கோடம்பாக்கம், புளியந்தோப்பு, வால்டாக்ஸ் ரோடு உள்ளிட்ட 7 இடங்களில் அம்மா தியேட்டர்கள்!

கோடம்பாக்கம், கோட்டூர்புரம், ராமாபுரம், புளியந்தோப்பு, வால்டாக்ஸ் ரோடு, பேசின் பிரிட்ஜ் உள்ளிட்ட 7 இடங்களில் அம்மா தியேட்டர்களுக்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இவற்றில் 100 முதல் 120 வரையிலான இருக்கைகள் போடப்படும்.

ஜெயலலிதா முதல்வரான பிறகு அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன. அடுத்து அம்மா குடிநீர் பாட்டில், அம்மா மருந்தகம், அம்மா சிமெண்ட், அம்மா உப்பு ஆகியவற்றை ஏற்படுத்தி, மக்களுக்காக மலிவு விலையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

7 locations selected for Amma Theaters in Chennai

இதற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்ததால் மேலும் பல திட்டங்கள் அம்மா பெயரில் துவங்க ஏற்பாடுகள் நடந்து வந்தது. அந்த வரிசையில் சென்னையில் அம்மா தியேட்டர்கள் கட்டப்படும் என்று மாநகராட்சி சார்பில் ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இதற்காக தியாகராயநகர் பஸ் நிலையம் அருகே வணிக வளாகங்களுடன் கூடிய அம்மா தியேட்டர் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதே போல் கோடம்பாக்கம், கோட்டூர்புரம், ராமாபுரம், புளியந்தோப்பு, வால்டாக்ஸ் ரோடு, பேசின் பிரிட்ஜ் ஆகிய இடங்களிலும் அம்மா தியேட்டர் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட 7 இடங்களில் கட்டப்பட உள்ள அம்மா தியேட்டர்களுக்கு அரசின் அனுமதி வேண்டி திட்டம் தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் தியேட்டர் கட்டும் பணி உடனடியாக தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

குளு குளு வசதியுடன் கட்டப்படும் அம்மா தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் மற்ற தியேட்டர்களை விட 30 சதவீதம் குறைவாக இருக்கும். 6 மாத இடைவெளிக்குப் பிறகு
முதல்வராக மீண்டும் ஜெயலலிதா பதவி ஏற்க உள்ளதால் ‘அம்மா' தியேட்டர்கள் விரைவில் கட்டப்பட்டு விடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

மீண்டும் மலர்ந்தது 'தாமரை'!

சென்னை: தனது சிறந்த வரிகளால் தமிழ் சினிமா ரசிகர்களை கொள்ளை கொண்ட கவிஞர் தாமரை சில மாத இடைவெளிக்குப் பின் மீண்டும் இயக்குனர் கௌதம் மேனன் படத்திற்காக பேனா பிடித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் பெண்களாலும் நல்ல பாடல்களை கொடுக்க முடியும் என்று நிரூபித்த தாமரை, தன்னை விட்டுப் பிரிந்து சென்ற தனது கணவர் தியாகுவை தன்னுடன் சேர்த்து வைக்க சொல்லி சில மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

Gautham Menon And   Lyricist  thamarai Progress

தற்போது அதில் இருந்து மீண்டு மறுபடியும் இயக்குனர் கௌதம் மேனனின் புதிய படமான அச்சம் என்பது மடமையடா படத்திற்காக பாட்டு எழுதி வருகிறார்.

இனியவளே என்ற படத்தில் இயக்குனர் சீமானால் பாடலாசிரியராக அறிமுகம் செய்யப் பட்டாலும் கௌதம் மேனனின் மின்னலே படத்தில் இடம்பெற்ற வசீகரா என்ற பாடல் தான் இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலப் படுத்தியது.

கௌதம் மேனன் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜுடன் இவர் இணைந்து பணியாற்றிய காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம் போன்ற படங்களில் உள்ள பாடல்கள் அனைத்துமே மாபெரும் வெற்றி அடைந்தது.

