ரீமேக் ஆகிறது அமைதிப்படை
வசந்தபாலன் இயக்கத்தில் சித்தார்த்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி?
முதலில் துப்பாக்கி, அப்புறம் தான் தீபாவளி?
கரணுக்கு ஜோடியாகிறார் கரீனா?
விஸ்வரூபம் படத்திற்கு யூ/ஏ?
3டி-யில் வருகிறாள் காஞ்சனா..
கடைசி வாரத்தில் பிரியாணி
சென்சாரானது விஸ்வரூபம்... தமிழுக்கு யு/ஏ.... இந்திக்கு ஏ!!
சென்னை: கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படம் தணிக்கை செய்யப்பட்டது.
இதன் தமிழ்ப் பதிப்புக்கு யு ஏ சான்றும், இந்திப் பதிப்புக்கு ஏ சான்றும் அளித்தனர். தமிழில் ஆட்சேபத்துக்குரிய சில காட்சிகள் நீக்கப்பட்ட பிறகே யுஏ சான்று அளிக்கப்பட்டது.
கமல் நாயகனாக நடித்து, இயக்கியுள்ள படம் 'விஸ்வரூபம்'. இப்படத்தின் நாயகிகளாக பூஜாகுமார், ஆண்ட்ரியா நடித்துள்ளனர். அமேரிக்கா, அப்கானிஸ்தான் நாடுகளில் இதுவரை தமிழ்ப் படங்கள் ஷூட்டிங் நடக்காத இடங்களில் இந்தப் படம் உருவானது.
நவீன ஒலி தொழில்நுட்பமான 3 டி ஒலியில் இப்படத்தை கமல் உருவாக்கியுள்ளார்.
இந்தப் படத்தைப் பார்த்த ஹாலிவுட் நிபுணர்கள் பெரிதும் பாராட்டியுள்ளனர். அத்துடன் ஹாலிவுட் படத்தை இயக்கும் வாய்ப்பையே இந்தப் படம் கமலுக்கு பெற்றுத் தந்துள்ளது.
தமிழ், இந்தி மொழிகளில் நேரடியாக வெளியாகும் இந்தப் படம், தெலுங்கிலும் டப்பாகிறது.
படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கிவரும் சூழலில், இப்படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பினர். தமிழ் பதிப்பை பார்த்த தணிக்கை குழுவினர் சில காட்சிகளுக்கு ஆட்சேபம் தெரிவித்தனர். இதையடுத்து சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு ‘யு.ஏ.' சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்தி ‘விஸ்வரூபம்' படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் காட்சிகள் எதையும் நீக்காமல் ‘ஏ' சான்றிதழ் அளித்தனர். படத்தின் பாடல் வெளியீட்டு விழா அடுத்த மாதம் நடக்கிறது. டிசம்பர் மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்ய கமல் திட்டமிட்டுள்ளார்.
கண்ணம்மாவைத் தேடி கொடைக்கானல் செல்லும் செல்லம்மா
சன்தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் செல்லமே புதிய திருப்பங்களை நோக்கி நகர்கிறது. கதையில் சுவாரஸ்யமான பகுதிகள் கொடைக்கானலில் படமாக்கப்பட உள்ளதான தொடர் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சாந்தியின் குழந்தையை மரபணு சோதனை மூலம் உறுதி செய்து அவளிடமே குழந்தையை ஒப்படைக்கிறாள் செல்லம்மா. இப்போது தனது மகளான கண்ணப்பாவை தேடி செல்லம்மா பயணம் ஆரம்பம் ஆகிறது. இதன் படப்பிடிப்பு கேரளாவின் இயற்கை வனப்பு மிகுந்த பகுதிகளில் படமானது. இப்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு கொடைக்கானலை நோக்கி பயணிக்கிறது.
கண்ணம்மா எங்கே இருக்கிறாள் என்பதை செல்லம்மாவின் கணவன் வடமலை கண்டுபிடித்து விடுகிறான், அதை செல்லம்மாவிடம் சொல்லாமல் மறைத்து விடுகிறான். வடமலை கண்ணம்பாவை தேடி கொடைக்கானல் வருகிறான். முத்தழகியும் கண்ணம்பா இருப்பதை கண்டுபிடிக்கும் நேரத்தில் ஒரு கொலை பழிக்கு ஆளாகிறாள்.
