சர்ச்சைகளை தவிர்க்க ஆன்லைனிலேயே படங்களின் தலைப்புகளைப் பதிவு செய்யலாமே!

Director Association Urges Online Registration சென்னை: இப்போதெல்லாம் ஒரு படம் திரைக்கு வர இரண்டு வாரம் இருக்கும்போது, படத்தின் தலைப்பை ஏற்கெனவே பதிவு செய்துவிட்டதாகக் கூறி, தடை கேட்டு யாராவது கிளம்புவார்கள்.

இதனைத் தவிர்க்க ஆன்லைனில் தலைப்புகளை பதிவு செய்யும் முறை கொண்டுவரப்பட வேண்டும் என நீண் நாட்களாக தயாரிப்பாளர்கள் கேட்டு வந்தனர்.

ஆனால் தயாரிப்பாளர் சங்கம் கண்டுகொள்வதாக தெரியவில்லை. இந்த நிலையில் இப்பிரச்சினையில் இயக்குநர்கள் சங்கம் தலையிட்டுள்ளது.

ஹரிஷ் கல்யாண், பூனம் சவுர் ஜோடியாக நடித்த கெஸ்ட் படத்தின் பாடல் வெளியீட்டு விழா பிரசாத் லேப்பில் நடந்தது. இதில் பங்கேற்று பேசிய இயக்குனர் ஜனநாதன் இதுகுறித்துப் பேசுகையில், "இந்த கெஸ்ட் படத்துக்கு 'அக்கம் பக்கம்' என பெயர் வைத்திருந்தனர். தயாரிப்பாளர் சங்கத்திலும் பதிவு செய்திருந்தார்கள்.

ஆனால் திடீரென்று இன்னொருவர் இதே பெயரை கில்டில் பதிவு செய்திருப்பதாக சொல்லி சொந்தம் கொண்டாடினார். இதனால் தலைப்பை 'கெஸ்ட்' என மாற்றியுள்ளனர்.

விஞ்ஞானம் எவ்வளவோ முன்னேறிய நிலையில் கூட படங்களின் தலைப்புகளை பழைய முறையிலேயே பதிவு செய்கிறோம். இதனால் கோர்ட்டு வரை செல்ல வேண்டி உள்ளது.

ஆந்திராவில் இந்த பிரச்சினை இல்லை. அங்கு ஒரே இடத்தில்தான் தலைப்பை பதிவு செய்கிறார்கள். ஆனால் இங்குதான் சேம்பர், தயாரிப்பாளர் சங்கம், கில்டு என மூன்று இடங்களில் பட தலைப்புகளை பதிவு செய்யும் முறை உள்ளது.

இதற்கு பதிலாக கம்ப்யூட்டர் ஆன்லைனில் தலைப்புகளை பதிவு செய்தால் சர்ச்சைகள் எழாது. இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு இயக்குனர் சங்கம் கடிதம் எழுதி உள்ளது," என்றார்.
 

கமல் உடல்நிலை... மீடியா கிளப்பிய பரபரப்பு!!

Media Reports On Kamal Health

விஸ்வரூபம் படம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளால் கமலுக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் மீடியாவில் வெளியான செய்திகள் அவரது ரசிகர்களுக்கு பெரும் கோபத்தைத் தந்துள்ளது.

புதுப்புது தொழில்நுட்பங்களோடு "விஸ்வரூபம்' படத்தை இயக்கி தயாரித்து, நடித்து பிரமாண்ட படைப்பாக உருவாக்கியுள்ளார் கமல்.

ஆனால் வழக்கம்போல சர்ச்சைகளும், சலசலப்பும் கமலை தொடர்ந்தபடியே இருக்கின்றன.

"தலிபான் தீவிரவாதிகளையும், தலிபான்-அமெரிக்கா வுக்கு இடையே நடந்த ஆப்கான் போரும் கதையின் மையமாகியிருப்பதால் முஸ்லிம்களை மோசமானவர்களாக சித்தரித்திருக்கிறார் கமல். இஸ்லாத் விமர்சிக்கப்பட்டிருக்கிறது!' என்ற குற்றச்சாட்டு இப்போது கிளம்பியுள்ளது.

"இஸ்லாமிய மத பிரதிநிதிகளுக்கும், மனித உரிமை ஆர்வலர்களுக்கும் "விஸ்வரூபம்' படத்தை போட்டுக் காட்ட வேண்டும்! அதில் ஆட்சேபகரமான காட்சிகள் இருப்பது தெரிய வந்தால் அதை நீக்கிய பிறகே படத்தை வெளியிட வேண்டும்!'' என தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகம் பெரிய பிரச்சினைக்கு சுழி போட்டுள்ளது.

இந்நிலையில் 15-ந்தேதி பகல் 12 மணியளவில் "விஸ்வரூபம்' படத்தினால் ஏற்பட்டிருக்கும் மனஉளைச்சலால் கமலுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக மீடியா உலகில் ஒரே பதட்டம் நிலவியது.

ஆனால் அது முழுக்க வதந்தி என்று கமல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கமல் மிகுந்த ஆரோக்கியத்துடன் தற்போது அமெரிக்காவில் இருப்பதாகவும், விஸ்வரூபம் படத்தின் பிரிமியர் ஷோவை அமெரிக்காவில் வெளியிடும் வேலைகளிலும் ஹாலிவுட்டில் படம் பண்ணுவது பற்றிய முன்னோட்டத்திலும் பிஸியாக இருப்பதாகவும் கமல் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

 

நடிகை சோனா மீது கிரிமினல் வழக்கு - ஆண்கள் பாதுகாப்பு சங்கம்

Criminal Case On Actress Sona Says

ஆண்களை துடைத்துப் போடும் டிஸ்யூ பேப்பர்கள் என்று கூறிய சோனா மீது கிரிமினல் வழக்கு போடப்படும் என்று ஆண்கள் பாதுகாப்பு சங்கம் என்ற அமைப்பு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இன்று சோனா வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய இந்த சங்கத்தின் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் அருள்துமிலன், "ஆண்களை டிஸ்யூ பேப்பராக பயன்படுத்தி செக்ஸ் வைத்து விட்டு தூக்கி எறிந்துவிடுவேன். திருமணம் செய்து வாழ்வது முட்டாள்தனமானது. அதைவிட முட்டாள்தனமானது ஆண்களுடன் சேர்ந்து வாழ்வது என்று நடிகை சோனா ஒரு பத்திரிகைக்கு பேட்டி கொடுத்திருந்தார்.

