ரஜினியுடன் ஹட்‌ரிக் அடிக்கும் பீட்டர் ஹெய்ன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சிவாஜி, எந்திரன் படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் பணிபுரிந்த ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் தற்போது சூப்பர் ஸ்டாருடன் ஹட்ரிக் அடிக்கப் போகிறார். ரஜினியின் அடுத்த படம் 'கோச்சடையன்'. 3டி-யில் தயாராகும் வரலாற்றுப் படமான இதில் ர‌ஜினி நடிக்கிறார் என்பது மட்டுமே உறுதியாகியிருக்கிறது. ஹீரோயின் யார் என்பதுகூட முடிவாகாத நிலையில் பீட்டர் ஹெயினை ஸ்டண்ட் மாஸ்டராக அறிவித்திருக்கிறார்கள். ர‌ஜினி படத்தைப் பொறுத்தவரை மாஸ்டருக்கு இது ஹாட்‌ரிக்.



 

‘ஐஸ்’ குழந்தை போட்டோவுக்கு பல கோடி ரூபாய் பேரம்

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
உலக அழகி ஆன பிறகுதான் ஐஸ்வர்யாராய் கோடிகளில் சம்பாதிக்க ஆரம்பித்தார். அவரது குழந்தையோ பிறந்தவுடனே கோடிகளை சம்பாதிக்க தயாராக உள்ளது. ஐஸ்வர்யா ராய்க்கு கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்தது. ஆஸ்பத்திரியில் குழந்தையுடன் ஐஸ்வர்யா ராய் இருப்பதுபோன்ற மார்பிங் படம் இன்டர்நெட்டில் உலா வந்தது. அது வெட்டி ஒட்டப்பட்ட படம் என்று தெரிவித்தார் அமிதாப்பச்சன். இந்நிலையில், ஐஸ் குழந்தையின் போட்டோவை யார் முதலில் வெளியிடுவது என்ற போட்டி மும்பை பத்திரிகை, மீடியாக்கள் மத்தியில் நிலவுகிறது. ஐஸ்வர்யா உலகப்புகழ் பெற்றவர் என்பதால், வெளி நாட்டு மீடியாக்களும் குதித்திருக்கின்றன. கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கி, குழந்தையின் போட்டோவை வெளியிட அவை பேரம் பேசி வருகின்றன. இதுவரை அமிதாப் மசியவில்லை. அதிக பணம் தரும் பெரிய மீடியா நிறுவனங்களுக்கு பேத்தி படத்தை அமிதாப் தர வாய்ப்பு இருப்பதாக பாலிவுட்டில் தகவல் பரவுகிறது.


 

மணிரத்னம் அடுத்த பட தகவல்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
மணிரத்னம் அடுத்து என்ன படம் எடுக்கிறார் என்று அவர் தரப்பிலிருந்து இதுவரை செய்தியில்லை. படம் எடுக்கிறாரா என்றுகூட கேள்விகள் வருகின்றன. இந்நிலையில் வைரமுத்து வாய்ஸ் தந்திருக்கிறார். மணிரத்னத்தின் புதிய படத்துக்கு வைரமுத்து முதல் பாடலை எழுதியிருக்கிறார். பாடலுக்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான்.




 

"ஒஸ்தி" படத்தை பாராட்டிய ரஜினி!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், சூப்பர்ஸ்டார் ரஜினினாந்த்திடம் 'ஒஸ்தி' பட டிரெய்லரை பார்க்க சொன்னாராம். உடனே நம்ம சூப்பர் ஸ்டார் 'ஒஸ்தி' பட டிரெய்லரை பார்த்து விட்டு ஒஸ்தி படக்குழுக்கு பாராட்டுகளை தெரிவித்தாராம்-. இயக்குனர் தரணியின் முந்தைய படங்களான தில், தூள், கில்லி படங்கள் தனக்கு மிகவும் பிடித்த படங்கள் எனக் கூறிய ரஜினி, ஒஸ்தி படத்தை மாஸ் எ‌ண்டர்டெய்னர் என்ற பாராட்டியுள்ளார்.


