ஸ்ரேயா, ரீமா சென் சரக்கு பார்ட்டி ஆட்டம்... பழைய படங்களுக்கு புதிய கண்டனம்!

மதுவிருந்தில் ஆண்களுடன் குத்தாட்டம் போட்டதாக நடிகைகள் ஸ்ரேயா, ரீமா சென் மீது புகார் எழுந்துள்ளது.

அவர்களின் இந்த குத்தாட்டத்துக்காக சமூக சேவை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

தமிழ், தெலுங்கில் ஒரு காலத்தில் பரபரப்பாக இருந்த நடிகைகள் ஸ்ரேயாவும் ரீமா சென்னும்.

இவர்களில் ரீமா சென் திருமணமாகி குழந்தை பெற்று செட்டிலாகிவிட்டார். ஆனாலும் அவ்வப்போது நடிக்கவும் செய்கிறார்.

ஸ்ரேயா, ரீமா சென் சரக்கு பார்ட்டி ஆட்டம்... பழைய படங்களுக்கு புதிய கண்டனம்!

ஸ்ரேயா கிட்டத்தட்ட ரிட்டயர்மென்ட் நிலைக்கு வந்துவிட்டார்.

இந்த நிலையில் ஸ்ரேயாவும் ரீமாசெனும் மது விருந்து நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று நடனம் ஆடுவது போன்ற படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

இந்த விருந்தில் ஆண்கள் சிலரும் பங்கேற்றுள்ளனர். அவர்களும் நடிகைகளுடன் சேர்ந்து நடனமாடியுள்ளனர்.

ஸ்ரேயா, ரீமா சென்னின் இந்த செயலை ஆபாசம் என்று வர்ணித்துள்ள சமூக சேவை அமைப்புகள், கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன.

அட, அது பழசுங்க..

இதுகுறித்து நாம் விசாரித்தபோது, இந்த மது விருந்து நடந்து நாட்களாகிவிட்டன. ரீமா சென் குழந்தை பெற்றுக் கொண்டு அமைதியாக வாழ்கிறார். எப்போதோ எடுக்கப்பட்ட பழைய படங்களை பார்த்துவிட்டு கண்டனம் தெரிவிப்பது தேவையற்றது என்று தெரிவித்தனர்.

 

பெண்களுக்காக பெண்களால் ஆரம்பிக்கப்பட்ட வெப் டிவி!


பெண்களுக்காக பெண்கள் ஒரு தனி வெப் டிவியை ஆரம்பித்துள்ளனர்.

உலக மகளிர் தினத்தன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த வெப் டிவிக்கு ஸ்த்ரீ என்று பெயர் சூட்டியுள்ளனர்.

இந்த வெப் டிவியில் முழுக்க முழுக்க பெண்களுக்கான நிகழ்ச்சிகள் மட்டுமே ஒளிபரப்பாகின்றன.

பெண்களின் சுய முன்னேற்றத்துக்காகவும், அவர்கள் சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வு பெறவும் இந்த தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை வழி வகுக்கின்றன.

பெண்களுக்காக பெண்களால் ஆரம்பிக்கப்பட்ட வெப் டிவி!

அறிவியல், ஆன்மீகம், மருத்துவம், சட்டம், பெண்கள் விழிப்புணர்வு, சுய முன்னேற்றம், சமையல் என பல்வேறு துறைகளில் உள்ள பெண் சாதனையாளர்களும் தங்கள் துறை சார்ந்த அனுபவங்களை இந்த நிகழ்ச்சிகளில் பகிர்ந்து கொள்கிறார்கள்.

ஒவ்வொரு நிகழ்ச்சியும் 10 நிமிடம் என்ற அளவில் ஒரு நாளைக்கு மொத்தம் 24 பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் இந்த ஸ்திரீ டிவியில் ஒளிபரப்பாகின்றன. ஆரம்பத்தில் தமிழில் மட்டுமே நிகழ்ச்சிகளை தர உள்ள இந்த ஸ்த்ரீ டிவி வெகு விரைவில் பல மொழிகளிலும் பல புதுமையான நிகழ்ச்சிகளை தர உள்ளது.

