ஹீரோ, ஹீரோயிசம் இல்லாத தேவதாஸ் பிரதர்ஸ்!

பொதுவாக சினிமாவில் கதைகள் கதாநாயகனை மையப்படுத்தியே சுழல்கின்றன. நாயகன் தான் பிரதானம். அவனைச் சுற்றும் துணைக் கோள்கள் போலவே பிற பாத்திரங்கள் அமைக்கப்படும். இதுவே சினிமா மரபாகி இருக்கிறது.

ஆனால் தேவதாஸ் பிரதர்ஸ் என்ற தலைப்பில் உருவாகும் புதிய படத்தில் ஹீரோவும் இல்லை, ஹீரோயிசமும் கிடையாதாம்.

rs without hero and heroism

இப் படத்தை இயக்குபவர் கே. ஜானகி ராமன். இயக்குநர்கள் ஐஷ்வர்யா தனுஷ், சற்குணம், வேல்ராஜ் ஆகியோரிடம் உதவி இயக்குநராக சினிமா கற்றவர். '3,' 'நய்யாண்டி',' வேலையில்லா பட்டதாரி' படங்களில் பணியாற்றியவர்.

படத்தின் கதையை 'திலகர் ' துருவா, பாலசரவணன், அஜய் பிரசாத் ,'மெட்ராஸ்' ஜானி ஆகிய நால்வரும் சம பங்கு போட்டு நடித்து வருகிறார்கள். நாயகிகளில் சஞ்சிதா ஷெட்டி முக்கிய இடம் வகிக்கிறார் .

சென்னையில் அடையாறு, ஆழ்வார்பேட்டை,கே.கே நகர், வியாசர்பாடி என நான்கு வெவ்வேறு பகுதிகளில் இருக்கும் நான்கு இளைஞர்கள் அவர்கள்.

சம்பந்தமில்லாத இந்த நான்கு பேரும் ஒருவரை ஒருவர் அறியாமலேயே ஒருவர் வாழ்க்கையில் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள். அது தெரிந்த பிறகு அவரவர் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பங்கள் என்ன என்பதே கதை. அவர்கள் யார் ? எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்று போகிறதாம் திரைக்கதை.

இது முழுக்க முழுக்க சென்னையிலேயே நடக்கும் கதை.

'திலகர் ' படத்தில் நடித்த துருவா, காமெடியில் வளர்ந்து வருகிற பால சரவணன், 'ராஜ தந்திர'த்தில்' கவனம் பெற்ற அஜய் பிரசாத், 'மெட்ராஸ்' படத்தில் கவனம் ஈர்த்த ஜானி என இந்த நால்வருக்கும் மேலேறும் அடுத்த சில படிகளாக இப்படம் அமையும் என்று நம்புகிறார்கள்.

படத்துக்கு ஒளிப்பதிவு 'சலீம் 'பட ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா , இசை ''போடா போடி' படத்துக்கு இசையமைத்த தரண், படத்தொகுப்பு 'வேலையில்லா பட்டதாரி'யில் பணியாற்றிய எம். வி ராஜேஷ் குமார்.

படத்தை எக்ஸ்ட்ரா எண்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் ஆர் மதியழகன், ஆர் ரம்யா தயாரிக்கிறார்கள்.

 

ஆரண்யம்... சாலக்குடி காடு முதல் தாய்லாந்து காடுவரை!

காடும் காடு சார்ந்த இடத்தையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள காதல் படம் 'ஆரண்யம்'.

இப்படத்தை 'ஆஹா ஓஹோ புரொடக்ஷன்ஸ் 'சார்பில் ராம், சுபாஷ், தினேஷ், நானக் என நான்கு நண்பர்கள் இணைந்து தயாரித்து உள்ளனர். புதுமுகம் ராம், நீரஜா ஷாஜி, இளவரசு, சிங்கமுத்து,ஸ்ரீஹேமா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

Aaranyam from Salakudi to Thailand forests

குபேர்ஜி இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு 'அன்னக்கொடி' புகழ் சாலை சகாதேவன், இசை எஸ்.ஆர்.ராம்.

இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. விழாவில் இயக்குநர் குபேர்ஜி. பேசுகையில், "நான் யாரிடமும் உதவியாளராகப் பணிபுரியவில்லை. படங்கள் பார்த்தும் பல விதமான சினிமா நண்பர்கள் மூலம் பழகிய அனுபவங்கள் பெற்றும் சினிமா கற்றவன்.

