பைனான்சியரை தாக்கிய வழக்கு- புவனேஸ்வரி ஹைதராபாத் ஓட்டம்?


சென்னையில் பைனான்சியர் அசோக்குமார் தாக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கவர்ச்சி நடிகை புவனேஸ்வரி அவரது வீட்டில் இல்லை. அவர் ஹைதராபாத்துக்குப் போய் விட்டார். அவர் திரும்பி வந்ததும் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

சென்னை தி.நகரைச் சேர்ந்த அசோக்குமார் என்பவர், தன்னிடம் நடிகை புவனேஸ்வரி வாடகைக்கு கார் வாங்கியதாகவும், பின்னர் வாடகையும் கொடுக்காமல், காரையும் திருப்பித் தராமல் இழுத்தடித்து வருவதாகவும், இதைக் கேட்டபோது தன்னை மிரட்டியதாகவும் கூறி போலீஸில் புகார் கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் அவர் மீது திடீரென தாக்குதல் நடந்தது. இதையடுத்து பாண்டி பஜார் போலீஸில் இன்னொரு புகார் கொடுத்தார் அசோக்குமார். அதில் புவனேஸ்வரிதான் இந்த தாக்குதலின் பின்னணியில் உள்ளதாக கூறியிருந்தார். இதையடுத்து இந்த வழக்கையும் பதிவு செய்தது போலீஸ்.

இதுகுறித்து விசாரிக்க புவனேஸ்வரியைத் தேடி போலீஸார் போனார்களாம். ஆனால் அவர் இல்லையாம். ஹைதராபாத் போயிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறதாம். இதனால் அவர் வந்ததும் விசாரணை நடத்தப்படுமாம்.
 

வாடகைத்தாய் மூலம் ஆமிர்கானுக்கு ஆண் குழந்தை பிறந்தது


வாடகைத்தாய் மூலம் ஆமிர்கான் -கிரண் ராவ் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

நீண்ட காலத்திற்குப் பிறந்துள்ள இந்தக் குழந்தை எங்களுக்கு மிகவும் விசேஷமானது, சிறப்பானது என்று ஆமிர்கான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ஆமிருக்கு தற்போது 46 வயதாகிறது என்பது நினைவிருக்கலாம்.

ஆமிர்கான் -கிரண் ராவ் தம்பதிக்கு திருமணமாகி பல காலமாகியும் குழந்தைப் பேறு கிடைக்கவில்லை. இதையடுத்து செயற்கை முறையில் கருவூட்டம் செய்து வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற ஆமிர்கான்-கிரண் முடிவு செய்தனர். அதன்பிட செயற்கை முறையில் கருத்தரிப்பு நடத்தப்பட்டு வாடகைத்தாயின் கருவறையில் ஆமிர்கான் தம்பதியின் குழந்தை வளர்ந்து வந்தது. தற்போது அழகான ஆண் குழந்தையை அந்த வாடகைத்தாய் பெற்றுள்ளார்.

இதுகுறித்து ஆமிர்கான் கூறுகையில், கடவுளின் அருள், அறிவியலின் அற்புதம், எங்களது குடும்பங்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு, அன்பு ஆகியவற்றுக்கு நாங்கள் தலை வணங்குகிறோம். எங்களுக்காக பிரார்த்தனை செய்த, எங்களின் உணர்வுகளை மதித்த அனைவருக்கும் நன்றி கூறுகிறோம் என்றார் ஆமிர்.

டிசம்பர் 1ம் தேதி மும்பையில் உள்ள மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது.

ஆமிர்கானுக்கும், கிரண் ராவுக்கும் 2005ம் ஆண்டு திருமணம் நடந்தது. அதன் பின்னர் 2009ல் கிரண் கருத்தரித்தார். ஆனால் அது அபார்ஷன் ஆகி விட்டது. ஆமிர்கானைப் பொறுத்தவரை இது 3வது குழந்தையாகும். ஏற்கனவே தனது முதல் திருமணம் மூலம் ஆமிருக்கு 2 குழந்தைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 

