எங்கள் நட்பை யாரும் பிரிக்க முடியாது!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

எங்கள் நட்பை யாரும் பிரிக்க முடியாது!

12/21/2010 12:33:24 PM

டிவி நிகழ்ச்சி முதல் தாங்கள் இயக்கும் படங்கள் வரை சசிக்குமார், சமுத்திரக்கனி இருவரும் பிரிந்து வந்ததே கிடையாது. போட்டிகள் நிறைந்த தமிழ் சினிமாவில் இவர்களின் நட்பு பலருக்கு படமாக விளங்கி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் இவர்களது நட்பில் பிரிவு ஏற்படுத்த முயிற்சிகளை பலர் எடுத்து வருவதாக தெரிகிறது. இதனையை சமுத்திரக்கனியும் சுசகமாக ஒப்புக் கொண்டுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, 'சசிகுமார், ஒளிப்பதிவாளர் கதிர், நான் மூவரும் நெருங்கிய நண்பர்கள். எங்களுக்குள் பிரிவு ஏற்படுத்த நடந்த முயற்சிகள் தோற்றுவிட்டனÕ என்று சமுத்திரக்கனி கூறினார்.

Source: Dinakaran
 
லண்டன் அருங்காட்சியகத்தில் ரஜினிக்கு மெழுகுச் சிலை!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

லண்டன் அருங்காட்சியகத்தில் ரஜினிக்கு மெழுகுச் சிலை!

12/21/2010 10:33:38 AM

சில முன்னணி செய்தி இணையதளங்கள் ரஜினிக்கு மெழுகுச் சிலை வைக்கக் கோரி கட்டுரைகள் வெளியிட்டும், வாசகர் கருத்துக்கணிப்பை நடத்தியும் வருகின்றன. இணையதளங்கள், மின்னஞ்சல்கள் மூலம் குவியும் கோரிக்கைகளை அடுத்து, இதனைப் பரிசீலித்து ரஜினிக்கு மெழுகுச்சிலை அமைக்க மேடம் டுஸ்ஸாட்ஸ் நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. இந்தியாவிலிருந்து ஏற்கெனவே அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கு லண்டன் மியூசியத்தில் மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது.

10 ஆண்டுகளுக்கு முன்பே, இந்த மியூசியத்தில் ரஜினியின் மெழுகுச் சிலை இடம்பெற வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. குறிப்பாக ரஜினியின் சிவாஜி படம் உலகளவில் பிரபலமடைந்து சக்கைப் போடு போட்டபோது, ‘பெட்டிஷன் ஆன்லைன்’ போன்ற பிரபல இணையதளங்கள் மூலம் ரசிகர்களும் பிரபலங்களும் இந்தக் கோரிக்கையை வைத்தனர்.

இதுகுறித்து இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் கூறுகையில், “ரஜினி சாருக்கு மெழுகுச் சிலை வைப்பதன் மூலம் அந்த மியூசியத்துக்குதான் பெருமை. ரஜினி சார் சிலை அங்கே வைக்கப்பட்ட பிறகு பாருங்கள்… வழக்கமாக வரும் கூட்டத்தை விட இருமடங்கு கூட்டம் வரும். அப்புறம்தான் அவர்களுக்கே தெரியும்… நாம் ரொம்ப லேட் பண்ணிட்டோமே.. உலகளாவிய ஒரு சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினிதான்” என்றார்.

இயக்குநர் எஸ்பி முத்துராமன் கூறுகையில், “ரஜினி சாருக்கு மெழுகுச் சிலை வைப்பதற்கு இது பொருத்தமான நேரம்தான். அவரைப் போன்ற சிறந்த மனிதர் – கலைஞர் எவருமில்லை…” என்றார்.

லண்டன் அருங்காட்சியகத்தில் ரஜினிக்கு மெழுகுச் சிலை!

Source: Dinakaran
 
திருவிழா பாடல்கள் மட்டும் தான் ஹிட்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

திருவிழா பாடல்கள் மட்டும் தான் ஹிட்!

