந்து நடிக்க விரும்புகிறார் காஜல். அதிலும் தமிழ் மீது இப்போது அவருக்கு தனி பாசமே வந்துள்ளதாக தெரிகிறது. தமிழில் தள்ளாட்டத்தில் இருக்கும் முதலிடத்தைப் பிடிக்க முடிவு செய்துள்ள காஜல், இதற்காக என்னென்ன முயற்சிகள் எடுக்கப் போகிறார் என்பதை கோலிவுட்டினர் ஆர்வமாக எதிர்பார்க்க ஆரம்பித்துள்ளனர்.

ஹைதராபாத்தில் இருந்து விரைவில்சென்னைக்கு குடிபெயர்வார் காஜல் என எதிர்பார்க்கலாம்.
 

'காம்ப்ரமைஸ்'... சக்சேனா மீதான இரு வழக்குகள் வாபஸ்!!


சென்னை: சன் பிக்சர்ஸ் சக்சேனா மீது போடப்பட்ட வழக்குகளில் இரண்டை வாபஸ் பெற்றுக் கொண்டனர் சேலம் விநியோகஸ்தர்கள் இருவர்.

மேலும் சன் பிக்சர்ஸுடன் தாம் சமாதானமாகப் போக விரும்புவதாகவும், இந்தப் பிரச்சினையில் தாங்கள் சமாதானமாகிவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சக்சேனா மீது முதல் புகார் கொடுத்தவர் டிஎஸ் செல்வராஜ். இவர் தீராத விளையாட்டுப் பிள்ளை சேலம் விநியோகஸ்தர். இவர் தொடர்ந்து ரூ 83 லட்சம் மோசடி வழக்கில்தான் முதல்முறையாக சக்சேனா கைது செய்யப்பட்டார்.

இவரைத் தொடர்ந்து அதே சேலம் பகுதியைச் சேர்ந்த சண்முகவேலு என்ற விநியோகஸ்தரும் மோசடி வழக்கு தொடர்ந்தார் சக்சேனா மீது.

இந்த இருவருமே இப்போது வழக்குகளை வாபஸ் பெற்றுக் கொள்வதாக நீதிமன்றத்துக்கு மனு கொடுத்துவிட்டனர். சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கும் தங்களுக்கும் சமாதானம் ஏற்பட்டுவிட்டதால், இனி இந்த வழக்கு தேவையில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்னும் மூன்று வழக்குகள் சக்சேனா மீது பாக்கியுள்ளன. இந்த வழக்குகளில் ஒன்று பண மோசடி குறித்தது. இரண்டு வழக்குகள் மிரட்டல், ஆள் கடத்தல் தொடர்பானவை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சக்சேனாவை குண்டர் சட்டத்தில் தள்ள போலீஸ் முயற்சித்ததாக புகார் கூறப்பட்ட நிலையில், இந்த வழக்கு வாபஸ் விவகாரம் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

தமிழ், தெலுங்கு படங்களை குறிவைக்கும் இந்தி சினிமா

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news

தமிழ், தெலுங்கு படங்களை குறிவைக்கும் இந்தி சினிமா

7/27/2011 10:43:43 AM

தமிழ், தெலுங்கில் ஹிட்டான படங்களை ரீமேக் செய்யும் போக்கு இந்தியில் தற்போது அதிகரித்துள்ளது. பிறமொழியில் ரிலீசான படங்களை வேறு மொழியில் ரீமேக் செய்வது வழக்கமான ஒன்றுதான். பொதுவாக, 90 சதவிகித கன்னடப் படங்கள், தமிழ், தெலுங்கு, இந்தி பட ரீமேக்காகவே இருக்கின்றன. இதே பார்முலாவை இந்தி சினிமா இப்போது கையில் பிடித்துள்ளது. அதாவது தமிழ், தெலுங்கில் ஹிட்டான படங்களை ரீமேக் செய்வதற்கு இந்தி தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். சமீபத்தில் இப்படி ரீமேக் செய்யப்பட்ட படங்கள் ஹிட்டானதால் இந்த மோகம் இன்னும் அதிகரித்துள்ளது.

