கருணாநிதிக்கு சொந்த சரக்கு கிடையாது!: தமிழருவி மணியன் சாடல்

Sathyam Television Program Sooda Oru Talk
அடுத்தவர் கருத்தை எடுத்துக்கொண்டு அதை தன்னுடைய கருத்தாக கூறி ஊடகத்தில் பரப்பிவிடுபவர் கருணாநிதி என்று காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவி மணியன் குற்றம் சாட்டினார்.

சத்யம் தொலைக்காட்சியில் இன்று காலையில் 11.30 மணிக்கு ஒளிபரப்பான ‘சூடா ஒரு டாக்’ நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தமிழருவி மணியனிடம் ஈழம் குறித்தே பெரும்பாலான கேள்விகள் கேட்கப்பட்டன. தனி ஈழம் சாத்தியமா? உலகத்தில் உள்ள ஈழத் தமிழர்களிடம் கருத்து கணிப்பு நடத்தி அதன் மூலமே தனி ஈழம் குறித்து முடிவு செய்யவேண்டும் என்று கருணாநிதி கூறியிருக்கிறாரே என்று கேள்வி எழுப்பினார் பேட்டி கண்டவர்.

அதற்கு பதிலளித்த தமிழருவி மணியன், எம் இன மக்களை காங்கிரசின் உதவியோடு ராஜபக்ஷே அழித்தெடுத்தான் என்று சூடானார். பின்னர் தொடர்ந்த அவர், அடுத்தவன் கடை சரக்கை எடுத்து தன்னுடைய கடை சரக்காக விற்பவர் கருணாநிதி என்றார். முதன் முதலாக வைகோதான் தமிழ் ஈழம் தேவையா என்பதை ஈழத் தமிழர்கள்தான் நிர்ணயம் செய்யவேண்டும். வாக்கெடுப்பு நடத்தி அவர்களிடம் கருத்துக்களை கேட்டுப் பெறவேண்டும் என்று கூறியவர். அதை இப்போது கூறும் கருணாநிதி தன்னுடைய கருத்தைப்போல பதிவு செய்யப் பார்க்கிறார் என்றார்.

பேட்டியில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும், காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராகவும் அவர் முன் வைத்த கருத்துக்கள் உலகமெங்கும் பரவியிருக்கும் ஈழத்தமிழர்களை கவர்ந்திருக்கும் என்பது நிச்சயம்.
Close
 
 

மெகா டிவியில் கோடை சிறப்பு பட்டிமன்றம்!

Summer Special Pattimanram On Maga Tv
தமிழ்நாட்டு தொலைக்காட்சிகள் எல்லாம் கோடை விடுமுறையை சிறப்பாக கொண்டாடுகின்றன. சிறப்பு திரைப்படம், கேம் ஷோ என்று ஸ்பான்சர் பிடித்து ஒளிபரப்புகின்றன. கார்ட்டூன் சேனல்கள் கேட்கவே வேண்டாம் காலை முதல் மாலை வரை நிகழ்ச்சியை பார்த்து கேள்விகளுக்கு பதிலளிக்கும் குட்டீஸ்களுக்கு சிறப்பு பரிசுகள் வேறு அளிக்கின்றன.

ஆனால் கோடை விடுமுறையில் வித்தியாசமாக யோசித்திருக்கிறது மெகா டிவி. தினம் ஒரு பட்டிமன்றம் ஒளிபரப்பி நகைச்சுவை ரசிகர்களை தங்கள் பக்கம் ஈர்த்து வருகிறது.

சமூக சேவை செய்ய தேவை பணமா? மனமா? என்ற தலைப்பில் இன்றைக்கு இரவு 8 மணிக்கு பட்டிமன்றம் ஒளிபரப்பாகிறது.

நடுவராக ராஜா பங்கேற்கிறார். பட்டிமன்றத்தில் ராஜா பேசுகிறார் என்றாலே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். இன்றைய பட்டிமன்றத்தில் நடுவரே ராஜா என்பதால் ரசிகர்களுக்கு கூடுதல் எதிர்பார்ப்புதான்.
Close
 
 

காதலித்து ஏமாற்றியதாக கழுகு பட இயக்குநர் மீது பெண் புகார்!

Girl Files Complaint On Kazhugu Director
சென்னை: தன்னை காதலித்து, திருமணம் செய்வதாக வாக்களித்து ஒன்றாக சுற்றிய பின் கைவிட்டுவிட்டதாக கழுகு பட இயக்குநர் சத்ய சிவா மீது இளம் பெண் புகார் தந்துள்ளார்.

கிருஷ்ணா நாயகனாக நடித்த ‘கழுகு’ படத்தை இயக்கியவர் சத்யசிவா. இந்தப் படத்தைத் தயாரித்த பட்டியல் சேகர் அலுவலகத்தில் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றினார் சிவரஞ்சனி என்ற பெண். படத்தின் இயக்குநரான சத்யசிவாவுக்கும் சிவரஞ்சனிக்கும் பழக்கம் ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது.

ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தார்கள். ஆனால் சத்யசிவாவிடம் திடீர் மனமாற்றம் ஏற்பட்டதாகவும் சிவரஞ்சினியை கைவிட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து சிவரஞ்சனி கூறுகையில், "பட்டியல் சேகர் அலுவலகத்தில் பணியாற்றியபோது ‘கழுகு’ பட இயக்குனர் சத்யசிவாவை சந்தித்தேன். என்னிடம் வலிய வந்து காதலிப்பதாக கூறினார். நான் ஏற்கவில்லை. நீ இல்லாவிட்டால் செத்து விடுவேன் என்று மிரட்டினார். ஒரு கட்டத்தில் அவர் நீ காதலை ஏற்றுக் கொள்ளாவிட்டால் மாடியில் இருந்து குதித்து விடுவேன் என்று கூறி மொட்டை மாடியில் நின்று கொண்டு மிரட்டினார்.