இந்த இரண்டு கருத்துக்களையும் நடிகை சோனா திரும்பப் பெற்று, பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஏற்கனவே சொல்லியுருந்தோம்.

ஆனால், அவர் தனது கருத்துக்களை திரும்பப் பெற்று மன்னிப்பு கேட்கவில்லை. இதனால்தான் நாங்கள் இன்று முற்றுகை போராட்டம் நடத்தினோம். அடுத்த கட்டமாக நடிகை சோனா மீது கிரிமினல் வழக்கு தொடருவோம்," என்றார்.

 

நடிகை சோனாவின் தேனாம்பேட்டை வீடு முற்றுகை: திடீர் பரபரப்பு

Protest Against Actress Sona 100 Arrested

சென்னை: தேனாம்பேட்டையில் உள்ள நடிகை சோனா வீட்டை 100-க்கும் மேற்பட்டவர்கள் முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நடிகை சோனா சமீபத்தில் அளித்த பேட்டியில் ஆண்களை, துடைத்துப்போடும் பேப்பருக்கு சமம் என வர்ணித்திருந்தார்.

இதனால் ஆண்களின் கோபத்தை சம்பாதித்தார் சோனா. உடனே தான் அப்படி சொல்லவில்லை என பல்டியடித்தார்.

ஆனால் அவர் பேச்சை கேட்க ஆண்கள் தயாராக இல்லை. வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் அறிவித்தனர்.

சோனாவின் வீடு சென்னை தேனாம்பேட்டையில் உள்ளது. இந்த வீட்டை ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் இன்று திடீரென முற்றுகையிட்டனர். சோனாவுக்கு எதிராக கோஷமிட்டனர்.

ஆண்கள் குறித்து அவதூறாகப் பேசிய சோனா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வற்புறுத்தும் வகையில் கோஷங்கள் அமைந்தன.

சம்பவம் அறிந்ததும் போலீஸார் சோனா வீட்டுக்குச் சென்றனர். அங்கு கூடியிருந்தவர்களை கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர்.

 

மீண்டும் தமிழில் பாட வரும் வசுந்தரா தாஸ்!

Vasunthara Returns Kollywood As Singer

வசுந்தரா தாஸை நினைவிருக்கிறதா... ? ஒரு பாடகியாக அறிமுகமாகி, தொடர்ந்து கமலின் ஹே ராமில் நாயகியானவர்.

அஜீத்துக்கு ஜோடியாக பின்னர் சிட்டிசனில் நடித்தார். குஷ்பு ரேஞ்சுக்கு தமிழில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்டார். வாய்ப்புகளும் குவிந்தன. அவரே வழக்கம் போல, இந்தியில் நடிக்க ஆர்வத்துடன் கிளம்பினார். மான்சூன் வெட்டிங்கில் நடித்தார். ஆனால் திடீரென காணாமல் போனார்.

பெங்களூரை விட்டு மும்பைக்கே நிரந்தரமாகக் குடியேறிய வசுந்தரா, ஒரு மியூசிக்கில் பேண்டில் பாடிக் கொண்டிருந்தார்.

குரல் பாதிக்கப்பட்டதால் பாடுவதும் நின்றுபோனது. இப்போது நான்கைந்தாண்டுகள் கழித்து பின் நதிகள் நனைவதில்லை என்ற படம் மூலம் மீண்டும் பாடகியாகியுள்ளார்.

இந்தப் படத்துக்கு இசை சௌந்தர்யன். கதை, வசனம் எழுதி நாஞ்சில் பி.சி.அன்பழகன் இயக்குகிறார்.

 

15 வருடத்துக்கு பிறகு இசை ஆல்பம் : ரகுமான் தகவல்

15 years later, Music Album: Rahman Information 15 வருடத்துக்கு பிறகு இசை ஆல்பம் தயாரிக்க முடிவு செய்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான். இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் 'மா துஜே சலாம் என்ற இசை ஆல்பம் தயாரித்தார். 'வந்தே மாதரம் என்ற பாடல் சர்வதேச அளவில் வரவேற்பை பெற்றது. இது ரசிகர்கள் மனதில் அவருக்கு தனி இடத்தை பெற்றுத் தந்தது. தற்போது புதிய இசை ஆல்பம் தயாரிக்க முடிவு செய்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது: மா துஜே சலாம் இசை ஆல்பம் தயாரித்து 15 வருடம் ஆகிவிட்டது. இது என்னுடைய முதல் தனி ஆல்பம்.

இன்னொரு முறை அதுபோல் ஒரு ஆல்பம் என்னால் தயாரிக்க முடியாது. என்னுடைய இடைவிடாத பணிக்கு மத்தியில் மற்றொரு ஆல்பம் தயாரிப்பது சவாலானது. ஆனாலும் இப்போது அதற்கான நேரம் வந்திருக்கிறது. இவ்வாறு ஏ.ஆர். ரகுமான் கூறினார். 'மா துஜே சலாம் ஆல்பம் இந்திய சுதந்திர தினத்தின் கோல்டன் ஜூப்ளியன்று வெளியிடப்பட்டது. தேசபக்தியை வலியுறுத்தும் ஆல்பமாக அது அமைந்தது. 'வந்தே மாதரம்தான் இதுவரை இந்தியாவில் வெளியான சினிமா அல்லாத இசை ஆல¢பத்தில் அதிக விற்பனை ஆனது என்று இசை உலகில் கூறப்படுகிறது.
 

