அஜீத் படம்... குலு மனாலியில் க்ளைமாக்ஸ்!

Ajith 53rd Movie Climax At Kullu Manali

அஜீத் நடிக்கும் 53வது படத்தின் இறுதிக் காட்சியை குலு மனாலியில் படமாக்கி வருகிறார் இயக்குநர் விஷ்ணுவர்தன்.

படத்தின் பெயர் என்னவென்று வெளியில் சொல்லாமல் அஜீத் - விஷ்ணுவர்தன் கூட்டணியில், ஏஎம் ரத்னம் தயாரிப்பில் உருவாகி வரும் க்ரைம் த்ரில்லர் கடந்த ஓராண்டாக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நடந்தது.

இப்போது கடைசி கட்ட படப்பிடிப்பு இமயமலைப் பகுதிகளில் நடந்து வருகிறது.

லடாக், லேஹ் மற்றும் குலு மனாலி போன்ற இடங்களில் கடந்த இரு வாரங்களாக படப்பிடிப்பு நடந்து வந்தது.

இதன் க்ளைமாக்ஸ் காட்சி குலு மனாலியில் படமாக்கப்படுகிறது. இதில் கலந்து கொள்ள டெல்லியிலிருந்து தானே காரை ஓட்டிச் சென்றார் அஜீத்.

இந்த மாத இறுதியில் படத்தின் தலைப்பை அறிவிக்கவிருப்பதாக ஏஎம் ரத்னம் தெரிவித்துள்ளார். வரும் ஆகஸ்டில் படம் வெளியாகும் என்று தெரிகிறது.

 

கோபிசந்த் - ரேஷ்மா திருமணம்.. தெலுங்கு திரையுலகம் வாழ்த்து!

Gopichand Weds Reshma

ஹைதராபாத்: பிரல தெலுங்கு நடிகரும், தமிழில் ஜெயம் படத்தில் வில்லனாக நடித்தவருமான கோபிசந்துக்கு நேற்று திருமணம் நடந்தது. ஹைதராபாதைச் சேர்ந்த ரேஷ்மா என்ற பெண்ணை அவர் மணந்தார்.

தெலுங்கின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் கோபிசந்த். நடிகை பாவனாவுடன் அவருக்கு காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது.

பின்னர் ரேஷ்மாவுடன் கடந்த டிசம்பரில் நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணம் தள்ளிப் போனது. இப்போது ரேஷ்மா என்ற பெண்ணை மணந்துள்ளார்.

தெலுங்கு சினிமாவின் இன்னொரு முக்கிய நடிகரான மேகா ஸ்ரீகாந்தின் உறவுக்காரப் பெண் இந்த ரேஷ்மா.

ஹைதராபாதில் வெகு ஆடம்பரமாக நடந்த இந்த திருமணத்தில் தெலுங்கு திரையுலகின் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, நடிகர்கள் பவன் கல்யாண், பிரபாஸ், டாக்டர் ராஜசேகர் - ஜீவிதா, இயக்குநர்கள் ராகவேந்திரராவ், ராமோஜி ராவ், எஸ்எஸ் ராஜமவுலி,

திருமணம் முடிந்ததும் நடந்த கேளிக்கை நிகழ்ச்சிகளின்போது ஒரு பாடலுக்கு நடனமாடினார்.

 

அது விளம்பரம்தான்... நயன்தாராவை நான் காதலிக்கவில்லை! - ஆர்யா விளக்கம்

Arya Denies Marriage With Nayanthara

சென்னை: நயன்தாராவை திருமணம் செய்து கொள்ளப் போவதாக சில தினங்களுக்கு முன் வந்த செய்தி வெறும் சினிமா விளம்பரம்தான் என்றும், நயன்தாராவை தான் காதலிக்கவில்லை என்றும் நடிகர் ஆர்யா கூறியுள்ளார்.

நயன்தாராவும் ஆர்யாவும் திருமணம் செய்துகொள்ளப் போவதாக நேற்று முன்தினம் பரபரப்பாக அழைப்பிதழ் அனுப்பி வைத்தனர்.

ஆனால் அடுத்த இரு தினங்களில் இது வெறும் சினிமா விளம்பர பரபரப்புதான் என்பது தெரிந்துவிட்டது. நயன்தாரா - ஆர்யா நடித்து வரும் ராஜா ராணி படத்தின் முதல் பார்வைக்காக கொடுக்கப்பட்ட விளம்பரம் அது.

இதுகுறித்து முதல்முறையாக இப்போதுதான் வாய் திறந்துள்ளார் நடிகர் ஆர்யா.

