'கிக்கு'.. 'செக்'கு.. ரெண்டிலுமே வெளுத்துக் கட்டும் சோபியா!

Sofia Vergara Is Highest Paid Tv Actress

நியூயார்க்: உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் டிவி நடிகை என்ற பெயரை 40 வயதான கொலம்பிய நடிகை சோபியா வெர்கரா பெற்றுள்ளார். ஏற்கனவே இவர் சமீபத்தில் ஆண்களால் அதிகம் விரும்பப்படும் அழகியாகவும் ஒரு கருத்துக் கணிப்பில் தேர்வானார் என்பது நினைவிருக்கலாம்.

வயது 40 என்றாலும், 25 வயது இளம் பெண்ணுக்குரிய அத்தனை அம்சங்களும் நிரம்பிய அழகுப் பெண்தான் சோபியா. படு அழகான இவர் டிவி நடிகையும் ஆவார். சமீபத்தி்ல இவரை ஆண்களால் அதிகம் விரும்பும் பெண்ணாக ஒரு கருத்துக் கணிப்பு தெரிவித்தது. இவரது கட்டழகுக்கு நாங்கள் அடிமை என்று பல ஆண்களும் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக தற்போது சோபியா உருவெடுத்துள்ளார். இவர் 2011 மே முதல் 2012 வரையிலான கால கட்டத்தில் சம்பாதித்த தொகை எவ்வளவு தெரியுமா... 19 மில்லியன் அமெரிக்க டாலர்களாம். போர்ப்ஸ் பத்திரிகைதான் இந்த தகவலை தெரிவித்துள்ளது.

மாடர்ன் பேமிலி என்ற டிவி சீரியல் மூலம் வெகு பிரபலமானவர் சோபியா. இந்த டிவி ஷோ தற்போது 3வது சீசனை தொட்டுள்ளது. இதுவரை 10.2 லட்சம் ரசிகர்கள் இந்த ஷோவை ரசித்துள்ளனராம். இந்தத் தொடர்தான் சோபியாவுக்கு பெருமளவு சம்பாதித்துக் கொட்டியுள்ளது.

கடந்த ஒரு வருடத்தில் அசைக்க முடியாத டிவ நடிகையாகவும் இவர் உருவெடுத்துள்ளாராம். கிம் கர்தஷியானைக் கூட இந்த விஷயத்தில் அவர் முறியடித்து விட்டார். கிம்முக்கு அதிக சம்பளம் வாங்கியோர் பட்டியலில் 2வது இடம் கிடைத்துள்ளது. இவரது சம்பாத்தியம் 18 மில்லியன் டாலர்களாகும்.

'கிக்கு'.. 'செக்'கு.. ரெண்டிலுமே வெளுத்துக் கட்டும் சோபியா நிச்சயம் ஒரு ஆச்சரியக்குறிதான்...!

 

பாரிஸில் ஆன்டனியோ பன்டாரஸுடன் மல்லிகா ஷெராவத்தின் ஹாலிடே

Mallika Sherawat Planning Private Holiday With Antonio

டெல்லி: பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் ஹாலிவுட் நடிகர் ஆன்டனியோ பன்டாரஸுடன் சேர்ந்து பாரிஸில் விடுமுறையைக் கழிக்கப் போகிறாராம்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கேன்ஸ் பட விழாவுக்கு சென்ற இடத்தில் பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் போட்டிருந்த கவர்ச்சியான ஆடையைப் பார்த்து அவரைப் பிடித்து இழு்த்து வைத்து டான்ஸ் ஆடினார் ஹாலிவுட் நடிகர் ஆன்டனியோ பன்டாரஸ். டான்ஸ் ஆடியதோடு மட்டுமல்லாமல் அவர்கள் இருவரும் தனிமையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையெல்லாம் பார்த்து கொதித்துப் போன பன்டாரஸின் மனைவி அவரைப் பிரிந்து சென்றுவிட்டார். இந்நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி காதல் நகரமான பாரிஸில் பன்டாரஸை சந்திக்கிறார் மல்லிகா ஷெராவத். அவர்கள் இருவரும் சேர்ந்து அங்கு விடுமுறையைக் கொண்டாடப் போகின்றனராம். பன்டாரஸ் அழைத்து தான் மல்லிகா பாரிஸ் போகிறார் என்று கூறப்படுகிறது.

மேலும் அவர் பன்டாரஸின் மகிழ்ச்சிக்காக தான் பாரிஸ் செல்கிறாராம். ஹாலிவுட் நடிகர் மல்லிகாவுடன் சேர்ந்து நடிக்க முடிவு செய்துள்ளார் என்று பேச்சு அடிபடுகிறது.

15 ஆண்டுகளாக உடன் இருந்த மனைவி மெலனியே பன்டாரஸைப் பிரிந்துவிட்டார். பிற பெண்களுக்காக மனைவியை இழக்கும் வழக்கம் உள்ள பன்டாரஸிடம் மல்லிகா எத்தனை நாட்கள் தாக்கு பிடிப்பார்?

 

சல்லுவுக்கும், பிப்ஸுக்கும் இடையே என்ன இருக்கு?

Salman Khan Spotted On Dinner Date    | சல்மான்  

மும்பை: தனது நீண்ட நாள் காதலன் ஜான் ஆபிரகாமைப் பிரிந்த பாலிவுட் நடிகை பிபாஷா பாசு பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானுடன் இரவு விருந்து சாப்பிட்டுள்ளார். அதாவது டின்னர் டேட்.

நீண்ட நாள் காதலனைப் பிரிந்த பாலிவுட் நடிகை பிபாஷா பாசு தனது வாழ்க்கையை புதிதாகத் துவங்க த்கக் துணையைத் தேடி வருகிறார். இந்நிலையில் கடந்த 22ம் தேதி இரவு மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் சல்மான் கானுடன் டின்னர் டேட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவர்கள் இருவரையும் ஜோடியாகப் பார்த்த 3 பேர் இந்த ரகசியத்தை மனதுக்குள் வைத்துக் கொள்ள முடியாமல் உடனே டுவிட்டரில் உலகிற்கே தம்பட்டம் அடித்துவிட்டனர்.

சல்மானின் சகோரர் சொஹைல் அலி கானின் தயாரிப்பான ஷேர் கான் படத்தில் நடிக்க பிபாஷா பாசு ஒப்பந்தம் ஆகி இருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் சல்மானுடன் ஜோடி சேர்ந்து நடிக்க பிபாஷாவுக்கு ஆசை. அந்த ஆசை விரைவில் நிறைவேறிவிடும் போல் உள்ளது என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே பாலிவுட்டில் உள்ள வளர்ந்து வரும் மற்றும் பெரிய நடிகைகள் என அனைவரும் சல்மானுடன் ஜோடி சேர ஆசைப்படுகிறார்கள். அப்படி இருக்கையில் பிபாஷா மட்டும் விதிவிலக்கா என்ன.

ஆனால் டின்னர் டேட்டுக்கு பின்னால் வேறு ஏதாவது காரணம் இருக்குமோ?

 

கோட்சே வேடத்தில் பிருத்விராஜ்!

Prithviraj Play Godse Role

மகாத்மா காந்தியை கோட்சே சுட்டுக் கொன்ற கோட்சே வேடத்தில் நடிக்கிறார் பிருத்விராஜ்.