மற்ற இயக்குனர்களின் படங்களுக்கு தாமரை பாடல்கள் எழுதினாலும் அது கௌதம் மேனன் பட பாடல்களைப் போல ரசிகர்களை பெரிதாக ஈர்க்கவில்லை. எனவே மீண்டும் தாமரை கௌதம் மேனன் படத்திற்காக எழுதப் போகும் பாடல்களை ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

மீண்டும் தாமரை ஜொலிக்கட்டும்!

 

பசுபதிக்கு 46 வயசு... மறுபடியும் ரவுண்டு வர வாழ்த்துவோம்!

சென்னை: வித்தியாச நடிகர் பசுபதியின் பிறந்த நாள் இன்று. தனது வில்லத்தனம் மற்றும் குணச்சித்திரம் என்று இரண்டு வகையான நடிப்பாலும் தமிழ் சினிமா ரசிகர்களைக் கட்டிப் போட்டவர் நடிகர் பசுபதி.

கூத்துப் பட்டறை நடிகரான இவர் ஹவுஸ்புல் மற்றும் ஆளவந்தான் படங்களில் சிறிய வேடங்களில் நடித்து சினிமாவில் நுழைந்தவர். நடிகர் நாசரின் மாயன் படத்தில் முதல்முறையாக வெளியே தெரியும்படியான ஒரு கேரக்டரில் நடித்தார்.

Happy Birthday Pasupathy!

கன்னத்தில் முத்தமிட்டால், தூள் போன்ற படங்களில் தனது வில்லன் நடிப்பின் மூலம் ரசிகர்களை மிரட்டிய இவர் சில வருடங்கள் தமிழ் சினிமாவின் நிரந்தர வில்லன் நடிகராக வலம் வந்தவர்.

விருமாண்டி இவரது வித்தியாசமான நடிப்புக்கும், நடிப்புத் தீனிக்கும் பெரும் வாய்ப்பாக அமைந்தது. தமிழின் பிரபல நடிகராகவும் உயர்ந்தார்.

தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்திருக்கிறார். ஈ படத்திற்காக தமிழ்நாடு அரசின் சிறந்த வில்லன் விருதைப் பெற்றவர்.

தேசிய விருது வாங்கிய வெயில் படத்தில் தனது சிறந்த குணச்சித்திர நடிப்பை அளித்திருப்பார். இன்று (மே 18)ல் நடிகர் பசுபதி தனது 46 வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

மறுபடியும் தமிழ்ல ஒரு ரவுண்டு வாங்க சார்..!

 

விரைவில் "ஜிகர்தண்டாஜி"!

சென்னை: தமிழ்ப் படமான ஜிகர்தண்டா கூடிய விரைவில் ஹிந்தி பேச இருக்கிறது.

தமிழ் மொழியில் வெற்றி பெற்ற படங்களை இந்தியிலும் ரீமேக் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

சமீபத்தில் தமிழ் படமான ரமணா இந்தியில் கப்பர் இஸ் பேக் என்னும் தலைப்பில் ரீமேக் செய்யப் பட்டு அங்கு வசூலைக் குவித்து வரும் வேளையில் மற்றொரு படமான ஜிகர்தண்டா தற்போது இந்தி பேச உள்ளது.

Jikarthanda  likely To Have Bollywood Remake

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியாகிய ஜிகர்தண்டா சரியாக ஒரு வருடம் முடிவதற்குள்ளாகவே இந்தியில் ரீமேக் செய்யப் பட உள்ளது. நடிகர் சித்தார்த், பாபி சிம்ஹா, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மூவருக்கும் நல்ல பிரேக் கொடுத்த படம் இது.

இந்தப் படத்தில் அசால்ட் சேது என்னும் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக தேசிய விருதைப் பெற்றார் நடிகர் பாபி சிம்ஹா. 1௦ கோடி செலவில் எடுக்கப் பட்ட இந்தப் படம் 25 கோடி ரூபாய் வசூல் செய்தது.

