ஜெகன்மோகன் ரெட்டி உண்ணாவிரதம்: ஜெயப்ரதா ஆதரவு

Tags:


ஹைதராபாத்: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி 15-ந்தேதி விவசாயிகளுக்கு நஷ்டஈடு கோரி குண்டூரில் 48 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறார். இந்தப் போராட்டத்துக்கு நடிகை ஜெயப்ரதா ஆதரவு தெரிவித்துள்ளார்.

ராஜமுந்திரியில் நடந்த விழாவில் பங்கேற்க வந்த நடிகை ஜெயப்பிரதா நிருபர்களிடம் கூறுகையில், "ஆந்திராவில் வெள்ள நிவாரணம் கேட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு மாநில அரசு வெள்ள நிவாரணம் வழங்க மறுத்து விட்டது. அவர்களுக்கு நஷ்டஈடு வழங்க கோரி ஜெகன்மோகன் ரெட்டி போராட்டம் நடத்துவது பாராட்டத்தக்கது. அவருக்கு எனது முழு ஆதரவு உண்டு.

ஆந்திர மக்களின் நலனுக்காக ஜெகன்மோகன் ரெட்டி பாடுபடுகிறார். நான் விரைவில் ஆந்திர அரசியலுக்கு திரும்ப திட்டமிட்டுள்ளேன். மக்களுக்காக பாடுபடும் ஆந்திர கட்சியில் இணைந்து மக்கள் சேவையில் தொடர்ந்து ஈடுபடுவேன்," என்றார்.
 

வேணாம் வேணாம் காதலிக்க வேணாம்!! - பாவனா அட்வைஸ்

Tags:



பொதுவாக காதல் வாழ்க்கையைக் கொடுக்கும் என்பார்கள். ஆனால் இவரோ அது வாழ்க்கையைக் கெடுக்கும் என்கிறார். அவர்… நடிகை பாவனா!

‘காதலித்தால் வாழ்க்கை நாசமாகிவிடும். அதனால் நான் காதலிக்கமாட்டேன்’, என்கிறார் பாவனா.

‘சித்திரம் பேசுதடி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பாவனா. தீபாவளி, அசல், ஜெயங் கொண்டான் படத்திலும் நடித்தார். தமிழில் வாய்ப்பில்லாத நிலையில் தெலுங்குக்குப் போய்விட்டார்.

தெலுங்கில் கோபிசந்தை அவர் காதலிப்பதாக நிறைய செய்திகள் வந்தன. இதுகுறித்துக் கேட்டபோது, “சினிமாவில் கதாநாயகிகள் சீக்கிரமே காணாமல் போய் விடுகின்றனர். நடிகர்கள்தான் ரொம்ப நாள் நிலைத்து இருக்கிறார்கள். காரணம், நடிகைகள் மார்க்கெட் போனதும் திருமணம் செய்து கொள்கின்றனர். அதன் பிறகு கணவர், குடும்பம், குழந்தை என வாழ்க்கை முடங்கிப் போகிறது.

சினிமாவில் காதல் காட்சிகளில் நடித்துள்ளேன். ஆனால் நிஜத்தில் காதல் பற்றி எதுவும் தெரியாது. காதலிச்சா வாழ்க்கை நாசமாகிவிடும். சிலர் காதலுக்காகவே உயிரை விடுவதையெல்லாம் பார்க்கிறோம். தேவையா இது… இதுபோன்ற முட்டாள்தனமான செயல்களை நான் வெறுக்கிறேன். சினிமாவில் நிறைய சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்கான வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறேன்,” என்றார்.

 

எஸ்வி சேகர் வீட்டின் மீது நள்ளிரவில் தாக்குதல்!

Tags: nbsp



யார் ஆட்சிக்கு வந்தாலும் ‘கல்வீச்சு’ தொடரும் என்பதற்கு உதாரணமாக, நடிகரும் காங்கிரஸ் பிரமுகருமான எஸ்வி சேகர் வீட்டு மீது மர்ம நபர்கள் கல் வீசித் தாக்கினர்.

கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் மைலாப்பூரில் போட்டியிட்டு எம்எல்ஏவானவர் எஸ்வி சேகர். ஆனால் அடுத்த இரு ஆண்டுகளுக்குள் ஜெயலலிதாவின் அதிருப்திக்கு இலக்காகி, திமுக முகாமுக்கு தாவினார். ஆனால் கட்சியில் சேரவில்லை. பின்னர் பாஜக ஆதரவாளராக இருந்தவர், தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

இந்தத்தேர்தலில் மைலாப்பூரில் மீண்டும் போட்டியிட டிக்கெட் கேட்டார். ஆனால் காங்கிரஸ் மறுத்துவிட்டது. அந்தத் தொகுதியில் தன் மனைவியை முதலில் நிறுத்திய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கேவி தங்கபாலு, பின்னர் தானே வேட்பாளராக மாறினார்.

இதனால் எஸ்வி சேகருக்கும் காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலுக்கும் இடையே பகிரங்க மோதல் வெடித்தது. எஸ்வி சேகரை கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்தார் தங்கபாலு. ஆனால் அவரோ ஜிகே வாசன், இளங்கோவன் ஆதரவுடன் கட்சியில் தொடர்கிறார்.

நேற்று தேர்தல் முடிவுகள் வெளியாகின. கேவி தங்கபாலு படுதோல்வியைத் தழுவினார். இந்த நிலையில், நேற்று இரவு மந்தைவெளியில் உள்ள எஸ் வி சேகர் வீடு கல்வீசித் தாக்கப்பட்டுள்ளது.

இதைச் செய்தவர்கள் யார் என்று தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நான் ஜெயலலிதாவை மதிப்பவன்-எஸ்.வி.சேகர்:

இந்நிலையில் இன்று நிருபர்களை சந்தித்தார் சேகர். அவரது பேட்டி..

கேள்வி:  தேர்தல் முடிவு தொடர்பாக கருத்து தெரிவித்த குஷ்பு இது திமுகவுக்கு ஏற்பட்ட தோல்வி அல்ல. மக்களுக்குத்தான் தோல்வி என்று கூறியுள்ளாரே?

பதில்: குஷ்பு அரசியலுக்கு புதுசு. அனுபவம் இல்லாதவர், மக்கள் தீர்ப்பை எப்போதும் கெளரவமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

கேள்வி: சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ள நிலையில், நாம் இப்போது அதிமுகவில் இல்லையே என்ற வருத்தம் உள்ளதா?

பதில்: நான் எப்போதும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவையும் திமுக தலைவர் கருணாநிதியையும் மதிப்பவன். 2 பேருமே எனக்கு நண்பர்கள். டெல்லியில் உள்ள தலைவர்கள் அரசியல் பகையை மறந்து நண்பர்களாக இருப்பது போல, நானும் இருக்க வேண்டும் என்று எண்ணினேன். அதிமுகவில் இருந்து நான் வெளியேறவில்லை வெளியேற்றப்பட்டேன். தற்போது அதற்காக வருத்தப்படவில்லை என்றார்.

 

வடிவேலுவின் சின்னப்புள்ளத்தனம்! - சிங்கமுத்து கிண்டல்

Tags:



எம்ஜிஆர் பாட்டுப்பாடி அதிமுகவுக்கு வாக்கு கேட்டார் வடிவேலு. ஆனா இது புரியாம திமுக 200 சீட் வாங்கும்னு சின்னப்புள்ளத்தனமா சொல்லி மாட்டிக்கிட்டார், என அவருக்கு நிஜத்தில் வில்லனாக மாறிய சிங்கமுத்து கிண்டலடித்துள்ளார்.

காமெடி நடிகர்கள் வடிவேலுவும், சிங்கமுத்துவும் பணம் கொடுக்கல் வாங்கலி மோதிக் கொண்டார்கள். ஏற்கனவே இருவரும் போலீசில் புகார் அளித்தனர். இதில் சிங்கமுத்து கைதானார். வழக்கு நடந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த தேர்தலில் வடிவேலு தி.மு.க.வுக்கும் சிங்கமுத்து அ.தி.மு.க.வுக்கும் பிரசாரம் செய்தனர்.