அவர் கூறுகையில், "நானும், நயன்தாராவும் நல்ல நண்பர்கள். நான், நயன்தாராவை காதலிப்பதாக வந்த செய்திகள் பொய்யானவை.

எங்களுக்கு இடையே, காதல் எதுவும் கிடையாது. நயன்தாராவும் நானும் ராஜா ராணி என்ற படத்தில் இணைந்து நடிக்கிறோம். அந்த படத்தில் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வது போன்ற காட்சி உள்ளது.

அதை சமீபத்தில் படமாக்கினர். அதைத்தான் பட விளம்பரமாக வெளியிட்டுள்ளனர். இதைப் பார்த்து நாங்கள் இருவரும் உண்மையிலேயே திருமணம் செய்து கொள்ளப் போவதாக தவறாக புரிந்து கொண்டு விட்டனர்.

தற்போது எனக்கு, ஐந்து படங்கள் கைவசம் உள்ளன. இதை நடித்து கொடுத்த பிறகுதான் திருமணம் பற்றி யோசிக்க முடியும்," என்றார்.

 

எடிசன் பிலிம் அவார்ட்ஸ்: விக்ரமுக்கு சிறந்த நடிகருக்கான விருது, ஹன்சிகா சிறந்த நடிகை

Edison Film Awards Vikram Bags The Best Actor Award

சென்னை: எடிசன் பிலிம் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் விக்ரமுக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது.

மை தமிழ் மூவி டாட் காம் நிறுவனம் கடந்த 8 ஆண்டுகளாக "எடிசன் பிலிம் அவார்ட்ஸ்" என்ற பெயரில் தமிழ்த் திரைப்படங்களுக்கு பல்வேறு விருதுகள் வழங்கி வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் அந்த நிறுவனம் சார்பில் கடந்த 2012ம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 29 வெற்றியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

சிறந்த நடிகருக்கான விருது தாண்டவம் படத்தில் நடித்த நடிகர் விக்ரமுக்கும், சிறந்த நடிகைக்கான விருது ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் கதாநாயகியாக நடித்த ஹன்சிகாவிற்கும் கிடைத்துள்ளது.

அதே போல "ஒரு கல் ஒரு கண்ணாடி" படத்தில் கதாநாயகனாக நடித்த உதயநிதி ஸ்டாலினுக்கு புதுமுக நாயகனுக்கான விருது வழங்கப்பட்டது.

கும்கி திரைப்படத்தின் இயக்குநர் பிரபு சாலமனும் அதே படத்திற்கு இசையமைத்த இமானும் விருது பெற்றனர்.

 

ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைப்பது எனது மன திருப்திக்காக செய்யும் பணி: விஜய்

திருச்சி: திருச்சி மாவட்ட விஜய் தலைமை நற்பணி இயக்கம் சார்பில் 15 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை நடிகர் விஜய் நடத்தி வைத்தார்.

திருச்சியில், மாவட்ட விஜய் தலைமை நற்பணி இயக்கம் சார்பில் 15 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமண விழாவும், 51 சீர்வரிசை பொருட்கள் வழங்கும் விழாவும் நேற்று தென்னுனூர் உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகர் விஜய் கலந்து கொண்டு 15 ஜோடிகளுக்கு தனது கையால் திருமாங்கல்யத்தை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்து, மணமக்களுக்கு ஆசி வழங்கினார். மேலும், அவர்களுக்கு சீர் வரிசையாக பீரோ, மிக்சி, சமையல் பாத்திரங்கள் மற்றும் பாய் உள்ளிட்ட 51 வகையான பொருட்களை வழங்கினார்.

vijay conducts mass marriage trichy

அப்போது அங்கு கூடியிருந்த பெண்கள் சிலர் கேட்ட கேள்விகளுக்கு நடிகர் விஜய் அளித்த பதில்,

விரைவில் வெளியாக உள்ள தலைவா படம் அனைத்து தரப்பு மக்களும் பார்த்து ரசிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. நிச்சயம் இந்த படம் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும்.

இந்த பணிக்கும், அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது எனது மன திருப்திக்காக செய்யும் பணியாகும். மக்களுக்கு தொண்டு செய்வதில் நான் திருப்தி அடைகிறேன். இது போன்ற நிறைவான பணிகளுக்கு ஈடாக எதுவும் இல்லை என்று கருதுகிறேன். இதைத் தவிர வேறு சந்தோஷம் இல்லை.

எனது மகன் சஞ்சய் ஒரு சமயம் நடிகர் ஆக வேண்டும் என்கிறான். இன்னொரு சமயம் கிரிக்கெட் வீரராக போகிறேன் என்கிறான். அவனுடைய எதிர்காலத்தை அவன் தான் நிர்ணயத்துக் கொள்ள வேண்டும். எனது மகள் திவ்யா சிறு குழந்தை என்பதால் அவளது எதிர்காலம் பற்றி பின்பு யோசிக்கலாம் என்றார்.