இந்தியிலும் கார்த்திக் சுப்புராஜே இயக்க இருக்கிறார், மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு கூடிய விரைவில் நடைபெற இருப்பதாக நெருங்கிய தொடர்புடையவர்கள் கூறுகின்றனர்.

சரி, யாருப்பா அந்த அலப்பறையான வில்லன் வேடத்தில் நடிக்கப் போவது...?

 

ராய் லட்சுமி மடியில் சமர்த்தாக படுத்து பால் குடித்த புலி!

சென்னை: அவ்வப்போது எதாவது செய்து மற்றவர்கள் தன்னைப் பற்றி பரபரப்பாக பேசும்படி செய்து விடும் நடிகை ராய் லட்சுமி சமீபத்தில் எல்லாரும் வியக்கும் வண்ணம் மீண்டும் ஒரு செயலை செய்து இருக்கிறார்.

கற்க கசடற என்ற தமிழ் படத்தின் மூலம் தமிழ்த் திரை உலகில் அறிமுகமான நடிகை ராய் லட்சுமி மங்காத்தா, காஞ்சனா , அரண்மனை போன்ற வெற்றி படங்களில் நடித்து கோலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வருபவர்.

Actress   Raai laxmi  Give The Milk For Original “ Tiger “

தற்போது கோடை விடுமுறையைக் கழிக்க தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்றிருக்கும் இவர் அங்குள்ள மிருகக் காட்சி சாலைக்கு சென்று உயிருடன் இருந்த ஒரு புலியை மடியில் தூக்கி வைத்து அதற்கு புட்டிப் பால் கொடுத்து மகிழ்ந்திருக்கிறார்.

இது குறித்து தத்துவம் ஒன்றும் அவர் வாயில் இருந்து உதிர்க்கப்பட்டிருக்கிறது அதாவது புலிக்கு பால் கொடுக்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை தற்போது நிறைவேறி உள்ளது, எனது வாழ்வின் மறக்க முடியாத தருணங்களில் இதுவும் ஒன்று என்று கூறி இருக்கிறார்.

இன்னொரு முறை சொல்லுங்க!

 

ரஜினியைக் கவர்ந்த பாஸ்கர் தி ராஸ்கல்... ரீமேக் செய்ய ஆர்வம்?

லிங்கா' படத்தையடுத்து ரஜினி 'மெட்ராஸ்' பட இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். நயன்தாராதான் நாயகியாக நடிக்கவிருக்கிறார்.

கலைப்புலி தாணு தயாரிக்கப் போகும் இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனாலும், அந்தப் படத்துக்கான அலுவலகம் அமைக்கப்பட்டு வேலைகளும் தொடங்கிவிட்டன.

Rajini wishes to remake Baskar The Rascal

இது தவிர்த்து ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்ட பொருட்செல்வில் ஒரு அறிவியல் சார்ந்த படத்தில் ரஜினி நடிப்பார் எனவும் கூறப்படுகிறது. இவை தவிர, ஆஸ்கர் ரவிச்சந்திரன், ஞானவேல் ராஜா, லிங்குசாமி ஆகியோரும் ரஜினியின் தேதிகளுக்காகக் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் மலையாளத்தில் மம்மூட்டி, நயன்தாரா நடிப்பில் வெளியான படம் ‘பாஸ்கர் த ராஸ்கல்' படத்தை சமீபத்தில் பார்த்த ரஜினி அப்படத்தை ரீமேக் செய்தால் நன்றாக இருக்கும் என விரும்பினாராம்.

இந்தப் படத்தின் தமிழ் உரிமையை ஏற்கனவே எஸ்.எஸ்.துரைராஜ் வாங்கி வைத்துள்ளாராம். இவர் ஏய், பாறை, சதுரங்கம் போன்ற படங்களைத் தயாரித்தவர்.

ரஜினியிடம் இந்தப் படத்தின் உரிமை, ரீமேக் குறித்து எஸ்எஸ் துரைராஜ் ஏற்கெனவே பேசியுள்ளாராம். இந்த நிலையில்தான் தாணு படத்தில் ஒப்பந்தமாகிவிட்டார் ரஜினி.