அ.தி.மு.க. வெற்றி பெற்றது குறித்து சிங்கமுத்து கூறுகையில், “தமிழக மக்கள் ஊழலுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். ஏற்கனவே ஆட்சி செய்த ஜெயலலிதாவின் நிர்வாகக் திறனையும் கருணாநிதியின் நிர்வாகத் திறனையும் ஒப்பிட்டுப்பார்த்து ஜெயலலிதா நிர்வாகமே சிறந்தது என்ற முடிவுக்கு வந்து அ.தி.மு.க. விடம் ஆட்சியை கொடுத்துள்ளனர்.

கடந்த ஆட்சியில் தமிழகம் முழுவதும் ஊழல் மலிந்து கிடந்தது. சினிமாத் துறையில் கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் ஆதிக்கம் செலுத்தினர். யாரையும் பிழைக்க விடவில்லை. மக்கள் வெறுத்து போய் இருந்தனர். நேரம் பார்த்து தேர்தலில் தங்கள் கோபத்தை காட்டி விட்டனர்.

ஜெயலலிதா தமிழகத்தை செழிப்பான மாநிலமாக மாற்றுவார். நடிகர் வடிவேலு தி.மு.க. வுக்கு ஓட்டு கேட்டார். தி.மு.க. கூட்டணிக்கு 200 இடம் கிடைக்கும் என்றும் ஆருடம் கணித்தார். அவரது பிரசாரம் காமெடியாக முடிந்து விட்டது.

எனக்கு எதிராகவும் பொய் வழக்கு போட்டு கைது செய்ய வைத்தார். விஜயகாந்த் அடிப்பார் என பயந்துதான் தி.மு.க. பக்கம் ஓடினார். அக்கட்சிக்கு ஓட்டு கேட்டார். எம்ஜிஆர் பாட்டைப் பாடி, தன்னை எம்.ஜி.ஆர். ரசிகன் என்று கூறிக் கொண்டு திமுகவுக்கு வாக்குக் கேட்டால் யார் போடுவாங்க… அதான் எம்ஜிஆரின் சின்னமான திருப்பி இரட்டை இலைக்குக் குத்திட்டாங்க.

வடிவேலு பிரசாரம் சிறு பிள்ளைத்தனமானது என்று வாக்காளர்கள் ஒதுக்கி விட்டனர். அ.தி.மு.க.வுக்கு வாக்களித்ததன் மூலம் மக்கள் தப்பு செய்து விட்டார்கள் என்று நடிகை குஷ்பு கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டுக்கு வாழ வந்தவர் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும். இவருக்கு அரசியல் பற்றி என்ன தெரியும். மக்கள் தீர்ப்பை விமர்சிக்க எந்த தகுதியும் அவருக்கு இல்லை.

மக்கள் சரியான தீர்ப்பைத்தான் வழங்கி உள்ளனர். ஜெயலலிதா சட்டம்- ஒழுங்கை சீராக்குவார். ரவுடிகள் ஒழிக்கப்படுவார்கள். தமிழகம் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெறும். காலியான அரசு கஜானா நிரம்பும்,” என்றார் சிங்கமுத்து.

 

கரிகாலன் படத்தில் ஹாலிவுட் நாயகியுடன் ஜோடி சேரும் விக்ரம்!

Tags:



விக்ரம் நடிக்கும் புதிய படத்துக்கு கரிகாலன் என்று பெயரிடப்பட்டுள்ளது.

சில்வர்லைன் பிலிம் பேக்ட்ரி தாயாரிப்பில் எல் .ஐ கண்ணன் இயக்கும் இந்த படத்தில் பாலிவுட் நாயகி ஜரைன் நாயகியாக நடிக்கிறார். இவர் ஏற்கெனவே இந்தியில் வீர் படத்தில் நடித்துள்ளார்.

கரிகாலன் என்கிற மன்னனின் வாழ்க்கையை புனைவுக் கதையாக பதிவு செய்யும் வரலாற்றுத் திரைப்படம் கரிகாலன்.

இந்த பிரமாண்டமான திரைப்படம் அனிமேட்ரானிக்ஸ், மினியேச்சர், கிராபிக்ஸ் என முதல் தர தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்படுகிறது. இதற்காக பலநாட்டு நவீன தொழில் நுட்ப வல்லுனர்கள் இந்தப் படத்தில் இணைகிறார்கள்.

