சிம்புவுக்கு 2வது ஜோடியாக இணைகிறார் ஹன்சிகா!


சிம்பு நடிக்கும் வேட்டை மன்னன் படத்தில் 2வபது ஜோடியாக இணைகிறார் ஹன்சிகா மோத்வானி.

நிக் ஆர்ட்ஸ் தயாரிக்க, நெல்சன் இயக்க உருவாகும் படம் வேட்டை மன்னன். இப்படத்தில் ஜெய்யும் நடிக்கிறார். பக்கா ஆக்ஷன் படமாக உருவாகும் வேட்டை மன்னனுக்கு இசையமைக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா.

படத்தில் இரண்டு நாயகிகள். இதில் ஒருவரான ஹாட்டான தீக்ஷா ஷேத்தை ஏற்கனவே புக் செய்து விட்டனர். இன்னொரு நாயகிக்காக தீவிர வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். தற்போது அந்த வலையில் சிக்கியிருக்கிறார் ஹன்சிகா மோத்வானி.

மாப்பிள்ளை படத்திலும், பின்னர் எங்கேயும் காதல் படத்திலும் நடித்தவரான ஹன்சிகா தற்போது விஜய்யின் வேலாயுதம் படத்தை எதிர்பார்த்திருக்கிறார். ஆரம்பத்தில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது ஹன்சிகாவுக்கு. ஆனால் அவர் நடித்த மாப்பிள்ளையும், எங்கேயும் காதலும் பெரும் தோல்விப் படங்களாகி விட்டதால் ராசியில்லாத நடிகையாக பார்க்கப்படுகிறார். இந்த நிலையை வேலாயுதம் மாற்றும் என்ற நம்பிக்கையில் இருக்கும் ஹன்சிகா தற்போது சிம்புவின் வட்டாரத்திற்குள் நுழைந்துள்ளார்.

வேலாயுதமும், வேட்ட்டை மன்னனும் ஹன்சிகாவை எப்படி தூக்கி விடப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...!
 

முத்தமிடத் தூண்டிய நிஷா அகர்வால்!


காஜல் அகர்வாலின் தங்கச்சியான நிஷா அகர்வால் இப்போதே படு தெளிவாக இருக்கிறார். ஹீரோக்களுடன் நெருக்கமான நட்பை ஏற்படுத்திக் கொள்வதில் இவர் நல்ல தேர்ச்சியடைந்து வருகிறாராம்.

காஜல் அகர்வாலின் தங்கச்சியான நிஷா அகர்வால்,இஷ்டம் படம் மூலம் தமிழுக்கு வருகிறார். அக்கா வழியில் தமிழில் தனி முத்திரை பதிக்க ஆர்வமாக இருக்கும் இஷா, இஷ்டம் படத்தில் விமலுடன் இணைந்து நடித்து வருகிறார்.

என்னதான் தான் காஜல் அகர்வாலின் தங்கச்சி என்றாலும் அக்காவும் தனக்கு ஒரு போட்டிதான் என்கிறார் இஷா. நடிப்பு என்று வந்து விட்டால் எல்லோருமே போட்டிதான். அந்த வகையில் காஜலும் எனக்குப் போட்டிதான் என்கிறார் இஷா.

சரி மேட்டருக்கு வருவோம், இஷ்டம் படத்தின் ஒரு காட்சியை சென்னை அருகே திரிசூலம் மலையில் வைத்துப் படமாக்கினர். அது ஒரு முத்தக் காட்சி. ஆனால் நிஷா உதட்டோடு உதடு பொருத்தி நடிக்க விமல் ரொம்பவே தயங்கினாராம்.

இதைப் பார்த்த நிஷாதான், ரொம்ப தைரியப்படுத்தி பரவாயில்லை, நடிங்க, முத்தமிடுங்க என்று தெம்பூட்டி விமலை தனது உதட்டில் முத்தமிட வைத்தாராம். இதைப் பார்த்து யூனிட்டே பாராட்டியதாம்.

இதெப்படி இருக்கு...!
 

கார்த்திக் மகனுடன் என் மகள் இணைந்து நடிக்கவில்லை-ராதா


மணிரத்தினம் இயக்கத்தில், கார்த்தி்க்கின் மகன் கெளதமுடன் எனது இளைய மகள் துளசி இணைந்து நடிக்கப் போவதாக வந்த செய்தியில் உண்மை இல்லை என்று ராதா கூறியுள்ளார்.

அந்தக் கால நாயகி ராதா இப்போது பொறுப்பான அம்மாவாக தனது திரையுலக வாழ்க்கையைத் தொடர்கிறார். அவரது முதல் மகள் கார்த்திகா இப்போது ஹாட் நடிகையாகி விட்டார். அவர் நடித்த முதல் படமான கோ பெரும் ஹிட் படமானதால் ராசியானா நடிகையாகி விட்டார். ஆனால் அடுத்தடுத்து படங்களைத்தான் ஒப்புக் கொள்ளாமல் இருக்கிறார்.

