பணத்துக்காக பலருடனும் உறவு கொண்டுள்ளேன்... ஷெர்லின் சோப்ரா

I Ve Had Physical Relationship With Many For Money   

மும்பை: முன்பு பணத் தேவைக்காக பலருடனும் உடலுறவு வைத்துள்ளேன் என்று பகிரங்கமாக கூறியுள்ளார் நடிகை ஷெர்லின் சோப்ரா.

சில நடிகைகள் வாயைத் திறந்தாலே பலானதாகவே இருக்கும். அந்த வரிசையில் ஷெர்லினும் ஒருவர். டிவிட்டரில் இவர் லேட்டஸ்டாக சொல்லியிருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணத்துக்காக பலருடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டதாக வெகு ஓப்பனாக கூறியுள்ளார் ஷெர்லின்.

இதுகுறித்து அவர் டிவிட்டர் பக்கத்தில் கூறுகையில், எனக்கு பலமுறை டிவிட்டரில் உங்களுடன் படுக்க வேண்டும். என்ன ரேட் என்று சொல்லுங்கள் என்று கேட்டு பலரும் தொடர்பு கொண்டு வருகிறார்கள்.

கடந்த காலத்தில் நான் பலமுறை பணத்திற்காக உறவு வைத்துக் கொண்டுள்ளேன். பணம் எனக்கு அப்போது நிறைய தேவைப்பட்டது. இதற்காக நான் இதில் ஈடுபட்டேன். அதில் எனக்கு வருத்தமோ, தயக்கமோ ஏற்படவில்லை. ஒரு முறை கூட நான் ஓசியில் யாருடனும் படுத்ததில்லை. எல்லாமே பணத்திற்காகத்தான். எல்லாவற்றுக்கும் ஒரு விலை வைத்திருந்தேன்.

ஆனால் இப்போது நான் அப்படியில்லை. என்னுடைய வாழ்க்கைத் தரத்தின் அளவு மாறி விட்டது. இப்போது அப்படி இருக்க வேண்டிய அவசியமில்லை என்று உணர்கிறேன் என்று கூறியுள்ளார் ஷெர்லின்.

 

ஒரு வழியாக 'கிளைமேக்ஸை' எட்டினார் சிம்பு!


Simbu Reaches Climax Poda Podi   
சரத்குமார் மகள் வரலட்சுமியுடன் இணைந்து ரொம்ப நாளாக நடித்து வரும் போடா போடி படத்தை ஒரு வழியாக முடிவுக்குக் கொண்டு வருகிறார் சிம்பு. படம் கிளைமேக்ஸ் காட்சியை எட்டி விட்டதாம். சீக்கிரம் முடித்து விடுவார்கள் என்று நம்பப்படுகிறது.

சரத்குமாரின் மகள் வரலட்சுமி நாயகியாக அறிமுகமாகும் படம்தான் இந்த போடா போடி. ரொம்பகாலமாக இந்தப் படம் இழுத்துக் கிடக்கிறது. வரலட்சுமியே நொந்து போய் விட்டார். அந்த அளவுக்கு ஜவ்வாக படத்தை இழுத்து விட்டார் சிம்பு.

வருடக் கணக்கில் இழுத்தடித்துக் கொண்டிருக்கும் இப்படத்தின் ஷூட்டிங் தற்போது வேகம் பிடித்துள்ளதாம். படத்தின் கிளைமேக்ஸ் காட்சி வரை முடித்து விட்டார்களாம். எனவே எப்படியும் இந்தப் படம் வெளியாகி விடும் என்று நம்புகிறார்கள்.

படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை ஒரு நடனத்துடன் கூடிய பின்னணியில் படமாக்கியுள்ளனராம். இந்த நடனத்தில் சிம்பு, வரலட்சுமியுடன், பழைய நடிகை ஷோபனாவும் கால்களை ஆட்டியுள்ளாராம்.

செப்டம்பர் 6ம் தேதி டிரெய்லரை வெளியிட்டு விட்டு படத்தை சீக்கிரமாக கொண்டு வரும் திட்டம் உள்ளதாம்.!
 

மலேசிய மண்ணில் பர்த்டே பார்ட்டி நடத்திய மோனிகா

Actress Monika Celebrates Her Birth

கோலாலம்பூர்: தமிழ்த் திரை நடிகைகளில் நன்றாக தமிழ்பேசக் கூடிய நடிகை மோனிகா மலேசியாவில் தமது பிறந்தநாளை அமர்க்களமாகக் கொண்டாடிய்ருக்கிறார்.

