பில்லா 2 துணை இயக்குனர் 'தல' அஜீத்


பில்லா 2 படக்குழுவினர் எப்பொழுது பார்த்தாலும் அஜீத் குமார் புராணம் தான் பாடி வருகின்றனர்.

தல அஜீத் குமாரின் பில்லா 2 படப்பிடிப்புக்கு சென்றால் யாரைப் பார்த்தாலும் தல போல வருமா என்று தான் பேசிக்கொள்கிறார்கள். என்னங்கையா தல டைலாக்கை சொல்றீங்க என்று கேட்டால், ஆஹா, ஓஹோ என்று அஜீத்தை தலையில் தூக்கி வைத்துக்கொள்ளாத குறையாக புகழ்பாடுகிறார்கள். அப்படி தல என்ன மாயமந்திரம் செய்தார் என்றால் படப்பிடிப்பு எந்தவித பிரச்சனையும் இன்றி நடக்கத் தேவையான உதவிகளை அஜீத் செய்து வருகிறாராம்.

மேலும் படத்தில் பார்வதி ஓமனகுட்டன், புருனா அப்துல்லா என்று தமிழ் தெரியாத 2 நாயகிகள். அவர்களுக்கு தமிழ் வசன உச்சரிப்புகளை கற்றுக்கொடுக்கிறாராம். இது தவிர படக்குழுவினருக்கு பல்வேறு வகைகளில் உதவியாக இருக்கிறாராம். அதனால் தான் இந்த புகழாரம் எல்லாம்.

முன்னதாக பில்லா 2 குழுவினருக்கு தனது கையாலேயே சமைத்து விருந்து வைத்ததோடு இல்லாமல், சாப்பிட்ட தட்டுகளை தானே கழுவி வைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் தல என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பெரிய நடிகர் எந்த பந்தா சிறிதும் இல்லாமல் ஓடி, ஓடி உதவி செய்வதால் படக்குழுவினர் உருகுகின்றனர்.

என்ன இருந்தாலும் தல தல தான்...
 

கொலவெறியை ஓரம் கட்டும் 'கோவி்ந்தாய நமஹ'!


கொலவெறி என்ற புகழ் பெற்ற இலக்கிய நயம் மிக்கப் பாடல் வந்தாலும் வந்தது, அதே பாணியில் ஏகப்பட்ட காப்பிகேட்கள் நடமாடத் தொடங்கி விட்டன. இருந்தும் எதுவும் கொலவெறியை ஓவர்டேக் செய்ய முடியவில்லை. ஆனால் தற்போது கொலவெறியை ஓரம் கட்டும் வகையில் ஒரு பாடல் மகா வேகமாக ஹிட் ஆகி கர்நாடகாவைக் கலக்கிக் கொண்டிருக்கிறது.

பியார்கே ஆக்பிட்டாய்த்தே என்று ஆரம்பமாகும் அந்தப் பாடல் கன்னடம் மற்றும் உருது மொழி கலந்த குண்டக்க மண்டக்க பாடலாகும். கோவிந்தாய நமஹ என்ற படத்தில் இப்பாடலை போட்டுள்ளனர். படு வேகமாக இந்தப் பாடல் பிரபலமாகியுள்ளது. இதுவரை யூடியூபில் பத்து லட்சம் ஹிட்டுகளுக்கு மேல் அடித்துள்ளதாம். படமும் சூப்பர் ஹிட் ஆகி விட்டது.

3 படம் போண்டியானதால், கொலவெறிப் பாடல் மீதான மோகமும் மங்கிப் போய் விட்டது. இதையடுத்து அந்த இடத்தை இந்த கோவிந்தாய நிரப்பும் என்று சொல்கிறார்கள்.

இந்த ஆண்டின் மிகப் பிரபலமான கன்னடப் பாடலாக இது உருவெடுத்துள்ளதாம். இப்பாடலுக்கு இசையமைத்துள்ளவர் குருகிரண். படத்தை இயக்கியிருப்பவர் புதுமுகமான பவன் உடையார். சேத்தன் மற்றும் இந்து நாகராஜ் பாடலைப் பாடியுள்ளனர்.

சினிமா பாணி இசை, நாட்டுப் புற இசை என பலதையும் கலந்து பப்பளக்க வைத்துள்ளனர் இந்தப் பாடலை. இப்பாடலுக்கு டான்ஸ் போட்டிருப்பவர்கள் கோமல் மற்றும் பருல் யாதவ். பீஜப்பூர் கோட்டை மற்றும் இப்ராகிம் ரோஸா ஆகிய இடங்களில் பாடலைப் படமாக்கியுள்ளனர்.

பாட்டு எப்படி இருக்கிறது என்று 'ஹேளிபிட்டு ஹேளி குரு....'!
 

