லண்டன்: இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன் லண்டனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றுக்கு அணிந்து வந்திருந்த வைர நெக்லஸ் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன் லண்டனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்திடம் இருந்து கடன் வாங்கி அணிந்து வந்த வைர நெக்லஸ் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
நிஜாம் ஆப் ஹைதராபாத் என்று அழைக்கப்படும் அந்த வைர நெக்லஸ் ராணியின் திருமணத்தின்போது நிஜாமால் பரிசாக அளிக்கப்பட்டதாம். கேட் கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு நடிகையும், மாடலுமான எலிசபெத் ஹார்லி, ராக் ஸ்டார் பிரயன் ஆடம்ஸ் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆண்டில் கேட் கலந்து கொண்ட முதல் பொது நிகழ்ச்சி இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.