செல்லம்மாவை எதிரியாக நினைக்கும் சினேகாவும் சிவரஞ்சனியும் வடமலையை தன் பக்கம் ஈர்த்து அவனிடம் பேரம் பேசுகிறார்கள். வேறு வழியின்றி வடமலை அவர்களுடைய கட்டளைக்கு உட்பட்டு தன் மகளை அவர்களிடம் விற்று விட்டு லட்சக்கணக்கான பணத்துடன் சென்னை திரும்புகிறான்.
இதே நேரம் வடமலையின் இரண்டாம் மனைவி காயத்ரியை செல்லம்மா காப்பாற்றி அவள் வயிற்றில் வளரும் கருவையும் காப்பாற்றுகிறாள். செல்லம்மாவை எதிரியாக நினைத்து வடமலை குழந்தையை விற்ற பணத்தைகொண்டு அவளின் எதிர் வீட்டிலேயே பெரிய தொழில் ஆரம்பிக்கிறான். வடமலைக்கு இவ்வளவு பணம் எப்படி வந்தது என்று செல்லம்மா தெரிந்து கொள்ள தவிக்கிறாள். காணாமல் போன தன் மகள் கண்ணம்மாவை தேடி பிடிக்கும் முயற்சியில் இறங்குகிறாள் செல்லம்மா.
இதில் செல்லம்மா சந்திக்கும் போராட்டங்களை இனி வரும் விறுவிறுப்பான காட்சியில் மூலம் அறிந்துகொள்ளலாம். ஒ.என். ரத்னம் இயக்கியுள்ள இந்த தொடரில் ராதிகா சரத்குமார், சாட்சி சிவா, மாளவிகா, தேவி பிரியா, விஜயலக்ஷ்மி ஆகியோர் நடித்திருக்கின்றனர் திரைக்கதை குரு. சம்பத்குமார் எழுதியுள்ளார்.
பெருசு பெருசா கேட்டார் விஜய்: எஸ் ஏ சந்திரசேகரன்
துப்பாக்கி படத்துக்காக பெரிய இயக்குநர், பெரிய ஹீரோயின், பெரிய ஒளிப்பதிவாளர் என பெருசு பெருசா கேட்டார் விஜய். அவர் கேட்டது போல கொடுத்ததால்தான் நடிக்க சம்மதித்தார் என்றார் எஸ்ஏ சந்திரசேகரன்.
துப்பாக்கி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் எஸ் ஏ சந்திரசேகரன் பேச்சு ஹைலைட்டாக அமைந்தது. இந்தப் படம் உருவான விதம், அதற்கு விஜய் போட்ட நிபந்தனைகளையெல்லாம் அவர் சுவாரஸ்யமாக சொன்னார்.
எஸ்ஏசியின் பேச்சு:
விஜய் என் பிள்ளைதான் என்றாலும், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் எனக்கு படம் பண்ண கால்ஷீட் தருவார்.
அப்படித்தான் துப்பாக்கிக்கும் கால்ஷீட் கொடுத்தார். இந்தப் படம் ஆரம்பிக்கும் முன்ப எனக்கு அவர் போட்ட கண்டிஷன்கள் கொஞ்சமல்ல. எடுத்த எடுப்பில், எனக்கு பெரிய இயக்குநர்தான் வேண்டும் என்றார். உடனே நான் இயக்குநர் முருகதாஸை அணுகினேன். அவர் கேட்ட சம்பளம் என்னை அதிர்ச்சியடைய வைத்தது.
அதற்காக அவரை குறை சொல்ல முடியாது. மார்க்கெட்டில் அவருக்கு உள்ள மதிப்பை வைத்து சம்பளம் சொன்னார். சும்மா இருந்தால் சினிமாவில் அப்படிக் கேட்டுவிட முடியாதல்லவா... எனவே அவர் கேட்டதைத் தர சம்மதித்தேன். அப்படியும் என் மகனுக்கு நம்பிக்கையில்லை. முதலில் அவருக்கு அட்வான்ஸ் கொடுங்கள், அப்புறம்தான் நான் வாங்குவேன் என்றார். சரி என்று கொடுத்தேன். அப்படியும் அவருக்கு நம்பிக்கையில்லை. போன் செய்து கேட்டு உறுதிப் படுத்திக் கொண்ட பிறகுதான் வாங்கிக் கொண்டார்.