அஜீத் - ஷாலினி 12வது திருமண நாள் - திரையுலகினர் வாழ்த்து!


Ajith - Shalini
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜீத் - ஷாலினியின் 12வது திருமண நாள் இன்று.

ஷாலினியும் அஜீத்தும் அமர்க்களம் படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது.

கடந்த 2000-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி ஷாலினியைக் கரம் பிடித்தார் அஜீத். காட்டாற்று வெள்ளமாக இருந்த அவர் வாழ்க்கை அதன் பிறகு ஒரு கட்டுக்குள் வந்தது.

திருமணத்துக்குப் பின்னர்தான் அஜித் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக உயர்ந்தார். மிகுந்த பக்குவப்பட்ட மனிதராக மாறினார். பேச்சைக் குறைத்துக் கொண்டு, தன் வேலைகளில் கவனம் செலுத்தினார்.

இவர்களுக்கு 2008-ல் பெண் குழந்தை பிறந்தது. அனோஷ்கா என பெயரிட்டுள்ளனர்.

பில்லா, மங்காத்தா... இப்போது பில்லா-2 வர இருக்கிறது.

தனது திருமண நாளை இன்று மனைவி, குழந்தை, குடும்பத்தினருடன் சென்னையில் கொண்டாடினார் அஜீத். அவருக்கு நண்பர்கள், திரையுலகினர் வாழ்த்து தெரிவித்தனர்.
 

படப்பிடிப்பில் ப்ரியங்காவுடன் மோதலா? - மறுக்கும் இலியானா


இந்திப் படத்தில் நடிக்கும்போது படப்பிடிப்பில் தனக்கும் பிரியங்கா சோப்ராவுக்கும் இடையே மோதல் என்ற வரும் செய்திகளில் உண்மையில்லை என்கிறார் நடிகை இலியானா.

தமிழில் நண்பன் படத்தில் விஜய் ஜோடியாக நடித்தவர் இலியானா. தெலுங்கில் முன்னணி நடிகை.

பார்ஃபி எனும் இந்திப் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தில் முதல் நாயகியாக பிரியங்கா சோப்ரா நடிக்கிறார். இருவருக்கும் படப்பிடிப்பில் மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

இருவரும் தனக்குத்தான் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று இயக்குனரை வற்புறுத்தினார்களாம். ஒரு கட்டத்தில் இருவரும் நேரடியாக ஒருவரையொருவர் திட்டி தகராறில் ஈடுபட்டதாகவும் படப்பிடிப்பு குழுவினர் சமரசப்படுத்தியதாகவும் வதந்தி பரவிது.

இது குறித்து இலியானாவிடம் கேட்டபோது, "பிரியங்கா சோப்ராவும் நானும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறோம். பிரியங்கா சோப்ராவை எனது தோழி என்று சொல்ல மாட்டேன். ஒரு நடிகை என்ற ரீதியிலேயே எங்களுக்குள் அறிமுகம் உள்ளது. வேறு எந்த தொடர்பும் இல்லை. எங்களுக்குள் மோதல் நடந்ததாக வெளியான தகவலில் உண்மை இல்லை. ப்ரியங்கா சிறந்த நடிகை," என்றார்.
 

'எல்லாரும் தவறாம வந்திடுங்க' - மும்முரமாக திருமண அழைப்பிதழ் தரும் சினேகா- பிரசன்னா!


Prasanna and Sneha
நடிகை சினேகாவுக்கும் பிரசன்னாவுக்கும் மே 11-ந்தேதி திருமணம் நடக்கிறது. இருவரும் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் ஜோடியாக நடித்த போது காதலாகி, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்கின்றனர்.

முகூர்த்த ஆடைகள், நகைகள் வாங்குதல் என இத்தனை நாள் தீவிரமாக இருந்தவர்கள், இப்போது திருமண அழைப்பிதழ் கொடுக்கும் வேலையில் மும்முரமாகியுள்ளனர்.

சக நடிகர், நடிகைகள், உறவினர்கள், நண்பர்களுக்கு தனித்தனியாக சென்று அழைப்பிதழ் கொடுத்து வருகிறார்கள்.

கடந்த சில தினங்களில் கமல், அஜீத், விஜய் போன்றோருக்கு பிரசன்னா நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்து திருமணத்துக்கு அழைத்தார்.

இதுகுறித்து பிரசன்னா கூறுகையில், "விஜய், அஜீத் போன்றோரை சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து திருமணத்துக்கு அழைத்தேன். இருவரும் குடும்பத்தினருடன் என்னை சந்தித்தனர். வாழ்த்தும் சொன்னார்கள். சினேகாவிடம் டெலிபோனில் வாழ்த்து கூறினார்கள். கமல்ஹாசனை ஏற்கனவே சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தோம்," என்றார்.

ரஜினிக்காக காத்திருக்கிறோம்..

