கமலின் குறுஞ்செய்தியால் மகிழ்ந்து போன மலையாள இயக்குநர்

சென்னை: உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் வரும் ரம்ஜான் தினத்தன்று திரைக்கு வர இருக்கும் படம் பாபநாசம். மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக் தான் பாபநாசம்.

மலையாளத்தில் திரிஷ்யம் படத்தை இயக்கிய இயக்குநர் ஜீது ஜோசப்பே தமிழில் பாபநாசம் படத்தை இயக்கி இருக்கிறார். படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து தற்போது படம் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் இயக்குநர் ஜீது ஜோசப் அலைபேசியில் ஒரு குறுந்தகவல் மின்ன எடுத்துப் பார்த்த ஜீது மகிழ்ச்சியில் மிதந்து இருக்கிறார்.

Kamal Hassan  not Interfere With My Work : Jeethu Joseph

காரணம் அந்தச் செய்தியை அனுப்பியது உலகநாயகன் கமல். படப்பிடிப்பிற்கு முன்பு நிறைய பேர் கமல் படமா அவர் நிறைய விஷயங்களில் தலையிடுவார் என்று ஜோசப்பை பயமுறுத்தி விட்டனராம். இதனால் படம் முடிவடையும் வரை ஒருவித படபடப்புடனே இருந்த ஜீது உங்களுடன் பணியாற்றியது ஐ.வி.சசியுடன் பணியாற்றியது போலவே இருந்தது என்ற கமலின் குறுஞ்செய்தியைப் பார்த்து மகிழ்ச்சியில் அழுதே விட்டாராம்.

மேலும் படப்பிடிப்பின் போது ஒரு சில ஆலோசனைகள் சொன்னது தவிர வேறு எதிலும் கமல் தலையிடவில்லை என்று உலகநாயகனின் பெருந்தன்மையை பற்றிப் புகழ்ந்து கூறியுள்ளார்.

 

ஒரே நாளில் வெளியாகும் முன்னணி நடிகர்களின் படங்கள் பாகுபலிக்கு முன்னால் தாக்குப் பிடிக்குமா?

ஹைதராபாத்: அடுத்த மாதம் வரவிருக்கும் ரம்ஜான் தினத்தன்று ரம்ஜானின் ஸ்பெஷல் பிரியாணிக்கு போட்டியாக, ஏகப்பட்ட படங்களும் வெளியாகி ரம்ஜான் தினத்தை சந்தோஷப் படுத்தப் போகின்றன. ஆமாம் தமிழில் நடிகர் தனுஷின் மாரி, தெலுங்கில் மகேஷ்பாபு வின் ஸ்ரீமந்துடு மற்றும் ஹிந்தியில் சல்மானின் பஜ்ரங்கி பைஜான் போன்ற மூன்று படங்களும் திரைக்கு வரவிருக்கின்றன.

இதில் தமிழில் மட்டும் மாரி படத்துடன் உலக நாயகனின் பாபநாசம், மற்றும் சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் போன்ற படங்களையும் சேர்த்து மொத்தம் மூன்று படங்கள் மேலும் இந்தியில் ஒன்று மற்றும் தெலுங்கில் ஒன்று என 5 படங்கள் ஒரே நாளில் வெளியாகின்றன.

Salman Khan, Mahesh Babu and Dhanush Movie Same Day Released

உலக அளவில் எதிர்பார்ப்புகளை உண்டாகியிருக்கும் பாகுபலி படம் ஒரு வாரம் முன்பே வெளியாகி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் கணிசமான தியேட்டர்களை கைப்பற்றி விடும். பாகுபலி படத்தை திரையிட்டது போக மீதமுள்ள தியேட்டர்களே மற்ற நடிகர்களின் படங்களுக்கு கிடைக்கும் என்பதால், மீதமுள்ள தியேட்டர்களை கைப்பற்ற மற்ற படக்குழுவினர் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.

தியேட்டர்கள் தவிர்த்து வசூலிலும் பாகுபலியின் பங்கு அதிகம் இருக்கும், எனவே பாகுபலி படத்தைப் பொறுத்தே மற்ற நடிகர்களின் படவசூல் அமையும் என்பதால் பாக்ஸ் ஆபிசில் பாகுபலி படத்திற்கு அடுத்த இடத்தை எந்த நடிகரின் படம் பிடிக்கப் போகிறது என்னும் கேள்விக்கு விடையை எதிர்நோக்கி மும்மொழிகளின் திரையுலகத்தினரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

 

ஜெயம் ரவிக்கு ஜெயத்தைக் கொடுத்த ரோமியோ ஜூலியட்

சென்னை: தொடர்ந்து பேய் படங்களே ஆட்சி செய்து வந்த தமிழ் சினிமாவில் கடந்த வாரம் சற்று வித்தியாசமாக இரண்டு படங்கள் வெளியாகின. நடிகர் ரவியின் ரோமியோ ஜூலியட் காதலை நம்பியும், சந்தானத்தின் இனிமே இப்படித்தான் படம் காமெடியை நம்பியும் எடுக்கப் பட்டு வெளிவந்தது.

