3 சி கேட்கலாமா, வேண்டாமா?: ரூம் போட்டு யோசிக்கும் நம்பர் நடிகை

சென்னை: நம்பர் நடிகை தனது சம்பளத்தை ரூ.3 கோடியாக உயர்த்த ரூம் போட்டு யோசித்துக் கொண்டிருக்கிறாராம்.

நம்பர் நடிகைக்கு முதல் இன்னிங்ஸை விட இரண்டாவது இன்னிங்ஸ் வெற்றிகரமாக அமைந்துள்ளது. ரப்பர் பாடியை திருமணம் செய்ய நினைத்து அவர் சினிமாவுக்கு முழுக்குப் போட்டார். ஆனால் திருமணத்திற்கு பதில் அவர்களின் காதல் முறிந்தது. இதையடுத்து நடிகை மீண்டும் நடிக்க வந்துவிட்டார்.

அம்மணி சீனியர் நடிகை என்றாலும் இளம் ஹீரோக்கள் அவருடன் நடித்தே ஆக வேண்டும் என்று உறுதியாக உள்ளனர். இதனால் அவர் கேட்கும் சம்பளத்தை கொடுத்து அவரை ஒப்பந்தம் செய்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

நடிகை தற்போது ரூ. 2.5 கோடி சம்பளம் வாங்குகிறார். ஆனால் தனக்கு மவுசு அதிகம் உள்ளதை தெரிந்து வைத்துள்ள அவர் சம்பளத்தை ரூ.3 கோடியாக உயர்த்த முடிவு செய்துள்ளாராம். அவர் எத்தனை கோடி கேட்டாலும் அதை சந்தோஷமாக கொடுத்து நடிக்க வைக்க தான் தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளார்களே.

இந்நிலையில் அவருக்கு கோடிக் கணக்கில் கொட்டிக் கொடுத்து விளம்பரப்படங்களில் நடிக்க வைக்கவும் பலர் வரிசையில் நிற்கிறார்களாம்.

 

பாபநாசம் வெற்றி - கேக் வெட்டிக் கொண்டாடிய படக் குழுவினர்

சென்னை: கடந்த வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் இல்லாமல் வெளியான பாபநாசம் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியைப் பெற்று இருக்கிறது. படம் வெளியாகி இன்றோடு 4 நாட்கள் ஆகின்றன.

இதுவரை வசூலில் (உலகம் முழுதும்) சுமார் 25 கோடியைத் தொட்டு இருப்பதாக, வசூல் நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இதே ரீதியில் சென்றால் விரைவில் 100 கோடியைத் தொட்டு விடும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சந்தோஷத்துடன் தெரிவித்துள்ளனர்.

Papanasam  Team Celebrated  The Success

உத்தம வில்லன் திரைப்படத்தால் வாடிப்போயிருந்த கமல், பாபநாசத்தின் வெற்றியால் மகிழ்ந்து போய் இருக்கிறார். எனவே இந்த வெற்றியை பாபநாசம் குழுவினருடன் கேக் வெட்டிக் கொண்டாடி இருக்கிறார்.

கமல், கவுதமி, இயக்குநர் ஜீது ஜோசப், இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் தயாரிப்பாளர் என குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த விழாவில், பத்திரிக்கையாளர்கள் யாருக்கும் மறந்தும் கூட அழைப்பு விடுக்கப்படவில்லையாம்.

அதுசரி உண்மையான வெற்றிப்படத்திற்கு விளம்பரம் எதற்கு?

 

தள்ளிப் போன “ரஜினிமுருகன் “, “மாரி”.... சோலோவாக வரும் “வாலு”

சென்னை: வரும் ரம்ஜான் தினத்தன்று சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் , தனுஷின் மாரி மற்றும் சிம்புவின் வாலு மூன்று படங்களும் மோதுவது உறுதி என்று அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

காத்திருந்தவர்களின் நினைப்பை தவிடுபொடியாக்கி இருக்கிறது தனுஷின் தாராள மனசு, ஆமாம் ஜூலை 17 ம் தேதி போட்டியில் இருந்து பின்வாங்கி இருக்கிறார் தனுஷ். மாரி படம் ஜூலை 17 ல் வெளியாவதற்குப் பதிலாக 24ம் தேதி வெளியாகிறது.