வீணா மாலிக்கின் நிர்வாண போஸ்- தந்தை அதிர்ச்சி- மகளுக்குக் கண்டனம்


பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக் முழு நிர்வாண போஸ் கொடுத்த செயலுக்கு அவரது தந்தை மாலிக் முகம்மது அஸ்லம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தனது மகளின் செயல் மன்னிக்கவே முடியாத குற்றம் என்றும் அவர் சாடியுள்ளார். பாகிஸ்தானுக்குப் பெருத்த அவமானத்தை வீணா மாலிக் தேடிக் கொடுத்து விட்டார் என்றும் அவர் வருத்தப்பட்டுள்ளார். மேலும் வீணா மாலிக் மீது பாகிஸ்தான் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், எப்எச்எம் பத்திரிக்கைக்கு வீணா கொடுத்துள்ள ஆபாச போஸானது மிகவும் கண்டனத்துக்குரியது. அவரது செயலால் நான் கடும் கோபமடைந்துள்ளேன். மனம் உடைந்து போயுள்ளேன். நாட்டுக்கு கெட்ட பெயரைத் தேடிக் கொடுத்து விட்டார் வீணா. அவர் மீது பாகிஸ்தான் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

இதற்கிடையே, இந்தப் படம் உண்மையானதா, அல்லது போலியானதா என்பது குறித்து விசாரிக்கப்படும் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் தெரிவித்துள்ளார்.

முன்னதாக எப்எச்எம் இந்தியா இதழின் அட்டைப் படத்திற்காக முழு நீள நிர்வாண கோலத்தில் வீணா மாலிக் போஸ் கொடுத்திருந்தார். மேலும் தனது இடது கையின் தோள்பட்டையில் ஐஎஸ்ஐ என்று பாகிஸ்தான் உளவு அமைப்பின் பெயரையும் பச்சை குத்தியிருந்தார். இதனால் இந்தியாவிலும் வீணாவுக்கு எதிராக குரல்கள் கிளம்பின.
 

எப்எச்எம் இதழுக்கு ரூ. 10 கோடி கேட்டு வீணா மாலிக் நோட்டீஸ்


தன்னுடைய ஆபாசப் படத்தை வெளியிட்டு தனது புகழுக்கு களங்கம் கற்பித்ததற்காக ரூ. 10 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்று கோரி எப்எச்எம் இந்தியா இதழுக்கு பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

எப்எச்எம் இந்தியா இதழின் அட்டைப் படத்தில் வீணா மாலிக்கின் முழு நீள நிர்வாணப் படம் இடம் பெற்றிருந்தது. இடதுபுற தோள்பட்டையில் ஐஎஸ்ஐ என்ற பச்சை பெரிதாக தெரியும் வகையிலும், தனது இரு கைகளாலும், முன்னழகை மறைத்தபடியும் போஸ் கொடுத்திருந்தார்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டு விட்டது. ஆனால் நான் இப்படி ஒரு போஸே கொடுக்கவில்லை என்று வீணா விளக்கம் அளித்தார். ஆனால் எப்எச்எம் இதழ் அதை மறுத்தது. வீணாதான் இப்படி போஸ் கொடுத்தார். மேலும் ஐஎஸ்ஐ என்ற எழுத்து நன்கு பெரிதாக தெரிய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இந்த போஸுக்காக அவருக்கு பெரும் தொகையும் கொடுத்துள்ளோம் என்று அந்த நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் எப்எச்எம் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் வீணா. அதில், இந்த புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டது. இதனால் எனது புகழுக்கும், பெயருக்கும் களங்கம் ஏற்பட்டு விட்டது. இந்த செயலானது இந்திய பீனல் கோட் சட்டத்தின்படியும், இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டப்படியும் தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே இதற்காக ரூ. 10 கோடி இழப்பீடு தர வேண்டும் என்று வீணா கூறியுள்ளார்.
 

கூட நடித்த ஹீரோவை போலீஸ் நிலையத்தில் வைத்து கைப் பிடித்த கேரள நடிகை


தஞ்சை: உடன் நடித்த ஹீரோவைக் காதலித்த கேரள நடிகை போலீஸ் துணையுடன் அவரை மணந்தார்.

தஞ்சை பாத்திமா நகரைச் சேர்ந்த பீட்டர் மகன் டோனி என்கிற அந்தோணி(22). மகன் டோனி நடித்த உயிரே என்னோடு கலந்துவிடு என்ற படத்தில் பீட்டர் துணை இயக்குனராக பணிபுரிந்தார். அந்த படத்தில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அமுலு என்ற மீனாட்சி(19) கதாநாயகியாக நடித்திருந்தார். அவர் மலையாளத்தில் 2 படங்களில் நடித்துள்ளார்.

இந்த படப்பிடிப்பின்போது ஹீரோவும், ஹிரோயினும் நிஜத்தில் காதலிக்க ஆரம்பித்தனர். தனிமையில் சந்தித்து உல்லாசமாகவும் இருந்துள்ளனர். அதன் விளைவாக மீனாட்சி கர்ப்பமானார். உடனே டோனியை சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். அதற்கு டோனியின் குடும்பத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மீனாட்சி தஞ்சை மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் கொடுத்தார்.

