'பேபி'ன்னா பேய், பிசாசாம்: சொல்கிறார் நகைச்சுவை நடிகர் சதிஷ்

சென்னை: சிகரம் தொடு படத்தில் நகைச்சுவை நடிகர் சதிஷ் பெண்களை பேய், பிசாசு என்று நக்கல் அடித்துள்ளார்.

யுடிவி மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கௌரவ் நாராயணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சிகரம் தொடு. விக்ரம் பிரபு, மோனால் கஜ்ஜார், சத்யராஜ், சதிஷ், கோவை மகேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

'பேபி'ன்னா பேய், பிசாசாம்: சொல்கிறார் நகைச்சுவை நடிகர் சதிஷ்

படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. படத்தில் சதிஷ் காமெடியாக ஒரு வசனத்தை பேசுகிறாராம். அதாவது ஆண்கள் ஏன் பெண்களை பேபி என்று அழைக்கிறார்கள் தெரியுமா என்று கேட்கும் சதிஷ் அதற்கான விளக்கத்தையும் அளித்துள்ளார்.

'பேபி'ன்னா பேய், பிசாசாம்: சொல்கிறார் நகைச்சுவை நடிகர் சதிஷ்

'பே' என்றால் பேய், 'பி' என்றால் பிசாசு. ஆக பேபி என்றால் பேய் பிசாசு என்று அவர் காமெடியாக ஒரு விளக்கத்தை அளித்துள்ளார். ஆனால் இது பெண்களை கிண்டலடிக்கும் வகையில் உள்ளது என்று பலர் நினைக்கிறார்கள்.

இது தவிர படத்தில் ஆங்காங்கே பல நக்கல் வசனங்கள் உள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

 

ஓவராப் பேசிய நடிகர்... நடிக்கத் தடை விதிக்க தயாரிப்பாளர்கள் ஆலோசனை

சென்னை: மதுரை பானம் பட ரிலீஸ் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைதளத்தில் கருத்துத் தெரிவித்த புத்த நடிகருக்கு தமிழ்ப் படத்தில் நடிக்கத் தடை விதிக்கலாமா என தயாரிப்பாளர்கள் தரப்பு ஆலோசித்து வருகிறதாம்.

தமிழில் ‘தீயாய் வேலை' செய்த படத்திற்குப் பிறகு, மதுரை பானப் படத்தினைத் தான் அதிகம் நம்பியிருந்தார் புத்த நடிகர். ஆனால் சிலப்பல காரணங்களால் அப்படம் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆக முடியாமல் தள்ளிப் போனது.

இதனால், மிகுந்த மனவேதனை அடைந்த நடிகர் தனது ஆதங்கத்தை எல்லாம் சமூக வலைதளப்பக்கத்தில் கொட்டித் தீர்த்தார். ஆனால், இது தயாரிப்பாளர்கள் தரப்பை மிகவும் காயப்படுத்தி விட்டதாம்.

அதனால், தொடர்ந்து தமிழ்ப்படங்களில் நடிக்க நடிகருக்குத் தடை விதிப்பது குறித்து ஆலோசிக்கப் பட்டு வருகிறதாம். இதற்கிடையே படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு அவர்களுக்கு கொஞ்சம் ஆறுதலாக அமைந்துள்ளது.

அடுத்ததாக தனது பிரியமான நடிகையுடன் மலையாளத்தில் சக்கைப் போடு போட்ட படமொன்றின் தமிழ் ரீமேக்கில் நடிகர் நடிக்கவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

"கும் டூ கும் கும்" ஆகும் நடிகர் ரித்திக் ரோஷன்

மும்பை: மொஹஞ்தரோ என்ற படத்திற்காக நடிகர் ரித்திக் ரோஷன் தனது கும்மென்ற ஜிம் பாடியே மேலும் டெவலப் செய்ய உள்ளாராம்.

பொதுவாகவே பாலிவுட் நடிகர்கள் ஜிம் பாடி வைத்திருப்பார்கள். அதிலும் ரித்திக் ரோஷன் பெண்களை கவரும் வகையில் கும்மென்று உடலை வைத்திருப்பார். அவர் சட்டையில்லாமல் வரும் காட்சிகளில் அவரை பார்த்து அசரும் ரசிகைகள் ஏராளம். ஆ, ரித்திக் என்னமா உடம்பு வச்சிருக்காரு என்று உருகுவார்கள் ரசிகைகள். இந்நிலையில் அவர் தனது உடலை மேலும் டெவலப் செய்ய உள்ளாராம்.