12/21/2010 12:50:07 PM

இதுவரை மூன்று படங்களை இயக்கி வெங்கட் பிரபு தற்போது தல அஜீத்துடன் இணைந்துள்ளார். மாங்காத்தா படப்பிடிப்பு படுவேகமாக நடந்து வரும் நிலையில் யுவனுடன் சேர்ந்து அவ்வபோது சாங் கம்போஸிங்கில் ஈடுபட்டு வருகிறார். மேலும் மாங்காத்தா படத்தில் குத்து பாடல் வேண்டாம் என்று வெங்கட் பிரபு கூறியதாக தெரிகிறது. அதற்கு பதிலாக திருவிழா பாடல் ஒன்றை யுவனின் வெங்கட் பிரபு கேட்டதாக தெரிகிறது. இதனையை நிரூபிக்கும் வகையில் விழா ஒன்றில் பேசிய வெங்கட் பிரபு 'குத்துப் பாடல்களைவிட திருவிழா பாடல்கள்தான் இந்த ஆண்டு நல்ல வரவேற்பை பெற்றதுÕ என்று கூறினாராம். எது எப்படியோ தல பாட்டு ஹிட்டான சரி…

திருவிழா பாடல்கள் மட்டும் தான் ஹிட்! திருவிழா பாடல்கள் மட்டும் தான் ஹிட்! திருவிழா பாடல்கள் மட்டும் தான் ஹிட்!

Source: Dinakaran
 
நிதி திரட்ட த்ரிஷாவின் காலண்டர்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

நிதி திரட்ட த்ரிஷாவின் காலண்டர்

12/21/2010 12:56:16 PM

பொது சேவையில் நடிகை நமீதா ஈடுப்பட்டு வருவது போல, நடிகை த்ரிஷாவும் பொது சேவை ஈடுபட தொடங்கியுள்ளாராம். தன்னுடைய ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய த்ரிஷா, கேன்சர் குழந்தைகளுக்காக நிதி திரட்ட முன்வந்துள்ளதாக தெரிகிறது. மேலும் கேன்சர் குழந்தைகளுக்காக நிதி திரட்ட தன்னுடைய ரசிகர் மன்றம் சார்பில் த்ரிஷாவின் வெவ்வேறு போஸ்கள் அடங்கிய காலண்டர் வெளிவரவுள்ளதாம். அதில் கிடைக்கும் பணத்தை கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்க முடிவு செய்திருக்கிறார் த்ரிஷா.

Source: Dinakaran
 
ரஜினி முன்னிலையில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ரஜினி முன்னிலையில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி

12/21/2010 1:01:35 PM

நடிகர் ரஜினிகாந்த் முன்னிலையில் 4 மாநில சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி நடக்கிறது என்றார் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார். சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது: தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய 4 மொழி பட கலைஞர்களும் பங்கேற்கும் செல¤ப்ரிட்டி கிரிக்கெட் லீக் (சிசிஎல்) போட்டி வரும் ஜனவரி மாதம் 22, 23, 29, 30 ஆகிய 4 நாட்கள் நடக்க உள்ளது. தமிழ் நடிகர்கள் கிரிக்கெட் டீமுக்கு 'சென்னை சூப்பர் ஸ்டார்ஸ்Õ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த டீமின் ஐகான் வீரர்களாக விஜய், சூர்யா இருப்பார்கள். அவர்களிடம் இது தொடர்பாக பேச்சு நடக்கிறது.

சிம்பு, கார்த்தி, ஜெயம் ரவி, தனுஷ், ராதாரவி, ஷாம், அப்பாஸ், ஜெய், அம்சவர்தன், ரமணா, விக்ராந்த், ஜீவா, ஆர்யா, மாதவன், சாந்தனு உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் இதில் பங்கேற்கின்றனர். நானும் பங்கேற்கிறேன். ரஜினிகாந்த் முன்னிலையில் இப்போட்டி நடக்கிறது. தெலுங்கு டீமில் சிரஞ்சீவி, நாகார்ஜுனா, என்.டி.பாலகிருஷ்ணா, ஜூனியர் என்.டி.ஆர்., இந்தி டீமில் சல்மான் கான், சுனில் ஷெட்டி அணி, கன்னடத்தில் சுதீப், புனித் ராஜ்குமார் அணி பங்கேற்கின்றன. இது பொழுதுபோக்காக இருந்தாலும் கிரிக்கெட் விதிகளின்படி ஆட்டம் நடைபெறும். ஆந்திரா மற்றும் கர்நாடகத்தில் இப்போட்டி நடக்கும். சென்னையில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியம் புதுப்பிக்கப்படுவதால், இங்கு ஆட்டம் நடத்துவது பற்றி பின்னர் முடிவு செய்யப்படும். போட்டிக்கென பிரத்யேக கோப்பை, ஒவ்வொரு அணிக்கும் வெவ்வேறு கலரில் ஆடை ஆகியவை தயாராகிறது. ராடன் மீடியா, ஸ்பிரின்ட் அண்ட் ரிதம் நிறுவனம் இதற்கான ஏற்பாடுகள் செய்து வருகின்றன. இவ்வாறு சரத்குமார் கூறினார்.

