லிம்கா விளம்பரத்தில் நடிக்க கரீனாவுக்கு ரூ 2.5 கோடி சம்பளம்!


கோக் நிறுவனத்தின் லிம்கா குளிர்பான விளம்பரத்தில் நடிக்க நடிகை கரீனா கபூருக்கு ரூ 2.5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது.

பாலிவுட்டில் விளம்பரங்களில் நடிக்க நடிகைகள் பெரும் ஆர்வம் காட்டுகின்றனர்.

குறிப்பாக கத்ரீனா கைப் மற்றும் கரீனா கபூருக்கு இடையே இதில் பெரும் போட்டியே நடக்கிறது.

சமீபத்தில் கத்ரீனா விளம்பர அம்பாசிடராக உள்ள மாஸா குளிர்பானத்தை கோக் நிறுவனம், கரீனா கபூருக்கு ரூ 2.5 கோடி கொடுத்து தங்களின் இன்னொரு பிராண்டான லிம்காவுக்கு விளம்பரம் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.

அசின் நடித்தா பான்டா விளம்பரமும், கத்ரினா கைஃப் நடித்த மாஸா விளம்பரமும் ஏற்கெனவே படுபிரபலம் என்பதால், 'இந்த விளம்பரங்களை விட சுவாரஸ்யமா நான் நடிக்கும் விளம்பரப் படத்தை எடுத்துத் தரணும்' என கண்டிஷன் போட்டுதான் ஒப்பந்தத்தில் கையெழுத்தே போட்டாராம் கரீனா!

இத்துடன் அவர் 16 விளம்பரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சினிமாவிலும் அவருக்கு ஏக மவுசு. சமீபத்தில் மதுர் பண்டார்கரின் ஹீரோயின் படத்தில் நடிப்பதற்காக அவருக்கு ரூ 8 கோடி சம்பளம் தர தயாரிப்பாளர் ஒப்புக்கொண்டது நினைவிருக்கலாம்.
 

மேடம் நான் நடிக்கப்போகட்டுமா? சோனியாவிடம் பர்மிஷன் கேட்கும் சிரஞ்சீவி


Chiranjeevi

நடிகரும், அரசியல் தலைவருமான சிரஞ்சீவி மீண்டும் திரைப்படங்களில் நடிக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அனுமதி கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

டோலிவுட் சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவி பிரஜா ராஜ்ஜியம் என்ற கட்சியைத் துவங்கி அரசியலில் குதித்தார். பின்னர் அதை காங்கிரஸ் கட்சியோடு இணைத்துவிட்டார். அரசியலில் இருந்தாலும் தொடர்ந்து நடிப்பேன் என்று கடந்த 2009ம் ஆண்டு தெரிவி்ததார். அதைத் தொடர்ந்து தனது 150வது படத்தின் பெயர் அதிநாயகடு என்று அறிவித்து அந்த பெயரை பதிவு செய்தும் வைத்தார்.

ஆனால் அரசியல் பணிகளால் அவருக்கு படத்தில் நடிக்க நேரமில்லை. இதற்கிடையே அதிநாயகடு பெயரை பாலகிருஷ்ணாவுக்கு கொடுத்துவிட்டார். சிரஞ்சீவியின் 150வது படத்தை ஏ.ஆர். முருகதாஸ், எஸ்எஸ் ராஜமௌலி, விவி விநாயக், பூரி ஜெகந்நாத் ஆகியவர்களில் யாரேனும் இயக்கக்கூடும் என்றெல்லாம் பேச்சு அடிபட்டது. இறுதியாக ஷங்கர் தான் இயக்குகிறார் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.

இந்நிலையில் அவர் படங்களில் நடிக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அனுமதி கேட்டுள்ளாராம். நடிப்பதற்கு சோனியா அனுமதிப்பாரா இல்லையா என்பது தான் பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

 

நடிகரின் தந்தை படுகொலை: பங்குச் சந்தை புரோக்கர் கைது


Anuj tikku

மும்பை: பாலிவுட் நடிகர் அனுஜ் டிக்குவின் தந்தை அருண் டிக்கு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பங்குச்சந்தை புரோக்கர் கவுதம் வோரா கைது செய்யப்பட்டார்.

