இது ரஜினி சாங்... சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் ஸ்பெஷல் பாடல்.. லதா ரஜினி வெளியிட்டார்!

12.12.12 சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாளையொட்டி, இது ரஜினி சாங் எனும் தலைப்பில் சூப்பர் பாடல் ஒன்றை உருவாக்கி வெளியிட்டுள்ளனர் இயக்குநர் – நடிகர் ராகவா லாரன்ஸும், இசையமைப்பாளர் விஜய் ஆன்டனியும்.

rajini birthday song released latha   

சென்னை ரஜினி
நெல்லை ரஜினி
கோவை ரஜினி
மதுரை ரஜினி…

நேற்று சூப்பர் ஸ்டார்
இன்று சூப்பர் ஸ்டார்
நாளை சூப்பர் ஸ்டார்
என்றும் சூப்பர் ஸ்டார்…

என்று ஆரம்பிக்கும் இந்தப் பாடலை அண்ணாமலை எழுதியுள்ளார்.

ரசிகர்கள் அனைவருக்காகவும் இந்தப் பாடலை இலவசமாகவே வெளியிட்டுள்ளார் லாரன்ஸ். இந்த சுட்டியில் இலவசமாகவே அனைவரும் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

இந்தப் பாடல் வெளியீட்டு விழா இன்று பிற்பகல் ஏவிஎம் திரையரங்கில் நடந்தது. ரஜினி மனைவி லதா ரஜினி பங்கேற்று பாடலை வெளியிட்டு வாழ்த்தினார்.

 

'யு' சான்றிதழ் பெற்றது 'நீதானே என் பொன்வசந்தம்'

நீதானே என் பொன் வசந்தம் படத்துக்கு யு சான்றிதழ் அளித்துள்ளனர் சென்சார் குழுவினர்.

கவுதம் மேனன் இயக்கத்தில், இளையராஜா இசையில் வரும் டிசம்பர் 14ம் தேதி வரவிருக்கும் படம் நீதானே என் பொன்வசந்தம்.

nep gets clean u   
இந்தப் படத்தை சென்சாருக்கு சில தினங்களுக்கு முன்பு அனுப்பினர். ஆனால் பைலட் காப்பியை அனுப்பிவிட்டதால், அதில் குரல், இசை எதுவும் காட்சியோடு சேராமல் இருந்ததாம். எனவே சென்சார் குழு பார்க்க மறுத்தது.

எனவே படத்தின் வேறு பிரதியை அனுப்பி வைத்தனர். படம் பார்த்த சென்சார் குழு, எந்த கட்டும் கொடுக்காமல் யு சான்றிதழ் அளித்துள்ளது.

படம் குறித்து கருத்து தெரிவித்த சென்சார் குழு உறுப்பினர்கள், இதுவரை பார்த்த காதல் படங்களில் மிக நேர்த்தியானது என கருத்து தெரிவித்தார்களாம்.

இப்போல்லாம்... சான்றிதழ் தருவதோடு, விமர்சனத்தையும் எழுதிவிடுகிறார்கள் போலிருக்கிறது சென்சார்காரர்கள்!

 

டிடிஎச் ரிலீஸ் முடிவைக் கைவிடாவிட்டால் கமலுக்கு ஒத்துழைப்பு கிடையாது - திரையரங்க உரிமையாளர்கள்

Exhibitors Announced Non Co Operati

சென்னை: டி.டி.எச். மூலம் ‘விஸ்வரூபம்' படத்தை டெலிவிஷனில் ஒளிபரப்பும் புதிய முயற்சியை கமல்ஹாசன் கைவிட வேண்டும். இந்த முடிவை மேற்கொள்ளும் எந்தப் படத்துக்கும் ஒத்துழைப்பு கிடையாது என திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கமல்ஹாசன் நடித்து இயக்கியுள்ள ‘விஸ்வரூபம்' படத்தை டி.டி.எச். மூலம் டெலிவிஷனில் ஒளிபரப்ப முடிவு செய்துள்ளார்.

இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார்.

அதில், "கமல்ஹாசன் தன் ‘விஸ்வரூபம்' படத்தை டி.டி.எச். மூலம் திரையிடுவது பற்றி திரையரங்க உரிமையாளர்களுக்கு பல சந்தேகங்கள் இருந்தன. இதுபற்றி மதுரையில் இருந்த கமல்ஹாசனுடன், ‘டெலி கான்பரன்சிங்' மூலம் பல சந்தேகங்கள் கேட்டார்கள்.

அப்போது அவர் கொடுத்த விளக்கங்கள் வருமாறு:

'விஸ்வரூபம் படம் டி.டி.எச். முறையில், ஒரே ஒரு முறைதான் திரையிடப்படும். அப்படி திரையிடும்போது, திரையரங்குகள் திரையிடுவதற்கு ஒருநாள் முன்பு இரவு 9 மணிக்கு மேல் திரையிடப்படும். ஒரு டி.டி.எச். கருவி மூலம் பார்ப்பதற்கு ரூ.1,000 வசூல் செய்யப்படும். இது, படத்துக்கு டிரைலர் போல் இருக்கும். இதை பார்ப்பதற்கு திரளாக மக்கள் வருவார்கள்' என்று கூறினார்.