உன் சமையல் அறையில்...: இளையராஜாவுடன் மீண்டும் பிரகாஷ் ராஜ்!

Prakash Raj S Join Hands With Ilayaraaja

தோனி படத்துக்குப் பிறகு மீண்டும் இசைஞானி இளையராஜாவுடன் கைகோர்க்கிறார் பிரகாஷ் ராஜ். அதுவும் ஒரு இயக்குநராக!

தோனி படத்தில் பிரகாஷ் ராஜ் நடிப்பும் இயக்கமும், இளையராஜாவின் இசையும் பெரும் பாராட்டுக்களையும் வரவேற்பையும் பெற்றன.

அடுத்து தமிழில் ஒரு படத்தை இயக்கி நடிக்கிறார் பிரகாஷ் ராஜ். படத்துக்கு தலைப்பு உன் சமையல் அறையில். மலையாளத்தில் வெளியாகி ஹிட்டடித்த சால்ட் அன்ட் பெப்பர் படத்தின் ரீமேக் இது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் பிரகாஷ்ராஜ் இயக்கி வரும் இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். 5 பாடல்கள் இடம்பெறுகின்றனவாம்.

இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜுடன் நடிக்கப் போகும் நடிகை... வயசானாலும் குலுங்கும் கவர்ச்சியுடன் உலா வரும் தபு!

 

‘உச்சிதனை முகர்ந்தால்’ படம் இலங்கையில் சன் டிவியில் ஒளிபரப்பாகவில்லை!

Ban Uchithanai Mukarnthal Srilankan Tamil Channel

ஈழத்தமிழர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘உச்சிதனை முகர்ந்தால்' படத்திற்கு பதிலாக இலங்கையில் வேறு படம் ஒளிபரப்பு செய்யப்பட்டதால் இலங்கை தமிழர்கள் ஏமாற்றமடைந்தனர்.

சன் டிவியில் நேற்று மாலை "உச்சிதனை முகர்ந்தால்' திரைப்படம் ஒளிபரப்பானது. இதற்காக கடந்த ஒரு வார காலமாக முன்னோட்டம் சன் டிவியில் முன்னோட்டம் போட்டனர். இதனைப் பார்த்த யாழ்பாணத்தில் உள்ள தமிழர்கள் நேற்று மாலை இந்த திரைப்படம் பார்க்க ஆவலாக காத்திருந்தனர். ஆனால் அதே நேரத்தில் அங்கு உச்சிதனை முகர்ந்தால் படத்திற்குப் பதிலாக வேறு படத்தை ஒளிபரப்பு செய்துள்ளனர். இதனால் படத்தை பார்க்க முடியாமல் ஏமாற்றமடைந்ததாக யாழ்பாணத்தில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் கூறியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில்உள்ள "ஆஸ்க் நெற்வேக்' நிறுவனம் கேபிள் தொலைக்காட்சி சேவையை வழங்குகிறது. உச்சிதனை முகர்ந்தால் படத்தை ஒளிபரப்புவதற்கு இலங்கை அரசு தடை விதித்த காரணத்தினால்தான் அங்கு இந்த படத்திற்கு பதிலாக வேறு கேபிள் நிறுவனத்தினர் வேறு படத்தை ஒளிபரப்பியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

 

புதியதலைமுறை டிவி செய்தி வாசிப்பாளர் தற்கொலை

Tv News Reader Commits Suicide

சென்னை: சென்னையில் புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்திவாசிப்பாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய தலைமுறையில் வணிகச் செய்திகள் வாசிப்பாளராக பணிபுரிந்து வந்தவர் நெடுஞ்செழியன். இவர் தனது மனைவியுடன் சென்னை பூந்தமல்லியில் வசித்து வருகிறார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்புதான் இவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. தலைதீபாவளி கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு மனைவியுடன் சென்றுவிட்டு இருதினங்களுக்கு முன்புதான் சென்னை திரும்பினார்.

இந்த நிலையில் நேற்று இரவு கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அதிகாலை 3 மணிக்கு தனது வீட்டில் நெடுஞ்செழியன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் அவருடன் பணி புரியும் சக பணியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெடுஞ்செழியன் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் செய்தித்துறையில் பணிபுரியும் சக பணியாளர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டுள்ளனர்.

புதிய தலைமுறை அஞ்சலி

நெடுஞ்செழியன் மறைவுக்கு புதியதலைமுறை தொலைக்காட்சி அஞ்சலி செலுத்தியுள்ளது.

இது தொடர்பாக செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 27 வயதே ஆகும் நெடுஞ்செழியன், எப்போதுமே புன்முறுவலுடன் காணப்படுபவர். அனைவரிடமும் இனிமையாகவும், கலகலப்பாகவும் பழகக்கூடிய பண்பாளர்.

பணிகளை மிகவும் சிறப்பாகவும், விரைவாகவும், அனைவரும் பாராட்டத்தக்க வகையில் செய்து முடிப்பதில் நெடுஞ்செழியன் வல்லவர். அவரது மறைவுக்கு, புதிய தலைமுறை தனது அஞ்சலியை செலுத்துகிறது.

சிறந்த செய்தியாளரான அவரது இழப்பு, புதிய தலைமுறைக்கு மட்டுமன்றி ஊடக உலகத்திற்கே ஈடு செய்ய முடியாதது. நெடுஞ்செழியனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு தனது இரங்கலை புதிய தலைமுறை தொலைக்காட்சி தெரிவித்துக் கொள்கிறது என்று குறிப்பிட்டுள்ளது.