இந்தக் கொலையில் முக்கிய குற்றவாளியான விஜய் பாலந்தே என்பவர் போலீஸ் காவலில் இருந்து தப்பிச் செல்ல உதவி செய்ததாக கவுதம் வோராவை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் அருண்குமார் டிக்கு மும்பை ஓஷிவாராவில் உள்ள அவரது மகனின் வீட்டு பாத்ரூமில் கத்தியால் குத்தப்பட்டு பிணமாகக் கிடந்தார். இந்த வழக்கில் கடந்த 7-ம் தேதி கைது செய்யப்பட்டார் பாலந்தே.

போலீஸ் காவலில் இருந்த அவர் ஏப்ரல் 10-ம் தேதி சினிமாவில் வருவதைப் போல, போலீஸ் ஜீப்பிலிருந்து குதித்து தப்பி ஓடினார். பின்னர் நேராக அவர் அணுகியது வோராவைத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஏஆர் ரஹ்மான் ஒப்புக் கொண்ட ஆறு தமிழ்ப் படங்கள்!


AR Rahman

கடந்த ஆண்டு ஒரு தமிழ்ப் படத்துக்குக் கூட இசையமைக்க ஒப்புக் கொள்ளாததாலோ என்னமோ, இந்த ஆண்டு ஆறு புதிய படங்களுக்கு இசையமைக்க ஒப்புக் கொண்டுள்ளார் ஏ ஆர் ரஹ்மான்!

இதில் முதலில் வரவிருக்கும் படம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான்தான் (படம் முதலில் வராவிட்டாலும் பாட்டு வந்துவிடும் எனத் தெரிகிறது!). செப்டம்பர் அல்லது தீபாவளிக்கு இந்தப் படம் வருகிறது.

இன்னொரு முக்கியமான படம் மணிரத்னம் இயக்கும் கடல். ரொம்ப விசேஷமாக, படப்பிடிப்பு நடக்கும் கடல்புரத்துக்கே போய் பாடல்களை உருவாக்கியுள்ளார் இசைப் புயல்.

இவை தவிர, விஜய் நடிக்கும் யோஹன், தனுஷ் நடிக்கும் மரியான், கோச்சடையானுக்குப் பின் ரஜினி தொடங்கவிருக்கும் புதிய படம் என ஆறு படங்கள். கவுதம் மேனனின் சீரியல் ஒன்றிற்கும் இசை தர அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து ரஹ்மான் கூறுகையில், “நான் தமிழில் கடந்த ஆண்டு பணியாற்றாமல் இருந்ததற்கு எந்த காரணமும் இல்லை. சூழ்நிலை அப்படி அமைந்துவிட்டது. அதனை ஈடு செய்யும் வகையில் இந்த ஆண்டு பாடல்கள் தந்துவிடுவேன்,” என்கிறார் தனக்கே உரிய புன்னகையுடன் ரஹ்மான்!

 

ரஜினியே கேட்டும் கோச்சடையானை வேண்டாம் என்று சொன்ன ஏவிஎம்?


மகள் சௌந்தர்யா இயக்கும் கோச்சடையானில் ரஜினி தீவிரம் காட்டி வருகிறார். நடிப்பதிலும் அந்தப் படத்தின் தொழில் நுட்பம் குறித்த விஷயங்களிலும் மிக ஆர்வமாகப் பங்கெடுத்து வரும் சூப்பர் ஸ்டாருக்கு, ஒரு விஷயம் மட்டும் பிடிக்கவில்லையாம்.

அது, இந்தப் படத்தை சௌந்தர்யாவும் சேர்ந்து தயாரிப்பது!

காரணம் சுல்தானில் சௌந்தர்யா அண்ட் கோ செய்த குழப்படி & குளறுபடியால், தேவையின்றி நீதிமன்ற வழக்கு, பத்திரிகைகளில் தாறுமாறான செய்திகள் என ரஜினிக்கு மனவருத்தம் அடையும் நிலையை ஏற்படுத்தின. கோவா தயாரிப்பிலும் சௌந்தர்யா கையைச் சுட்டுக் கொண்டதுதான் மிச்சம்!