தேசத்தந்தை எனப் போற்றப்படும் காந்தியின் வாழ்க்கை வரலாறு மலையாளத்தில் படமாகிறது. இந்தப் படத்தை தமிழிலும் வெளியிட முடிவு செய்துள்ளனர். இதில் கோட்சே வேடத்தில் பிருதிவிராஜ் நடிக்கிறார். ஷாஜி கைலாஷ் இயக்குகிறார்.

பிருதிவிராஜ் வைத்து ஷாஜி கைலாஸ் தற்போது சிம்ஹாசனம் படத்தை டைரக்டு செய்து வருகிறார். இப்படம் முடிந்ததும் கோட்சே படத்தை ஆரம்பிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

கோட்சேயின் வாழ்க்கை சம்பவங்கள் இதில் காட்சிபடுத்தப்படுகின்றன. அவனது குடும்ப சூழல், காந்தியை கொல்ல வகுத்த திட்டங்கள், அதன் அரசியல் பின்னணி போன்றவை படமாக்கப்படுகிறது.

இதுகுறித்து ஷாஜி கைலாஸ் கூறும்போது, "கோட்சே படம் உணர்வுபூர்வமான திரைக்கதையில் உருவாகிறது. காந்தியை கொல்வதற்கு முந்தைய நாள் கோட்சேயின் மனநிலையும் உணர்வு போராட்டங்களும் எப்படி இருந்தன என்பதை திரைக்கு கொண்டு வருகிறோம். நல்லதற்கும் தீயதற்கும் இடையே நடக்கும் போராட்டம்தான் இந்த கதையின் கரு," என்றார்.

கதையின் ஹீரோ பிருத்விராஜ் என்பதற்காக கோட்சேயை உத்தமன், நல்லவன், சூழ்நிலைதான் அப்படி பண்ண வச்சது.. என்றெல்லாம் காட்டித் தொலைக்கப் போறீங்கப்பா...!

 

புத்தம் புதுப் பொலிவுடன் மீண்டும் 'நினைத்தாலே இனிக்கும்'...!

Rajini Kamal On Screen Again

சென்னை: ரஜினி, கமல் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி. இருவரும் இணைந்து இனி நடிப்பார்களா என்பது சந்தேகம்தான். இருப்பினும் அவர்கள் இருவரும் கடைசியாக சேர்ந்து நடித்த நினைத்தாலே இனிக்கும் திரைப்படம் புத்தம் புதுப் பொலிவுடன் தமிழகம் முழுவதும் விரைவில் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளதாம்.

இப்போது உள்ள லீடிங் ஹீரோக்களைப் போல அல்லாமல், அதிக அளவிலான படங்களில் இணைந்து நடித்தவர்கள் ரஜினியும், கமலும். அவர் பெரியவரா, இவர் பெரியவரா என்று எந்தவிதமான பாகுபாடும் காட்டாமல் இருவரையும் வைத்து கே.பாலச்சந்தர் பல படங்களைச் செய்தார். இருவருக்கும் சமமான வாய்ப்புகளைக் கொடுத்தார். அதேபோல இருவரும் இமேஜ் பார்க்காமல், கதையை மட்டும் பார்த்து அசத்தலாக நடித்தார்கள், அந்தந்த கேரக்டர்களாக வாழ்ந்தார்கள். இதனால் ரசிகர்களும் இருவரையும் திரையில் பார்க்காமல், அந்தந்த கேரக்டர்களாக மட்டுமே பார்த்து ரசித்தனர். இன்று வரை இவர்கள் இருவரும் இணைந்து நடித்த படங்களுக்கு இணையாக எந்தப் படமும் வரவில்லை என்று கூட சொல்லலாம்.

இவர்கள் இருவரும் இணைந்து நடித்த முதல் படம் அபூர்வ ராகங்கள் என்றால் கடைசிப் படமாக இருப்பது நினைத்தாலே இனிக்கும். இதுவும் கே.பாலச்சந்தரின் படம்தான். அந்தக் காலத்து இளைஞர்களின் மனம் முழுக்க நிரம்பிக் கிடக்கும் படம். அழகான காதல் கதையை ரகளையாக கூறியிருப்பார் கே.பாலச்சந்தர். எம்.எஸ்.விஸ்வநாதனின் இனிய இசை, இன்று வரை காதுகளிலேயே ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும் அருமையான படம்.

ஒரு இசைக் குழுவின் பாடகனுக்கும், ஒரு பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதல்தான் இப்படத்தின் கதை. சிங்கப்பூருக்குப் போகும் போது அந்தப் பெண்ணை சந்திக்கிறான் நாயகன். அவர்களின் காதல் என்ன ஆகிறது, அந்தப் பெண்ணின் பின்னால் மறைந்துள்ள மர்மம் என்ன என்பதுதான் படத்தின் கதை. யாரும் எதிர்பார்த்திராத கிளைமேக்ஸ் இப்படத்திற்கு. அதுதான் இப்படத்தை தூக்கி நிறுத்த முக்கியக் காரணம்.

கமல்ஹாசன் ஹீரோவாக நடித்திருப்பார். அவருக்கு ஜோடி ஜெயப்பிரதா. ரஜினிகாந்த்தின் ரோல் கிட்டத்தட்ட செகண்ட் ஹீரோ போலத்தான். ஆனாலும், தனது ஸ்டைலால் கமலுக்கு நிகராக கலக்கியிருப்பார். குறிப்பாக கீதாவிடம், சிகரெட்டைத் தூக்கிப் போட்டு பிடித்து இம்ப்ரஸ் செய்யும் காட்சி.

இந்தப் படத்தை தற்போது புத்தம் புதுப் பொலிவுடன் மறு திரையீடு செய்யவுள்ளனராம். 1979ம் ஆண்டு இப்படம் முதலில் ரிலீஸ் ஆனது. இந்தப் படத்தின் ஒலி, ஒளியை மெருகேற்றி நவீன முறையில் புதுப்பித்து டிஜிட்டல் முறையில் மாற்றி திரையிடத் திட்டமிட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இப்படத்தை ரிலீஸ் செய்கிறார்கள்.

ஏற்கனவே சிவாஜி கணேசனின் கர்ணன் படத்தை டிஜிட்டல் மயமாக்கி வெளியிட்டு பெரும் வெற்றி கிடைத்தது. இதையடுத்து மேலும் சில சிவாஜி படங்களை டிஜிட்டல் மயமாக்கி வருகின்றனர். அந்த வகையில் அந்தக் காலத்தில் அனைவரையும் ஈர்த்த நினைத்தாலே இனிக்கும் டிஜிட்டல் வேடம் பூண்டு திரைக்கு வருவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஹீரோவின் ரசிகைகளால் என் உயிருக்கு ஆபத்து: நடிகை ஷேனாஸ்

Delhi Belly Actress Shenaz Treasurywala Feels Her Life

மும்பை: தான் நடிக்கும் புதுப்படத்தின் நாயகனின் தீவிர ரசிகைகளால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக டெல்லி பெல்லியில் நடித்த இந்தி நடிகை ஷேனாஸ் ட்ரஷரிவாலா தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் இம்ரான் கானின் டெல்லி பெல்லி படத்தில் நடித்தவர் நடிகை ஷேனாஸ் ட்ரஷரிவாலா. அவர் தற்போது மெய்ன் அவுர் மிஸ்டர் ரைட் என்ற இந்தி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். படப்பிடிப்பில் இருக்கும்போது தைரியமாக காணப்படும் அவர் அங்கிருந்து கிளம்ப வேண்டும் என்றாலே பயப்படுகிறார். அதற்கு கதாரணம் படத்தின் ஷேனாஸ் ஜோடியாக நடிக்கும் பருண் சோப்தியின் தீவிர ரசிகைகள்.