கும் டூ கும் கும் ஆகும் நடிகர் ரித்திக் ரோஷன்

ரித்திக் மொஹஞ்சதரோ என்ற படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்திற்காக தான் அவரது உடம்பை மேலும் கும்மென்று ஆக்க உள்ளார். இதற்காக லண்டனில் உள்ள ஜோஷுவா கைல் பேக்கரை மும்பைக்கு வரவழைக்குமாறு ரித்திக் படத்தின் தயாரிப்பாளரான சுனிதா கோவாரிகரை கேட்டுள்ளார். அவரும் சரி என்று கூறிவிட்டார்.

ஒவ்வொரு படத்திலும் தனது கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தனது உடல் அமைப்பை மாற்றுவார் ரித்திக் ரோஷன் என்பது குறிப்பிடத்தக்கது. மனைவி சூசன் பிரிந்து சென்றதில் இருந்து கவலையில் இருக்கிறார் ரித்திக். அவர் தனது கவலையை வேலை மூலமாக மறக்க முயற்சி செய்கிறார்.

 

பூஜை படத்தில் நடிக்கும் வாய்ப்பைக் கேட்டுப் பெற்ற பீகார் அமைச்சர்!

விஷால் - ஸ்ருதி ஹாஸன் நடிக்கும் பூஜை படத்தில் நடிக்கும் வாய்ப்பை, இயக்குநர் ஹரியுடன் கேட்டுப் பெற்றுள்ளார் பீகார் அமைச்சர் வினய் பிகாரி.

விஷால், சுருதிஹாசன் ஜோடியாக நடிக்கும் படம் பூஜை. ஹரி இயக்குகிறார். விஷால் தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு சமீபத்தில் பீகாரில் நடக்கிறது.

பூஜை படத்தில் நடிக்கும் வாய்ப்பைக் கேட்டுப் பெற்ற பீகார் அமைச்சர்!

விஷாலின் சண்டை காட்சிகளையும் அங்கு படமாக்குகின்றனர். இதற்குப் பொருத்தமான இடங்களைத் தேர்வு செய்து அனுமதி பெறுவதற்காக, அந்த மாநில அமைச்சர் வினய் பிகாரியைச் சந்தித்தனர்.

அப்போதுதான் பூஜை படத்தில் நடிக்க தனக்கும் ஒரு வாய்ப்பு தருமாறு இயக்குநர் ஹரியிடம் வினய் பிகாரி கேட்டுள்ளார்.

தான் ஏற்கனவே நிறைய போஜ்புரி படங்களில் நடித்துள்ளதாகவும் ஒரு படத்தை இயக்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதையடுத்து பூஜை படத்தில் இடம் பெறும் ஒரு மாவட்ட கலெக்டர் வேடத்தை அவருக்குக் கொடுத்துள்ளார் ஹரி.

'அசைவ உணவு சாப்பிடுவதால்தான் கற்பழிப்பு குற்றங்கள் பெருகுகின்றன,'[ என சர்ச்சை கருத்தை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினாரே... அந்த வினய் பிகாரிதான் இவர்! நிதீஷ்குமாரின் அமைச்சரவையில் மாநில இளைஞர் நலத்துறை அமைச்சராக உள்ளார்.

 

சினிமாவுக்காக பேங்க் வேலைய விடப்போறேன்: லொள்ளு சபா’ மனோகர்

சென்னை: லொள்ளுசபா நிகழ்ச்சியில் நீட்டி முழக்கி பேசி தனி பேச்சுவழக்கை ஏற்படுத்தியவர் மனோகர். இன்றைய இளசுகளில் பெரும்பாலானவர்கள் மனோகர் போல பேசி அடுத்தவர்களை கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

நிறைய சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடித்துக் கொண்டிருந்த மனோகர், பிறகு மாஞ்சா வேலு, வேலாயுதம், என்றென்றும் புன்னகை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். காமெடி நடிப்பில் கலந்து கட்டி அடிக்கும் மனோகர் மத்திய அரசு வங்கி ஒன்றில் அதிகாரியாக பணிபுரிகிறார் என்பது அநேகம் பேருக்கு தெரியாது. நிறைய படங்களில் நடிப்பதற்காக வங்கிப் பணியை விடப்போவதாக கூறுகிறார் சந்தானம்.