 

தாண்டவம் ஆக்சன் பின்னணி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
விஜய் இயக்கும் தாண்டவத்தில் எமி ஜாக்சனுடன் தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபுவும் நடிக்கிறார். ஆந்திராவில் தமிழ்ப் படங்களுக்கு அதிக ஆதரவு இருப்பதால் ஒரு தெலுங்கு நடிகரையும் படத்தில் இழுத்துப் போடடுவதால் வியாபார உத்தரவாதம் இரட்டிப்பாகிறது. தெய்வத்திருமகளுக்கு மாறாக தாண்டவம் ஆக்சன் பின்னணியில் தயாராகிறது. ‌ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். வெளிநாட்டில் கணிசமான காட்சிகள் எடுக்க இருக்கிறார்கள்.



 

ஹீரோயின்கள் இடையே சண்டை மூட்டாதீர்கள் : அஞ்சலி கோபம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'எங்கேயும் எப்போதும்' படத்தில் ஜோடியாக நடித்த ஜெய்க்கும் அஞ்சலிக்கும் காதல் என்று வதந்தி பரவியது. இல்லவே இல்லை என்று அஞ்சலி மறுத்தார். இந்நிலையில் 3 ஹீரோயின்கள் படத்தில் அஞ்சலி நடிப்பதால் அதில் அவர் செகண்ட் ஹீரோயினாக நடிக்கிறார் என்று கிசுகிசு கிளம்பி உள்ளது. இதுபற்றி அஞ்சலி கூறியதாவது: நடிகருடன் காதல் என்று வதந்தி பரப்பி அதற்கு இப்போதுதான் மறுப்பு சொன்னேன். இதற்கிடையில் ஹீரோயின்களுக்குள் சண்டை மூட்டும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். விக்ரம் நடிக்கும் 'கரிகாலன்' படத்தில் 3 ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். இதில் முதலிடம் யாருக்கு என்கிறார்கள். முதல், இரண்டாவது என்று ஏன் பிரிக்கிறார்களோ தெரியவில்லை. 3 ஹீரோயின்களுக்கும் சமமான ரோல் என்றுதான் சொல்லி இருக்கிறார்கள். சோழ வரலாற்று பின்னணியில் இப்படம் அமைக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக ஆக்ஷன் வேடத்தில் நடிக்கிறேன். குதிரை ஏற்றம், சண்டை காட்சிகளில் நடிக்க பயிற்சி பெற்று வருகிறேன். இம்மாதம் 10ம் தேதி ஷூட்டிங் தொடங்குகிறது. விக்ரமுடன் நடிக்கும் காட்சிகள் ஐதராபாத்தில் படமாக உள்ளன. இவ்வாறு அஞ்சலி கூறினார்.


 

கமல் தலைமையில் ஃபிக்கி மாநாடு... கவர்னர் ரோசய்யா தொடங்கி வைத்தார்!


சென்னை: இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு சார்பில் திரைப்படங்கள் சார்ந்த ஊடகம் மற்றும் தொழில்துறை மாநாடு சென்னையில் உள்ள லீராயல் மெரிடியன் ஓட்டலில் இன்று காலை தொடங்கியது.

நடிகர் கமல் ஹாஸன் தலைமையில் 2 நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டின் தொடக்க விழாவில் நடிகை திரிஷா குத்து விளக்கேற்றினார். பிக்கி அமைப்பின் பொதுச் செயலாளர் ராஜீவ்குமார் வரவேற்று பேசினார்.

தமிழக ஆளுநர் ரோசய்யா விழாவில் பங்கேற்று மாநாட்டை தொடங்கி வைத்தார்.

"இந்திய திரையுலகில் இந்தி, தமிழ், தெலுங்கு திரைப்படங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சர்வதேச சினிமாவுக்கு நிகராக இந்திய திரையுலகம் வளர்ச்சியடைந்து வருகிறது. நல்ல கதையம்சம் உள்ள படங்களையும் மக்களுக்கு கருத்துக்கள் சொல்லும் படங்களையும் தயாரிக்க வேண்டும்," என்றார்.

தொழில் வர்த்தக கூட்டமைப்பு தலைவர் நடிகர் கமலஹாசன் மாநாட்டில் பங்கேற்று பேசுகையில், "டிஜிட்டல் சினிமா வளர்ந்தால் அரசுக்கு வருமானம் பெருகும். திரையுலகம் டிஜிட்டல் சினிமா மாற்றத்துக்குள் வந்தே தீரும்," என்றார்.

தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகரன், டைரக்டர் பாலச்சந்தர், யு.டி.வி. சேர்மன் ரோனிஸ் க்ரூவாலா, சேம்பர் தலைவர் கல்யாண், பிக்கி அமைப்பின் தமிழக தலைவர் ரபீக் அகமது ஆகியோர் பேசினர்.
 

சிரஞ்சீவி மகன் ராம் சரணுக்கு இன்று நிச்சயதார்த்தம்!


ஹைதராபாத்: பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜாவுக்கும் அப்பல்லோ மருத்துவமனை நிறுவனர் பிரதாப் சி ரெட்டியின் பேத்தி உபாஸனாவுக்கும் இன்று மாலை நிச்சயதார்த்தம் நடக்கிறது.

இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிரபல நடிகரப் சிரஞ்சீவி யின் மகன் ராம்சரண். தெலுங்கில் பிரபல நடிகர். சில வாரங்களுக்கு முன் ராம்சரணுக்கு திருமணம் முடிவானது. மணமகள் உபாஸனா. இவர் அப்பல்லோ மருத்துவமனை நிறுவனர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டியின் பேத்தி.

ராம்சரண்-உபாஸனா திருமண நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில் உள்ள பண்ணை வீட்டில் இன்று மாலை நடக்கிறது.

நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் நிச்சயதார்த்த விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் ஆகியோரையும் அழைத்துள்ளதாக சிரஞ்சீவி குடும்பத்தினர் தெரிவித்தனர். அரசியல் தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.

இந்த விழாவையொட்டி பண்ணை இல்லம் அமைந்துள்ள பகுதியி்ல் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 

கோச்சடையான் ஸ்டன்ட் இயக்குநர் பீட்டர் ஹெயின் - சௌந்தர்யா!


சிவாஜி, எந்திரனைத் தொடர்ந்து ரஜினியின் அடுத்த படமான கோச்சடையானுக்கும் ஸ்டன்ட் இயக்குநராக ஒப்பந்தமாகியுள்ளார் பீட்டர் ஹெயின்.

இந்தத் தகவலை படத்தின் இயக்குநர் சௌந்தர்யா அஸ்வின் நேற்று வெளியிட்டுள்ளார்.

இத்துடன் தொடர்ந்து ரஜினியின் மூன்று படங்களுக்கு சண்டைப் பயிற்சி இயக்குநராகப் பணியாற்றும் வாய்ப்பினை பீட்டர் ஹெயின் பெற்றுள்ளார்.

முன்பெல்லாம் ரஜினி வருடத்துக்கு மூன்று நான்கு படங்கள் நடித்துக் கொண்டிருந்தபோது இது பெரிய விஷயமில்லை. அப்போதெல்லாம் ஜூடோ ரத்தினம் ரஜினியின் நிரந்தர ஸ்டன்ட் மாஸ்டர்.

ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு படம் என்று மாறிய பிறகு, ரஜினி படத்தில் வாய்ப்பு கிடைப்பது மிகப்பெரிய அதிர்ஷ்டமாக பார்க்கப்படுவதால், பீட்டர் ஹெயின் மிகுந்த சந்தோஷம் அடைந்துள்ளார்.

நாயகி அனுஷ்கா?

கோச்சடையான் நாயகி யார் என்பதை இன்னும் ரஜினி தரப்பில் அறிவிக்கவில்லை. இயக்குநர் மேற்பார்வை பொறுப்பை ஏற்றுள்ள கே எஸ் ரவிக்குமார், "அனுஷ்காவிடம் பேசிக் கொண்டிருக்கிறோம். இன்னும் முடிவாகவில்லை," என்று கூறியிருந்தார்.

மேலும் இரு நாயகிகளிடமும் கோச்சடையான் குழு பேசி வருவதாகக் கூறப்படுகிறது.
 