 

சுவாசக் கோளாறால் அவதிப்படும் டிஎம்எஸ்ஸுக்கு தீவிர சிகிச்சை - திரையுலகினர் நலம் விசாரிப்பு

Tms Hospitalised

சென்னை: தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த பிரபல பின்னணிப் பாடகர் டிஎம்எஸ் எனப்படும் டிஎம் சவுந்திரராஜன் சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

பல ஆயிரம் பாடல்கள் பாடி தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள டிஎம்எஸ், கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு அவ்வப்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த வாரம் மந்தைவெளியில் அவரது வீட்டில் தடுமாறி கீழே விழுந்தார். இதனால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி இருந்து சிகிச்சை பெற்ற டி.எம்.சவுந்திரராஜன் கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் வீடு திரும்பினார்.

ஆனால் நேற்று திடீரென அவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டது. உடனடியாக அவர் மீண்டும் மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள டி.எம்.சவுந்தரராஜனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திரையுலகினர் அவரை நலம் விசாரித்து வருகின்றனர்.

டி.எம்.சவுந்தரராஜனின் மகன்கள் பால்ராஜ், செல்வகுமார் ஆகியோர் உடனிருக்கின்றனர்.

 

அப்புறம்... நயன் - ஆர்யா கல்யாணம் நடந்ததா இல்லையா?

மே 11-ம் தேதி இரவு 9 மணிக்கு நயன்தாராவுக்கும் ஆர்யாவுக்கும் திருமணம் என்று ஒரு தகவலை பிஆர்ஓ மூலம் அனுப்பி பரபரப்பைக் கிளப்பியது நினைவிருக்கலாம்.

நாம் சொன்னது போலவே அது பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ தயாரிக்கும் ராஜா ராணி படத்துக்கான எதிர்மறை விளம்பரம் என்பது அடுத்த சில மணி நேரங்களில் அம்பலமாகிவிட்டது.

இருந்தாலும் அறிவித்தபடி திருமணம் மாதிரி ஏதாவது நடந்ததா என்ற கேள்வி எல்லோருக்குமே இருந்தது.

what about nayanthara arya marriage announcement

அதற்கு 'ஆர்யா நயன்தாரா நிழலா நிஜமா?' என்ற தலைப்பில் ராஜாராணி படத்தின் பிஆர்ஓ அனுப்பியுள்ள இன்னொரு மின்னஞ்சல் விளக்கத்தைப் பாருங்கள்...

"மெய்பொருள் காண்பது அறிவு என்ற இலக்கணத்துக்கு பொருத்தமாக அமைந்தது, உண்மையா அல்லது விளம்பரமா என்ற வாதப் பிரதிவாதத்துக்கு இடையே நிர்ணயிக்கபட்ட இன்று இரவு 9 மணிக்கு வரும் இந்த செய்தி குறிப்பு நிழலை நிஜத்தில் இருந்து பிரித்து காண்பிக்கிறது .

நம்முடைய நிழல் பொய் சொன்னாலும் பிம்பம் பொய்க்காது என்பர்! பிம்பம் அவர்களின் ஒருவர் மீது ஒருவர் காட்டும் உரிமையை பிரதிபலிக்கிறது.

ஒரு சர்ராசரி கணவன் மனைவி இடையே நடக்கும் ஊடலையும் கூடலையும் கண்ணாடி பிம்பம் போல பிரதிபலிக்கும், ஆர்யா ராஜா ஆகவும், நயன்தாரா ராணி ஆகவும் நடிக்கும் அட்லீயின் 'ராஜ ராணி' திரை படம் எடுக்கப்படும் நேர்த்திக்காகவும், வித்தியாசமான பிண்ணனிக்காகவும், முற்றிலும் மாறுப்பட்ட படைப்பாகும்.

காதல், இசை, ஜனரஞ்சகம் என சகல வெற்றி ஃபார்முலாவுடன் தயாராகும் இப்படத்தை தயாரிப்பவர்கள் பாக்ஸ் ஸ்டார் புரொடக்ஷன்ஸ் இயக்குனர் முருகதாஸ் மற்றும் சண்முகம். வித்தியாசமான விளம்பரம் மூலம் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்த 'ராஜா ராணி' ஈர்ப்பு சக்தி அதிகம் உள்ள படமாக இருக்கும் என கணிக்கின்றனர் படப்பிடிப்பு குழுவினர்".