பருண் சோப்தி பியார் கோ க்யா நாம் டூன்? என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர். அந்த நிகழ்ச்சியை நடத்தும் அவருக்கு எக்கச்சக்க ரசிகைகள் உள்ளனர். இந்நிலையில் அவர் பாலிவுட்டில் நடிப்பதற்காக தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாகத் தகவல்கள் வெளியானது. இதைக் கேட்ட அவரது ரசிகைகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அவர்கள் தான் தனக்கு இமெயில் மூலம் மிரட்டல் விடுவதாக ஷேனாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து ஷேனாஸ் கூறுகையில்,

நான் பருணை அவர்களிடம் இருந்து பிரிப்பதாக அவரது ரசிகைகள் நினைக்கின்றனர். அவர்களுக்கு பருண் என்றால் உயிர். அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டதாக நினைத்து எனக்கு இமெயில் மூலம் மிரட்டல் விடுகின்றனர். அவர்கள் பருணுக்காக எதையும் செய்வார்கள் என்றார்.

 

அனுஷ்கா கால்ஷீட்டை வீணடிக்கவில்லை - செல்வராகவன்

I M Not Wasting Anushka Call Sheet Says Selvaragavan   

சென்னை: இரண்டாம் உலகம் படத்துக்கு அனுஷ்கா கொடுத்த கால்ஷீட்டை வீணடித்துவிட்டதாக தன் மீது வந்துள்ள குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை என்று இயக்குநர் செல்வராகவன் கூறியுள்ளார்.

செல்வராகவன் இயக்கும் ‘இரண்டாம் உலகம்' படம் ஆர்யா, அனுஷ்காவால் தாமதம் ஆவதாக கிசுகிசுக்கள் பரவின. இருவரும் ‘இரண்டாம் உலகம்' படத்துக்கு இவர்கள் ஒதுக்கிய தேதிகளை செல்வராகவன் விரயம் செய்து விட்டதாகவும் தற்போது இருவரும் வேறு படங்களில் நடிப்பதால் தங்களது கால்ஷீட்டை மாற்றி விட்டதாகவும் திட்டமிட்டப்படி படப்பிடிப்பை நடத்த முடியாமல் செல்வராகவன் தவிப்பதாகவும் கூறப்பட்டது.

குறிப்பாக, இந்தக் குழப்பத்தால் கார்த்தி நடிக்கும் அலெக்ஸ் பாண்டியன் படத்தில் அனுஷ்காவால் நடிக்க முடியவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.

‘இரண்டாம் உலகம்' படக்குழுவினர் செல்வராகவனுடன் தற்போது ஜார்ஜியாவில் முகாமிட்டுள்ளனர். ஆர்யா, அனுஷ்கா வருகைக்காக அவர்கள் காத்திருப்பதாக செய்தி வெளியானது.

இதுகுறித்து செல்வராகவன் கூறுகையில், "ஆர்யா, அனுஷ்காவால் படப்பிடிப்பு தாமதமாகியுள்ளதாக வெளியான செய்திகள் அபத்தமானவை. ஆர்யாவும், அனுஷ்காவும் இப்படத்தில் நடிக்க நிறைய தேதிகளை ஒதுக்கி கொடுத்துள்ளனர். அவர்கள் ஒதுக்கிய கால்ஷீட்டை நாங்கள் விரயமாக்கவில்லை. திட்டமிட்டப்படி படப்பிடிப்பு நடக்கிறது. அவர்கள் எங்களுடன்தான் உள்ளனர்," என்று தெரிவித்துள்ளார்.

 

ஷாருக்கானின் 'சென்னை எக்ஸ்பிரஸ்'... கரீனா நடிக்க மாட்டார்!

Kareena Not Star Opposite Srk Chennai Express

மும்பை: ஷாருக் கான் நடிக்கவுள்ள புதிய படமான சென்னை எக்ஸ்பிரஸ் இந்திப் படத்தில் அவருக்கு ஜோடியாக கரீனா கபூர் நடிக்கவில்லை என்று படத்தின் இயக்குநர் ரோஹித் ஷெட்டி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தான் கரீனாவை அணுகவில்லை என்றும் அவர் விளக்கியுள்ளார். ஷாருக்கான் அடுத்து சென்னை எக்ஸ்பிரஸ் என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். இதை ரோஹித் ஷெட்டி இயக்குகிறார். இதற்கான நாயகி தேர்வு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

கரீனாவை கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை ரோஹித் ஷெட்டி மறுத்துள்ளார். நான் கரீனாவை அணுகவில்லை. நான் இப்படம் செய்வது குறித்து கரீனாவுக்கும் தெரியும். ஆனால் அவரும் இதில் நடிக்க கேட்கவில்லை. நானும், அவரும் சேர்ந்து வேறு படம் செய்யும் வாய்ப்புண்டு. ஆனால் சென்னை எக்ஸ்பிரஸில் நிச்சயம் கரீனா இல்லை என்றார்.

இதற்கிடையே, தீபிகா படுகோனை ஷாருக்கானுடன் ஜோடி சேர்க்க முயற்சிகள் நடப்பதாக ஒரு தகவல் கூறுகிறது. ஏற்கனவே ஓம் சாந்தி ஓம் படத்தில் இருவரும் சேர்ந்து நடித்தனர் என்பது நினைவிருக்கலாம். இந்தப் படத்திற்குப் பிறகுதான் தீபிகாவுக்கு பாலிவுட்டில் மவுசு கூடியது என்பதும் தெரிந்திருக்கலாம்.

சென்னை எக்ஸ்பிரஸ் என்று பெயர் வைத்திருப்பதைப் பார்த்தால், படத்தை தமிழில் டப் செய்யும் ஐடியா இருக்குதோ என்னவோ...!

 

மதுரையில் கூடுதல் கட்டணம் வசூலித்த தியேட்டர்களுக்கு அபராதம்: கலெக்டர் அன்சுல் மிஷ்ரா அதிரடி

மதுரை: மதுரை மாநகரில் உள்ள திரையரங்குகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விடக் கூடுதல் கட்டணம் வசூலித்த திரையங்குகளுக்கு மதுரை மாவட்ட கலெக்டர் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட திரையரங்குகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விடக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஷ்ராவுக்கு தொடர்ந்து புகார்கள் சென்ற வண்ணம் இருந்தது. இதையடுத்து மதுரை மாநகரில் புகார்களுக்கு ஆளான திரையரங்குகளை கண்காணிக்குமாறு துணை கலெக்டருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

மேலும் துணை கலெக்டர் தலைமையில் 4 குழுக்கள் அமைக்கப்பட்டது. இந்த குழுக்கள் நாகமலை புதுக்கோட்டையில் உள்ள தியேட்டர் மற்றும் ஞான ஒளிவுபுரம், வண்டியூர், வக்கீல் புது தெரு, வில்லாபுரம், புதுநத்தம் ரோடு, திருநகர் உள்பட 8 தியேட்டர்களில் திடீர் சோதனை மேற்கொண்டன.

இந்த திரையரங்குகளில் அரசால் அனுமதிக்கப்பட்ட கட்டணத்தை விடக் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து 4 திரையரங்குகளுக்கு தலா ரூ.6,000ம், 2 திரையரங்குகளுக்கு தலா ரூ.2 ,000 அபராதம் விதித்து கலெக்டர் அன்சுல் மிஸ்ரா உத்தரவிட்டார்.