எப்படியும் தமக்கு கால்ஷீட் தந்துவிடுவார் என்ற நம்பிக்கையில், பல கோடி பைனான்ஸை ஏற்பாடு செய்துவிட்டுக் காத்திருக்கும் எஸ் எஸ் துரைராஜ், ‘பாஸ்கர் த ராஸ்கல்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ரஜினியைத் தவிர வேறு யார் நடித்தாலும் சரியாக வராது என்று முடிவு செய்து காத்திருக்கிறார்.

 

கடைசி "காபி"யைக் கொடுத்து ஸ்டாருக்கு "ஷாக்" கொடுத்த சேனல்!

பிரபலங்களோடு காபி குடித்து கலந்துரையாடும் அந்த தொகுப்பாளினி நட்சத்திர சேனலில் இருந்து விலகப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விருது நிகழ்ச்சியில் தொகுப்பாளினியின் செயல்பாடு சரியில்லை என்று பகிரங்கமாகவே பேசப்பட்டது. இதற்கு கூப்பிட்டு கண்டித்த சேனல் தரப்பு அவர் தொகுத்து வந்த நிகழ்ச்சியை இரண்டு சீசன்களோடு முடித்துவிட்டனராம். கடைசியாக ஒளிமயமான நடிகையோடு அவர் குடித்ததுதான் கடைசி காபியாம். அப்புறம் யாருடனும் தொகுப்பாளினி காபி குடிக்கவில்லையாம்

இந்த மடம் விட்டால் சந்தைமடம் என்று தொகுப்பாளினியும் வேறு சேனல் தேடி வருகிறாராம். சிறந்த தொகுப்பாளினி விருது வாங்கிய அவருக்கா இந்த கதி என்று புலம்பும் நட்பு வட்டாரங்கள், சேனல் தரப்பையும், தொகுப்பாளினியையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனராம்.

இன்றே இப்படம் கடைசி

சினிமா பிரபலங்களை அழைத்து விருது வழங்கும் அந்த நட்சத்திர டிவியில் சலசலப்பு அதிகரித்து வருகிறது. காரணம் சினிமா நட்சத்திரங்களை சரியாக கவனிக்கவில்லை என்பதுதானாம். கடந்த ஆண்டுகளைப் போல இந்த ஆண்டு சரியாக சினிமா பிரபலங்கள் யாரும் வரவில்லை.

வந்தவர்களும் பாதியிலேயே கழன்று கொண்டனர். எனவே இந்த ஆண்டோடு விருது விழாவிற்கு மூடு விழா நடத்திவிடலாமா என்று யோகிக்கிறதாம் நட்சத்திர சேனல்.

 

இனி தமிழ் படங்கள்தான்... வேறு மொழிப் படங்கள் வேணாம்! - அஜ்மல் அமீர்

திரு திரு துரு துரு, அஞ்சாதே, கோ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அஜ்மல் அமீர். தமிழில் நல்ல வரவேற்பை பெற்ற படங்களில் நடித்து வந்தாலும் தனக்கென ஒரு இடத்தை தக்க வைப்பதற்குள் தெலுங்கு, மலையாளம் என்று போய்விட்டார்.

தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்தவருக்கு அங்கேயும் நல்ல வரவேற்ப்பு கிடைத்திருக்கிறது.

Ajmal decides to concentrate in Tamil only

திரும்பவும் மலையாள படவுலகிற்கு போனவருக்கு மோகன் லாலுடன் சேர்ந்து ஒரு படத்தில் தமிழ்ப் பையனாக நடிக்க வாய்ப்பு வந்து, அங்கும் தெரிந்த முகமாகிவிட்டார்.