அடுத்து ரஜினிக்கும் அழைப்பிதழ் கொடுக்க காத்திருக்கிறார்கள் சினேகாவும் பிரசன்னாவும். கேரளாவில் கோச்சடையான் படப்பிடிப்பு முடிந்து ரஜினி வந்ததும் சந்தித்து அழைப்பு தருகின்றனர்.

கோச்சடையானில் ரஜினி தங்கையாக நடிக்கவிருந்து, பின்னர் நீக்கப்பட்டார் சினேகா என்பது குறிப்பிடத்தக்கது.
 

ஒத்தவீடு... 30 நாள்.. சந்தோஷத்தில் புது இயக்குநர்!


இன்றைக்கு ஒரு புதுப்படம் வெளியாகி 1 வாரம் சுமாராக ஓடினாலே பெரிய சாதனை எனும் அளவுக்கு நிலைமை படுமோசம்.

பெரிய பட்ஜெட்டில் வெளியான எத்தனையோ படங்கள் ஒரு வாரத்தில் பெட்டிக்குத் திரும்பியிருக்கின்றன. சமீபத்தில் பெரிதாக விளம்பரம் செய்யப்பட்ட இரு படங்களுக்கு சென்னையின் பிரதான திரையரங்கில் 12 பேர்கள் கூட வராததால், ஒரு தியேட்டரில் காட்சியே ரத்து செய்யப்பட்டது.

இப்படி ஒரு சூழலில் சின்ன பட்ஜெட்டில் கிராமத்துப் பின்னணியில் வெளியான ஒரு படம் 30 நாட்களைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. அதுவும் பிவிஆர், சாந்தி, உதயம் என முக்கிய அரங்குகளில்.

30 நாட்களைக் கடந்த பிறகும் இந்தப் படத்துக்கு தினசரி விளம்பரம் வெளியாகிக் கொண்டிருப்பது இன்னொரு சாதனை.

கிராமத்து மக்களின் மூட நம்பிக்கை ஒரு இளம்பெண்ணின் உயிரைப் பறிக்கும் கதையை, தஞ்சை மாவட்ட பின்னணியில் சொல்லியிருந்தார் படத்தின் இயக்குநர் பாலன் என்கிற பாலு மலர்வண்ணன். பத்திரிகையாளர், பிஆர்ஓ என வாழ்க்கையை ஆரம்பித்து, இயக்குநராகியிருக்கும் திருத்துறைப்பூண்டிக்காரர்.

முதல் முயற்சி. சற்று அமெச்சூர்த்தனம் இருந்தாலும், தான் சொல்ல நினைத்ததை சொல்லியிருந்தார். அந்தப் படம் இத்தனை நாள் ஓடுவது பாலனுக்கு பெரிய தெம்பைக் கொடுத்துள்ளது.

இதுகுறித்து பாலன் கூறுகையில், "கிராமத்து எளிய மனிதர்கள் மற்றும் அவர்களின் பழக்கங்களின் அடிப்படையில் இந்தப் படத்தை எடுத்தேன். ஒரு முக்கிய பாத்திரத்தில் சீமானை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தேன். ஆனால் முடியாமல் போய்விட்டது.

இந்தப் படம் இன்றுவரை பரவாயில்லை எனும் அளவுக்கு பார்வையாளர்களுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. நான் பார்த்த பல அரங்குகளில் பெண்கள், இளைஞர்கள் கூட இந்தப் படத்தை ஒன்றிப்போய் பார்த்தனர். யாரும் சூப்பர் என்று சொல்லாவிட்டாலும் மோசம் என்று சொல்ல முடியாத அளவு இந்தப் படம் அமைந்துவிட்டது. கிராமம் சார்ந்த பகுதிகளில் நல்ல வரவேற்பு கிடைத்தது என் படத்துக்கு.

இதோ இன்று 30 நாட்களைத் தாண்டிவிட்டது படம். நிச்சயம் 50வது நாளைத் தாண்டும் என நம்புகிறேன். நான் யாரிடமும் சினிமா கற்கவில்லை. சினிமா பார்த்து சினிமா எடுக்க கற்றுக் கொண்டேன். இந்தப் படத்தை 20 நாட்களில் எடுத்தேன். அடுத்த படத்தை இன்னும் சிறப்பாக செய்வேன் என்ற நம்பிக்கை இருக்கிறது," என்றார்.

ஒத்தவீடு ரிசல்ட் தந்த தெம்பில் அடுத்த படத்துக்கான வேலைகளில் மும்முரமாகிவிட்டார் பாலன்!
 

மகளை களமிறக்கிக் கலக்கும் ராதா-கேரளாவுக்கே 'ஷிப்ட்' ஆன அம்பிகா!


