'தாண்டவம்' கதை விவகாரம்... 'தம்' கட்டும் விஜய்!

Director Vijay S Explanation On Thaandavam Issue

சென்னை: தாண்டவம் படத்தின் கதை என்னுடையதுதான். உதவி இயக்குநர் பொன்னுசாமியை வைத்து நான் படம் தயாரிப்பதாக வந்த செய்தியில் உண்மையில்லை என்று இயக்குநர் விஜய் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் இயக்குநர் விஜய் பற்றித்தான் ஏகப்பட்ட செய்திகள். படத்தின் கதை தொடர்பாக எழுந்த பிரச்னை குறித்து திரைப்பட இயக்குநர் சங்கம் விசாரணை நடத்தியது. விசாரணை தனக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்பதற்காக விஜய் ரூ.5 லட்சம் கொடுத்தார்; ரூ.10 லட்சம் கொடுத்தார் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில் "தாண்டவம்' படத்தின் கதை தனது எனக் கூறிய உதவி இயக்குநர் பொன்னுச்சாமியின் இயக்கத்தில் இயக்குநர் விஜய் படம் தயாரிக்கப் போகிறார் என ஒரு நாளிதழில் வெள்ளிக்கிழமை செய்தி வெளியாகி இருந்தது.

இதையடுத்து இதுவரை எந்தக் கருத்தையும் வெளியிடாத இயக்குநர் விஜய் செய்தியாளர்களைச் சந்தித்து நீண்ட விளக்கம் அளித்தார்.

அதன் விவரம்:

"தாண்டவம்' படம் தொடங்கியதிலிருந்தே பல்வேறு தடைகளை எதிர்கொண்டுதான் படத்தை உருவாக்கினோம். படப்பிடிப்புக்காக லண்டன் சென்றிருந்தபோது கடுமையான மழை. 300 வருடங்களுக்குப் பிறகு லண்டனில் பெய்த கடுமையான மழை இதுதான் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்... அதனால் லண்டன் படப்பிடிப்பு செலவு இரு மடங்காகி விட்டது.

அடுத்து படத்தின் சில 'கிளிப்பிங்ஸ்' மாயமாகிவிட்டன என செய்திகள் வந்தன. அப்படி எந்தச் சம்பவமும் நடைபெறவில்லை. டிஜிட்டல் கேமிராவில் படம் எடுக்கும்போது சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாம் ஷூட் செய்த சில காட்சிகள் பதிவாகாமல் போவதுண்டு. இது சினிமாவில் இருப்பவர்கள் நன்கு அறிந்த ஒன்றுதான். பிலிமில் படமாக்கும்போது கூட புகை மூட்டம் போன்று சில காட்சிகள் அமைந்துவிடுவது இயல்பான ஒன்றுதான். ஆனால் இந்த நிகழ்வைக் கூட சிலர் திரித்துக் கூற ஆரம்பித்துவிட்டனர்.

அடுத்த முக்கியமான விஷயம் படத்தின் கதை பற்றியது. "தாண்டவம்' படத்தின் கதையை 'தெய்வத்திருமகள்' படத்தின் படப்பிடிப்பின்போதே விக்ரமிடம் கூறி சம்மதம் பெற்றிருந்தேன். அந்தப் படத்தை அப்போது வேறு தயாரிப்பு நிறுவனம்தான் தயாரிப்பதாக இருந்தது. அதையடுத்து யு டிவி நிறுவனத்தினர் ஒரு கதையைக் கேட்டனர். நான் "தாண்டவம்' கதையைக் கூறினேன். அவர்களுக்குப் பிடித்துப்போனது. தயாரிக்க ஒப்புக்கொண்டனர்.

இது நடந்தது கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில். அப்போதே எழுத்தாளர் சங்கத்தில் கதையைப் பதிவு செய்துவிட்டோம். ஆனால் படத்தின் கதையைத் தனது எனக் கூறும் உதவி இயக்குநர் பொன்னுச்சாமி ஆகஸ்ட் மாதத்தில்தான் யு டிவி தனஞ்செயனிடம் கதையைக் கூறியுள்ளார்.

'தாண்டவம்' படப்பிடிப்பு தொடங்கி படம் பற்றிய செய்திகள் வெளியானபோதுதான் இது தனது கதையாக இருக்குமோ என்று எண்ணிய பொன்னுச்சாமி எங்களைச் சந்தித்தார். ஏனென்றால் அவருடைய கதையும் பார்வையற்ற ஒருவர் பழிவாங்குவது போல் உருவாக்கப்பட்டிருந்ததுதான் காரணம். அவருடைய சந்தேகம் நியாயமானது. நானாக இருந்தால் கூட அப்படித்தான் செய்திருப்பேன்.

பிறகு அவர் எங்களைச் சந்தித்துப் பேசினார். நாங்களும் விளக்கம் அளித்தோம். அதையடுத்து அவர் இயக்குநர் சங்கத்தில் புகார் அளித்தார். அங்கு இரண்டு படங்களின் ஸ்கிரிப்டையும் கொடுத்தோம். இரண்டு படங்கள்; இரண்டிலும் பார்வையற்ற கதாநாயகன் பழி வாங்குவதுதான் கதை. எனவே பொதுவாக சில அம்சங்கள் பொருந்தியிருந்தன.

ஆனால் ஒட்டுமொத்தக் கதையே வேறு; ஒரே விஷயம் பார்வையற்றவன் பழிவாங்குகிறான் என்பதுதான். இதை வைத்து அவருடைய கதையை நாங்கள் எடுத்துக்கொண்டோம் என எப்படிக் கூற முடியும்? ஒரு போலீஸ் கதை, ஒரு த்ரில்லர் கதை, ஒரு காமெடி கதை என ஒரே ஜர்னரில் வெளியாகும் படங்களில் சில விஷயங்கள் எதேச்சையாக ஒத்துப்போவது இயல்புதான்.

இதே கருத்தைத்தான் இயக்குநர் சங்கத்தில் ஜனநாதனும் அமீரும் கூறினர். ஆனாலும் பொன்னுச்சாமி நீதிமன்றத்துக்கு சென்றுவிட்டார். வழக்கு நீதிமன்றத்துக்கு சென்றுவிட்டதால் அதைப் பற்றி எந்தக் கருத்தும் கூற முடியவில்லை. அதையடுத்து படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது என நீதிமன்றம் அறிவித்து படமும் வெளியாகிவிட்டது. இதுதான் நடந்த உண்மை.