அதனால் ‘கோச்சடையான்’ படத்தினை எப்படியாவது கைமாற்றி விட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளாராம்.

இதில் ஒரு முயற்சியாக தனக்கு நெருக்கமான ஏவிஎம் சரவணனிடம் தனிப்பட்ட முறையில் கோச்சடையான் பற்றிப் பேசியுள்ளார் ரஜினி.

கேரளா ஷூட்டிங்குக்கு கிளம்பும் முன் சரவணனைச் சந்தித்த ரஜினி, கோச்சடையான் படத்தயாரிப்பை அப்படியே கை மாற்றிவிட விரும்புவதாகக் கூறினாராம்.

ஆனால் சரவணன் சினிமா தயாரிக்கும் அல்லது வேறு படத்தை வாங்கி விநியோகம் பண்ணும் நிலையில் இல்லை. “சினிமா நிலவரம் சரியில்லை ரஜினி. அதனால் சினிமா தயாரிக்கும் மனநிலையில நாங்கள் இல்லை. நீங்களே வலியவந்து கேட்டும் என்னால் செய்ய முடியவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்… ஸாரி” என்றாராம் சரவணன்.

இதே பயத்தில்தான் அயன் படத்தை அடிமாட்டு விலைக்கு விற்று, பின் வருத்தப்பட்டார்கள் ஏவிஎம்காரர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எல்லாம் சினிமா என்ற குதிரை யாரை குப்புறத்தள்ளுமோ என்ற பயம்தான்!

 

ராணாவுக்குப் போட்டியாக 'பவர் ஸ்டார்' சீனிவாசனின் 'ஸ்ரீனா'?


Srina Movie

காமெடியாகவே இருந்தாலும் அதை சீரியஸ் பார்வையுடன் பார்த்து கலை தாகத்தை தணித்துக் கொண்டிருக்கும் பவர் ஸ்டார் டாக்டர் சீனிவாசனின் பேஸ்புக் பக்கம் போய்ப் பார்த்தால் ஸ்ரீனா என்ற ஒரு போஸ்டர் காணப்பட்டது. அதைப் பார்த்தபோது ஆச்சரியம் வரவில்லை, மாறாக திகிலடித்தது. காரணம், சூப்பர் ஸ்டார் ரஜினியின் ராணா படத்தை காப்பியடித்து மார்பிங் செய்யப்பட் படம் அது.

லத்திகா என்ற ‘இமாலயப்’ படத்தை எடுத்து, நடித்து, வெளியிட்டு தமிழ்த் திரையுலக ரசிகர்களை இன்ப வெள்ளத்தில் மூழ்க வைத்தவரான பவர் ஸ்டார், ஆனந்தத் தொல்லை, தேசிய நெடுஞ்சாலை, இந்திர சேனா, கருங்காலி, மன்னவன், மூலக்கடை முருகன், நானே வருவேன், பூங்கொடி ஜன்னலில், சுரங்கப் பாதை, திருமா என்கிற திருமாணிக்கம், உனக்காக ஒரு கவிதை என்று ஏகப்பட்ட படங்களில் நடிப்புத் திறமையை காட்டிக் கொண்டிருக்கிறார். அவரது படப் பட்டியலை முழுசா சொன்னால், லிஸ்ஸ்ஸ்ட் பெருஸ்ஸ்ஸ்ஸ்ஸா போகும்.

சீனிவாசன் பெயரில் ஒரு பேஸ்புக் உள்ளது. அதில் ஏகப்பட்ட படம். அதில் ஒன்றாக இந்த ஸ்ரீனா இடம் பெற்றுள்ளது. அதில் இன்னொரு படம் பவர் பாட்டர் அதாவது ஹாரி பாட்டரை காப்பியடித்து ஒரு ஸ்டில். அதில் விளக்குமாற்றில் உட்கார்ந்து கொண்டு சீனிவாசன் பறப்பது போல உள்ளது.

ஒருவேளை நிஜமாகவே இதுபோன்ற படங்களில் அவர் நடிக்கப் போகிறாரா என்பதும் தெரியவில்லை. ஏனென்றால், இவர் செய்யக் கூடிய ஆள். அந்தளவுக்கு கெப்பாசிட்டி உள்ள ஆள்தான். எனவே சற்று திகிலாகத்தான் இருக்கிறது!