சூர்யா, அனுஷ்கா நடிப்பில் ஹிட்டான 'சிங்கம்', அதே பெயரில் இந்தியில் தயாராகியுள்ளது. இந்தப் படத்துக்கான ஓபனிங் வழக்கமான படங்களை விட அதிகரித்துள்ளது. இதே போல 'காவலன்' படம் சல்மான் நடிப்பில் 'பாடிகார்ட்' என்ற பெயரில் இந்தியில் ரீமேக் ஆகிறது. இந்தப் படத்துக்கும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதே போல ஏழு படங்கள் இந்தியில் ரிலீஸ் ஆக காத்திருக்கின்றன. தெலுங்கிலிருந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்ட 'உத்தமபுத்திரன்', இந்தியில் 'ரெடி' என்ற பெயரில் ரிலீஸ் ஆகி வசூலை அள்ளியுள்ளது. அடுத்து தெலுங்கில் 'கிக்'காகவும் தமிழில் 'தில்லாலங்கடி'யாகவும் வெளியான படம், சல்மான் கான் நடிப்பில் விரைவில் ஆரம்பமாக உள்ளது. இதே போல, ஜெயம் ரவி, ஜெனிலியா நடித்த 'சந்தோஷ் சுப்ரமணியம்' (தெலுங்கில் பொம்மரிலு) ஹர்மான் பவேஜா, ஜெனிலியா நடிப்பில் 'இட்ஸ் மை லைஃப்' என்ற பெயரில் தயாராகிறது. கார்த்தி நடித்த 'சிறுத்தை' (தெலுங்கில் விக்ரமார்க்குடு) அக்ஷய்குமார் நடிப்பில் இந்தியில் 'ரவுடி ரத்தோர்' என்ற பெயரில் உருவாகிறது. இதை பிரபுதேவா இயக்க உள்ளார்.

இதே போல சூர்யா, ஜோதிகா நடிப்பில் ஹிட்டான 'காக்க காக்க' படம் ஜான் ஆபிரகாம், ஜெனிலியா நடிப்பில் 'ஃபோர்ஸ்' என்ற பெயரில் தயாராகிறது. தமிழில் ஹிட்டான 'காதல்' படத்தை இந்தி இயக்குனர் விக்ரமாதித்யா மோத்வான், இயக்க உள்ளார். இதுதவிர, 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் இந்தி ரீமேக்கை, கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி வருகிறார். ''ஏற்கனவே ஹிட்டான படங்களை ரீமேக் செய்வதால், ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை தயாரிப்பாளர்களுக்கு கிடைக்கிறது. அதுமட்டுமில்லாமல், ஆக்ஷன், சென்டிமென்டுடன் கமர்சியல் விஷயங்களையும் தென்னிந்திய படங்கள் சரியாக கலந்து கொடுப்பதால் படம் ஹிட்டாகும் என்று தயாரிப்பாளர்கள் நம்புகின்றனர். கடந்த சில வருடங்களில் வெளியான 'கஜினி', 'வான்டட்' ஆகிய ரீமேக் படங்கள் இந்தியில் வசூலில் சாதனை புரிந்துள்ளன. அதனால் தமிழ், தெலுங்கு பட ரீமேக்குக்கு இந்தியில் மவுசு ஏற்பட்டுள்ளது'' என்று விநியோகஸ்தர் ஒருவர் தெரிவித்தார். தமிழ், தெலுங்கு ரீமேக் படங்களுக்கு வரவேற்பு அதிகரிப்பதால் ரீமேக் உரிமையின் விலையையும் தயாரிப்பாளர்கள் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 

மோகன்லாலின் கொச்சி வீட்டில் மீண்டும் வருமான வரி சோதனை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மோகன்லாலின் கொச்சி வீட்டில் மீண்டும் வருமான வரி சோதனை