ஒருமுறை தூக்கில் தொங்கப் போவதாக கூறி துப்பாட்டாவை கழுத்தில் மாட்டினார். இப்படி சினிமாவில் வருவதுபோல செய்து காட்டி என் மனதை மாற்றினார். நானும் காதலிக்க துவங்கினேன். என்னை திருமணம் செய்வதாக உறுதி அளித்தார். அவரது பெற்றோரிடம் அழைத்து போய் அறிமுகப்படுத்துவதாகவும் சொன்னார். ஆனால் அதன்படி செய்யவில்லை.

திடீரென என்னை புறக்கணிக்க துவங்கினார். வேறு பெண்களுடன் சுற்றுவதாக அறிந்தேன். இதனால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றேன். ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு பின் பிழைத்து கொண்டேன். எனக்கு துரோகம் செய்த சத்யசிவா தண்டிக்கப்பட வேண்டும். அதற்காகத்தான் போலீசில் புகார் கொடுத்தேன்," என்றார்.

சிவரஞ்சனி மாங்காட்டைச் சேர்ந்தவர். எனவே அவரது புகாரை குமணஞ்சாவடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Close
 
 

‘கழுகு’ பட டைரக்டர் மீது கமிஷனரிடம் இளம்பெண் புகார்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
காதலிப்பதாக சொல்லி ஏமாற்றி விட்டதாக 'கழுகு' பட டைரக்டர் மீது போலீசில் இளம்பெண் புகார் செய்தார். கிருஷ்ணா, பிந்து மாதவி நடித்த படம் 'கழுகு'. சத்ய சிவா டைரக்ட் செய்தார். இவர் மீது இளம்பெண் சிவரஞ்சனி என்பவர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் அளித்தார். இதுபற்றி சிவரஞ்சனி கூறியதாவது: தயாரிப்பாளர் 'பட்டியல்' சேகர் பட நிறுவனத்தின் நிர்வாக பணிகளை கவனித்து வந்தேன். கழுகு படத்தின் பணி தொடங்கியபோதுதான் இயக்குனர் சத்ய சிவாவை முதலில் சந்தித்தேன். பின்னர் அவர் என்னை காதலிப்பதாக கூறியதுடன் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் கூறினார். அதை ஏற்க மறுத்தேன். 'காதலிக்க சம்மதம் தெரிவிக்காவிட்டால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வேன்' என்று மிரட்டினார். தொடர்ந்து என்னிடம் அவர் அன்பாக பழகியதால் அவரின் காதல் உண்மையானது என்று நினைத்தேன். காதலை ஏற்றுக்கொண்டேன். பின்னர் பல இடங்களுக்கு ஜோடியாக சுற்றினோம். பிறகுதான் அவர் என்னை தவிர வேறு 2 பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பது தெரியவந்தது.

இதுபற்றி கேட்டபோது, 'இல்லை' என்று மறுத்ததுடன் எனது பெற்றோரை மார்ச் 18ம் தேதி சந்திக்க வருவதாகவும், அப்போது திருமணம் குறித்து பேசுவதாகவும் கூறினார். அதை நம்பினேன். ஆனால் சொன்னபடி வரவில்லை. இதையடுத்து நான் விஷம் குடித்துவிட்டேன். உடனடியாக என்னை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் 16 நாட்கள் சிகிச்சை பெற்றேன். அப்போது தினமும் என்னை சத்யசிவா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். 'தற்போது அடுத்த படத்துக்கான டிஸ்கஷனுக்கு வெளியூர் செல்கிறேன். திரும்பி வந்ததும் நிச்சயதார்த்தம் செய்து கொள்கிறேன்' என்று கூறினார். ஆனால் சொன்னபடி அவர் திரும்பி வரவில்லை. இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தேன். சத்ய சிவா மீண்டும் திரும்பி வந்தாலும் அவரை திருமணம் செய்துகொள்ள மாட்டேன். இவ்வாறு சிவரஞ்சனி கூறினார்.

சங்கத்தில் தயாரிப்பாளர் புகார் 'பட்டியல்' சேகர் கூறியதாவது:

சிவரஞ்சனி எனது அலுவலகத்தில்தான் பணிபுரிந்தார். அவரும் சத்யசிவாவும் காதலிப்பது எனக்கு தெரியாது. தெரிந்திருந்தால் அப்போதே கண்டித்திருப்பேன். சத்யசிவா மீது சிவரஞ்சனி கமிஷனரிடம் புகார் கொடுத்ததுபற்றி சமீபத்தில்தான் தெரியும். தற்போது சிவரஞ்சனி எனது அலுவலகத்திலிருந்து ராஜினாமா செய்துவிட்டார். இயக்குனர் சத்யசிவாவை பொறுத்தவரை என்னிடமும் உண்மையாக நடந்து கொள்ளவில்லை. எனது நிறுவனத்துக்கு 3 படங்கள் இயக்குவதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தார். அந்த ஒப்பந்தத்தை எனக்கு தெரியாமல் திருடி சென்று விட்டார். இதுதொடர்பாக அவர் மீது வழக்கு தொடர உள்ளேன். தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், இயக்குனர்கள் சங்கம் ஆகிய 3 சங்கங்களிலும் சத்யசிவா மீது புகார் கொடுத்திருக்கிறேன். என்னைபோல் மற்ற தயாரிப்பாளர்களும் அவரிடம் ஏமாந்து விடக் கூடாது.