அதுதான் பேய்ப் படங்களிலேயே காமெடியைப் பார்க்கிறோமே தனியாக எதற்கு ஒரு காமெடிப் படம் என்று ரசிகர்கள் நினைத்து விட்டார்கள் போலும், காதல் படமான ரோமியோ ஜூலியட்டிற்கு தங்கள் ஒட்டுமொத்தஆதரவையும் அளித்து படத்தை வெற்றிப்படமாக மாற்றி இருக்கிறார்கள்.

Romio Juliet Box Office Report

ரோமியோ ஜூலியட் படம் காதலை சொன்ன விதத்தில் சற்றே சொதப்பினாலும், கலேக்ஷனில் வெற்றி பெற்று ஜெயம் ரவியைக் காப்பாற்றி இருக்கிறது. ஆமாம் ஒரு வருடத்திற்கும் மேலாக எந்தப் படங்களும் வெளிவராமல் துவண்டிருந்த ஜெயம் ரவிக்கு உற்சாகத்தை அளித்து அவரின் மார்க்கெட்டையும் உயர்த்தி இருக்கிறது.

படம் வெளியாகி இன்றோடு 6 நாட்களைக் கடந்த நிலையில் இதுவரை சுமார் 9 கோடி ரூபாயை வசூலித்து சாதனை புரிந்துள்ளது. இந்த வெற்றியால் இதுவரை ஜெயம் ரவி நடித்து வெளிவராமல் இருந்த அப்பாடக்கர் மற்றும் பூலோகம் படங்களை வெளியிட சம்பந்தப்பட்ட படக்குழுவினர் முழுமூச்சாக இறங்கியுள்ளனராம்.

 

மீண்டும் ரஜினியுடன் இணையும் பிரகாஷ் ராஜ்!

சென்னை: ஐ லவ் யூ செல்லம் என்ற வார்த்தையை தமிழர்களின் வாழ்க்கையில் இரண்டறக் கலக்கச் செய்தவர் நடிகர் பிரகாஷ்ராஜ்.

கில்லி படத்தின் மாபெரும் வெற்றிக்கு முக்கியக் காரணமான பிரகாஷ் ராஜை தற்போது தமிழில் அதிக படங்களில் பார்க்க முடியவில்லை.

தமிழ் சினிமாவில் சிறிது காலம் காணாமல் போயிருந்த பிரகாஷ் மீண்டும் கமலின் தூங்கா வனம் படத்தின் மூலம் தமிழில் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார், அதே போன்று ரஜினியின் படத்திலும் அவர் நடிக்கலாம் என்று புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தில் அட்டகத்தி தினேஷ் மற்றும் மெட்ராஸ் புகழ் கலையரசன் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்க இருக்கிறார்கள். தற்போது பிரகாஷ் ராஜும் படத்தில் நடிக்க இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து உள்ளது.

கேங்க்ஸ்டர் கதையை மையமாகக் கொண்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்புடன் மலேசியாவில் துவங்கப் படவுள்ளது.

ரஜினியுடன் பிரகாஷ் ராஜ் இணைவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே படையப்பா படத்தில் சின்ன வேடத்தில் வந்து போனவர்தான் பிரகாஷ் ராஜ். இந்தப் படத்திலாவது அவருக்குப் பெரிய ரோல் கொடுப்பார்கள் என நம்பலாம்

 

கான் பட ஃபர்ஸ்ட் லுக்… பக்திப்பழமாய் காட்சி தரும் சிம்பு…

சிம்பு நடித்துள்ள கான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டது. இந்த போஸ்டரில் விபூதி பட்டை போட்டு நடுவே குங்குமம் வைத்து பக்திப்பழமாய் காட்சித்தருகிறார் சிம்பு.

இந்த போஸ்டர் டிவிட்டரில் டிரெண்ட் ஆனதோடு நம்பர் 1 இடத்தையும் பிடித்துள்ளது.

சிம்பு தனது படங்களில் எப்போதுமே ஸ்டைலிஸ் ஆகவே காட்சி தருவார். ஆனால் செல்வராகவன் இயக்கத்தில் கான் என்ற படத்தில் நடிக்கிறார் சிம்பு. இந்த படத்தின் போஸ்டர் இன்று வெளியானது.

Simbu’s Kaan First Look Poster release

அதில் பச்சை சட்டை, கழுத்தில் கொட்டை நெற்றியில் பட்டை என பக்திப்பழமாய் காட்சி தருகிறார் சிம்பு.

