வடிவேலுக்கு வாய்ப்பு கொடுத்த தனுஷ்?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இம்சை அரசன் 23ம் ‌புலிகேசி, அறைஎண் 305ல் கடவுள், இரும்புக்கோட்டை முரட்டுசிங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கிய சிம்புதேவன் தனுஷை வைத்து மாரீசன் என்று படத்தை இயக்குகிறார். கி.மு., 12ம் ‌நூற்றாண்டை தழுவிய கதை என்பதால் இப்படத்திற்கு ரூ.30 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது. கதையைக் கேட்ட யுடிவியின் உரிமையாளர்களான வால்ட் டிஸ்னி நிறுவனத்தினர், இக்கதை ஆங்கிலப் படங்களின் பாணியில் பிரமாதமாக உள்ளது எனவும் தாராளமாக எடுங்கள் எனவும் பாராட்டினார்களாம். தனுஷ் அதிக பட்ஜெட்டில் நடிக்கும் முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது முதல்முறையாக தனுஷ் படத்தில் வடிவேலு நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. வடிவேலுவுடன் நடிப்பதில் ஏதும் தயக்கம் உண்டா என தனுஷிடம் இயக்குநர் கேட்டதற்கு, தாராளமாக நடிக்க வையுங்கள். எனக்கு அதில் மகிழ்ச்சியே என்றாராம் தனுஷ். விஷயம் கேள்விப்பட்டு தனுஷுக்கு வடிவேலு நன்றி கூறியதாகச் சொல்கிறார்கள்.


 

2012ல் அசத்தப் போவது யார்?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
2011 ஆம் ஆண்டு எல்லா நடிகர்களின் வெற்றியும் அடைந்தது, தோல்வியும் அடைந்தது என்று தான் சொல்ல வேண்டும். சூப்பர் ஸ்டாரின் 'எந்திரன்' மற்றும் தல அஜீத்தின் 'மங்காத்தா' படங்கள் சென்ற வருடத்தில் தமிழ் சினிமாவில் வசூல் சாதனை படைத்தது. இதனையடுத்து ஒவ்வொரு ஹீரோக்களும் 2012ஆம் ஆண்டு, சூப்பர் படங்களை கையில் வைத்துள்ளனர். அதில் தல அஜீத்தின் 'பில்லா 2' மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 'பில்லா' படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இதனையடுத்து அந்த படத்தின் இரண்டாம் பாகம் ஷூட்டிங் படுவேகமாக நடந்து வருகிறது. சென்ற வருடம் ஒரே படம் மட்டும் கொடுத்த தல இந்த வருடம் 2 படங்கள் கையில் வைத்துள்ளார். பில்லா 2 முடிந்த பிறகு 'சிறுத்தை' இயக்குனர் சிவா இயக்கத்தில் ஒரு படம் நடிக்கயிருக்கிறார். இந்த வருடம் தல அஜீத்துக்கு சூப்பரான வருடம் தான்,

அதே போல் நம்ம இளைய தளபதி விஜய்யிக்கும் அடுத்தடுத்த சூப்பர் படங்கள் கையில் உள்ளன. இளைய தளபதி விஜய், ஷங்கர் இயக்கத்தில் நடித்த 'நண்பன்' படம் பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கிறது. இந்த படம் 2012ஆம் ஆண்டில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தி '3 இடியேட்ஸ்' படத்தின் ரீமேக்கான இந்த படம், ஏற்கனவே பாலிவுட் வசூல் வேட்டை புரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஷங்கர் படம் என்றால் ஒரிரு நாளில் வசூலை அள்ளி விடும், தற்போது பெரிய வசூலை தந்த படமே ஷங்கர் ரீமேக் செய்வதால் வசூல் எப்படி இருக்கும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஷங்கரை தொடர்ந்து, ஏ.ஆர்.முருகதாஸ், கௌதம் வாசுதேவ் மேனன் என பெரிய இயக்குனர்களின் படத்தில் நடிக்கிறார் விஜய். தல அஜீத் போல், இளைய தளபதி விஜய்யிக்கும் இந்த வருடம் சூப்பர் தான்.

சென்ற வருடம் சூர்யா நடித்த 'ஏழாம் அறிவு' தமிழ் சினிமாவிற்கு பெருமையை சேர்த்ததோடு, வசூலிலும் சாதனை படைத்தது. இதனையடுத்து இந்த வருடம், சூர்யாவுக்கு சிறப்பாக அமைந்துள்ளது. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் 'மாற்றான்' படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. நிறைய கெட்டப் கொண்ட இந்த படத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். படத்தின் சுவாரசிய தகவல்கள் அடிக்கடி வெளியாகி வருவதால், 'மாற்றான்' படத்திற்கும் எதிர்பார்ப்பு உண்டு.