இதில் இன்னொரு விஷயம். உதவி இயக்குநர் பொன்னுச்சாமி பணத்துக்காகவோ வேறு விஷயங்களுக்காகவோ வழக்கு தொடுத்ததாகக் கருத முடியாது. அவருடைய உழைப்பு, கனவு சிதைந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் நீதிமன்றத்துக்கு சென்றார். படம் வெளிவருவதற்கு முன்பு எப்படியோ... இப்போது அவரே படத்தைப் பார்த்திருப்பார்; உண்மை என்ன என்பதைப் புரிந்திருப்பார். மற்றவர்கள் என்ன நினைத்தாலும் எனக்குக் கவலையில்லை. ஆனால் பொன்னுச்சாமிக்கு தெரிந்தால் போதும். ஏனென்றால் ஒரு படைப்பாளியின் கனவும் லட்சியமும் இன்னொரு படைப்பாளிக்குப் புரியும்.

தன்னுடைய ஸ்கிரிப்ட்டையும் பொன்னுச்சாமி என்னிடம் படிக்கக் கொடுத்தார். நான் முழுவதும் படித்துப் பார்த்தேன். அதற்கும் "தாண்டவம்' ஸ்கிரிப்ட்டுக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. நான் படித்தவரை அவருடைய ஸ்கிரிப்ட்டும் உண்மையிலேயே நன்றாக இருந்தது. நிச்சயமாக அவரும் இயக்குநராக சாதிப்பார்.

அடுத்ததாக, பொன்னுச்சாமியையோ இயக்குநர் சங்கத்தையோ வளைத்துப் போட நான் யாருக்கும் பைசா காசு கூட தரவில்லை. அது பற்றி வெளிவரும் தகவல்கள் அனைத்தும் வதந்தியே.

அதே போல பொன்னுச்சாமியை வைத்து நான் படம் தயாரிக்கப்போகிறேன் என்று வெளிவந்த செய்தியில் துளி கூட உண்மையில்லை.

அடுத்த படம் விஜய்யுடன்...

என்னுடைய அடுத்த படத்தில் விஜய் நடிக்கிறார். காதலும் ஆக்ஷனும் கலந்த கதை. எங்கள் இருவரின் சினிமா கேரியரில் மிக முக்கியமான படமாக அமையும். மிஸ்டரி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தினர் தயாரிக்கிறார்கள். "தலைவன்' என்ற ஒரு பெயரைப் பதிவு செய்திருக்கிறோம். ஆனால் அதே தலைப்பில் வேறு சில படங்கள் வருவதாகக் கேள்விப்பட்டோம். அதனால் தலைப்பை இன்னும் உறுதி செய்யவில்லை. பாடல் கம்போஸிங்கை தொடங்கியிருக்கிறோம். விரைவில் படப்பிடிப்பு தொடங்கும்.

ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். நீரவ்ஷா ஒளிப்பதிவுக்குப் பொறுப்பேற்றிருக்கிறார். படத்தொகுப்பை ஆண்டனி கவனித்துக்கொள்கிறார். கதாநாயகி மற்றும் இதர கலைஞர்கள் குறித்து விரைவில் முறையாக அறிவிக்கிறோம்," என்றார்.

படம் ரிலீசாகி, சத்தமில்லாமல் தியேட்டர்களை விட்டு ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், அந்தப் படத்தின் கதை குறித்து மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். ஒருவேளை பப்ளிசிட்டிக்கு உதவும் என நினைக்கிறார்களோ என்னமோ...

 

கதை ரெடி... ராஜமவுலிக்கு கால்ஷீட் தருகிறார் ரஜினி?

Rajamouli Gearing Up Direct The Superstar

சென்னை: அடுத்து ராஜமவுலி இயக்கத்தில் ரஜினி நடிப்பார் என்றும், அவருக்கேற்ற கதையை ராஜமவுலி தயார் செய்துவிட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

ரஜினி இரட்டை வேடங்களில் நடிக்கும் 3டி படம் கோச்சடையான் முடிந்து ரிலீசுக்கு தயாராகிறது. அடுத்து ரஜினி யார் இயக்கத்தில் நடிப்பார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

சிலர் கேவி ஆனந்த் படம் என்கிறார்கள். இன்னும் சிலர் கேஎஸ் ரவிக்குமார் என்கிறார்கள். இந்த லிஸ்டில் இப்போது பரபரப்பாக அடிபடுவது ராஜமவுலி பெயர்தான்.

ராஜமவுலி இயக்கத்தில் ரஜினி நடிக்கப் போவது உறுதிதான் என்கிறார்கள் ரஜினிக்கு நெருக்கமானவர்கள். ராஜமவுலி இயக்கிய ‘நான் ஈ' படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெற்றிகரமாக ஓடி கோடிக்கணக்கில் வசூலை குவித்தது.

இந்தப் படம் பார்த்ததுமே இந்திய சினிமாவில் முக்கிய படமாக நான் ஈ வரும் என்று ரஜினி பாராட்டியிருந்தார்.

ராஜமவுலியும் ரஜினியை இயக்க எப்போதும் தயார் என்று கூறியிருந்தார்.

இப்போது ரஜினிக்கேற்ற கதையொன்றை ராஜமவுலி தயார் செய்து ரஜினியிடம் கூற, அவருக்கும் கதை பிடித்துப் போனதாம்.

தமிழ் - தெலுங்கில் தயாராகும் இந்தப் படத்தை இந்தியிலும் டப் செய்யத் திட்டமாம்.

 

கனடாவில் இளையராஜாவை எதிர்த்து கோஷம்... இசை நிகழ்ச்சி தேதி மாறுமா?

Naam Tamilar Party Protests Against Ilayaraaja

டொரன்டோ: கனடா தலைநகர் டொரன்டோவில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை எதிர்த்து நாம் தமிழர் கட்சியினர் மற்றும் இலங்கைத் தமிழர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வரும் நவம்பர் 3-ம் தேதி டொரன்டோவில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார் இளையராஜா. ஆனால் இந்த மாதம் முழுவதும் இலங்கைத் தமிழர்கள் துக்க மாதமாக அனுஷ்டிப்பதால், அந்தத் தேதியில் இசை நிகழ்ச்சி நடத்தக் கூடாது என இலங்கைத் தமிழர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே இந்த நிகழ்ச்சி பற்றி அதிகாரபூர்வமாக பத்திரிகையாளர்களிடம் அறிவிப்பதற்காக இளையராஜா கனடா சென்றார். டொரான்டோ நகரில் பத்திரிகையாளர்களை அவர் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இளையராஜா வெள்ளிக்கிழமை பகல் 11 மணிக்கு அங்கு சென்றபோது இலங்கை தமிழர்களும் சீமானின் நாம் தமிழர் கட்சியினரும் நூற்றுக்கணக்கில் திரண்டு இளையராஜாவை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.