July 17: Simbu’s Vaalu  Movie “Solo” Released

ரஜினிமுருகன் படத்தைப் பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை, எனவே தற்போதைய சூழ்நிலையில் சோலோவாக வருகிறது சிம்புவின் வாலு திரைப்படம். தனுஷ் சிம்புவிற்கு உதவி செய்யும் நோக்கத்தில் படத்தைத் தள்ளி வைத்தாரா அல்லது நமது போட்டி சிவகார்த்திகேயனுடன் தான் என்று பின்வாங்கினாரா தெரியவில்லை.

July 17: Simbu’s Vaalu  Movie “Solo” Released

ஒருவேளை சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் கூறியது போல இந்தக் குருபெயர்ச்சி சிம்புவிற்கு நன்மையைத் தந்துள்ளதா, காரணம் எதுவாக இருப்பினும் சோலோவாக வெளிவரும் வாலு நன்றாக ஓடினால் சரிதான்.

 

அறிமுகப்படுத்திய கலைப்புலி தாணுவுக்கே 'கடுக்கா கொடுத்த' இயக்குநர்!

அறிமுகப்படுத்தியவர்களுக்கு அல்வா கொடுப்பது திரையுலகில் புதிய விஷயமில்லை. அடிக்கடி பார்க்கிற, படிக்கிற சமாச்சாரம்தான்.

அதுவும் கலைப்புலி தாணு விஷயத்தில் அடிக்கடி இப்படி நடந்துவிடுவதுண்டு. லேட்டஸ்ட் அரிமா நம்பி இயக்குநர் ஆனந்த் ஷங்கர்.

Kalaipuli Thanu irked on director Anand Shankar

கடந்த ஆண்டு இந்தப் படம் வெளியானது. விக்ரம் பிரபு - ப்ரியா ஆனந்த் நடித்த இந்தப் படம் ஓரளவுக்குப் போனது. உடனே அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பையும் ஆனந்த் ஷங்கருக்கு அளித்தார் தாணு. விக்ரம் - ப்ரியா ஆனந்த் ஜோடி.

படப்பிடிப்புக்குக் கிளம்ப ஒரு மாதம் இருக்கையில், படத்திலிருந்து ப்ரியா ஆனந்த் வெளியேறினார். அடுத்த சில நாட்களில், கலைப்புலி தாணுவுக்கே தெரியாமல் இந்தப் படத்தை அய்ங்கரனுக்கு செய்து தர அக்ரிமென்ட் போட்டுவிட்டாராம் ஆனந்த் ஷங்கர்.

ஷாக்கான தாணு கணக்கு வழக்குப் பார்த்ததில், இன்னும் படப்பிடிப்பே ஆரம்பிக்காத நிலையில் இந்தப் படத்துக்காக ரூ 2 கோடியை செலவழித்திருப்பதைக் கண்டாராம்.

"தம்பி நீ தாராளமா யாருக்கு வேணா படம் பண்ணிக்கோ.. அதுக்கு முன்ன இந்தப் படத்துக்காக நான் கொடுத்த ரூ 2 கோடியை எடுத்து வச்சிடுப்பா" என்று சொல்லிவிட்டாராம்.

படம் இன்னும் தொடங்கியபாடில்லை!

 

சன்னியின் "மஸ்தி ஜாதே" படத்தை எங்கேயும் காட்டக் கூடாது.. நிரந்தரத் தடை விதித்த சென்சார்!

மும்பை: தினசரி ஊடகங்களில் தவறாது இடம்பிடித்து விடுகிறார் சன்னி லியோன், அம்மணியின் ராசி என்ன தொட்டாலும் துலங்கி விடும் போல. இரு தினங்களுக்கு முன்பு தான் ஒரு சர்ச்சையில் இடம்பெற்று மீண்டு வந்தார்.

அதற்குள் அடுத்த பிரச்சினையில் மாட்டி இருக்கிறார், இந்த முறை சன்னிக்கு பிரச்சினையை அளித்து இருப்பது ஒரு படம். சமீபத்தில் சன்னியின் நடிப்பில் உருவான படம் மஸ்தி ஜாதே, இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் மிலப் சாவேரி.

