விசில் சத்தம் அதிர்கின்றது… ஒரே காட்சியில் கலக்கும் ரஜினி! 12/16/2010 5:35:11 PM
கன்னட மொழியில் பெரும் வெற்றி பெற்ற படம் ஆப்தமித்ரா பார்ட் 2. இது சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம். இந்த படத்தை தமிழில் உருவாக்க வேண்டும். அதில் ரஜினிகாந்த் நடிக்க வேண்டும் என்ற பி.வாசுவின் விருப்பமாக இருந்தது.
இதற்காக ரஜினியிடம் நீண்ட நாட்களாக பேசிவந்தவர். சமீபத்தில் அந்த படத்தை சென்னையில், ஒரு பிரிவியூ தியேட்டரில் ரஜினியை பார்க்க வைத்திருக்கிறார். படத்தை பார்த்துவிட்டு பி.வாசுவை கட்டிபிடித்து பாரட்டிவிட்டு சென்றிருக்கிறார் ரஜினி. ஆனால் முதலில் பார்க்கலாம் என்று கூறிய ரஜினி, பின்னர் அஜீத்தை நடிக்கச் சொல்லி சிபாரிசு செய்தார்.
இதைத்தொடர்ந்து அவர் அஜீத்தை அழைத்து பேசியிருக்கிறார். அப்போது இந்த சந்திரமுகி 2 வில் நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும். உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்று கூறினாராம். ஆனால் அந்த திட்டம் வெற்றி பெறாத நிலையில், வெங்கடேஷை வைத்து தெலுங்கில் இயக்குமாறு பரிந்துரை செய்தார் ரஜினி. கூடவே, அந்தப் படத்தில் ஒரு காட்சியில் நடித்தும் கொடுத்தார் ரஜினி. ஆனால் இந்த விஷயம் முதலில் ரகசியமாக வைக்கப்பட்டது. இப்போது படம் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் யாரும் எதிர்பாராத சமயத்தில் ஒரு காட்சியில் தோன்றுகிறார் ரஜினி. அவரது கதைப்படி ரஜினியின் சிஷ்யர்தான் படத்தின் ஹீரோ வெங்கடேஷ். இந்தக் காட்சிக்கு ஆந்திராவிலும் தமிழகத்திலும் ரசிகர்கள் அபார வரவேற்பு கொடுத்து மகிழ்கின்றனர். ரஜினி வரும் ஒரு காட்சியில் திரையரங்குகள் அதிர்கின்றன, ரசிகர்களின் விண்ணைப் பிளக்கும் கரகோஷம் மற்றும் விசில் சத்தம் பறக்கின்றன.
வெங்கடேஷ், அனுஷ்கா, கமலினி முகர்ஜி, வினய் பிரசாத் நடித்துள்ள இந்தப் படம் வெளியான இன்றே வெற்றிப் படமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிப்புத் துறையில் 25-ம் ஆண்டில் கால்பதிக்கும் வெங்கடேஷுக்கு மிக முக்கிய படமாக நாகவள்ளி(தமிழில்) அமைந்துள்ளது.