நவம்பர் மாதத்தில் விடுதலைப்புலிகளின் மாவீரர் தினம் கடை பிடிக்கப்படுகிறது. அந்த மாதம் முழுவதும் மகிழச்சியான நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தப்படுவது இல்லை. எனவே இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

விழாக் குழுவினர் இளையராஜாவை பாதுகாப்பாக அழைத்து சென்று ஹாலுக்குள் தங்க வைத்தனர். நீண்ட நேரம் தமிழர்கள் அங்கு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இந்த நிகழ்ச்சி மூலம் திரளும் பணத்தில் ஒரு பகுதியை ஈழத் தமிழர் மறுவாழ்வுக்காக தரத் திட்டமிட்டிருந்தார் இளையராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

 

கனடா இசை நிகழ்ச்சியை நவம்பரில் நடத்த வேண்டாம் - இளையராஜாவுக்கு ஆர்கே செல்வமணி கோரிக்கை

Director Selvamani S Request Ilayaraaja

சென்னை: ஈழத் தமிழர்களின் தியாகத்தைப் போற்றும் நவம்பர் மாதத்தில் இசைஞானி இளையராஜா கனடாவில் இசை நிகழ்ச்சி நடத்தக் கூடாது என்று இயக்குநர் ஆர் கே செல்வமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

ஈழத்திலே தமிழர்களின் உரிமைக்காகவும், சுகந்திரத்திற்காகவும் தமிழ்பெண்ணின் மானத்தை காப்பதற்காகவும் தன்னுயிர் ஈந்த புறநானூற்றைப் புரட்டிப்போட்ட மாவீரர்களின் அளப்பரிய தியாகிகளை ஆண்டுதோறும் நினைவுக்கூரும் மாதந்தான் நவம்பர் மாதமாகும்.

பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த இந்த மாவீரர்கள் கடந்த 50 வருட§களாக ஈழத்தமிழர் விடுதலைக்காகவும், நம் சந்ததியின் சுதந்திரத்திற்காகவும் தங்களின் இளமைக்கனவுகளையும், உற்றார்-பெற்றோரையும் மறந்து தங்களையே ஆகுதியாக்கி வீர காவியமானவர்கள் ஆவார்கள்.

வாழவேண்டிய வயதிலே அன்பு மனைவியையும், ஆருயிர்க் கணவனையும், மழலைச் செல்வங்களையும் மறந்து மண்விடுதலைக்காக மரணித்திருக்கின்றார்கள். இப்படி ஆணும் பெண்ணும் சரிசமமாக வீரத்துடன் போராடி காற்றோடு காற்றாகக் கலந்துபோன மாவீரர்களைப் போற்றுகின்ற மாதந்தான் நவம்பர் மாதம்.

இந்த நவம்பர் மாதத்திலே ஈழத்தமிழர் மாத்திரமன்றி உலகத் தமிழர்கள் அத்தனைபேரும் நவம்பர் மாதத்தை தியாகமானதாகவும், வீரமானதாகவும் வணக்கத்திற்குரிய மாதமாகவும் போற்றி வருகின்றார்கள். மாண்டுபோன மாவீரர்களின் நினைவுகளை தம் இனத்திற்கும், சந்ததியினருக்கும் அவர்கள் இரத்தத்திலே ஊற்றி வருகின்றனர்.

இந்த நவம்பர் மாதத்திலே உலகத் தமிழினம் எந்தவொரு இசை விழாக்களையும், களியாட்ட விழாக்களையும் கொண்டாடி மகிழ்வதில்லை.

இம்மாதத்தில் அனைத்துக் களியாட்ட விழாக்களையும் புறக்கணித்து புனிதமான மாவீரர்களைப் போற்றுகின்ற மாதமாகப் போற்றுகின்றது.

வஞ்சகமாக...

ஆனால், இலங்கை அரசாங்கம் இந்த மாவீரர்களின் மாதத்தை மறக்கடிக்க முயல்கிறது. துரோகிகளை பயன்படுத்தி களியாட்டங்களை நடத்தி வீரநிகழ்ச்சிகளை மறக்கடிக்க முயல்கிறது. இதற்காக தமிழ்திரைப்பட துறையே கூட வஞ்சகமாக அவர்களுக்கு தெரியாமல் பயன்படுத்திக்கொள்ளத் துடிக்கிறது.

இதற்காக கருணாவைப்போல், கே.பி யைப்போல் ஈழ தமிழர்களே சில துரோகிகளை பயன்படுத்தி தமிழ்திரைப்பட துறையை விலைபேச நினைக்கிறது.

இலங்கை அரசாங்கத்தின் சூழ்ச்சி அறியாமல் நமது கலைஞர்கள் கனடா நாட்டில் டோராண்டோ மாநகரில் வருகின்ற நவம்பர் 3 ஆம் தேதி ஒரு கலைநிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளார்கள் என்ற அதிச்ச்சியான செய்தி இப்போது தெரியவந்துள்ளது.

இளையராஜா...

தமிழ்மண்ணிசையை உலகமெங்கும் எடுத்து சென்ற இசை மாமேதை இசைஞானி இளையராஜா அவர்கள் தலைமையில், இதுவரை ஈழப்போராட்டங்களை தலைமையேற்று நடத்திய இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் உட்பட இளையராஜா யுவன்சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, யேசுதாஸ், ஹரிஹரன், மனோ, விஜய் யேசுதாஸ், கார்த்திக், சித்ரா, பவதாரணி, சாதனா சர்கம் போன்ற இசைகலைஞர்களும், விவேக், கோபிநாத், சினேகா, பிரசன்னா போன்ற திரைக்கலைஞர்களும் பாரதிராஜா, கௌதம் வாசுதேவ் மேனன், பார்த்திபன் போன்ற மாபெரும் இயக்குநர்களும் கலந்து கொள்ள உள்ளார்கள் என்பது மேலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்செய்தியை அறிந்தவுடன் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களைத் தொடர்பு கொண்டபோது இந்நிகழ்ச்சியை நவம்பர் மாதம் தவிர்த்து முன்னதாக அக்டோபர் மாதத்திலோ அல்லது தள்ளி டிசம்பர் மாதத்திலோ நடத்தபட்டால் கலந்துகொள்வேன். இல்லையேனில் கலந்து கொள்ள போவதில்லை என்று உறுதியளித்துள்ளார்.

இசைஞானி இளையராஜா டோராண்டோ நகரில் உள்ளதால் அவரை தொடர்புகொள்ள இயலவில்லை. அவர் சென்னை திரும்பியபுடன் நேரடியாக சந்தித்து நவம்பர் மாதத்தில் நடத்த வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்க உள்ளோம்.

மேலும் இந்நிகழ்சியில் கலந்து கொள்வதாக மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து கலைஞர்களிடமும் மிகவும் பணிவாகக் கேட்டுக்கொள்வது என்னவெனில் தயவுகூர்ந்து அறிந்தோ அறியாமலோ இத்தகைய துரோகங்களுக்குத் துணை போகவேண்டாமெனவும், இவர்களையும் இவர்களின்
செயல்களையும் புறந்தள்ளுவதன் மூலம் நாம் ஒரு மானமுள்ள, கூடவே மனிதமுள்ள கலைஞர்கள் என தொடர்ந்து நிலைநாட்டுவோம்.

