திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத் தலைவராக இசையமைப்பாளர் எஸ் ஏ ராஜ்குமார் மீண்டும் பதவி ஏற்றார்.
சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க தேர்தலில் வெற்றிபெற்ற உறுபினர்களுக்கு பதவியேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை வடபழனியில் உள்ள இசை கலைஞர்கள் சங்க வளாகத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் முன்னிலையில் நடைபெற்றது.
தேர்தலில் வெற்றிபெற்ற இசைக் கலைஞர்களுக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
விழாவில் இயக்குனர் சங்க தலைவர் விக்ரமன் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், பாடகர் மனோ மற்றும் பெப்சி செயலாளர் ஜி சிவா ஆகியோர் கலந்துகொண்டனர்.
பாடகி சின்மயி விழாவை தொகுத்து வழங்கினார்.
பொறுப்பேற்றுக் கொண்ட புதிய நிர்வாகிகள்:
தலைவர் - எஸ் ஏ ராஜ்குமார்
செயலாளர் - டோம்னிக் சேவியர்
பொருளாளர் - விஆர் சேகர்
அறக்கட்டளை தலைவர் - பிஜி வெங்கடேஷ்
அறக்கட்டளை செயலாளர் - டி.சங்கரன்.