 

விமலுடன் நடிக்க லட்சுமி மேனனுக்கு தடைபோட்டாரா பிரபு சாலமன்?

Is Lakshmi Menon Prabhu Solomon Custody   

சென்னை: அரசல் புரசலாக, கிசுகிசுவாக இருந்த சமாச்சாரம் இப்போது செய்தியாகவே வந்துவிட்டது.

கும்கியில் தான் அறிமுகப்படுத்தும் புது நடிகை நடிகை லட்சுமி மேனனை, வேறு யாருடனும் நடிக்கவிடாமல் தடுத்து வைத்திருக்கிறார் இயக்குநர் பிரபு சாலமன் என்பதுதான் அந்த செய்தி.

சமீபத்தில் பசங்க இயக்குநர் பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில் விமல் ஜோடியாக நடிக்க லட்சுமி மேனனுக்கு வாய்ப்பு வந்ததாம்.

ஆனால் இயக்குநர் பிரபு சாலமனோ, 'என்ன பெரிய வாய்ப்பு... படத்தோட பேரே சரியில்ல. கேடி பில்லா கில்லாடி ரங்கா...அதிலெல்லாம் நடிச்சு பெயரைக் கெடுத்துக்காதே. நான் அடுத்து பெரிய படம் பண்றேன். அதிலும் நீதான் நாயகி' என்று கூறித் தடுத்துவிட்டதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல கிட்டத்தட்ட நான்கு பட வாய்ப்புகளை இழந்துவிட்டாராம் லட்சுமி.

சரி, இத்தனை நாள் இல்லாமல், திடீரென்று இந்த வாரம் முழுக்க இப்படி செய்தி வர என்ன காரணம்?

வேறு யார்... லட்சுமியின் பெற்றோர் மற்றும் கூடவே இருக்கும் சில சிண்டுமுடிஞ்சிகள்தான்!

கும்கி படம் முடிந்துவிட்டது. இந்தப் படம் வந்தால் பெரிய ரேஞ்சுக்குப் போக வாய்ப்பிருக்கிறது. அடுத்த படத்திலும் பிரபு சாலமனிடம் மாட்டாமல், புதுப்புது இயக்குநர்களிடம் போய்விட்டால், நிறைய சம்பாதிக்க முடியும் என்பதால், இந்த சமாச்சாரத்தை தங்களுக்கு தெரிந்த சினிமா பத்திரிகையாளர்களிடம் சொல்லி, 'எப்படியாவது நியூசைப் போடுங்க. அப்பவாவது என் பொண்ணை விட்டுடறாரா அந்த டைரக்டர் பார்க்கலாம்...' என்று கூறி வருகிறார்களாம்.

அடடா... இப்ப எந்தப் பக்கம் உண்மையிருக்குன்னே தெரியலயே... திரும்புற பக்கமெல்லாம் செட்டப் நியூசாவே இருக்கே கோலிவுட்ல!

 

மனைவி பிள்ளைகளுடன் பிறந்த நாள் கொண்டாடிய சூர்யா!

Happy Birthday Suriya

சென்னை: மாற்றான் பட வேலைகளில் பிஸியாக இருக்கும் சூர்யா, தற்காலிகமாக அவற்றை நிறுத்திவிட்டு இன்று தன் பிறந்த நாளை மனைவி குழந்தை மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடினார்.

இன்றைக்கு தமிழ் சினிமாவில் வியாபார ரீதியாக சூர்யாவின் படங்கள் பெரிய விலைக்குப் போகின்றன. குறிப்பாக அடுத்து அவர் நடிப்பில் வெளிவரும் மாற்றான் படத்தின் விற்பனை விலை பலரையும் விழியுயர்த்த வைத்துள்ளது.

அஜீத், விஜய் உள்ளிட்ட அடுத்த நிலை நடிகர்களின் படங்களை விட 50 சதவீதம் அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது மாற்றான்.

இந்த சந்தோஷத்தை ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளும் விதத்தில் அவர் தன் பிறந்த தினத்தைக் கொண்டாடினார்.

சூர்யா பிறந்த நாளையொட்டி ரசிகர்கள் ரத்ததானம் செய்தனர். தேனாம்பேட்டை எல்லையம்மன் கோவில் கல்யாண மண்டபத்தில் ரத்ததான முகாம் நடந்தது. திருவான்மியூர் எம்.எம்.ஆர். மதன் தலைமையில் 100 பேர் ரத்ததானம் செய்தார்கள்.

சூர்யா பிறந்ததின 10-வது ரத்ததான முகாமாக இது நடத்தப்பட்டது. இதுவரை 1000 பேர் வரை ரத்ததானம் அளித்துள்ளனர். ஏழைகளுக்கு அன்னதான நிகழ்ச்சியும் நடந்தது.

நடிகர், நடிகைகள் பலர் அவருக்கு வாழ்த்து செய்திகள் அனுப்பி இருந்தனர்.

பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்து சூர்யா கூறுகையில், "கடந்த ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக ‘மாற்றான்' ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தேன். வேறு எதிலும் கவனம் செலுத்தக் கூட நேரமில்லை. குடும்பத்தை ரொம்ப மிஸ் பண்ணிட்டேன். அதனால் பிறந்த நாளையொட்டி இன்று முழுவதும் அவர்களுடன் இருப்பேன் என்றார்.

இந்த நாளை என்னைவிட ஆர்வத்துடனும் அர்த்தமுள்ளதாகவும் கொண்டாடி வரும் என் ரசிகர்களுக்கு அன்பும் நன்றிகளும்," என்றார் சூர்யா.

 

வெற்றி தோல்வி என் கையில் இல்லை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஒரு படத்தின் வெற்றி தோல்வி என்பது என் கையில் இல்லை என்று ஸ்ருதி ஹாசன் கூறினார். இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது: தெலுங்கில் நான் நடித்த 'கப்பார் சிங்' பெரிய வெற்றிபெற்றுள்ளது. இது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் படங்களின் வெற்றி தோல்வி என்பது என் கையில் இல்லை. வாய்ப்பு வரும்போது எனது கேரக்டரை எப்படி சிறப்பாகச் செய்யலாம் என்றுதான் பார்க்கிறேன். கமல்ஹாசனின் மகளாக இருப்பதால்தான் சினிமா என்ட்ரி ஈசியாக நடந்ததா என்று கேட்கிறார்கள். அது ஒரு வகையில் உண்மைதான். ஆனால், இந்த துறையில் நிலைத்து நிற்க வேண்டும் என்றால் திறமை வேண்டும். என் நடிப்பு திறமையை ரசிகர்கள் ஏற்க வேண்டும். அந்த வகையில் இதுவரை நான் நடித்த படங்கள் எல்லாமே அதை நிரூபித்துள்ளன. 'தபாங்' ரீமேக்தான் தெலுங்கில் எனக்கு பெரிய ஹிட் தந்துள்ளது. இதையடுத்தும் ரீமேக்கில்தான் நடிக்க இருக்கிறேன். பிரபுதேவா தெலுங்கில் இயக்குனராக அறிமுகமான, 'நுவ்வொஸ்தானன்டே நேனொத்தன்டனா' (தமிழில் 'உனக்கும் எனக்கும்') படம் சூப்பர் ஹிட்டானது. இதை இப்போது இந்தியில் ரீமேக் செய்கிறார் பிரபுதேவா. இதில் த்ரிஷா நடித்த கேரக்டரில் நடிக்கிறேன்.