ஈகர்களின் புனித மாதமாம் நவம்பர். இனப்படுகொலைகளின் கொடுமை சுமக்கும் வலிதந்த மாதமாம் மே மாதம் எனும் இவ்விரு மாதங்கள் தவிர்ந்த ஏனைய மாதங்கள் பத்திலும் எவராவது எந்தவொரு களியாட்ட விழாக்களைச் செய்வதில் எந்தவொரு ஆட்சேபனையும் இல்லையென்பதனை மிகவும் வினயமாகத் தெரிவித்துக்கொள்கின்றேhம்.

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்,தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், விநியோகஸ்தர்கள் சங்கங்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளனம் என திரைப்பட துறையின் அனைத்துப் பிரிவினரும் இதுவரை அனைத்து ஈழதமிழர்களுக்கான அனைத்து போராட்டங்களிலும் தோளோடு தோள்நின்று போராடி வந்திருக்கின்றோம்.

ஈழத்தமிழர்களுக்காக கண்ணீர் சிந்திய தமிழ் திரைப்படதுறை மாவீரர்களின் நினைவுகளை மறக்கடிக்க நினைக்கின்ற இலங்கை அரசின் இந்த சதிக்கு பலி ஆகிவிட கூடாது என்று அன்போடு வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

எம்ஜிஆர், ரஜினி படங்களை இயக்கிய ஜெகநாதனுக்கு மூச்சுத் திணறல்!

சென்னை: பிரபல சினிமா இயக்குநர் ஏ ஜெகநாதனுக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எம்ஜிஆரின் இதயக்கனி, ரஜினியின் மூன்றுமுகம், தங்கமகன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஏ ஜெகநாதன். கமல், ராஜராஜன் உள்பட பலரை வைத்து 50க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.

தனது மகளைப் பார்ப்பதற்காக திருப்பூர் சென்றிருந்தார். அப்போது அவருக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக திருப்பூரில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சைக்குப்பின் அவர் வீடு திரும்பி நலமாக இருப்பதாக அவருடைய மனைவி தெரிவித்தார்.

 

ஆயிரத்தில் ஒருவன் நிகழ்ச்சியில் களமிறங்கிய நடிகை மந்த்ரா

Mantra Makes Her Comeback With Tv Show

நடிகை மந்த்ரா நீண்ட நாட்களுக்குப் பின்னர் சின்னத்திரையில் ஆயிரத்தில் à®'ருவன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். ரசிகர்களிடையே நேரடி தொடர்பு ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது, பங்கேற்பாளர்களின் பொது அறிவு பிரமிக்க வைக்கிறது என்றார் நடிகை மந்த்ரா.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஆயிரத்தில் à®'ருவன் என்ற கேம்ஷோ à®'ளிபரப்பாகிறது. அபர்ணா பிள்ளை இயக்கும் இந்த நிகழ்ச்சியை சுப்பு பஞ்சு தொகுத்து வழங்கினார். தற்போது இதனை நடிகை மந்த்ரா தொகுத்து வழங்குகிறார். இந்தவாரம் சமையல் கலை வல்லுநர் மல்லிகா பத்ரிநாத் சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்தார்.

அருண் விஜயுடன் திரைப்படத்தில் அறிமுகமாகி அஜீத், விஜயுடன் நடித்த நடிகை மந்த்ரா, டைரக்டர் நிவாசை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கைக்குப் போனவரை இந்த நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் அழைத்துக் கொண்டு வந்திருக்கிறது. 8 ஆண்டுகளுக்குப் பின்னர் சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்ற மந்த்ராவிற்கு நிறைய அனுபவங்கள் கிடைத்துள்ளதாம். இந்த நிகழ்ச்சி மூலம் மீண்டும் ரசிகர்களுடனான என் பிணைப்பு இப்போது இன்னும் இறுகியிருக்கிறது. அந்த விதத்திலும் இந்த நிகழ்ச்சி எனக்கு ஸ்பெஷல்'' என்று மந்த்ரா கூறினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்றது பற்றி பேசிய மந்த்ரா, "ஆயிரத்தில் à®'ருவன் நிகழ்ச்சியில் நேயர்களின் திறமை பார்த்து நானே பிரமித்து விட்டேன். குறிப்பாக கவியரசர் கண்ணதாசனை பற்றி பேச்சு வந்தபோது, பாடல்களை அவர் எந்தெந்த சூழலில் எழுதினார் என்ற தகவல்களை அவர்கள் உற்சாகமாய் தந்தார்கள். இத்தனை விஷயம் கவியரசர் பற்றி தெரிந்து வைத்திருக்கிறார்களா என்று வியப்பு ஏற்பட்டது. அவரின் ஆழ்ந்த புலமை எப்படி சூழ்நிலையோடு இணைந்திருந்தது என்பதில் வியப்பும் ஏற்பட்டது. புதிய விஷயங்களை தெரிந்து கொள்ள இது நல்ல மேடை" என்றார்.

"சின்னத்திரை நிகழ்ச்சிகளில் வித்தியாசமானது, புதுமையானது என்ற பெயரை எடுத்த எடுப்பிலேயே பெற்றிருக்கிறது ஆயிரத்தில் à®'ருவன் நிகழ்ச்சி. நேயர்களின் தனித்திறனை புடம் போட்ட பொன்னாக வெளிக்கொணர்ந்து அதற்குப் பரிசும் வழங்கும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் தனித்துவம் தெரிகிறது. பொது அறிவில் அவர்கள் அற்புதமாகத் தேர்ந்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. இந்த நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களுடன் எனக்கு நேரடித்தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர் அபர்ணா பிள்ளை என்றும் என் நன்றிக்குரியவர் என்றும் நடிகை மந்த்ரா கூறினார்.

ஆயிரத்தில் à®'ருவன் நிகழ்ச்சி ஜி தமிழ் தொலைக்காட்சியில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு à®'ளிபரப்பாகிறது. நடிகை மந்த்ரா அழகாக தமிழ் பேசி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற பத்ரிநாத், லஸ்சி, சீடை, மணத்தக்காளி போன்றவைகளைப்பற்றியும் சமையல் குறிப்புகளை கூறியது நிகழ்ச்சிக்கு கூடுதல் சுவாரஸ்யத்தை அளித்தது.