கான் என்ற எழுத்திற்கு கீழே காடும் காடு சார்ந்த பகுதியும் என்ற கேப்சன் போட்டுள்ளனர். கான் என்றால் காடு என்று அர்த்தமாம். இந்தப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கேத்தரின் மற்றும் பிரியா ஆனந்த் நடிக்கிறார். இப்படத்தில் டாப்சி ஒரு தைரியமான கவர்ச்சியான பாத்திரத்தில் நடிக்கிறாராம். செல்வராகவன் சிம்பு இணைந்துள்ள படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

விஜய்காந்த் படத்தின் காப்பிதான் விஜய்யின் புதுப் படமா?

பெரிய நடிகர்களின் படங்களின் கதைகள், அந்தப் படங்கள் உருவாகும் முன்பே லீக்காகிவிடுவது இப்போதைய ட்ரெண்ட். இதற்கெல்லாம் காரணம் ரசிகர்கள் மற்றும் மீடியாக்களின் அதீத ஆர்வம்தான்.

புலி படத்துக்குப் பிறகு அட்லீ இயக்கத்தில் பெரும் பட்ஜெட்டில் விஜய் நடிக்கிறார் அல்லவா... இப்படத்தின் கதை என்னவாக இருக்கும் என்று இப்போதே கோடம்பாக்கத்தில் பேச ஆரம்பித்துவிட்டனர்.

இந்தப் படத்தில் விஜய் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் ஏற்கெனவே தெரிந்த சங்கதி.

Vijay - Atlee's next is remake of Vijaykanth's Shathriyan?

அடுத்து படத்தின் கதை, விஜயகாந்த் நடித்த சத்ரியன் படத்தின் தழுவல் என்று சொல்லப்படுகிறது .

ஆனால் அதை ஒரு குற்றச்சாட்டாக யாரும் முன்வைக்க் கூடாது என்ற முன் ஜாக்கிரதையுடன், இந்தக் கதையை முறைப்படி உரிமை பெற்று, ரீமேக் செய்கிறார்கள் என தகவல் கசிந்துள்ளது.

அட்லீ இயக்கிய முதல் படமான ராஜா ராணியே கிட்டத்தட்ட மவுன ராகம் கதையின் புது வடிவம்தான் என்பது நினைவிருக்கலாம். வரும் 26-ம் தேதி கிழக்குக் கடற்கரைச் சாலையில் பிரமாண்டமாகத் தொடங்குகிறது இந்தப் படம்.

 

கலக்கும் நயன்தாராவின் மாயா டீஸர்.. நாளை முழு ட்ரைலர் வெளியீடு!

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள த்ரில்லர் படமான மாயாவின் டீசர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி கலக்க ஆரம்பித்துள்ளது.

அறிமுக இயக்குநரான அஸ்வின் சரவணன் இயக்கியுள்ள இந்தப் படத்தின் முழு முதல் ட்ரைலர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது.

Maya new theatrical trailer from Tomorrow

ஆரி நாயகனாக நடிக்க, மைம் கோபால், ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள மாயாவுக்கு ரான் யோஹன் இசையமைத்துள்ளார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராம நாராயணனின் தேனாண்டாள் நிறுவனம் இந்தப் படத்தை வெளியிடுகிறது.

முதல் முறையாக ஒரு குழந்தைக்குத் தாயாக நடிக்கும் நயன்தாரா, ஒரு கட்டத்தில் பேயாக மாறி மிரட்டல் நடிப்பைக் காட்டியுள்ளாராம்.

 

இறுதி செட்டில்மென்ட்.. முடிவுக்கு வருகிறது லிங்கா விவகாரம்!

ரஜினி நடித்த லிங்கா படத்துக்கு நஷ்ட ஈடு கோரி வந்த திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு நாளை இறுதி செட்டில்மென்ட் நடக்கும் எனத் தெரிகிறது.

இத்தோடு லிங்கா பிரச்சினை முடிவுக்கு வருகிறது.

லிங்கா படம் வெளியாகி, பெரிய அளவில் ஓபனிங் வசூலைக் குவித்தாலும், அளவுக்கு அதிகமான விலைக்கு விற்கப்பட்டதால் நஷ்டம் ஏற்பட்டதாக விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் கணக்கு காட்டினார்கள்.

Lingaa issue to be settled tomorrow

இது தொடர்பாக பல கட்டப் போராட்டங்கள், தினசரி பிரஸ் மீட்டுகள் நடந்து வந்தன.

இந்த நிலையில் ரூ 12.5 கோடியை விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர்காரர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் தர ரஜினியின் பரிந்துரையின்பேரில் தயாரிப்பாளர் ஒப்புக் கொண்டார்.