 

வதந்திகள் மனதை காயப்படுத்துகிறது : பிரியங்கா சோப்ரா வருத்தம்

Rumor hurts heart : Priyanka Chopra upset எனக்கும் குடும்பம் இருக்கிறது. என்னைப் பற்றி வரும் வதந்திகள் என் மனதை காயப்படுத்துகிறது என்றார் பிரியங்கா சோப்ரா. பாலிவுட் முன்னணி ஹீரோயின்களில் ஒருவரான பிரியங்கா சோப்ரா, பற்றி சமீபகாலமாக பல்வேறு தகவல்கள் உலவுகிறது. அதில் ஒன்று, சல்மான்கான் வீட்டிலிருந்து அதிகாலையில் அவர் வெளியேறியதாக வந்த செய்தி. இதனால் வேதனை அடைந்தார் பிரியங்கா. அவர் கூறியதாவது: என்னைப் பற்றி கடந்த சில மாதங்களாக வதந்திகள் உலா வருகிறது. என்னுடைய உணர்வுகளையும், வாழ்க்கையையும் தனிப்பட்ட முறையிலேயே பாவிக்கிறேன். 17வது வயதில் நடிக்க வந்தேன். இப்போது நிறைய அனுபவம் கிடைத்திருக்கிறது. அதிக நேரம் சினிமா விளக்குக்கு மத்தியில் கழிகிறது.

இதனால் என்னை சுற்றி நடப்பவைகள் என்னை பாதிக்காது என்று சொல்ல முடியாது. எனக்கும் குடும்பம் இருக்கிறது. நான் ஒரு பெண். என்னைப் பற்றி வரும் வதந்திகள் என் மனதை காயப்படுத்துகிறது. பாலிவுட்டில் எனக்கு விலை மதிப்பற்ற நண்பர்கள் இருக்கிறார்கள். சல்மானுடன் எனக்கு மோதல் என்று முதலில் எழுதினார்கள். அது தவறு. உண்மை என்னவென்றால் இந்த ஆண்டில் மட்டும் அவரது வீட்டுக்கு 6 முறை சென்றிருக்கிறேன். சல்மானின் சகோதரி அர்பிதா எனக்கு நெருங்கிய தோழி. ஆரம்ப கால கட்டங்களில் நடித்த சக நடிகர்கள் சிலரில் சல்மானும் ஒருவர். அவரிடம் எந்தநேரத்திலும் மனக்கசப்பு ஏற்பட்டது கிடையாது. இன்னும் சொல்லப்போனால் என் மீது அதிக அன்பு காட்டுவார். அதை வைத்து இப்போது எங்களை இணைத¢து பேசுகிறார்கள். இதில் உண்மை இல்லை.
 

நல்ல படத்துக்கு காத்திருக்கிறேன் : பார்வதி ஓமனகுட்டன் பேட்டி

I am waiting for a good film: Parvati omanakuttan interview 'மலையாள படங்களில் ஒரு காலத்தில் கதைக்கு பஞ்சம் இருந்தது என்றார் பார்வதி ஓமனகுட்டன். 'பில்லா 2 படத்தில் நடித்தவர் பார்வதி ஓமனகுட்டன். அவர் கூறியதாவது: தமிழில் நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். மலையாளத்தில் இப்போது சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. ஒரு காலத்தில் மலையாள படங்களின் கதைகள் மிகவும் வலுவாக இருந்தது.

அதே நேரம் ஒரு காலகட்டத்தில் கதைக்கு பஞ்சம் இருந்ததும் உண்டு. இப்போது மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஒருபோதும் நான் எதையும் திட்டமிட்டு செய்வது கிடையாது. நல்ல படங்கள் எப்போது வருகிறதோ அப்போது ஏற்க காத்திருக்கிறேன். அவசரமாக படங்களை ஒப்புக்கொள்ளமாட்டேன். மேலும் குறிப்பிட்ட மொழியில்தான் நடிப்பேன் என்று எந்த கட்டுப்பாடும் நான் வைத்துக்கொள்ள வில்லை. இவ்வாறு பார்வதி ஓமனகுட்டன் கூறினார்.
 

கிசு கிசு - பிகினிக்கு கிரீன் சிக்னல்

Kodambakkam Kodangi நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

லவ் முறிவுக்கு பிறகு நடிப்பில் கவனம் செலுத்தும் நயன ஹீரோயின் பாலிவுட்டுக்கும் குறி வெச்சிருக்காராம்... இருக்காராம்... டோலிவுட்டில் நடிக்கும் படம் பாலிவுட்டில் டப்பிங் ஆகறதால அதோட பப்ளிசிட்டிக்காக பாலிவுட் போனாராம். இது தவிர கவர்ச்சியா நடிக்கறதில்லன்னு இடைக்காலத்துல எடுத்த முடிவ மாத்திகிட்டாராம். கிளாமர் நடிப்புக்கு கிரீன் சிக்னல் கொடுக்கும் விதமா டோலிவுட் படத்துல பிகினி டிரஸ் போடுறாராம்... போடுறாராம்...

தாஸ் இயக்கம் 'கன் படத்த பாலிவுட்ல ரீமேக் பண்றாரு. அதே நேரம், தல ஹீரோ சைடுலயிருந்தும் அழைப்பு வந்திருக்காம். ஏற்கனவே தல நடிகரோட ஒர்க் பண்ண தாஸ் இயக்கம் மறுபடியும் அவருக்காக ஸ்கிரிப்ட் தயார் பண்ணி வச்சிருக்காராம். கூடிய சீக்கிரம் தல நடிகர சந்திச்சி புதுபட காம்பினேஷன் பத்தி பேசப்போறாராம்... போறாராம்...

