கிராமி விருது விழாவில் ஏஆர் ரஹ்மான்!

இசைத் துறையின் உயரிய விருதாக கருதப்படும் ‘கிராமி விருது' வழங்கும் விழாவில் கலந்து கொண்டார் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான்.

ஆண்டுதோறும் உலகின் தலைசிறந்த இசையமைப்பாளர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 56-வது கிராமி விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரிலுள்ள ஸ்டேப்பில்ஸ் அரங்கில் இன்று நடைபெற்றது.

கிராமி விருது விழாவில் ஏஆர் ரஹ்மான்!

'ஸ்லம்டாக் மில்லினியர்' படத்திற்காக 2 ஆஸ்கார் விருதுகளை வென்றுள்ள இந்திய இசையமைப்பாளரான ஏ.ஆர். ரஹ்மான் இந்த கிராமி விருதினை ஏற்கனவே இரண்டு முறை வென்றுள்ளார்.

இன்று நடைபெற்ற 56-வது கிராமி விருதுகள் வழங்கும் விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார்.

இவ்விழாவில் அவர் பங்கேற்ற புகைப்படத்தை தனது ‘டுவிட்டர்' மற்றும் பேஸ்புக் பக்கங்களிலும் வெளியிட்டுள்ளார்.

சைவம் படத்தில் அறிமுகமாகும் நாசரின் மகன் பாஷா!

சென்னை: விஜய் இயக்கும் சைவம் படத்தில் அறிமுகமாகிறார் நாசர் - கமீலா தம்பதியின் மகன் பாஷா என்கிற குட்டு.

தலைவா படத்துக்குப் பிறகு சைவம் என்ற படத்தை தயாரித்து இயக்கி வருகிறார் ஏஎல் விஜய்.

படத்தின் தலைப்புக்கு மெனகெட்டதைப் போலவே, தனது படத்தில் அறிமுகமாகும் நாசரின் மகனுக்கு சரியான பெயர் சூட்டவும் மெனக்கெட்டார்.

சைவம் படத்தில் அறிமுகமாகும் நாசரின் மகன் பாஷா!

பல்வேறு பெயர்களைப் பரிசீலித்த பிறகு, நாசர் மற்றும் அவரது மனைவி கமீலா ஆகியோரின் உதவியோடு ' பாஷா' என பெயர் சூட்டியுள்ளார்.

குட்டு (Guddu) என்று செல்லமாக அழைக்கப்படும் 'பாஷா' அறிமுக படத்திலேயே இயக்குநரை பாராட்டு பத்திரம் வாசிக்க வைக்கிறார்.

இதுகுறித்து இயக்குநர் விஜய் கூறுகையில், "என்னுடைய படங்களில் எப்போதுமே நாசர் சாருக்கு பொருத்தமான ஒரு பாத்திரம் இருக்கும். நான் அவருடைய தீவிர ரசிகர் என்பாதால் மட்டுமல்ல, அவர் எந்த பாத்திரம் ஏற்று நடித்தாலும் அதற்கு ஜீவன் கொடுப்பவர்.

என்னுடைய சைவம் படத்திலும் அவருக்கு கதையின் முதுகெலும்பான ஒரு முதியவர் பாத்திரம். அந்த முதியவரின் இளம் வயது பேரனாக நடிக்க நடிகர் தேர்வு செய்யும் போது எதேச்சையாக அவரது மகன் லுப்துபுதீனை சந்திக்கும் போது அச்சு அசலாக அந்த பாத்திரத்துக்கு பொருத்தமாகத் தெரிந்தார். நடிக்க மறுத்த அவரை பெற்றோரின் சம்மந்ததொடு நடிக்க வைத்தேன்.

அவரை காமிராவில் பார்த்த போது 'நாயகன்' நாசரை நினைவுப்படுத்தினார். அவரது தோற்ற பொலிவு ஒரு புறம் இருக்க அவரது திறமையும், கண்ணியமும், என்னை மிகவும் கவர்ந்துவிட்டது," என்றார்.

நயன்தாராவுக்கு 'தாலி கட்ட'ப் போகும் சிம்பு!

நயன்தாராவுக்கு சீக்கிரமே தாலி கட்டப் போகிறார் சிம்பு. இது நிஜத்தில் நடக்குமா இல்லையா என்பது தெரியாது... ஆனால் சினிமாவில் நடக்கவிருக்கிறது.

பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நயன்தாராவுக்கு இந்து முறைப்படி சிம்பு தாலி கட்டுவது போன்ற காட்சியை எடுக்கிறார்களாம்.

நயன்தாராவுக்கு 'தாலி கட்ட'ப் போகும் சிம்பு!

ஏற்கனவே ராஜா ராணி படத்தில் கிறிஸ்தவ முறைப்படி ஆர்யாவும், நயன்தாராவும் சர்ச்சில் திருமணம் செய்வது போல் காட்சி வைக்கப்பட்டு, அதையே நயன்தாரா - ஆர்யா திருமணம், முதலிரவு என்றெல்லாம் பப்ளிசிட்டி செய்து பரபரக்க வைத்தார்கள்.

இந்த முறை, சர்ச்சுக்கு பதில் இந்து கோவில் ஒன்றில் சிம்பு - நயன் திருமண காட்சியை எடுக்கப் போகிறார்களாம். அனுமதி கிடைக்காவிட்டால் செட் போட்டு படமாக்கத் திட்டமாம்.

சிம்புவும் நயன்தாராவும் முன்னாள் காதலர்களாக இருந்து, ஒரு பெரிய சண்டை - பிரிவுக்குப் பிறகு இப்போது திரையில் மட்டும் இணைந்துள்ளனர்.

விக்ரம் என்னதான் பண்றார்?

விக்ரம்... கமலுக்கு நிகராக வருவார் எனப் பேசப்பட்ட நடிகர். இப்போதும் கமலைப் போன்ற திறமைசாலியாக இருந்தும், அடிக்கடி அவர் எடுத்துக் கொள்ளும் நீண்ட இடைவெளி காரணமாக ரசிகர்களிடம் மீண்டும் மீண்டும் தன்னை நினைவுபடுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

அடுத்தடுத்து வேகமாக படம் பண்ண வேண்டும்... ரிலீஸ் பண்ண வேண்டும் அவர் நினைத்தாலும் அதெல்லாம் நடப்பதில்லை.

விக்ரம் என்னதான் பண்றார்?

இந்த நிலை அவருக்கு அந்நியனில்தான் ஏற்பட்டது. அந்தப் படம் வெளியாக இரண்டு முழு ஆண்டுகள் தேவைப்பட்டது. அடுத்தடுத்து படங்கள் பண்ண அவர் முடிவு செய்த நேரத்தில் பீமாவில் மாட்டிக் கொண்டார்.

இல்லை.. இனி இப்படி நடக்காது என அறிவித்துவிட்டு, மீண்டும் அவர் சிக்கியது கந்தசாமியில். கன்னித்தீவு கதை மாதிரி இழுத்துக் கொண்டே போன அந்தப் படம் ஒருவழியாக ரிலீசானபோது, விக்ரமுக்கு வயது ஏறியதுதான் மிச்சம். படம் கெட்டபெயரைத்தான் சம்பாதித்துக் கொடுத்தது.

தெய்வத் திருமகள், தாண்டவம் என அடுத்தடுத்து படம் பண்ணவர், மீண்டும் ஷங்கரின் பிரமாண்டத்தில் சிக்கியுள்ளார். 2012-லிருந்து விக்ரமுக்கு எந்தப் படமும் வெளியாகவில்லை.

ஐ படம் ஏப்ரலில் வருமா... மேயில் வருமா என்று தெரியவில்லை. பிப்ரவரி இறுதியில்தான் படப்பிடிப்பே முடியும் என்கிறார்கள்.

அடுத்து என்ன செய்யப்போகிறார்?

மீண்டும் தரணியுடன் கைகோர்க்கிறார் விக்ரம். ஷங்கர் படத்துக்காக உடம்பைக் குறைத்து நோஞ்சானாக மாறியவர், இப்போது தரணி படத்துக்காக இயல்பான நிலைக்குத் திரும்பப் போகிறார்.

ரஜினி, கமல், விஜய், அஜீத் படங்களை டப் செய்யக் கூடாது - கன்னட திரையுலகம் ஒருநாள் ஸ்ட்ரைக்

ரஜினி, கமல், விஜய், அஜீத் படங்களை டப் செய்யக் கூடாது - கன்னட திரையுலகம் ஒருநாள் ஸ்ட்ரைக்

பெங்களூர்: தமிழில் வெளியாகும் ரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை கன்னட மொழியில் டப்பிங் செய்ய எதிர்ப்பு தெரிவித்து இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர் கன்னட திரையுலகினர்.