 

ராம்சரண் ஆனது தெலுங்கு ஆரஞ்ச்

தெலுங்கில் ரிலீசான 'ஆரஞ்ச்', தமிழில் 'ராம்சரண்' என்ற பெயரில் டப் ஆகிறது. சிவம் அசோசியேட்ஸ் சார்பில் எஸ்.சுந்தரலட்சுமி தயாரிக்கிறார். ராம்சரண், ஜெனிலியா, பிரபு, பிரகாஷ்ராஜ், பூஜா நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, பி.ராஜசேகர். இசை, ஹாரிஸ் ஜெயராஜ். பாடல்கள்: அறிவுமதி, விவேகா, யுகபாரதி, ஜெயமுரசு, அருண் பாரதி. வசனம், ஏ.ஆர்.கே.ராஜராஜா. கதை, திரைக்கதை எழுதி 'பொம்மரில்லு' பாஸ்கர் இயக்கி உள்ளார். இரு துருவங்களாக இருக்கும் காதலர்கள் சந்திக்கும்போது ஏற்படும் பிரச்னைகளும், பின் அவர்கள் எப்படி இணைகிறார்கள் என்பதும் கதை. அடுத்த மாதம் ரிலீசாகிறது.
 

இசைக்கு ஸ்ருதி ரெஸ்ட்

acting is important

நடிப்புக்கும் பாடலுக்கும் மட்டுமே இப்போது முக்கியத்துவம் கொடுத்துவருகிறேன். இசை அமைப்பதை கொஞ்சம் தள்ளி வைத்திருக்கிறேன் என்று ஸ்ருதி ஹாசன் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:
இந்தியில் மூன்று படங்களில் நடித்துவருகிறேன். அதில் ஒன்று பிரபுதேவா இயக்குவது. இதன் ஷூட்டிங் புனே அருகில் கிராமம் ஒன்றில் நடக்கிறது. இது அவர் இயக்கிய தெலுங்கு படத்தின் ரீமேக் என்றாலும் அதை அப்படியே எடுக்கவில்லை. இந்திக்காக சில மாற்றங்கள் செய்திருக்கிறார். பிரபுதேவாவின் நடனம் எல்லோரையும் போல எனக்கும் பிடித்த விஷயம். இந்தப் படத்தில் சிறப்பாக நடனம் ஆடுவேன் என நினைக்கிறேன். தற்போது நடிப்புக்கும் பாடல் பாடுவதற்கும் முக்கியத்துவம் கொடுத்துவருகிறேன். தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் பாடி வருகிறேன். அதுமட்டுமல்லாமல் ஆல்பங்களில் பாடுகிறேன். அதனால் படங்களுக்கு இசை அமைப்பதை கொஞ்சம் தள்ளி வைத் திருக்கிறேன். இவ்வாறு ஸ்ருதிஹாசன் கூறினார்.
 

கீரிப்புள்ள சண்டை காட்சிகள் வெளியீடு

live stunt show

ஏஞ்சல் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் பெரோஸ்கான் தயாரித்து இயக்கும் படம், 'கீரிப்புள்ள'. யுவன், திஷா பாண்டே நடிக்கிறார்கள். தவசிராஜ் சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளார். இதன் சண்டை காட்சிகள் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. சண்டைக் காட்சிகளை மேடையில் நடத்தி காட்டினார்கள். ஹீரோ யுவன் வில்லன்களோடு நேரடியாக மேடையில் சண்டைபோட்டார். பின்னர் அந்தக் காட்சிகளை இயக்குனர் பிரபுசாலமன் வெளியிட்டார். பின்னர் பெரோஸ்கான் நிருபர்களிடம் கூறும்போது, 'பொதுவாக பாடல் காட்சிகள்தான் வெளியிடப்படும். ஒரு மாற்றத்துக்காக சண்டைக் காட்சிகளை நடத்தி காட்டி, வெளியிட்டுள்ளோம். எந்த சண்டைக் காட்சியிலும் டூப்பை பயன்படுத்தவில்லை என்பதை நிரூபிக்கவும், ஹீரோ யுவனுக்கு அனைத்து சண்டைக் கலையும் தெரியும் என்பதை காட்டவும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது' என்றார்.
 

கிளாமரை நம்பி பாலிவுட்டுக்கு போகும் ஹீரோயின்கள்

Tamil heroine shines in bollywood

கிளாமரை நம்பித்தான் பல ஹீரோயின்கள் பாலிவுட்டில் நடிக்கப் போகிறார்கள் என்றார் இலியானா. இது பற்றி அவர் கூறியது: இன்னும் சில மாதங்களில் நான் மும்பையில் குடியேற திட்டமிட்டிருக்கிறேன். தற்போதைக்கு தமிழ், தெலுங்கில் புதிய படங்கள் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை. 'பர்பிÕ படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது தென்னிந்திய படங்கள் ஒப்புக்கொள்வதை தவிர்த்தேன். இப்போது அப்படம் முடிந்துவிட்டது. பாலிவுட்டில் எனது முழு கவனத்தையும் செலுத்த உள்ளேன். மும்பையில் சொந்த வீடு வாங்க உள்ளேன். அதற்கான தேடுதல் நடக்கிறது. இதுநாள்வரை டோலிவுட் படங்களில் நடித்து வந்தேன். உடனடியாக அதை விட்டு வருவது இயலாத காரியம். நல்ல ஸ்கிரிப்ட் கிடைத்தால் நடிப்பேன். தெலுங்கு, இந்தி படங்களில் நடிப்பது வித்தியாசமான அனுபவம். இரண்டுமே கலாசார ரீதியில் மாறுபட்டிருக்கிறது.  

தென்னிந்தியாவிலிருந்து இந்தியில் நடிக்க செல்லும் பல ஹீரோயின்கள் கிளாமர் வேடத்தை நம்பியே செல்கிறார்கள். அதுபோல் செல்லக்கூடாது. நல்ல கேரக்டர் கிடைத்தால் நடிப்பது என்று காத்திருந்தேன். அதற்கேற்ப 'பர்பிÕ படம் அமைந்தது. வங்காள பெண்ணாக நடித்தேன். முதலில் இதன் ஸ்கிரிப்ட் கேட்டபோது எனது கதாபாத்திரத்தை ரசிகர்கள் ஏற்பார்களோ என்று சந்தேகப்பட்டேன். ஆனால் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த கதாபாத்திரத்தில் நடிக்க எந்த பயிற்சியும் மேற்கொள்ளவில்லை. இயக்குனர் அனுராக் பாசு சொன்னபடி நடித்தேன். இப்போதுதான் இந்தி கற்கிறேன். ஆனாலும் எனது கேரக்டருக்கு நானே டப்பிங் பேசினேன்.
 

மீண்டும் அம்சவர்தன்

Hamsavardhan re entry

'பிறகு' ரிலீசுக்குப் பிறகு நடிக்காமல் இருந்த ரவிச்சந்திரன் மகன் அம்சவர்தன், 4 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: சிறந்த படங்களில் நடிக்க காத்திருந்தேன். அதனால்தான் இடைவெளி. இனி இடைவெளி இருக்காது. பாலா உதவியாளர் பிரியன் இயக்கும் 'இருவீட்டார் அழைப்பு' படத்தில் ஹீரோவாக நடிக்கிறேன். இதற்காக உடல் எடை குறைக்கிறேன். மேலும் தாடி, மீசை வளர்த்து வருகிறேன். இப்படம் எனது ரீ-என்ட்ரிக்கு பெரிய உதவி செய்யும். இதை சொந்தமாக தயாரிக்க உள்ளேன். இனி வருடத்துக்கு 2 படங்களில் நடிப்பேன்.
 