ஜீவா நடித்து வெளியான “சிங்கம்புலி” டத்தின் தயாரிப்பாளர்கள் பார்த்தி, எஸ்எஸ் வாசன் இணைந்து தயாரிக்கும் கரிகாலனின் முதல்கட்ட படப்பிடிப்பு தலைக்கோணம் காட்டுப்பகுதியில் நடந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பிற்கான ஆயத்த வேலைகளில் படக்குழு மும்முரமாக உள்ளது.

படத்தின் இயக்குநர் கண்ணனுக்கு இது முதல்படசம். குறைந்தது மூன்று படங்களாவது இயக்கியவர்களுடன்தான் பணியாற்றுவேன் என்று முன்பு கண்டிஷன் போட்டவர் விக்ரம். ஆனால் எந்திரன், ஈரம், கஜினி, அருந்ததி போன்ற படங்களில் விஷுவல் எபெக்ட்ஸ் நிபுணராகப் பணியாற்றிய கண்ணனுக்கு முதல் படத்திலேயே கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.

படத்துக்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ். கார்த்திக் ஒளிப்பதிவு செய்கிறார். பசுபதி சண்முகராஜன் என பெரிய நட்சத்திரப்பட்டாளமே படத்தில் உண்டு.

 

திமுக தோல்வி-தயாரிப்பாளர் சங்க தலைவர் ராம.நாராயணன், பெப்ஸி குகநாதன் ராஜினாமா!!

Tags:



சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து ராம.நாராயணன் ராஜினாமா செய்து விட்டார். அதேபோல ஃபெப்ஸி தலைவர் குகநாதனும் ராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என் சொந்த வேலை காரணமாகவும், புதிய பட வேலையில் ஈடுபட இருப்பதாலும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பதவியில் இருந்து நான் ராஜினாமா செய்து கொள்கிறேன். இதுவரை எனக்கு ஒத்துழைப்பு அளித்த பட அதிபர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள், திரைப்பட தொழிலாளர்கள் ஆகிய அனைத்து தரப்பினருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஃபெப்ஸி தலைவர் குகநாதன் ராஜினாமா

அதேபோல ஃபெப்ஸி தலைவர் பதவியிலிருந்து விசி குகநாதன் ராஜினாமா செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “திரைப்பட தொழிலாளர்களுக்காக கடந்த 2 வருடங்களாக அரசின் உதவியை பெற்று, என்னென்ன நன்மைகள் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்தேன். தொடர்ந்து அதை செய்ய முடியுமா என்ற கேள்விக்குறி ஏற்பட்டு இருக்கிறது.

எனவே தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து விட்டேன்.

என் ராஜினாமா கடிதத்தை செயலாளர் ஜி.சிவா, பொருளாளர் சண்முகம் ஆகியோரிடம் கொடுத்து விட்டேன்,” என்றார்.

ஜெயலலிதாவின் அதிமுக பெற்றுள்ள வெற்றியின் முதல் எதிரொலியாக இது பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமாவின் மிக சக்தி வாய்ந்த அமைப்புகளாகக் கருதப்படும் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பெப்ஸி தலைமைப் பொறுப்புகளிலிருந்து இவ்விருவரும் விலகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்ன ரஜினி!

Tags:



தேர்தலில் பெரும் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராகும் ஜெயலலிதாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்துத் தெரிவித்தார்.

தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகிக் கொண்டிருந்ததை ரஜினியும் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தார். அதிமுக அமோக வெற்றி பெற்றுக் கொண்டிருந்தது.

தோல்வி முகத்தில் இருந்த சிலர், இந்த வெற்றிச் செய்திகளை இருட்டடிப்பு செய்யும் நோக்கில், ரஜினி குறித்த மோசமான வதந்திகளைப் பரப்பிக் கொண்டிருந்தனர்.

இந்த சூழலில், தனது வீட்டிருந்தே ஜெயலலிதாவுக்கு போனில் தன் வாழ்த்துக்களைக் கூறினார் ரஜினி.

இதுகுறித்து லதா ரஜினி கூறுகையில், “தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்றே அவர் எப்போதும் விரும்புவார். நேற்று தேர்தல் முடிவுகளைப் பார்த்ததும் மகிழ்ச்சியடைந்தார். ஜெயலலிதாவுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். குடும்பத்தினரும் வாழ்த்து தெரிவித்தோம்,” என்றார்.