அடுத்து பெரிய ஒளிப்பதிவாளர் வேண்டும் என்றார். சந்தோஷ் சிவனை ஒப்பந்தம் செய்தோம்.
பெரிய ஹீரோயின் வேண்டும் என்றார். ஒரு மேனேஜரைப் பிடித்து காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்தோம். காஜலில் கால்ஷீட் கூட ஈஸியாகக் கிடைத்துவிட்டது.. ஆனால் அந்த மேனேஜர் கால்ஷீட் கிடைப்பதுதான் அத்தனை கஷ்டமாக இருந்தது.
இப்படி எல்லாமே பெருசு பெருசாக வேண்டும் என விஜய் கேட்டதால் ஏற்பாடு செய்து கொடுத்தேன். அப்படியும் படம் ஏன் தாணு கைக்கு மாறியது என்று கேட்கலாம். அது அப்படித்தான். எனக்கென்று என்ன கிடைக்க வேண்டுமென இறைவன் நினைத்திருக்கிறானோ, அதுதான் கிடைக்கும்.
ஒருவிதத்தில் என்னை விட தாணுதான் இந்தப் படத்துக்கு பொருத்தமானவர். நான் ரொம்ப டார்ச்சர் பண்ணிவிடுவேன். அதுஎன்ன இது என்ன என்று கேட்டுக் கொண்டே இருப்பேன். எல்லாமே ஒரு ஒழுங்குக்குள் வரவேண்டும் என நினைப்பவன்.
தாணு அவர்களிடம் எதுவுமே கேட்டிருக்க மாட்டார். அவர் சுபாவம் அப்படி. பெரும்பாலும் மும்பையில்தான் இந்தக் குழு தங்கியது. பல முறை போய்வந்தது. அதில் எத்தனை முறை தாணுவும் கூடப் போயிருப்பார் என்று கேட்டுப் பாருங்கள்.. ஒருமுறை கூட போயிருக்கமாட்டார். அவர் அப்படித்தான்.
-இவ்வாறு எஸ்ஏசி பேசினார்.
ரூ 10 கோடி கொடுத்தாரா ரஜினி? - மந்த்ராலய நிர்வாகம் விளக்கம்
மந்த்ராலயம்: ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீராகவேந்திரர் கோயிலுக்கு ரூ 10 கோடியை ரஜினிகாந்த் நன்கொடையாக அளித்ததாக வந்த செய்தி குறித்து மந்த்ராலயம் விளக்கம் அளித்துள்ளது.
இந்த செய்தியை ரஜினியின் அலுவலகத் தரப்பில் உறுதிப்படுத்தவில்லை. ரஜினி வீட்டில் கேட்டபோது, இந்த செய்தியில் உண்மையில்லை என்று தெரிவித்தனர்.
ஆனால் ராகவேந்திரர் கோயில் நிர்வாகிகள் இருவர் பெயரில் இந்த அறிக்கை வந்ததால் குழப்பம் ஏற்பட்டது.
ராகவேந்திரரின் தீவிர பக்தர் என்ற முறையில், விளம்பரமின்றி ரஜினி உதவியிருப்பார் என்ற கருத்து அனைவர் மத்தியிலும் இருந்தது வந்தது.
ஆனால் இன்று ராகவேந்திரர் கோயில் நிர்வாகத்திலிருந்து ஒரு விளக்கம் வெளியாகியுள்ளது.
அதில், "ராகவேந்திரர் கோவிலுக்கு நன்கொடை கேட்டு ரஜினி மனைவி லதா ரஜினிகாந்த்தை கோயில் நிர்வாகம் அணுகியது உண்மைதான். எங்கள் கோவிலில் காரியதரிசி சுவாமிஜி ஸ்ரீசுயமேந்திரசார்யா இதற்கான முயற்சியில் ஈடுபட்டார். லதா ரஜினியை சந்தித்து நன்கொடை கேட்டார்.