இப்படி முன்று மொழிகளிலும் நடித்தாலும், தமிழ் படங்களில் நடிக்கவே அதிகம் ஆசைப்படுகிறாராம் அஜ்மல். இதற்காகவே மலையாளம், தெலுங்குப் படங்களுக்கு கொஞ்ச நாள் ஓய்வு கொடுத்துவிட்டு முழுக்க முழுக்க தமிழ்ப் படங்களில் கவனம் செலுத்தப் போகிறாராம் . அதற்காகவே கேரளாவிலிருந்து சென்னைக்கு குடி பெயர்ந்து வந்து விட்டாராம். தனது அடுத்த சுற்றுக்கு நல்ல கதைகளாகக் கேட்டு வருகிறார்.

Ajmal decides to concentrate in Tamil only

இனி தமிழில் ஒரு நல்ல இடத்தை பெரும் வரை தமிழ் படங்களில் மட்டும் கவனம் செலுத்தப்போகிறேன் என்றவர், தன்னைத் தேடி வந்த ஒரு இந்திப் பட வாய்ப்பைக் கூட வேண்டாம் என்று மறுத்திருக்கிறார்!

 

ஜிகினா படத்தை வாங்கியது லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ்!

நந்தா பெரியசாமி இயக்கத்தில், விஜய் வசந்த் நடித்து வரும் ஜிகினா படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் வாங்கியுள்ளது.

தரமான படங்களுக்கு தமிழ் ரசிகர்களிடையே என்றுமே வரவேற்புண்டு. இதில் சிறிய பட்ஜெட், பெரிய பட்ஜெட் என பாகுபாடில்லை. வழக்கு எண் 18/9, கோலி சோடா, மஞ்சப்பை , சதுரங்க வேட்டை என தரமான படங்களை வெளியிட்ட திருப்பதி பிரதர்ஸ், மீண்டும் ஒரு தரமான படத்தை வெளியிட தயாராக உள்ளனர்.

Lingusamy acquires Jigina

இயக்குனர் ரவி நந்தா பெரியசாமி இயக்கத்தில் விஜய் வசந்த், சானியா தாரா நடித்துள்ள ஜிகினா படத்தை திருப்பதி பிரதர்ஸ் வெளியிட உள்ளனர்.

"படத்தை துவக்கும் முன்பே ரவி நந்தா பெரியசாமியின் கதையின் மீது எனக்கு பெரிய நம்பிக்கை இருந்தது. படத்தைப் பார்த்தவுடன் அந்த நம்பிக்கை மேலும் வலுவடைதுள்ளது. இப்படம் ரவிநந்தா பெரியசாமிக்கு மட்டுமல்ல திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு மேலும் நற்பெயரை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது..," என்கிறார் இயக்குநர் லிங்குசாமி.

 

மே 22 முதல் ஆந்திராவில் "மாட்லாட"ப் போகும் அஜித்தின் “என்னை அறிந்தால்“!

சென்னை: தல அஜித்தின் 55 வது படமான என்னை அறிந்தால் கடந்த பிப்ரவரி மாதம் தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்தது அல்லவா. தற்போது அதன் தெலுங்கு பதிப்பு இந்த மாதம் (மே) 22 ம் தேதி ஆந்திர மண்ணில் வெளியாகிறது.

அஜித், அருண் விஜய், அனுஷ்கா மற்றும் த்ரிஷா, நாசர் ஆகியோர் நடித்து இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த என்னை அறிந்தால் படம் மொழி மாற்றம் செய்யப்பட்டு தெலுங்கில் வெளியாக இருக்கிறது.

Telugu version of Ajith - Gautham Menon's Yennai Arindhaal titled Yentha Vaadu Gaanie

அக்கரை சீமையில் அஜித்திற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. மங்காத்தா, ஆரம்பம் போன்ற படங்கள் ஆந்திராவில் வெளியாகி வசூலை அள்ளிய நிலையில் கடைசியாக வெளிவந்த வீரம் மகேஷ் பாபு படத்துடன் மோதியதால் வசூலை இழந்தது.

தற்போது ஆந்திராவில் எந்த பெரிய படங்களும் வெளியாகாத நிலையில் என்னை அறிந்தால் படம் வெளியிடப்படுவதால் படம் வசூலில் சாதனை படைக்கும் என படக் குழுவினர் நம்புகின்றனர்.