 

இயக்குனருக்கு உதவிய வங்காள நடிகை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
திருநல்லான் பிலிம்ஸ் தயாரிக்கும் படம் 'என் பெயர் குமாரசாமி'. ராம், வங்காள நடிகை தேவ்தா இராவதி, ராதாரவி, பானுப்ரியா உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு பொருளாதாரப் பிரச்னை ஏற்பட்டபோது ஹீரோயின் பணம் கொடுத்து உதவியதாக, இயக்குனர் ரதன் சந்திரசேகர் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: பாசம் அளவுக்கு மீறும்போது அது எத்தகைய விபரீதங்களை ஏற்படுத்தும் என்பதை திகிலாக சொல்லும் படம் இது. இதன் ஹீரோயின் தேவ்தா, இந்தி, வங்காளம், நேபாள மொழிகளில் பல படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். தமிழில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தாலும், கதை பிடித்திருந்ததாலும் இதில் நடிக்க ஒப்புக் கொண்டார். இது, என் நண்பர்கள் இணைந்து தயாரிக்கும் படம். ஒரு கட்டத்தில் பொருளாதார சிக்கல் ஏற்பட்டது. நாங்கள் திணறியபோது அதைக் கேள்விப்பட்ட தேவ்தா,  சில லட்சங்களை கொடுத்து 'படத்தை முடியுங்கள். பிறகு வாங்கிக் கொள்கிறேன்' என்றார். படப்பிடிப்பு முடிந்துவிட்டாலும் பணத்தை கேட்கவே இல்லை. தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க முடிவு செய்திருப்பதாகக் கூறியிருக்கிறார்.


 

தமிழில் கவனம் பிந்து மாதவி முடிவு

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
இனி தமிழில் மட்டுமே கவனம் செலுத்த இருப்பதாக பிந்து மாதவி கூறினார். அவர் மேலும் கூறியதாவது: 'சட்டம் ஒரு இருட்டறை' ரீமேக்கில் நடித்துவருகிறேன். புதுமுகம் தமன் ஹீரோ. அடுத்து பாண்டிராஜ் இயக்கும், 'கேடி பில்லா கில்லாடி ரங்கா'வில் விமல் ஜோடியாக நடிக்கிறேன். தொடர்ந்து சில வாய்ப்புகள் வந்துள்ளன. அதுபற்றிய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இனி தமிழில் மட்டுமே கவனம் செலுத்த முடிவு செய்துள்ளேன். தெலுங்கில் படங்கள் ஒப்புக்கொள்ளவில்லை.


 

ஜஸ் பெட்ரூமில் புகுந்த 20வயது வாலிபர்

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
மும்பை ஜுஹூ பகுதியில் உள்ளது பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் பங்களாவான 'ஜல்சா'. இங்குதான் அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராயும் வசிக்கின்றனர். இந்த வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இவரது வீட்டுக்குள் தீபக் கேவட் (20) என்ற நபர் நுழைந்தார். காம்பவுண்டையொட்டி உள்ள மரத்தின் மீது ஏறி பிறகு மழை நீர் தடுப்புக்காக போடப்பட்டிருந்த தகர கூரை வழியாக பால்கனிக்கு சென்றார். அங்கிருந்து அமிதாப்பச்சனின் பெட் ரூமிற்குள் நுழைந்தார். மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் இருப்பதை பார்த்த வேலைக்கார பெண் 'திருடன், திருடன்' என்ற சத்தம்போட்டார். உடனே காவலர்கள் ஓடிவந்து அவரை பிடித்து ஜுஹூ போலீசில் ஒப்படைத்தனர். அவரிடமிருந்து ரூ.8 ஆயிரம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. மர்ம நபரிடம் கேட்டபோது, 'நான் அமிதாப்பச்சன் ரசிகர் அவரை நேரில் பார்க்கும் ஆசையால் வீட்டுக்குள் நுழைந்தேன்' என்றார்.

இதுபற்றி கூடுதல் கமிஷனர் விஸ்வாஸ் நாரே பட்டில் கூறும்போது, 'பிடிபட்ட தீபக் கேவட் மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர். மும்பைக்கு வேலை தேடி ஒன்றரை மாதத்துக்கு முன்பு வந்திருக்கிறார். ரயில்வே பிளாட்பாரத்தில் தங்கி இருந்திருக்கிறார். ஒருவரை தாக்கியதாக அவர் மீது ஏற்கனவே வழக்கு பதிவாகி உள்ளது. வேறு வழக்கில் தொடர்புடையவரா என்பது பற்றி விசாரிக்கிறோம். மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட அவர் 15 நாள் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். அமிதாப்பச்சன் வீட்டுக்குள் நுழைந்ததற்கு வேறு நோக்கம் எதுவும் உள்ளதா என்பது பற்றியும் விசாரணை நடந்து வருகிறது' என்றார். சம்பவம் நடந்தபோது வீட்டில் அமிதாப், ஐஸ் இருந்தார்களாக என்பதை தெரிவிக்க போலீசார் மறுத்துவிட்டனர்.

இதுபற்றி அமிதாப்பச்சன் டுவிட்டர் பக்கத்தில், 'பிடிபட்ட நபர் திருட்டு தொழிலில் கைதேர்ந்தவர்போல் தெரிகிறது. இதுபற்றி தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். எதுவும் பாதுகாப்பாக இல்லை என்பதை இந்த சம்பவம் வெளிப்படுத்துகிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.


 

கிசு கிசு - நக்கல் செய்யும் ஹீரோ

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

'சீட்டா' பட இயக்குனர் தல ஹீரோகிட்ட கதை  சொன்னாராம்... சொன்னாராம்... ஆனா புது படத்தோட ஸ்கிரிப்ட்ல திருப்தி அடையலையாம். இயக்கத்த போன்ல கூப்பிட்ட ஹீரோ, 'ஸ்கிரிப்ட்ட இன்னும் பெட்டரா டெவலப் பண்ணுங்கÕன்னு சொல்லிட்டாராம். இதையடுத்து இயக்கம் ஸ்கிரிப்ட்டை டெவலப் பண்றதுக்காக ரூம்போட்டு தீவிர டிஸ்கஷன் நடத்துறாராம்... நடத்துறாராம்...

சமந்த ஹீரோயின் டோலிவுட் ஹீரோ மகேஷானவரோடு நட¢பா பழகுறாராம்... பழகுறாராம்... இண்டஸ்ட்ரில யார்கிட்ட எப்படி பழகணும்னு ஹீரோ ஐடியா கொடுக்க¤றாராம். அவரோட டிப்ஸ வேதவாக்கா எடுத்துகிட்டு அப்படியே பாலோ பண்றாராம் ஹீரோயின். அதோட டாப் இடத்த பிடிச்சி பிஸியாயிட்டாலும் மகேஷ படத்துக்கு மட்டும் கால்ஷீட் மறுக்க மாட்டேனு வாக்கு கொடுத்திருக்காராம்... கொடுத்திருக்காராம்...