டேம் 999: தமிழக அரசின் தடையை எதிர்த்து இயக்குனர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு


திருவனந்தபுரம்: டேம் 999 படத்திற்கு தமிழக அரசு தடைவிதித்துள்ளதை எதிர்த்து அப்படத்தின் இயக்குனர் சோஹன் ராய் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

முல்லைப்பெரியாறு அணை உடைவது போன்றும், அதனால் ஏராளமான மக்கள் பாதிக்கப்படுவது போன்றும் எடுக்கப்பட்டுள்ள படம் டேம் 999. இந்த படத்திற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் போராட்டங்கள் நடத்தின. இதையடுத்து அந்த படத்திற்கு தமிழக அரசு தடை விதித்தது.

தமிழகம் தவிர இந்தியா முழுவதும் டேம் 999 ரிலீஸானது. தற்போது தமிழக அரசின் தடையை எதிர்த்து படத்தின் இயக்குனர் சோஹன் ராய் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

பிரேசில், சீனா போன்ற நாடுகளில் அணைகள் உடைந்ததால் ஏற்பட்ட பாதிப்பின் அடிப்படையில் டேம் 999 படத்தை எடுத்தேன். அதற்கு தமிழக அரசு தடைவிதித்துள்ளது நியாயமற்றது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளேன் என்றார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பேட்டியளித்த சோஹன் ராய், தமிழகத்தில் டேம் 999 படத்திற்கு கிளம்பிய எதிர்ப்பு மற்றும் தமிழக அரசின் தடையால் அந்த படத்திற்கு நாடு முழுவதும் நல்ல விளம்பரம் கிடைத்ததாகத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

கிளாமர்னா நான்தான்... எனக்கு ஆல்டர்நேட் கிடையாது! - நமீதா


தமிழ் சினிமாவில் கிளாமர் என்றால் அது நான்தான். எனக்கு ஆல்டர்நேட் கிடையாது என்கிறார் நமீதா.

கொஞ்சநாள் மும்பையில் தனது கட்டுமான நிறுவனத்தை கவனித்துக் கொண்டிருந்த நமீதா, மீண்டும் சென்னை திரும்பிவிட்டார். இங்கே உள்ள அவரது சொந்த வீட்டில் தங்கி, அடுத்த ரவுண்ட் வாய்ப்புகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

இந்த நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாற்றுப் படமான டர்ட்டி பிக்சர் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், "'தி டர்ட்டி பிக்சர்’ படத்துல சில்க் கேரக்டருக்கு வித்யாபாலன் தப்பு சாய்ஸ்னு சொல்வேன். 'அந்த கேரக்டருக்கு நீதான் ஃபிட்’னு என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சொல்லிச்சு. யோசிச்சா அதுதான் கரெக்ட். தமிழ்ல அந்தப் படத்தை யாராச்சும் எடுத்தா... நான் சூப்பர் கிளாமரா நடிப்பேன்.

என்னைப் பொறுத்தவரை எனக்குப் பிடிச்ச கிளாமர் நடிகை நான்தான். எனக்கு யாரும் ஆல்டர்னேட்டிவ் கிடையாது!'' என்று கூறியுள்ளார்.
 

தயாரிப்பாளர் புகார்... பிரபல விநியோகஸ்தர் மதுரை அன்பு கைது


மதுரை: ரூ 20 லட்சம் கடனுக்காக ரூ 1.5 கோடி சொத்துக்களை மிரட்டிப் பறித்ததாக தயாரிப்பாளர் தங்கராஜ் கொடுத்த புகாரின் பேரில், பிரபல விநியோகஸ்தர் மதுரை அன்பு என்கிற அன்புச்செழியன் கைது செய்யப்பட்டார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள விரிச்சான்குளத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ். சுந்தரா டிராவல்ஸ், மீசை மாதவன் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.

இவர் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்ரா கார்க்கிடம் இன்று ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில், "நான் கடந்த 10 வருடங்களாக படதயாரிப்பு தொழில் செய்து வருகிறேன். கடந்த 2004-ல் பட தயாரிப்புக்காக மதுரை தெற்கு மாசிவீதியை சேர்ந்த சினிமா வினியோகஸ்தர் அன்புசெழியனிடம் ரூ.20 லட்சம் கடனாக வாங்கினேன். அப்போது அவர் ரூ.3 லட்சத்தை வட்டியாக எடுத்துக்கொண்டு ரூ.17 லட்சம் என்னிடம் கொடுத்தார்.