Sensor Board Bans Sunny Leone’s Movie Masti Zaade

சென்சார் போர்டுக்கு அனுப்பப்பட்ட இந்தப் படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு, சான்றிதழ் வழங்க மறுத்து விட்டனர், இதற்கு அவர்கள் கூறிய காரணம் படத்தில் ஆபாசக் காட்சிகள் அதிகம் இருக்கின்றன என்பது.( சன்னி லியோன் படத்துல ஆக்சன் காட்சிகளா இருக்கும்).

மும்பை சென்சார் போர்டு அதிகாரிகளின் முடிவை ஏற்றுக் கொள்ளாத படத்தின் தயாரிப்பாளர் சென்சார் போர்டுக்கு மேலே உள்ள அத்தனை கமிட்டிகளுக்கும் சென்று படத்தைத் திரையிட அனுமதி கேட்க, எல்லா கமிட்டிகளும் படத்திற்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டன.

Sensor Board Bans Sunny Leone’s Movie Masti Zaade

எந்தக் காட்சிகளில் ஆபாசம் அதிகம் இருக்கிறதோ அதனைச் சொல்லுங்கள் வெட்டி விடுகிறோம் என்று தயாரிப்பாளர் சொல்ல, நாங்கள் கைவைத்தால் டைட்டில் கார்டுதான் மிஞ்சும் என்று கூறிவிட்டார்களாம் சென்சார் போர்டு அதிகாரிகள்.

இப்போது சென்சார் போர்டுக்கு எதிராக கோர்ட்டில் வழக்குத் தொடரப் போகிறாராம் தயாரிப்பாளர், படத்தில் சன்னி 2 வேடங்களில் நடித்து இருக்கிறாராம்.

 

பக்தி ஓ.கே.. சாம்பார் எதுக்கு?... "சிக்கன்" கேட்டு டிமாண்ட் செய்த ரம்யா கிருஷ்ணன், கஸ்தூரி!

ஹைதராபாத்: 18 வருடத்திற்கு முன்பு வெளியாகி ஹிட்டான அன்னமயா படத்தின் ஷூட்டிங்கின்போது அப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்த ரம்யா கிருஷ்ணனும், கஸ்தூரியும் செய்த சில நெருக்கடிகள் குறித்து தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 1997 ம் ஆண்டு நாகார்ஜுனா நடிப்பில் வெளியான படம் அன்னமயா, 15 ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு துறவியைப் பற்றிய கதை இது. துறவி பாத்திரத்தில் நாகார்ஜுனா நடித்து இருந்தார், நாகார்ஜுனாவுடன் இணைந்து நடிகைகள் ரம்யா கிருஷ்ணன் மற்றும் கஸ்தூரி இருவரும் நடித்து இருந்தனர்.

Annamaya Shooting Time: Ramya Krishnan And Kasthuri Both Heroines Asking For “Chicken”

படம் துறவியைப் பற்றியது என்பதால் கோவில் போன்ற அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்புகள் நடந்தன, இதில் பக்தைகளாக ரம்யா கிருஷ்ணனும் கஸ்தூரியும் நடித்து இருந்தனர்.

பக்தியை வலியுறுத்தும் படம் என்பதால், யாரும் அசைவ உணவு சாப்பிடக் கூடாது என்று இயக்குநர் ராகவேந்திர ராவ் கூறி இருந்தார். முதல் 2 நாட்கள் வரை எந்தப் பிரச்சினையும் இன்றி எல்லாம் ஒழுங்காகத் தான் சென்றது.

படப்பிடிப்பில் இருந்த அனைவருமே காய்கறி மற்றும் சாம்பார் போன்ற உணவுகளைச் சாப்பிட்டு கடுமையாக பக்தியைக் கடைப்பிடித்தனர். மூன்றாவது நாள் படப்பிடிப்புக்கு நடிகைகள் கஸ்தூரியும், ரம்யா கிருஷ்ணனும் வந்தனர்.

படப்பிடிப்பு முடிந்து மதியம் இருவரும் சாப்பிடும்போது சைவ உணவுகள் பரிமாறப்பட அதிர்ச்சி அடைந்த இருவரும், எங்களுக்கு சாம்பார் வேண்டாம் கோழிக்கறி தான் வேண்டும் என்று அடம்பிடித்து உள்ளனர்.