என்னை அறிந்தால் தெலுங்கில் எடுபடுமா.. பார்க்கலாம்

 

இது இனப்படுகொலையா... இல்லையா? - நெஞ்சை உலுக்கும் ஆவணப்படம்

இலங்கையில் நிகழ்ந்த தமிழினப் படுகொலைகளை ஆதாரங்களுடனும் தொகுத்து ‘இது இனப்படுகொலையா? இல்லையா?' என்கிற புதிய ஆவணப் படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் வ கௌதமன்.

இந்த ஆவணப்படம் உலகத் தமிழர் பேரமைப்பின் ஏற்பாட்டில் சமீபத்தில் சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி ஸ்டூடியோவில், 600 க்கும் மேற்பட்ட தமிழின உணர்வாளர்கள் மத்தியில் திரையிடப்பட்டது.

A new documentary on Srilankan Tamils genocide

ஈழத்தில் தொடர்ச்சியாக, பல ஆண்டுகளாக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளை தொகுத்து ஒரு சிறந்த வரலாற்று ஆவணமாக்கிய கௌதமனின் படைப்பாக்கத்தை பார்த்தவர்கள் கனத்த மனதோடு கண் கலங்கி அழுதார்கள்.

ஆவணப் படம் படம் திரையிடல் முடிந்தவுடன் தமிழினத் தலைவர்கள் அனைவரும் இதுவரையிலும் ஈழப் போரில் உயிர்நீத்த மாவீரர்களுக்கும், பொது மக்களுக்கும் மலரஞ்சலி செலுத்தினார்கள்.

A new documentary on Srilankan Tamils genocide

இந்த ஆவணப் படம் குறித்தும், தமிழினப் படுகொலை குறித்தும் பலர் பேசினார்கள்.

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் பேசுகையில், "உலகம் முழுதும் பரந்து வாழும் அனைத்து மக்களிடத்திலும் இந்த ஆவணப் படத்தினை எடுத்துச் செல்ல வேண்டும். இந்தச் செய்தியை உலகம் பூராகவும் பரப்புவதன் ஊடாக மட்டுமே நம்முடைய இனத்தின் அழிவை உலகத்தின் கவனத்தின் பால் ஈர்க்க முடியும். அதற்கு இந்தப் படம் சிறப்பாக உதவும் என்று நிச்சயமாக நம்புகின்றேன். சிறப்பாக காட்சிகளைத் தொகுத்து பதிவு செய்த தம்பி கௌதமனுக்கு பாராட்டுக்கள்," என்றார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு பேசுகையில், "கௌதமன் தொடர்ச்சியாக பல படைப்புக்களை செய்து கொண்டிருக்கிறார். அவை எல்லா இடத்துக்கும் எல்லா மொழிகளிலும் கொண்டு போக வேண்டும். அகில இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 10 ஆண்டுகளுக்கு முன்னாலேயே அகில இந்திய கம்யூனிஸ்ட் மாநாட்டில் இலங்கையில் இடம்பெறுவது இனப்படுகொலை. இதனை உலக நாடுகள் எல்லாம் சேர்ந்து தடுத்து நிறுத்த வேண்டும் என்று சொல்லி தீர்மானம் போட்டோம். அதனை எல்லோரும் வரவேற்றார்கள். தமிழன் என்று பெருமை பேசுகிறோம். தமிழன் என்றால் யார்? சமத்துவமாக, ஜாதி வேற்றுமை இன்றி எல்லோரும் தமிழன் என்கிற உணர்வோடு நாம் இருந்தால் எதையும் சமாளிக்க முடியும். அந்த உணர்வு மங்கும் போது தான் தமிழனுக்கு பல சிக்கல்கள் வருகின்றன. இதனை நாம் மறந்துவிடக் கூடாது.