அந்தத் தொகையில் பாதியை மட்டும் ஒரு பிரிவினருக்கு கடந்த மாதம் தந்தனர். மீதியை பிறகு தருவதாகக் கூறிய நிலையில், அதை உடனே தரவேண்டும் என்றும், மேலும் ஒரு பெரிய தொகை வேண்டும் என்றும் மீண்டும் கோஷம் போட ஆரம்பித்தனர்.

இந்த நிலையில், முன்பு பேசிய ஒப்பந்தம் போடப்பட்டபடி ரூ 12.5 கோடியில், தரப்படாமலிருந்த மீதித் தொகையை நாளை விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம், கலைப்புலி தாணு முன்னிலையில் பிரித்துத் தருவார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த செட்டில்மென்ட்டுக்குப் பிறகு லிங்கா விவகாரம் முழுமையாக முற்றுப் பெறும்.

சிங்காரவேலனுக்கு தடை

இன்னொரு பக்கம், லிங்கா விவகாரத்தை இத்தனை மோசமான பிரச்சினையாக்கியது மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தினரை மிரட்டியது போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், லிங்கா விநியோகஸ்தர் சிங்கார வேலனுக்கு இனி ஒத்துழைப்பு இல்லை என தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தமிழ் திரைப்பட கூட்டமைப்பு ஆகியவை முடிவு செய்துள்ளன. இதுகுறித்த சுற்றறிக்கையை அனைத்து உறுப்பினர்களுக்கும் அனுப்பியுள்ளனர்.

 

ரத்ததானம், அன்னதானம்: விஜய் பிறந்தநாளை ஜமாய்க்கப்போகும் 'தல' ரசிகர்கள்

சென்னை: இளையதளபதி விஜய்யின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாட அஜீத் ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர்.

அஜீத் ரசிகர்களும், விஜய் ரசிகர்களும் ட்விட்டர், ஃபேஸ்புக்கில் எலியும், பூனையுமாக சண்டை போடுவார்கள். ஒருவரையொருவர் காது கொடுத்து கேட்க முடியாத அளவுக்கு கேவலமாக திட்டித் தீர்ப்பார்கள். ஆனால் விஜய் படம் ரிலீஸானால் அது வெற்றி பெற வேண்டி அஜீத் ரசிகர்களும், தல படம் வெளியானால் தளபதி ரசிகர்களும் போஸ்டர் அடித்து ஒட்டுகிறார்கள்.

Ajith fans to celebrate Vijay's birthday

இந்நிலையில் வரும் 22ம் தேதி விஜய்யின் 41வது பிறந்தநாள் வருகிறது. விஜய் தனது பிறந்தநாளை குடும்பத்துடன் லண்டனில் கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாட அஜீத் ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர்.

வரும் 22ம் தேதி விஜய்யின் 41வது பிறந்தநாள் என்பதால் அன்று சென்னை கிங் மேக்கர்ஸ் தல அஜீத் குமார் ஃபேன்ஸ் கிளப் சார்பில் 41 பேர் ரத்ததானம் செய்ய உள்ளனர். அவர்கள் 41 மரக்கன்றுகளை நட உள்ளனர். இது தவிர 500 பேருக்கு அன்னதானம், 100 பேருக்கு இலவச பாடப்புத்தகம் வழங்குவது உள்ளிட்ட பல நல்லகாரியங்களை செய்ய உள்ளனர்.

அண்மையில் கூட ட்விட்டரில் அஜீத், விஜய் ரசிகர்கள் மோதியநிலையில் தல ரசிகர்களின் இந்த முடிவு பலரையும் வியக்க வைத்துள்ளது.

 

திரையில் ‘ஹேப்பி... ஹேப்பீ..’ என குஷியாகப் பாடி விட்டு நிஜத்தில் 'சோக பீப்பீ' ஊதும் ராசாத்தி!

சென்னை: ஏஜ் படம் மூலம் மீண்டும் சினிமாவில் மறுபிரவேசம் செய்துள்ளார் சூரிய நடிகரின் மனைவி.

திருமணத்திற்கு முன்பு தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக வலம் வந்த போது, சூப்பர் உட்பட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்த பெருமை இந்த நடிகைக்கு உண்டு. நடிகையின் ஓவர் ஆக்டிங் நடிப்பிற்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு.

இந்த நிலையில், திருமணத்திற்குப் பின் மீண்டும் ஏஜ் படத்தில் நடித்துள்ளார். படத்திற்கு ஏகத்திற்கும் வரவேற்பு கிடைத்ததில் நடிகை குஷியோ குஷி.

ஆனால், அம்மணியின் மனதிற்குள் சிறிய வருத்தம் உள்ளதாம். அதாவது, தான் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும், திறமையான நடிகை எனப் பெயர் வாங்கிக் கொடுத்தது ஏஜ் படமும், லாங்குவேஜ் படமும் என்பது தான் அது.