படத்தின் இயக்குநர் ராகவேந்திர ராவ் எடுத்துச் சொல்லியும் இருவரும் கேட்காததால் வேறுவழியின்றி, இருவருக்கு மட்டும் அசைவ உணவுகளை ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்.

படம் வெளிவந்து 18 வருடங்கள் கழித்து இந்தத் தகவலை படப்பிடிப்புக் குழுவினர் வெளியிட, தற்போது ஒட்டுமொத்த ஆந்திராவே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது இதனைக் கேட்டு.

அது சரி, கோழி ஏன் இவ்ளோ லேட்டா கூவுது..?

 

ஜஸ்ட் 11 மணி நேரத்தில் ‘தப்பா யோசிக்காதீங்க’!

நிரஞ்சனா புரெடக்சன்ஸ் ஜி அனில்குமார் தயாரிப்பில் சுல்தான்ஸ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்துக்கு ‘தப்பா யோசிக்காதீங்க' என்று தலைப்பிட்டுள்ளனர்.

Thappa Yosikkatheenga shot in just 11 hours

இத்திரைப்படம் 11 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட முதல் இந்திய தமிழ் திரைப்படம் இம்மாத இறுதியில் திரைக்கு வெளிவர உள்ளது .

Thappa Yosikkatheenga shot in just 11 hours

இன்றைய வாழ்க்கை சூழலில் ஒரு மனிதன் தற்காலிக பணியிடை நீக்கத்தில் இருந்தால், அந்த குடும்பத்தினால் அவனுக்கு ஏற்படும் அவலங்கள் என்ன? அந்த மனித பொருளாதார ரீதியில் தனிமை படுத்தும் போது இந்நிலையில் அவனுக்கு ஏற்படும் இன்னல்களை எப்படி கையாள்கிறான் என்பதைச் சொல்லும் படமாம் இது.

இப்படத்தின் புதுமுக அறிமுக கதாநாயகன் எஸ்பி ராஜா, கதாநாயகியாக ஜோதிஷா, சனிலா, மற்றும் சிசர் மனோகர், மகி, பேபி நட்சத்திரம் மோனிகா உள்பட 44 கதாபாத்திரங்கள் நடிக்கின்றனர்.

Thappa Yosikkatheenga shot in just 11 hours

இத்திரைப்படத்தில் மூன்று பாடல்களை இசையமைப்பாளர் ஸ்டெர்லின் நித்யா
இசையமைத்துள்ளார்.

"தப்பா யோசிக்காதீங்க.....
நீங்க தப்பா யோசிக்காதீங்க
இது தப்பான கதை யல்ல....
இங்கு யாரும் தப்பான ஆள் இல்ல
அப்பாவி யாருமே இங்கில்லங்க ...

-என்று போகிறது ஒரு பாடல்!

 

100 இஸ்லாமிய நண்பர்களுக்கு இப்தார் விருந்து கொடுத்த விஜய்

சென்னை: ஜூலை 17 ம் தேதி ரமலான் பண்டிகை வருவதை முன்னிட்டு இஸ்லாமியர்கள் கடுமையான நோன்பு இருப்பார்கள், ஒவ்வொரு நாளும் நோன்பு முடிந்த பின்பு தான் உணவு உண்ணுவார்கள்.

இஸ்லாமியர்கள் நோன்பு இருக்கும் போது பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் அவர்களுக்கு இப்தார் விருந்து அளித்து, அவர்களுடன் சேர்ந்து விருந்தில் கலந்து கொள்வார்கள்.

Actor Vijay: Ramzan Special Iftar Party

அதே போன்று இந்த வருடமும் இப்தார் விருந்துகள் தொடங்கி விட்டது, சமீபத்தில் நடிகர் விஜய் 100 இஸ்லாமியர்களை வரவழைத்து அவர்களுக்கு இப்தார் விருந்து கொடுத்து அசத்தி இருக்கிறார்.