 

பள்ளி மாணவர்கள் காதலை எதிர்க்கும் வித்தியாச கதை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
காதலில் சிக்கும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு எதிர்காலத்தில் ஏற்படும் இழப்புகளை பற்றி சொல்லும் படமாக உருவாகிறது 'படிக்கிற வயசுல'. இந்த படத்தை ராஜேஷ்குமார் எழுதி, இயக்குகிறார். ஹீரோவாகவும் நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: பிளஸ் 2 படிக்கும் மாணவர் ஒருவரும், மாணவியும் பள்ளியிலேயே அதிக மதிப்பெண் வாங்குபவர்கள். அவர்கள் இருவர் மனதிலும் படிப்படியாக கல்வி மீதான ஆர்வம் குறைந்து காதல் வலையில் சிக்குகின்றனர். இதனால் ஏற்படும் இழப்பு, எதிர்காலத்தில் எந்தவிதமான பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்பதை மையமாக வைத்து கதை உருவாகி உள்ளது. பள்ளி மாணவர்களிடையே காதல் உணர்வை தூண்டும் கதைகள்தான் இதுவரை வந்திருக்கிறது. ஆனால் இப்படம் படிக்கிற வயதில் படிப்பில் மட்டுமே கவனம் இருக்க வேண்டும் என்ற கருத்தை சொல்லும் படமாக உருவாகிறது. ஹீரோயின் ராகி. இசை ஹரிபாபு. தயாரிப்பு ராதாகிருஷ்ணன்.


 

ரவி தேஜா படத்தில் இருந்து த்ரிஷா திடீர் விலகல்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ரவி தேஜா படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட த்ரிஷா, திடீரென்று விலகிவிட்டார். டோலிவுட் ஹீரோ ரவி தேஜா நடிக்கும் புதிய படம் 'சார் ஒஸ்தாரா'. இந்த படத்துக்காக ஹீரோயின் தேர்வு வேலையில் மும்முரமாக இருந்தார் இயக்குனர் பரசுராம். இந்நிலையில், த்ரிஷாவை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யும்படி ரவி தேஜா சிபாரிசு செய்தாராம். இதையடுத்து த்ரிஷாவை சந்தித்த இயக்குனர், அவரிடம் கதை சொன்னார். கதை பிடித்திருந்ததால் நடிக்க சம்மதித்த த்ரிஷா, கால்ஷீட்ஒதுக்கி தந்தார். இந்நிலையில், ரவி தேஜா படத்தில் இருந்து விலகுவதாக த்ரிஷா நேற்று திடீரென்று அறிவித்தார். 'ஒப்புக்கொண்ட படத்தில் இருந்து விலகியது ஏன்' என்று கேட்டபோது, ''இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது உண்மைதான். இதற்காக தேதிகள் ஒதுக்கி கொடுத்தேன். ஆனால், தற்போது கால்ஷீட் தேதி மாற்றி கேட்கிறார்கள். அதை ஏற்றால் ஏற்கனவே நடிக்க ஒப்புக்கொண்டிருந்த படங்களின் கால்ஷீட்டில் பிரச்னை ஏற்படும். அதனால் ரவி தேஜா படத்தில் இருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டது' என்றார். இதையடுத்து காஜல் அகர்வாலை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்ய இயக்குனர் முயற்சி மேற்கொண்டிருக்கிறார்.


 

திவ்யா படத்துக்கு மதவாதிகள் எதிர்ப்பு மன்னிப்பு கேட்டார் உபேந்திரா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
திவ்யா நடித்த கன்னட படத்துக்கு மதவாதிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஹீரோ உபேந்திரா மன்னிப்பு கேட்டார். உபேந்திரா, திவ்யா நடித்துள்ள கன்னட படம் 'கடாரி வீரா சுரசுந்தராங்கி'. அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம் கடந்த வாரம் வெளியானது. இதில் சில காட்சிகள் இந்து கடவுளை சிறுமைப்படுத்துவதாகவும், மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும் இருப்பதாக கூறி இந்து மத தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பஜ்ரங் தள் மற்றும் ஸ்ரீராம் சேனா ஆதரவுடன் ஸ்ரீவித்யாத்சீஷா தீர்த்த சுவாமிகள் இப்படத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் படத்தை நகரங்களில் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த மத தலைவர்களை ஹீரோ உபேந்திரா சந்தித்து மன்னிப்பு கேட்க முடிவு செய்தார். உடுப்பியில் உள்ள ஷிரூர் மடத்துக்கு நேரில் சென்ற அவர், ஸ்ரீவித்யாத்சீஷா சுவாமிகள் மற்றும் மத தலைவர்களை சந்தித்து பேசினார். 'யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் காட்சிகள் படமாக்கவில்லை. அப்படி புண்படுத்தி இருந்தால் பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்' என்றார். குறிப்பிட்ட காட்சிகளை படத்தில் இருந்து நீக்குவதாகவும் உறுதி அளித்தார்.


 

ராட்டினம் - திரைப்பட விமர்சனம்

Raatinam Movie Review   
-எஸ் ஷங்கர்

நடிப்பு: லகுபரன், ஸ்வாதி, தங்கசாமி, எலிசபெத்

ஒளிப்பதிவு: ராஜ் சுந்தர்

இசை: மனு ரமேசன்

பிஆர்ஓ:
நிகில்

தயாரிப்பு: ஜே மகாலட்சுமி

எழுத்து - இயக்கம்:
கே எஸ் தங்கசாமி

தமிழ் சினிமாவில் எப்போதாவது ஒரு முறைதான் சினிமா அல்லாத ஒரு வாழ்க்கையை திரையில் பார்த்து, அந்த மனிதர்களோடே நாமும் பயணிக்க முடியும். அப்படிப்பட்ட அழகான, அரிதான சினிமாக்களில் ஒன்று ராட்டினம்.

நாம் பார்த்த அல்லது அனுபவித்த வலியை, அந்தத் தன்மை மாறாமல் திரையில் மீண்டும் பார்க்கும்போது மனசெல்லாம் இனம்புரியாத உணர்வு ஆக்கிரமித்து நிற்கிறது.

எளிமையான கதை, நேர்மையான காட்சியமைப்பு, எந்த இடத்திலும் சினிமாத்தனமில்லாத இயல்பு...இவைதான் ராட்டினத்தின் சிறப்புகள்.

தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளை இதற்கு முன் வேறு எந்தப் படத்திலும் இத்தனை சிறப்பாக கதைக்களமாக்கியதில்லை என்பதற்காகவே இயக்குநர் தங்கசாமியைப் பாராட்ட வேண்டும்.

பள்ளி முடித்த ஜெயத்துக்கும் (லகுபரன்) பள்ளியில் படிக்கும் தனத்துக்கும் (ஸ்வாதி) காதல். ஜெயத்தின் அண்ணன் வளரும் இளம் அரசியல்வாதி. அண்ணி லோக்கல் கவுன்சிலர். தனத்தின் அப்பா தூத்துக்குடி துறைமுகத்தின் சேர்மன். தாய் மாமா பெரிய 'க்ரிமினல்'... லாயர். அரசியல் தொடர்புகள் எக்கச்சக்கம்!

காதலர்கள் இருவரும் அன்பையும் பரிசுகளையும் பரிமாறிக்கொள்வதோடு நில்லாமல், ஒரு முறை திருச்செந்தூர் வரை ஜாலியாக பைக்கில் போகிறார்கள். வரும்போது ஆத்தூர் பாலத்தில் போலீஸ் மடக்கி விசாரிக்கிறது. அதோடு நில்லாமல் பெண்ணின் வீட்டில் போட்டுக் கொடுத்துவிடுகிறார் இன்ஸ்பெக்டர்.

பிரச்சினையை பக்குவமாகக் கையாள நினைக்கும் பெண்வீட்டுத் தரப்பு, நேராக ஜெயம் வீட்டுக்கு வந்து விஷயத்தைச் சொல்லி கண்டித்து வைக்கச் சொல்கிறார்கள். பெண்ணை கொஞ்ச நாள் வெளியூருக்கு அழைத்துப் போய் வைத்திருந்து, மீண்டும் வருகிறார்கள். ஆனால் காதலர்கள் மீண்டும் சந்திக்கிறார்கள். தனத்தின் அண்ணன் பார்த்துவிட பிரச்சினை வெடிக்கிறது.

பெற்றோரின் வெறுப்பு தாங்காமல் வீட்டைவிட்டு வெளியேறும் தனம், தன்னை அழைத்துப் போய் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறாள். குலசை தசரா விழாவில் வைத்து தாலி கட்டுகிறான் ஜெயம்.

அதற்குள் விஷயத்தை இருவீட்டாரும் அரசியலாக்கிவிடுகிறார்கள். ஜெயத்தின் அண்ணன் அசோக்கை, கட்சியின் அண்ணாச்சி அழைத்து எச்சரிக்க, பதிலுக்கு இவரும் கையை உயர்த்த, அது அசோக் கொலையில் முடிகிறது.

விஷயம் கேள்விப்பட்டு கதறிக்கொண்டு புது மனையியுடன் வீடு திரும்புகிறான் ஜெயம். அங்கே விதவை அண்ணி வெறுப்பை உமிழ, இன்னொரு பக்கம் காத்திருக்கும் தனத்தின் வீட்டினர், அவளை தரதரவென இழுத்துப் போகிறார்கள்.

ஜெயம் கட்டிய தாலி என்ன ஆனது? என்பது க்ளைமாக்ஸ்!

ஜெயம் - தனம் திருமணம், அசோக் கொலை போன்ற சில காட்சிகள், திருப்பங்களை யூகிக்க முடிந்தாலும் எந்தக் காட்சியிலும், 'அட இது சினிமாத்தனமா இருக்கே' என்று சொல்ல முடியாததுதான் இந்தப் படத்தின் மிகப் பெரிய ப்ளஸ்.

லகுபரன், ஸ்வாதி இருவருக்குமே இது முதல் படம் என்றாலும் நம்ப முடியாத அளவு இயல்பாக நடித்திருக்கிறார்கள். ஒரு இம்மி கூட மிகைப்படுத்தல் இல்லாத காதலையும் சோகத்தையும் திரையில் பார்ப்பது, நம்மை நாமே பார்த்துக் கொள்வதைப் போல புதிதாக உள்ளது.

தனத்தின் பெற்றோர், அந்த கிரிமினல் லாயர், அரசியல் அண்ணாச்சி, ஜெயத்தின் அண்ணி, குறிப்பாக அண்ணன் வேடத்தில் அசத்தியிருக்கும் தங்கசாமி என அனைவருமே நிஜ பாத்திரங்களாகவே வாழ்ந்துள்ளனர்.

கதை புதிதில்லை... 'காதல்' போன்ற படங்களில் பார்த்ததுதான் என்றாலும், தினம் இப்படி ஒரு கதை, சம்பவங்கள் நடந்து கொண்டுதானே உள்ளன. அப்படிப் பார்த்தால் ஆணுக்கும் பெண்ணுக்குமான காதல் என்பதே கூட திரும்பத் திரும்ப அரங்கேறிய நாடகம்தானே!

படத்தின் முக்கிய பலம் க்ளைமாக்ஸ். ஆனால் இன்னொரு பக்கம் இது சர்ச்சைக்குரியதும் கூட. பள்ளி வயதில் வரும் எல்லா காதலுமே மாறுதலுக்குட்பட்டது என்று சொல்ல முடியாதே. அந்தக் காதலின் தொடர்ச்சி அடுத்தக் கட்டத்துக்குப் போய், வாழ்க்கையில் இணைந்தவர்களை என்னவென்பது!

ராஜ் சுந்தரின் ஒளிப்பதிவு, மனு ரமேசனின் இசை என தொழில்நுட்ப ரீதியாகவும் இந்தப் படம் சோடை போகவில்லை. பின்னணி இசையில் மண்ணும் மனிதர்களின் மனமும் தெரிகிறது.

புதிய இயக்குநர்களில் தங்கசாமி நம்பிக்கை தரும் படைப்பாளியாகத் தெரிகிறார். வாழ்த்துகள்!
Close
 
 

அதிமுக அரசின் ஓராண்டு 'சாதனை': உஷ்ஷ்... அப்பப்பா, முடியல!