லகலக படத்தில் கூட தான் கொஞ்சம் ஓவர் ஆக்டிங் செய்ததாக அவரே ஒப்புக் கொள்கிறார்.

எனவே, இனி நடிக்கும் படங்களில் மிகுந்த கவனமாக ஓவர் ஆக்டிங் இல்லாமல் நடிக்க வேண்டும், அத்தகைய கதைகளாக தேர்ந்தெடுக்க வேண்டும் என அவர் முடிவெடுத்துள்ளாராம்.

எப்டியோ நீங்க திரும்ப நடிச்சாலே போதும் மேடம்...

 

திரையில் ‘ஹேப்பி... ஹேப்பீ..’ என குஷியாகப் பாடி விட்டு நிஜத்தில் 'சோக பீப்பீ' ஊதும் ராசாத்தி!

சென்னை: ஏஜ் படம் மூலம் மீண்டும் சினிமாவில் மறுபிரவேசம் செய்துள்ளார் சூரிய நடிகரின் மனைவி.

திருமணத்திற்கு முன்பு தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக வலம் வந்த போது, சூப்பர் உட்பட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்த பெருமை இந்த நடிகைக்கு உண்டு. நடிகையின் ஓவர் ஆக்டிங் நடிப்பிற்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு.

இந்த நிலையில், திருமணத்திற்குப் பின் மீண்டும் ஏஜ் படத்தில் நடித்துள்ளார். படத்திற்கு ஏகத்திற்கும் வரவேற்பு கிடைத்ததில் நடிகை குஷியோ குஷி.

ஆனால், அம்மணியின் மனதிற்குள் சிறிய வருத்தம் உள்ளதாம். அதாவது, தான் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும், திறமையான நடிகை எனப் பெயர் வாங்கிக் கொடுத்தது ஏஜ் படமும், லாங்குவேஜ் படமும் என்பது தான் அது.

லகலக படத்தில் கூட தான் கொஞ்சம் ஓவர் ஆக்டிங் செய்ததாக அவரே ஒப்புக் கொள்கிறார்.

எனவே, இனி நடிக்கும் படங்களில் மிகுந்த கவனமாக ஓவர் ஆக்டிங் இல்லாமல் நடிக்க வேண்டும், அத்தகைய கதைகளாக தேர்ந்தெடுக்க வேண்டும் என அவர் முடிவெடுத்துள்ளாராம்.

எப்டியோ நீங்க திரும்ப நடிச்சாலே போதும் மேடம்...

 

இளைய தளபதிக்காக ஜிவியின் இசையில் பாடிய தேனிசைத் தென்றல்

சென்னை: 1989ம் ஆண்டு மனசுகேத்த மகராசா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தனது இசைப் பயணத்தைத் தொடங்கிய தேவா இதுவரை தென்னிந்திய மொழிகளில் 400 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை புரிந்திருக்கிறார். கானா பாடல்கள் என்றாலே தேவாவின் இசைதான் என்று அனைவரும் கூறும் அளவுக்கு தமிழ் சினிமாவில் எண்ணற்ற கானாப் பாடல்களை தன் தேனினும் மேலான இசையால் குழைத்துத் தந்தவர்.

Music Director Deva Sing A Song  Vijay’s  Next Movie

இப்பொழுது முன்பு போல படங்களுக்கு அதிக அளவில் இசையமைப்பது இல்லை. சமீபமாக இளம் இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்களைப் பாட ஆரம்பித்து இருக்கிறார் தேவா. கடந்த ஆண்டில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற மான் கராத்தே படத்தில் அனிருத் இசையில் ஒரு பாடலைப் பாடி இருந்த தேவா, தற்போது ஜி.வி.பிரகாஷின் இசையில் இளையதளபதி விஜய் இயக்குநர் அட்லீயின் இயக்கத்தில் நடிக்க இருக்கும் புதிய படத்திற்காக ஒரு பாடலைப் பாடியிருக்கிறார்.

நடிப்பில் ஒரு பக்கம் பிஸியாக இருந்தாலும் இசையில் தனது 50 வது படம் மேலும் விஜயின் 59 வது படம் என்பதால் பாடல்கள் பேசப்படும் விதமாக இருக்க வேண்டும் என்பதற்காக அதிக சிரத்தை பாடல்களுக்கு இசையமைத்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். ஓய்விற்காக லண்டன் சென்றிருக்கும் விஜய் வந்தவுடன் விஜய் 59 படத்தின் பூஜை சென்னையில் பெரிய அளவில் நடைபெற இருக்கிறதாம்.