Actor Vijay: Ramzan Special Iftar Party

அவர்களுக்கு விருந்து கொடுத்தது மட்டுமின்றி விருந்தில் தானும் கலந்து கொண்டு உணவு அருந்தியுள்ளார். விஜய் நடிப்பில் உருவாகி உள்ள புலி படத்தின் பாடல்கள் வரும் ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ஜப்பான் மற்றும் மலேசியாவில் பிரசாந்தின் சாஹசம்!

பிரசாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் ‘சாஹசம்' படத்தின் பாடல் காட்சிகள் மலேசியா மற்றும் ஜப்பானில் படமாக்கப்பட்டது.

இப்படத்தில் அமண்டா என்ற புதுமுக நாயகி அறிமுகமாகியிருக்கிறார். மேலும், பாலிவுட் நடிகை நர்கிஸ் பக்ரி இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

நாசர், தம்பி ராமைய்யா, சோனு சூட், எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், ரோபோ சங்கர் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே உள்ளது. அருண்ராஜ் வர்மா இயக்கத்தில் மிகவேகமாக உருவாகி வரும் இப்படத்தின் இரு பாடல்களை மலேசியா மற்றும் ஜப்பானில் படக்குழுவினர் படமாக்கியுள்ளனர்.

Prashant's Sahasam songs shot at Malaysia and Japan

கடந்த 20 நாட்களாக இவ்விரு நாடுகளிலும் இப்பாடல்களை படமாக்கியுள்ளனர். மலேசியாவில் ‘சாயாங் கு' என்ற பாடலுக்கு பிரசாந்துடன் இந்தியாவிலிருந்து சென்ற 20 நடன கலைஞர்களுடன் மலேசிய நடனக் கலைஞர்கள் இணைந்து நடனமாடியுள்ளனர்.

அதைத் தொடர்ந்து ‘ஆங்கிரி பேர்ட்' என்ற பாடலை ஜப்பானில் 8 நாட்கள் படமாக்கியுள்ளனர். ஜப்பானில் இயற்கை எழில் கொஞ்சும் அழகுமிக்க இடங்களில் பிரசாந்த், அமண்டா இணைந்து நடனமாடும் காட்சிகளை படமாக்கியுள்ளனர். இந்த பாடலை இந்தியாவின் தலைசிறந்த பாடகரான மோஹித் சவுகான் பாடியுள்ளார்.

இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். தியாகராஜன் இப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதியதோடு மட்டுமில்லாமல், ஸ்டார் மூவிஸ் சார்பில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. விரைவில் பாடல் வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

 

பாகுபலியை ஆஹா ஓஹோ என பாராட்டிய தணிக்கை குழுவினர்!

பாகுபலி படம் பார்த்த தணிக்கைக் குழுவினர் பிரமிப்புடன் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இந்திய திரைப்பட வரலாற்றில் அதிக செலவில் எடுக்கப்பட்ட பிரம்மாண்டமான திரைப்படம் எஸ்எஸ் ராஜமவுலியின் பாகுபலி. 3 டியில் உருவான இந்தப் படம் தமிழ், தெலுங்கில் நேரடியாகத் தயாராகியுள்ளது. இந்தி, மலையாளத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Regional censor board pours praises after watched Bahubali

இந்த நான்கு மொழிகளிலும் வரும் ஜூலை 10ம் தேதி அதிக அரங்குகளில் வெளியாகிறது. 4000 அரங்குகளுக்கு மேல் இந்தப் படத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் அதிக அரங்குகளில் வெளியாகும் முதல் படம் இதுவே.

இப்படத்தை சமீபத்தில் தணிக்கை செய்த தணிக்கை குழுவினர், பாகுபலி படத்தின் பிரம்மாண்டத்தையும், மிரள வைக்கும் காட்சியமைப்பையும் பார்த்து வியந்தார்களாம்.

சிறப்பம்சங்கள் மிக்க பாகுபலி படத்தை தணிக்கை செய்ததில் மிகவும் பெருமிதம் கொள்வதாகவும், பாகுபலி பட தணிக்கை சான்றிதழில் தங்களின் பெயர் இடம்பெறுவது மிகவும் பெருமையாக இருப்பதாகவும் கூறியுள்ளனராம்.

கே.ஈ.ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரின் நிறுவனத்திற்கு இப்படம் ஒரு மைல்கல்லாக அமையும் என்றும் வாழ்த்தியுள்ளனர் (தணிக்கைக் குழு இப்படியெல்லாம் கூடவா பாராட்டுகிறது?!).

