கோவில் கும்பாபிஷேகத்தில் சூர்யா, கார்த்திக்கு பரிவட்டம்

Suriya Karthi Honoured Kumbabishekam

கோவை: கோவையில் உள்ள கோவில் திருவிழா ஒன்றில் சூர்யாவுக்கும், கார்த்திக்கும் பரிவட்டம் கட்டப்பட்டது.

சிவகுமார் குடும்பம் கோவை அருகே உள்ள காசிகவுண்டன்புதூரைச் சேர்ந்தது. அந்த ஊரில் உள்ள கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் சிவகுமார் தனது குடும்பத்தோடு கலந்து கொண்டார்.

சிவகுமார் தலைமையில் நடந்த விழாவில் கணபதி ஹோமம், யாகசாலை உள்ளிட்டவை நடத்தப்பட்டது. பூஜைகள் முடிந்த பிறகு சூர்யா மற்றும் கார்த்திக்கு பரிவட்டம் கட்டி கௌரவிக்கப்பட்டடது. இதையடுத்து அவர்கள் இருவரும் கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்தனர்.

சூர்யாவின் சிங்கம் 2 படம் விரைவில் ரிலீஸ் ஆகிறது. அடுத்ததாக அவர் கௌதம் மேனன் மற்றும் லிங்குசாமி படங்களில் நடிக்கிறார். கார்த்தி பிரியாணி, ஆல் இன் ஆல் அழகு ராஜா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

 

அஜீத்தின் 54வது படத்தின் பெயர் விநாயகம் பிரதர்ஸ்?

Ajith Film With Siva Titled Vinayagam Brothers

சென்னை: அஜீத் சிவா இயக்கத்தில் நடித்து வரும் படத்திற்கு விநாயகம் பிரதர்ஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அஜீத் குமார் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடித்துள்ள படத்திற்கு வலை என்று பெயர் வைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் அதை சம்பந்தப்பட்டவர்கள் யாரும் உறுதிபடுத்தவில்லை. இந்த நாள் வரை அந்த படத்திற்கு பெயரிடப்படவில்லை. இதனால் படத்தை ரிலீஸ் செய்யும் முன்பாவது பெயரை அறிவிப்பார்களா என்று ரசிகர்கள் கேட்க ஆரம்பித்துவிட்டனர்.

இந்நிலையில் அஜீத் சிறுத்தை சிவா இயக்கத்தில் மாஸ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு தமன்னா ஜோடியாக நடிக்கிறார். காமெடிக்கு சந்தானம் உள்ளார். இந்த படத்திற்கு விநாயகம் பிரதர்ஸ் என்று தலைப்பு வைத்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது. படத்தில் அஜீத்தின் பெயர் விநாயகம் என்பதால் விநாயகம் பிரதர்ஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாம்.

ஆனால் இந்த தகவலை நம்ப அஜீத் ரசிகர்கள் தயாராக இல்லை. சம்பந்தப்பட்டவர்கள் அறிவிக்கும் வரை நம்ப மாட்டோம் என்று அடம்பிடிக்கின்றனர். அவர்கள் சொல்வதும் நியாயம் தானே.

 

மணிவண்ணனுக்கு பாரதிராஜா அஞ்சலி - மாலையில் உடல் தகனம்

சென்னை: மறைந்த இயக்குநர், நடிகர் மணிவண்ணனின் உடல் இன்று மாலை தகனம் செய்யப்பட்டது.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அதேபோல மணிவண்ணனின் குருவான இயக்குநர் பாரதிராஜாவும் இன்று நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.

மணிவண்ணன் நேற்று தனது வீட்டில் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது உடலுக்கு திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள், தமிழார்வலர்கள், பொதுமக்கள், ரசிகர்கள் என பல தரப்பட்டவர்களும் அஞ்சலி செலுத்தினர்.

bharathiraja pays tribute manivanna

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று அஞ்சலி செலுத்தினார். அதேபோல தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். ஆயிரக்கணக்கானோர் மணிவண்ணனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இன்று மாலை உடல் தகனம் நடைபெற்றது. இதற்காக மணிவண்ணனின் உடல் அவரது வீட்டிலிருந்து ஊர்வலமாக போரூர் எடுத்துச் செல்லப்பட்டு அங்கு தகனம் செய்யப்பட்டது.