ரஜினியின் மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் இதுபற்றிக் கூறுகையில், “அப்பாவுக்கு இந்த தேர்தல் முடிவில் மிகுந்த மகிழ்ச்சி. எனவே தனது வாழ்த்தை ஜெயலலிதாவுக்கு தெரிவித்தார்”, என்றனர்.

 

ஜெ வெற்றி: திரையுலகப் பிரமுகர்கள் மகிழ்ச்சி!

Tags:



தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக பெரும் வெற்றி பெற்றுள்ளதும், ஜெயலலிதா முதல்வராவதும் குறித்தும் சினிமா பிரபலங்கள் பலர் மகிழ்ச்சியும் வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.

கே.ஆர்.ஜி.

ஜெயலலிதா வெற்றி குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் கே.ஆர்.ஜி. கூறியதாவது:

“இந்த தேர்தலில், அ.தி.மு.க. தனி மெஜாரிட்டியில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்த்தேன். என் எதிர்பார்ப்பு வீண்போகவில்லை. தர்மம் வெற்றி பெற்று இருக்கிறது. அதர்மம் தோல்வி அடைந்து இருக்கிறது,” என்றார்.

கேயார்

தயாரிப்பாளரும் இயக்கநருமான கேயார் கூறுகையில், “தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் வரவேண்டும் என்று அனைத்து தரப்பினரும் ஆசைப்பட்டார்கள். அவர்களின் ஆசை நிறைவேறி விட்டது. சினிமா உலகில், யார் வேண்டுமானாலும் படம் தயாரிக்கலாம். ஆனால், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தக்கூடாது. அப்படி பயன்படுத்தியவர்களுக்கு இந்த தேர்தல் முடிவு ஒரு பாடம்,” என்றார்.

‘கலைப்புலி’ ஜி.சேகரன்

திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் ‘கலைப்புலி’ ஜி.சேகரன் கூறியதாவது:

“இந்த தேர்தல் முடிவை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். அரசியலில் மாற்றம் ஏற்பட்டது போல், எங்கள் திரையுலகிலும் மாற்றம் வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்,” என்றார்.

இவர்கள் தேர்தலுக்கு முன்பே ஜெயலலிதாவை போயஸ் இல்லத்தில் சந்தித்து பல்வேறு பிரச்சினை குறித்து முறையிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

மக்கள் தீர்ப்பை கேலி செய்வதா? - குஷ்புவுக்கு நடிகை விந்தியா கண்டனம்

Tags:



திமுக தோற்றது மக்களுக்குக் கிடைத்த தோல்வி என குஷ்பு கூறியதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் நடிகை விந்தியா.

சட்டமன்ற தேர்தலில் நடிகை குஷ்பு தி.மு.க.வுக்கு பிரசாரம் செய்தார். நடிகை விந்தியா அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

அ.தி.மு.க. வெற்றி பெற்றது குறித்து குஷ்பு கருத்து தெரிவிக்கையில் இது தி.மு.க.வுக்கு ஏற்பட்ட தோல்வி அல்ல. மக்களுக்கு ஏற்பட்ட தோல்வி. அடுத்த 5 ஆண்டுகளில் அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட போகிறார்கள் என்று அவர்களுக்கு தெரியவில்லை. அதனால் வந்த தோல்வி இது, என்று கூறினார்.

இதற்கு விந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “குஷ்பு அரசியலில் பக்குவப்படாதவர் என்பதை நிரூபித்துள்ளார். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. அந்த தீர்ப்பை குறை சொல்வதும் கேலி செய்வதும் குஷ்புவின் அறியாமையை காட்டுகிறது. சினிமாவுக்கு வந்ததில் இருந்து வாழ்க்கையில் ஏற்றங்களையே பார்த்து இருக்கிறார். சிறந்த நடிகை என்ற புகழ் கிடைத்தது. சிறப்பான வாழ்க்கையும் அமைந்தது. கஷ்ட நஷ்டங்களை சந்தித்தது இல்லை.