ஏற்கெனவே இந்தப் படத்துக்கு பெரும் எதிர்ப்பார்ப்பு உள்ளது. இப்போது தணிக்கைக் குழுவினர் இந்த அளவுக்குப் பாராட்டு தெரிவித்திருப்பது அந்த எதிர்பார்ப்பை மேலும் எகிற வைப்பதாக உள்ளது.

 

கல்லூரி மாணவிகளின் காட் மதர் ஆன நீலாம்பரி

சினிமாவில் முதல் வசந்தமாய் வந்து... கதாநாயகியாக நடித்து... கவர்ச்சி நடிகையாக மாறிய அந்த நடிகை, உச்ச நட்சத்திரத்தின் படத்தில் நீலம்பரியாக மாறி வில்லத்தனம் செய்து பிரபலமானார்.

சினிமாவில் நடித்தாலும் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து பிரபலமான தயாரிப்பாளராகவும் உயர்ந்துள்ளார். தன்னுடைய சீரியல்களில் அழகிய இளம்பெண்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறாராம் நீலாம்பரி. கல்லூரி விழாவில் பங்கேற்கப் போகும் போது அழகான மாணவிகளைப் பார்த்து சீரியலில் நடிக்க அழைப்பு விடுக்கிறாராம் நீலாம்பரி. அதோடு மட்டுமல்லாது தனக்கு தெரிந்து இயக்குநர்களிடமும் சிபாரிசு செய்கிறாராம். இதனால் நீலாம்பரியை சுற்றி வந்து வாய்ப்பு கேட்கும் கல்லூரி மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதாம்.

சினிமா வேண்டாம் சின்னத்திரை போதும்...

சினிமாவில் நடிக்க வாய்ப்பு வருகிறது... ஆனாலும் சின்னத்திரையே போதும் என்று கூறிவிட்டேன்... இது நட்சத்திர சேனலில் பிரியமான தொகுப்பாளினியின் சமீபத்திய ஸ்டேட்மென்ட். ரேடியோ ஜாக்கி ஆகவேண்டும் என்று நினைத்த பிரியம் வீடியோ ஜாக்கி ஆகிவிட்டாராம். இதுவே இந்தியா முழுவதும் பிரபலப்படுத்திவிட்டது. இதற்கு காரணம் அண்ணன்தான் என்று நன்றி கூறும் பிரியம், நிகழ்ச்சிக்கு வரும் பிரபலங்கள் சினிமாவில் நடிக்க அழைக்கின்றனர். ஆனால் நடிப்பு எனக்கு வராது என்று ஒரே ஒரு கும்பிடு போட்டு முடித்துக்கொள்கிறேன் என்கிறார் பிரியம்.

இப்படி சொன்னவங்கதான் இப்போ சினிமாவில் குத்தாட்டம் போடுகின்றனர் அம்மணி...

 

ஹேப்பி பர்த்டே ரன்வீர்சிங்– ட்விட்டர் ட்ரெண்டிங்

மும்பை: இந்தி நடிகர் ரன்வீர் சிங் இன்று தனது 30 வது பிறந்த நாளில் அடியெடுத்து வைக்கிறார், இதனை முன்னிட்டு ரன்வீரின் ரசிகர்கள் # "Happy Birthday Ranveer Singh" என்ற ஹெஷ்டேக்கை உருவாக்கி இந்திய அளவில் அதனை ட்ரெண்டடிக்க வைத்து உள்ளனர்.

Ranveer Singh turns 30

2010 ல் இந்தி திரைப்படமான பேண்ட் பாஜா பாரத் என்ற படத்தின் மூலம் நடிகராக தனது 24 வது வயதில் அறிமுகமானவர் ரன்வீர் சிங், நடிக்க வந்து 6 ஆண்டுகளில் இதுவரை 10 படங்கள் மட்டுமே முடித்திருக்கிறார்.

கடைசியாக ரன்வீரின் நடிப்பில் வெளியான தில் தடக்னே தோ, வசூலில் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. ரன்வீரின் பிறந்த நாளை முன்னிட்டு ஏராளமான ரசிகர்கள் அவருக்கு தொடர்ந்து வாழ்த்துக்களை ட்விட்டர் மூலம் கூறி வருகின்றனர்.