நமீ ஹீரோயின்கிட்ட பாலிடிக்ஸல என்ட¢ராவீங்களானு கேட்டா உச்ச ஸ்டார் பாணில 'நாளைக்கு என்ன நடக்கும்Õனு தெரியாதுனு பதில் சொல்றாராம்... சொல்றாராம்... அதேபாணில சகுனி ஹீரோயின் பிரணித நடிகைகிட்ட கேட்டப்போ, 'நா வர்றைதவிட காட்டன் வீர ஹீரோ வந்தா நல்லது செய்வாருÕனு பதில் சொல்றாராம். இதைகேள்விபட்ட நடிகரு, 'என்னை வம்புல மாட்டிவிட அம்மணி எத்தனை நாளா யோசனை பண்ணிட்டிருந்தாங்கÕனு நக்கலா கேக்குறாராம்... கேக்குறாராம்..


 

அனுஷ்கா கால்ஷீட் வீணாக்கிவிட்டேனா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
அனுஷ்கா கால்ஷீட்டை வீணாக்கவிட்டேன் எனக்கூறுவது உண்மையல்ல என்றார் செல்வராகவன். செல்வராகன் இயக்கும் படம் 'இரண்டாம் உலகம்Õ. ஆர்யா ஹீரோ. அனுஷ்கா ஹீரோயின். இப்படத்தின் ஷூட்டிங் ஜார்ஜியா நாட்டில் நடந்து வருகிறது. ஏற்கனவே சுராஜ் இயக்கும் Ôஅலெக்ஸ் பாண்டியன்Õ படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்து வருகிறார் அனுஷ்கா. இதற்கிடையில் செல்வராகவன் பட ஷூட்டிங்கிற்காக அனுஷ்கா ஜார்ஜியா சென்றுவிட்டார். மாதக்கணக்கில் செல்வராகவன் ஷூட்டிங் நடத்துவதுடன் பல நாட்கள் ஷூட்டிங் நடத்தாமல் கால்ஷீட் வீணாக்கிவிட்டாராம். இதனால் Ôஅலெக்ஸ் பாண்டியன்Õ பட ஷூட்டிங்கில் அனுஷ்கா பங்கேற்க முடியாமல் இருக்கிறார். அவர் வராதததால் இப்பட ஷூட்டிங் பாதித்திருக்கிறது என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது. இதையறிந்த செல்வராகவன் கோபம் அடைந் தார். ÔÔயார் கால்ஷீட்டையும் நான் வீணாக்கவில்லைÕÕ என்று அவர் குறிப்பிட்டார். இது பற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் எழுதி இருப்பதாவது:

Ôஇரண்டாம் உலகம்Õ ஷூட்டிங்கில் அனுஷ்கா உள்ளிட்டவர்கள் கால்ஷீட்டை நான் வீணாக்கிவிட்டதாக சொல்கிறார்கள். இது அடிப்படையற்ற பேச்சு. சொல்லப்போனால் நாங்கள் திட்டமிட்டதைவிட வேகமாக ஷூட்டிங் நடத்தி வருகிறோம். மேலும் ஆர்யா, அனுஷ்காவிடம் அதிக நாட்கள் கால்ஷீட் தேவைப்பட்டதால் அதற்காக காத்திருந்துதான் பெற்றேன். யாருடைய கால்ஷீட்டையும் நான் வீணாக்கில்லை. இவ்வாறு செல்வராகவன் தெரிவித்தார்.


 

ரஜினி&கமல் படம் டிஜிட்டலுக்கு மாறுகிறது

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ரஜினி, கமல் நடித்த படத்தை மறுரிலீஸ் செய்ய டிஜிட்டலுக்கு மாற்றும் பணி நடக்கிறது. '16 வயதினிலேÕ, 'அவர்கள்Õ உள்ளிட்ட படங்களில் பல ஆண்டுகளுக்கு முன் இணைந்து நடித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன் மீண்டும் இணைந்து நடிக்கவில்லை. அவர்களை இணைத்து படம் இயக்கும் முயற்சிகள் தோல்வி அடைந்தன. இதையடுத்து கே.பாலசந்தர் இயக்கத்தில் 1977ம் ஆண்டு ரஜினி, கமல் இணைந்து நடித்த 'நினைத்தாலே இனிக்கும்Õ படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். சிவாஜி நடித்த 'கர்ணன்Õ படம் சமீபத்தில் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. 100 நாட்கள் கடந்து ஓடி வெற்றி பெற்றது. இதுவே ரஜினி, கமல் படத்தை ரீ ரிலீஸ் செய்வதற்கு அடிப்படையாக அமைந்தது. 'நினைத்தாலே இனிக்கும்Õ படத் தின் பழைய நெகடிவ் நவீன டிஜிட்டல் முறையில் மாற்றப்படுகிறது. அதற்கான பணிகள் தொடங்கி உள்ளன.

கமல் நடத்தும் இசைக் குழுவில் கிடார் இசை கலைஞராக இருக்கிறார் ரஜினி. இதற்கிடையில் இந்த குழுவில் இடம்பிடிக்கிறார் ஜெயப்பிரதா. கமலுக்கும், ஜெயப்பிரதாவுக்கும் காதல் மலர்கிறது. இவர்கள் காதல் நிறைவேறுகிறதா என்பதுதான் இப்படத்தின் கதை. கிடார் கலைஞராக வரும் ரஜினி நகைச்சுவை காட்சிகளிலும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


 

படம் அகிறது கோட்சே வாழ்க்கை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவின் வாழ்க்கையை திரைப்படமாக இயக்குகிறார் ஷாஜி கைலாஷ். கோட்சேவாக பிருத்விராஜ் நடிக்கிறார். இதுபற்றி ஷாஜி கைலாஷ் கூறியதாவது: கோட்சே பற்றி படம் இயக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு. இதன் திரைக்கதையை பல வருடங்களுக்கு முன்பே எழுதிவிட்டேன். இப்போதுதான் அதை இயக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது. படத்தின் பெயரும் 'கோட்சே'தான். கோட்சே காந்தியை சுட்டுக் கொல்வதற்கு முந்தைய அவன் வாழ்க்கை, அவனது குணநலன்கள், குடும்பம், அவனது கூட்டாளிகள், அவனது சைக்காலஜி ஆகியவற்றைக் அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைத்து இயக்குகிறேன். பிருத்விராஜ் தவிர மற்றவர்கள் புதியவர்கள். ஒரே திரைப்படத்துக்குள் 5 கதைகள் சொல்லும் முயற்சி இது. அதில் ஒன்றுதான் கோட்சே. இன்னொரு கதை, நக்சலைட்டுகள் பற்றியது. மற்றது மாவோயிஸ்டுகள் பற்றியது. மற்ற இரண்டு கதைகள் பற்றி இப்போது சொல்ல இயலாது. 5 கதைகளும் இணைந்து ஒரே திரைப்படமாக வெளிவரும். இந்தப் படத்துக்குப் பிறகு தமிழ்ப் படம் ஒன்றை இயக்க இருக்கிறேன்.