 

கிசு கிசு - சம்பளம் உயர்த்தும் நடிகை.. சோகத்துல ஹீரோக்கள்..

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

ஹன்சியான ஹீரோயின், திடீர் திடீர்னு சம்பளத்தை உயர்த்தி கேட்கிறாராம்... கேட்கிறாராம்... 30 லகரத்துல சம்பளம் வாங்கிறவரு, 50, 60ன்னு ஒவ்வொரு படத்துக்கு ஒவ்வொரு மாதிரி கேட்கிறாராம். என் மார்க்கெட் வேல்யூ கூடிட்டே போகுதுன்னும் காரணம் சொல்றாராம்... சொல்றாராம்... சமீபத்துல அம்மணியை ஒப்பந்தம் செய்யப்போன தயாரிப்பு, நடிகையோட டிமாண்டை கேட்டுட்டு எஸ் ஆயிட்டாராம்... ஆயிட்டாராம்...

உயரமான நடிகரின் மகனும், முகி இயக்கத்தின் மகனும் சரியான படங்கள் அமையாம சோகத்துல இருக்காங்களாம்... இருக்காங்களாம்... ஸ்டாருங்க கூட்டமா கலந்துக்கிற பங்ஷனுக்குகூட வராம ஒதுங்கறாங்களாம். Ôஇப்படியெல்லாம் ஒதுங்குனா ஓரம் கட்டிடுவாங்கÕன்னு பிரெண்ட்ஸுங்க சொன்னாலும் காதுல வாங்குறதில்லையாம்... வாங்குறதில்லையாம்... Ôபுதுசா வர்ற ஹீரோவெல்லாம் முட்டி மோதி ஜெயிக்க பாக்க¤றாங்க. உங்களுக்கு பேக்ரவுண்ட் இருந்தும் இப்படியா பயப்படுறதுÕன்னு சீனியர் ஆக்டருங்க அட்வைஸ் பண்றாங்களாம்... பண்றாங்களாம்...

தயாரிப்பு சங்கத்துல டபுள் அணிக்குள்ள போட்டி நடக்குதாம்... நடக்குதாம்... எலெக்ஷன்ல செலக்ட் ஆன அணியைவிட புதுசா உருவான அணியோட கை ஓங்கி இருக்காம்... ஓங்கி இருக்காம்... இந்த அணியைத்தான் பேச்சுவார்த்தை நடத்த கவர்மென்ட் பிக்ஸ் பண்ணி இருக்காம். இதனால தொழிலாளர் சங்க நிர்வாகிங்க குழப்பத்துல இருக்காங்களாம்... இருக்காங்களாம்... தயாரிப்புங்க சண்டையில தங்களோட பிரச்னையை ஓரங்கட்டாம இருந்தா சரின்னு சொல்றாங்களாம்... சொல்றாங்களாம்...


 

3-வது நாயகியாக லட்சுமிராய்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
யுடிவி மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம், 'தாண்டவம்'. விக்ரம், அனுஷ்கா, எமி ஜாக்சன், ஜெகபதி பாபு உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.எல்.விஜய் இயக்குகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் டெல்லியில் உள்ள ஜம்மா மஸ்ஜித் பகுதியில் தொடங்கியது. பழங்கால மசூதியான இது, படத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு விக்ரம், ஜெகபதி பாபு பங்குபெறும் சண்டைக்காட்சி படமாக்கப்படுகிறது. தொடர்ந்து 20 நாட்கள் டெல்லியில் படப்பிடிப்பு நடைபெறும். இதையடுத்து படக்குழு அமெரிக்கா செல்ல இருப்பதாக தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் 'தாண்டவம்' படத்தில் அனுஷ்கா, எமியுடன் 3-வது நாயகியாக லட்சுமிராய் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.