இவர்களை விட தமிழ் சினிமாவின் சூப்பர் ஹீரோக்களான உலக நாயகன் கமலஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்கள் இந்த வருடத்தில் தமிழ் சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக நாயகன் கமலஹாசன் தயாரித்து இயக்கி வரும் 'விஸ்வரூபம்' படம் இந்த வருடத்தின் கவனிக்க பட வேண்டிய படங்களில் ஒன்றாக இருக்கிறது. தமிழ், இந்தி என ஒரே சமயத்தில் படத்தின் ஷூட்டிங் எடுக்கப்பட்டு வருகிறது. கமலஹாசன் படங்களில் அதிக பட்ஜெட்களில் எடுக்கபடும் படம் விஸ்வரூபம் என்பது குறிப்பிடத்தக்கது..

மெகா ஹிட் எந்திரன் பிறகு, சூப்பர் ஸ்டார் 'ராணா' படத்தில் நடிக்க தொடங்கினார். ஆனால் சூப்பர் ஸ்டாருக்கு ஏற்பட்ட திடீர் உடல் நலக் குறைவு காரணமாக படத்தின் ஷூட்டிங் தள்ளி போனது. இறுதியில் படத்தை தற்காலிகமாக நிறுத்திய சூப்பர் ஸ்டார், தன்னுடைய மகள் சவுந்தர்யா இயக்கத்தில் 'கோச்சடையான்' 3டி படத்தில் நடிக்கிறார். ஹாலிவுட் அவதார் படம் போல் இந்தியாவில் உருவாகும் முதல் 3டி படம் இது. அதிக பொருட் செலவிலும் எடுக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி உடல் நலக்குறைவு காரணமாக ரசிகர்களை பார்க்காத ரஜினியின் முகத்தை திரையில் காண அவரது ரசிகர்களுடன் ஆவலுடன் இருக்கின்றனர்.

இதே போல் சிம்புவின் 'வேட்டை மன்னன்','போடா போடி','வட சென்னை' போன்ற படங்களும், தனுஷின் '3' படமும், ஆர்யாவின் வேட்டை மற்றும் இரண்டாம் உலகம் படங்களும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்ற வருடம், ஒரு நடிகருக்கு மட்டும், மற்ற எல்லா ஹீரோக்களை விட சிறப்பாக அமைந்தது. அந்த ஹீரோ 'ஜீவா' தான். 'கோ' படத்தின் வெற்றிக்கு பிறகு அவரது மார்க்கெட் உச்சத்தில் உள்ளது. ஷங்கர், கௌதம் மேனன், மிஷ்கின் என பெரிய இயக்குனர்களின் படங்கள் இவர் கையில்.

சீயான் விக்ரமுக்கு சென்ற வருடம் 'தெய்வத்திருமகள்' பெரிய வெற்றியை தந்தது. தற்போது அந்த படத்தில் வோர்க் பண்ணிய அதே  டீம், மீண்டும் 'தாண்டவம்' படத்தில் இணைந்திருக்கிறது. இந்த படத்திற்கும் மிகுந்த எதிர்பார்ப்பு உண்டு.

இப்படி எல்லா ஹீரோக்களுக்கும் சூப்பர் படங்கள் கையில் இருப்பதால், 2012ல் தமிழ் சினிமாவில் அசத்தப் போவது யார்? என்பதை பொருத்திருந்தான் பார்க்க வேண்டும்.


 

ஸ்ருதியுடன் இணைந்து நடிக்க கமல் மறுப்பு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தன்னுடன் இணைந்து நடிக்க மகள் ஸ்ருதி தெரிவித்த விருப்பத்தை நிராகரித்தார் கமல். இதுபற்றி கமல்ஹாசன் கூறியதாவது: என்னுடைய சொந்த பட நிறுவனமான ராஜ்கமல் மூலம் அறிமுகமாகாமல் வெளிப்படத்தில் அறிமுகமானார் ஸ்ருதி. தமிழ், இந்தி மொழிகளில் நடிகையாக சொந்த முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார். இது மகிழ்ச்சி அளிக்கிறது. 'உன்னைப்போல் ஒருவன்' என் பேனரில் உருவான படம். அதில் இசை அமைப்பாளாளர் என்ற பொறுப்பை மட்டும் ஸ்ருதி ஏற்றிருந்தார். 'இருவரும் சேர்ந்து நடிப்பீர்களா?' என்கிறார்கள். ஸ்ருதியும் இப்படி விருப்பம் தெரிவித்தார். ஆனால் அதற்கான ஸ்கிரிப்ட் அமையாமல் வெறும் பேருக்காக நடிக்க முடியாது. இப்போது அவர் ஒரு ஸ்டார். அவரது படத்தை சொந்தமாக தயாரிக்க விரும்புகிறேன்.

