சன்னி லியோன் ஒரு குழந்தை மாதிரி: சச்சின் ஜோஷி

மும்பை: கவர்ச்சி நடிகை சன்னி லியோன் ஒரு குழந்தை மாதிரி என்று நடிகரும், தொழில் அதிபருமான சச்சின் ஜோஷி தெரிவித்துள்ளார்.

தொழில் அதிபரும், நடிகருமான சச்சின் ஜோஷி இந்தி படமான ஜாக்பாட்டில் நடித்துள்ளார். இந்த படத்தில் நசீருத்தீன் ஷா, சன்னி லியோன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சச்சின் தனது நிறுவனம் தயாரித்துள்ள எனர்ஜி பானமான XXXக்கு சன்னி லியோனைத் தான் பிராண்ட் அம்பாசிடர் ஆக்கினார்.

சன்னி லியோன் ஒரு குழந்தை மாதிரி: சச்சின் ஜோஷி

இந்நிலையில் அவர் சன்னி குறித்து கூறுகையில்,

நசீர் சாப் அருமையான பாடகர். அவர் பாடுவதை கேட்டு நான் ஆச்சரியப்பட்டேன். சன்னி லியோன் நன்றாக சாப்பிடுவார் என்று பலருக்கு தெரியாது. படப்பிடிப்பில் அவர் குழந்தை மாதிரி பார்ப்பவை குறித்து எல்லாம் மகிழ்ச்சி அடைவார். அவருடன் பணியாற்றுவது ஜாலியாக இருக்கும் என்றார்.

 

பஞ்ச் வசனமே இல்லாத அஜீத்தின் வீரம்

பஞ்ச் வசனமே இல்லாத அஜீத்தின் வீரம்

சென்னை: வீரம் படத்தில் அஜீத் குமார் பஞ்ச் வசனங்களே பேச மாட்டாராம்.

பொங்கல் விருந்தாக வருகிறது அஜீத்தின் வீரம் படம். அண்மை காலமாக நகரத்தைச் சேர்ந்த கதாபாத்திரங்களில் நடித்து வந்த அஜீத் இதில் பக்கா கிராமத்தானாக நடித்துள்ளார்.

4 தம்பிகள் மீது பாச மழை பொழியும் அண்ணனாக வருகிறார். படத்தில் சென்டிமென்ட்டுடன் ஆக்ஷனும் இருக்கிறதாம். மேலும் அஜீத் நம்மை சிரிக்க வைக்க காமெடியிலும் ஒரு கை பார்த்திருக்கிறாராம்.

அஜீத் சந்தானம், அப்புக்குட்டி, வித்யுலேகா ராமன், மயில்சாமியுடன் சேர்ந்து அடிக்கும் லூட்டி திரை அரங்கை சிரிப்பொலியில் அதிர வைக்கும் என்கிறார்கரள். வழக்கமாக காமெடியில் விஜய் தான் கலக்கி வந்தார். தற்போது அந்த பட்டியலில் அஜீத்தும் சேர்ந்துள்ளார்.

பொங்கலுக்கு அஜீத்தின் படம் தனியாக வரவில்லை. கூடவே விஜய்யின் ஜில்லா மற்றும் ரஜினியின் கோச்சடையானும் வருகிறது.

 

புகார் கொடுத்த 48 மணிநேரத்திற்குள் அந்த நபரை கைது செய்த போலீசாருக்கு நன்றி: ஸ்ருதி

மும்பை: தன் வீட்டுக்கு வந்து தன்னை தாக்கியவரை கைது செய்த போலீசாருக்கு ஸ்ருதி ஹாஸன் நன்றி தெரிவித்துள்ளார்.

கடந்த 19ம் தேதி காலை மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள ஸ்ருதி ஹாஸன் வீட்டுக்கு சென்ற நபர் ஒருவர் அவரின் கழுத்தை நெறித்து தாக்கினார். இந்த சம்பவம் குறித்து ஸ்ருதி கடந்த 21ம் தேதி இரவு போலீசில் புகார் கொடுத்தார்.

அவர் புகார் கொடுத்த 48 மணிநேரத்திற்குள் விரைந்து செயல்பட்ட போலீசார் நேற்று அந்த நபரை கைது செய்தனர். அசோக் த்ரிமுகே(32) என்னும் அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

புகார் கொடுத்த 48 மணிநேரத்திற்குள் அந்த நபரை கைது செய்த போலீசாருக்கு நன்றி: ஸ்ருதி

அப்போது அவர் கூறுகையில்,

நான் ஸ்ருதி தங்கியிருக்கும் வீட்டில் உள்ள காவலாளிகள் வைத்திருக்கும் பதிவேட்டில் எனது பெயரை எழுதிவிட்டு தான் அவரது வீட்டுக்கு சென்றேன். எனது சகோதரருக்கு வேலை கேட்டு சென்றேன். அவரை தாக்கும் எண்ணத்தில் செல்லவில்லை. அவர் என்னைப் பார்த்து பயந்து கதவை சாத்திவிட்டார் என்றார்.