Ambika, karthika and Radha
இப்போது 40 முதல் 45 வயது ஆகும் 'இளைஞர்களின்' அந்தக் கால 'கனவுக் கன்னி'களாக விளங்கிய அம்பிகா மற்றும் ராதாவின் வாழ்க்கையில் சமீப காலமாக சில திருப்பங்கள்.

அம்பிகாவையும், ராதாவையும் அவ்வளவு சீக்கிரம் தமிழ் சினிமா ரசிகர்கள் மறக்க முடியாது. அந்த அளவுக்கு அவர்களின் 'நடிப்பு வீச்சு' ரசிகர்களை ஒரு காலத்தில் கட்டிப் போட்டு வைத்திருந்தது.

இருவரும், அந்த நாள் ஸ்டார் நடிகர்கள் ஒருவர் விடாமல் அத்தனை பேருடனும் சேர்ந்து ஜோடி போட்டுப் பட்டையைக் கிளப்பியவர்கள். தனித் தனியாக நடித்ததோடு, ஜோடியாக சேர்ந்தும் நடித்து 'தமிழ் சினிமாத் திருவிழாவில்' தூள் கிளப்பியவர்கள்.

இன்று இருவருக்கும் தனித் தனி வாழ்க்கை. தங்கை ராதா ரொம்ப காலமாக மும்பையில் செட்டிலாகிப் போயிருந்தார். அவரது முகமே பலருக்கும் மறந்து போயிருந்தது. ஆனால் ஒரு நல்ல நாளில், தனது மூத்த மகள் கார்த்திகாவோடு, தான் ஏற்கனவே பாடித் திரிந்த கோடம்பாக்கத்தில் கால் வைத்தார். கார்த்திகாவும் இன்று ஒரு நடிகை. அம்மா அளவுக்கு ஆஹாஹா என்று சொல்ல முடியாவிட்டாலும் கூட கார்த்திகாவுக்கும் ஒரு தனி முத்திரை கிடைத்துள்ளது - நன்றி 'கோ'.

'கோ' படத்தில் மகளுக்குக் கிடைத்த வரவேற்பால் பூரிப்படைந்திருந்த ராதாவை மேலும் 'உப்ப' வைக்கும் அளவுக்கு உற்சாகத்தைக் கொடுத்தார் குரு நாதர் பாரதிராஜா. தனது அன்னக்கொடியும் கொடி வீரனும் படத்தில் கார்த்திகாவுக்கும் முக்கிய ரோல் கொடுத்து நடிக்க வைத்துள்ளார். இதனால் கூடுதல் குஷியுடன் காணப்படுகிறார் ராதா.

இது ராதாவின் கதை. அடுத்து அம்பிகாவின் கதை. சினிமாவில் நாயகியாக வெளுத்துக் கட்டிய அம்பிகா போகப் போக அம்மா, அக்கா, அண்ணி என்று ரோல் மாறி நடிக்க ஆரம்பித்தார்.

கடைசியாக அவர் நடிப்பில் அலற வைத்த படம் அவன் இவன். நம்ம அம்பிகாவா இது என்று அனைவரும் ஆச்சரியப்படும் வகையில், 'ஊதி'த் தள்ளியிருந்தார் அம்பிகா.

அவரைத் தேடி நிறையப் பட வாய்ப்புகள் வந்தபோதிலும் அவர் புதிய படங்களை ஏற்க மறுத்து வருவதாக தெரிகிறது. இப்போது நிரந்தரமாக கேரளாவுக்கே 'ஷிப்ட்' ஆகி விட்டதாகவும் சொல்கிறார்கள்.

கேரளாவுக்குப் போன கையோடு அங்கு மலையாளப் படங்களில் கேரக்டர் ரோல்களில் நடிக்க முயற்சிகளை முடுக்கி விட்டுள்ளாராம். மறுபடியும் அவர் சென்னைக்கு இடம் பெயர்வது என்பது சந்தேகம்தான் என்கிறார்கள்.

அம்பிக்கு ஏன் இந்தக் கோவமோ தெரியவில்லை...!
 

நார்வே திரைப்பட விழா கோலாகலமாகத் தொடங்கியது - நடிகை ரிச்சா, இயக்குநர் சற்குணம் பங்கேற்கின்றனர்!


Richa and Sargunam
3 வது நார்வே தமிழ் திரைப்பட விழா மற்றும் தமிழர் விருது 2012 நிகழ்வுகள் இன்று கோலாகலமாகத் தொடங்கியது.

நார்வே தலைநகர் ஆஸ்லோ மற்றும் லொரன்ஸ்கூ நகரங்களில் வரும் 29-ம் தேதி வரை இந்த விழா சிறப்பாக நடைபெற உள்ளது.