இந்த தேர்தலில்தான் முதல் முறையாக தோல்வியைப் பார்த்திருக்கிறார் அவர். என்வேதான் அவரால் தாங்க முடியவில்லை. தமிழக மக்கள் ஒட்டு மொத்தமாக தி.மு.க. ஆட்சி போக வேண்டும் என வாக்களித்துள்ளனர். அப்படியெனில் அவர்கள் எவ்வளவு சிரமப்பட்டு இருப்பார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறதா….

எல்லா தொகுதிகளிலும் கணிசமான ஓட்டுகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வென்றுள்ளனர். அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக கண்ணுக்குத் தெரியாத பெரிய அலையே வீசி இருக்கிறது.

இதை தவறான தீர்ப்பு என்பது ஆணவ பேச்சு. நான் தேர்தல் பிரசாரம் செய்தபோது மக்களிடம் எழுச்சியை காண முடிந்தது. ஜெயலலிதா முதல்வராகவும் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராகவும் வருவது உறுதி என்று பேசினேன். அது நடந்துள்ளது. அ.தி.மு.க. வெற்றி பெற்றதை கட்சிக்காரர்கள் மட்டும் கொண்டாடவில்லை. மக்களே கொண்டாடுகிறார்கள்.

நிறைய வீடுகளில் பெண்கள் வெளியே வந்து பட்டாசுகள் வெடிப்பதை பார்க்க முடிந்தது. நான் மூன்று தேர்தல்களை பார்த்துள்ளேன். வெயில், கஷ்ட நஷ்டம் ஆகியவை எனக்கு பழகி விட்டது. குஷ்புவுக்கு அது தெரியாது. சினிமா உலகில் சந்தோஷமாக இருந்தார். முதல் தடவையாக தேர்தல் பிரசாரம் செய்து வெயில் கொடுமைகளை அனுபவித்தார்.

இதனால் தோல்வியை தாங்கிக்கொள்ள முடிய வில்லை. தப்புத் தப்பாக பேசுகிறார். அரசியலுக்கு வந்த பிறகு கட்டுப்பாடு வேண்டும். எது வேண்டுமானாலும் பேசக் கூடாது. குஷ்பு இதை உணர்ந்து செயல்பட வேண்டும்,” என்றார்.

 

தேர்தல் முடிவு எதிரொலி: மதுரையிலேயே தங்கிவிட்ட வடிவேலு!

Tags:



தேர்தல் முடிவு காரணமாக சென்னைக்கு இப்போது வரவேண்டாம் என போலீசார் அட்வைஸ் செய்ததால், நடிகர் வடிவேலு மதுரையிலேயே தங்கிவிட்டார்.

சட்டசபை தேர்தலில் திமுகவின் பிரச்சார பீரங்கியாக, விஜயகாந்த்தை தனிப்பட்ட முறையில் தாக்கி பிரச்சாரம் செய்தார் நடிகர் வடிவேலு. ஆனால் தேர்தலில் திமுக படுதோல்வியடைந்தது.

நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்த போது மரையில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வீட்டுக்கு வடிவேலு வந்தார். அவரை சந்தித்த பின்னர் 11.30 மணி அளவில் பாண்டியன் ஹோட்டலுக்கு சென்றார். 15 நிமிட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் மத்திய அமைச்சர் அழகிரி வீட்டுக்குச் சென்று, சில நிமிடங்கள் அவரிடம் பேசிவிட்டு புறப்பட்டார்.

அப்போது செய்தியாளர்கள் வடிவேலுவிடம், 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று சொன்னீர்களே எனக் கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர், இரண்டு சுற்றுகள் தான் எண்ணப்பட்டுள்ளன. இன்னும் நிறைய சுற்றுகள் உள்ளன. தேர்தல் முடிவுகள் முழுமையாக வரட்டும் என்றார்.

இதுவரை வந்த முடிவுகள் பற்றி சொல்லுங்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு இப்போதைக்கு எதுவும் வேண்டாம் எனக் கூறிவிட்டு சென்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் பேட்டி எடுக்க வேண்டும் என்று பாண்டியன் ஹோட்டலை முற்றுகையிட்டதையடுத்து, அவர் செய்தியார்களை சந்திப்பதை தவிர்த்தார்.