 

மீனவ குப்பத்தை தேடி அலைந்த இயக்குனர்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
மீனவர்கள் பற்றிய கதையை படமாக்க, அழகான மீனவ குப்பத்தை தேடி அலைந்தார் இயக்குனர். பாசில், சித்திக், வினயனிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர் ஐ.கணேஷ். 'செம்பட்டை' என்ற படத்தை இயக்குகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:மீனவ குடும்பத்தில் பிறந்த அண்ணன், தம்பி பற்றிய உண்மை கதையை மையமாக வைத்து இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. ஏதோவொரு மீனவ கிராமத்தில் கதையை படமாக்க விரும்பவில்லை. கதையுடன் காட்சிகளுக்கும் முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்று எண்ணினேன். இதற்காக அழகான மீனவ கிராமங்களை தேடினேன். ராமேஸ்வரம், நாகப்பட்டினம், திருச்செந்தூர் ஆகிய இடங்களை பார்த்தும் பிடிக்கவில்லை. இறுதியாக நாகர்கோவில் கடற்கரை கிராமத்தை தேர்வு செய்தேன். குளச்சல், குறும்பனை, தொண்டி, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் ஷூட்டிங் நடந்தது. கூத்துப்பட்டறையில் பயின்ற எம்.பாலா ஹீரோ. கேரளாவை சேர்ந்த கவுரி நம்பியார் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இவர், மலையாள படங்களில்கூட நடித்ததில்லை. இவருடன் தனுஸ்ரீ என்ற மற்றொரு  ஹீரோயினும் நடிக்கிறார். ஒளிப்பதிவு சலீம். இசை ஸ்ரீராகவ்.


 

ஹீரோயின்கள் நட்பாக இருக்கவே முடியாது

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இரண்டு ஹீரோயின்கள் என்றைக்கும் நட்பாக இருக்கவே முடியாது என்கிறார் சமீரா ரெட்டி. இது பற்றி அவர் கூறியதாவது: இந்தியில் 'தேஸ்' படத்தில் நடிக்கிறேன். இந்த படத்தில் கங்கனா ரனவத் நடிக்கிறார். எங்களுக்குள் மோதல் என்று கிசுகிசுக்கள் வருகிறது. அதில் உண்மை இல்லை. எனக்குள் நிறைய விஷயங்கள் இருந்தாலும் அதை நட்பு முறையில் யாரிடமும் பகிர்ந்துகொள்ள மாட்டேன். ஏனென்றால் 2 ஹீரோயின்கள் ஒருபோதும் நட்பாக இருக்க முடியாது என்பது என் கணிப்பு. 'தேஸ்' படத்தை பிரியதர்ஷன் இயக்குகிறார். ஆக்ஷன் காட்சிகளில் முதன்முறையாக நடிக்கிறேன். இப்படி நடிப்பது எளிதல்ல. நிறைய சவால்களை சந்திக்கவேண்டும். கடைசி நாள் ஷூட்டிங்கில் கீழே விழுந்து காயம் அடைந்தேன். இதுபற்றி பெற்றோரிடம் சொல்லவில்லை. ஆனால் எப்படியோ செய்தி வெளியாகிவிட்டது. அதை படித்த பெற்றோர், 'இதுபோன்ற காட்சிகளில் நடிக்க வேண்டாம்Õ என்றனர். ஆக்ஷன் வேடத்தில் நடிக்க அழைத்தபோது முதலில் ஓ.கே. சொல்லிவிட்டேன். காட்சி படமாக்கும் நேரம் வந்தபோது பயம் வந்துவிட்டது. 'என்னால் செய்ய முடியாதுÕ என்றேன். இயக்குனர்தான் தைரியம் சொன்னார். எனக்கு தகுந்த பாதுகாப்பை பட குழுவினர் தந்தனர். தென்னிந்திய படங்களில் உடல் எடை கூடி இருந்தால்தான் ரசிக¢கிறார்கள். ஒல்லியானபோது திட்டினார்கள். ஆனால் பாலிவுட்டில் ஒல்லியாக இருந்தால்தான் ரசிக்கிறார்கள். இரண்டு ரசிகர்களையும் திருப்தி செய்வது கடினம். இருவிதமாக தோற்றத்துக்கு மாற வேண்டி இருந்தாலும் அது பிடித்திருக்கிறது. இவ்வாறு சமீரா ரெட்டி கூறினார்.