அசோக் பிலிம் சிட்டியில் ஸ்பாட் பாயாக வேலை பார்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அசோக்கை கைது செய்த மும்பை போலீசாருக்கு ஸ்ருதி ஹாஸன் ட்விட்டரில் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

 

ஸ்ருதியை தாக்கியவர் கைது: சகோதரருக்கு வேலை கேட்டு வந்ததாக வாக்குமூலம்

ஸ்ருதியை தாக்கியவர் கைது: சகோதரருக்கு வேலை கேட்டு வந்ததாக வாக்குமூலம்

மும்பை: நடிகை ஸ்ருதி ஹாஸனை அவரது வீடு புகுந்து தாக்கிய அசோக் த்ரிமுகேவை போலீசார் கைது செய்தனர்.

நடிகை ஸ்ருதி ஹாஸன் மும்பையில் உள்ள பந்த்ரா பகுதியில் வீடு எடுத்து வசித்து வருகிறார். இந்நிலையில் அவரை பல காலமாக பின் தொடர்ந்து வந்த ஒருவர் கடந்த 19ம் தேதி அவரது வீட்டுக் கதவை தட்டியுள்ளார். கதவை திறந்த ஸ்ருதியை அந்த நபர் கழுத்தை நெறித்துள்ளார். ஸ்ருதி அவரை வெளியே தள்ளிவிட்டு கதவை சாத்த முயன்றுள்ளார்.

இந்த சம்பவம் பற்றி ஸ்ருதி போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் ஸ்ருதியை தாக்கியவர் அசோக் த்ரிமுகே(32) தான் என்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து நேற்று அவரை அவரது வீட்டுக்கு அருகே வைத்து கைது செய்தனர்.

விசாரணையில் அசோக் கூறுகையில்,

நான் ஸ்ருதியை பின் தொடரவில்லை. என் சகோதரருக்கு வேலை கேட்டுத் தான் அவரது வீட்டுக்கு சென்றேன். நான் பிலிம் சிட்டியில் பணியாற்றி வந்தேன். என்னை ஸ்ருதி தவறாக புரிந்து கொண்டார் என்றார்.

அசோக்கின் சகோதரி ஹேர் ஸ்டைலிஸ்ட் மற்றும் ஆடை வடிவமைப்பாளராக உள்ளார்.

 

கோடம்பாக்கத்தில் நுழைந்தார் சன்னி லியோன்.. வட கறி படத்தில் குத்தாட்டம்!!

வடகறி படத்தில் ஒற்றைப் பாடலுக்கு கவர்ச்சி குத்தாட்டம் போடுகிறார் பாலிவுட்டின் கவர்ச்சி நாயகிகோடம்பாக்கத்தில் நுழைந்தார் சன்னி லியோன்.. வட கறி படத்தில் குத்தாட்டம்!!  

இப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

படத்தின் வீச்சை அதிகரிக்கவும் பரபரப்பு கிளப்பவும் புதிய யோசனையாக, இந்தி நடிகை சன்னி லியோனை ஒரு பாடலுக்கு நடிக்க வைக்க முடிவு செய்தனர் படக்குழுவினர். இதற்காக மும்பைக்கே போய் சன்னி லியோனிடம் பேசி பெரும் தொகைக்கு ஒப்பந்தமும் செய்துள்ளனர்.

சன்னி லியோன் சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள செக்ஸ் பட நடிகை மற்றும் இயக்குநர். பாலிவுட்டில் ஜிஸ்ம் 3 படத்தில் அறிமுகமானார். அவருக்கு பாலிவுட்டில் ஏகப்பட்ட படங்கள் உள்ளன. தமிழில் நடிக்க ஆர்வமாக உள்ளதாக சில தினங்களுக்கு முன்புதான் கூறியிருந்தார்.

இப்போது வடகறி குத்தாட்டத்தோடு தமிழ் சினிமாவில் நுழைகிறார்.

சன்னி லியோனை ஒப்பந்தம் செய்துள்ள செய்தியை, தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி தனது ட்விட்டர் தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

 

புதுசுகளா வருதுக: இனி கதையை கேட்டுட்டுத் தான் நடிக்கணும்- நடிகை முடிவு

சென்னை: இத்தனை நாட்களாக கதையை கேட்காமல் நடிக்க ஒப்புக் கொண்ட மங்களகரமான மேனன் நடிகை தற்போது கதையை கேட்க முடிவு செய்துள்ளாராம்.

கேரளாவில் இருந்து வந்து தமிழ் திரை உலகில் ஓடி ஓடி நடித்து வருபவர் மங்களகரமான மேனன் நடிகை. அடுத்தடுத்து ஹிட் படங்களாக கொடுத்து வருகிறார். நாம் நடிக்கும் படம் எல்லாமே ஹிட்டாகிவிடுகிறதே சம்பளத்தையும் உயர்த்தலாமே என்று முடிவு செய்தார். அதன்படி சம்பளத்தை ரூ.40 லட்சமாக உயர்த்தினார்.

அவர் சம்பளத்தை உயர்த்தினாலும் இயக்குனர்கள் அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க விரும்புகிறார்கள். அம்மணி இத்தனை நாட்களாக கதையை கேட்காமலேயே நடிக்க ஒப்புக் கொண்டாராம். இந்நிலையில் இனிமேல் கதையை கேட்டுவிட்டுத் தான் நடிக்க ஒப்புக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்துள்ளாராம்.

திடீர் என்று ஏன் இந்த முடிவு என்று நீங்கள் நினைக்கலாம். அம்மணியை நடிக்க வைக்க அவரை பல புதுமுக இயக்குனர்கள் அணுகுகிறார்களாம். அது தான் இந்த மாற்றத்திற்கு காரணம்.