7/27/2011 10:42:41 AM

கொச்சியில் நடிகர் மோகன்லால் வீட்டில் வருமான வரி அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தினர். பிரபல மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லாலின் சென்னை, பெங்களூர், கொச்சி, திருவன ந்தபுரம் வீடுகள், அலுவலகங்களில் கடந்த வாரம் ஒரே நேரத்தில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். மோகன்லால் வீட்டில் 2 அறைகள் லேசர் தொழில்நுட்பத்தில் பூட்டப்பட்டு இருந்தன. வருமான வரி அதிகாரிகளால் திறக்க முடியவில்லை. மோகன்லால் அல்லது அவருடைய மனைவியின் கை விரல் ரேகையை பயன்படுத்தி மட்டுமே அவற்றை திறக்க முடியும் என்பது தெரிந்தது. இதையடுத்து, கொச்சியில் உள்ள வீட்டுக்கு உடனே வரும்படி மோகன்லாலை வருமான வரி அதிகாரிகள் வலியுறுத்தினர். ஆனால், அவர் இன்னும் வரவில்லை. இந்த நிலையில், மோகன்லாலின் கொச்சி வீட்டில் வருமான வரி அதிகாரிகள் நேற்று மீண்டும் சோதனை நடத்தினர். அதில், 4 அதிகாரிகள் ஈடுபட்டனர். பகல் 12 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை நள்ளிரவு வரை நீடித்தது.

 

தமிழ், தெலுங்கு படங்களை குறிவைக்கும் இந்தி சினிமா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தமிழ், தெலுங்கு படங்களை குறிவைக்கும் இந்தி சினிமா

7/27/2011 10:43:30 AM

தமிழ், தெலுங்கில் ஹிட்டான படங்களை ரீமேக் செய்யும் போக்கு இந்தியில் தற்போது அதிகரித்துள்ளது. பிறமொழியில் ரிலீசான படங்களை வேறு மொழியில் ரீமேக் செய்வது வழக்கமான ஒன்றுதான். பொதுவாக, 90 சதவிகித கன்னடப் படங்கள், தமிழ், தெலுங்கு, இந்தி பட ரீமேக்காகவே இருக்கின்றன. இதே பார்முலாவை இந்தி சினிமா இப்போது கையில் பிடித்துள்ளது. அதாவது தமிழ், தெலுங்கில் ஹிட்டான படங்களை ரீமேக் செய்வதற்கு இந்தி தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். சமீபத்தில் இப்படி ரீமேக் செய்யப்பட்ட படங்கள் ஹிட்டானதால் இந்த மோகம் இன்னும் அதிகரித்துள்ளது.

சூர்யா, அனுஷ்கா நடிப்பில் ஹிட்டான 'சிங்கம்', அதே பெயரில் இந்தியில் தயாராகியுள்ளது. இந்தப் படத்துக்கான ஓபனிங் வழக்கமான படங்களை விட அதிகரித்துள்ளது. இதே போல 'காவலன்' படம் சல்மான் நடிப்பில் 'பாடிகார்ட்' என்ற பெயரில் இந்தியில் ரீமேக் ஆகிறது. இந்தப் படத்துக்கும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதே போல ஏழு படங்கள் இந்தியில் ரிலீஸ் ஆக காத்திருக்கின்றன. தெலுங்கிலிருந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்ட 'உத்தமபுத்திரன்', இந்தியில் 'ரெடி' என்ற பெயரில் ரிலீஸ் ஆகி வசூலை அள்ளியுள்ளது. அடுத்து தெலுங்கில் 'கிக்'காகவும் தமிழில் 'தில்லாலங்கடி'யாகவும் வெளியான படம், சல்மான் கான் நடிப்பில் விரைவில் ஆரம்பமாக உள்ளது. இதே போல, ஜெயம் ரவி, ஜெனிலியா நடித்த 'சந்தோஷ் சுப்ரமணியம்' (தெலுங்கில் பொம்மரிலு) ஹர்மான் பவேஜா, ஜெனிலியா நடிப்பில் 'இட்ஸ் மை லைஃப்' என்ற பெயரில் தயாராகிறது. கார்த்தி நடித்த 'சிறுத்தை' (தெலுங்கில் விக்ரமார்க்குடு) அக்ஷய்குமார் நடிப்பில் இந்தியில் 'ரவுடி ரத்தோர்' என்ற பெயரில் உருவாகிறது. இதை பிரபுதேவா இயக்க உள்ளார்.