 

3 நாளில் 25 கோடியைத் தொட்டது பாபநாசம்

சென்னை: கமல்- கவுதமி நடிப்பில் கடந்த வரம் வெளிவந்த பாபநாசம் திரைப்படம் வசூலில் இதுவரை 25 கோடியைத் தாண்டியதாக தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற திரிஷ்யம் திரைப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு கமலின் நடிப்பில் பாபநாசமாக உருவெடுத்தது.

எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வெளியான பாபநாசம் திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 750க்கும் அதிகமான திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. முதல் நாளில் மட்டும் சுமார் 8 கோடியை வசூலித்து சாதனை புரிந்த பாபநாசம் இந்த மூன்று நாளில் இதுவரை 25 கோடியைத் தாண்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Papanasam: 3 Days Box Office Collection Report

தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 16 கோடியை பாபநாசம் வசூலித்து இருக்கிறது, நான்காவது நாளான இன்று 4 கோடி ரூபாய் வரை படம் வசூலிக்கலாம் என்று கூறுகிறார்கள். எனினும் நாளைக் காலையில் தான் படத்தின் மொத்த வசூல் நிலவரம் எவ்வளவு என்று சரியாகத் தெரியவரும்.

வசூலில் இதே வேகத்தில் சென்றால் 100 கோடி வசூலித்த படம் என்ற பெருமையை, பாபநாசம் தட்டிச்செல்லக்கூடும்.

 

'புலி'யைப் பார்த்து சூடு போடும் 'பூனை'.. வெல்லப் போவது எந்தப் 'புலி'?

சென்னை: தான் தயாரிக்கும் படங்களின் வெளியீட்டுத்தேதியை படபூஜையன்றே அறிவித்து விடுவது நடிகர் விஷாலின் வழக்கம். ஏற்கனவே அவரின் விஷால் பிலிம் பேக்டரி சார்பில் தயாரித்த, நான் சிகப்பு மனிதன் மற்றும் பாண்டியநாடு போன்ற படங்கள் சொன்ன தேதியில் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

அதே போல இப்பொது விஷால் நடித்து தயாரிக்கும் பாயும் புலி திரைப்படத்தை விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடத் திட்டமிட்டு இருக்கிறார் விஷால், படபூஜையன்றே வெளியீட்டுத் தேதியை அறிவித்து இருந்த விஷால் தற்போது சொன்னபடி படத்தை வெளியிடுகிறார்.

Vijay’s Puli Clash With Vishal’s Paayum Puli

ஆனால் நிறைய விஷயங்களில் நடிகர் விஜயை பின்பற்றத் தொடங்கி இருக்கிறார் விஷால், நடக்கும் நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும்போது அப்படித்தான் தோன்றுகிறது. விஷால் விஜயை எந்த விஷயங்களில் பின்பற்றுகிறார் என்று பார்க்கலாம்.

புலி திரைப்படத்தில் பணியாற்றியவர்களுக்கு தங்க நாணயங்களை பரிசளித்தார் விஜய், பாயும் புலி திரைப்படத்தில் பணி புரிந்தவர்களுக்கு தங்க நாணயங்களை வழங்கினார் விஷால்.

புலி என்று விஜயின் படத்திற்கு பெயர் இடப்பட்டது, பாயும் புலி என்று பெயர் வைத்தார் விஷால்(இது தற்செயலாக நடந்தது போல தெரியவில்லை)

விநாயகர் சதுர்த்தி அன்று புலி திரைப்படம் வெளியாகும் என்று அறிவிப்பு வந்தது, பாயும் புலியை அதே தேதியில் வெளியிடுகிறார் விஷால்.

புலி படத்தின் பாடல் வெளியீடு ஆகஸ்ட் மாதம் 2 ம் தேதி அன்று வெளியாகிறது, அறிவிப்பு வந்தவுடனேயே பாயும் புலியின் பாடல்களையும் அதே தேதியில் வெளியிட முடிவு செய்து இருக்கிறார் விஷால்.

வெல்வது எந்தப் புலி - பொறுத்திருந்து பார்க்கலாம்..