இப்படி சுடுமணலில் புரள விட்டுட்டாங்களே: நடிகை புலம்பல்

சென்னை: புஸுபுஸு நடிகை பிக்கப் டிராப் நடிகர் மற்றும் கப்பல் தலைவன் பட இயக்குர் மீதும் கோபத்தில் உள்ளாராம்.

புஸு புஸு நடிகை கப்பல் தலைவன் படத்தில் பிக்கப் டிராப் நடிகருடன் நடித்துள்ளார். அந்த படத்தில் ஒரு காட்சியில் நடிகையை பிக்கப் டிராப்புடன் நெருக்கமாக நடிக்க வைத்து அதை வெளியிட்டு விளம்பரம் தேடினார் இயக்குனர். இதனால் நடிகைக்கு அவர் மீது கோபம் ஏற்பட்டது. அதனால் படத்தில் வேண்டா வெறுப்பாக நடித்துள்ளார்.

இதை கவனித்த இயக்குனர் பாடல் காட்சியை படமாக்க அம்மணியை கோவா அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர் நடிகையை சுடுமணலில் மணிக்கணக்கில் படுக்க வைத்து தனது காட்டத்தை தீர்த்துக் கொண்டார்.

இயக்குனர் தன்னை வேண்டும் என்றே சுடுமணலில் தவிக்க வைத்தார் என்று தெரிந்தும் நடிகையால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவரை வாட்டி எடுத்ததை நினைத்து இயக்குனர் மகிழ, ஹீரோவும் அதை கண்டு கொள்ளவில்லையாம்.

இந்த சம்பவத்தால் நடிகையும், அவரது அம்மாவும் இயக்குனர் மற்றும் ஹீரோ மீது கடுப்பில் உள்ளார்களாம்.