ஒரிஜினல் கன்னட படங்களைவிட டப்பிங் படங்கள் அதிக நாட்கள் ஓடி வசூல் குவித்து வருவது, கன்னட திரையுலகினரால் சகித்துக் கொள்ள முடியாததாக உள்ளது. எனவே பிற மொழி படங்களை கன்னடத்தில் டப்பிங் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று கன்னட நடிகர், நடிகைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கன்னட திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகள் மற்றும் கன்னட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் அவசர கூட்டம் நேற்று பெங்களூரில் நடந்தது. இதில் நடிகர்கள் சிவராஜ் குமார், பாரதி, ரவிச்சந்திரன், ஸ்ரீநாத், சசிகபூர், ஜெகேஷ், ஷரண், கவுரவ்கிரன், நடிகைகள் பூஜாகாந்தி, ராதிகா பண்டிட் மற்றும் டி.வி. நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பிற மொழி படங்களை கன்னடத்தில் டப்பிங் செய்ய எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கோரிக்கையை வலியுறுத்தி ஒருநாள் ஸ்டிரைக்கில் ஈடுபடவும் முடிவு செய்தனர்.

இன்று ஸ்ட்ரைக்

அதன்படி இன்று கன்னட திரையுலகினர் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். படப்பிடிப்புகள் நடக்கவில்லை. ஸ்டூடியோக்களும் மூடப்பட்டன. நடிகர், நடிகைகள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் மைசூர் பேங்க் சர்க்கிள் பகுதியில் இன்று காலை திரண்டனர். அங்கிருந்து மத்திய கல்லூரி மைதானத்துக்கு ஊர்வலமாக சென்றார்கள்.

அப்போது வேற்று மொழி படங்களை டப்பிங் செய்யக்கூடாது என்று கண்டன கோஷங்களை எழுப்பினர். இப்போராட்டத்துக்கு கன்னட சாகித்ய பரிஷத், கன்னட டெவலப்மென்ட் அத்தாரிட்டி, கன்னட கலாசார அமைப்புகள் போன்றவை ஆதரவு தெரிவித்து உள்ளன. கன்னட திரையுலகில் உள்ள சில சங்கங்கள் மட்டும் இந்த போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

கோலி சோடா பட - விமர்சனம்

Rating:
3.5/5

எஸ் ஷங்கர்

நடிகர்கள்: கிஷோர், முருகேஷ், சாந்தினி, சீதா, பாண்டி, ஸ்ரீராம், மதுசூதன், விஜயமுருகன், சுஜாதா, இமான் அண்ணாச்சி

இசை: எஸ் என் அருண்கிரி

பின்னணி இசை: சீலின்

மக்கள் தொடர்பு: ஜான்சன்

வசனம்: பாண்டிராஜ்

தயாரிப்பு: லிங்குசாமி

ஒளிப்பதிவு - இயக்கம்: விஜய் மில்டன்

பெரிய நடிகர்கள், பிரமாண்ட பட்ஜெட் எதுவும் இல்லாமல் ஒரு கச்சிதமான படம் தந்திருக்கிறார்கள். கதையின் அடிப்படை சற்று பலவீனமாக இருந்தாலும், படத்தை உருவாக்கிய விதம், சீட்டோடு இறுக கட்டிப் போடுகிறது.

கோயம்பேடு மார்க்கெட்டில் மூட்டை தூக்கி பிழைப்பு நடத்துபவர்கள் புள்ளி (கிஷோர்) சித்தப்பா (பாண்டி), குட்டிமணி (முருகேஷ் ), சேட்டு (ஸ்ரீராம்) ஆகிய நான்கு பெரிய சிறுவர்கள்.

கூடுதலாக சுஜாதாவின் உதவியுடன் ஆச்சி மெஸ் என்ற சிறு உணவகத்தை நடத்துகிறார்கள். கடைக்கு சொந்தக்காரரான நாயுடு மார்க்கெட்டிலேயே பெரிய தாதா. ஆறு மாதங்களுக்குப் பிறகு வாடகைப் பற்றி பேசிக் கொள்ளலாம் என்று சொல்லிவிடுகிறார்.

கோலி சோடா பட - விமர்சனம்

தங்களுக்கான அடையாளமாக இந்த உணவகத்தை நினைக்கும் நால்வரும், அதை மிகவும் ஈடுபாட்டுடன் நடத்தி வருகிறார்கள். ஒரு நாள் இரவு நாயுடுவின் மச்சான் மயிலு உணவகத்துக்கு வந்து, இரவு முழுக்க குடித்து, நண்பர்களுடன் கூத்தடித்து, பஸ்ஸுக்கு காத்திருந்த ஒரு பெண்ணை ஏமாற்றி கூட்டி வந்து கற்பழித்து அராஜகத்தின் உச்சத்துக்கே போகிறான்.

