விநாயகம் பிரதர்ஸ் படத்துக்காக ஓடும் ரயில் மீது சண்டை போடுவது போன்ற காட்சியை டூப்பில்லாமல் படமாக்கப் போகிறார்கள்.
ஆரம்பம் படம் குறித்து ஆரம்பத்தில் எந்த செய்தியும் கசியாமல் இருந்தது. இப்போது படம் ரிலீசாகும் நேரம் என்பதால் படம் குறித்து பல செய்திகள் - படங்களை வரிசையாக வெளியிட்டு வருகின்றனர்.
ஆனால் அஜீத் இப்போது நடித்து வரும் விநாயகம் பிரதர்ஸ் படம் குறித்து ஆரம்பத்திலிருந்தே பல செய்திகள் வெளி வந்த வண்ணம் உள்ளன.
சமீபத்தில் இந்தப் படத்துக்காக ஓடும் ரயிலில் அஜீத் போடவிருக்கும் சண்டையைப் பற்றித்தான் யூனிட்டில் பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்.
ஒடிஷா - ஆந்திரா எல்லையில் உள்ள ரயில் பாதையில் இந்த காட்சி எடுக்கப்பட உள்ளது. இதற்காக தென் கிழக்கு ரயில்வேயில் முறையான அனுமதி பெற்றுள்ளனர்.
அஜீத் ஜோடியாக தமன்னா நடிக்கும் இந்தப் படத்தை ஷிவா இயக்குகிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.