சிறுபட்ஜெட் படங்களுக்காக அரசு தியேட்டர்கள்

Govt cinema theatres for low budget film

கேரளாவில் மம்மூட்டி, மோகன்லால், திலீப் நடிக்கும் படங்கள் மட்டுமே பெரிய பட்ஜெட் படங்கள். அதுவே அதிக பட்சம் 5 கோடிதான். மற்ற படங்கள் ஒன்று முதல் இரண்டு கோடிக்குள் தயாராகும். இந்த படங்களை காப்பாற்ற கேரள அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக,  திருவனந்தபுரத்தில் கலாபவன், கைரளி, ஸ்ரீ ஆகிய தியேட்டர்களை நடத்தி வரும் அரசு, நாட்டின் பல பகுதிகளில் தியேட்டர்களை கட்ட திட்டமிட்டுள்ளது. இதற்காக, கேரள நிதி கழகம் பல கோடி ரூபாய்களை ஒதுக்கி உள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் வெளியாகும் படங்களில் 90 சதவிகித படங்கள் சிறுபட்ஜெட் படங்கள். அவை ஒரு சதவிகிதம் கூட லாபம் கிடைப்பதில்லை. சில படங்கள் மட்டுமே லாபம் சம்பாதிக்கின்றன.
டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக சிறுபட்ஜெட் படங்களின் எண்ணிக்கை பெருகி உள்ளது. வாரத்துக்கு 10 படங்களுக்கு பூஜை போடப்படுகிறது. 5 படங்கள் வரை வெளிவருகிறது. இவை மக்களை சிறிய அளவில்கூட சென்று சேராமல் தியேட்டருக்கு போன வேகத்திலேயே திரும்பி வருகிறது. இந் நிலையில் சிறுபட்ஜெட் படங்களை காப்பாற்ற வேண்டிய நிலை தமிழ்நாட்டில்தான் அதிகம். அதனால் கேரளாவை பின்பற்றி தமிழக அரசும், நாடு முழுவதும் தியேட்டர் கட்ட வேண்டும் என்றும் அதில் குறைந்த கட்டணத்தில் படங்களை திரையிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அரசே தியேட்டர் கட்டுவது என்பது புதிதல்ல, ஏற்கெனவே வேலூரில் அண்ணா கலையரங்க தியேட்டரை, செய்தி மக்கள் தொடர்பு துறை நடத்தி வருகிறது. திருச்சியில் கலையரங்க தியேட்டரை அரசு வருஷம்தோறும் லீசுக்கு விடுகிறது.

'அரசே தியேட்டர் கட்டினால் அது சிறு பட்ஜெட் படங்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும். இதற்கு பெரிய முதலீடு தேவையிருக்காது. ஒவ்வொரு பஸ் நிலையத்தின் மேல் தளமும் காலியாக இருக்கிறது. அதில் 100 பேர், 200 பேர் பார்க்கும் வகையிலான மினி தியேட்டர்களை கட்டலாம். அதன் பராமரிப்பு செலவு, ஊழியர்கள் சம்பளம் இதை மட்டும் கருத்தில் கொண்டு கட்டணங்களை நிர்ணயித்து படங்களை காட்டலாம்' என்கிறார் தயாரிப்பாளர் சங்கப் பொதுசெயலாளர் பி.எல்.தேனப்பன்.

'இந்த கருத்தை பல வருடங்களாக வினியோகஸ்தர் சங்கம் வற்புறுத்தி வருகிறது. மல்டிபிளக்ஸ் தியேட்டரில் வசூலிக்கப்பட்டும் கட்டணத்தால் சாதாரண மக்கள் தியேட்டருக்கு வருவதில்லை. அவர்களை வரவழைக்க அரசே தியேட்டர் கட்ட வேண்டும். தியேட்டர் கட்ட முடியாத இடங்களில் ஹோம் தியேட்டர்களை அனுமதிக்கலாம். இதன் மூலம் சுயதொழில் பெருகும்' என்கிறார் வினியோகஸ்தர் சங்க செயலாளர் கலைப்புலி ஜி.சேகரன்.

அதிகமான சிறுபட்ஜெட் படங்களை இயக்கியுள்ள டி.பி.கஜேந்திரன் கூறும்போது, 'அரசே தியேட்டர் கட்டும் யோசனை வரவேற்கத்தக்கது. மாதத்துக்கு 20 சிறுபட்ஜெட் படங்கள் வந்தாலும் எதுவும் லாபம் தருவதில்லை. ஆனால் அவற்றிலும் சிறந்த படங்கள் இருந்து, அது கவனிக்கப்படாமல் போகிறது. அரசு தியேட்டர் வந்தால் மினிமம் கியாரண்டி கிடைக்கும். அதனால் நல்ல படைப்பாளிகள் வருவார்கள். இதை தவிர சினிமாவை காப்பாற்ற வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை' என்றார்.
 

தேரடி வீதி திருக்கண்ணபுரம்

Radhika opposite to Sharvanand

கோபிநாத் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஒளிப்பதிவாளர் கோபிநாத் தயாரிக்கும் படம் 'தேரடி வீதி திருக்கண்ணபுரம்'. பாபு.கே.விஸ்வநாத் இயக்குகிறார். இதில் சர்வானந்த் ஹீரோ. அவருக்கு ஜோடியாக ராதிகா ஆப்தே நடிக்கிறார். ஷாம் டி.ராஜ் இசை அமைக்கிறார். படம் பற்றி கோபிநாத் கூறியதாவது: இயக்குனர் பாபு.கே.விஸ்வநாத்தும் நானும் பத்திரிகையில் ஒன்றாக பணியாற்றினோம். இருவரும் 20 ஆண்டுகால நண்பர்கள். நான் படம் தயாரிக்கும் ஆசையில் இருந்தேன். அவர், இயக்கும் ஆசையில் இருந்தார். அவர் சொன்ன கதை பிடித்திருந்ததால் நானே தயாரித்து ஒளிப்பதிவு செய்கிறேன். தஞ்சை மண்சார்ந்த கதை என்பதால் அந்த முகச்சாயல் கொண்ட சர்வானந்தை ஹீரோவாக நடிக்க கேட்டோம். அவரும் ஒப்புக் கொண்டார். ராதிகா ஆப்தே எனக்கு அறிமுகமானவர் என்பதால் அவரும் ஒப்புக் கொண்டார். பாடல் பதிவுகள் முடிந்திருக்கிறது. விரைவில் கும்பகோணம் பகுதியில் படப்பிடிப்பு நடக்கிறது. காதல், காமெடி, சென்டிமென்ட் நிறைந்த கதை. இவ்வாறு கோபிநாத் கூறினார்.
 