இந்த கடனை வாங்குவதற்காக எனது பெயரிலும், எனது மனைவி பெயரிலும் இருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் மற்றும் காசோலைகளையும் பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து லட்சக்கணக்கில் பணம் செலுத்தி வந்தேன். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நான் கொடுத்திருந்த சொத்து ஆவணங்களை பவர் எழுதி தரும்படி அன்புசெழியன் மிரட்டினார்.

அப்போது வாங்கிய கடனுக்கு உரிய தொகையை நான் செலுத்தி விட்டதாக அவரிடம் தெரிவித்தேன். அவர் நீ செலுத்தியது வட்டிதான், இன்னும் அசல் வரவில்லை என்று கூறி சொத்துக்குரிய பவரை எழுதி தரும்படி மீண்டும் மிரட்டினார்.

இதையடுத்து மதுரை துரைசாமி நகரைச் சேர்ந்த முரளி என்பவரது பெயரில் பவர் எழுதி மதுரை பீ.பி.குளத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவருக்கு விற்பனை செய்து விட்டனர். இதனால் வாங்கிய கடன் ரூ.20 லட்சத்துக்கு, ரூ.1.5 கோடி தொகை கந்துவட்டி மூலம் என்னிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து எனது சொத்துக்களை மீட்டுத் தர வேண்டும்," என்று தெரிவித்துள்ளார்.

இந்த புகார் குறித்து போலீஸ் சூப்பிரண்டு அஸ்ரா கார்க், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த உத்தரவிட்டார். மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் புகார் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணைக்காக நேற்று மாலை அன்புசெழியன் மற்றும் முரளி, ராமகிருஷ்ணன் ஆகிய 3 பேரும் அழைக்கப்பட்டனர். அவர்களிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

இதையடுத்து சொத்து அபகரிப்பு மற்றும் கந்து வட்டி கேட்டு மிரட்டல், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சினிமா வினியோகஸ்தர் அன்புசெழியன், அவரது நண்பர்கள் முரளி, ராமகிருஷ்ணன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

நள்ளிரவு 1 மணிக்கு மாஜிஸ்திரேட்டு உமா மகேஸ்வரி வீட்டுக்கு 3 பேரையும் அழைத்து சென்று ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட்டு உமாமகேஸ்வரி 3 பேரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மதுரை அன்பு திரையுலகில் மிகப் பெரிய சக்தியாக வலம் வந்தவர். மதுரை நகர முக்கிய பிரமுகர். கந்துவட்டி புகாரில் ஏற்கெனவே பலமுறை இவர் பெயர் அடிபட்ட நிலையில், இப்போது கைதாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

'ரசிகன் எக்ஸ்பிரஸ்' பயணத்துடன் ரஜினி பிறந்த நாள் ஆரம்பம்!


சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாளையொட்டி அவருக்கு வாழ்த்துச் சொல்ல விரும்பும் ரசிகர்களுக்காக 'ரசிகன் எக்ஸ்பிரஸ்' என்ற பெயரில் வாகனத்தை இயக்குகிறது விஜய் டிவி.

திங்கள்கிழமை காலை சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவிலிருந்து புறப்பட்ட இந்த வாகனம் தமிழகமெங்கும் ஒரு ரவுண்ட் அடித்து ரசிகர்களின் வாழ்த்துக்களைச் சுமந்துகொண்டு மீண்டும் வரும் டிசம்பர் 10-ம் தேதி சென்னை வந்து சேர்கிறது.

எதற்காக இந்த எக்ஸ்பிரஸ்?

"ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வேண்டும் என்ற ஆசை எல்லோருக்குமே உண்டு. நேரில் சொல்ல முடியாதவர்களின் வசதிக்காக இந்த வாகனம் அவர்கள் இருக்குமிடத்துக்கே சென்று ரஜினிக்கு ரசிகனின் வாழ்த்துக்களைச் சேகரித்துக் கொண்டு வருகிறது. அனைத்து ரசிகர்களும் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த வாழ்த்துக்கள் பின்னர் தலைவருக்கு சேர்க்கப்படும்," என்றார் சென்னை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் என் ராமதாஸ்.