யுவன இசையின் சித்தப்பா வாரிசுங்க, டைரக்ஷன் நடிப்புன்னு கொடிகட்டி பறக்றாங்களாம்... பறக்றாங்களாம்... அதேமாதிரி இசைல மட்டுமில்லாம ஸ்கிரிப்ட், தயாரிப்பு, இயக்கம்னு குதிக்க யுவன இசை முடிவு பண்ணிருக்காராம். ஆனா நெருக்கமானவங்க, 'ஸ்கிரிப்ட், தயாரிப்பெல்லாம் ஓ.கே. இயக்கறதுக்கு போயிட்டா மத்த வேலய கவனிக்க முடியாது. இயக்கற வேலய வேற ஆள்கிட்ட கொடு. ஹீரோவா மாறிடுன்னு அட்வைஸ் பண்ணாங்களாம். இதனால தன்னோட சொந்தத்துலயே ஒருத்தர இயக்கமா அறிமுகப்படுத்துறாராம்... அறிமுகப்படுத்துறாராம்...
 

''பண்டிகை என்பதே சொந்த பந்தங்கள்தான்''… நீயா நானாவில் சுவையான விவாதம்

Neeya Naana Vijay Tv Talk Show About Relationship

தீபாவளியோ... பொங்கலோ... மாசி கொடையோ.... திருமணமோ... அங்காளி, பங்காளி, மாமன், மச்சான் ஆகியோரோடு இணைந்து கொண்டாடுவது என்பதே ஒரு சந்தோசம்.இதுபோன்ற நாட்களில்தான் நம் குழந்தைகளுக்கு சித்தப்பா, பெரியப்பா, மாமா, அத்தை போன்றோர்களைப் பற்றியும், அவர்களின் அறிமுகம் கிடைக்கும்.

இந்தவாரம் விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சியில் உறவுகளைப் பற்றியும் அவர்களின் வீட்டு விசேசங்களுக்கு செல்வதைப் பற்றியும் விவாதம் நடைபெற்றது. என்னுடைய குழந்தைகளுக்கு உறவுகளைப்பற்றி தெரியாமலேயே போய்விடுமோ என்பதனாலேயே உறவினர்கள் வீட்டுக்குப் போகிறோம் என்றார் ஒருவர்.

இன்றைக்கு உறவினர் வீட்டுக்குப் போனாலே பிரச்சினைதான் என்கிறார் அவருடைய மனைவி. ஷாப்பிங் போவதுதான் ஜாலி என்கிறார் மனைவி. ஆனால் கணவருக்கோ உறவினர்கள் வீட்டுக்கு போவதுதான் சந்தோசம்.

ஆனால் இன்றைக்கு உறவுகளுடன் கொண்டாடுவதை பெரும்பாலும் விரும்புவதில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

பேருந்து, ரயில்களில் டிக்கெட் போட்டு அடித்து பிடித்து போய் அப்படி விசேசங்களை கொண்டாட வேண்டுமா? நாம் இருக்கும் ஊரில், நம் வீட்டில் கொண்டாடினால் என்ன? என்று கேட்கின்றனர் இன்றைய தலைமுறையினர்.

ஆனால் உறவினர்கள் வீட்டு விசேசத்திற்கு செல்வதே ஒரு சந்தோசம். நம்முடைய சொந்தங்களுடன் இந்த பண்டிகையை கொண்டாடுகிறோம் என்பதே ஒரு மகிழ்ச்சி.

பணத்தை நோக்கி பயணப்படும் இன்றைய காலகட்டத்தில் வேலைக்கு போனோமா? வீட்ல ரெஸ்ட் எடுத்தோமா என்று மாறிவிட்டனர். இதில் எங்கே உறவினர்கள் வீட்டு விசேசத்திற்கு போவது என்று கேள்வி கேட்கின்றனர் இளைஞர்கள்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக விண்ணைத்தாண்டி வருவாயா கணேஷ் மற்றும் சுந்தரபாண்டியன் இயக்குநர் பிரபாகரன் பங்கேற்றனர்.

உறவினர்கள் வீடு அதிக தூரம் என்பதால் தன்னால் போகமுடியவில்லை என்றார் கணேஷ். கூட்டுக்குடும்பமாகவும் ஜாலியாகவும் இருக்க ஆசைதான் ஆனால் என்னால் முடியாது. காரணம் என்னுடைய வேலை அப்படி மாறிவிட்டது என்றார். தன்னுடைய வேலைச்சுமையினால் குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதே சிரமமாக இருக்கிறது. பணம் இருந்தாதால் உறவுகளே மதிக்கின்றனர் என்று கூறிய கணேஷ் என் மனைவி குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டுதான் உறவுகளுக்கு அடுத்த முக்கியத்துவம் கொடுப்பேன் என்றார் கணேஷ்.

நட்பு என்பது குறுகிய காலகட்டம் இறுதி வரைக்கும் வரப்போவது உறவு என்றார் பிரபாகரன். உறவினர் வீட்டு விசேசத்திற்கு செல்ல நேரமில்லை என்பது பொய்... மனதிருந்தால் மார்க்க முண்டு என்று கூறினார் பிரபாகரன்.

நண்பர்கள் வீட்டுக்கு போக முடிகிற உங்களால் உறவினர்கள் வீட்டுக்கு ஏன் போகமுடியவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

பணம், வேலை போன்றவைகளை நோக்கிய பயணமாக இருப்பதால் உறவுகள் வீட்டுக்குச் செல்ல முடிவதில்லை. அது காலம் கடந்து ஒரு வலியை ஏற்படுத்தும் என்றார் பிரபாகரன். நம்முடைய பெற்றோர்கள் உறவினர்கள் வீட்டுக்குச் சென்றுகொண்டுதான் இருந்தனர். ஆனால் இன்றைய தலைமுறையினர் யாரும் இதை ஏன் விரும்புவதில்லை என்று கேட்டார்.