மகளாக மட்டுமில்லாமல் எனக்கு பயிற்சியாளராகவும் ஸ்ருதி இருந்திருக்கிறார். தசாவதாரம் படத்தில் அமெரிக்க பாணியில் ஆங்கிலம் பேச வேண்டி இருந்தது. அப்போதுதான் ஸ்ருதியும் அமெரிக்காவிலிருந்து வந்திருந்தார். அவர் தான் எனக்கு அமெரிக்கர்கள் பாணியில் ஆங்கிலம் பேச பயிற்சி அளித்தார். எனது மற்றொரு மகள் 'அக்ஷரா நடிக்க வருவாரா?' என்கிறார்கள். அவருக்கு கேமராவுக்கு பின்னால் பணியாற்ற பிடித்திருக்கிறது. நானும் அப்படித்தான் எனது திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்தேன். பின்னர்தான் கேமராவுக்கு முன் நடிக்க வந்தேன்.


 

கார்த்தி படத்திலிருந்து லட்சுமிராய் நீக்கம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கார்த்தி படத்திலிருந்து லட்சுமிராய் நீக்கப்பட்டார். சுராஜ் இயக்கும் புதிய படத்தில் கார்த்தி, அனுஷ்கா நடிக்கின்றனர். இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இதில் லட்சுமிராய் இரண்டாவது ஹீரோயினாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதுபற்றி இயக்குனர் சுராஜ் கூறியதாவது: கார்த்தி நடிக்கும் இப்படத்தில் அனுஷ்காதான் ஹீரோயின். இந்த ஜோடி தவிர 3 முக்கிய பாத்திரங்களில் 3 நடிகைகள் நடிக்க வேண்டி இருந்தது. இதற்காக லட்சுமிராயிடம் பேசப்பட்டது. ஆனால் அவரது கால்ஷீட் எங்களுக்கு ஏற்றவகையில் கிடைக்கவில்லை. இதனால் அவரை ஒப்பந்தம் செய்யவில்லை. தற்போது நிகிதா அந்த வேடத்தை ஏற்கிறார். மேலும் மேக்னா, சனுஷா ஆகியோரும் நடிக்கின்றனர் என்றார். இதுபற்றி நிகிதா கூறும் போது, ''தற்போது சங்கொலி ராயன்னா என்ற கன்னட படத்தில் நடிக்கிறேன்.  சுராஜ் இயக்க, கார்த்தி நடிக்கும் படத்தில் நான் நடிக்கவில்லை என்று கிசுகிசு வெளிவந்துகொண்டிருந்தது. மற்றொரு நடிகையும் இந்த வேடத்தில் நடிப்பதாக பேட்டி அளித்திருந்தார். தற்போது அது சந்தேகம் நீங்கிவிட்டது. இவ்வேடத்தில் நடிக்க எனக்கு அட்வான்ஸ் தரப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் ஷூட்டிங்கில் பங்கேற்கிறேன்'' என்றார்.


 

சமீரா ரெட்டி கணக்கில் ரூ 4 லட்சம் சுருட்டல்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சமீரா ரெட்டியின் கிரெடிட் கார்டு அக்கவுன்ட்டில் எப்படியோ புகுந்து வெளிநாட்டு இளைஞர் ஒருவர் ரூ.4 லட்சம் சுருட்டியுள்ளார். வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வெடி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் சமீரா ரெட்டி. அவர் கூறியதாவது: சமீபத்தில் என் செல்போனில் மர்ம நபர் ஒருவரிடமிருந்து அழைப்பு வந்தது. முதலில் எடுக்கவில்லை. தொடர்ந்து பலமுறை அழைப்பு வந்ததால் பேசினேன். மறுமுனையில் பேசியவர். தான் அமெரிக்காவில் வாழும் இந்தியர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். அவரும், நண்பர்களும் சேர்ந்து என்னுடைய  கணக்கிலிருந்து பணம் எடுத்துவிட்டதாக தெரிவித்தார். உடனடியாக என் வங்கி கணக்கை சரிபார்த்தபோது ரூ.4 லட்சம் எடுக்கப்பட்டிருந்தது. பணம் எடுத்துக்கொள்ளும்படி நான் எந்த அனுமதியும் கொடுக்கவில்லை. இச்சம்பவம் அதிர்ச்சி அளித்தது.