கோவிலில் அவசரமாக செய்ய வேண்டிய 3 பணிகள் உள்ளன. அதற்கு நிதி தேவைப்படுவதால் அணுகினோம். ஆனால் ரூ. 10 கோடி ரஜினி தரப் போவதாக வெளியான தகவல் உண்மையல்ல.
நாங்கள் இதுவரை இந்த விஷயமாக ரஜினியை சந்தித்து பேசவில்லை. அவர் தரப்பில் எவ்வளவு தொகை நன்கொடையாக தரப்படும் என்றும் கூறப்படவில்லை. ரஜினி விருப்பப்பட்டு எவ்வளவு பணம் தந்தாலும் ஏற்றுக் கொள்வோம். ரஜினி நன்கொடை அளித்ததும் அதிகாரபூர்வமாக அறிவிப்போம்," என்றார்.
"இரண்டாம் உலகம்" படத்துக்கு சிக்கல்
இதை அறிந்து விலங்குகள் நல வாரியம் படக்குழுவிடம் விளக்கம் கேட்டிருப்பதாக இப்பட வட்டாரங்கள் தெரிவித்தன. விலங்குகளை கொடுமைப்படுத்துவது போல் காட்சிகள் இடம்பெற்றால் சென்சாரில் படத்துக்கு அனுமதி கிடைக்காது. படத்திலிருந்து அக்காட்சிகளை நீக்கிய பின்பே அனுமதி கிடைக்கும். அத்துடன் விலங்குகள் நல வாரியத்தில் குறிப்பிட்ட விலங்குகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்ற மருத்துவ சான்றிதழை வழங்க வேண்டும். இரண்டாம் உலகம் படத்தை டிசம்பரில் திரையிட திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளது. இந்நிலையில் படத்தில் இடம்பெற்ற விலங்குகள் சம்பந்தமான சில காட்சிகளை வெட்டிவிட்டு, அதை கிராபிக்சில் உருவாக¢க செல்வராகவன் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கிசு கிசு - லீக்கான நடிகையின் சீக்ரெட்
நல்ல காலம் பொறக்குது...
அலை ஓயாத நடிகர் தன்னோட மூத்த வாரிச மணியான இயக்கம் மூலமா அறிமுகப்படுத்துறாரு. இதுக்கிடைல அவரோட இளைய வாரிசுக்கும் வாய்ப்பு தேடி வருதாம். அக்னி ஸ்டார் படத்த ரீமேக் பண்றதா ஒரு இயக்கம் வந்து கால்ஷீட் கேட்டாராம். அந்த படத்தெல்லாம் உங்களால எடுக்க முடியாதுன்னு இளயவாரிசு நடிக்கறதுக்கு ஓயாத நடிகரு, பர்மிஷன் தரலயாம். ஆனாலும் இயக்கம் முயற்சிய கைவிடாம அலைஞ்சிட்டிருக்காராம்... அலைஞ்சிட்டிருக்காராம்...
யாரோ சூனியம் வெச்சதாலதான் உடம்பு பாதிச்சிடுச்சுன்னு சொல்லி சமந்த நடிகை மந்திரவாதிகிட்ட போனாரு. இந்த விஷயத்த சீக்ரெட்டா வெச்சிக்க சொல்லி மந்திரவாதிகிட்ட சொன்னாராம். ஆனா எப்படியோ விஷயம் லீக் ஆகி மீடியாவுக்கு தெரிஞ்சிடுச்சாம். யாரு சொல்லி மேட்டர் லீக் ஆச்சுன்னு விசாரிச்சப்போ, மந்திரவாதிக்கு தட்சணைய ஒரு பட நிறுவனம்தான் கொடுத்துச்சாம். ஷூட்டிங்கிற்கு தேதி கொடுக்கணும்னா, அந்த மந்திரவாதிக்கு செட்டில் பண்ணிடுங்கன்னு நடிகை உத்தரவு போட்டாராம். அதுல அந்த நிறுவனம் தட்சணைய கொடுத்ததாம். இந்த மேட்டர் பட யூனிட்டாருக்கு தெரியவர அப்படியே ஊரெல்லாம் பரவிடுச்சாம்... பரவிடுச்சாம்...