இன்றைக்கு நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவிற்கு நண்பர்களுக்கு கொடுப்பதில்லை. உறவினர்கள் போட்டியும், பொறாமையுடனும் இருக்கின்றனர் என்பதால் அவர்கள் மீதான நம்பிக்கை போய்விட்டது. உறவினர்களை விட்டு ஒதுக்கிவிட்டனர். இன்றைக்கு நட்புக்குள்ளும் போட்டி, பொறாமை உணர்வு வந்துவிட்டது. அப்போது உறவினர்களின் அருமை தெரியவரும் என்றும் கூறினார் பிரபாகரன்.

உறவுக்காரர்கள் முக்கியமில்லை என்கின்றனர் சிலர், ஆனால் என்ன பிரச்சினை என்றாலும் உறவுகளுடன் இருக்கவேண்டும் என்கின்றனர் சிலர். நேற்றைய விவாத நிகழ்ச்சி கொஞ்சம் உணர்வுப் பூர்வமாக இருந்தது. உறவுகளின் அருமையைப் பற்றி பேசிய நபர்கள், உறவுகள் வேண்டாம் என்று பேசியவர்களுக்கு பரிசுப் பொருட்களைக் கொடுத்தனர். இது பலரின் மனங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. உறவுகள் வேண்டாம் என்று கூறியவர்கள் கூட நீயா நானா நிகழ்ச்சிக்கு வந்து உறவினர்களாக மாறிப் போனதுதான் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

நம்முடைய சமூகம் உறவுகளால் பின்னப்பட்டது. இதை மாற்ற நினைத்தாலும் முடியாது அதுதான் உறவின் சக்தி என்று முடித்தார் கோபிநாத்.

 

பத்ம விபூஷன் விருதுக்கு மறைந்த பாலிவுட் நடிகர் ராஜேஷ் கன்னா பெயர் பரிந்துரை

Rajesh Khanna Likely Be Awarded Padma Vibhushan

டெல்லி: மறைந்த பாலிவுட் நடிகர் ராஜேஷ் கன்னா, ஷோலே இயக்குனர் ரமேஷ் சிப்பி மற்றும் பாடகர் கைலாஷ் கேர் ஆகியோருக்கு பத்ம விருது கிடைக்கலாம் என்று தெரிகிறது.

பத்ம விருதுகளில் கலை பிரிவில் 3 பேரின் பெயர்களை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. அது கடந்த ஜூலை 18ம் தேதி மறைந்த பாலிவுட் நடிகர் ராஜேஷ் கன்னா, ஷோலே பட இயக்குனர் ரமேஷ் சிப்பி மற்றும் பாடகர் கைலாஷ் கேர் ஆகியோரின் பெயர்களை பரிந்துரைத்துள்ளதாகத் தெரிகிறது.

பத்ம விருதுகள் பொதுவாக மறைந்தவர்களுக்கு கொடுப்பதில்லை என்றாலும் ராஜேஷ் கன்னா அந்த விருதைப் பெற தகுதியானவர் என்று கருதி அரசு அவருக்கு பத்ம விபூஷன் விருது அளிக்கலாம் என்று தெரிகிறது. கடந்த ஆண்டு மறைந்த பிரபல இந்தி பாடகர் புபென் ஹசாரிகாவுக்கு இறப்புக்கு பிறகு தான் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இயக்குனர் ரமேஷ் சிப்பி மற்றும் கைலாஷ் கேர் ஆகியோரின் பெயர்கள் பத்ம ஸ்ரீ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டாலும் பிரதமர் தலைமையிலான பத்ம விருதுகள் குழு தான் இறுதி முடிவை எடு்கக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சகுந்தலாவின் காதலன்

சென்னை : 'காதலில் விழுந்தேன்', 'எப்படி மனசுக்குள் வந்தாய்' படங்களை இயக்கிய பி.வி.பிரசாத், அடுத்த படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். இதுபற்றி அவரிடம் கேட்டபோது, 'நான் ஹீரோவாக நடித்து படம் இயக்குவது உண்மைதான். 'சகுந்தலாவின் காதலன்' என்று பெயரிட்டுள்ளேன். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடந்து வருகிறது' என்றார்.
 

தமிழ் மற்றும் பஞ்சாபி முறைப்படி வித்யா பாலன் திருமணம்

மும்பை : வித்யா பாலன் திருமணம், தமிழ் மற்றும் பஞ்சாபி முறைப்படி நடக்கிறது. பிரனீதா, பா, கஹானி மற்றும் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறான, 'தி டர்ட்டி பிக்சர்' உட்பட பல்வேறு படங்களில் நடித்தவர் வித்யா பாலன். பாலக்காட்டைச் சேர்ந்தவர். இவர், யுடிவி நிறுவனத்தின் சித்தார்த் ராய் கபூரை காதலித்து வந்தார். இவர்கள் திருமணத்துக்கு இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து அடுத்த மாதம் 14,ம் தேதி மும்பையில் திருமணம் நடக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இரண்டு குடும்பங்களில் செய்து வருகின்றன. திருமணம், வித்யா பாலன் உறவினர்களுக்காக தமிழ் முறைப்படியும் சித்தார்த் ராய் கபூருக்காக பஞ்சாபி முறைப்படியும் நடக்க இருக்கிறது. திருமணம் நடக்கும் இடம்  இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

 

பிரகாஷ்ராஜின் உன் சமையல் அறையில்

சென்னை : மலையாளத்தில் ஹிட்டான 'சால்ட் அண்ட் பெப்பர்' படத்தை, 'உன் சமையல் அறையில்' என்ற பெயரில் பிரகாஷ் ராஜ் தயாரித்து இயக்குகிறார்.
மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டானப் படம், 'சால்ட் அண்ட் பெப்பர்'. ஆஷிக் அபு இயக்கி இருந்த இந்தப் படத்தில் லால், ஸ்வேதா மேனன், மைதிலி உட்பட பலர் நடித்திருந்தனர். இதன் ரீமேக் உரிமையை பிரகாஷ்ராஜ் வாங்கி இருந்தார். இதை யார் இயக்குவது என்று பேச்சு எழுந்தது.