குழந்தை நட்சத்திரமாக பலபடங்களில் நடித்திருந்தாலும் தங்கர்பச்சனின் அழகி திரைப்படம் மோனிகாவை ஒரு பேரழகியாக தமிழ்த்திரையுலகிற்கு அடையாளம் காட்டியது. அதன் பின்னர் நஞ்சுபுரம், வர்ணம் மற்றும் குறும்புக்காரப் பசங்க என்று வித்தியாசமான கதை அமைப்பு கொண்ட படங்களில் நடித்திருக்கிறார். மலையாளப் படவுலகிலும் நன்கு அறியப்பட்ட கதாநாயகியாக 916 என்கிற படத்தில் நடித்து வருகிறார் மோனிகா.

நன்கு தமிழ் பேசி நடிக்கும் ஆற்றல் உடையவராகையால் உலகம் முழுவதும் இவருக்கு ஏராளமான தமிழ் சினிமா ரசிகர்கள் இருக்கிறார்கள். மலேசியாவிலேயே எடுக்கும் மலேசியத் தமிழ்ப் படத்தில் இவர் கதா நாயகியாக நடித்திருப்பதே இதற்குச் சான்று.

சமீபத்தில் மாயன் டிரீம் சிட்டியினை துவக்கி வைக்க மலேசியா சென்றிருந்தார் மோனிகா. அந்த நேரம் பார்த்து அவரது பிறந்த நாள் வந்து விட அதனைத் தெரிந்து கொண்ட அவரது மலேசிய ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் மோனிகாவைத் தங்களுடன் பிறந்த நாள் கொண்டாட வேண்டும் என்று வற்புறுத்த அவரும் சம்மதித்திருக்கிறார். அப்புறமென்ன! மோனிகாவின் பிறந்த நாளை அமர்க்களப்படுத்தி விட்டார்கள் மலேசியா ரசிகர்கள் மற்றும் நண்பர்கள்.

இது குறித்து மோனிகா கூறும் போது "மற்றவர்களைச் சந்தோஷப்படுத்திப் பார்ப்பதே பெரிய சந்தோஷம் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். எனது பிறந்த நாளைக் கொண்டாடுவதில் அவர்கள் ஆவலாக இருந்தார்கள்... அவர்களது சந்தோஷத்திற்காக நானும் சம்மதித்தேன்... எனது பிறந்த நாளை அவர்களுடன் கொண்டாடியதில் அவர்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி... இது என் வாழ் நாளில் முக்கியமான பிறந்த நாளாக மாறி விட்டது என்றால் மிகையல்ல..என்றார்.

 

கன்னடத்தில் குத்தாட்டம் ஆட வருகிறார் பூனம் பாண்டே!

Poonam Pandey Likely Kannada Item Number

பெங்களூர்: கும்மென்று தனது கவர்ச்சிப் படங்களை டிவிட்டரிலும், தனது இணையதளத்திலும் போட்டு பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கும் பூனம் பாண்டே இந்தியில் ஒரு படத்தில்நடிக்கப் போகிறார் என்பது பழைய செய்தி. இப்போது கன்னடத்தில் ஒரு குத்துப் பாட்டுக்கு கவர்ச்சியாட்டம் போடப் போகிறார் என்பது புதுச் செய்தி.

இந்தியில் வித்யா பாலனின் நடிப்பில் வெளியாகிய டர்ட்டி பிக்சர்ஸ் படத்தை கன்னடத்தில் டர்ட்டி பிக்சர்ஸ் - சில்க் சக்காத் மகா என்ற பெயரில் ரீமேக் பண்ணுகிறார்கள். இதில், பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக், சில்க் வேடத்தில் நடிக்கிறார்.

இந்த நிலையில் படத்தில் இரண்டு குத்துப் பாட்டுக்களை படு கவர்ச்சியாக படமாக்கி இணைக்கப் போகிறார்களாம். இதற்காக பாகிஸ்தானைச் சேர்ந்த 2 கவர்ச்சி நடிகைகளை இறுதி செய்து அவர்களிடம் பேசியுள்ளனராம். அதேசமயம், ஒரு பாட்டுக்கு ஆட நம்ம ஊர் பூனம் பாண்டே ஒப்புக் கொண்டுள்ளாராம்.

இதுகுறித்து படத்தின் இயக்குநர் திரிஷூல் கூறுகையில், இரண்டு பாகிஸ்தானிய நடிகைகளைத் தொடர்பு கொண்டுள்ளோம். பேசி வருகிறோம். யாருடைய பட்ஜெட் சரிப்பட்டு வருகிறதோ அவரை பிக்ஸ் செய்வோம்.

இன்னொரு பாட்டுக்கு பூனம் பாண்டே ஆடுவார். அவர் ஆட ஒப்புக் கொண்டு விட்டார். சம்பளம் குறித்து தற்போது பேச்சு நடக்கிறது என்றார்.

மொத்தத்தில் படம் முழுக்க ஏகப்பட்ட டர்ட்டி இருக்கும் போலத் தெரிகிறது....

 

பாகிஸ்தானிலிருந்து பாலிவுட்டுக்கு இறக்குமதியாகும் இன்னொரு கவர்ச்சிப் புயல்!