வடிவேலு வீட்டை தேமுதிக தொண்டர்கள் சூழ்ந்து கொண்டுள்ளதாகவும், தற்போதைக்கு சென்னை வர வேண்டாம் என்றும் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் வடிவேலுவுக்கு தகவல் அனுப்பப்பட்டது. மேலும் உடனடியாக சென்னை வருவதை வடிவேலு தவிர்க்க வேண்டும் என்றும் போலீசார் கூறினராம்.

இதைத் தொடர்ந்து அவர் மதுரையிலேயே தங்கியுள்ளதாகத் தெரிகிறது.

 

தந்தை எஸ்ஏசியுடன் நேரில் போய் ஜெ.வுக்கு வாழ்த்து சொன்ன விஜய்!!

Tags:



சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் அபார வெற்றி பெற்ற ஜெயலலிதாவை தந்தை எஸ் ஏ சந்திரசேகரனுடன் போய் பார்த்து வாழ்த்துக் கூறினார் நடிகர் விஜய்.

இந்தத் தேர்தலில் விஜயின் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தது. தேர்தலுக்கு முன்னதாக ஜெயலலிதாவை விஜய் நேரில் சந்திப்பார் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அப்படியொரு சந்திப்பை தவிர்த்த விஜய், பிரச்சாரத்திலும் ஈடுபடவில்லை. விஜய்யின் தந்தையார் சந்திரசேகர் இரு முறை ஜெயலிதாவை நேரில் சந்தித்து, பிரச்சாரத்துக்கு செல்வதாக உறுதியளித்தார்.

அதைத் தொடர்ந்து எஸ் ஏ சந்திரசேகர் நேரடியான தேர்தல் பிரச்சாரத்திலும் கலந்து கொண்டார்.

தேர்தல் முடிவுகள் வெளியாகி, அதிமுகவின் அபார வெற்றி உறுதியான நிலையில், நேற்று மாலை சென்னை போயஸ் கார்டனிலுள்ள அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவின் இல்லத்துக்கு சந்திரசேகருடன், நடிகர் விஜயும் நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்தார்.

 

ராமச்சந்திரா மருத்துவமனையில் ரஜினி அனுமதி!!

Tags:



சென்னை: நடிகர் ரஜினிகாந்த் இன்று போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

வைரஸ் காய்ச்சல், நீர்ச் சத்து குறைவால் மே 4ம் தேதி சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ரஜினிகாந்த். அவருக்கு முழு ஓய்வு தேவைப்பட்டதால் மருத்துவமனையிலேயே தங்கியிருந்தார். பார்வையாளர்களை தவிர்த்து ஓய்வில் இருந்த அவர், கடந்த செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினார்.

பின்னர் பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோவில், திருவான்மியூரில் உள்ள பாம்பன் சாமி ஆலயங்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார்.

இந் நிலையில் அவர் அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை எடுக்கப் போகிறார் என்று கூறப்பட்டது. இதை அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா மறுத்திருந்தார்.

இந்நிலையில், நேற்று காலை அவரது உடல் நிலை குறித்து திடுக்கிட வைக்கும் வதந்திகள் பரவியது. இதனால் ரசிகர்கள், பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் தொலைபேசியில் ரஜினியின் உடல் நிலைப் பற்றி பேசியவாறு இருந்தனர்.

இதனால், லதா ரஜினிகாந்த், நேற்று செய்தியாளர்களிடம், ரஜினி நலமாக இருக்கிறார் என்று தெரிவித்தார்.

இந் நிலையில் நேற்றிரவு ரஜினிக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு காய்ச்சலும் காலில் வீக்கமும் இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் விசாரித்த போது, ரஜினி வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனை சென்றுள்ளார் என்றனர்.

 

திமுகவின் 'கைக்கூலி' ராமநாராயணன், ரூ. 15 கோடி மோசடி செய்து விட்டார்-தயாரிப்பாளர்கள் புகார்

Tags:



சென்னை: திமுகவின் கைக்கூலியாக செயல்பட்டு தயாரிப்பாளர் சங்கத்தை ரவுடிகள் சங்கமாக மாற்றி கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு வந்தார் ராம. நாராயணன். சங்க உறுப்பினர்களிடமிருந்து பல கோடி பணத்தைப் பெற்று மோசடி செய்துள்ளார். ரூ. 15 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ள அவர் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார் தரப்படும் என தயாரிப்பாளர் சங்கத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் ஆட்சி மாறி விட்டது, காட்சிகளும் மாறத் தொடங்கியுள்ளன. திரையுலகிலிருந்து முதல் புயல் கிளம்பியுள்ளது. அதிமுக ஆட்சி வந்ததைத் தொடர்ந்து முதல் நபராக ராம.நாராயணன் தனது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல பெப்சி தலைவர் வி.சி.குகநாதனும் பதவியை விட்டு விலகிவிட்டார்.