பாரதிராஜா வந்தார்

மணிவண்ணனின் குருவான இயக்குநர் பாரதிராஜா இன்று நேரில் வந்து மணிவண்ணனுக்கு அஞ்சலி செலுத்தினார். அதேபோல மணிவண்ணனின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான கவுண்டமணியும் நேரில் வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.

 

இந்த செய்தியையும் கமல் ஹாசன் படிப்பாரோ?

Kamal Reads Everything About Shruti

சென்னை: கமல் ஹாசன் தனது மகள் ஸ்ருதியைப் பற்றி வரும் செய்திகள் அனைத்தையும் படித்துவிடுவாராம்.

ஸ்ருதி ஹாசன் பெற்றோர் வழியில் நடிப்பைத் தேர்வு செய்துள்ளார். நடிப்பில் கவனம் செலுத்துவதால் இசைக்கு கொஞ்சம் பிரேக் விட்டுள்ளார். அவர் தற்போது தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

தெலுங்கில் கப்பார் சிங் வெற்றிக்கு பிறகு ஸ்ருதிக்கு நல்ல மார்க்கெட் உள்ளது. அதனால் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். அவர் நடித்துள்ள ராமைய்யா வஸ்தாவய்யா இந்தி படமும், டி டேவும் அடுத்த மாதம் 19ம் தேதி ரிலீஸ் ஆகிறது. கை நிறைய படங்கள் வைத்திருப்பதால் ரொம்பவும் பிசியாக உள்ளார் ஸ்ருதி. அதனால் அவர் ஒரு நாளைக்கு 26 மணிநேரம் இருக்கக் கூடாதா என்று நினைக்கிறார்.

திரையுலகில் வளர்ந்து வரும் தனது மகள் ஸ்ருதியை பற்றி வரும் செய்திகள் அனைத்தையும் தேடிப்பிடித்து படித்து விடுவாராம் கமல் ஹாசன்.

 

ரஜினிகாந்த் மருமகனாக இருப்பதால் புண்ணியமில்லை: தனுஷ்

Being Rajnikanths Son In Law Hasnt Helped Me

மும்பை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகனாக இருப்பது தனக்கு உதவியும் இல்லை, உபத்திரமும் இல்லை என்று தனுஷ் தெரிவித்துள்ளார்.

தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற 2 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் தனுஷ் தனது முதல் இந்தி படமான ராஞ்ஹனா குறித்தும், ரஜினி குறித்தும் கூறுகையில்,

சூப்பர் ஸ்டாரின் மருமகனாக இருப்பதால் எனக்கு எந்த உதவியும் இல்லை. நான் எனது வேலையை செய்து வருகிறேன். ரஜினியின் மருமகன் என்பது எனக்கு எந்த உதவியும் இல்லை, அது என்னை பாதிக்கவும் இல்லை. நான் நடிக்கும் முறை அவருடையது போன்று இல்லை. அதனால் ஒப்பிட வேண்டியதில்லை. 20 முதல் 25 படங்களில் நடித்த ஒருவரை ஒரு பெரிய நடிகருடன் ஒப்பிடுவது சரி அல்ல.

என்னுடைய முதல் இந்தி படமான ராஞ்ஹனா பற்றி அவரிடம்(ரஜினி) பேசியதில்லை. நான் எப்படி என் வேலையில் பிசியாக உள்ளேனோ அதே போன்று அவரும் அவருடைய வேலையில் பிசியாக உள்ளார். அதனால் இந்த படம் குறித்து இதுவரை நாங்கள் பேசவில்லை. ஐஸ்வர்யா இன்னும் இந்த படத்தை பார்க்கவில்லை.

நான் ஆனந்த் சாருடன் சேர்ந்து மீண்டும் ஒரு இந்தி படத்தில் நடிக்கிறேன். இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் நானும் ஒருவனாக இருப்பேன் என்றார்.