Aiadmk Government Advertisement Media
அதிமுக ஆட்சி பொறுப்பேற்று மே 17ம் தேதியோடு ஓராண்டு நிறைவடைந்துள்ளது. அரசின் சாதனையை விளக்கி நாளிதழ்களிலும் தொலைக்கட்சிகளிலும் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன.

கடந்த சில நாட்களாகவே ஜெயா குழும தொலைக்காட்சிகளான, ஜெயா டிவி, ஜெயா ப்ளஸ், ஜெயா மேக்ஸ், ஜெயா மூவி என எந்த தொலைக்காட்சிகளை போட்டாலும் சரித்திர புகழ் வாய்ந்த விளம்ப படம் ஒன்று வருகிறது.

நடிகர் சிங்கமுத்து, சினிமா வசனகர்த்தா லியாகத் அலிகான் மற்றும் நகைச்சுவை நடிகர் ஒருவர் இந்த விளம்பர படத்தில் நடித்திருக்கின்றனர்.

அதிமுக ஆட்சியின் ஓர் ஆண்டுகால சாதனை பற்றி நடிகர் சிங்கமுத்து, லியாகத் அலிகானிடம் பெருமை பொங்க விளக்கம் அளிக்கிறார்.

தமிழ்நாட்டில் மக்களுக்கு எல்லாமும் கிடைக்கவும்.. பசி, பட்டினியின்றி இருக்க வேண்டும் என்பதற்காகவே விசன் 2023 என்ற திட்டத்தை அம்மா அறிவித்துள்ளார் என்று கூறிய உடன் அவரது வசனத்திற்கு ஏற்ப சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா பேசிய கிளிப்பிங்ஸ் ஒளிபரப்பாகிறது.

இத்தனைக்கும் இந்தத் திட்டமே இன்னும் ஏட்டு வடிவில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதையே சாதனையாக கூறுகிறார் சிங்கமுத்து.
இந்த விளம்பர படத்தில் ஒரு காட்சி.. ஒரு ரேசன் கடை.. சூப்பர் மார்க்கெட் ரேஞ்சுக்கு மிக சுத்தமாக, எல்லா பொருட்களும் குவிந்து கிடக்கின்றன. ஆனால், கடையில் கூட்டமே இல்லை.

இது குறித்து ஒருவர் கேள்வி எழுப்புகிறார்.. என்னய்யா கடையில யாருமே இல்ல, உள்ள ஒன்னுமே இல்லையா என்று அவர் கேட்கவும்,

சிங்கமுத்து சொல்லும் பதில் இது..

யோவ் அது போன ஆட்சியல. மக்களுக்கு தர வேண்டிய பொருளையெல்லாம் வேற மாநிலத்துக்கு கடத்திட்டு கடைய காலியா வச்சுருந்தாங்க. அதனால மக்கள் பொருள் கிடைக்குமோ இல்லையோன்னு பயந்து போய் ராத்திரியே மஞ்சள் பைய தலைக்கு கீழ வச்சுக்கிட்டு ரேசன் கடை வாசல்லேயே தூங்குனாங்க..

ஆனால், அம்மா ஆட்சிய ஒரே ஏரியாவுல 3 ரேசன் கடைய திறந்துட்டாங்க.. கடத்தலும் நின்னு போச்சு.. அதனால கடைக்கு எப்ப போனாலும் பொருள் கிடைக்கும்கிற சந்தோஷத்துல மக்கள் கூட்டமா வர்றதில்ல..

இது சிங்கமுத்துவின் வசனம்.

உங்க எரியா ரேசன் கடையில் மண்ணெண்ணெய் போடும் போது நடக்கும் கலாட்டாவை ஒரு எட்டு போய் பார்த்துவிட்டு வந்து இந்த விளம்பரத்தை பாருங்கள்..

அப்போது நீங்கள் டிவியை உடைத்தால் அரசு பொறுப்பல்ல!
Close
 
 

ஜெயா டிவியில் சபாஷ் மீராவாக கலக்கும் கோவை சரளா!

Kovai Sarala Acting Jaya Tv Comedy Serial
ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும் சபாஷ் மீரா நகைச்சுவை தொடர் மூலம் சின்னத்திரையில் அழுத்தமாக கால் ஊன்றியுள்ளார் கோவை சரளா.

சினிமாவில் நகைச்சுவை நடிகையாக முத்திரை பதித்தவர்கள் சின்னத்திரையிலும் தங்களுக்கு என தனி இடத்தை தக்கவைத்துக்கொண்டிருக்கின்றனர். மனோரமா ஆச்சி, சச்சு ஆகியோர் பெரிய திரையில் வாய்ப்பு இருந்தாலும் சின்னத்திரையில் நடித்து சிறப்பான இடத்தை பிடித்தனர். அவர்கள் வரிசையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சின்னத்திரைக்கு வந்த கோவை சரளா கலைஞர் டிவியில் கேம் ஷோ நடத்திக்கொண்டிருக்கிறார்.

அதேசமயம் ஜெயா டிவியில் சபாஷ் மீரா என்ற நகைச்சுவை தொடரிலும் அவர் கலக்கலாக நடித்து தான் மாறுபட்ட நகைச்சுவை நடிகை என்று முத்திரை பதித்துள்ளார்.

திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 1.30 மணிக்கு இந்த தொடர் ஒளிபரப்பாகிறது. இதில் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் காத்தாடி ராம்மூர்த்தியின் மகள் கதாபாத்திரம் கோவை சரளாவிற்கு. ஏ.வி.பி தயாரித்துள்ள இந்த தொடருக்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியிருப்பவர் கோபு பாபு.
Close
 
 

ஜூன் 8-ம் தேதி பில்லா -2?