Source: Dinakaran
 
வில்லங்க வேடத்தில் நடிக்க சுவாதிகா விருப்பம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

வில்லங்க வேடத்தில் நடிக்க சுவாதிகா விருப்பம்

12/21/2010 12:58:51 PM

'முதல் காதல் மழைÕ பட ஹீரோயின் சுவாதிகா கூறியது: இப்படத்தில் லலிதா என்ற வேடத்தில் நடிக்கிறேன். ஹீரோ மகேந்திரனுக்கு சமமாக நடிக்க வாய்புள்ள வேடம். 'லலிதா காலனிÕ என்றுதான் இதற்கு முதலில் பெயரிடப்பட்டது. காலனி என்பது ஆங்கில வார்த்தையாக இருந்ததால் பிறகு 'முதல் காதல் மழைÕ என மாற்றப்பட்டது. நிலப் பிரச்னை காரணமாக இரண்டு குடும்பங்களுக்கிடையே ஏற்படும் மோதல்தான் கதை. மதுவண்ணன் இயக்குகிறார். கன்னடத்தில் 'பல்லவி இல்லத சரணாÕ என்ற படத்தில் நடித்தேன். பெயர் கிடைத்தது. ஹீரோயின்கள் கிளாமர் காட்டினால்தான் ஜெயிக்க முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. கிளாமராக நடித்தால் சில நாட்கள் பரபரப்பாக பேசப்படலாம். நடிப்புதான் நிலையான பெயரைத் தரும். அதற்காக கிளாமர் வேடத்தில் நடிக்க மாட்டேன் என்பதில்லை. கிளாமருடன் நடிப்பும் கலந்து பாத்திரங்களை விரும்புகிறேன். பிரச்னையாக பேசப்படும் வேடங்கள் நிறைய உண்டு. அதுபோன்ற வில்லங்க வேடங்களில் நடிக்க விரும்புகிறேன். பிரபு சாலமன் போன்ற இயக்குனர்களை நம்பி இது போன்ற வேடங்களில் நடிக்கலாம்.

Source: Dinakaran
 
ஸ்ருதி ஹாசனின் 7ஆம் அறிவு அனுபவம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிக்கும் படம், '7ஆம் அறிவு'. சூர்யா ஹீரோ. கமல்ஹாசன் மகள் ஸ்ருதி ஹீரோயினாக நடிக்கிறார். இந்நிலையில் சென்னையிலுள்ள பின்னி மில்லில் 7ஆம் அறிவு படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.  இதன் பிறகு ஷூட்டிங் ஸ்ருதி ஹாசன் படித்த பள்ளியில் நடந்தது. அதில் பங்கேற்ற ஸ்ருதி 'இந்த ஷூட்டிங்கை மறக்கவே முடியாது. சக மாணவிகளுடன் விளையாடி கழித்த நாட்கள் ஞாபகம் வருகிறதுÕ என நெகிழ்ந்தாராம்.

Source: Dinakaran
 
தனுஷின் சினிமா வயது 10!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தனுஷின் சினிமா வயது 10!

12/20/2010 12:59:31 PM

ஒல்லியான உருவம், சுமாரான அழகு என தனது சினிமா பயணத்தை தொடங்கிய தனுஷ், இந்த வருடத்துடன் சினிமாவில் 10 வயதை கடக்கிறார். ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அறிமகமான தனுஷூக்கு அவர் நடித்த முதல் படங்களும் சூப்பர் ஹிட்டானது. முதலில் இவரை கண்ட சிலர் விளையாட்டு பிள்ளை என்று எண்ணியது உண்டு. ஆனால் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனில் இவரும் இடம் பிடித்துள்ளார். வாழ்த்துக்கள் தனுஷ்.