சினிமாவுக்காக பேங்க் வேலைய விடப்போறேன்: லொள்ளு சபா’ மனோகர்

லீவ் கிடைக்கலையே...

தற்போது சின்னத்திரை, பெரியதிரையில் ஏன் பிரேக் விட்டிருக்கிறீர்கள் என்று கேட்டால், நான் வெறும் காமெடியன் இல்லங்க. நான் ஒரு மத்திய அரசு ஊழியன். கார்ப்ப ரேஷன் பேங்குல வேலை பார்க்கிறேன். அதுனால அடிக்கடி லீவ், பெர்மிஷன்னு போட முடியல.

ஜில்லாவில் நடிச்சேன்

உதயநிதி, சந்தானம் காம்பினேஷன்ல ‘நண்பேன்டா' பண்ணிகிட்டிருக்கேன். ‘ஜில்லா' படத்துல கூட நடிச்சிருந்தேன். படம் ரொம்ப நீளமா இருக்குன்னு என்னோட போர்ஷன கட் பண்ணிட்டாங்க.

20 படங்கள் ரிலீஸ் ஆகல

இன்னும் நான் நடிச்ச 20 படம் ரிலீசாகாம இருக்கு. வர்ற அக்டோபர் மாசத்தோடு பேங்க் வேலைய ராஜினாமா பண்ணிட்டு முழுநேரமா சினிமாவுல நடிக்கப்போறேன். இனிமே என்னைய நெறைய படங்கள்ல பாக்கலாம்.

தயங்கும் தயாரிப்பாளர்கள்

நான் பேங்குல வேலை பாக்குறதால ஒவ்வொரு தயாரிப்பாளரும் என்ன புக் பண்ண தயங்குறாங்கன்னு கேள்விப்பட்டேன். அதான் இந்த முடிவு.

நண்பன் சந்தானம்

சந்தானம் என்னோட பெஸ்ட் பிரண்ட். இன்னைக்கு தேதி கொடுக்க முடியாத அளவுக்கு பெரிய நடிகனா வளந்துருக்கான். ஆனால் லொள்ளு சபாவுல இருந்தப்ப இருந்த அதே சந்தானமாதான் இன்னைக்கும் எங்கக்கூட பழகுறான் என்று மகிழ்ச்சியோடு கூறுகிறார் லொள்ளுமனோகர்.

 

பிரபல ஈரான் திரைப்பட இயக்குநருடன் கைகோர்த்த ஏ ஆர் ரஹ்மான்!

பிரபல ஈரான் திரைப்பட இயக்குநர் மஜித் மஜிதியுடன் இணைந்துள்ளார் ஆஸ்கர் விருது பெற்ற இசைப் புயல் ஏ ஆர் ரஹ்மான்.

உலக சினிமா காதலர்கள் பெரிதும் கொண்டாடும் படம் சில்ரன் ஆப் ஹெவன். ஒரு ஜோடி ஷூக்கள், இரு குழந்தைகள்... இவற்றை மட்டும் மையமாக வைத்தே ஒரு பாசக் காவியம் படைத்தவர் மஜிதி.

பிரபல ஈரான் திரைப்பட இயக்குநருடன் கைகோர்த்த ஏ ஆர் ரஹ்மான்!

அடுத்தடுத்து அவர் இயக்கிய ‘த கலர் ஆப் பாரடைஸ்', த சாங் ஆப் ஸ்பாரோ' படங்கள் பாராட்டுகளையும் விருதுகளையும் குவித்தன.

கடந்த ஆண்டு மஜித் மஜிதே சென்னைக்கும் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட ஒரு சிறந்த இயக்குநருடன் கைகோர்த்துள்ளார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.

கடந்த சில மாதங்களாக மஜித் மஜிதி இயக்கி வரும் ஈரானியப் படத்தின் இசையமைப்புப் பணிகளுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் அந்த நாட்டிலேயே தங்கிவிட்டாராம்.

மஜித் மஜிதி படத்துக்கு முழு அர்ப்பணிப்புடன் இசையமைத்த ரஹ்மான், தனக்கு மிகுந்த மனத் திருப்தி தந்த படங்களுள் ஒன்று என அந்தப் படத்தை புகழ்ந்துள்ளார்.

இப்படம் ரிலீஸ் ஆகும் நாளையும் மிக ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் ரஹ்மான்.