இந்த ஸ்த்ரீ டிவி இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளிலும் ஒளிபரப்பாகும். அதுமட்டுமில்லாமல் இந்த ஸ்த்ரீ டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை எந்தவித இணைய வேக தடங்களும் இல்லாமல் ஒரே நேரத்தில் பலரும் பார்த்து ரசிக்கும் வண்ணம் வடிவமைத்துள்ளனர்.

 

ராஜ் டிவியில் ஸ்வர்ண சங்கீதம் சீசன்–3 நித்ய ஸ்ரீ மகாதேவன் நடுவராக பங்கேற்பு

ராஜ் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘‘ஸ்வர்ண சங்கீதம்" நிகழ்ச்சி மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரபல கர்நாடக சங்கீத பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் நடுவராக இணைந்துள்ளார்.

கர்நாடக இசைப்பாடகர்கள் பங்கேற்கும் ஸ்வர்ண சங்கீதம் சீசன் ஒன்று, இரண்டு வெற்றியைத் தொடர்ந்து மூன்றாவது சீசன் தற்போது தொடங்கியிருக்கிறது. முக்கிய நகரங்களில் தங்க குரலுக்கான தேடல் நடைபெற்றது.

ராஜ் டிவியில் ஸ்வர்ண சங்கீதம் சீசன்–3 நித்ய ஸ்ரீ மகாதேவன் நடுவராக பங்கேற்பு

தங்களது குரல் வளத்தை உலகிற்கு பறைசாற்றுவதற்காக, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் தங்களது இனிய குரல் வளத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.

நித்யஸ்ரீ மகாதேவன்

ஸ்ரீசித்ரா தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் நடுவர்களாக பாபநாசம் அசோக் ரமணி, ஆகியோருடன் பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் பங்கேற்றுள்ளார்.

10 திறமைசாலிகள்

முதற்கட்ட போட்டியில் தேர்வாகும் 50 போட்டியாளர்களில் முதல் 10 சுற்றுகளுக்குள் நுழையப்போகும் 10 திறமைசாலிகள் யார்?

சுதாரகுநாதன், சவுமியா

இறுதிவரை சென்று கோப்பையை வெல்லப்போகும் போட்டியாளரை, ஒவ்வொரு சுற்றுகளிலும் பிரபல இசைக்கலைஞர்கள் சுதா ரகுநாதன், சவுமியா ஆகியோர் தேர்வு செய்வர்.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார்

சங்கீத வித்வான் பாலமுரளி கிருஷ்ணா, பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், போன்றோர் இறுதிச்சுற்றில் நடுவர்களாக பங்கேற்று திறமைசாலிக்களை தேர்வு செய்ய இருக்கின்றனர்.

 

இணையத்தைக் கலக்கும் கோச்சடையான் ஆன்ட்ராய்ட் கேம்கள்!

கோச்சடையான் படத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள ஆன்ட்ராய்ட் கிங்டம் ரன் கேமுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

ரஜினி - தீபிகா படுகோன் நடித்துள்ள படம் கோச்சடையான். சவுந்தர்யா ரஜினி இயக்கியுள்ளார். நடிப்பு பதிவாக்க தொழில்நுட்பத்தில் இந்தியாவில் தயாராகும் முதல் படமான கோச்சடையானுக்கு ஆன்ட்ராய்ட் கேம் செயலியை உருவாக்கியுள்ளது ஹங்காமா நிறுவனம்.

இணையத்தைக் கலக்கும் கோச்சடையான் ஆன்ட்ராய்ட் கேம்கள்!

இந்த ஆண்டில் இந்த நிறுவனம் உருவாக்கியுள்ள முதல் செயலி இது. காடு, துறைமுகம், பெரிய கோட்டைகளில் நடக்கும் சண்டையைப் போல இந்த கேம் உருவாக்கப்பட்டுள்ளது.