Billa 2 June 8    | அஜீத்  
ஏகப்பட்ட பில்ட் அப் கொடுக்கப்பட்டு வரும் அஜீத்தின் பில்லா 2 படம் ஜூன் முதல் வாரத்தில் வெளியாகும் என்று முதல் தகவல் கசியவிடப்பட்டுள்ளது.

சக்ரி டோலெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள பில்லா 2 படம் முன்பே முடிந்து, விற்பனையும் நடந்துவிட்டது. மொத்தம் ரூ 40 கோடிக்கு விற்றுள்ளது இந்தப் படம்.

இன் என்டர்டெயின்மென்ட் சார்பில் சுனில் கேட்டர்பால் தயாரித்துள்ள பில்லா 2 -ன் விநியோக உரிமையை ஆஸ்கர் ரவிச்சந்திரன் பெற்றுள்ளார்.

மே முதல் தேதி இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகின. ஆனால் பெரிய அளவு ஹிட்டான மாதிரி தெரியவில்லை. ஒருவேளை படம் வந்த பிறகு பாடல்கள் பிரபலமாகலாம்.

அடுத்து பில்லா 2 படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவிக்க உள்ளனர். வரும் ஜூன் 8-ம் தேதி படம் வெளியாகும் என தங்களுக்கு தகவல் சொல்லப்பட்டுள்ளதாக பில்லா 2 விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அதற்கு முன் படத்தின் இரண்டாவது ட்ரைலர் வெளியாகும் என்றும், அடுத்தவாரம் படத்தின் சென்சார் முடிந்ததும் வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
Close
 
 

பூனம் பாண்டேவுக்கு முத்திப் போச்சு!-'பெட்ரூம் ஸ்டிரிப்டீஸை' வெளியிட்டார்!!!

19 Poonam Pandey Strips Bedroom Aid0091   | வீடியோ   
பூனம் பாண்டேவுக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. முழு நிர்வாணமாக தரிசனம் தருவேன் என்று கூறிய அவர் இப்போது தனது அந்தரங்க உறுப்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் வீடியோக்களை படிப்படியாக வெளியிட்டு தனது புதிய இணையதளத்துக்கு சூப்பராக விளம்பரம் தேடி வருகிறார்.

இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றால் முழு நி்ர்வாணமாக காட்சி அளிப்பேன் என்று அறைகூவல் விட்டார் பூனம். அப்படி அறிவிப்பு விடுவதற்கு ஒரு விநாடி முன்பு வரை அவரை நிறையப் பேருக்குத் தெரியாது. ஆனால் அவரது அறிவிப்பு பல லட்சம் பேரின் கவனத்தை சில நொடிகளில் ஈர்த்து விட்டது. ஆனால் இந்தியா உலகக் கோப்பையை வென்று இத்தனை மாதங்களாகியும் இதுவரை அவர் சொன்னதைச் செய்யவில்லை.

மாறாக அரை நிர்வாணம், முக்கால் நிர்வாணம், முக்கால் அரைக்கால் நிர்வாணம் என 'ரேஷன்' கணக்கில் தனது உடல் பாகங்களை வெளியுலகுக்கு காட்ட ஆரம்பித்துள்ளார்.

புதிதாக அவர் தொடங்கியுள்ள இணையதளத்திற்காக நூதன முறையில் விளம்பரம் தேடி வருகிறார் பூனம். இதற்காக பெட்ரூம் சீக்ரெட்ஸ் என்ற பெயரில் வீடியோ டிரெய்லர்களை அவர் வெளியிட்டு வருகிறார். முதல் வீடியோவில் குளிக்கும் காட்சியில் அவர் தோன்றினார். இதிலும் கூட அவர் முழுமையாக இல்லை. பிரா மற்றும் பேன்டீஸ் அணிந்து கொண்டு ஹேன்ட் ஷவருடன் குளிப்பது போல அதில் காட்சி அளித்தார் பூனம்.

இந்த நிலையில் தற்போது தனது பெட்ரூமில் ஸ்டிரிப்டீஸ் செய்தபடி காட்சி அளிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.அதில் படுக்கை அறையில் உட்கார்ந்தபடியும், வளைந்து நெளிந்தபடியும், நாக்கைச் சுழற்றியபடியும், பறக்கும் முத்தங்களைக் கொடுத்தபடியும் சாக்ஸை கழட்டுகிறார், ஷூவைக் கழற்றுகிறார். படுக்கையில் புரளுகிறார், டான்ஸ் மூவ்மென்ட் கொடுக்கிறார், முன்னழகையும், பின்னழகையும் மடக்கியும், முடக்கியும் காட்டுகிறார். இன்னும் என்னென்னவோ செய்கிறார்.

ஒவ்வொரு உடையாக கழற்றிப் போடும் பூனம் இறுதியாக தனது கருப்பு நிற மேலுடையையும் கழற்றி விட்டு வெள்ளை நிற டாப்ஸ் மற்றும் ஷார்ட்ஸுடன், பின்புறத்தைக் காட்டியபடி படுக்கையில் படுத்துக் கொண்டு விடை பெறுகிறார்.

இன்னும் என்னென்ன செய்யப் போகிறாரோ ...!

பூனம் பாண்டேவின் 'பெட்ரூம் ஸ்டிரிப்டீஸ்' வீடியோ!
Close
 
 

'அருவிக்‌ கரை‌யோ‌ரம்‌'... காப்பாற்றியவனையே தீர்த்துக்கட்டும் பெண்ணின் கதை!