இதே போல சூர்யா, ஜோதிகா நடிப்பில் ஹிட்டான 'காக்க காக்க' படம் ஜான் ஆபிரகாம், ஜெனிலியா நடிப்பில் 'ஃபோர்ஸ்' என்ற பெயரில் தயாராகிறது. தமிழில் ஹிட்டான 'காதல்' படத்தை இந்தி இயக்குனர் விக்ரமாதித்யா மோத்வான், இயக்க உள்ளார். இதுதவிர, 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் இந்தி ரீமேக்கை, கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி வருகிறார். ''ஏற்கனவே ஹிட்டான படங்களை ரீமேக் செய்வதால், ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை தயாரிப்பாளர்களுக்கு கிடைக்கிறது. அதுமட்டுமில்லாமல், ஆக்ஷன், சென்டிமென்டுடன் கமர்சியல் விஷயங்களையும் தென்னிந்திய படங்கள் சரியாக கலந்து கொடுப்பதால் படம் ஹிட்டாகும் என்று தயாரிப்பாளர்கள் நம்புகின்றனர். கடந்த சில வருடங்களில் வெளியான 'கஜினி', 'வான்டட்' ஆகிய ரீமேக் படங்கள் இந்தியில் வசூலில் சாதனை புரிந்துள்ளன. அதனால் தமிழ், தெலுங்கு பட ரீமேக்குக்கு இந்தியில் மவுசு ஏற்பட்டுள்ளது'' என்று விநியோகஸ்தர் ஒருவர் தெரிவித்தார். தமிழ், தெலுங்கு ரீமேக் படங்களுக்கு வரவேற்பு அதிகரிப்பதால் ரீமேக் உரிமையின் விலையையும் தயாரிப்பாளர்கள் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 

ராட்டினம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ராட்டினம்

7/27/2011 10:42:02 AM

ராஜரத்தினம் பிலிம்ஸ் சார்பில் ஜே.மகாலட்சுமி தயாரிக்கும் படம், 'ராட்டினம்'. புதுமுகங்கள் லகுபரன், ஸ்வாதி ஜோடி. ஒளிப்பதிவு, சுந்தர். இசை, மனோ ரமேஷன். பாடல்கள்: விவேகா, பிரான்சிஸ் கிருபா. கே.எஸ்.தங்கசாமி இயக்குகிறார். அவர் கூறும்போது, 'கப்பலுக்கு தேவையான பொருட்களை சப்ளை செய்யும் வியாபாரியான ஹீரோவுக்கும், துறைமுகத்தில் உயர்பதவியில் இருப்பவரின் மகளுக்குமான காதல்தான் கதை. யதார்த்தமாக படமாக்கி இருக்கிறோம். அனைவரது வாழ்க்கையிலும் நடந்த அல்லது நடந்து கொண்டிருக்கும் கதையை சொல்கிறோம். தூத்துக்குடியில் ஷூட்டிங் நடந்துள்ளது' என்றார்.

 

உயர்திரு 420 என்ன கதை?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

உயர்திரு 420 என்ன கதை?

7/27/2011 10:41:32 AM

ரிச் இந்தியா டாக்கீஸ் சார்பில் சந்திரசேகர் தயாரிக்கும் படம், 'உயர்திரு 420'. சினேகன், வசீகரன், மேக்னா ராஜ், அக்ஷரா கவுடா, அக்ஷயா, ஐஸ்வர்யா, ரமேஷ் கண்ணா நடிக்கின்றனர். படத்தை இயக்கும் பிரேம்நாத்.எஸ் நிருபர்களிடம் கூறியதாவது: சட்டத்துக்குப் புறம்பாக ஏமாற்றுபவர்களை, 420 என்பார்கள். ஹீரோ சினேகன், புத்திசாலித்தனமான 420. நட்சத்திர ஓட்டல் உரிமையாளர் வசீகரனுக்கு ஏற்படும் பிரச்னைகளை சினேகன் எப்படி தீர்க்கிறார் என்பது கதை. எந்த கதையின் சாயலும், காட்சிகளின் சாயலும் இருக்காது. வில்லியாக அக்ஷயா நடிக்கிறார். படத்தின் வசனங்களை எழுதும் முன், சட்டம் மற்றும் மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசித்தோம். காரணம், அத்துறை தொடர்பான காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளது. எதையும் தவறாக சொல்லிவிடக் கூடாது என்பதற்காக நிறைய ஆய்வுகள் செய்தோம். தயாரிப்பாளர் சந்திரசேகர், ஒரு கேரக்டரில் நடித்துள்ளார். சென்ஸார் போர்டு, 'யு' சான்றிதழ் அளித்துள்ளது. அடுத்த மாதம் படம் ரிலீசாகிறது. இவ்வாறு அவர் கூறினார். சினேகன், மேக்னா ராஜ், சந்திரசேகர், ஐஸ்வர்யா உடனிருந்தனர்.