A new documentary on Srilankan Tamils genocide

எனவே, ஈழத் தமிழர்களுக்கு நிகழ்வது மனித குல சோகம். வியட்நாமுக்கு அடுத்த படியாக அதை விடக் கொடுமையாக 25 - 30 ஆண்டுகள் தொடர்ச்சியாக தமிழினம் அழிக்கப்பட்டிருக்கின்றது. எம்மினத்தைக் காக்க வேண்டும் என்கிற வைராக்கியம் ஒவ்வொரு தமிழனின் மனதிலும் சுடர் விட்டு எரிய வேண்டும். இந்தப் படம் அந்த வைராக்கியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

தமிழ்நாட்டில் முத்துக்குமார் தொடங்கி 29 உயிர்கள் தற்கொலை செய்து விட்டார்கள். அவர்கள் ஒரு ஜாதியைச் சேர்ந்தவர்கள் அல்ல. ஒரு மதத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. எல்லோருமே வாழக் கூடிய உயிர்கள். செய்து மடிந்து விட்டார்கள் என்பதனை நாம் மறந்து விடக் கூடாது. முத்துக்குமார் தன் மரண சாசனத்தில் ஒரு விடயத்தை மாத்திரம் சொல்லவில்லை. தமிழினம் எப்படிச் சீர் கெட்டிருக்கின்றது என்பதைச் சொன்னார். அதெல்லாம் நமக்குப் பாடமாக இருக்க வேண்டும். தமிழன் என்கிற முறையில் ஒன்று பட்டிருக்க வேண்டும். இனம் அழிந்து விடாமல் பாதுகாக்க வேண்டும். இன அழிப்புக்கு இடம் கொடுக்காமல் உறுதியாக இருக்க வேண்டும்.

A new documentary on Srilankan Tamils genocide

கௌதமன் இந்தப் படைப்பில் வெற்றி பெற்றிருக்கின்றார். அந்த வெற்றியை எல்லா இடத்துக்கும் எடுத்துச் செல்ல வேண்டும். தமிழின அழிப்பு என்பது மட்டுமல்லாமல், ஒரு மனித குலம் எப்படி அழிக்கப்பட்டிருக்கின்றது. என்பதனைக் கூறும் இந்தப் படம் பல்வேறு தளங்களில் எடுத்துச் செல்லப்பட வேண்டும். கௌதமனுக்கும், மணிவண்ணனுக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்," என்றார்.

 

என்னை விடுதலை செய்யாவிட்டால் தற்கொலை செய்வேன்... நீத்து அகர்வால்

ஹைதராபாத்: செம்மரக் கடத்தல் வழக்கிலிருந்து என்னை விடுதலை செய்யாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று நடிகை நீத்து அகர்வால் மிரட்டியுள்ளார்.

செம்மரக் கடத்தல் வழக்கில் தமிழர்கள் 2௦ பேர் ஆந்திர போலீசால் சுட்டுக் கொல்லப் பட்டதும் தேசிய அளவில் இந்த வழக்கு கவனம் பெற்றது. மழை விட்டும் தூவானம் விடாது என்று சொல்லும் அளவிற்கு இந்த வழக்கில் நாள்தோறும் புதிய திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.

Actress Neethu Agarwal  says  she will commit suicide if she was not released

செம்மரக் கடத்தல் வழக்கில் தெலுங்கு நடிகை நீத்து அகர்வால் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

தெலுங்கு நடிகையான நீத்து அகர்வால் தெலுங்கில் ஒரு நடிகையாக வலம் வந்தார். தற்போது செம்மரக் கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்டதால் அனைவரின் கவனமும் ஒரு சேர அவர் மீது திரும்பி உள்ளது.

தயாரிப்பாளர் மஸ்தான் அலி என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் ,மஸ்தான் கொடுமைப் படுத்தியதால் அவரை விட்டுப் பிரிந்தார். தற்போது தனது கணவரிடம் இருந்து தினசரி கொலை மிரட்டல் வருவதாக கூறுகிறார்.

செம்மரக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட இவர் தினசரி கர்னூல் காவல் நிலையம் சென்று கையெழுத்திட்டு வருகிறார். தினசரி கொலை மிரட்டல் வருவதால் நிம்மதி இழந்து தவிக்கிறாராம் நீத்து.