திமுகவுக்கு மிகவும் நெருங்கியவர் ராம.நாராயணன். கலைஞர் டிவியில் அவரும் ஒரு முக்கியப் பொறுப்பில் இருந்து வருகிறார். தமிழ்த் திரையுலகத்தை கலைஞர் டிவி பக்கம் திருப்பி விட்டதில் இவருக்கு முக்கியப் பங்கு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்ககத்தில் மூத்த உறுப்பினர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

இதில் முன்னாள் தலைவர் கேஆர்ஜி, கேயார், ராதாரவி, ஆர்.வி. உதயக்குமார், ஏ.எம்.ரத்னம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் தயாரிப்பாளர் சங்கத்தை ரவுடிகள் சங்கமாக மாற்றி விட்டார் ராம.நாராயணன்.

கட்டப் பஞ்சாயத்தில்தான் அவர் பெரும்பாலும் ஈடுபட்டார். திமுகவின் கைக்கூலியாக மாறி சங்கத்தின் பெயரைக் கெடுத்து விட்டார்.

உறுப்பினர்களுக்கு வீட்டு வசதி செய்து தருவதாக கூறி பெருமளவில் பணத்தைப் பெற்ற அவர் அதற்கு ரசீதே தரவில்லை. ரூ. 15 கோடி அளவுக்கு அவர் ஊழல் புரிந்துள்ளார். இதுகுறித்து போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து புகார் கொடுக்கவுள்ளோம் என்றார்.

பின்னர் கே.ஆர்.ஜி கூறுகையில், ரூ. 2 லட்சம் கொடுத்து தலைவராக்கப்பட்டவர் இந்த ராம.நாராயணன். தலைவர் பதவிக்கு வந்த பின்னர் சங்கத்தை திமுகவின் கைக்கூலியாக மாற்றி விட்டார். ஒரு நாளைக்கு இத்தனை லட்சம் பணம் அவர் வீடு தேடிப் போக வேண்டும் என்று உத்தரவிட்டு அதை பிடிவாதமாக செயல்படுத்தி வந்தவர்.

விரைவில் சங்கத்திற்கு தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வது குறித்து நாளை மறு தினம் முடிவு செய்யவுள்ளோம் என்றார்.

 

திரைப்படத்துறை பிரச்சினைகளைக் களைய தனி செயலர்! - ஜெ உறுதி

Tags:



சினிமா தயாரிப்பு மற்றும் வெளியீட்டில் எதிர்கொள்ளும் சிக்கல்களைக் கண்டறிந்து களைய தனி செயலர் ஒருவரை அரசு நியமிக்கவிருப்பதாக முன்னணி தயாரிப்பாளர்களிடம் அதிமுக பொதுச் செயலரும் முதல்வராகப் பொறுப்பேற்கவிருப்பவருமான ஜெயலலிதா உறுதியளித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பாளர்கள் 15 பேர் இன்று ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்தனர்.

அப்போது அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து ஜெயலலிதா கேட்டறிந்தார்.

பின்னர், இனி திரைப்பட தொழில் பிரச்சினைகளின்றி நடக்க புதிய அரசு உதவும் என்றும், திரையுலக வர்த்தகத்தில் உள்ள பிரச்சினைகளைக் கண்டறிந்து களைய புதிதாக ஒரு தனி செயலர் அமைக்கப்படுவார் என்றும் ஜெயலலிதா உறுதியளித்துள்ளார்.

திருட்டு விசிடி பிரச்சினை குறித்தும் அவரிடம் தயாரிப்பாளர்கள் முறையிட்டுள்ளனர். மேலும் திரையரங்குகளை குறிப்பிட்ட சிலர் கட்டுப்படுத்தி வைப்பதையும் தடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர். இவற்றை உடனடியாகக் கவனிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.