இந்த விழாவில் நேரடியாகப் பங்கேற்க மயக்கம் என்ன, ஒஸ்தி புகழ் நாயகி ரிச்சா கங்கோபாத்யாய், புரட்சித் தளபதி விஷால், இயக்குநர்கள் சற்குணம், கவுரவ், ஆவணப்பட இயக்குநர் சுபாஷ் கலியன் , பாலை திரைப்பட நடிகர் சுனில், இசையமைப்பாளர் சுந்தர்.சி.பாபு, புன்னகைப்பூ கீதா, கேசவன் உள்பட பல திரையுலகக் கலைஞர்கள் நார்வே செல்கின்றனர்.

24 ஆம் தேதி முதல் 28 ம் தேதி வரை பத்து தமிழ் திரைப்படங்கள் Ringen திரையரங்கில் பார்வையாளர்களுக்காக திரையிடப்படுகின்றன. இதற்கான நுழைவுச் சீட்டுகளை www.filmweb.no இணையத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

Stovner இல் உள்ள Nedre Fossum Gård - Kultur Salen இல் இருபது குறும்படங்கள் 25, 26 ஆம் தேதிகளில் இலவசமாக திரையிடப்படுகின்றன. இதற்கு நுழைவுச் சீட்டு இலவசம்!

நிறைவு நாளான 29 தேதி தமிழர் விருதுகள் வழங்கும் விழா நடக்கிறது. அன்றைக்கு பார்வையாளர் செவிகளுக்கு இன்னிசை விருந்து வழங்க பிரபல பின்னணி பாடகிகள் சாருலதா மணி, ஸ்ரீமதுமிதா, விஜிதா சுரேஷ், பிரபா பாலகிருஷ்ணன் சூப்பர் சிங்கர் புகழ் அண் சந்தியா(நோர்வே) , பிரவீனா(நோர்வே), மாளவி சிவகணேஷன்(நோர்வே) ஆகியோருடன் 'Yarl stars' இசைக் குழுவினர் இணைந்து வழங்கும் "நள்ளிரவுச் சூரியன்" - இன்னிசை விருந்து நிகழ்ச்சி நடக்கிறது.

தூங்கா நகரம் - சிறப்புத் திரையிடலுக்கு தேர்வு

கவுரவ் இயக்கத்தில் விமல் - அஞ்சலி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி பாராட்டுக்களைப் பெற்ற தூங்கா நகரம் திரைப்படம் இந்த ஆண்டு நார்வே தமிழ் திரைப்பட விழாவின் சிறப்புத் திரையிடலுக்கு தேர்வாகி உள்ளது.

சுபாஷ் கலியன் இயக்கத்தில் "பாலம் கல்யாணசுந்தரம்" அய்யா அவர்களின் ஆவணப்படமும் இந்த விழாவில் சிறப்பு திரையிடலுக்கு தெரிவாகி உள்ளது. நார்வே தமிழ் திரைப்பட விழாவின் பிரதான போட்டிக்கான 15 முழு நீள தமிழ் திரைப்படங்களை, மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புக்கிடையே சமீபத்தில்தான் விழாக்குழுவினர் அறிவித்திருந்தது நினைவிருக்கலாம்.

உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் 50-க்கும் அதிகமாக படங்கள் இந்தப் போட்டிக்குக் குவிந்தன.

நார்வே தமிழ் திரைப்பட விழாவின் நடுவர் குழு பார்த்து தேர்வு செய்ததன் அடிப்படையில் இந்த ஆண்டுக்கான நார்வே திரைப்பட விழாவுக்கு 20 குறும்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இறுதித் தேதிக்குப் பிறகும்கூட பலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு படங்களை அனுப்பலாமா... சேர்க்க முடியுமா என கேட்டவண்ணம் இருந்தது, இந்த விழாவின் பெருமையை பறைசாற்றுவதாக இருந்தது.

தமிழ் சினிமாவுக்கென்றே உலக அளவில் நடக்கும் ஒரே தமிழ் திரைப்பட விழா இது. இந்த விழாவின் முடிவில் சிறந்த திரைப்படத்துக்கு தமிழர் விருதும், சிறந்த நடிகர் - நடிகை, தொழில் நுட்பக் கலைஞர்கள், சிறந்த இயக்குநருக்கான விருதுகள் வழங்கப்படுகின்றன.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விஎன் மியூசிக் ட்ரீம்ஸ் வசீகரன் சிவலிங்கம் மற்றும் குழுவினர் செய்து வருகின்றனர்.

 

வாடகைக்கு பங்களா பிடித்து 'டிஸ்கஷன்' செய்யும் நிஷா அகர்வால்!


காஜல் அகர்வால் காலம் போய் விட்டது. அடுத்து தங்கச்சி நிஷா அகர்வால் டர்ன். இஷ்டம் படத்தில் விமலுடன் ஜோடி போட்டு நடித்துள்ள நிஷா, தமிழ் சினிமாவில் நங்கூரம் பாய்ச்சி தனது இடத்தை பக்கவாக போட்டு விட துடிப்போடு இருக்கிறாராம்.