இந்த நிலையில், இப்போது எனது நிலையைப் பார்க்கும்போது நான் குற்றமற்றவள் என்பதை நிருபிக்க முடியாது போல் தோன்றுகிறது. இந்த வழக்கில் இருந்து நான் விடுவிக்கப்படாவிடில் தற்கொலை செய்து கொள்வேன் என்று பகிரங்க மிரட்டல் ஒன்றை தற்போது விடுத்துள்ளார்.

 

அலைபாயுதே ஸ்டைலில் நயனதாரா திருமணமா?

சென்னை: இயக்குனர் விக்னேஷ் சிவனை ரகசியத் திருமணம் செய்து கொண்டார் நடிகை நயன்தாரா என்று கோலிவுட்டில் பரபரப்பான பேச்சு ஒன்று அடிபடுகிறது.

தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகையான நயன்தாரா தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் நானும் ரவுடி தான் படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தை நடிகர் தனுஷ் தயாரித்து வருகிறார்.

Did Nayanthara wed Vignesh Shivan in secret ceremony?

படப்பிடிப்பின் போது இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகமாகி காதலில் விழுந்தனர் என்று நெருங்கிய நண்பர்கள் கூறுகின்றனர்.

விக்னேஷும் மலையாளி என்பதால் காதல் மேலும் உறுதியாகி தனது வீட்டினருக்கு காதலனை அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார் நயன்.

இந்நிலையில் ஏற்கனவே பிரபு தேவா, சிம்பு ஆகியோருடனான காதல் கல்யாணம் வரை வந்து நின்று போனது அனைவரும் அறிந்ததே. ஆனால் விக்னேசை நயன்தாரா மிக ஆழமாக காதலித்து வருகிறார், எனவே இது கண்டிப்பாக திருமணத்தில் முடியும் என்று பலரும் உறுதிபடக் கூறிய நிலையில் தற்போது இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டு விட்டதாக புதிய பேச்சு எழுந்துள்ளது.

கடந்த வாரம் பெற்றோர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. நயன்தாராவுக்கு நிறைய படங்கள் தற்போது புக்காவதால் திருமணத்தை ரகசியமாக வைத்துக் கொள்ள இருவரும் முடிவு செய்துள்ளனராம்.

எது எப்படியோ "ராஜா, ராணி"யை, சந்தோசமா வச்சுக்கிட்டா சரிதான்..!

 

ஐயப்பன் கோவிலில் வழிபட்ட மோகன்லால்!

திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலுக்குப் போன நடிகர் மோகன்லால் அங்கு பயபக்தியுடன் வழிபட்டார்.

மோகன்லால் நடிப்பில் லைலா ஓ லைலா படம் கடந்த வாரம் ஒரு வழியாக வெளியாகி விட்டது. இதே போன்று இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் அவர் நடித்து வந்த லோஹம் திரைப் படத்தில் தன்னுடைய பகுதியை முடித்துக் கொடுத்து விட்டார்.

அடுத்த படம் ஆரம்பிப்பதற்கு முன் இரண்டு படங்களையும் முடித்துக் கொடுத்த திருப்தியோடு சபரிமலை சென்று சுவாமி ஐயப்பனை பக்தியோடு தரிசித்து வந்திருக்கிறார்.

Actor Mohanlal Visits Lord Ayyappa Temple in Sabarimala

கடந்த வெள்ளிகிழமையன்று தனது நண்பர்களுடன் சென்ற மோகன் லால் சாமி தரிசனத்தை முடித்து கையோடு அதிகாலை 5 மணி அளவில் நடை திறந்ததும் நிர்மால்ய தரிசனம் பின்னர் கணபதி ஹோமம் ஆகியவற்றில் கலந்து கொண்டார்.

கோவில் தந்திரியையும் மேல் சாந்தி கிருஷ்ண தாஸ் நம்பூதிரியையும் சந்தித்து அவர்களிடமும் ஆசி பெற்று திரும்பி உள்ளார்.