இந்நிலையில் தானே இயக்குவதாக பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார். அவர் மேலும் கூறும்போது, 'இந்தி, தெலுங்கு, தமிழில் நானே 'சால்ட் அண்ட் பெப்பரை' இயக்கி நடிக்கிறேன். 'தோனி' படத்துக்குப் பிறகு நான் இயக்கும் படம் இது. தமிழில் 'உன் சமையல் அறையில்' என்றும் தெலுங்கில், 'உலவச்சாறு பிரியாணி' என்றும் பெயர் வைத்துள்ளேன். டேக் லைனாக, 'லவ் இஸ் குக்கிங்' என்ற வாசகம் இடம்பெறும். என் ஜோடியாக தபு நடிக்கிறார். இளையராஜா இசை அமைக்கிறார்' என்றார்.

 

உனக்கு 20 எனக்கு 40

சென்னை : ஸ்ரீபண்ணாரி அம்மன் புரொடக்ஷன் தயாரிக்கும் படம், 'உனக்கு 20 எனக்கு 40'.  இயக்கி ஹீரோவாக நடிக்கிறார் கே.பி.எஸ்.அக்ஷய். மற்றும் ஷாலினி, எஸ்.சிவா, அம்ருதா, சிங்கம்புலி, வையாபுரி, வடிவுக்கரசி உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, பி.எஸ்.செல்வம். இசை, ஜோய் மேக்ஸ்வெல். பாடல்கள்: தமிழமுதன், மா.ராஜேஷ். படம் பற்றி அக்ஷய் கூறும்போது, 'ஷாலினி, அம்ருதா இருவரும் ஒரே கல்லூரியில் படிக்கும் தோழிகள். ஷாலினியின் தந்தையை அம்ருதா காதலிக்கிறார். இதனால் ஏற்படும் பிரச்னைகளை சொல்லும் கதை' என்றார்.

 

சொல்லத்தான் நினைத்தேன் என்ன கதை?

சென்னை : லைம்லைட் சினிமா சார்பில் டி.கிரண்குமார் தயாரிக்கும் படம், 'சொல்லத்தான் நினைத்தேன்'. ஷ்ரவன், மோனல் கஜ்ஜார், ஆர்த்திபூரி நடிக்கின்றனர். கதை எழுதி, இசையமைத்து டி.பிரபாகர் இயக்குகிறார். திரைக்கதை எழுதியுள்ள லோக்சந்தர் கூறியதாவது: மருத்துவக் கல்லூரியில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து படம் உருவாகியுள்ளது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது நம்பிக்கை வைத்து, படிக்க அனுப்புகின்றனர். அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும், கடமையும் அவர்களுக்கு இருக்கிறது என்பதை படம் வலியுறுத்தும். சென்சார் அதிகாரிகள், 2 கட்டு கொடுத்து, யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். அடுத்த மாதம் ரிலீஸ் ஆகிறது.
 

ஆக்ஸிஜன் பற்றாக்குறை மயங்கினார் சுவாசிகா

சென்னை : 'ரணம்' பட ஷூட்டிங்கில் ஹீரோயின் சுவாசிகா மயங்கி விழுந்ததால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. இதுபற்றி சுவாசிகாவிடம் கேட்டபோது, கூறியதாவது:
இயக்குனர் விஜயசேகரன், குரங்கனி மற்றும் டாப் ஸ்டேஷன் பகுதிக்கு மேலிருக்கும் கொழுக்குமலை என்ற லொகேஷனில் எனது அறிமுக பாடல் காட்சியை படமாக்க நினைத்தார். அங்கு செல்ல ரோடு வசதி கிடையாது. கழுதை அல்லது குதிரையில்தான் செல்ல வேண்டும்.

சின்ன பேக்கில் என் துணிமணிகளை எடுத்துக் கொண்டு, படப்பிடிப்புக் குழுவினருடன் நடந்து சென்றேன். பல மணி நேரம் நடந்து ஸ்பாட்டுக்கு போனேன். உடனே ஷூட்டிங் ஆரம்பமானது. என்னை அறியாமல் மயங்கிவிழுந்தேன். அங்கு ஆக்ஸிஜன் குறைவு என்பதால் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பிறகு அங்கேயே சிகிச்சை அளித்து ஷூட்டிங்கை தொடர்ந்தனர். இங்கு நடித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது.
 

இந்திக்கு போகிறது துப்பாக்கி

சென்னை : 'துப்பாக்கி' படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். விஜய், காஜல் அகர் வால் நடித்த படம், 'துப்பாக்கி'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருந்த இந்த படம் ஹிட்டானது. இதையடுத்து இதை இந்தியில் ரீமேக் செய்கிறார் முருகதாஸ். விபுல் ஷா தயாரிக்கும் இந்தப் படத்தில் அக்ஷய் குமார் ஹீரோவாக நடிக்கிறார். அவர் ஜோடியாக பரினீதி சோப்ரா நடிக்கிறார். அடுத்த மாதம் ஷூட்டிங் தொடங்கும் என்று தெரிகிறது.  'துப்பாக்கி' கதையை முதலில் அக்ஷய்குமாரிடம்தான் முருகதாஸ் சொன்னார். அவரால் உடனடியாக கால்ஷீட் தர இயலாததால், விஜய் நடிப்பில் தமிழில் இதை இயக்கினார்.

