மெதுவா பேசினாவே நயன்தாராவுக்கு நல்லா கேட்குமாம்

சென்னை: நானும் ரவுடி தான் படத்தில் மெதுவா பேசினாவே நயன்தாராவுக்கு நல்லா கேட்குமாம்  

கடந்த மாதம் 3ம் தேதி படப்பிடிப்பு துவங்கியது. முதல்கட்ட படப்பிடிப்பு 20 நாட்கள் நடந்து அண்மையில் தான் முடிந்தது. படத்தில் ஆர்.ஜே. பாலாஜி, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இசையமைக்கும் பொறுப்பை அனிருத் ஏற்றுள்ளார்.

இந்நிலையில் படத்தில் நயன்தாராவுக்கு காது கேட்காது என்று செய்திகள் வெளியாகின.  ஆனால் அந்த செய்தியில் உண்மை இல்லை என்று விக்னேஷ் தெரிவித்துள்ளார். இந்த படத்திற்காக விஜய் சேதுபதி தாடி, மீசையை எடுத்துள்ளார்.

நானும் ரவுடி தான் ஜூன் மாதம் ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது.

 

ஷங்கரின் ஐ-க்கு நெருக்கடி தீர்ந்தது?

ஐ படத்துக்கு சிக்கல் தீர்ந்து விட்டதாகவும், திட்டமிட்டபடி பொங்கலுக்கு படம் வெளியாகும் என்றும் தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த ஐ படத்துக்கு எதிராக திடீரென வழக்கு தொடரப்பட்டது. ரூ 19 கோடி கடனை திருப்பிச் செலுத்தும் வரை படத்தை வெளியிடக் கூடாது என்று மனுத் தாக்கல் செய்தனர் கடன் கொடுத்தவர்கள்.

ஷங்கரின் ஐ-க்கு நெருக்கடி தீர்ந்தது?

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 3 வாரங்களுக்கு படத்தை வெளியிடக் கூடாது என்று உத்தரவிட்டது.

இதனால் படம் பொங்கலுக்கு வருமா என்ற நிலை ஏற்பட்டது.

ஆனால் தயாரிப்பாளரோ, படம் நிச்சயம் வெளியாகும் என்றும், சிக்கலை பேசித் தீர்த்துவிடுவோம் என்றும் கூறியிருந்தார்.

அதன்படி, பிரச்சினையை பேசித் தீர்த்துவிட்டதாகவும், தடை உத்தரவு நீங்கும் என்றும், திட்டமிட்டபடி படம் வெளியாகும் என்றும் தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எங்களுக்காக ரஜினி தயாரிப்பாளரிடம் பேச வேண்டும்! - 'விநியோகஸ்தர்கள்'

ரஜினியிடம் நாங்கள் நஷ்டஈடு கேட்கவில்லை. அவரது கவனத்தைக் கவரவே இந்த உண்ணாவிரதம் நடத்துகிறோம் என லிங்கா நஷ்டக் கணக்கு காட்டும் சில விநியோகஸ்தர்கள் கூறியுள்ளனர்.

எங்களுக்காக ரஜினி தயாரிப்பாளரிடம் பேச வேண்டும்! - 'விநியோகஸ்தர்கள்'

இதுகுறித்து நேற்று சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது அவர்கள் கூறுகையில், "லிங்கா இழப்பை ஈடு கட்டச் சொல்லி நாங்கள் ஈராஸ் நிறுவனத்திடம் கேட்டோம். அவர்கள் எங்களுக்குத் தெரியாது என்கிறார்கள். வேந்தர் மூவீசிடம் கேட்டால் அவர்களிடமிருந்தும் பதிலில்லை. வியாபாரத்தில் லாப நஷ்டம் சகஜம் என்கிறார் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ்.

எனவேதான் நாங்கள் ரஜினியை இதில் தலையிடச் சொல்லி கவன ஈர்ப்பு போராட்டம் நடத்துகிறோம். ரஜினியிடம் நஷ்ட ஈடு கேட்கவில்லை. எங்களுக்காக அவர் தயாரிப்பாளரிடம் பேச வேண்டும்," என்றனர்.