 

இளைய தளபதிக்காக ஜிவியின் இசையில் பாடிய தேனிசைத் தென்றல்

சென்னை: 1989ம் ஆண்டு மனசுகேத்த மகராசா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தனது இசைப் பயணத்தைத் தொடங்கிய தேவா இதுவரை தென்னிந்திய மொழிகளில் 400 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை புரிந்திருக்கிறார். கானா பாடல்கள் என்றாலே தேவாவின் இசைதான் என்று அனைவரும் கூறும் அளவுக்கு தமிழ் சினிமாவில் எண்ணற்ற கானாப் பாடல்களை தன் தேனினும் மேலான இசையால் குழைத்துத் தந்தவர்.

Music Director Deva Sing A Song  Vijay’s  Next Movie

இப்பொழுது முன்பு போல படங்களுக்கு அதிக அளவில் இசையமைப்பது இல்லை. சமீபமாக இளம் இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்களைப் பாட ஆரம்பித்து இருக்கிறார் தேவா. கடந்த ஆண்டில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற மான் கராத்தே படத்தில் அனிருத் இசையில் ஒரு பாடலைப் பாடி இருந்த தேவா, தற்போது ஜி.வி.பிரகாஷின் இசையில் இளையதளபதி விஜய் இயக்குநர் அட்லீயின் இயக்கத்தில் நடிக்க இருக்கும் புதிய படத்திற்காக ஒரு பாடலைப் பாடியிருக்கிறார்.

நடிப்பில் ஒரு பக்கம் பிஸியாக இருந்தாலும் இசையில் தனது 50 வது படம் மேலும் விஜயின் 59 வது படம் என்பதால் பாடல்கள் பேசப்படும் விதமாக இருக்க வேண்டும் என்பதற்காக அதிக சிரத்தை பாடல்களுக்கு இசையமைத்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். ஓய்விற்காக லண்டன் சென்றிருக்கும் விஜய் வந்தவுடன் விஜய் 59 படத்தின் பூஜை சென்னையில் பெரிய அளவில் நடைபெற இருக்கிறதாம்.

 

சிவகார்த்திகேயன், லிங்குசாமிக்காக பெயரை விட்டுத் தந்த ரஜினி!

எந்த நடிகரும், வேறு யாரும் தனது பெயரை விளம்பரத்துக்காகவும் வியாபாரத்துக்காகவும் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்காத ரஜினி, முதல் முறையாக சிவகார்த்திகேயன் மற்றும் லிங்குசாமிக்காக அனுமதி கொடுத்திருக்கிறார்.

லிங்குசாமியைப் பொருத்தவரை இந்தத் தலைப்பு, கிட்டத்தட்ட ரஜினியின் கால்ஷீட் கிடைத்ததற்கு சமம். இந்தத் தலைப்பே படம் பெரிய அளவில் வியாபாரமாக உதவியிருக்கிறது.

How Rajini allows Rajini Murugan title?

அஞ்சான், உத்தம வில்லன் ஆகிய படங்களால் பெரும் இழப்புக்குள்ளாகியிருக்கும் லிங்குசாமிக்கு, ரஜினி முருகன் பெரிய அளவுக்கு கைகொடுத்திருக்கிறது.

இந்தப் படத்தின் தலைப்புக்காக ரஜினியிடம் பேசிய அனுபவத்தை நேற்று நடந்த ரஜினிமுருகன் பிரஸ் மீட்டில் இப்படிச் சொன்னார் லிங்குசாமி:

"எடுத்த எடுப்பிலேயே இப்படத்திற்கு ரஜினிமுருகன் என்ற தலைப்புதான் வைத்தோம். தலைப்பில் ரஜினி சார் பெயர் இருப்பதால், ரஜினியிடம் இத்தலைப்பு குறித்து கூறிவிடலாம் என்று முடிவு செய்தோம். அதற்காக ரஜினியைப் பார்க்க அனுமதி கேட்டோம். அவர் இதற்கெல்லாம் ஏன் நேரில் வரவேண்டும், போனில் கூறுங்கள் என்றார்.

பின்னர் அவரிடம் நாங்கள் தயாரிக்கும் படத்திற்கு ‘ரஜினி முருகன்' என்று தலைப்பு வைத்திருக்கிறோம். சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் உங்கள் பெயருக்கு இழிவு ஏற்படும் வண்ணம் நாங்கள் ஏதுவும் காட்சிகள் வைக்கவில்லை. உங்கள் பெயருக்கு எந்த அவப்பெயரும் வராது என்று சொல்ல ஆரம்பித்தேன். அதற்குள் அவர், "எதுவும் சொல்லவேண்டாம். உங்கள் மேல் நம்பிக்கை இருக்கிறது.. உங்களுக்கு உதவினால் சரி,' என்று கூறி தலைப்பை வைத்துக் கொள்ளச் சொன்னார்.

அவரது நம்பிக்கையை இந்தப் படம் நிச்சயம் காப்பாற்றும்," என்றார்.