இந்தப் பேருந்தை ஏவி எம் சரவணன் மற்றும் இயக்குநர் எஸ்பி முத்துராமன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். 62 தேங்காய்கள் உடைக்கப்பட்டு, திருஷ்டி பூசணிக்காய் உடைத்து பேருந்தை வழியனுப்பி வைத்தனர் சென்னை மற்றும் சுற்றுப் புறங்களிலிருந்து வந்திருந்த ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள்.

சைதை பகுதி தலைமை மன்றத்திலிருந்து சைதை ரவி, ரசிகர்களுடன் வந்து பேனர் வைத்து கலக்கியிருந்தார். அவருடன் சைதை முருகன், தாம்பரம் கேசவன், தி நகர் பழனி, பிஆர்ஓ ரியாஸ் உள்பட பலரும் பங்கேற்றனர்.

இந்த ரசிகன் எக்ஸ்பிரஸ் வாகனம், ஏற்கெனவே சேலம், நாமக்கல் மாவடங்களைக் கடந்து, நாளை ஈரோடு செல்கிறது. டிசம்பர் 2-ம் தேதி கோவை, டிசம்பர் 3-ல் திருப்பூர், கரூர், காங்கேயம், டிசம்பர் 4 -ம் தேதி மதுரை, டிசம்பர் 5-ம் தேதி தஞ்சை, புதுக்கோட்டை, டிசம்பர் 6-ம் தேதி திருச்சி, டிசம்பர் 7-ம் தேதி கும்பகோணம், சிதம்பரம், டிசம்பர் 8-ம் தேதி கடலூர், பாண்டி, டிசம்பர் 9-ம் தேதி வேலூர், காஞ்சிபுரம் பகுதிகளில் பயணிக்கிறது.

டிசம்பர் 10-ம் தேதி மீண்டும் சென்னை திரும்புகிறது.
 

ஒஸ்திக்கு 'ரெட்'... டிச 8-ல் ரிலீசாகுமா?


சன் டிவிக்கு சேட்டிலைட் உரிமையை விற்றதால் சிம்பு நடிப்பில் தரணி இயக்கியுள்ள ஒஸ்தி படத்தை வரும் 8-ம் தேதி வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஒஸ்தி படத்தை வரும் டிசம்பர் 8-ம் தேதி உலகம் முழுவதும் வெளியிடுவதாக அறிவித்திருந்தனர். ஆனால் இந்தப் படத்தின் சேட்டிலைட் உரிமை சன் டிவிக்கு விற்கப்பட்டுள்ளது.

இதனால் படத்தை திரையிட தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சம்மேளனம் எதிர்ப்பு தெரிவித்து, ஒஸ்திக்கு ரெட் கார்டு போடுவதாக அறிவித்துள்ளது.

தங்களின் டெபாசிட் தொகையை திருப்பித் தரும் வரை சன் குழுமத்துடன் தொடர்புள்ள படங்களுக்கு ஒத்துழைப்பு தரமாட்டோம் என்று சமீபத்தில்தான் திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்தது நினைவிருக்கலாம்.

இந்த நிலையில் ஒஸ்திக்காக திரையரங்குகளை ஒப்பந்தம் செய்ய விநியோகஸ்தர்கள் முயன்றபோது, சன் டிவி பிரச்சினையைக் காட்டி தியேட்டர் தரமறுத்துள்ளனர் உரிமையாளர்கள்.

சன் டிவி ரூ 2.4 கோடியை கொடுத்து தியேட்டர் உரிமையாளர்களை செட்டில் செய்தால் மட்டுமே ஒஸ்தி ரிலீசாக முடியும் என்ற நிலை இப்போது ஏற்பட்டுள்ளது.
 

சார்ஜா நட்சத்திர கிரிக்கெட் - த்ரிஷா தூதர்?


சார்ஜாவில் நடக்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு விளம்பரத் தூதராக த்ரிஷாவை நியமிக்க பேச்சு நடக்கிறது.