Source: Dinakaran
 
மீண்டும் எடையை குறைக்கிறார் விஷால்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மீண்டும் எடையை குறைக்கிறார் விஷால்

12/20/2010 1:03:45 PM

பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷால் நடிக்கும் 'அவன் இவன்' படத்தின் ஷூட்டிங் படு வேகமாக நடந்து வருகிறது. தொடர்ந்து குற்றாலம், செங்கோட்டை பகுதிகளில் ஷூட்டிங் நடக்கிறது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதில், விஷால் திருநங்கை வேடத்தில் நடிக்கிறார். மேலும் 'அவன் இவன்Õ படத்துக்காக உடல் எடை கூட்டினார் விஷால். படம் கிட்டத்தட்ட முடிந்த நிலையில் விரைவாக போஸ்ட் புரொட‌க்சன் வேலைகளை முடித்து ஏப்ரலில் அதாவது தமிழ்ப் புத்தாண்டுக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார் பாலா. அடுத்து விஷால் படத்தை இயக்கும் பிரபு தேவா, இப்போது எடையை குறைக்க வேண்டும் என அவரிடம் கூறி பிரபு தேவா இருக்கிறார்,

Source: Dinakaran
 
அரட்டை அடிக்கும் த்ரிஷா!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

அரட்டை அடிக்கும் த்ரிஷா!

12/20/2010 12:52:07 PM

விழாவில் ஷோ கேஸ் பொம்மையாக வந்து போகும் த்ரிஷா, பள்ளி நாட்களில் அதிகம் அரட்டை அடிப்பாராம். குறிப்பாக அவர் தோழிகளுடன் இருக்கும் போது, செம அரட்டையில் ஈடுபடுவாராம். சமீபத்தில் துபாயில் த்ரிஷாவின் தோழி திருமணம் நடந்தது. இதற்காக தனது தோழிகளுடன் துபாய் சென்றார். துபாயில் நடந்த தனது தோழியின் திருமண விழாவில் பங்கேற்றதுடன் அவர்களுடன் விருந்து சாப்பிட்டு அரட்டையாக பொழுதை கழித்தாராம் த்ரிஷா.

Source: Dinakaran
 
3 இடியட்ஸ் படத்திலிருந்து விஜய் நீக்கம் :தயாரிப்பாளர் அறிவிப்பு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

3 இடியட்ஸ் படத்திலிருந்து விஜய் நீக்கம் : தயாரிப்பாளர் அறிவிப்பு

12/20/2010 2:16:06 PM

கடந்த சில நாட்களாக விஜய் ரசிகர்களுக்கு நீடித்த வந்த குழப்பம் தற்போது நீங்கியுள்ளது. 3 இடியட்ஸ் படத்திலிருந்து விஜய் நட்புடன் விடைபெற்றதாக தயாரிப்பாளர் ஜெமினி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் கால்ஷீட் பிரச்சனை காரணமாகவே விஜய் படத்திலிருந்து விலகினார், அவர் நீக்கப்பட்டதற்க யாரும் காரணம் இல்லை என்று அந்த நிறுவனம், சுமுகமான முறையில் நண்பராகவே அவர் பிரிந்தார் ஜெமினி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இப்போது விஜய்க்கு பதில் சூர்யாவை நடிக்க வைக்க பேச்சு நடப்பதாகக் கூறப்படுகிறது.

Source: Dinakaran
 
பஞ்சாயத்து தேர்தலில் அர்ஜூன் அம்மா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பஞ்சாயத்து தேர்தலில் அர்ஜூன் அம்மா

12/20/2010 2:18:55 PM

நடிகர் அர்ஜூனின் தாயார் லட்சுமி தேவம்மா கர்நாடக மாநில பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் சார்பி்ல் அவர் போட்டியிடவுள்ளார். ஏற்கனவே கடந்த 1987ம் ஆண்டு பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். ஆனால் தனது கணவர் மறைவைத் தொடர்ந்து தீவிர அரசியலிலிருந்து விலகியிருந்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் அரசியலுக்கு வருகிறார். தொட்டேரி என்ற இடத்திலிருந்து அவர் போட்டியிடுகிறார்.