Aruvikaraiyoram Movie Preview
'எல்‌லா‌ தற்‌கா‌ப்‌பு‌ கலை‌களை‌யு‌ம்‌ கற்‌ற ஒரு ஆசா‌ன்‌, தப்‌பித்‌து ஓடி‌ வரும்‌ ஒரு பெ‌ண்‌ணை‌ கா‌ப்‌பா‌ற்‌றுகி‌றா‌ர்‌. அதோ‌டு அந்‌தப்‌ பெ‌ண்‌ணுக்‌கு பா‌துகா‌ப்‌பு‌ம்‌ அடை‌க்‌கலமும்‌ கொ‌டுத்‌து உதவு‌கி‌றா‌ர்‌. ஆனா‌ல்‌ அந்‌தப்‌ பெ‌ண்‌ சமயம்‌ பா‌ர்‌த்‌து அவரை‌ தீ‌ர்‌த்‌துக்‌ கட்‌டுகி‌றா‌ர்‌. அது ஏன்‌?'

-இந்த கதைக் கருவை வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம் 'அருவிக்கரையோரம்.'

ஸ்ரீஹரி‌ மூ‌வி‌ஸ்‌ சா‌ர்‌பி‌ல்‌ பி‌.பா‌ரதி‌மோ‌கன்‌ தயா‌ரி‌த்‌து, இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஹீரோவும் அவரே. ஜோடியாக ஜூலு, சினி என இரண்டு புதிய நாயகிகள்.

வி‌ல்‌லனா‌க தி‌ரவி‌யபா‌ண்‌டி‌யன்‌ நடி‌க்‌க, நகை‌ச்‌சுவை‌ வே‌டத்‌தி‌ல்‌ அல்‌வா‌ வா‌சு, சுப்‌பு‌ரா‌ஜ் நடி‌த்‌துள்‌ளனர்‌. மே‌லும்‌ அருண்‌, சோ‌னி‌, நி‌த்‌யா‌மூ‌ர்‌த்‌தி‌ உட்‌பட பலர்‌ நடி‌த்‌துள்‌ளனர்‌. இயக்‌குநர்‌ லே‌னா‌ மூ‌வே‌ந்‌தர்‌ ஒரு முக்கி‌ய‌ கதா‌பா‌த்‌தி‌ரத்‌தி‌ல நடி‌த்‌துள்‌ளா‌ர்‌.

வீ‌.தஷி‌ இசை‌யமை‌க்‌க, ஆதி‌ ஒளி‌ப்‌பதி‌வு‌ செ‌ய்‌துள்‌ளா‌ர்.

இந்‌தப்‌ படத்‌தி‌ன்‌ படப்‌பி‌டி‌ப்‌பு‌ கன்‌னி‌யா‌குமரி‌ மா‌வட்‌டத்‌தி‌ல்‌ உள்‌ள அருவி‌க்‌கரை‌, தி‌ர்‌பரப்‌பு‌, வெ‌ள்‌ளி‌ மலை‌, தி‌ருநயி‌னா‌ர்‌குறி‌ச்‌சி‌, ஆசி‌யப்‌ பு‌கழ்‌தொ‌ட்‌டி‌ப்பா‌லம்‌‌ போ‌ன்‌ற இடங்‌களி‌ல்‌ நடை‌பெ‌ற்‌று முடி‌வடை‌ந்‌துள்‌ளது.

படம் குறித்து பாரதிமோகன் கூறுகையில், "கா‌தல்‌, செ‌ன்‌‌டி‌மெ‌ண்‌ட்‌, நகை‌ச்‌சுவை என எல்‌லா‌ம்‌ கலந்‌த ஜனரஞ்‌சகப்‌ படமா‌க உருவா‌க்‌கி‌ இருக்‌கி‌றே‌ன்‌. இது ஒரு கலகலப்‌பா‌ன சுவரா‌ஸ்‌யமா‌ன படம்‌. படத்‌தி‌ல்‌ இடம்‌ பெ‌றும்‌ ஐந்‌து பா‌டல்‌களும்‌ சூ‌ப்‌பரா‌க வந்‌தி‌ருக்‌கு.வசன கா‌ட்‌சி‌கள்‌ முடி‌ந்‌து படத்‌தொ‌குப்‌பு‌ வே‌லை‌கள்‌ நடை‌பெ‌ற்‌று வருகி‌றது. பா‌டல்‌ கா‌ட்‌சி‌களை‌ செ‌ன்‌னை‌ அருகே‌ உள்‌ள கி‌ரா‌மங்‌களி‌லும்‌, ஊட்‌டி‌யி‌லும்‌ படமா‌க்‌க இருக்‌கி‌றே‌ன்‌..." என்‌றா‌ர்‌.
Close
 
 

விஜய் டிவியில் தமிழில் அமீர்கானின் 'சத்ய மேவ ஜெயதே'

Aamir Khan S Satyamev Jayate On Star Vijay Tv
ஸ்டார் ப்ளஸ், டிடி ஆகிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சத்ய மேவ ஜெயதே நிகழ்ச்சி விஜய் டிவியில் ஞாயிறுக்கிழமை காலை 11 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

இந்தி நடிகர் அமீர்கான் பங்கேற்று நடத்தும் ரியாலிட்டி ஷோ ‘சத்ய மேவ ஜெயதே’. இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் ஞாயிறு காலை 11 மணிக்கு ஸ்டார் ப்ளஸ் தொலைக்காட்சியிலும், டிடி யிலும் ஒரே நேரத்தில் ஒளிபரப்பாகிறது. ஆரம்பித்த முதல் வாரத்திலேயே பெண் சிசுக் கொலை, கருக்கொலையை மையமாக வைத்து விவாதம் நடைபெற்றது. பெண் கருக்கொலைக்கு எதிராகவே கருத்துக்களைப் பதிவு செய்தனர். டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களிலும் இது பற்றிய பேச்சாகவே இருந்தது.

இந்த நிகழ்ச்சிக்கான புரமோசன் பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக ஊர் ஊராக சென்று அங்குள்ள பிரச்சனைகளை அலசுகிறார் அமீர்கான். இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் வரும் ஞாயிறு காலை 11 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

அமீர்கான் ஒருவேளை தமிழில் பேசுவாரோ?!
Close
 
 

இன்று 2 தமிழ் - 2 தெலுங்கு டப்பிங் படங்கள் ரிலீஸ்!