ஏன் இப்படி என்று ராதாவிடம் கேட்டால், முதல் படமான கோ மிகவும் அழுத்தமான, பிரமாண்ட ஹிட் படமாகி விட்டதால், அடுத்தடுத்தடுத்த படங்களை ஒப்புக் கொள்வதில் கவனமாக இருக்கிறோம். நல்ல கதையாக வந்தால் கார்த்திகா ஒப்புக் கொள்வார் என்றார்.

சரி உங்களது இளைய மகள் துளசியும், கார்த்திக் மகன் கெளதமும் இணைந்து மணிரத்தினம் படத்தில் அறிமுகமாகப் போகிறார்களாமே என்ற கேள்விக்கு அப்படியெல்லாம் இல்லை. அப்படி இருந்தால் அதை நாங்கள் மறைக்க மாட்டோம்.

மேலும் மணிரத்தினம் படத்தில் நடிக்க யாருக்குக் கசக்கும். எனக்கும் கூட மணிரத்தினம் படத்தில் எனது மகள் நடிக்க ஆசையாகத்தான் உள்ளது. ஆனால் அப்படி எதுவும் இதுவரை வரவில்லை. வந்தால் சொல்கிறேன் என்றார் ராதா.
 

மலையாள நடிகை ஜோதிர்மயிக்கு விவாகரத்து கிடைத்தது


மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்பட நடிகை ஜோதிர்மயிக்கு விவாகரத்து கிடைத்து விட்டது. இனிமேல் அவர் முழு வீச்சில் சினிமாவில் கவனம் செலுத்தப் போகிறாராம்.

கோட்டயத்தைச் சேர்ந்தவர் ஜோதிர்மயி. ஆரம்பத்தில் மாடல் அழகியாக திகழ்ந்த அவர் பின்னர் சினிமாவுக்கு வந்தார். ஏராளமான மலையாளப் படங்களில் நடித்துள்ளார். தமிழிலும் தலைநகரம், நான் அவன் இல்லை, வெடிகுண்டு முருகேசன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே இவருக்குக் கல்யாணமாகி விட்டது. கேரளாவைச் சேர்ந்த நிஷாந்த் குமார் என்பவரை மணந்து வாழ்க்கையும் நடத்தி வந்தார் ஜோதிர்மயி. இருப்பினும் தனக்குத் திருமணம் ஆனதையே அவர் வெளிப்படுத்திக் கொள்ளாமல் கமுக்கமாக நடித்து வந்தார்.

இந்த நிலையில் ஜோதிர்மயி தொடர்ந்து தீவிரமாக சினிமாவில் நடித்து வருவது குறித்து, குறிப்பாக கவர்ச்சியாக நடிப்பது குறித்து அவருக்கும், கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து விவாகரத்து கோரி நிஷாந்த் குமார் திருவனந்தபுரம் கோர்ட்டில் மனு செய்தார்.

அவர்களிடம் குடும்ப நீதிமன்றம் கவுன்சிலிங் நடத்திப் பார்த்தது. ஆனால் ஒத்துவரவில்லை. இதையடுத்து இருவருக்கும் தற்போது விவாகரத்து வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இனிமேல் சினிமாவில் முழுவீச்சில் கவனம் செலுத்தப் போவதாக ஜோதிர்மயி தெரிவித்துள்ளார்.
 

'ஈசன்' அபர்ணா விளம்பரங்களில் 'பிசி'


ஈசன் படத்தில் நாயகியர்களில் ஒருவராக நடித்த அபர்ணா பாஜ்பாய் இப்போது சினிமாவை விட விளம்பரங்களில்தான் பிசியாக நடித்து வருகிறாராம்.

கான்பூரைச் சேர்ந்தவர் அபர்ணா. தமிழில் நடிக்க ஆரம்பித்துள்ள இவர் ஈசன் படத்தில் தலை காட்டியுள்ளார். ஆனால் ஈசனுக்குப் பிறகு இவரைத் தேடி பட வாய்ப்புகள் வரவில்லை. இதனால் மறுபடியும் தனது பழைய தொழிலுக்கே இவர் திரும்பி விட்டாராம்.

அடிப்படையில் அபர்ணா ஒரு மாடல். பல விளம்பரங்களில் நடித்துள்ளார். இப்போது மீ்ண்டும் விளம்பரங்களில் பிசியாக நடிக்க ஆரம்பித்துள்ளாராம்.

ஆமிர்கானுடன் ஒரு விளம்பரப் படத்தில் ஏற்கனவே நடித்துள்ள அபர்ணா கையில் இப்போது நிறைய விளம்பரப் படங்கள் இருக்கிறதாம்.

இதற்கிடையே தற்போது அபர்ணாவைத் தேடி தமிழில் இரண்டு படங்கள் வந்துள்ளனவாம். திருநகர் என்ற ஒரு படத்திலும், கருப்பம்பட்டி என்ற படத்திலும் அபர்ணா திறமை காட்டுகிறார்.
 

சூப்பர் ஸ்டார் ரஜினி முழுமையாக குணமடைந்ததும் ராணா படத்தை எடுத்தால் என்ன?


சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு எப்போதுமே நெருக்கடிதான். அது சினிமாவாக இருந்தாலும் சரி, அரசியலாக இருந்தாலும். அவரை எப்போது ஏதாவது ஒரு பக்கத்தில் நெருக்கிக் கொண்டேதான் இருக்கின்றனர். அந்த வகையில் இப்போது ராணா விவகாரம் உருவாகியுள்ளது.

ராணா வருவது எப்போது என்ற செய்திகள் எங்கு பார்த்தாலும் அலை பாய்ந்தபடி உள்ளது. படமே கைவிடப்பட்டு விட்டதாக திடீரென ஒரு செய்தியை இப்போது உலவ விட்டுள்ளனர். ஆனால் இதை படத்தின் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரும், படத்தை தயாரிக்கப் போகும் ஈராஸும் மறுத்துள்ளனர்.

ரஜினிகாந்த் ஒரு சாதாரண சூப்பர் ஸ்டார் அல்ல என்பதை இன்னும் யாரும் சரிவரப் புரிந்து கொள்ளவில்லை. அவர் ஒரு தனி மனிதர் அல்ல, அவர் ஒரு அடி எடுத்து வைத்தால், தமிழ் திரையுலகம் நூறு அடி எடுத்து வைக்கும். அப்படி ஒரு சக்தி வாய்ந்த திரை நட்சத்திரம் ரஜினி. அப்படிப்பட்ட ரஜினியை, அவரது உடல் நலிவையும் பொருட்படுத்தாமல் ஏன் இப்படி நெருக்குகிறார்கள் என்பதுதான் புரியவில்லை.

மிகப் பெரிய அளவில் உடல் நலம் பாதிக்கப்பட்டு கடுமையான மருத்துவப் போராட்டம் மற்றும் ரசிகர்களின் பிரார்த்தனைப் போராட்டங்களின் காரணமாக மீண்டும் புதுப் பொலிவுடன் ரஜினி திரும்பி வந்துள்ளார். ஆனால் அவர் முழுமையாக குணமடைந்து, பழைய ரஜினியைப் போல மாறி நடிப்பதற்கு நிச்சயம் கால அவகாசம் பிடிக்கும். இதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. அவர் குணமடைந்து விட்டாலும் கூட உடனடியாக அதிரடிப் படம் ஒன்றில், நடிக்க வைப்பது என்பது நிச்சயம் உடல் நலனைப் பாதிக்கவே செய்யும்.

ஆனால் அவர் முழுமையாக குணமடைவதற்கு முன்பே ராணா படத்தில் நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. இதனால் அவரது உண்மையான ரசிகர்கள் நிச்சயம் கவலைப்படவே செய்வார்கள். ராணா, ரஜினியின் கனவுப் படம் என்பதில் சந்தேகமில்லை. அதில் நடிக்க ரஜினி ஆர்வமாகவே இருக்கிறார். இப்போதே படப்பிடிப்பை ஆரம்பியுங்கள் என்று அவர் கூறி வருவதாகவே இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரும் கூறுகிறார். படம் கைவிடப்படவில்லை என்றே படத் தயாரிப்பு நிறுவனமான ஈராஸ் கூறியுள்ளது.

ஆனால் அவர் முழுமையாக குணமடைந்து, பழைய ரஜினியாக, புலிப் பாய்ச்சலுடன் மீண்டும் நடிக்கும் அளவுக்கு அவரது உடல் நலமடைந்துள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. எனவே ரிஸ்க் எடுத்து நடிக்க வைத்து மறுபடியும் அது அவரது உடல்நலனைப் பாதித்து விடக் கூடாது என்ற கவலை உண்மையான ரசிகர்களுக்கு உள்ளது.

ரஜினியின் ராணா உருவாவது உறுதி, அதில் ரஜினியைப் புதுப் பொலிவுடன் ரசிகர்கள் காணப் போவது உறுதி. அதேசமயம், அவரது உடல் நலனைப் புறம் தள்ளி விட்டு அவரைப் படப்பிடிப்புக்குக் கூட்டிக் கொண்டு போய் மேலும் சிக்கலை ஏற்படுத்தி விடக் கூடாது என்று திரையுலகிலும் ரஜினியின் விசுவாசிகள், நண்பர்கள் கருதுகிறார்கள். ரஜினி நலமாக இருந்தால்தான் தமிழ் திரையுலகம் பல மடங்கு சுகமாக இருக்கும் என்பது திரையுலகினர் ஒவ்வொருவரின் கருத்துமாகும்.

மேலும், ரஜினி எப்போது நடித்தாலும் அதை ரசிப்பதற்கும், பிரமாண்டமாக வரவேற்பதற்கும் ரசிகர்கள் ஒருபோதும் சளைத்ததில்லை. எனவே ராணா சற்று 'லேட்'டாக வந்தாலும் 'லேட்டஸ்டாக' வரட்டுமே என்றுதான் உண்மையான ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

ராணாவை விட ரஜினியின் உடல்நிலைதான் மிகவும் முக்கியம் என்றும் உண்மையான ரசிகர்கள் கருதுகிறார்கள்.