தமிழ், இந்தி, கன்னடம், மலையாள நடிகர்களின் நட்சத்திர 20 ஓவர் கிரிக்கெட் போட்டியான சிசிஎல் சார்ஜாவில் வரும் ஜனவரி 13-ந்தேதி துவங்குகிறது. பெங்களூர், மும்பை, சென்னை, திருவனந்தபுரம், ஹைதராபாத்தில் இப்போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தி நடிகர்கள் அணிக்கு சல்மான்கானும், தமிழ் நடிகர்கள் அணிக்கு சூர்யாவும் கேப்டன்களாக உள்ளனர்.

தெலுங்கு அணிக்கு ஜுனியர் என்.டி.ஆரும், மலையாள நடிகர்கள் அணிக்கு மோகன்லாலும் கேப்டன்களாக உள்ளனர். ஒவ்வொரு அணியும் பிரபல நடிகைகளை விளம்பர தூதுவர்களாக ஒப்பந்தம் செய்துள்ளன. இந்தி நடிகர்கள் அணிக்கு சோனாக்ஷி சின்ஹா, ஜெனிலியா, கங்கனா ரணாவத் ஆகியோர் தூதுவர்களாகியுள்ளனர்.

ஸ்ரேயா தெலுங்கு அணிக்கும், பாவனா, லட்சுமிராய் ஆகியோர் மலையாள அணிக்கும் தூதர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் நடிகர்கள் கிரிக்கெட் அணியில் ஜெயம்ரவி, ஸ்ரீகாந்த், அப்பாஸ், ஜெய் உள்ளிட்ட பலர் இடம் பெற்று உள்ளனர். இந்த அணியின் தூதுவராக திரிஷாவை ஒப்பந்தம் செய்ய பேச்சு நடக்கிறது.

இதனை த்ரிஷாவும் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "என்னை தூதுவராக ஒப்பந்தம் செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவது உண்மைதான். ஆனால் நான் தமிழ், தெலுங்குப் படங்களில் பிஸியாக உள்ளேன். ஷூட்டிங் தேதிகளில்தான் இந்த கிரிக்கெட் போட்டிகளும் நடக்கின்றன. அதுதான் பிரச்சினை. பார்க்கலாம்," என்றார்.
 

கமல் தொடங்கும் மய்யம் இணைய இதழ்!


ரசிகர்களுக்காக முன்பு கமல்ஹாஸன் மய்யம் என்ற பத்திரிகையை தொடங்கி சில காலம் நடத்தினார்.

பின்னர் பத்திரிகை நின்றுவிட்டது. கடந்த ஆண்டு மீண்டும் மய்யம் பத்திரிகையை டேப்ளாய்டு வடிவில் நடத்த ஆரம்பித்தார். இலக்கிய அறிஞர்களை இதற்காக பிரத்தியேகமாக சந்தித்து பேட்டிகளும் எடுக்கப்பட்டன.

இப்போது மய்யம் பத்திரிகை முழுமையான இணைய இதழாகிறது.

ரசிகர்மன்ற நிகழ்ச்சிகள், தனது படங்கள் பற்றிய விவரங்கள், புகைப்படங்கள், இலக்கிய கட்டுரைகள் போன்றவற்றை இந்த இணைய தளத்தில் அப்டேட் செய்து வைக்கப்படும்.

இந்த தளத்தின் மூலம் தனது ரசிகர்களுடன் நேரடியாக கலந்துரையாடவும் முடிவு செய்துள்ளார் கமல். அரசியல், சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனது பார்வை பற்றிய கருத்துக்களையும் இதில் பதிவு செய்கிறார். மய்யம் இணையதளத்துக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

இந்த தகவல்களை சமீபத்தில் நடந்த ஃபிக்கி மாநாட்டு செய்தியாளர் சந்திப்பில் கமல் தெரிவித்தார்.
 

சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக ராதிகா தேர்வு!


சென்னை: சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத் தலைவராக நடிகை ராதிகா சரத்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தமிழ்நாடு சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக் குழு கூட்டத்தில் ஒருமனதாக அவரை தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுத்தனர்.

அவருக்கு சங்க நிர்வாகிகளும், உறுப்பினர்களும் வாழ்த்துத் தெரிவித்தனர். பின்னர் பேசிய ராதிகா, "தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள், நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் ஆகியோருக்கு, ஒரு சில தொலைக்காட்சி நிறுவனங்கள், சம்பளபாக்கி வைத்துள்ளன. எனவே அந்த நிறுவனங்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது" என்றார்.
 