காஜல் அகர்வாலுக்கே தற்போது தமிழில் பெரிய அளவில் மார்க்கெட் இல்லைதான். இருந்தாலும் அவரது தங்கச்சியான நிஷா அகர்வாலையும் களத்தில் இறக்கி விட்டுள்ளார். தமிழிலும், தெலுங்கிலுமாக தற்போது நடித்து வரும் காஜல், தங்கச்சிக்கும் அவ்வப்போது ஏகப்பட்ட அட்வைஸ்களை அள்ளிக் கொடுத்து ஊக்கமளித்து வருகிறார்.

இருப்பினும் கைவசம் ஓரிரு படங்களே நிஷா வசம் இருக்கிறதாம். இதனால் என்ன செய்யலாம் என்று யோசித்துப் பார்த்துள்ளனர் அக்காவும், தங்கச்சியும். அப்போதுதான் நம்மைத் தேடி கதை சொல்ல வருவோருடன் அமர்ந்து 'டிஸ்கஸ் செய்து கதையை முடிவு செய்ய சரியான இடம்' இல்லை என்று அவர்களுக்குப் புரிந்ததாம்.

இதையடுத்து தற்போது கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒரு பங்களாவை - ஸ்விம்மிங் பூல் உள்ளிட்ட சகல வசதிகளுடன் கூடிய பங்களவாம் அது, வாடகை எவ்வளவு என்று தெரியவில்லை - வாடகைக்குப் பிடித்துள்ளாராம் நிஷா. இப்போது கதை சொல்ல வரும் இயக்குநர்களுக்கும், காசு போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் வசதியாக இந்த பங்களா அமைந்துள்ளதாம்.

இங்கிருந்தபடிதான் இனி இயங்கப் போகிறாராம் நிஷா. எனவே இனிமேல் நிஷாவிடம் கதை சொல்ல விரும்புவோருக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. பங்களாவுக்குப் போய் விட்டால் போதும் ஆற அமர கதை சொல்லி படத்திற்குப் 'புக்' செய்து விட்டு வர முடியும்.
 

எலியும், பூனையுமாக இருந்த கேத்ரினா சோனா சந்திப்பு

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
மும்பை படவுலகில் எலியும், பூனையுமாக இருந்த நடிகைகள் கேத்ரினா கைப்பும், சோனக்ஷி சின்ஹாவும் சந்தித்து திடீர் நெருக்கம் காட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகை சோனக்ஷி சின்ஹா சில நாட்களுக்கு முன்பு நடிகை கேத்ரினா கைப்பை கடுமையாக  விமர்சித்திருந்தார். பின்னர் சுமுக உறவை ஏற்படுத்துவதற்காக அவருக்கு நலம் விசாரித்து மெசேஜ் அனுப்பினார். ஆனால் அதற்கு கேத்ரினா எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை. கடந்த வெள்ளிக்கிழமை நடிகர் சோகைல்கான் இல்ல விழாவில் இருவரும் சந்தித்தனர். அப்போது கட்டியணைத்து ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.

இதில் என்ன விசேஷம் என்றால் இருவரது மோதலுக்கு காரணமான நடிகர் சல்மான்கான் அந்த விழாவில் கலந்து கொண்டதுதான். இருவரும் சகஜமாக சிரித்து பேசிக் கொண்டிருந்தது விழாவுக்கு வந்த தயாரிப்பாளர்கள், சக நடிகர், நடிகைகளை வியப்பில் ஆழ்த்தியது. நடிகை சோனக்ஷி சின்ஹா, நடிகர் சல்மான்கானுடன் 'தபங்க்' படத்தில் நடித்ததில் இருந்து கைப்பும், சோனக்ஷியும் நேருக்கு நேர் சந்திப்பதையே தவிர்த்து விட்டனர். பொது நிகழ்ச்சிகளில் சந்திக்க வாய்ப்பிருந்தும் அதை தவிர்த்தனர். தற்போது இருவரும் ஒட்டிக் கொண்டது மும்பை படவுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து கைப்பின் தோழி கூறுகையில், ''இருவரும் இணைய என்ன காரணம் வேண்டுமானாலும் இருக்கட்டும். நீண்ட நாட்களுக்கு பின்னர் இந்திப் படவுலகின் இரு பெரும் நடிகைகளை இணைந்து பார்ப்பது மகிழ்ச்சியாகத் தானே இருக்கிறது'' என்றார்.