சசிகுமார் ஜோடியாக நடிக்கவில்லை

i'm too busy with singam 2

சசிகுமார் ஜோடியாக நடிக்கவில்லை என்றார் ஹன்சிகா. இது பற்றி அவர் கூறியதாவது: இந்தியில் வெளியான 'டெல்லி பெல்லிÕ என்ற படம்தான் தமிழில் 'சேட்டைÕ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இந்தியில் கவர்ச்சி காட்சிகளும் ஹீரோவுடன் நெருக்கமான காட்சிகளும் இடம் பெற்றிருந்தன. அதேபோல் நானும் நெருக்கமான காட்சிகளில் நடித்திருப்பதாக கூறுகிறார்கள். இந்தி படம் வேண்டுமானால் நெருக்கமான காட்சியால் பரபரப்பாக பேசப்பட்டிருக்கலாம். ஆனால் தமிழில் இப்படம் ஒரு காமெடி கதையாகவே உருவாகிறது. இப்போதுள்ள சூழலில் நான் நெருக்கமான காட்சிகளில் நடிக்க வேண்டிய அவசியம் இல்லை.

தமிழில் சசிகுமார் ஜோடியாக நான் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது யாரோ கற்பனையாக திரித்துவிட்டிருக்கும் சேதிதான். நிறைய பேர் கதை சொல்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் யாராவது ஒருவர் தனது படத்தின் பப்ளிசிட்டிக்காக இதுபோல் வதந்தி பரப்புகிறார்கள். சசிகுமாருடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்று கேட்டு யாரும் என்னை அணுகவில்லை. இப்போது கை நிறைய படங்களில் நடிக்கிறேன். தற்போது ஹரி இயக்கும் 'சிங்கம் 2Õ படத்தில் பிஸியாக இருக்கிறேன். இவ்வாறு ஹன்சிகா கூறினார்.
 

முடிவுக்கு வந்தது துப்பாக்கி பிரச்னை

wait is over for thuppaki's fan

'துப்பாக்கி' படப் பிரச்னை ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் நடிக்கும் படம், 'துப்பாக்கி'. இந்த படத் தலைப்புக்கு 'கள்ளத் துப்பாக்கி' பட தயாரிப்பாளர் ரவிதேவன் எதிர்ப்பு தெரிவித்து, சென்னை 2வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட், 'துப்பாக்கி' என்ற தலைப்புக்கு இடைக்கால தடை விதித்தது. இத்தடையை நீக்கக் கோரி 'துப்பாக்கி' படத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். 'வழக்கு சிட்டி சிவில் கோர்ட்டில் நடந்துவருவதால் அங்குதான் மனு தாக்கல் செய்ய வேண்டும்' என்று ஐகோர்ட் கூறியது.

இதையடுத்து வழக்கு விசாரணை நேற்று அங்கு நடக்க இருந்தது. இந்நிலையில் வழக்கை வாபஸ் பெறுவதாக ரவிதேவன் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், 'கள்ளத்துப்பாக்கி' படத் தயாரிப்பாளரிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க, இத்தலைப்பு விட்டுக் கொடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இதுபற்றி ரவிதேவனிடம் கேட்டபோது, 'முருகதாஸ் சிறந்த டெக்னீஷியன். ஒரு படைப்பாளியாக அவரது பிரச்னையை புரிந்துகொண்டேன். இதையடுத்து பிரச்னை முடிக்கப்பட்டது' என்றார்.
 

கனடாவில் ‘ஆதிபகவன்’ படத்தின் ஆடியோ

aadhibhagavan audio release in Canada

ஜெயம் ரவி, நீது சந்திரா நடிக்கும் படம் 'ஆதிபகவன்'. இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கி வருடக்கணக்கில் நடந்து வந்தது. இதனால் வழக்கமாக ஒரு படத்தை முடித்துவிட்டு அடுத்த பட ஷூட்டிங்கில் பங்கேற்கும் ஜெயம் ரவி புதிய படங்களை ஒப்புக்கொள்ள முடியாமல் இருந்தார். தற்போது ஷூட்டிங் அனைத்தும் முடிந்ததால், நிமிர்ந்து நில் மற்றும் பூலோகம் படத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இந்நிலையில் 'ஆதிபகவன்' படத்தின் ஆடியோ ரிலீஸ் இன்று கனடாவில் உள்ள டொரன்டோ நகரில் பிரம்மாண்டமாக நடக்கிறது.
 

பெண்கள் ஏன் இப்படி சீரியல் பைத்தியமா இருக்காங்க?

Tv Serial Addiction Is The Most Happening Comedy

à®'ரு படத்தில் வடிவேலுவின் ஆட்டோவில் ஏறும் நான்கு பெண்கள் à®'ரு பெண்ணின் பிரசவத்தைப் பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள். "ஐயோ கொஞ்சம் சீக்கிரம் போயேப்பா. அவளுக்கு என்ன ஆச்சோ தெரியலையே. குழந்தை பிறந்திருக்குமோ என்னவோ" என்று à®'ரு வித பதற்றத்துடன் பேசி ஆட்டோ à®"ட்டும் வடிவேலுவையும் பதற்றத்திற்கு உள்ளாக்குவார்கள். அவர்கள் இவ்வளவு நேரமும் டிவி சீரியலில் வரும் கதாபாத்திரத்தைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கின்றனர் என்று வடிவேலுக்கு கடைசியாகத்தான் தெரியவரும்.உடனே அந்தப் பெண்களை அடித்து துரத்திவிடுவார்.

இன்றைக்கு இப்படித்தான் பெரும்பாலான பெண்கள் சீரியல் பைத்தியமாக இருக்கின்றனர். வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் காலையில் 10 மணிக்கு டிவியைப் போட்டால் சமையல் செய்து கொண்டே சீரியல்தான் பார்க்கின்றனர். வீட்டிற்குள் வந்து திருடன் எதையாவது திருடிக்கொண்டு சென்றால் கூட அவர்களுக்கு தெரிவதில்லை அந்தளவிற்கு சீரியலில் மூழ்கிக் கிடப்பார்கள்.

இன்றைக்கு மின்சார தட்டுப்பாடு பல ஊர்களில் இருக்கிறது. இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் சொந்தக்காரர்களிடம் போன் போட்டு கதையை கேட்டு கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் போய்விட்டு பெண்களின் சீரியல் மீதான பாசம்.

