பீதியடைய ரெடியாகுங்க... குழந்தைகள் தினத்தில் மிரட்ட வரும் பீட்ஸா 2 வில்லா!

பீட்சா 2 வில்லா' படம் வருகிற 14-ஆம் தேதி உலகம் முழுக்க ரிலீசாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஸ்டுடியோ கிரீன்' கே.ஈ.ஞானவேல் ராஜா வழங்க, ‘திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட்' நிறுவனம் சார்பாக சி.வி.குமார் தயாரித்திருக்கும் படம், ‘பீட்சா 2 வில்லா'. இந்தப் படத்தை தீபன் சக்ரவர்த்தி இயக்கியிருக்கிறார்.

பீதியடைய ரெடியாகுங்க... குழந்தைகள் தினத்தில் மிரட்ட வரும் பீட்ஸா 2 வில்லா!

இதில் அஷோக் செல்வன், சஞ்சிதா ஷெட்டி கதாநாயகன், கதாநாயகியாக நடித்திருக்க, சந்தோஷ் நாராயண் இசை அமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் எல்லா வேலைகளும் முடிந்து, படத்தின் ஆடியோவும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பீதியடைய ரெடியாகுங்க... குழந்தைகள் தினத்தில் மிரட்ட வரும் பீட்ஸா 2 வில்லா!  

இந்த நிலையில் படம் மீதும் பெரும் எதிர்பார்ப்பு கிளம்ப, படம் எப்போது ரிலீசாகும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளிக்கும் விதமாக வில்லா படம் நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தினத்தில் ரிலீசாகும் என்று கூறியுள்ளனர்.

‘பீட்சா' தந்த மாறுபட்ட ட்ரீட்டை போன்று ‘பீட்சா 2 வில்லா' படமும் ரசிகர்களுக்கு வித்தியாசமான ஒரு ட்ரீட் ஆக இருக்கும்' என்கிறார்கள் படக்குழுவினர்!

 

தாணு தொடர்ந்த கோர்ட் அவமதிப்பு வழக்கு: கேயாருக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்

தாணு தொடர்ந்த கோர்ட் அவமதிப்பு வழக்கு: கேயாருக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்

சென்னை: உயர் நீதிமன்ற தடையை மீறி முக்கிய முடிவு எடுத்ததாக தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார் மீது எஸ். தாணு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் தேர்தல் நடைபெற்றது. இதில் கேயார் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியை எதிர்த்து எதிரணியைச் சேர்ந்த தயாரிப்பாளர் எஸ். தாணு சென்னை உயர் நீதிமன்றத்தில் 17-9-2013 அன்று மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அவர் தனது மனுவில், சங்க விதிகளுக்கு எதிராக கேயார் அணி செயல்பட்டு வெற்றி பெற்றது என்று தெரிவித்திருந்தார். அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம், கேயார் அணி அன்றாடப் பணிகளை செய்யலாமே தவிர முக்கிய கொள்கை முடிவுகளை எடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டது.

இந்நிலையில் எஸ். தாணு சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்பாளர் கவுன்சில் நிர்வாகிகள் கொள்கை முடிவு எடுக்க கோர்ட் தடை விதித்துள்ளது. ஆனால் அக்டோபர் 13-ம் தேதி பத்திரிகைகளுக்கு கேயார் அளித்த பேட்டியில் தங்களுக்கு கோர்ட் அப்படி ஒரு தடை விதிக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.

அத்துடன் புதிய திரைப்படத்தின் பாடல் - இசை வெளியீட்டு விழாக்களில் அந்தப் படத்தில் நடித்த நடிகர்- நடிகைகள் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்று முடிவு எடுத்து இருப்பதுடன், விழாக்களில் பங்கேற்காத நடிகைகள் காஜல் அகர்வால், சரண்யா மோகன் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு தயாரிப்பாளர் கவுன்சில் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. எனவே இது கோர்ட் அவமதிப்பு குற்றமாகும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி சுப்பையா இது குறித்து கேயார் ஒரு வாரத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

 

திருமணமான இயக்குனரை காதலிக்கும் உயர்ந்த நடிகை

ஹைதராபாத்: உயர்ந்த நடிகை தெலுங்கில் முன்னணி இயக்குனர் ஒருவரை காதலிக்கிறாராம்.

வஞ்சனையே இல்லாமல் வளர்ந்திருக்கும் அந்த நடிகை தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். அவர் தற்போது 2 பிரமாண்ட தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

அவருக்கும் தெலுங்கு நடிகர் ஒருவருக்கும் காதல் என்று டோலிவுட் பரபரத்தது. ஆனால் அண்மையில் அந்த நடிகருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. அம்மணிக்கு வயது ஏறிக் கொண்டே போவதால் திருமணப் பேச்சு அடிக்கடி அடிபடுகிறது.

இந்நிலையில் அவர் தன்னை வைத்து பல கோடி ரூபாய் செலவில் சரித்திர படம் எடுக்கும் கிங் இயக்குனரை காதலிக்கிறாராம். கையில் இருக்கும் 2 படங்களை முடித்துவிட்டு அவரையே திருமணம் செய்ய நடிகை முடிவு செய்துள்ளாராம். ஆனால் கிங் ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தந்தை. இதனால் அவர் உயர்ந்த நடிகையை திருமணம் செய்வதா இல்லை கந்தர்வ திருமணம் செய்வதா என்று குழம்பிக் கொண்டிருக்கிறாராம்.