 

வாழ்க்கையில் நிறைய உத்தம வில்லன்கள் வருவார்கள்! - லிங்குசாமி

தனக்கு ரஜினி பெரிய உதவி செய்ததாக ரஜினி முருகன் பட விழாவில் இயக்குநர் லிங்குசாமி குறிப்பிட்டார். மேலும் சினிமாவில் நிறைய உத்தம வில்லன்கள் வருவார்கள், அவர்களை கண்டு கொள்ளாவிட்டால் நம்மை காணாம அடிச்சிருவாங்க என்றும் குறிப்பிட்டார்.

திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா நிறுவனம் தயாரிக்கும் படம் 'ரஜினிமுருகன்'. சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி, ராஜ்கிரண் ,சமுத்திரக்கனி நடித்துள்ளார்கள். பொன்ராம் இயக்கியுள்ளார். இப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா சென்னை தாஜ் கொரமண்டல் ஓட்டலில் நடைபெற்றது.

Lingusamy's self confidence speech at Rajini Murugan press meet

விழாவில் இயக்குநர் லிங்குசாமி பேசுகையில், "கும்கி' படத்தை 'மைனா' படம் வெற்றி பெறும் முன்பே ஒப்பந்தம் செய்து விட்டோம். விளம்பரம் பார்த்தே நம்பிக்கை வந்தது.

அதுபோலத்தான் இந்த படத்தையும் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படம் வெளிவரும் முன்பே பேசி ஒப்பந்தம் செய்து விட்டோம். ரஜினி முருகன் படத்தின் கதை திரையரங்க மூடில் ஜாலியாக இருந்தது.

வாழ்க்கையில் நிறைய உத்தம வில்லன்கள் வருவார்கள். அவர்களை இனம் கண்டுகொள்ளவில்லையென்றால், நம்மள காணாம அடிச்சிருவாங்க. நீங்கள் இதே மனசோட இருங்கள் என்று பொன் பொன்ராமைக் கேட்டுக் கொள்கிறேன். எனக்கு எவ்வளவோ பிரச்சினை இருக்கலாம். எல்லாவற்றையும் சந்தித்து விட்டுத்தான் வந்திருக்கிறேன்.

காலையில் மெரினா பீச் போனேன். ரஜினி முருகன் பற்றி எந்த நினைப்பும் இல்லாமல்தான் போனேன். வழியில் தென்பட்ட 'ரஜினிமுருகன்' போஸ்டர்கள் பெரிய தெம்பாக புத்துணர்ச்சியைத் தந்தன. அதைப் பார்த்ததும் எனக்கு கஷ்டம் இருப்பது எல்லாம் ஒரு விஷயமே கிடையாது எனத் தோன்றியது.

என் படம் 'ரன்' படப்பிடிப்பு சமயம் ரஜினி சாரின் 'பாபா'வும் நடந்தது முதன்முதலில் அப்போதுதான் எடிட்டிங்கில் ரஜினி சாரைப் பார்த்தேன். அப்போது 'ரன்' போஸ்டர்களை பார்த்து இருக்கிறார். 'செம எனர்ஜியாக இருக்கிறது' என்று கூறினார்.

'ரஜினி முருகன்' தலைப்பு பற்றி யோசித்தேன். ரஜினிகாந்த் என்று ரஜினி சார் பெயரில் தலைப்புக்கு அவர் யாருக்கும் அனுமதி தந்ததில்லை. சிவாஜி என்கிற தலைப்புக்கு இதே ரஜினி சார் சிவாஜி குடும்பத்தில் அனுமதி வாங்கினார்.

'ரஜினி முருகன்' தலைப்பு சம்பந்தமாக ரஜினிசாரை நேரில் சந்திக்க வேண்டும் என்று கேட்ட போது ரஜினி சார் போனில் வந்தார். நான் சொன்னேன் இந்த தலைப்பு பொன்ராமின் குரு ராஜேஷ் இயக்கிய 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் வரும் ஒரு பாத்திரம். எதிர்மறையாக எதுவும் பயன்படுத்த வில்லை என்று விரிவாகப் பேச ஆரம்பித்தேன் போதும் போதும் என்று என்னைப் பேசவே விடவில்லை. போனிலேயே ஓகே சொல்லி விட்டடார் .இது மிகப்பெரிய உதவி. அவருக்கு மிகப்பெரிய மனசு. அது மட்டுமல்ல ஏற்கெனவே தலைப்பு பற்றிய வழக்கு ஏதோ இருக்கு. சௌந்தர்யாகிட்டே கேட்டு க்ளியர் பண்ணிக் குங்க என்றும் சொன்னார்.