 

ஹீரோவை துரத்தி துரத்தி காதலிக்கும் நடிகை

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
'நான் உங்கள் மனைவி' எனக் கூறிக்கொண்டு இந்தி நடிகரை துரத்தி துரத்தி காதலிக்கிறார் நடிகை வாஸ்தவிகா. இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியில் 'ஜப் வி மெட்', 'கமீனே' உள்ள¤ட்ட படங்களில் ஹீரோவாக நடித்தவர் ஷாஹித் கபூர். கரீனா கபூரின் முன்னாள் காதலர். மறைந்த பிரபல இந்தி நடிகர் ராஜ்குமார். இவரது மகள் வாஸ்தவிகா. 'எய்ட்Õ என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இவர் சமீபத்தில் ஷாஹித் கபூர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் குடியேறினார். அன்று முதல் ஷாஹித்துக்கு பிரச்னை ஆரம்பமானது. வாஸ்தவிகா தன்னை ஷாஹித்தின் மனைவி என்று கூறிக்கொண்டார். ஷாஹித் ஷூட்டிங் புறப்பட்டால் அவரை பின்தொடர்வது, வாசல் கேட்டிலேயே ஷாஹித் வரும் வரை காத்திருந்து வரவேற்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டார். ஆரம்பத்தில் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத ஷாஹித்துக்கு பின்னர் இதுவே பெரிய இம்சையாக மாறியது.

இதுபற்றி வாஸ்தவிகா குடும்பத்தினர் கூறும்போது, 'சில வருடத்துக்கு முன் ஷாஹித்தை நடன வகுப்பில்தான் சந்தித்தார் வாஸ்தவிகா. அன்று முதல் அவரை காதலிக்க தொடங்கிவிட்டார். இதற்கு மன்னிப்பு கேட்டு ஷாஹித்துக்கு வாஸ்தவிகாவின் அம்மா கடிதம் எழுதினார். Ôஎன் சொந்த வாழ்க்கையில் யாரும் தலையிடாதீர்கள். இது என் கணவருக்கு பிடிக்காது' என வாஸ்தவிகா குடும்பத்தினரை திட்ட ஆரம்பித்தார். சமீபத்தில் செக்யூரிட்டிகளை ஏமாற்றிவிட்டு 13வது மாடியிலிருக்கும் ஷாஹித் வீட்டுக்குள் நுழைந்துவிட்டார். பிரச்னை பெரிதானது. ஆனால், வாஸ்தவிகா மனநலம் பாதித்தவர் அல்ல' என்றனர். இது குறித்து ஷாஹித் கபூரின் மேனேஜர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நன்குமார் மெடர் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்.


 

ஜூன் மாதம் முதல் கரிகாலன் படப்பிடிப்பு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ரொம்ப யோசித்துதான் புதியவர்களின் படத்தில் நடிக்கிறார் விக்ரம். அதிலும் சமீபகால தோல்விகள் அவரை ரொம்பவே யோசிக்க வைத்துள்ளன. இருந்தும் அறிமுக இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் என்றால், கதை தான் காரணம். மெகா பட்ஜெட் படம். கிளாடியேட்டர் மாதி‌ரியான ச‌ரித்திரப் படம். இதில் சோழர்கால கதையை சொல்லவிருக்கிறாராம் இயக்குனர் கண்ணன். விக்ரம் நடிக்கும் 'கரிகாலன்' படத்தை 25 சதவீதம் முடித்திருக்கும் இயக்குனர் கண்ணன், அடுத்தகட்ட படப்பிடிப்பை ஜூன் மாதம் தொடங்க இருப்பதாக சொல்கிறாராம்.



 

டர்ட்டி பிக்சர் படத்தை டிவியில் ஒளிபரப்ப திடீர் தடை!


வித்யாபாலனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதினைப் பெற்றுத் தந்த தி டர்ட்டி பிக்சர் படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப மத்திய அரசு திடீர் தடை விதித்துள்ளது.

இந்திப்படம் பெரும் வெற்றி பெற்ற டர்டி பிக்சர், மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது.

திரையுலகில் அவர் பட்ட கஷ்டங்கள், ஏமாற்றங்கள் இதில் காட்சிபடுத்தப்பட்டு இருந்தது.