Friday Releases Tamil Movie
இந்த வெள்ளிக்கிழமை இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகின்றன. இரண்டுமே சிறிய பட்ஜெட்டில் உருவானவை.

முதல் படம் கண்டதும் காணாததும். புதிய இயக்குநர் சீலன் இயக்கியுள்ள படம். அவரே தயாரிப்பாளர். நடித்தவர்கள் அனைவருமே புதுமுகங்கள்.

மது, காமம், களவு இந்த மூன்றும் உண்மைக் காதலை, நட்பை எப்படிச் சிதைத்துவிடுகிறது என்பதை இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார். தமிழகம் முழுவதும் சொந்தமாக ரிலீஸ் செய்துள்ளனர்.

இன்று வெளியாகும் இன்னொரு படம் ராட்டினம்.

கேஎஸ் தங்கசாமி இயக்கத்தில், மதன் தயாரிப்பில் வந்துள்ள இந்தப் படமும் முற்றிலும் புதியவர்கள் நடித்ததுதான். ஒரு முகத்தைக் கூட இதற்கு முன் திரையில் பார்த்திருக்க முடியாது.

இளம் வயதுக் காதல், அதைத் தொடரும் பிரச்சினைகள், அந்தக் காதல் எந்த அளவு உறுதியானது என்பதை இந்தப் படத்தில் ரொம்ப இயல்பாகச் சொல்லியிருக்கிறார்.

படம் வெளியாகும் முன்பே நல்ல 'டாக்' கிளம்பியிருப்பதால், ஓரளவு எதிர்ப்பார்ப்பு கூடியிருக்கிறது.

இந்த ஒரிஜினல் படங்களுடன் இரண்டு டப்பிங் படங்களும் வெளியாகின்றன. அவற்றில் முக்கியமானது பாலகிருஷ்ணா - நயன்தாரா நடித்த ஸ்ரீராமராஜ்யம். இன்னொன்று ஹன்சிகா- சித்தார்த் - ஸ்ருதி நடித்த ஸ்ரீதர்.

ராம்கோபால் வர்மா இயக்கியுள்ள டிபார்ட்மென்ட் இந்திப் படமும், ஹாலிவுட் படமான ப்ளாக் ட்ராகனும் இன்று வெளியாகின்றன.
Close
 
 

படங்களுக்கு வரிவிலக்கு - ஏன் இந்த பாரபட்சம்?

Tamil Films Struggling Get Tax Benefits
கருணாநிதி முதல்வராக இருந்த 5 ஆண்டுகளும் சினிமாக்காரர்கள் அனுபவித்த சலுகைகள் கொஞ்சமல்ல. சினிமாக்காரர்களில் யாராவது ஒருவருக்கு காய்ச்சல் என்றால் கூட, மருத்துவ செலவை அரசே ஏற்குமா என்று கேட்கும் அளவுக்கு சலுகைகள், உதவிகள் வாரி வழங்கப்பட்டன.

ஒருபடி மேலே போய் நல வாரியம் அமைக்கும்படி சரத்குமார் கேட்டு, அதற்கும் ஒப்புதலும் அளித்தார் கருணாநிதி.

ஆனால் இன்று நிலைமை வேறு. அனைத்து சலுகைகளும் கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டுவிட்டன.

தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்று கருணாநிதி ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. வைக்கிற தலைப்பு ஏதோ ஒரு விதத்தில் தமிழ்ப் பெயர் என்று நிரூபித்தாலே போதும், இந்தக் கட்சி அந்தக் கட்சி என்று பார்க்காமல் முழுமையான வரிச்சலுகை கிடைத்தது.

ஆனால் இன்று தமிழக அரசிடம் வரிச்சலுகைப் பெற பெரும் போராட்டமே நடத்த வேண்டிய நிலை. போராட்டம் என்றால் வெளிப்படையாக அல்ல...மென்று விழுங்கித்தான் தங்கள் கோரிக்கையை சொல்ல முடியும். கொஞ்சம் ஓங்கி குரல் கொடுத்தால், அடுத்து என்ன நடக்குமோ என்ற பயம் இருக்கிறது.

தமிழில் தலைப்பு, கலாச்சாரத்துக்கு பங்கமில்லாத உள்ளடக்கம், பெருமளவு வசனங்கள் தமிழில்... ஆகிய நிபந்தனைகளை நிறைவேற்றினால் அந்தப் படத்துக்கு வரிவிலக்கு தருவதாக அறிவித்த அரசு, இந்த நிபந்தனைகளை நிறைவேற்றும் அளவுக்கு வரும் நல்ல படங்களுக்குக்கூட வரிவிலக்கு தர மறுப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதில் முதல் பாதிப்பு உதயநிதியின் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்துக்குத்தான். அதற்கு ஒரே காரணம் அரசியல் என்பது வெளிப்படையாகவே தெரிந்துவிட்டது.

அடுத்த படம் வழக்கு எண் 18/9. யு / ஏ சான்று பெற்ற படம் என்று இதற்கு ஒரு காரணம் சொன்னார்கள்.

இப்போது ராட்டினம் என்ற படத்துக்கும் இதுவரை வரிவிலக்கு அளிக்கப்படவில்லை. இத்தனைக்கும் இது சின்னப் படம். வெளியாகிற தினமான இன்றிலிருந்து வரிவிலக்கு அளித்தால்தான், 30 சதவீத வரியிலிருந்து அந்தப் படம் தப்பும்.

இந்தப் படத்தைப் பார்த்த அனைவருமே படத்துக்கு வரிவிலக்கு தரலாம். ரொம்ப க்ளீனான படம் என்று கூறியுள்ளனர். ஆனால் அரசு இன்னும் முடிவை சொல்லவில்லை.

வரிவிலக்குக்கு வேறு நிபந்தனைகள் ஏதேனும் உள்ளனவா?
Close