அஜந்தமான பேர்ல படம் தயாரிக்க வந்தவரு திடீர்ன்னு இயக்கமாயிட்டாரு. படத்தோட ஒரிஜினல் இயக்குனர் பேர நீக்கிட்டு இவரே பேரை போட்டுக்கிட்டாருன்னு புகார் போச்சு. இதயடுத்து நீக்கின இயக்கத்தோட பேரயும் தன் பேரோடு சேத்துபோட்டுருக்காராம். கணக்கு பாக்குற வேலல சம்பாதிச்ச பணத்த படத்துல இன்வெஸ்ட் பண்ணவருக்கு இப்ப கையில ஒரு பைசா கூட மிஞ்சலையாம். இதனால படத்த வாங்குறதுக்கு யாராவது கம்பெனிகாருங்க வருவாங்களான்னு காத்துகிடக்கிறாராம்... காத்து கிடக்கிறாராம்...
டைரக்டர்கள் மீது ராணி முகர்ஜி தாக்கு
ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கும் படங்கள் இப்போது நன்றாக ஓடுகிறது என்கிறார்கள். அந்த காலத்திலேயே மதர் இண்டியா, சுஜாதா போன்ற பாலிவுட் படங்கள் இதை சாதித்திருக்கிறது. அதுதான் இன்றைக்கு மீண்டும் நடக்கிறது. வெளிநாட்டு படங் களை காப்பியடிக்கும் சூழல் அதிகரித்துள் ளது. இதனால்தான் புதிதாக எதுவும் இந்திய சினிமாவில் நிகழவில்லை என்கிறேன். அதே நேரம், ரசிகர்களின் ரசனை மாறி இருக்கிறது. நல்ல படங்களை வரவேற்கிறார்கள். வாழ்க்கையில் வருவதையெல்லாம் ஏற்றுக்கொள்ளக்கூடாது. நல்லவற்றை தேர்வு செய்ய வேண்டும். எனக்கும் நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது. நல்லவற்றை மட்டுமே ஏற்கிறேன். ஹீரோ படம், ஹீரோயின் படம் என்று நான் பிரித்து பார்ப்பதில்லை. ஸ்கிரிப்ட் பிடித்திருந்தால் நடிக்கிறேன். தென்னிந்திய வாலிபனும், மராட்டிய பெண்ணுக்கும் மலரும் காதல் கதையாக உருவாகி இருக்கிறது 'அய்யா படம். இவ்வாறு ராணி முகர்ஜி கூறினார்.
மனீஷா கொய்ராலாவும் அரசியலில் குதிக்கிறார்
சினிமா நட்சத்திரங்களுக்கு திரைப்பட வாய்ப்பு குறைந்த உடன் அவர்களின் கவனம் சின்னத்திரை இல்லை என்றால் அரசியல் பக்கம் திரும்பும். பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என எந்த மொழி நடிகர், நடிகையர்களும் இதற்கு விதிவிலக்கில்லை.
இப்போது புதிதாக மனிஷா கொய்ராலாவும் அரசியல் பிரவேசம் செய்யப்போகிறாராம். அவரது லட்சியம் இந்திய அரசியல் அல்ல நேபாள அரசியல்தானாம்.
நேபாளத்தின் காட்மண்டுவில் பிறந்த மனீஷா தமிழ், தெலுங்கு, மலையாளம், பெங்காலி, நேபாளி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர். ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று முறை நேபாளத்திற்கு சென்று வருகிறார். அவருடைய தாத்தா பிஸ்வேஸ்வர் பிரசாத் கொய்ராலாவும், இரண்டு மாமன்களும் நேபாளத்தில் ஏற்கனவே பிரதமர்களாக இருந்துள்ளனர். இதனால் தாய்நாட்டின் மீது பற்று அதிகரித்து நேபாளத்தில் அரசியல் பிரவேசம் செய்யப்போவதாக கூறியுள்ளார்.