 

நான் 'மர்கயாவா'??.. கிளைமேக்ஸைக் கேட்டு ஹீரோ ஜெர்க் ஆயிட்டாராமே..!!

சென்னை : புத்த இயக்குநரின் இயக்கத்தில் கோட் நடிகர் நடித்துள்ள படத்தில் கிளைமாக்ஸில் ஹீரோ 'மர்கயா' ஆவது போல் உள்ளதாம். இதைக் கேட்டு நடிகர் அதிர்ச்சி அடைந்து விட்டாராம். காரணம் இந்த முடிவை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது தான்.

பொதுவாக முழுக் கதையையும் சொல்லாமலேயே படப்பிடிப்பைத் துவக்குவது தான் புத்த இயக்குநரின் வழக்கம். கோட் சூட் நடிகரையும் அப்படியே ஒப்பந்தம் செய்தார். படப்பிடிப்பு தொடங்கிய போதும், நடிகர் நச்சரித்தும் கிளைமாக்ஸ் என்னவென்று சொல்லாமல் இழுத்தடித்து வந்தார் இயக்குநர்.

நிச்சயம் சுவாரஸ்யமான ரசிகர்கள் விரும்பும் கிளைமாக்ஸை இயக்குநர் அமைப்பார் என்ற நம்பிக்கையில் நடிகரும் நடித்து வந்தார். இன்னும் படத்தை எப்படி முடிப்பது என நானே முடிவு செய்யவில்லை என இயக்குநரும் மழுப்பி வந்தார்.

ஒருவழியாக படவேலைகள் முடிந்து படம் தமிழர் திருநாளுக்கு ரிலீசாகிறது. படத்தைப் பார்க்க ரசிகர்களும் ஆவலாக உள்ளனர். ஆனால், படத்தின் கிளைமாக்ஸை ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார்கள் என கோட் சூட் நடிகர் தான் ரொம்பக் குழப்பத்தில் உள்ளாராம்.

 

பொங்கலுக்கு ஐ வராவிட்டாலும் கூட என்னை அறிந்தால் வராது!

பொங்கலுக்கு ஒருவேளை ஐ படம் வராமலே போனாலும் கூட, அஜீத்தின் பொங்கலுக்கு ஐ வராவிட்டாலும் கூட என்னை அறிந்தால் வராது!  

இந்த நிலையில், ஐ படம் அதிக அரங்குகளில் வெளியாவதால் தியேட்டர் பற்றாக்குறை வரும் என்றுதான் அஜீத்தின் என்னை அறிந்தால் படம் தள்ளிப் போனதாகக் கூறப்பட்டது. பின்னர் இன்னும் கொஞ்சம் வேலை பாக்கியிருக்கிறது என்றார்கள்.

ஒருவேளை ஐ படம் வரவில்லை என்பது உறுதியானால் என்னை அறிந்தால் வருமா..?

'நிச்சயம் வராது. காரணம், என்னை அறிந்தால் வராமல் போனதற்குக் காரணம், படத்தை இன்னும் சிறப்பாக மெருகேற்றித் தர வேண்டும் என்பதே. அதற்காகவே அஜீத், வேறு படத்துக்கு கொடுத்த கால்ஷீட்டைக் கூட என்னை அறிந்தால் படத்துக்கு கூடுதலாக ஒதுக்கிக் கொடுத்து பேட்ச் வொர்க் செய்துகொடுத்தார். எனவே இன்னும் வேலை பாக்கியிருப்பதால், என்னை அறிந்தால் படம் இம்மாத இறுதியில்தான் வெளியாகும்,' என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

 

லிங்காவின் சாவி எடுக்கும் சீன் காப்பிதான்: அசால்டாக சொன்ன கே.எஸ்.ரவிக்குமார்

ஏய் இது அதுல்ல... என்று இன்றைக்கு சின்ன வாண்டுகள் கூட சினிமாவின் சீன் காப்பியை சொல்லும் காலம் வந்து விட்டது. காரணம் சேட்டிலைட் சேனல்களின் புண்ணியம்தான்.