ஏக்தா கபூர் தயாரித்த இந்தப் படம் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. வித்யாபாலன் இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. அப்படத்தை வேறு மொழிகளில் ரிலீஸ் செய்யவும் ஏற்பாடுகள் நடக்கின்றன.

இதற்கிடையில் டர்டி பிக்சர் படத்தை ஒளிபரப்ப பிரபல சேனல் ஒன்று தயாரானது. இதற்கான விளம்பரங்களும் செய்யப்பட்டன. பகலிலும் இரவு 8 மணிக்கும் இப்படம் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மத்திய அரசு திடீரென டி.வி.யில் டர்டி பிக்சர் படத்தை ஒளிபரப்ப தடை விதித்துள்ளது. படத்துக்கு தணிக்கை குழு யுஏ சான்றிதழ் அளித்துள்ளது. 59 காட்சிகளில் சென்சார் செய்யப்பட்ட படம் இது. எனவே பகலிலும், இரவு 8 மணிக்கும் படத்தை ஒளிபரப்பகூடாது என்று மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக தொலைக்காட்சி நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது.
 

சுனேனாவும் பாசக்கார ஆறு அண்ணன்களும்!


மாயாண்டி குடும்பத்தார் ஜெயித்த பிறகு, தொடர்ந்து குடும்பக் கதைகளையே படமாக்குவது என முடிவு செய்திருக்கிறாராம் ராசு மதுரவன்.

இதோ அவரது அடுத்த படம் 'மைக் செட் பாண்டி'.

ஆறு அண்ணன்கள், அவர்களின் ஒரே தங்கை... அவர்களுக்குள் நடக்கும் பாசப் போராட்டம்தான் கதை என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை!

இந்தப் படத்தில் தங்கையாக சுனேனா நடிக்கிறார். வம்சம் படத்துக்குப் பிறகு காணாமலே போய்விட்ட அவர், மைக் செட் பாண்டியை பெரிதாக நம்பியுள்ளார்.

அவருக்கு அண்ணன்களாக தேவா, பாண்டியன், வீரசமர், நாகேந்திரன், மதுரை மார்க்கெட் முத்து, பசும்பொன் சுரேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். தங்கையை சந்தோஷமாக வைத்துக் கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்யத் தயங்காத மதுரைக்கார அண்ணன்கள் இவர்கள்!

திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டாரங்களிலேயே பெரும்பகுதி காட்சிகளை எடுத்து வருகிறார்கள்.
 

வடிவேலு - சிம்புதேவன் சந்திப்பு: இம்சை அரசன் 23-ம் புலிகேசியின் இரண்டாம் பாகம் தயாராகிறது?


vadivelu in Imsai Arasan 23am pulikesi
தமிழ் சினிமாவின் மறக்கமுடியாத காமெடிப் படங்களில் ஒன்றான இம்சை அரசன் 23-ம் புலிகேசியின் அடுத்த பாகத்துக்கான வேலைகள் ஆரம்பமாகியுள்ளன.

முதல் பாகத்தை இயக்கிய சிம்புதேவன்தான் இந்தப் படத்தையும் இயக்குகிறார். இப்போது திரைக்கதை உருவாக்கும் பணியில் அவர் மும்முரமாக உள்ளதாக கூறப்படுகிறது.

அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு எந்தப் படத்திலும் நடிக்காமலிருக்கும் வடிவேலு, தனது புதிய இன்னிங்ஸை இந்தப் படம் மூலம், அதுவும் ஹீரோவாகத் தொடங்க திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படம் குறித்து சிம்புதேவனும் வடிவேலுவும் சந்தித்துப் பேசியதாகவும், இம்சை அரசன் 23-ம் புலிகேசியின் தொடர்ச்சியாக ஒரு படத்தை உருவாக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய தனது பேட்டியிலும் கூட, இத்தனை மாத இடைவெளிக்குப் பிறகு தான் நடிக்கும் நடிக்கும் புதிய படம் அதிரடியாக இருக்கும். ஹீரோவாக நடிக்க பேசிக் கொண்டிருக்கிறேன் என்று கூறியிருந்தார்.