தொடர்ந்து பேசிய மர்ம நபர், 'பணம் எடுத்த பின் கவனித்தபோது உங்கள் பெயரில் அந்த அக்கவுன்ட் இருந்தது. நான் உங்கள் ரசிகன். அதனால்  எடுத்த பணத்தை உங்கள் கணக்கிலேயே செலுத்தி விட்டேன். நண்பர்கள் 'சுட்ட' பணத்துக்கு நான் பொறுப்பாக முடியாது' என்று கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்தார். என்ன செய்வதென்று  தெரியாமல் விழித்தேன். என்னுடைய கிரெடிட் கார்டு அக்கவுன்ட்டில் எப்படி மோசடியாக பணம் எடுக்கப்பட்டது என்பது பற்றி டிப்ஸ் கொடுத்ததுடன், 'இனிமேல் ஆன்லைனிலோ, கிரெடிட் கார்டிலோ பணம் எடுக்காதீர்கள்' என்று எச்சரித்தார். பிறகு எனது கணக்கை சரிபார்த்தபோது, அதில் ரூ. 1 லட்சம் கிரெடிட் ஆகி இருந்தது. ஆனால் மீதி 3 லட்சம் ரூபாயை பறிகொடுத்துவிட்டேன். இதுவொரு அதிர்ச்சி தரும் அனுபவமாக அமைந்தது. இனிமேல் ஷாப்பிங் செய்தால் அதற்காக ஆன்லைனையோ, கிரெடிட் கார்டையோ பயன்படுத்தக் கூடாது என்று முடிவு செய்துவிட்டேன். இவ்வாறு சமீரா ரெட்டி கூறினார்.



 

கிசு கிசு - இயக்குனர் நிராகரிப்பு நடிகை அப்செட்

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

சமீபத்துல கோலிவுட்ல அறிமுகமான தீக்ச ஹீரோயின், டோலிவுட்ல கால்பந்தாட்ட வீராங்கனையா நடிக்க¤றதுக்காக பயிற்சி எடுத்தாரு. அந்த படம் பொங்கல் தினத்தப்போ ரிலீஸ் ஆகும்னு ரொம்பவே எதிர்பார்த்தாராம். படமும் ரிலீஸுக்கு தயாரா இருந்துச்சாம்... இருந்துச்சாம்... திடீர்னு தயாரிப்பு, படத்தோட ரிலீசை தள்ளிப் போட்டுட்டாராம்... தள்ளிப் போட்டுட்டாராம்... வருஷ தொடக்கத்திலேயேஏமாற்ற மாயிடுச்சேன்னு தீக்ச நடிகை வருத்தத்துல இருக்கா ராம்... இருக்காராம்...

பிரியமான பெல் நடிகை, ஏற்கனவே வர்மாவான இயக்குனரோட இந்தி படத்துல நடிச்சாரு. இப்போ தன்னோட புது படத்துக்கு இயக்கம் நடிகையை தேடுறாரு. இதைக் கேள்விப்பட்ட பெல் நடிகை, இயக்கத்துக்கு தூது விட்டாராம்... விட்டாராம்... ஆனா இயக்கமோ, இந்த ரோலுக்கு நீங்க சூட் ஆக மாட்டீங்கன்னு உடனே பதில் கொடுத்தாராம். இதைக் கேட்டு, நடிகை அப்செட்டாம்...
அப்செட்டாம்...

இனிய நடிகைக்கு பாவாடை, தாவணில நடிக்கிற வாய்ப்புகள்தான் நிறைய வருதாம்... வருதாம்... Ôஎன்னால கிளாமராவும் நடிக்க முடியும். மாடர்ன் வேடமா இருந்தா சொல்லுங்கÕன்னு நடிகை சொல்றாராம்... சொல்றாராம்... சமீபத்துல கிராமத்து வேஷம் போட வந்த வாய்ப்பை மறுத்துட்டாராம்... மறுத்துட¢டாராம்...


 

வாசு இயக்கத்தில் மீண்டும் ரஜினி?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சூப்பர் ஸ்டார் ரஜினி - ஷங்கர் கூட்டணியில் ஒரு படம் வரும் எனக் கூறிய வரும் நிலையில், இன்னொரு வதந்தி கோடம்பாக்கத்தை கலக்கி வருகிறது. கோச்சடையான் முடிந்ததும் ரஜினி ராணாவை எடுக்காமல், பி வாசு இயக்கத்தில் சிவாஜி பிலிம்சுக்காக ஒரு குறுகிய கால படம் ஒன்றை சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க விரும்புவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 35 நாட்கள் இந்தப் படத்துக்கு ரஜினி கால்ஷீட் கொடுத்திருப்பதாகவும் அதற்குள் படத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டால், உதடுகளை இறுக மூடிக் கொள்கிறார்கள்!