இணையத்தைக் கலக்கும் கோச்சடையான் ஆன்ட்ராய்ட் கேம்கள்!

கோச்சடையான் ரஜினி தனி வீரனாக ஒரு படையையே எதிர்த்து ஜெயிப்பது போல உருவாக்கப்பட்டுள்ள இந்த விளையாட்டுக்கு அபார வரவேற்பு கிடைத்துள்ளது.

அதுவும் ரஜினியை முதல் முறையாக இந்த மாதிரி கேமில் பார்ப்பது குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு பெரும் உற்சாகத்தைத் தந்துள்ளது.

இணையத்தைக் கலக்கும் கோச்சடையான் ஆன்ட்ராய்ட் கேம்கள்!

வ்ரூவி மூலம் கோச்சடையான் Reign of Arrows என்ற இன்னொரு விளையாட்டும் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கேம் அறிமுகமான சில மணி நேரங்களிலேயே ஏராளமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

இணையத்தைக் கலக்கும் கோச்சடையான் ஆன்ட்ராய்ட் கேம்கள்!

கூகுள் ப்ளே தளத்தில் இந்த விளையாட்டுகளைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தமிழ் நடிகர் ஒருவருக்கு இதுபோல விளையாட்டு உருவாக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.

 

நான் கர்ப்பமா இருக்கேன்னு வதந்தி பரப்புறாங்களே! - ப்ரியாமணி வருத்தம்

சென்னை: தான் கர்ப்பமாக இருப்பதாக சிலர் வதந்தி பரப்புவதாக நடிகை ப்ரியாமணி கூறியுள்ளார்.

பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டு, அமீரின் 'பருத்தி வீரன்' படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றவர் பிரியாமணி.

நான் கர்ப்பமா இருக்கேன்னு வதந்தி பரப்புறாங்களே! - ப்ரியாமணி வருத்தம்

தமிழில் வந்த வாய்ப்புகளைப் புறக்கணித்துவிட்டு, தெலுங்கு -இந்தியில் நடிக்க ஆர்வம் காட்டினார். கடைசியில் சில கன்னடப் படங்களில்தான் நடிக்க முடிந்தது. இப்போது வாய்ப்புகள் இல்லாமல், மலையாளப் பக்கம் ஒதுங்கியுள்ளார்.

இந்த நிலையில் பிரியாமணி ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும், கர்ப்பமாக இருப்பதாகவும் ஒரு பேச்சு உலா வர ஆரம்பித்துவிட்டது.

இது உண்மைதானா என்று ப்ரியாமணியிடம் கேட்டபோது, "என்னைப் பற்றி மனம் போன போக்கில் எழுதுகிறார்கள். கர்ப்பமாக இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

நான் கர்ப்பமா இருக்கேன்னு வதந்தி பரப்புறாங்களே! - ப்ரியாமணி வருத்தம்

இவற்றையெல்லாம் நான் பொருட்படுத்துவது இல்லை. தமிழில் எனக்கு வாய்ப்புகள் இல்லை. முன்பு நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனால் நான்தான் புறக்கணித்துவிட்டேன்.

இனி வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன். படங்கள் இயக்கும் ஐடியாவும் இருக்கிறது," என்றார்.

 

மதுஷாலினி நடிக்கும் பேய்ப் படம் கல்பனா ஹவுஸ்

கல்பனா ஹவுஸ்.. கன்னடம், தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற படம் இது. அடுத்து தமிழிலும் இதே பெயரில் வெளியாகிறது. அவன் இவன் மதுஷாலினிதான் படத்தின் நாயகி.

மைசூர் காட்டுக்குள் நடந்த திகிலூட்டும் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை இது. வேணு கார்த்திக், த்ரில்லர் மஞ்சு ஆகியோரும் நடித்துள்ளனர். குமார் டைரக்டு செய்திருக்கிறார்.