Pakistani Supermodel Mehreen Syed Set For Bollywood

மும்பை: பாகிஸ்தானிலிருந்து பாலிவுட்டுக்கு வரும் நடிகைகளின் அணிவகுப்பு பெரிதாக ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே வீணா மாலிக் இங்கு கவர்ச்சி அலையைப் பரப்புவதில் முன்னணியில் உள்ள நிலையில் அடுத்து மெஹரீன் சையத் என்ற மாடல் அழகியை பாலிவுட்டுக்குக் கொண்டு வருகிறார் இயக்குநர் சஞ்சய் புரன் சிங் செளஹான் என்பவர்.

இவர் லாகூர் என்ற படத்தை இயக்கியவர். அதிலேயே மெஹரீனை அறிமுகப்படுத்த திட்டமிட்டிருந்தாராம். ஆனால் லண்டனில் நடந்த பேஷன் விழாவில் பங்கேற்று கேட்வாக் போனபோது சறுக்கி விழுந்து அடிபட்டு விட்டதாம் மெஹரீனுக்கு. இதனால் அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போய் விட்டதாம்.

தற்போது தனது அடுத்த படத்தை ஆரம்பிக்கும் சஞ்சய், இந்த முறை தவறாமல் மெஹரீனை புக் செய்து விட்டாராம்.

பாகிஸ்தானில் சூப்பர் மாடலாக வலம் வரும் மெஹரீன், இந்தப் படத்தில் வித்தியாசமான பாத்திரத்தில் நடிக்கப் போகிறாராம். இப்படம் இந்தியத் துணைக் கண்டத்தில் நிலவி வரும் அரசியல்சூழலை மையமாகக் கொண்ட காமெடிப் படமாகும் என்று கூறுகிறார் சஞ்சய்.

ஒரு பக்கம் காமெடிப் புயல், இன்னொரு பக்கம் கவர்ச்சிப் புயலா... பிரம்மாதம்!

 

'பாலக்காட்டு மாதவன்' ஆகிறார் விவேக்!

Vivek Do Bhagyaraj

சென்னை: இயக்குநர்- நடிகர் பாக்யராஜுக்குப் பெரும் பெயரைப் பெற்றுத் தந்த வேடமான பாலக்காட்டு மாதவன் என்ற பெயரில் ஒரு புதிய படம் உருவாகிறது. அதில் ஹீரோவாக நடிக்கிறார் சிரிப்பு நடிகர் விவேக். இந்தப் படம் குறித்த அறிவிப்பை பாக்யராஜ் முன்னிலையிலேயே அறிவித்தனர்.

அந்த 7 நாட்கள் படத்தை யாரும் மறந்திருக்க முடியாது. பாக்யராஜ் நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியாகி கதைக்காகவும், பாடல்களுக்காகவும், நடிப்புக்காகவும் பெரும் ஓட்டம் ஓடிய படம் அந்த 7 நாட்கள்.

அப்படத்தில் பாலக்காட்டு மாதவன் என்ற கேரக்டரில் வாழ்ந்திருப்பார் பாக்யராஜ். அந்த வேடம் இன்றளவும் மக்கள் மனதிலிருந்து அகலவில்லை.

இந்த நிலையில் அந்தப் புகழ் பெற்றவேடத்தின் பெயரில் ஒரு படத்தை உருவாக்கப் போகிறார்கள் ஏபிசி டிரீம்ஸ் என்டர்டெய்னர்ஸ் நிறுவனத்தினர். இதில் ஹீரோவாக நடிக்கிறார் சிரிப்பு நடிகர் விவேக்.

ஏபிசி நிறுவனம் செளந்தர்யா என்ற படத்தைத் தயாரித்துள்ளது. அதன் ஆடியோ வெளியீட்டு விழாவில் பாக்யராஜ் கலந்து கொண்டார். அப்போது தங்களது அடுத்த படத்தின் அறிவிப்பை இப்போது வெளியிடுவதாக அறிவித்தனர். இதையடுத்து நடிகர் விவேக் அடுத்த படத்தின் பெயர் பாலக்காட்டு மாதவன், அதில் நான் நாயகனாக நடிக்கிறேன் என்று அறிவித்தார். இதைக் கேட்டு வியப்படைந்தார் பாக்யராஜ். அடுத்து விவேக்கையும், பட நிறுவனத்தையும் வெற்றி பெற வாழ்த்துவதாக தெரிவித்தார். மேலும் இந்தப் படத்தில் விவேக்குடன் இணைந்து நடிக்க தானும் விரும்புவதாகவும் தெரிவித்தார்.

சந்திரமோகன் இந்த பாலக்காட்டு மாதவனை இயக்கப் போகிறார். இவர் செளந்தர்யாவின் இயக்குவரும் கூட.