வேண்டுகோள்

என்றாலும், ஒரு டி.டி.எச். கருவிக்கு ஒரு குடும்பம்தான் பார்ப்பார்கள் என்பது உறுதி கிடையாது. ஓட்டல்கள் மற்றும் கிளப்புகளில் படத்தை காண்பித்து விட்டால், நாடு முழுவதும் பல கோடி பேர் படம் பார்த்து விடுவார்கள்.

எனவே கமல்ஹானை எங்கள் நிர்வாகத்தினர் சந்தித்து, இந்த முயற்சியை கைவிடுமாறு கேட்டுக்கொள்ள இருக்கிறோம். அப்படி அவர் கைவிடாவிட்டால், அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி யோசித்து முடிவு எடுப்போம்.

திரைத்துறை நன்றாக வாழ வேண்டும் என்று அக்கறையுடன் இருக்கும் முதல்வர் ஜெயலலிதா, இந்த பிரச்சினையில் தலையிட்டு ஒரு சுமுகமான தீர்வை காண வேண்டும். எங்களை காப்பாற்ற வேண்டும்,'' என்று கூறியுள்ளார்.

ஒத்துழைப்பு கிடையாது

இதற்கிடையே, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது.

கூட்டத்தில், ‘‘திரையரங்குகளில் ரிலீஸ் செய்வதற்கு முன்பாக டி.டி.எச்.சில் கொடுக்கப்பட்ட எந்த படமாக இருந்தாலும், நாங்கள் ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம்'' என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தகவலை சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், இணைச் செயலாளர் திருச்சி ஸ்ரீதர் ஆகிய இருவரும் தெரிவித்தார்கள்.

 

எடியூரப்பா கட்சிக்குத் தாவும் கன்னட நடிகைகள்: பூஜா காந்தி முதல் என்ட்ரி

பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் முக்கிய கட்சிகளில் உள்ள கன்னட நடிகைகள் எதியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சியில் சேர முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலாவதாக தேவ கவுடாவின், மதசார்பற்ற ஜனதா தளத்திலிருந்து (ம.ஜ.த) விலகியுள்ள நடிகை பூஜா காந்தி, நாளை எதியூரப்பா கட்சியில் இணைய உள்ளார்.

pooja gandhi dumps jd s joins kjp   
கன்னட சினிமா உலகின் கவர்ச்சி நடிகையான பூஜா காந்தி சில மாதங்களுக்கு முன்னர் முன்னாள் முதல்வர் குமாரசாமி முன்னிலையில், ம.ஜ.தவில் இணைந்தார். எனினும் பூஜா காந்தி நடித்த "தண்டுபாளையா' படம் பற்றி கட்சித் தலைவர் குமாரசாமி விமர்சித்திருந்தார். இதனால், கோபமடைந்த பூஜா காந்தி, ம.ஜ.தவிலிருந்து சமீபத்தில் விலகினார்.

இந்நிலையில், எடியூரப்பாவின் புதிய கட்சியான, க.ஜ.கவில் (கே.ஜே.பி) இணைய, பூஜா காந்தி முடிவு செய்தார். இதற்காக, எடியூரப்பாவை வெள்ளிக்கிழமையன்று சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். பூஜா காந்தியின் அதிகாரப்பூர்வ இணைப்பு டிசம்பர் 9ம் தேதி நடைபெறும் என்று க.ஜ.த. கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேபோல் பா.ஜகவில் அதிருப்தியில் உள்ள நடிகைகள் ஸ்ருதி, மாலாஸ்ரீ ஆகியோரும், கே.ஜே.பியில் இணைய நேரம் பார்த்து காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

யானைகளுடன் ஒரு வருஷம்... - பிரபு மகனின் கும்கி அனுபவம்

Vikram Prabhu Shares Experience Kumki

கும்கி படத்தில் யானைகளுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம் என்றார் விக்ரம் பிரபு.

சிவாஜி கணேசன் பேரனும், பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு 'கும்கி' படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார்.

உண்மையில் அவர் அறிமுகமான முதல் படம் இதுதான். ஆனால் சுந்தர பாண்டியன் முந்திக் கொண்டது.

பிரபு சாலமன் இயக்கியுள்ள இப்படத்தை சுபாஷ் சந்திர போஸ் தயாரித்துள்ளார். படத்துக்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் அளித்துள்ளது.

டிசம்பர் 14-ம் தேதி வெளியாக உள்ளது கும்கி.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான லிங்குசாமிகூறுகையில், "படம் வரும் முன்னால் 'பில்டப்' பண்ணக்கூடாதுதான். ஆனால் கும்கிக்கு பண்ணலாம். படத்தை அவ்வளவு அழகாக எடுத்து வந்துள்ளனர். இந்த படத்தின் டிரெய்லருக்கே தியேட்டர்களில் ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டுகிறார்கள். என் வாழ்க்கையில் இது முக்கிய படமாக இருக்கும்," என்றார்.

நடிகர் விக்ரம் பிரபு கூறும் போது, "ஒரு வருடம் யானைகளுடன் நடித்தேன். அது மறக்க முடியாத அனுபவம். படம் சிறப்பாக வந்துள்ளது. தாத்தா சிவாஜி, அப்பா பிரபு ஆகியோரின் பெயரை காப்பாற்றுவேன்," என்றார்.

இயக்குனர் பிரபு சாலமன் கூறும் போது, 'கும்கி'யை உலக தரத்தில் எடுத்துள்ளோம். காரணம் தயாரிப்பாளர் லிங்குசாமி கொடுத்த ஆதரவுதான் (பார்றா...!!)," என்றார்.