 

தமிழில் இயக்குனரானார் இந்தி எடிட்டர்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இந்தி படங்களுக்கு எடிட்டராக பணிபுரிந்த ரஞ்சித் போஸ், 'மடிசார் மாமி' படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இதுபற்றி ரஞ்சித் போஸ் கூறியதாவது: இந்தியில் சல்மான் கான் நடித்த 'லக்கி', பர்தீன் கான் நடித்த 'ஜானாசீன்', சோகைல்கான் நடித்த 'ஆர்யன்' உட்பட 27 படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியுள்ளேன். இந்தியில் உருவான 'சாஞ்சா' என்ற படத்துக்கு எடிட்டிங் செய்யும்போது அதன் தயாரிப்பாளர் விவேக் தீஷ்சித் தமிழில் படம் பண்ண இருக்கிறேன். நல்ல கதை இருந்தால் சொல்லுங்கள் என்றார். 'மடிசார் மாமி' கதையை சொன்னேன். பிடித்திருந்தது. ஷூட்டிங் ஆரம்பித்து முடித்துவிட்டோம். இது காமெடி படம். நல்ல மெசேஜும் படத்தில் இருக்கிறது. மிதுன், ரிஷி, மான்சி, புனீத் உட்பட பலர் நடித்துள்ளனர். விரைவில் பாடல் வெளியீடு இருக்கிறது. இதையடுத்து அனிமேஷன் படம் ஒன்றை இயக்குகிறேன். இது முழுக்க முழுக்க வித்தியாசமான முயற்சி. இதில் நடிக்க முன்னணி ஹீரோ ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன்.


 

சென்டிமென்ட் இல்லாத சினிமா எங்கே?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
எம்.கே.என்டர்பிரைசஸ், நேசிகா திரையரங்கம் இணைந்து தயாரிக்கும் படம் 'பாண்டி ஒலிபெருக்கி நிலையம்'. சபரீஷ், சுனேனா, கருணாஸ், தம்பி ராமையா, சிங்கம்புலி நடிக்கிறார்கள். கவி.பெரியதம்பி இசை அமைத்துள்ளார். ராசு மதுரவன் இயக்கியுள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில்  நடந்தது. தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சவுத்ரி, பி.எல்.தேனப்பன், கதிரேசன், மன்னன், இயக்குனர்கள் வெற்றிமாறன், பிரபுசாலமன், கிச்சா, எழில், ரவிமரியா உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர், ராசு மதுரவன் கூறியதாவது: திண்டுக்கல்லில் ஒலிபெருக்கி நிலையம் நடத்தும் ஒருவன் வாழ்க்கையில் எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்கிறது. அது அவனது பாதையை எப்படி திருப்பி போடுகிறது என்பதுதான் கதை. காமெடி, காதல், ஆக்ஷன் கலந்த கமர்சியல் கதை. என்றாலும் சென்டிமென்டும் இருக்கும். எனது படங்களில் சென்டிமென்ட் இருப்பதற்கு காரணம், அது இல்லாமல் வாழ்க்கை இல்லை. வாழ்க்கையின் பிரதிபலிப்புதான் சினிமா. அனிமேஷன், கிராபிக்ஸ் படங்களில்கூட சென்டிமென்டே பிரதானமாக இருக்கும்.


 

வித்தியாச கேரக்டர் கேகே ஆர்வம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'பில்லா 2' படத்தில் வில்லனாக நடித்திருக்கும் கே.கே., கூறியதாவது: தமிழில் 'தெய்வதிருமகள்'தான் என்னை அடையாளம் காட்டியது. 'பில்லா 2'வில் வில்லன்களில் ஒருவனாக நடித்தேன். படத்தில் அஜீத் என்னை கொல்லும் காட்சியில் நடித்தபோது என் காலில் கத்திபட்டு காயம் ஏற்பட்டது. பின்னர் கேரவனில் ஓய்வெடுத்தேன். அங்கு வந்த அஜீத், என் காயத்துக்கு அவர் கொண்டு வந்திருந்த மருந்தை தடவி, கட்டுப்போட்டார். இதை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. தற்போது, 'துப்பாக்கி' யில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறேன். மலையாளத்தில் மோகன்லாலுடன் 'ரன் பேபி ரன்', ரேவதியுடன் 'மோழி ஆண்டி ராக்ஸ்' படங்களில் நடித்துவருகிறேன். தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன். வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க ஆர்வமாக உள்ளேன்.


 

டுவிட்டர், பேஸ்புக்கில் நான் இல்லை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் நான் இல்லை. என் பெயரை பயன்படுத்தி மோசடி செய்கிறார்கள்' என்று அசின் கூறினார். இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது: என்னை பற்றி பெருமையடித்துக் கொள்வதை நான் விரும்பவில்லை. அதுமட்டுமில்லாமல் மற்றவர்களைப் போல எனது தனிப்பட்ட விஷயங்களை வெளிப்படுத்திக் கொள்வதையும் விரும்பவில்லை. டுவிட்டர், பேஸ்புக்கில் இணைந்திருப்பதால் பலருக்கு ஆதாயம் கிடைக்கலாம். ஆனால் எனக்கு அதில் உடன்பாடில்லை. நான் அமைதியாக இருக்க நினைப்பவள். அதனால் என் வாழ்வில் ஒவ்வொரு நொடியும் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதை உடனுக்குடன் வலையேற்றிக் கொண்டிருக்க முடியாது. அதனால் சமூக வலைத்தளங்களில் நான் இணைய வில்லை. ஆனால், எனது பெயரில் பல கணக்குகள் டுவிட்டரில் காண கிடைக்கிறது. எனது படங்களை வெளியிட்டு நான் செல்கிற விழாக்களின் படங்களையும் வெளியிட்டு நானே அப்டேட் செய்வதை போல சிலர் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இது வருத்தமாக இருக்கிறது.


 

'பீட்டா'வுக்காக 'ஆடை துறந்த' ஜெஸ்ஸிகா ஜேன்!

Jessica Jane Bares In Peta Ad

பிரபல பிரிட்டிஷ் மாடலும், ஆங்கிலப் பட நடிகையுமான ஜெஸ்ஸிகா ஜேன், சமீபத்தில் நிர்வாண போஸ் கொடுத்து பரபரப்பு கிளப்பியுள்ளார்.

பீட்டா (People for the Ethical Treatment of Animals) எனும் விலங்குகள் வதைக்கு எதிரான அமைப்பின் ஒரு விளம்பரத்துக்காகத்தான் இந்த போஸ்.

ஆடைகளை முற்றாக களைந்துவிட்டு, மார்பின் மீது ஒரு முயலை (அதுக்கு பேர் சாம்மி!) வைத்தபடி அவர் கொடுத்துள்ள போஸ்தான் இன்று மேற்கத்திய மீடியாக்களில் பரபரப்பாக வலம் வருகிறது.

ஐரோப்பிய யூனியனில் விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் காஸ்மெடிக் பொருட்களை தடை செய்ய வேண்டும் என்றும், இந்தத் தடைக்கு குறிக்கப்பட்டிருக்கும் டெட்லைனான 2013-ஐ எக்காரணம் கொண்டும் ஒத்திப் போடக் கூடாது என்றும் வலியுறுத்தி இன்னொரு விளம்பரத்தில் போஸ் கொடுத்துள்ளார் ஜெஸ்ஸிகா.

முயல்களின் கொழுப்பு மற்றும் சதையைப் பயன்படுத்தி சில பொருட்கள் தயாரிக்கப்படுவதால், இனி முயல்கள் எக்காரணம் கொண்டும் வதைபடக் கூடாது என்பதை உணர்த்தவே, முயலை இந்த விளம்பரத்தில் தன் உடல்மீது ஓட விட்டாராம்!

விலங்குகளை வதைக்காதீர்கள் என்று கூறிக் கொண்டு மனிதர்களை வதைக்கிறாரே அம்மணி.. நியாயமா!!

 

என் மகன் ஜீவாவின் தீவிர ரசிகன்: விஜய்

My Son S Big Fan Jiiva Vijay

முகமூடி இசை வெளியீட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விஜய் தனது மகன் சஞ்சய் ஜீவாவின் தீவிர ரசிகன் என்று தெரிவித்தார்.

