ஐ ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சொதப்பினாலும், அதில் வெளியான ட்ரைலரை வாழ்த்தி வரவேற்ற அத்தனை விவிஐபிக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார் ஷங்கர்.
ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் விக்ரம், ஏமி ஜாக்சன் உள்ளிட்டவர்கள் நடிக்க ஷங்கர் இயக்கி இருக்கும் படம் 'ஐ'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
'ஐ' டீஸர் வெளியான அன்று, தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலரும் தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து இயக்குநர் ஷங்கர் மற்றும் விக்ரமுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்கள். இப்போது கிட்டத்தட்ட ஒரு கோடி பார்வையாளர்களை நெருங்குகிறது ஐ ட்ரைலர்.
இதற்காக இயக்குநர் ஷங்கர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
"இயக்குநர் ராஜமெளலி, தனுஷ், சிவகார்த்திகேயன், சித்தார்த், கார்த்திக் சுப்புராஜ், பாலாஜி மோகன், செளந்தர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட 'ஐ' டீஸரை குறிப்பிட்டு பாராட்டிய அனைவருக்கும் நன்றி" என்று இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
'ஐ' தமிழ் பதிப்பின் இசை வெளியீட்டைத் தொடர்ந்து, தெலுங்கு மற்றும் இந்தி பதிப்பின் இசை வெளியீடு விரைவில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கு இசையை ஜாக்கி சானும், இந்தி இசையை சில்வஸ்டர் ஸ்டெல்லோனும் வெளியிடப் போகிறார்களாம்.