உடனே போலீசார் டோனி மற்றும் அவரது பெற்றோரை அழைத்துப் பேசினர். இதற்கிடையே இந்த விவகாரம் பற்றி தகவல் கிடைத்து மீனாட்சியின் உறவினர்களும் அங்கு வந்து சேர்ந்தனர். இதையடுத்து இரு வீட்டாரையும் சமாதானம் செய்த போலீசார் டோனிக்கும், மீனாட்சிக்கும் திருமணம் செய்து வைத்தனர்.
 

ரஜினி படத்தில் நடிக்கிறாரா? - அனுஷ்கா மெளனம்!


ரஜினி படத்தில் நடிப்பது குறித்து இதுவரை அனுஷ்காவிடமிருந்து சம்மதம் என்ற வார்த்தை வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அமலா பால், ஆசின் என வேறு சிலரையும் கோச்சடையான் யூனிட் அணுகியுள்ளதாம்.

கோச்சடையான் என்ற பெயரில் ரஜினி ஒரு புதிய படத்தில் நடிக்கப் போகிறார். இதில் அவருக்கு ஜோடியாக நடிக்க அனுஷ்காவை அணுகியிருப்பதாக இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் கூறியிருந்தார். ஆனால் அனுஷ்காவிடமிருந்து இதுவரை சம்மதம் என்ற பதவில் வரவில்லை என்று தெரிகிறது.

இதனால் தற்போது ஆசின், அமலா பால் ஆகியோரையும் கோச்சடையான் குழு அணுகியிருப்பதாக தெரிகிறது. ஆனால் இவர்கள் அனுஷ்காவுக்குப் பதிலா அல்லது இவ்ர்களும் படத்தில் இருப்பார்களா என்பது தெரியவில்லை.

தற்போது அனுஷ்கா கை நிறையப் படங்களை வைத்துள்ளார். தமிழிலில் நான்கு படங்களில் அவர் புக் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது. செலவராகவன் இயக்கத்தில் இரண்டாம் உலகம், விக்ரமுடன் தாண்டவம், பிறகு அஜீத்துடன் ஒரு படம் என அவர் கால்ஷீட்களைக் கொடுத்து விட்டார். இது போக கார்த்தி நடிக்கும் படத்திலும் அனுஷ்கா நடிக்கிறார். இப்படி கை நிறையப் படங்கள் இருப்பதாலும், கால்ஷீட் இல்லை என்ற காரணத்தாலும் கோச்சடையான் படத்தில் நடிக்க உறுதியான பதிலை அவர் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஒருவேளை ரஜினி படத்தில் நடிக்க அனுஷ்கா முடிவெடுத்தால், மேற்கண்ட படங்களிலிருந்து அவர் விலக வேண்டும் அல்லது அனுஷ்கா ரஜினியுடன் நடித்து விட்டு வரட்டும் என்று நான்கு படங்களின் ஹீரோக்களும், இயக்குநர்களும் அனுஷ்காவை வழியனுப்பி வைக்க வேண்டும்.

அனுஷ்காவின் முடிவு என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டியதுதான்!
 

'பாலிட்டிக்ஸ்' பண்ண ஹன்சிகா ஆசை!


அரசியல் ஆர்வம் உள்ளது ஆனால் அரசியலுக்கு வருவேனா என்பதை தற்போது சொல்ல முடியாது. எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம் என்று நடிகை ஹன்சிகா மோத்வானி தெரிவித்துள்ளார்.

தமிழிலும், தெலுங்கிலும் நடித்து வரும் நடிகை ஹன்சிகா மோத்வானி நடித்துக் கொண்டே அரசியல் அறிவியல் பட்டப்படிப்பு படித்து வந்தார். தற்போது இறுதி செமஸ்டர் தேர்வு எழுதி முடித்துள்ளார். இதையடுத்து இனி முழுநேரமும் சினிமாவில் கவனம் செலுத்தவிருக்கிறார்.

தமிழில் உதயநிதி ஸ்டாலினுடன் ஒரு கல் ஒரு கண்ணாடியில் நடித்து வருகிறார். அமர்க்களமான கவர்ச்சிக்குச் சொந்தக்காரியாக இருப்பதால் அம்மணிக்கு தெலுங்கிலும் நல்ல வரவேற்பு உள்ளது.