 

கிசு கிசு - நைட் பார்ட்டிக்கு நடிகையுடன் சென்ற ஹீரோ

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

ஆக்ஷன் ஹீரோக்கள் பாலிச¤யை மாத்திக்கிறாங்களாம்... மாத்திக்கிறாங்களாம்... திரும்ப திரும்ப 4 பைட், 4 பஞ்ச், 4 பாட்டுன்னு நடிச்சி சூடுபட்ட ஹீரோக்கள், இப்போ காமெடி சப்ஜெக்ட்ல கவனம் செலுத்துறாங்களாம். 'ஆக்ஷன் ஸ்கிரிப்ட் சொல்லட்டுமாÕன்னு யாராவது கேட்டா, 'காமெடி மெயினா இருந்தா சொல்லுங்க. இல்லாட்டி ஸ்கிரிப்ட்ட மாத்துங்கÕன்னு நைசா சொல்லி அனுப்பிடுறாங்களாம். இதனால ஆக்ஷன் பட இயக்குனர்களும் காமெடியா ஸ்கிரிப்ட் கிடைக்குமான்னு டிவிடிகள்ல தேடி அலையுறாங்களாம்... அலையுறாங்களாம்...

டோலிவுட் சிரஞ்சி ஹீரோவோட வாரிசான ராம் சரண¢ ஹீரோ, பாலிவுட்ல நடிக்க¤றாரு. பீல்டுக்கு போன வேகத்துலேயே நடிகையோட லிங்க்காகி கிசுகிசுவுல சிக்கியிருக்காரு... சிக்கியிருக்காரு... லவ்வரை பிரிஞ்ச பிபாஷ ஹீரோயினோடு ராம் நடிகர் நைட் பார்ட்டிக்கு போறாராம்... போறாராம்... கூடவே பிரண்ட்ஸுங்களும் கம்பெனியா கௌம்பிடுறாங்களாம். ரெண்டுபேரையும் இணைச்சி பரபரப்பா பேசினாலும் அது பத்தி பிபாஷ ஹீரோயின் 'டோன்ட் கேர்Õனு சொல்றாராம். இது எல்லாம் தெரிஞ்ச அப்பா நடிகரு ஹீரோ மேல கோபமா இருக்காராம்... இருக்காராம்...

அங்காடி ஹீரோயின் கிளாமருக்கு மாறிட்டாராம்... மாறிட்டாராம்... முன்னெல்லாம் பங்ஷன், நிகழ்ச்சின்னு வந்தா மேக்கப், காஸ்டியூம்ல கவனம் எடுத்துக்காம டல்லா வருவாரு. சமீபத்துல பளபள மேக்கப், தூக்கலான ஸ்கர்ட்டுன்னு பங்ஷனுக்கு வந்தாராம்... வந்தாராம்... இனிமே நடிகையோட ஸ்டைல் இப்படித்தான் இருக்கும்னு அவரோட நெருக்கமானவங்க சொல்றாங்களாம்... சொல்றாங்களாம்...


 

எனக்கு எல்லாமே கவுதம் மேனன்தான்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'எனக்கு எல்லாமே கவுதம்மேனன்தான்' என்கிணறார் சமந்தா. 'மாஸ்கோவின் காவிரி', 'பாணா காத்தாடி' படங்களில் நடித்தவர் சமந்தா. இப்படங்கள் தோல்வியை தழுவியதால் ராசி இல்லாத நடிகை என்று ஒதுக்கப்பட்டார். இந்நிலையில் அவர் மீது இயக்குனர் கவுதம் மேனன் பார்வை திரும்பியது. அத்துடன் அவருக்கு அதிர்ஷ்டகாற்று வீசத் தொடங்கிவிட்டது. தமிழ், இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் 'நீதானே என் பொன்வசந்தம்' என்ற படத்தை கவுதம் இயக்குகிறார். இந்த 3 படங்களுக்கு வெவ்வேறு ஹீரோக்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். ஆனால் 3 மொழியிலும் ஹீரோயின் சமந்தாதான். இதுபற்றி சமந்தா கூறும்போது, 'இப்போதைக்கு இந்தி படம் எதிலும் நடிக்கும் எண்ணம் இல்லை. இன்னும் சொல்லப்போனால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆனாலும் கவுதம் மேனன் இயக்கும் இந்தி உள்ளிட்ட 3 மொழி படத்தில் நடிக்கிறேன். 3 மொழியிலும் ஒரே ஹீரோயின் நடிக்க வேண்டும் என்று அவர் விரும்பியதால் ஒப்புக்கொண்டேன். அவரது கணிப்பை மதிக்கிறேன். எப்போதுமே அவர் எனக்கு நன்மைதான் செய்வார். அவர் என் குரு. எல்லாமும் அவர்தான். மணிரத்னம் படத்தில் என்ன வேடம் என்கிறார்கள். அது மிகவும் ரகசியம். இப்போதைக்கு அதுபற்றி சொல்லமாட்டேன். இந்த வருடம் எனக்கு சுமார் 8 படங்கள் ரிலீஸ் ஆகும் என்ற எண்ணுகிறேன். இதற்காக கடினமாக உழைக்கிறேன்' என்றார்.