'கரிகாலனி'ல் புரட்சிக்கார பெண்ணாக அஞ்சலி!


விக்ரம் நடிக்கும் கரிகாலன் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் அஞ்சலி.

எங்கேயும் எப்போதும் பட வெற்றிக்குப் பிறகு அஞ்சலிக்கு பெரிய வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன. இதைப் புரிந்து கொண்டுதான் ஜெய்யுடனான தனது நட்பைத் துண்டித்துக் கொண்டார் அஞ்சலி.

இதற்கு இப்போது நல்ல பலன் கிடைத்துள்ளது. விக்ரம் நடிக்கும் வரலாற்றுப் படமான கரிகாலனில் அவர் விக்ரமின் ஹீரோயின்களில் ஒருவராக ஒப்பந்தமாகியுள்ளார்.

இதில் அவர் புரட்சிப் பெண்ணாக நடிக்கிறாராம். சோழமன்னன் கரிகாலனாக விக்ரம் நடிக்கிறார்.

"விக்ரமுடன் நடிக்க வேண்டும் என்ற என நீண்ட நாள் கனவு இந்தப் படம் மூலம் நிறைவேறுகிறது. டிசம்பர் 10-ம் தேதி முதல் ஹைதராபாதில் படப்பிடிப்பு இருக்கிறது," என்றார்.

ஏற்கேனவே, ஜரின் கான், மித்ரா குரியன், ராதிகா ஆப்தே என மூன்று நடிகைகள் இந்தப் படத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜிவி பிரகாஷ் இசையில், கண்ணன் இயக்கும் படம் இது.
 

தரணியைத் துள்ள வைத்த ரஜினியின் பாராட்டு!


சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகர் தரணி. இவர் இயக்கத்தில் படம் ஒன்று செய்ய வேண்டும் என்று கில்லி படத்திலிருந்தே கூறி வருகிறார் ரஜினி. ஆனால் நடக்கவில்லை.

ஒருமுறை கேஎஸ் ரவிக்குமாருடன் தன் வீட்டுக்கு வந்த தரணியைப் பார்த்ததும், "தரணியுடன் சேர்ந்து ஒரு விறுவிறுப்பான ஆக்ஷன் படம் தரவேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டுள்ளேன். ஆனால் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது," என்றார் ரஜினி.

"நீங்க எப்போ சொன்னாலும் தயாரா வர்றேன் தலைவரே," என்று மகிழ்ச்சியுடன் பதிலளித்தார் தரணி.

இப்போது அவர் ஒஸ்தி என்ற படத்தை இயக்கியுள்ளார் (அவர் போதாத காலம்!). இந்தப் படத்தின் பாடல் சிடி மற்றும் ட்ரெயிலர் வீடியோவை சமீபத்தில் கேஎஸ் ரவிக்குமார் மூலம் ரஜினிக்கு அனுப்பி வைத்துள்ளார் தரணி.

உடனே அந்த வீடியோவைப் பார்த்த ரஜினி, கேஎஸ் ரவிக்குமாரிடம், "நல்ல விறுவிறுப்பான ட்ரெயிலர். குட் மேக்கிங். சிறந்த பொழுதுபோக்குப் படமாக எடுத்திருக்கிறார். நேரில் சந்திக்கலாம்," என்று பாராட்டினாராம் ரவிக்குமாரிடம்!

யார் நடித்துள்ளார் என்பதையெல்லாம் பார்க்காமல், தனது அன்புக்குரிய ஒரு கலைஞன் இயக்கிய படம் என்பதால் பாராட்டியுள்ளார் ரஜினி. குருவி மூலம் சரிந்த தனது இமேஜை தூக்கி நிறுத்த தரணி நம்பியுள்ள படம் என்பதால், ஒஸ்திக்கு ரஜினி தந்த பாராட்டு முதல் நல்ல சகுனமாகப் பார்க்கப்படுகிறது!

இதுகுறித்து அவர் கூறுகையில், "தலைவர் பாராட்டுன்னா சும்மாவா.. இப்ப படத்தின் தலைப்புக்கே தனி அர்த்தம் வந்துடுச்சில்ல," என்கிறார் மகிழ்ச்சியுடன்!