எனக்காக இந்த தலைப்பை விட்டுக் கொடுத்த ரஜினிசாருக்கு பெரிய நன்றி
சினிமாவே நம்பிக்கையில்தான் இயங்குகிறது. ஊரிலிருந்து இங்கு நான் வந்தபோது என்ன கொண்டு வந்தேன்.? நம்பிக்கையை மட்டும்தான் எடுத்துக்கொண்டு வந்தேன். வேறு என்ன அள்ளிக் கொண்டு வந்தேன்?

உதவி இயக்குநராக சென்னையிலிருந்து நான் ஊருக்குப் போகும் போதெல்லாம் நான் மதிக்கும் உறவினரை வைத்து என்னிடம் சமரசம் பேசி மனதை மாற்றுவார்கள். சினிமாவில் லட்சம் பேர் வருகிறார்கள். ஒருவன்தான் ஜெயிக்கிறான் உன்னால் முடியுமா என்பார்கள்.அப்போது அந்த ஒருவன் நான்தான் என்பேன். நான் சினிமாதான் என்பதில் உறுதியாக இருந்தேன்; நம்பிக்கையாக இருந்தேன்; பிடிவாதமாக இருந்தேன்

ஒருநாள் குடும்ப ஜோதிடர் என்று ஒருவர் வந்தார். அவர் சொன்னார்.. 'உன்னால் சினிமாவில் ஒரு பிரேம் கூட எடுக்க முடியாது என்று . அவர் சொன்ன மூன்றாவது மாதத்தில் 'ஆனந்தம்' படப்பிடிப்பு தொடங்கி விட்டேன்.

இன்றைக்கு நாலு படங்கள் தயாரிக்கிற அளவுக்கு வளர்ந்திருக்கிறோம் சினிமாவில் நம்பிக்கை மட்டும் இருந்தால் போதும். நான் ஒவ்வொரு தடவையும் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி பார்த்து விட்டுத்தான் வந்திருக்கிறேன். இது என் முதல் பாதி. செகன்ட் ஹாஃப் இனிமேல்தான். எனவே படம் பிரச்சினை பற்றிக் கவலை இல்லை. 'வழக்கு எண் ' பட சமயத்தில் வாய்ப்பு கேட்டவர்தான் இந்த சிவகார்த்திகேயன். அந்த 'வழக்குஎண் ' பட இயக்குநர் பாலாஜி சக்திவேல் அடுத்த படம் எடுப்பதற்குள் சிவகார்த்திகேயன் நடித்து எட்டாவது படத்துக்கு வந்து விட்டார். இவர் இன்னமும் வளர்வார்.

என்னைப் பற்றிக் கவலை வேண்டாம், 'ரஜினி முருகன்' படப்பிடிப்பை நடத்துங்கள் என்றேன். முடித்தேவிட்டார்கள். 'ரஜினி முருகன்' குறித்த நேரத்தில் வெளியாகும். என் சொத்துக்களை விற்றாவது இந்தப் படத்தை வெளியிட்டுவிடுவேன்.

'சண்டக்கோழி 2 'விரைவில் எடுப்போம். ராஜ்கிரண் நடிப்பார். இமான்தான் இசை அமைப்பார்," என்றார்.

 

யானைப் பசி எனக்கு... யாராச்சும் சாப்பாடு தந்தா அவங்களை ரொம்பப் பிடிக்கும்... "தர்ஸ்டி" திரிஷா!

சென்னை: நடிகை திரிஷா ரொம்ப வெளிப்படையானவர். மனசில் பட்டதை பட்டென்று சொல்லும் வழக்கம் உளளவர். இப்போது டிவிட்டரில் தனக்கு யாரையெல்லாம் ரொம்பப் பிடிக்கும் என்பதையும் வெளிப்படையாக, அதேசமயம் கலகலப்பாக சொல்லியுள்ளார்.

டிவிட்டரில் அவர் போட்டுள்ள ஒரு லேட்டஸ்ட் டிவிட்டில், எனக்கு சாப்பாடுன்னா ரொம்பப் பிடிக்கும். அதுவும் எனக்காக சமைத்துத் தருபவர்களை ரொம்ப ரொம்பப் பிடிக்கும். எனக்காக சாப்பாடு அனுப்புபவர்கள், என்னுடன் சேர்ந்து சாப்பிடுபவர்களை ரொம்பப் பிடிக்கும்.

எனக்கு யானைப் பசி...உணவுக்கு அஞ்சலி.. சாப்பிடுவதற்காகவே உயிர் வாழ்வோம் என்று கூறியுள்ளார் திரிஷா.

திருமணம் நின்று போனது, மீண்டும் காதலிப்பதாக வந்த தகவல்களால் பாதிக்கப்படாமல் வழக்கம் போல தனது பணிகளில் சுறுசுறுப்பாக இருக்கிறார் திரிஷா.

தற்போது கமல்ஹாசனுடன் தூங்காவனம் படத்தில் நடித்து வருகிறார் திரிஷா என்பது நினைவிருக்கலாம்.