Source: Dinakaran
 
பைக்கிலிருந்து விழுந்து காயமடைந்தார் சிம்பு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பைக்கிலிருந்து விழுந்து காயமடைந்தார் சிம்பு

12/20/2010 1:06:56 PM

யங் சூப்பர் ஸ்டார் சிம்பு, பரத், அனுஷ்கா நடித்துள்ள படம் 'வானம்’. புதுமுக இயக்குனர் க்ரிஷ் இயக்கியுள்ளார். படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு படுவேகமாக நடந்து வருகிறது. இதனை தொடர்ந்து வானம் படத்தை காதலர் தினத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தவகல்கள் வெளியாகியுள்ள நிலையில், ‘வானம்’ பட ஷூட்டிங்கில் பைக்கிலிருந்து விழுந்து காயமடைந்துள்ளார் சிம்பு. இதனால் ஷூட்டிங் சிறிது நேரம் ரத்து செய்யப்பட்டதாக தெரிகிறது.

Source: Dinakaran
 
திமுகவுக்குப் பிரசாரம் செய்வேன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

திமுகவுக்குப் பிரசாரம் செய்வேன்

12/20/2010 2:23:31 PM

அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை என்று நடிகர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில் வருகிற சட்டமன்ற தேர்தலில் முதல்வர் கருணாநிதி, துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்திற்கு அழைப்பார்கள். நான் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளேன் என்று கூறியுள்ளார் பாக்யராஜ். மேலும் தீவிர அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்று பாக்யராஜ் கூறியுள்ளார்.

Source: Dinakaran
 
கிசு கிசு -மிட்நைட் பார்ட்டிகளில் கோலிவுட்

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news

மிட்நைட் பார்ட்டிகளில் கோலிவுட்

12/20/2010 2:53:25 PM

நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…

கோலிவுட் நடிகர்களை விமர்சித்து, மல்லுவுட் நடிகர்களை பாராட்டி பேசிய ஐ காட் நடிகர் மேல மல்லு இயக்குனர்களோட பார்வை விழுந்திருக்காம்…. விழுந்திருக்காம்… ரோஷமான இயக்குனர் தன¢னோட படத்துல நடிக்க ஐ காட் நடிகர்கிட்ட கால்ஷீட் வாங்கிட்டாராம்… இன்னொரு டைரக்டரும் நடிகர்கிட்ட பேசிட்டு இருக்கிறாராம்… இருக்கிறாராம்…

மிட்நைட் பார்ட்டி வைக்கிற பேஷன் கோடம்பாக்கத்துல ஓவராயிடுச்சாம்… ஓவராயிடுச்சாம்… இதுக்காவே ஒரு கோஷ்டி போனை போட்டு, ஸ்டார்களை கூப்பிடுறாங்களாம். நடிகர்களைவிட டைரக்டருங்க நடிகைங்கதான் இந்த பார்ட்டிகள்ல அதிகமா ஆஜர் ஆகுறாங்களாம்… ஆகுறாங்களாம்…

முமைத் நடிகை தெலுங்கை போல தமிழ்லயும் ஒரு ரவுண்ட் வரலாம்ன்னு ந¤னைச்சாராம்… ந¤னைச்சாராம்… ஆனா ரெண்டு பீல்டுலேயுமே கூப்பிட ஆளில்லாம கால்ஷீட்டை கையில வச்சிட்டு, காத்து கிடக்கிறாராம்… கிடக்கிறாராம்…

Source: Dinakaran
 
அமீருடன் ஆடியது ஜாலியான அனுபவம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

அமீருடன் ஆடியது ஜாலியான அனுபவம்

12/20/2010 12:23:54 PM

'யுத்தம் செய்' படத்தில் இயக்குனர் அமீருடன் ஆடியது ஜாலியான அனுபவம் என்றார் நீது சந்திரா. அவர் மேலும் கூறியதாவது: நான் நடித்துள்ள 'நோ பிராப்ளம்' என்ற இந்திப் படம் சமீபத்தில் ரிலீசாகியுள்ளது. இதில் தற்காப்புக்கலை தெரிந்த பெண்ணாக நடித்துள்ளேன். நான் ஏற்கனவே 'டேக்குவாண்டோ'வில் ப்ளாக் பெல்ட் வாங்கியிருப்பதால் சன்டைக்காட்சிகளில் நடிக்க ஈசியாக இருந்தது. இதையடுத்து இன்னும் இரண்டு இந்திப் படங்களில் நடித்து வருகிறேன். தமிழில் அமீர் இயக்கும் 'ஆதிபகவன்' படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடிக்கிறேன். இது காதல் கதைதான் என்றாலும் அமீர் வித்தியாசமாக திரைக்கதை அமைத்துள்ளார். அவர் படங்களில் எப்போதும் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் இருக்கும். இந்த படத்திலும் எனது கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ளது. மிஷ்கின் இயக்கும் 'யுத்தம் செய்' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளேன். இதில் அமீருடன் ஆடியது ஜாலியான அனுபவமாக இருந்தது. இவ்வாறு நீது சந்திரா கூறினார்.