சான் பிரான்ஸிஸ்கோவிலும் கச்சேரி நடத்துகிறார் இசைஞானி!
அமெரிக்காவின் முக்கிய நகரமான சான் பிரான்ஸிஸ்கோவில் நவம்பர் 11-ம் தேதி இளையராஜாவின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடக்கிறது.
100க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் மற்றும் தமிழ்சினிமாவின் முன்னணிப் பாடகர்கள் அனைவரும் இதில் கலந்து கொள்கின்றனர்.
வரும் நவம்பர் 3-ம் தேதி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி கனடா தலை நகர் டொரண்டோவில் நடக்கிறது. இதற்கு தமிழ் உணர்வாளர்கள் என்ற பெயரில் ஒரு பிரிவினர் எதிர்ப்பு காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் இளையராஜாவின் இன்னொரு நிகழ்ச்சி அமெரிக்காவின் சான்ஃபிராஸ்சிஸ்கோ நகரில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.
வரும் நவம்பர் 11-ம் தேதி நடைபெற உள்ள இந்தக்கச்சேரியை ஸ்வாகத் கேர் ஃபவுண்டேஷன் ஏற்பாடு செய்துள்ளது.
யுவன் ஷங்கர் ராஜா,கார்த்திக் ராஜா, பவதாரிணி, கே.ஜே.ஜேசுதாஸ்,ஹரிஹரண், கே.எஸ்.சித்ரா, சாதனா சர்கம், மனோ, கார்த்திக், விஜய் யேஸுதாஸ், ஸ்வேதா மேனன் உட்பட நிகழ்ச்சியில் பாடவிருக்கும் முன்னணி பாடகர்கள் பங்கேற்க உள்ளனர். இசை ரசிகர்கள் நிகழ்ச்சியைக் காண ஆர்வமாக உள்ளனர்.
ஆனால் வெறும் அறிக்கை ஆர்ப்பாட்டக்காரர்கள் இதற்கு என்ன சொல்லப்போகிறார்களோ!
சல்மான் கானின் 'பிக் பாஸ்' வீட்டில் சனா கான்!
சல்மான் கான் நடத்தும் பிக் பாஸ் சீசன் 6 ரியாலிட்டி ஷோவில் பங்கேற்க சனாகானுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
கலர்ஸ் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை சல்மான்கான் நடத்தி வருகிறார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த நிகழ்ச்சியில் இந்த முறை பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் நித்தியானந்தா, நுபூர் மேதா, சயாலி பகத், நவ்ஜோத் சிங் போன்றோர் கலந்து கொள்கின்றனர். இவர்களுடன் சிலம்பாட்டம் படத்தில் நடித்த சனாகானும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன..
இந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்பவர்கள் ஒரு மாதம் வெளிநபர்களின் தொடர்பு எதுவும் இல்லாமல் பூட்டிய வீட்டுக்குள் வசிக்க வேண்டும். அவர்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும். பின்னர் கடைசிவரை தாக்குபிடிப்பவர்கள் வெற்றி பெறுவார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான வீட்டை கலை இயக்குனர் சாபு சிரில் வடிவமைத்திருக்கிறார்.
சனாகான் தற்போது 'தி டர்ட்டி பிக்சர்' படத்தின் மலையாள பதிப்பில் சில்க் வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து கூறிய சனாகான்,"ஒரு மாதம் பூட்டிய வீட்டுக்குள் எப்படி இருக்கப்போகிறாய் என்று என்னிடம் கேட்கிறார்கள். அதற்கு என்னை தயார் படுத்திக் கொண்டேன். 24 மணி நேரமும் ரசிகர்கள் என்னை கவனித்துக் கொண்டிருப்பார்கள் என்பதால், ஆடை விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போது உடனிருப்பவர்களுடன் கருத்து வேறுபாடு, மோதல் ஏற்படும் என்று கூறுகிறார்கள். இதற்கு முன் வேண்டுமானால் அப்படி நடந்திருக்கலாம். தற்போது இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் அனைவரும் நல்ல முறையில் பழகுபவர்களாக இருக்கின்றனர். இந்த ஷோ மூலம் பாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்" என்றார்.