இப்படம் காடு சார்ந்த காதல் கதை. புதிய களம். நிச்சயம் இப்படம் புதிய அனுபவமாக இருக்கும். நண்பர்களாக இணைந்து இப்படத்தை உருவாக்கியிருக்கிறோம். 'காதலிக்கநேரமில்லை' படத்தில் நாகேஷ் சொல்லும் ஆஹா ஓஹோ புரொடக்ஷன்ஸ் நினைவாக எங்கள் கம்பெனிக்கு அதையே பெயராக வைத்தோம்.

படம் காதல் கதைதான் என்றாலும் இப்படம் உருவான விதம் கேட்டால் அது எங்கள் நட்பின் கதையாக இருக்கும். என்மேல் நம்பிக்கை வைத்து இப்படத்தைக் கொடுத்தார்கள். சாலக்குடி காடு முதல் தாய்லாந்து காடுவரை போய் 60 நாட்களில் படத்தை முடித்து இருக்கிறோம். புதியதை என்றும் வரவேற்கும் ரசிகர்கள் இதையும் வரவேற்பார்கள் என்று நம்புகிறேன்,'' என்றார்.

Aaranyam from Salakudi to Thailand forests

கவிஞர் பா.விஜய் பேசும்போது, "இப்போதெல்லாம் பாடலாசிரியர்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைப்பதில்லை. இந்நிலையில் என்னிடம் உதவியாளராக இருந்த மீனாட்சி சுந்தரம் இதில் பாடலாசிரியராக அறிமுகமாகி 4 பாடல்களை எழுதி இருக்கிறார். அவருக்கு வாய்ப்பளித்ததற்கு படக்குழுவுக்கு நன்றி. இப்படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்'', என்றார்.

விழாவில் நாயகனும் ஒரு தயாரிப்பாளருமான ராம், நாயகி நீரஜா, நடிகர் 'வழக்கு எண் ஸ்ரீ, தயாரிப்பாளர் சுபாஷ், பாடலாசிரியர் மீனாட்சி சுந்தரம், ஒளிப்பதிவாளர் சாலை சகாதேவன் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.

 

நடிகை டெமி மூரின் நீச்சல் குளத்தில் வாலிபரின் பிணம்... அதிர்ச்சியில் ஹாலிவுட்

லாஸ் ஏஞ்செல்ஸ்: ஹாலிவுட்டின் பிரபல நடிகையான டெமி மூரின் வீட்டு நீச்சல் குளத்தில், சுமார் 21 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரின் பிணம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இதனால் ஹாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனைக்குப் பின்னர் அந்த வாலிபரைப் பற்றிய தகவல்களை அமேரிக்கக் காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர், அந்த வாலிபரின் பெயர் எடெனில்சன் வேல்லே வயது 21.

அவர் ஒரு புகைப்பட நிபுணர் மற்றும் ஓவியத்தில் கைதேர்ந்தவர் என்று காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

Demi moore: Dead body Found in her Swimming pool

மிகவும் அமைதியான சுபாவம் உடையவர் என்று அவரது நண்பர்கள் அவருக்கு சர்டிபிகேட் கொடுத்துள்ளனர், ஆனால் எடேனில்சன் எடுத்துள்ள பல புகைப்படங்களில் டெமி மூரின் வீடு மற்றும் நீச்சல் குளத்தைப் படமெடுத்து வைத்துள்ளார்.

நீச்சல் குளத்தில் விழுந்த பின்புதான் அந்த வாலிபர் இறந்துள்ளார் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர், ஆனால் இதற்கெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை டெமி மூர்.

நான் அந்த சம்பவம் நடந்த போது ஊரில் இல்லை எனது குழந்தைகளுடன் விடுமுறையைக் கழிக்க வெளியூர் சென்றிருந்தேன், எனது வேலையாட்கள் நான் இல்லாத போது பார்ட்டி நடத்தியிருக்கலாம்.

அதில் அந்த வாலிபர் கலந்து கொண்டாரா என்பது தெரியவில்லை, எனினும் இறந்த வாலிபருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என்று கூறியுள்ளார். தற்போது வாலிபரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகப்படும் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.