Source: Dinakaran
 
சிறுத்தையில் சிங்கம் சாயல் இல்லை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சிறுத்தையில் சிங்கம் சாயல் இல்லை

12/20/2010 12:25:18 PM

ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கும் படம் 'சிறுத்தை'. கார்த்தி, தமன்னா நடிக்கிறார்கள். சிவா இயக்குகிறார். வித்யாசாகர் இசை. இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. சூர்யா வெளியிட, கவுதம் வாசுதேவ் மேனன் பெற்றுக் கொண்டார். படத்தின் இணைய தளத்தை இயக்குனர் லிங்குசாமி துவக்கி வைத்தார்.

விழாவில் கார்த்தி பேசியதாவது:

இது எனது கனவு படம். மாநகராட்சி பள்ளியில் செம்பு திருடும் திருடன், கடமையும் வீரமும் நேர்மையும் மிக்க போலீஸ் அதிகாரி என்ற இரு கேரக்டர்களில் நடிக்கிறேன். அண்ணன் சூர்யா 'காக்க காக்க' படத்திலும், 'சிங்கம்' படத்திலும் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அவரின் சாயல் எனக்குள் வந்து விடாமல் கவனமாக நடித்திருக்கிறேன். தமன்னாவுடன் நடிக்கும் இரண்டாவது படம். ஒரு ஜோடி, ரசிகர்கள் மனதுக்கு பிடித்து விட்டால் அவர்கள் படத்துக்குள் எளிதாக நுழைந்து விடுவார்கள் என்று அப்பா சொல்வார். அப்படித்தான் தமன்னா, இரண்டாவது படத்தில் அமைந்திருக்கிறார். இன்னொரு ஜோடி சந்தானம். அவருடன் இணைந்து இதுவரை இல்லாத அளவுக்கு காமெடியாக நடித்துள்ளேன். இவ்வாறு கார்த்தி கூறினார்.

விழாவில் இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமன், ஏ.ஜெகன்நாத், விஜய், ராஜேஷ், ஜெயம் ராஜா, பிரபுசாலமன், பார்த்திபன், தயாரிப்பாளர்கள் ரவீந்திரன், சுபாஷ் சந்திரபோஸ், அன்பு செழியன், பாடலாசிரியர் அறிவுமதி, கலை இயக்குனர் ராஜீவன், ஒளிப்பதிவாளர் வேல்ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக இயக்குனர் சிவா வரவேற்றார். முடிவில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா நன்றி கூறினார். 

Source: Dinakaran
 
மன்மதன் அம்பு பாடலை நீக்க மாட்டேன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மன்மதன் அம்பு பாடலை நீக்க மாட்டேன்

12/20/2010 12:19:32 PM

'மன்மதன் அம்பு' படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்தப் பாடலை நீக்கமாட்டேன்' என்று கமல்ஹாசன் கூறினார். கமல், த்ரிஷா நடித்துள்ள படம் 'மன்மதன் அம்பு'. இதன் புரமோஷன் நிகழ்ச்சி கேரள மாநிலம் கொச்சியில் நேற்றுமுன்தினம் நடந்தது. இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின், மலையாள விநியோகஸ்தர் கோகுலம் கோபாலன் உட்பட பலர் கலந்துகொண்டனர். ரசிகர்கள் முன்னிலையில் கமல்ஹாசன் பேசியதாவது: 'மன்மதன் அம்பு' படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலை நீக்க வேண்டுமென சில அமைப்புகள் கூறிவருகிறது. ஆனால், சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுவிட்ட நிலையில் எந்த காரணத்தைக் கொண்டும் அந்த பாடலை நீக்க முடியாது. ரஜினியுடன் எனக்கு போட்டி இருப்பது உண்மைதான். அது ஆரோக்கியமான போட்டி. ரஜினிகாந்தின் படம் திரைக்கு வந்தால், அதற்கு சமமாக நானும் ஒரு படத்தை வெளியிட வேண்டும் என நினைக்கிறேன். மலையாள சினிமாவில் நல்ல கதை கிடைத்தால் நடிப்பேன்.