 

அதிக சம்பளம் கேட்கிறாரா விதார்த்?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

அதிக சம்பளம் கேட்கிறாரா விதார்த்?

7/27/2011 10:38:43 AM

'மைனா'வுக்கு பிறகு விதார்த் நடித்துள்ள 'முதல் இடம்', 'கொள்ளைக்காரன்' படங்கள் அடுத்தடுத்து ரிலீசாகின்றன. இந்நிலையில், அவர் அதிக சம்பளம் கேட்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபற்றி விதார்த் கூறியதாவது: நான் அதிக சம்பளம் கேட்பதாக சொல்வதில் உண்மை இல்லை. நான் ஹீரோவாக நடித்து இரண்டு படங்கள்தான் ரிலீஸ் ஆகி இருக்கிறது. அதற்குள் சம்பளத்தை உயர்த்த முடியுமா? இது வதந்திதான். ஏவி.எம் தயாரிப்பில் நான் நடித்துள்ள 'முதல் இடம்' அடுத்த மாதம் ரிலீசாகிறது. இதையடுத்து 'கொள்ளைக்காரன்'. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடக்கிறது. தினமும் புது இயக்குனர்களிடம் கதை கேட்கிறேன். மூன்று கதைகளை தேர்வு செய்துள்ளேன்.

 

யு சான்றிதழ் பெறும் படத்துக்கு வரிவிலக்கு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

யு சான்றிதழ் பெறும் படத்துக்கு வரிவிலக்கு

7/27/2011 10:38:06 AM

'யு' சான்றிதழ் பெறும் நேரடி தமிழ்ப் படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் வரவேற்றுள்ளது. இதுகுறித்து இச்சங்கத்தின் தலைவர் கலைப்புலி ஜி.சேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ் தலைப்புகளுடன், தமிழ் கலாசாரம் சார்ந்த, 'யு' சான்றிதழ் பெற்ற நேரடி தமிழ் படங்களுக்கு வரிவிலக்கும், மற்ற சான்றிதழ் பெற்ற படங்களுக்கு, நிலுவையில் உள்ள வரியான மாநகராட்சி மற்றும் 'ஏ' கிரேடு நகராட்சிப் பகுதிகளுக்கு 15 சதவீதமும், ஊராட்சிப் பகுதிகளுக்கு 10 சதவீதமும் அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி. மேலும், சிறிய தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் வாழ்வு நலம்பெற, 'டிஜிட்டல் ஹோம்' தியேட்டருக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறோம்' என்று கூறியுள்ளார்.

 

5 வருட போராட்டம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

5 வருட போராட்டம்

7/27/2011 10:39:56 AM

மலையாள குணச்சித்திர நடிகர் கே.கே (கிருஷ்ணகுமார்), 'தெய்வத்திருமகள்' படத்தில் சாக்லெட் பேக்டரி உரிமையாளராக நடித்திருக்கிறார். நிருபர்களிடம் அவர் கூறியதாவது: எங்கள் குடும்பத்தில் ஆண்கள் அனைவரும் ராணுவத்தில் இருக்கிறார்கள். நான் மட்டும் கலைத் துறைக்கு வந்தேன். செய்தி வாசிப்பாளராக வாழ்க்கையை துவங்கி நடிகன் ஆனேன். மலையாளத்தில் 70 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன். இரண்டு படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளேன். தமிழில் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக வர வேண்டும் என்பதற்காக, 5 ஆண்டுகளாக, சென்னையில் தங்கியிருந்து போராடினேன். 'காவலன்' படத்தில் அசினுக்கு அண்ணனாக அறிமுகமானேன். பிறகு 'மழைக்காலம்' படத்தில் நடித்தேன். 'தெய்வத்திருமகள்' எனக்கு பெயர் பெற்றுக் கொடுத்துள்ளது. அடுத்து 'பில்லா2' வில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறேன். தமிழில் நல்ல குணசித்திர நடிகர் என்று பெயர் எடுப்பதே லட்சியம்.