ஜீவா, பூஜா ஹெக்டே, நாசர், செல்வா, கிரீஷ் கர்னாட் நடிக்க, மிஷ்கின் இயக்கியுள்ள படம் முகமூடி. அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 20ம் தேதி சென்னையில் உள்ள சத்யம் சினிமாஸில் நடந்தது. விழாவில் விஜய் மற்றும் கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இசை சிடியை விஜய் வெளியிட புனித் ராஜ்குமார் பெற்றுக் கொண்டார்.

இந்த விழா நடந்த அரங்கிற்குள் விஜய் நுழைந்தது முதல் மேடையில் அமரும் வரை அவரது ரசிகர்கள் விசில் அடித்தும், கை தட்டியும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். அது ஜீவா நடித்துள்ள படத்தின் இசை வெளியீடு என்பதை அனைவரும் மறந்துவிட்டனர். மேடையில் பேசியவர்கள் கூட ஜீவாவை மறந்துவிட்டு விஜய் பற்றியே பேசினர். உடனே சுதாரி்த்துக் கொண்ட விஜய் பேச வந்தார்.

அப்போது அவர் கூறுகையில், என் மகன் சஞ்சய் ஜீவாவின் தீவிர ரசிகன். எனக்கு ஜீவாவை ஒரு மனிதனாகவும், நடிகராகவும் மிகவும் பிடிக்கும். என் மகனைப் போன்று நானும் முகமூடி படத்தைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன் என்றார்.

விழாவில் கலந்து கொண்டவர்கள் விஜயைப் புகழ்ந்து பேசினாலும் விழா நாயகன் ஜீவா சிரித்த முகத்தோடு அமைதியாக உட்கார்ந்திருந்தார்.

 

'ஆளவந்தானுக்கு' கிடைத்த ஹாலிவுட் அங்கீகாரம்.. கமல் பெருமிதம்!

Alavanthan Gets Pat From Hollywood

கமல்ஹாசனின் வித்தியாசமான நடிப்பில் வெளியான ஆளவந்தான் படத்திற்கு ஹாலிவுட்டிலிருந்து சத்தம் போடாமல் ஒரு அரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. தன்னை அப்போது கடுமையாக விமர்சித்த விமர்சகர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பதில் இது என்று கமல்ஹாசன் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

2001ம் ஆண்டு வெளியான ஆக்ஷன் திரில்லர் படம்தான் ஆளவந்தான். சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான படம். ஆனால் படம் முழுக்க கமல்ஹாசனின் உத்திகள், யோசனைகள், முயற்சிகளே தலை தூக்கியிருந்தன. கமல்ஹாசன் வில்லன் மற்றும் கதாநாயகன் வேடத்தில் நடித்திருந்தார். அதிலும் வில்லனாக நடிக்க அவர் தனது உடம்பை மிகப் பெரிய அளவில் எடை கூட்டியிருந்தார். இந்த எடை கூட்டல் முயற்சிகள் அவரது உடல் நலனில் பாதிப்பை ஏற்படுத்தியதாகக் கூட அப்போது பேசப்பட்டது.

ரவீனா டாண்டன், மனீஷா கொய்ராலா உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படத்திற்கு சங்கர் ஈசான் லாய் இசையமைத்திருந்தனர். பின்னணி இசையை மகேஷ் மகாதேவன் கவனித்திருந்தார்.

இப்படத்தின் கதை கமல்ஹாசனுடையது. 1984ம் ஆண்டு அவர் எழுதிய தாயம் கதையை அடிப்படையாக வைத்துத்தான் இப்படத்தின் திரைக்கதையை அமைத்திருந்தார் கமல்ஹாசன்.

இப்படத்தில் வில்லனாக வரும் கமல்ஹாசனின் சண்டைக் காட்சிகள் வித்தியாசமான முறையில் அதாவது கிராபிக்ஸில் எடுக்கப்பட்டிருந்தன. அது அப்போது பலராலும் பாராட்டப்பட்டது. அதேசமயம், இப்படம் பல விமர்சனங்களையும் கூட சந்தித்தது. ஆனால் அதுகுறித்து அப்போதும் சரி, பிறகும் சரி கமல்ஹாசன் அலட்டிக் கொள்ளவே இல்லை.

இந்த நிலையில் ஆளவந்தான் படத்திற்கு ஹாலிவுட்டிலிருந்து ஒரு அரிய ஊக்கம் கிடைத்துள்ளது. அதாவது இப்படத்தில் வில்லனின் சண்டைக் காட்சிகள் வடிவமைப்பை பார்த்து அசந்து போன ஹாலிவுட் டைரக்டர் குவென்டைன் டரன்டினோ தனது கில் பில் (Kill bill) திரைப்பட வரிசையில் காட்சிகளை அமைத்தாராம்.

இந்தத் திரைப்படம் 2003ம் ஆண்டு உருவானதாகும். ஆனால் படம் நீளமாக இருந்ததால் அதை இரண்டு பகுதிகளாகப் பிரித்து முதல் பதிப்பை 2003லும், இரண்டாம் பாகத்தை 2004ம் ஆண்டிலும் வெளியிட்டார் குவென்டைன். தனது 3வது பாகத்தை 2014ல் வெளியிடவுள்ளார்

ஆளவந்தான் படத்தில் இடம் பெற்ற அந்த வித்தியாசமான கிராபிக்ஸில் அமைந்த சண்டைக் காட்சிகள் புதிய முயற்சி என்று புகழாரம் சூட்டிய அவர் அதே பாணியில் தனது படத்திலும் காட்சிகளை அமைத்துள்ளாராம். இதற்காக ஆளவந்தான் படத்தையும், கமல்ஹாசனையும் அவர் பாராட்டியுள்ளாராம்.

சமீபத்தில் மும்பை வந்திருந்த அவர் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்பை சந்தித்துப் பேசியபோது இதுகுறித்துக் கூறினாராம் குவன்டைன்.

குவன்டைன் ஹாலிவுட்டில், பல்ப் பிக்ஷன், இன்க்ளோரியஸ் பாஸ்டர்ட்ஸ், ரிசர்வாயர் டாக்ஸ் உள்ளிட்டப் படங்களை இயக்கியுள்ளார்.

ஒரு தமிழ்ப் படத்தைப் பார்த்து ஹாலிவுட்டில் காட்சி அமைக்கப்பட்டிருப்பது குறித்து கமல்ஹாசன் கூறுகையில், ஆளவந்தான் வந்தபோது அதற்கு பல விமர்சனங்கள், சலசலப்புகள். விநோதமாக பார்த்தனர், பேசினர். எனது சுய மேதமையை வெளிப்படுத்த முயற்சித்துள்ளதாக விமர்சித்தனர். ஆனால் இப்போது திறமையான ஒரு ஹாலிவுட் டைரக்டரே இந்த உத்திக்கு அங்கீகாரம் அளித்துள்ளதால், இனி மேலாவது விமர்சகர்கள் என்னுடைய படங்களில் நான் மேற்கொண்ட முயற்சிகளை சரிவர புரி்ந்து கொள்வார்கள் என கருதுகிறேன் என்று கூறினார்.

ஆளவந்தானால் தான் மிகப் பெரிய நஷ்டத்தை சந்தித்து விட்டதாக பின்னர் இப்படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி தாணு புலம்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.