 

கராத்தே மணி மகன் ஹீரோ ஆனார்

சென்னை : மறைந்த நடிகர் கராத்தே மணியின் மகன் திரிசூல், 'பிரமுகர்' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். விஜயகாந்த் நடித்த 'சுதேசி', அசோக் நடித்த 'வானம் பார்த்த சீமையிலே' படங்களை இயக்கியவர் ஜேப்பி அழகர். அவர் இப்போது 'பிரமுகர்' என்ற படத்தை எழுதி இயக்குகிறார். இதை ஸ்ரீலஷ்மி சண்முகானந்தம் பிலிம்ஸ் மற்றும் வி.ஜே.என்டர்டெயின்மென்ட் மூலமாக மணிகண்டன், சுரேஷ் இணைந்து தயாரிக்கின்றனர். புதுமுகங்கள் திரிசூல் கராத்தே மணி, மோகனவேல், கர்ணா, மஞ்வா, ஜெஸ்சி உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, ஹார்முக், இசை, எல்.வி. கணேஷன், பாடல்கள், பழனிபாரதி, மோகன்ராஜன். ஷூட்டிங் முடிந்து இறுதிகட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

 

திரையில் அழுது அழுது போரடித்துவிட்டது: தபு

மும்பை : திரையில் அழுது அழுது போரடித்துவிட்டது என்று தபு கூறினார். தமிழில் 'காதல் தேசம்', 'இருவர்', 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் தபு. 'லைஃப் ஆஃப் பை' உட்பட ஹாலிவுட் படங்களிலும் நடித்து வரும் அவர் கூறியதாவது: சமீபகாலமாக படங்களில் அதிகமாக காணமுடியவில்லையே என்று கேட்கிறார்கள். அது உண்மைதான். வருகின்ற கதைகளில் எல்லாம் நடித்துவிட முடியாது.

அந்த கட்டத்தைத் தாண்டி வந்துவிட்டேன். அது மட்டுமில்லாமல் இன்னும் என்னை நிரூபித்துக்காட்ட வேண்டிய அவசியம் இல்லை. என் நடிப்பு பற்றி எல்லோருக்கும் தெரியும். அதற்கு தகுந்த கதைகளை வரவேற்கிறேன். அல்லது என்னை குதூகலப்படுத்துகிற, ஆச்சரியப்பட வைக்கிற கதைகள் வந்தால் நடிக்க தயாராக இருக்கிறேன். சினிமாவில் அழுது அழுது போரடித்துவிட் டது. இன்னும் அழுதுகொண்டிருக்க விரும்பவில்லை. அதனால் இப்போதைக்கு ஒரு காமெடி அல்லது அதிரடி மசாலா கதையில் நடித்தால் கூட எனக்கு அது மாற்றத்தை தரும்.

 

நடிகரான இயக்குனர் சுரேஷ்

சென்னை : 'என்னவளே', 'ஜூனியர் சீனியர்', 'வேலை' படங்களை இயக்கிய ஜே.சுரேஷ், 'பாரசீக மன்னன்' படத்தை இயக்கி, இசையமைத்து, ஹீரோவாக நடிக்கிறார். ரிச் ஆர்ட் புரொடக்ஷன்ஸ் சார்பில் கே.ஜே.பாலகிருஷ்ணன், கே.ஜே.திலீப்குமார் தயாரிக்கின்றனர். ஸ்ருதி லட்சுமி ஹீரோயின். ஒளிப்பதிவு, நூதலபட்டி பிரகாஷ். இசை மேற்பார்வை, யுவன்சங்கர்ராஜா. பாடல்கள்: பேரரசு, பா.விஜய், உதய். படம் பற்றி ஜே.சுரேஷ் கூறும்போது,

'குழந்தை கடத்தல் பற்றிய கதை. கடத்தல்காரர்களின் பின்னணி மற்றும் கடத்தப்பட்ட குழந்தைகள் எப்படியெல்லாம் துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதை சொல்லும் திரைக்கதை. படத்தில் வளைகுடா நாட்டிலிருந்து இங்கு செட்டிலானவன் என்பதால், நண்பர்கள் என்னை பாரசீக மன்னன் என்று அழைப்பார்கள். அதையே டைட்டிலாக்கி விட்டேன்' என்றார்.
 

முத்தமிட பயந்த விஷ்ணு

சென்னை : 'நீர்ப்பறவை' படத்தில் நடித்துள்ள விஷ்ணு, கூறியதாவது: இந்தப்படத்தில் கதைதான் ஹீரோ. நான் முக்கிய வேடத்தில் நடித்துள்ளேன். என்னைப்போல் மற்ற நடிகர், நடிகைகளும் முக்கிய வேடம் ஏற்றுள்ளனர். அருளப்ப சாமி என்ற கேரக்டரில் என்னைப் பார்க்கும்போது, நடித்தது போன்றே தெரியவில்லை. அவ்வளவு யதார்த்தமாக சீனு ராமசாமி என்னை நடிக்க வைத்துள்ளார்.

இப்படம் எனக்கு திருப்புமுனையாக அமையும். ஜோடியாக நடித்த சுனேனாவும் சிறப்பாக நடித்துள்ளார். 'தேவன் மகளே' பாடல் காட்சியில் சுனேனாவும், நானும் அதிக தடவை முத்தமிட்டு நடிக்க வேண்டியிருந்தது. முதலில் நான் பயந்தேன். பிறகு சுனேனாவும் தைரியமூட்டினார். இதனால் எதிர்பார்த்தபடி அப்பாடல் காட்சி படமாக்கப்பட்டது. மணப்பாடு, குலசேகரன்பட்டினம், தூத்துக்குடி கடற்கரைப் பகுதிகளில் ஷூட்டிங் நடந்தது. இந்தப் படம் ரசிகர்களுக்கு புது அனுபவத்தைக் கொடுக்கும். இவ்வாறு விஷ்ணு கூறினார்.