 

ரவிச்சந்திரன் மறைவு : முதல்வர் இரங்கல்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ரவிச்சந்திரன் மறைவு : முதல்வர் இரங்கல்

7/27/2011 10:37:24 AM

‘காதலிக்க நேரமில்லை’, ‘நான்’, ‘மெட்ராஸ் டு பாண்டிச்சேரி’, ‘அதே கண்கள்’ உட்பட 100க்கும் அதிகமான படங்களில் நடித்தவர் ரவிச்சந்திரன் (71). இவர் கடந்த சில மாதங்களாக உடல¢ நலமில்லாமல் இருந்த இவர், நேற்று முன்தினம் இரவு காலமானார். அவரது உடல், தி.நகரில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். ரவிச்சந்திரனின் மகன் நடிகர் அம்சவர்தன் மற்றும் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். நடிகர்கள் சிவகுமார், சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், நடிகைகள் மனோரமா, சத்யப்ரியா உட்பட ஏராளமான திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். பிற்பகல் 3 மணிக்கு பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் ரவிச்சந்திரன் உடல் தகனம் செய்யப்பட்டது. ரவிச்சந்திரன் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட இரங்கல் செய்தியில், “தமிழ் திரைப்பட ரசிகர்களால் 'வெள்ளிவிழா நாயகன்' என்று போற்றப்பட்டவர் ரவிச்சந்திரன். அவரது மறைவு திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

 

வானம் தந்தது கசப்பான அனுபவம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

வானம் தந்தது கசப்பான அனுபவம்!

7/27/2011 10:36:44 AM

‘வானம்’ படத்தில் கசப்பான அனுபவங்களை சந்தித்தேன் என்று பரத் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: சசி இயக்கும் '555' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இது என் கேரியரில் முக்கியமான படமாக அமையும். இந்தப் படம் முடியும் வரை வேறு படங்கள் ஒப்புக் கொள்வதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன். 'வானம்' படத்தில் சில கசப்பான அனுபவங்களை சந்தித்தேன். 4 பேரின் கதை என்று சொன்னார்கள். ஆனால் ஒருவரின் கதைபோல புரமோட் பண்ணினார்கள். விளம்பரங்களில் ஒருவருக்கே முக்கியத்துவம் இருந்து. நான் உட்பட வேறு யாருக்கும் முக்கியத்துவம் தரப்படவில்லை. இதனால் அடுத்து இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் என்றால் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருந்து கொள்வேன். எல்லா நடிகருக்கும் ஆக்ஷன் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஒரு கட்டத்தில் நானும் ஆக்ஷன் படங்களில் நடித்தேன். அவை வெற்றி பெறவும் செய்தன. 'கண்டேன் காதலை' படத்துக்கு பிறகு எல்லாவிதமான படங்களிலும் நடிக்க முடிவு செய்தேன். இடையிடையே ஆக்ஷன் படமும் இருக்கும். 'திருத்தணி' பக்கா ஆக்ஷன் படம். 'யுவன் யுவதி', வேறொரு தளத்தில் இருக்கும். இவ்வாறு பரத் கூறினார்.

 

நடிகை குஷ்பு வழக்கு தள்ளிவைப்பு


மேட்டூர்: குஷ்பு மீது முட்டை வீசிய வழக்கில் சாட்சிகதள் ஆஜராகாததால் தள்ளி வைக்கப்பட்டது.

சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த வக்கீல் முருகன் நடிகை குஷ்பு மீது மேட்டூர் குற்றவியல் இரண்டாவது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு நடிகை குஷ்பு நேரில் ஆஜராகி திரும்பும் போது அவர் மீது அழுகிய தக்காளி, முட்டை ஆகியவற்றை ஒரு கும்பல் வீசியது.

இது குறித்து மேட்டூர் தாசில்தார் மேட்டூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் பா.ம.க. பிரமுகர் அறிவழகன் உள்பட 41 பேர் மீது மேட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை மேட்டூர் குற்றவியல் நீதிமன்ற எண்-1-ல் நேற்று விசாரணைக்கு வந்தது. அதில் முக்கிய சாட்சிகள் யாரும் ஆஜராகாததால் இந்த வழக்கு விசாரணையை மாஜிஸ்திரேட்டு பகவதி அம்மாள் மீண்டும் அடுத்த மாதம்(ஆகஸ்டு) 23-ந்தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
 

ஆகஸ்ட் 10 முதல் 'மங்காத்தா' இசை!