-இதுதான் அந்த பிரஸ் ரிலீஸ்.

ரொம்ப புத்திசாலித்தனமா விளம்பரம் பண்றாங்களாமாம்!!

 

இளைஞர்களுக்கான கதை "டம் டீ"... பாப்பிசை புகழ்பரப்பும் ஜாலி படம்!

dum tea youthful pop movie
டம் டீ என்ற தலைப்பில் ஒரு படம் தயாராகி வருகிறது தமிழில். இந்தப் படத்தின் விசேஷம்... படம் முழுக்க முழுக்க பாப் இசைக்கு முக்கியத்துவம் தந்து எடுக்கப்படுவதுதான்.

சிங்கப்பூர் இளைஞர்கள் சிலர் ஒன்றுபட்டு சில ஆண்டுகளுக்கு முன் உருவாக்கிய பாப்பிசைக் குழு மமி பாய்ஸ்.

மேடை நிகழ்ச்சிகள், பாப் ஆல்பம்,குறும்படம்,திரைப் படங்களில் பாப்பிசை பங்களிப்பு என்று இயங்கிவந்த மமி பாய்ஸ் நிறுவனம் இப்போது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பிலும் இறங்கியுள்ளது.

அந்தப் படம்தான் "டம் டீ" படப்பிடிப்பு தொடங்கி நடைப்பெற்று வருகிறது. அதற்கு முன்னோட்டமாக "Dum Tea " என்கிற பெயரில் இப்படத்தில் இடம்பெறும் பாடல்கள் ஆல்பமாக வெளியாகியுள்ளது. இதில் ஏழு பாடல்கள் உள்ளன.

'டம் டீ' யின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீடு ஏவிஎம் ஸ்டுடியோவில் நேற்று நடந்தது. டம் டீ படக்குழுவினர் கலந்து கொண்டனர். ரேடியோ ஜாக்கி தீனா கலந்து கொண்டு வெளியிட்டு குழுவினரை வாழ்த்தினார்.

'டம் டீ' யில் இயக்குநர் க்ரிஷேனோடவும் முக்கிய பாத்திரம் மேற்று நடித்துள்ளார். அவர் தவிர கெவி.ஜே, பார்டி நாயகர்களாக நடிக்கிறார்கள். தாங்கள் நிஜத்தில் சந்தித்த மாதிரியான முகவெட்டுள்ள நாயகியைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

'டம் டீ' படம் பற்றி இயக்குநர் க்ரிஷேனோவிடம் கேட்ட போது, "டென்ஷனில் மனச்சோர்வில் இருக்கும்போது இளைஞர்கள் இரண்டு விஷயங்கள் செய்வாங்க. ஒன்று ஒரு டீ சாப்பிடுவார்கள். இல்லைன்னா ஒரு தம் அடிப்பார்கள். தம் அடிச்சாலும் டீ அடிச்சாலும் ரிலாக்சேஷனா இருக்கும்னு நினைக்கிறாங்க... அதுபோல இந்த 'டம் டீ' படமும் இளைஞர்களுக்கு பெரிய ரிலாக்சேஷனா இருக்கும்.

நான் தமிழில் உலக அளவுல பாப் ஆல்பம் கொண்டு வரனும்னு நினைச்சேன்.

"டம் டீ" ஒரு ஜாலியான யூத்புல்லான படமாக இருக்கும். இதில் இளைஞர்களின் பிரச்சனைகள், கஷ்டங்களை சொல்லியிருக்கோம். ஆனால் ஜாலியா காமடியா சொல்லியிருக்கோம். இந்த படத்துகான கதை என்ன தெரியுமா? ஒரு தமிழ் இசைக்குழு இசைப் பயணம் செய்யும் போது சந்திக்கிற பிரச்சனைகள் தடைகள், போராட்டங்கள்தான் கதை. இடையில் சந்திக்கும் பெண்கள், காதல் பற்றியும் கதை பேசும். இந்தப் படத்தின் கதைக்கு நாங்கள் சிரமப் படவில்லை. நாங்கள் சந்திச்ச அனுபவங்களோட தொகுப்புதான் இந்தப்படம்...," என்கிறார்.

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் க்ரிஷேனோ. ஒளிப்பதிவு ஆஞ்சாய் சாமுவேல். இசை - ஜூடு நிரஞ்சன். தயாரிப்பு எம்.பாய்ஸ் ரிக்காம்ட்ஸ் மற்றும் மமி பாய்ஸ் நிறுவனம்.

பாப்பிசையின் புகழ்பரப்பும் வகையில் இளமை காட்சிகளுடன் உருவாகி வரும் இப்படம் முதல் கட்டத்தை எட்டியுள்ளது.