மதுஷாலினி நடிக்கும் பேய்ப் படம் கல்பனா ஹவுஸ்

‘கல்பனா ஹவுஸ்' படத்தின் கதை பற்றி இயக்குநர் குமார் கூறுகையில், "பிரபல என்கவுன்ட்டர் போலீஸ் அதிகாரி தனது குடும்பத்துடன் ஓய்வெடுப்பதற்காக காட்டுக்குள் இருக்கும் விருந்தினர் மாளிகையில் வந்து தங்குகிறார்.

அங்கு சில மர்மமான சம்பவங்கள் அவர்களை பயமுறுத்துகின்றன. போலீஸ் அதிகாரியின் குடும்பத்தினர் ஒவ்வொருவராக கொல்லப்படுகிறார்கள்.

இதற்கு காரணம் அந்த பங்களாவில் இறந்துபோன ஒரு பெண்ணின் ஆவிதான் என்கிறார்கள். அதைக்கண்டுபிடிக்கும் முயற்சியில் சிலர் ஈடுபடுகிறார்கள். அவர்கள் உயிர் பிழைத்தார்களா? அல்லது ஆவியினால் பழிவாங்கப்பட்டார்களா? என்பதே கதை.

தரண் மூவிஸ் சார்பில் ஆர்.நாகராஜன் தயாரித்து வருகிறார். படத்தில் பரபரப்பும், விறுவிறுப்பும் குறையாமல் இருப்பதற்காக, பாடல்களே இல்லாத படமாக இது தயாராகிறது,'' என்றார்.

 

உத்தம வில்லன் கமலின் ஜோடிகளாக ஊர்வசி, பூஜா குமார், ஆன்ட்ரியா!

கமல் நடிக்கும் உத்தம வில்லனில் அவருக்கு ஜோடிகளாக ஊர்வசி, பூஜா குமார், ஆன்ட்ரியா நடிக்கின்றனர்.

உத்தமன் என்ற 8ஆம் நூற்றாண்டுக் கூத்துக் கலைஞராக கமல் நடிக்க அவரின் நெருங்கிய நண்பர் நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்க ‘உத்தம வில்லன்' படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்கு கதை, திரைக்கதை அமைத்தவரும் கமல்ஹாசன் தான்

உத்தம வில்லன் கமலின் ஜோடிகளாக ஊர்வசி, பூஜா குமார், ஆன்ட்ரியா!

கமலின் விஸ்வரூபம் படத்தில் நடித்த பூஜா குமார் மற்றும் ஆண்ட்ரியா ஆகியோர் இதிலும் நடிக்கிறார்கள். கமல் இரட்டை வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் இயக்குனர் கே.பாலசந்தர் மற்றும் இயக்குனர் கே.விஸ்வநாத் நடிக்கிறார்கள்.

இப்படம் குறித்து வெளியிடப்பட்டுள்ள பத்திரிகைக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

உத்தமன் என்ற 8ஆம் நூற்றாண்டுக் கூத்துக் கலைஞன் கதாபாத்திரத்திலும், மனோரஞ்சன் என்ற 21ஆம் நூற்றாண்டின் சினிமா உச்ச நட்சத்திரமாக மற்றொரு பாத்திரத்திலும் கமல்ஹாசன் நடிக்கிறார்.

மனோரஞ்சனை கண்டெடுத்து நட்சத்திர அந்தஸ்திற்கு உயர்த்திய, குருவாக சினிமா இயக்குனராக கே.பாலச்சந்தர் நடிக்கிறார். மனோரஞ்சனின் மனைவியாக ஊர்வசியும், மனோரஞ்சனின் மாமனாராக திரு.கே.விஸ்வநாத்தும் நடிக்கின்றனர். 8ஆம் நூற்றாண்டில் நடக்கும் உத்தம வில்லனின் கதையில் மனநோயால் பாதிக்கப்பட்ட இளவரசியாக பூஜா குமார் நடிக்கிறார். 21ஆம் நூற்றாண்டுக் கமலின் காதலியாக ஆண்ட்ரியா ஜெர்மையாவும் நடிக்கின்றனர்.