எப்போது எப்போது என கேட்டுக் கொண்டிருந்த அஜீத் ரசிகர்களுக்கு ஒரு இனிப்பு செய்தி. மங்காத்தாவின் இசை வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கியுள்ள மங்காத்தாவின் இசை வெளியீட்டுத் தேதி இதோ அதோ என இழுத்துக் கொண்டிருந்தது. இந்தப் படத்தின் தயாரிப்பாளராக தயாநிதி அழகிரி இருப்பதால், படம் வெளியாகுமா இல்லையா என்றும் சிலர் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில் உலகமெங்கும் மங்காத்தா இசை வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகும் என சோனி நிறுவனம் அறிவித்துள்ளது.

மங்காத்தாவில் அஜீத்துடன் மூன்று நாயகிகள் நடித்துள்ளனர். த்ரிஷா, லட்சுமி ராய் மற்றும் ஆன்ட்ரியா மூவரும் கவர்ச்சியில் கலக்கியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என இயக்குநர் வெங்கட்பிரபு கூறியுள்ளார். ஏற்கெனவவே சில பாடல்கள் இணையத்தில் வெளியாகி ஹிட்டும் ஆகிவிட்டது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் மாத இறுதியில் படம் வெளியாகக் கூடும் எனத் தெரிகிறது.
 

ஆபாச - வன்முறைப் படங்களுக்கு இனி வரிவிலக்கு கிடையாது! - தமிழக அரசு


சென்னை: தமிழிலேயே பெயர் சூட்டப்படும் திரைப்படங்களுக்கு முழு வரிவிலக்கு என்ற முந்தைய திமுக அரசின் கொள்கையில் தற்போது மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆபாசப் படங்கள், வன்முறைப் படங்களுக்கு கேளிக்கை வரியில் இருந்து விலக்கு இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

திரைப்படத்தில் வன்முறை, ஆபாசம் இருந்தால் கேளிக்கை வரியில் இருந்து விலக்கு கிடையாது உள்ளிட்ட 4 புதிய நிபந்தனைகளை விதித்து தமிழக அரசு இன்று ஆணை பிறப்பித்தது.

இதுகுறித்து நேற்று வெளியிடப்பட்ட அரசு செய்திக் குறிப்பு:

கேளிக்கை வரிச்சலுகை பெற திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் சூட்டப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன், கீழ்க்காணும் கூடுதல் தகுதி வரையறைகளை நிர்ணயம் செய்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

அந்தக் கூடுதல் தகுதிகள்:

தமிழ்ப் பெயர் சூட்டப்படும்,

1. அவ்வாறான திரைப்படம், திரைப்பட தணிக்கை வாரியத்திடமிருந்து 'யூ' (அனைவரும் பார்க்கத்தக்கது) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

2. திரைப்படத்தின் கதையின் கருவானது தமிழ் மொழி மற்றும் பண்பாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததாக இருத்தல் வேண்டும்.

3. திரைப்படத்தின் தேவையை கருதி பிறமொழிகளை பயன்படுத்தும் காட்சிகளைத் தவிர பெருமளவில் திரைப்படத்தின் வசனங்கள் தமிழ் மொழியில் இருத்தல் வேண்டும்.

4. திரைப்படத்தில் வன்முறை மற்றும் ஆபாசங்கள் அதிக அளவில் இடம் பெறுமேயானால் அத்திரைப்படம் வரிவிலக்கு பெறப்படுவதற்கான தகுதியை இழக்கும்.

மேற்கண்ட வரையறைகள், திரைப்படங்களுக்கு கேளிக்கை வரிவிலக்கு கோரப்பட்டு தற்போது நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கும் பொருந்தும்.

மேலும் கேளிக்கை வரி செலுத்துவதிலிருந்து விலக்களிக்க வரையறுக்கப்பட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்கின்ற திரைப்படங்களை பார்வையிட்டு வரிவிலக்கிற்கு பரிந்துரை செய்ய ஒரு புதிய தனிக்குழு ஏற்படுத்தப்படும். அவ்வாறான புதிய குழு அமைப்பதற்கான ஆணை தனியே வெளியிடப்படும்.

இவ்வாறு தமிழக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.