Source: Dinakaran
 
அமீருடன் ஆடியது ஜாலியான அனுபவம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

அமீருடன் ஆடியது ஜாலியான அனுபவம்

12/20/2010 12:23:54 PM

'யுத்தம் செய்' படத்தில் இயக்குனர் அமீருடன் ஆடியது ஜாலியான அனுபவம் என்றார் நீது சந்திரா. அவர் மேலும் கூறியதாவது: நான் நடித்துள்ள 'நோ பிராப்ளம்' என்ற இந்திப் படம் சமீபத்தில் ரிலீசாகியுள்ளது. இதில் தற்காப்புக்கலை தெரிந்த பெண்ணாக நடித்துள்ளேன். நான் ஏற்கனவே 'டேக்குவாண்டோ'வில் ப்ளாக் பெல்ட் வாங்கியிருப்பதால் சன்டைக்காட்சிகளில் நடிக்க ஈசியாக இருந்தது. இதையடுத்து இன்னும் இரண்டு இந்திப் படங்களில் நடித்து வருகிறேன். தமிழில் அமீர் இயக்கும் 'ஆதிபகவன்' படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடிக்கிறேன். இது காதல் கதைதான் என்றாலும் அமீர் வித்தியாசமாக திரைக்கதை அமைத்துள்ளார். அவர் படங்களில் எப்போதும் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் இருக்கும். இந்த படத்திலும் எனது கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ளது. மிஷ்கின் இயக்கும் 'யுத்தம் செய்' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளேன். இதில் அமீருடன் ஆடியது ஜாலியான அனுபவமாக இருந்தது. இவ்வாறு நீது சந்திரா கூறினார்.

Source: Dinakaran
 
வசனம் பேசாமல் நடிக்கும் ஹீரோ

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

வசனம் பேசாமல் நடிக்கும் ஹீரோ

12/20/2010 12:28:13 PM

'அரிது அரிது' படத்தில் ஹீரோவாக நடித்துள்ள ஹரீஷ் கல்யாண், நிருபர்களிடம் கூறியதாவது: 'சிந்து சமவெளி'யை தொடர்ந்து நான் நடித்துள்ள 'அரிது அரிது' படம், சில தினங்களில் ரிலீசாகிறது. படம் முழுவதும் வசனம் பேசாமல், வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளேன். இதற்காக, 4 மாதங்கள் நடிப்புப் பயிற்சி பெற்றேன். டைரக்டர் கே.ஆர்.மதிவாணன் உருவாக்கிய என் வேடம், தமிழ் சினிமாவுக்கே புதிதாக இருக்கும். என் வாழ்க்கையில் சம்பந்தப்படாத சிலர், என்னைச் சுற்றி வந்து பிரச்னை செய்வார்கள். அது என்ன என்பது சஸ்பென்ஸ். அடுத்து எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கும், 'சட்டப்படி குற்றம்' படத்தில் நடிக்கிறேன். இதில் சத்யராஜ், விக்ராந்த் நடிக்கிறார்கள். பிறகு பாலாஜி சக்திவேல் உதவியாளர் தாயுமானவன் இயக்கத்தில் நடிக்கிறேன்.

Source: Dinakaran
 
முதல் காதல் மழை பாடல் வெளியீடு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

முதல் காதல் மழை பாடல் வெளியீடு

12/20/2010 12:38:51 PM

மாருதி குளோபல் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் டி.என்.மிஸ்ரா தயாரித்துள்ள படம் 'முதல் காதல் மழை'. மாஸ்டர் மகேந்திரன் ஹீரோ. சுவாதிகா ஹீரோயின். மதுவண்ணன் இயக்குகிறார். இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. படம் பற்றி தயாரிப்பாளர் மிஸ்ரா கூறியதாவது: இது சிறிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள காதல் கதை. கான்ட்ராக்டருக்கும், தர்மகத்தாவிற்கும் கோவில் நில பிரச்னையில் தகராறு வருகிறது. இருவரின் பிள்ளைகளும் காதலிக்கிறார்கள். பெரியவர்கள் பிரச்னையை, காதல் எப்படி தீர்க்கிறது என்பது கதை. சாணக்யாவின் இசையில் 6 பாடல்கள் இடம்பெறுகிறது. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய ஆஞ்சநேயர் பற்றிய பாடல் பேசப்படும். பிப்ரவரி மாதம் ரிலீசாகிறது.