1/21/2011 2:26:12 PM
'மனுஷி’ பட இயக்குனர் தமிழ் பிரபு கூறியது: ஆசை வார்த்தை கூறி பெண்களை ஏமாற்றுபவர்கள் அதிகரித்துவிட்டனர். அப்படி கைவிடப்பட்ட ஒரு பெண், பாலியல் தொழிலாளியாகி வாழ்க்கையை இழந்த கதையே ‘மனுஷி’. அந்தியூர் அடுத்துள்ள வெள்ளிதிருப்பூரில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை. தீபக், ஸ்ரீதேவி நடிக்கின்றனர். ஓசூர் பகுதியில் நண்பர் வீட்டுக்கு சென்றபோது ஸ்ரீதேவியை பார்த்தேன். கதைக்கு பொருத்தமாக இருந்தார். நடிக்க கேட்டபோது மறுத்தார். வற்புறுத்தலுக்கு பிறகு சம்மதித்தார். கோபிசெட்டிப்பாளையம் சுற்றியுள்ள பகுதியில் ஷூட்டிங் நடந்தது. பாலியல் தொழிலாளியாக ஸ்ரீதேவி நடிப்பதற்கு அப்பகுதியில் உள்ள மகளிர் அமைப்பை சேர்ந்த பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களிடம் கதையை கூறியபிறகு ஒப்புக்கொண்டனர்.