 

சம்மருக்கு முன்னணி நடிகர் படம் ரிலீஸ் இல்லை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கோடை விடுமுறைக்கு ஸ்டார் நடிகர் படங்கள் எதுவும் இம்முறை ரிலீஸ் ஆகாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஒவ்வொரு கோடை விடுமுறை நாட்களிலும் முன்னணி நடிகர் படங்கள் வருவது வழக்கம். பள்ளி, கல்லூரி விடுமுறை என்பதால் கோடையில் முன்னணி நடிகரின் எந்த படம் வந்தாலும் அந்த படம் சுமாராக இருந்தாலே வசூலை அள்ளிவிடும். ஆனால் இம்முறை பெரிய நடிகரின் படங்கள் எதுவும் வரவில்லை.  முன்னணி நடிகர்களின் படங்களுக்கு தேக்கம் ஏற்பட்டுள்ளது. இளம் நடிகர்கள், புதுமுகங்கள் நடித்த படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆகின்றன. கோடையில் வெளியாகும் பெரிய படங்கள் கூடுதல் வசூல் குவித்திருக்கிறது. இது நடிகர்களின் ஸ்டார் அந்தஸ்தை கூட்டவும் உதவியது. 1999ல் ரஜினியின் 'படையப்பாÕ, 1996ல் கமலின் 'இந்தியன்Õ மற்றும் விஜய் நடித்த 'கில்லிÕ, விக்ரமின் 'சாமிÕ, சூர்யாவின் 'அயன்Õ போன்ற படங்கள் வசூலை அள்ளிக் குவித்தன. இந்த கோடையில் கமலின் 'விஸ்வரூபம்Õ, அஜித்தின் 'பில்லா 2Õ, 'மாற்றான்Õ, 'சகுனிÕ போன்ற படங்கள் ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால் திரையுலகில் தயாரிப்பாளர்பெப்சி மோதல¢ காரணமாக ஸ்டிரைக் நடந்ததால் 1 மாத காலம் ஷூட்டிங் தடைபட்டது. இதனால் திட்டமிட்டபடி படங்களை முடிக்க முடியவில்லை. இதையடுத்து ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. 'கடந்த வருடங்களில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியால் படங்களின் வசூல் பாதித்தது. இம்முறை அதனால் பாதிப்பு இல்லை. ஐபிஎல் சீசன் நடக்கும் இந்த நேரத்தில் தியேட்டரிலும் கூட்டம் இருக்கிறது' என வினியோகஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.


 

'மை டியர் குட்டிச்சாத்தான்' புகழ் மலையாள தயாரிப்பாளர் அப்பச்சன் மரணம்


Appachan
பிரபல மலையாள சினிமா தயாரிப்பாளரும், இயக்குனருமான அச்சப்பன் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 81.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அப்பச்சன் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தார். அவருடைய உடல்நிலை மோசமடைந்து நேற்று மாலை உயிர் பிரிந்தது.

'நவோதயா அச்சப்பன்' என்று அழைக்கப்படும் அவருடைய இயற்பெயர், மலியம்புரக்கல் சாக்கோ புன்னூஸ். இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் வெளியாகி வசூலில் சாதனை படைத்த முதல் '3 டி' படமான 'மை டியர் குட்டிச்சாத்தான்' படத்தை தயாரித்தவர் அப்பச்சன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜே.சி.டேனியல் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்ற அப்பச்சன், மலையாள திரையுலகில் சினிமாஸ்கோப், 70 எம்.எம். போன்ற புதிய தொழில்நுட்பங்களை புகுத்தியவர். பல புதுமுகங்களையும் துணிச்சலுடன் தனது படங்களில் அறிமுகப்படுத்தியவர்.

மலையாளத்தின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாசிலை அறிமுகப்படுத்தியவர், மஞ்சில் விரிஞ்ச பூக்கள் படம் மூலம் பூர்ணிமா பாக்யராஜை அறிமுகப்படுத்தியவர், மலையாளத்தின் முதல் 70 எம்எம் படத்தை இயக்கியவர் என பல பெருமைகள் அவருக்கு உண்டு.

இந்தியாவின் முதல் தீம் பார்க்கான கிஷ்கிந்தாவின் நிறுவனர் அவரே.

அப்பச்சனுக்கு மனைவியும், இரு மகன்கள் மற்றும் இரு மகள்களும் உள்ளனர்.

இரங்கல்

அப்பச்சன் மறைவுக்கு மலையாள, தமிழ் திரையுலகம் இரங்கல் தெரிவித்துள்ளது. கேரள முதல்வர் உம்மன்சான்டி தனது இரங்கலை தெர்வித்துள்ளார்.