புதுமுகங்கள் தயா, தாமரை நடிக்கும் படம் 'ஒச்சாயி'. ஆசைத்தம்பி இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் மதுரை உசிலம்பட்டியில் நடந்தது. காட்சிப்படி, தந்தை ராஜேஷின் பேச்சை மீறி, ஆத்திரத்துடன் அரிவாளை தூக்கிக்கொண்டு ஓடுவார் தயா. அவரை தடுத்து நிறுத்தும் ராஜேஷ், மகனின் கன்னத்தில் பளார் என்று அறைய வேண்டும். இக்காட்சியை யதார்த்தமான முறையில் படமாக்க விரும்பிய இயக்குனர், ஹீரோவிடம், 'கொஞ்சம் பொறுத்துக்குங்க. ராஜேஷ் உங்களை நிஜமாவே கன்னத்துல அடிப்பார். அப்பதான் ரிசல்ட் நல்லா வரும்' என்றார்.அவர் எதிர்பார்ப்பதை புரிந்துகொண்ட ராஜேஷ், தயாவின் கன்னத்தில் நிஜமாகவே ஓங்கி அறைந்தார். கன்னம் வீங்கி வலியால் துடித்தார் தயா. இக்காட்சியை ஒளிப்பதிவாளர் பிரேம்சங்கர் பல கோணங்களில் படமாக்கினார். நடிப்புக்காக சில மாதங்கள் பயிற்சி பெற்ற தயா, ராஜேஷிடம் அடி வாங்க அரை நாள் முழுக்க ஆயத்தமாக இருந்தார். ஷூட்டிங் முடிந்த பின், தயாவை கட்டியணைத்து, 'ஸாரி, நல்லா ஒத்துழைப்பு தந்ததுக்கு நன்றி' என்றாராம் ராஜேஷ்.
Source: Dinakaran