இதையெல்லாம் பார்த்து கொந்தளிக்கும் நான்கு பையன்களும் மயிலுவை போட்டுத் தாக்கிவிடுகிறார்கள். நாயுடுவுக்கு இது கவுரவப் பிரச்சினையாகிவிட, நான்கு பையன்களையும் மீண்டும் மெஸ் எதிரில் வைத்து தாக்கினால்தான் தன் மரியாதை காப்பாற்றப்பட்டதாக அர்த்தம் என்று கூறி, தாக்க ஆளனுப்புகிறார்.

கோலி சோடா பட - விமர்சனம்

இந்த சண்டையில் மயிலு மற்றும் அவன் கூட்டாளிகளை கடுமையாகத் தாக்கிவிடுகிறார்கள் சிறுவர்கள். ஆத்திரமடைந்த நாயுடு, பையன்களை கடுமையாகத் தாக்கி, நால்வரையும் பிரித்து நான்கு வெவ்வேறு மாநிலங்களுக்கு அனுப்பிவிடுகிறார்.

இந்தப் பையன்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா.. தங்கள் அடையாளத்தை மீட்டார்களா என்பது சுவாரஸ்யமான க்ளைமாக்ஸ்.

படம் பார்க்க சுவாரஸ்யமாக இருந்தாலும் இரண்டு பெரிய மைனஸ்களைச் சொல்லித்தான் ஆக வேண்டும். ஒன்று என்னதான் இந்தப் பையன்கள் தங்களுக்கு அடையாளம் வேண்டும் என்று போராடினாலும், கடைக்கு உரிமையாளர் நாயுடுதானே. அவருக்கு சொந்தமான கடையில் போய் தங்கள் உரிமையை, அடையாளத்தைக் கேட்பது நியாயமில்லையே.

கோலி சோடா பட - விமர்சனம்

இரண்டாவது, பள்ளிக்கூடம் போகும் சிறுமிகளை கரெக்ட் பண்ணுவது, காதலிப்பது என வரும் காட்சிகள்.

இந்த இரண்டையும் தவிர்த்துப் பார்த்தால், கோலி சோடா நன்றாகத்தான் வந்திருக்கிறது.

கிஷோர், பாண்டி, முருகேஷ், ஸ்ரீராம் ஆகிய நான்கு சிறுவர்களும் கோயம்பேட்டிலேயே புரண்டு எழுந்திருக்கிறார்கள். சண்டைக் காட்சிகளில் அத்தனை நிஜம் தெரிகிறது.

சுஜாதாவின் மகளாக வரும் சாந்தினி, ஏடிஎம் பாத்திரத்தில் வரும் சீதா, ஆச்சியாக வரும் சுஜாதா ஆகியோர் கொஞ்சமும் மிகையில்லாத நடிப்பைத் தந்துள்ளனர்.

படத்தில் நகைச்சுவை இல்லாத குறையைப் போக்குபவர் இமான் அண்ணாச்சி. குறிப்பாக அந்த காவல் நிலைய காட்சி.

கோலி சோடா பட - விமர்சனம்

படத்தில் இரு பாத்திரங்கள் மிரள வைக்கின்றன. அத்தனை இயல்பான நடிப்பு. ஒருவர் நாயுடுவாக வரும் மதுசூதன். இன்னொருவர் மயிலாக வரும் ஆர்கே விஜய் முருகன். இருவருக்குமே இந்தப் படம் பெரிய திருப்பு முனையாக அமையும்.

அருண கிரியின் இசையில் பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை. ஆனால் சீலினின் பின்னணி இசை படத்தின் வேகத்தை காப்பாற்ற உதவுகிறது. பாண்டிராஜின் வசனத்துக்கு படத்தின் வெற்றியில் முக்கியப் பங்குண்டு!

கோயம்பேட்டை தத்ரூபமாகக் காட்டியிருக்கிறது விஜய் மில்டனின் கேமரா. அவரது திரைக்கதையும் காட்சிகளை சமரசமில்லாமல் எடுத்த விதமும் படத்தை வெற்றிக் கோட்டைத் தொட வைத்துள்ளன.