வீட்டு முற்றத்திற்குள் ஹாலிவுட் படங்கள் வந்து குவிவதால் தமிழ் படங்களின் சீன்களைப் பார்த்து இணையத்தில் பிரித்து மேய்ந்து விடுகின்றனர். இப்படித்தான் ‘யான்' படத்தில் சீன்கள் எதிலிருந்து உருவப்பட்டது என்று போட்டு தாக்கினார்கள்.

லிங்காவின் சாவி எடுக்கும் சீன் காப்பிதான்: அசால்டாக சொன்ன கே.எஸ்.ரவிக்குமார்

ரஜினியின் ‘லிங்கா' படத்திற்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டது. லிங்கா படத்தின் ஆரம்பத்தில் வரும் ஒரு நகைக் கண்காட்சியில் பேரன் ரஜினி மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு நெக்லஸைத் திருடிச் செல்வார். அப்போது ஒரு குறுகலான ஒரு சின்ன அறைக்குள் ரஜினியும், அனுஷ்காவும் மாட்டிக் கொள்வார்கள். அந்த அறையிலிருந்து கொண்டு, ஒரு சிறிய காந்தத் துண்டின் உதவியுடன் அறைக்கு வெளியே மாட்டி வைக்கப்பட்டுள்ள சாவியை, ரஜினி தன் கைக்குக் கொண்டுவரும் காட்சி ஒரு ஹாலிவுட் படத்திலிருந்து காப்பி அடிக்கப்பட்டுள்ளதாகப் போட்டு உடைத்திருக்கிறார்கள்.

1966ஆம் ஆண்டு வெளியான ‘ஹௌ டு ஸ்டீல் எ மில்லியன்' என்ற படத்தில் மேலே குறிப்பிட்டுள்ள காட்சி அப்படியே இருக்கிறது. இதுதான் இன்றைக்கு இணையத்தில் உலாவருகிறது.

வில்லியம் வைலர் இயக்கிய இந்தப் படத்தில் ரஜினியும் அனுஷ்காவும் சிக்கிக்கொண்டதுபோல் பீட்டர் ஓ டூல், ஆட்ரி ஹீப்பர்ன் ஆகிய நடிகர்கள் சிக்கிக்கொண்டு சாவி எடுப்பார்கள்.

பலூன் காட்சியும்தான்

படத்தின் கிளைமாக்ஸ் பலூன் காட்சிக்காக அவர்கள் எந்த ஹாலிவுட் படத்தையும் பார்க்கவில்லை. ஸ்ரீதர் இயக்கத்தில் 1969-ம் ஆண்டு வெளிவந்த ‘சிவந்த மண்' இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நாயகி காஞ்சனாவை, பலூனில் கடத்திச் செல்வார் வில்லன் எம்.என். நம்பியார் அப்போது, நாயகன் சிவாஜி பலூனுக்குள் தாவி ஏறி நாயகியைக் காப்பாற்றுவார். அந்தக் காட்சிதான் அப்படியே லிங்காவில் உல்டாவாகியிருக்கிறது என்கிறார்கள் இணையவாசிகள்.

வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

இன்றைக்கு சினிமாவில் கதைத் திருட்டுப் புகார்கள் அதிகரித்து வருகிறது. ஒரு படம் ஹிட் அல்லது ஃப்ளாப் என்பதை இன்றைக்கு ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களே நிர்ணயிக்கின்றன. படம் மொக்கை என்று ஸ்டேட்டஸ் போட்டால் கூட பரவாயில்லை அதற்கு பதிலாக அது எந்த ஆங்கில, அல்லது உலக சினிமாவின் காப்பி, காட்சிகளை எந்தெந்தப் படங்களிலிருந்து உருவியிருக்கிறார்கள் என்பதை யூடியூப்பில் ஆதாரத்தோடு பதிவிடுகின்றனர். இதில்தான் குட்டு வெளிப்படுகிறது.