மாமியார் - மருமகள் பிரச்சினையும், நாத்தனார் வில்லத்தனம்தான் பெரும்பாலான சீரியல்களில் à®'ளிபரப்பாகிறது. அப்படியிருந்தும் ஏன் இந்தப்பெண்கள் இப்படி சீரியல் பைத்தியம் பிடித்து அலைகின்றனரோ தெரியவில்லை. நம்ம ஊர் சானல்கள் à®'ளிபரப்பும் பைத்தியக்காரத்தனமான தொடர்கள்தான் இன்று பல குடும்பங்களை ஆட்டிப்படைத்து வருகின்றன. அதிலும் இப்போது வித்தியாசமான சீரியல் ஆர்வலர்களைக் காண முடிகிறது.

தர்மபுரியில் à®'ரு திருடன் இருந்தான். அவனோட திருட்டுத்தனமே அலாதியானது. தினசரி காலை பஸ் ஏறி பெங்களூர் போவான். அங்கு யமஹா பைக்கை குறி வைத்து திருடுவான். பின்னர் நம்பர் பிளேட்டை மாற்றி விட்டு ஜாலியாக பைக்கிலேயே ஊருக்குத் திரும்பி விடுவான். ஊருக்கு வந்து பைக்கை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து விற்று காசாக்கி விடுவான். பிறகு மறுநாள் காலை மறுபடியும் பெங்களூர், மறுபடியும் ஹமஹா திருட்டு என்று தொடர்ந்தது அவனது வாழ்க்கை. இப்படியாக கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட பைக்குகளை அவன் திருடியிருந்தான்.

அதே போலத்தான் சில பெண்கள் இருக்கிறார்கள். அதாவது குறிப்பிட்ட à®'ரு சானலின் தொடர்களை மட்டுமே இவர்கள் விரும்பிப் பார்க்கிறார்கள். வேறு எந்த சானல் பக்கமும் இவர்கள் திரும்புவதில்லை, அதில் என்ன à®'ளிபரப்பாகிறது என்பது குறித்து கவலைப்படுவதும் இல்லை.

அழுவாச்சித் தொடர்கள் என்றாலும் à®'ன்றைக் கூட விடாமல் பொறுமையுடன் பார்த்து ரசிக்கிறார்கள். அதே போல இன்னும் சிலர் வேறு சில சானல்களை மட்டும் குறி வைத்து அவற்றை மட்டுமே பார்க்கிறார்கள்.

இது மன நோயா அல்லது அடிமைத்தனமா அல்லது வேறு என்ன என்று எந்த மருத்துவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

அது சரி à®'வ்வொருவருக்கும் à®'ரு பீலிங் இருக்கத்தான செய்யும்...

 

'வாய்தா'வுக்கு முற்றுப் புள்ளி... துப்பாக்கி வழக்கு தள்ளுபடி!

Case On Tuppakki Dismissed Finally

சென்னை: நடிகர் விஜய் நடிக்கும் 'துப்பாக்கி' படத்தின் தலைப்புக்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கை சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இரு தரப்பினரும் நீதிமன்றத்துக்கு வெளியே சமரசமானதால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

நார்த் ஈஸ்ட் பிலிம் à®"ர்க்ஸ் நிறுவனம் சார்பில் கள்ளத்துப்பாக்கி படத்தைத் தயாரிக்கும் ரவி என்பவர், துப்பாக்கி தலைப்புக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், "கள்ளத்துப்பாக்கி' என்ற பெயரில் படம் தயாரித்து வருகிறேன். இந்த படத்தை பிரபல சினிமா தயாரிப்பாளர் கலைபுலி தாணு, 'துப்பாக்கி` என்ற பெயரில் தயாரித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் விஜய் நடிக்கிறார். படத்தை முருகதாஸ் இயக்குகிறார்.

நான் தயாரிக்கும் பெயரின் தலைப்பில், à®'ரு பகுதியை பயன்படுத்தியுள்ளனர். தலைப்பு வடிவமைப்பும் à®'ரே மாதிரி உள்ளது.

இந்த சூழலில் படத்தை வெளியிட்டால், எனக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். எனவே துப்பாக்கி படத்தின் தலைப்புக்கு தடை விதிக்க வேண்டும்', என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி திருமகள், `துப்பாக்கி` என்ற தலைப்புக்கு இடைக்கால தடை விதித்து கடந்த ஜுன் மாதம் உத்தரவிட்டார். இந்த இடைக்கால தடை à®'வ்வொரு முறையும் நீடிக்கப்பட்டு வந்தது. கிட்டத்தட்ட 10 முறை தடை நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி வினோபா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்ந்த ரவி சார்பில் ஆஜரான வக்கீல் ஆனந்தராமன், 'மனுதாரருக்கும், எதிர்மனுதாரர்களுக்கும் சமரசம் ஏற்பட்டுவிட்டதால், இந்த வழக்கை வாபஸ் பெறுகிறோம்' என்று கூறினார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, 'துப்பாக்கி' தலைப்புக்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெற அனுமதித்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

 

சுட்டிக்குழந்தைகளுக்கு ஒரு கூடை கதைகள்!

Oru Koodai Kathigal Children

கூட்டுக்குடும்பங்கள் இன்றைக்கு அருகி வருகின்றன. தாத்தா பாட்டியிடம் கதை கேட்டு வளர்ந்த காலம் மலையேறிவிட்டது. இன்றைக்கு வீட்டில் பெரியவர்கள் சீரியலில் முழ்கிக்கிடப்பதால் குழந்தைகளுக்கு கதை சொல்ல ஆளில்லை. இந்த குறையைப் போக்கவே தற்போது மூன் தொலைக்காட்சியில் ‘à®'ரு கூடை கதைகள்' நிகழ்ச்சி à®'ளிபரப்பாகிறது.

குழந்தைகள் தன் அறிவுத்திறனை வளர்த்துக்கொள்ளவும், மக்களோடு மக்களாய் பழகவும் உதவும் பாரம்பரியமிக்க கதைகள், கதையின் சாரம்சம் என்னவாக அமைகிறது என்பதையும் இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர் திருமதி.சுடரொளி, சுவையாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் à®'வ்வொரு பள்ளியாக சென்று குழந்தைகளை அமர வைத்து, குழந்தைகளுக்கு தெரிந்த கதையை சொல்லச் சொல்லியும், அந்த கதை எதற்காக சொல்லப்படுகிறது என்பதையும் கூறி குழந்தைகளை சந்தோஷப்படுத்துகிறார்கள்.

'à®'ரு கூடை கதைகள்' நிகழ்ச்சி வெள்ளி முதல் ஞாயிறு வரை மாலை 6 மணி முதல் 6.30 மணிவரை மூன் டிவியில் à®'ளிபரப்பாகிறது. பெற்றொர்களிடமும், குழந்தைகளிடமும் பெரும் வரவேற்பு பெற்றிருக்கும் இந்த நிகழ்ச்சியை ஆர்.தாரா முரளி இயக்கியிருக்கிறார்.