முத்தரசன் என்ற 8ஆம் நூற்றாண்டுக் கொடுங்கொல் சர்வாதிகாரியின் பாத்திரத்தில் நாசரும், ஜேகப் ஜக்காரியா என்ற பாத்திரத்தில் ஜெயராமும், ஜெயராமின் வளர்ப்பு மகளாக கதையின் பாத்திரமொன்றில் பார்வதி மேனனும் நடிக்கிறார்கள். எம்.எஸ்.பாஸ்கர் கொக்கு செட்டியார் என்ற முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.

படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க கமல்ஹாசன் மற்றும் விவேகா பாடல்களை எழுதுகின்றனர். ஒளிப்பதிவு ஷாம்தத், படத்தொகுப்பு விஜய் சங்கர். திருப்பதி பிரதர்ஸ் சார்பாக இயக்குனர் லிங்குசாமியின் சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் படத்தை தயாரிக்கிறார்.

-இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

”எரியற கொள்ளில எந்தக்கொள்ளி நல்ல கொள்ளி” மன்சூர் அலிகான் பேச்சு

சென்னை: எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளியாக இருக்க முடியும் என்று நடிகர் மன்சூர் அலிகான் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் பற்றி நடிகர் மன்சூர் அலிகான் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ''இந்த பாராளுமன்ற தேர்தலில், மக்களுக்கு அதிக ஆர்வம் இல்லை. எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

”எரியற கொள்ளில எந்தக்கொள்ளி நல்ல கொள்ளி” மன்சூர் அலிகான் பேச்சு

கோடி கோடியாக பணம் உள்ளவர்கள் மட்டுமே அரசியல் நடத்த முடியும் என்கிற நிலை உள்ளது. சொத்துக்களை காப்பாற்றிக் கொள்வதற்காக சிலர் அரசியலுக்கு வருகிறார்கள்.

இந்த மண்ணின் மைந்தர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக யாரும் வரவில்லை. தமிழ்நாட்டில் இருந்து 40 எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு டெல்லி போவார்கள். அவர்களில், 5 பேர் மந்திரிகளாகி விடுவார்கள். அந்த ஐந்து பேரும் இதற்கு முன்னால் மந்திரிகளாக இருந்தவர்கள் என்ன செய்தார்களோ, அதையே தான் இவர்களும் செய்வார்கள். தமிழர்களின் நலனுக்காக யாரும் உழைக்கப் போவதில்லை.

இந்த தேர்தலில், சில நடிகர்-நடிகைகள் தேர்தல் பிரசாரத்துக்கு போகிறார்கள். சில நடிகர்-நடிகைகள் அரசியல் பற்றி கருத்து தெரிவித்து வருகிறார்கள். எல்லோருக்கும் உரிமை இருக்கிறது என்பதை வரவேற்கிறேன். நக்மா, நமீதா, சோனா மூன்று பேருக்கும் வாழ்த்துகள்.

நடிகர்கள் சிலர் அரசியலுக்கு வருகிறார்கள். முதலில் மிகுந்த கட்டுப்பாட்டோடு கட்சி ஆரம்பிக்கிறார்கள். போகப்போக அந்த கட்சிக்குள்ளும் குடும்ப அரசியல் நுழைந்து விடுகிறது. அப்புறம் ஊழல் என்கிறார்கள். ஊழலை ஒழிப்போம் என்கிறார்கள். அந்த ஊழல் எங்கே இருக்கிறது? என்று தெரியவில்லை. என் மீது நம்பிக்கை வைத்து சிறந்த இயக்கத்தில் இருந்து அழைப்பு வந்தால், நான் இந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்''என்று கூறியுள்ளார்.