இந்த நிலையில் தனது அரசியல் ஆர்வம் குறித்து வாய் திறந்துள்ளார் ஹன்சிகா. அவர் கூறுகையில்,

நான் பட்டப்படிப்பை முடித்துவிட்டேன். இனி ஃபுல்டைம் சினிமா தான். தமிழ் மற்றும் தெலுங்கில் எனக்கு நல்ல வரவேற்பு உள்ளது. நல்ல கதாபாத்திரங்களைப் பார்த்து தான் தேர்வு செய்வேன்.

பொலிடிக்கல் சயின்ஸ் படித்துள்ளதால் எனக்கு அரசியல் ஆர்வம் உள்ளது. அரசியல் நிகழ்வுகளை கவனித்து வருகிறேன். அதற்காக நான் அரசியலுக்கு வருவேனா என்று தற்போது சொல்ல முடியாது. எதிர் காலத்தில் எதுவும் நடக்கலாம் என்றார்.

ஹன்சிகாவை அனைவரும் சின்ன குஷ்பு என்று செல்லமாக அழைத்து வருகின்றனர். குஷ்பு நடிப்பில் பெயர் எடுத்த பிறகு அரசியலில் ஈடுபட்டு வருகிறார். ஹன்சிகாவும் குஷ்பு பாணியில் அரசியலி்ல் ஈடுபடுவார் போல் இருக்கிறது.

கருத்து சொல்வதிலும் குஷ்பு மாதிரியே ஹன்சிகாவும் கலக்குவாரா என்பது தெரியவில்லை...!!
 

என் கணவரின் அனுமதியுடனேயே கவர்ச்சிகரமாக நடிக்கிறேன்- ஸ்வேதா மேனன்


எனது தொழிலை எனது கணவர் நன்கு புரிந்து வைத்துள்ளார். இதனால்தான் நான் கவர்ச்சிகரமாக நடிக்கவும் அவர் அனுமதி தருகிறார். நானும், எனது கணவரிடம் கூறி விட்டே கவர்ச்சி வேடங்களில் நடித்து வருகிறேன் என்று கூறியுள்ளார் மலையாள நடிகை ஸ்வேதா மேனன்.

ஸ்வேதா மேனன் மிகவும் வித்தியாசமானவர். கவர்ச்சிகரமான ரோலில் நடிக்க அவர் சற்றும் தயங்குவதில்லை. இத்தனைக்கும் கடந்த ஜூனில்தான் இவருக்குக் கல்யாணம் நடந்தது. ஆனாலும் இப்போதும் அவர் கவர்ச்சிகரமான பாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார்.

இதுகுறித்து அவரிடம் கேட்டால், சினிமா என்பது ஒரு தொழில். கேரக்டருக்கு கவர்ச்சி தேவைப்பட்டால் கவர்ச்சியாக நடிப்பதிலும் தவறில்லை. நடிக்கு வந்து விட்டால், இந்த வேடம், அந்த வேடம் என்று பார்க்க முடியாது, பார்க்கவும் கூடாது. எப்படியாக இருந்தாலும் நடிக்க வேண்டும். கவர்ச்சி தேவைப்பட்டால் நடிப்பதில் தவறே இல்லை.

இதை என் கணவர் நன்கு புரிந்து வைத்துள்ளார். எனது முன்னேற்றத்தில் அவருக்கு நிறைய அக்கறை உண்டு. எனக்கு அவரால் என்ன உதவி செய்ய முடியுமோ அதைச் செய்கிறார் என்கிறார் ஸ்வேதா.

ஜாடிக்கேத்த மூடிதான், ஸ்வேதாவுக்கேற்ற கணவர்தான்..!
 

எளிமையான வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் தேவ் ஆனந்த்-கருணாநிதி


மறைந்த இந்தி நடிகர் தேவ் ஆனந்த் எளிமையான வாழ்க்கைக்குச் சொந்தக்காரராக இருந்தார் என்று திமுக தலைவர் கருணாநிதி புகழாரம் சூட்டியுள்ளார்.

தேவ் ஆனந்த் மறைவுக்கு கருணாநிதி இரங்கல் தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில்,

திரைப்பட உலகில் பல ஆண்டுகள் புகழ்பெற்ற நடிகராக விளங்கிய தேவ் ஆனந்த் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன். மிகப்பெரிய நடிகராக அவர் வலம் வந்த போதிலும், எளிமையான வாழ்க்கைக்குச் சொந்தக்காரராக விளங்கியவர்.

அவர் மறைவால் வருந்தும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.