ஆமா... நிசந்தான்...

இப்படி லிங்கா காப்பி பற்றி வீடியோ பரவி வருவது பற்றி ‘தனியார் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்ற கே.எஸ்.ரவிக்குமாரிடம் கேட்டனர். அதுக்கு பதில் சொன்ன ரவிக்குமார், படத்தில் ஒவ்வொரு சீனும் ஒவ்வொரு அசிஸ்டென்ட் டைரக்டர்ஸ் சொன்னாங்க. அதில ஒருத்தர் சொன்ன சீன்தான் அது. எங்களுக்கும் அதை எங்கேயோ பார்த்த மாதிரிதான் இருந்துச்சு. அந்த சீனை ஷூட் பண்றதுக்காக, அந்த இங்கிலீஷ் படத்தைத் தேடினோம். ஆனா கிடைக்கலை. அப்புறம் நாங்களாகவே ஷூட் பண்ணிட்டோம்" என்றார். ஆக சீன் சுட்டதை ஒத்துக்கொண்டார்.

ரசிகர்கள் வளர்ந்து விட்டார்கள்

இதுபோல படங்களில் காப்பியடித்து சீன் வைப்பது சரியா என்று கமலிடம் சில மாதங்களுக்கு முன்பு கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறியது எல்லா ரசிகர்களுக்கும் ஆச்சரியத்தை வரவழைத்திருக்கும். ஒரு படத்தின் காட்சியைப் பார்த்து அதில் ஏற்பட்ட இன்ஸ்பிரேசனில் அதே போல காட்சி அமைப்பது ஒன்றும் புதிய விசயமில்லை. நானும் ரசிகனாக இருந்து கலைஞனாக வந்தவன்தான். ஒரு படம் பார்த்தால் ரசிக்கவேண்டுமே தவிர இது எதிலிருந்து எடுக்கப்பட்டது என்று ஆராய்ந்தால் படத்தை ரசிக்கமுடியாது என்றார் கமல்.

நானும் சொல்லியிருக்கேன்

பட்டினத்தார் பாடல்களை கண்ணதாசன் காப்பியடிக்கிறார் என்று நானும் சொல்லியிருக்கிறேன். ஆனால் இன்றைய ரசிகர்கள் சீன் பை சீன் ரசிப்பதோடு எதிலிருந்து எதை எடுத்தார்கள் என்று கண்டுபிடித்து விடுகிறார்கள். உலக சினிமாவை பார்க்கும் ரசிகர்கள் வளர்ந்து விட்டார்கள் என்றார். கடைசிவரை காப்பியடிப்பது தவறு என்று கமல் சொல்லவேயில்லை என்பதுதான் சோகம்.

 

''டங்காமாரி ஊதாரி, புட்டுக்கினே நீ நாறி''... இது ராஜபக்சேவுக்கான பாட்டு அல்ல!

சென்னை: மன்மதராசா, ஒய் திஸ் கொலைவெறி போல் தனுஷின் அடுத்த டூப்பர் ஹிட் பாடலாக உலா வந்து கொண்டிருக்கிறது அனேகன் பட பாடல் ‘டங்காமாரி ஊதாரி, புட்டுக்கினே நீ நாறி'.

முன்பு சேது படம் வந்த புதிதில் சீயான் என்றால் என்ன பொருள் என பட்டிமன்றம் வைக்காத குறையாக மக்கள் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அதேபோல், தற்போது டங்காமாரியைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், டங்காமாரி பாடலை எழுதிய ரோகேஷ், முன்னணி வார இதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் டங்காமாரி என்றால் என்ன பொருள் என விளக்கம் அளித்துள்ளார்.

''டங்காமாரி ஊதாரி, புட்டுக்கினே நீ நாறி''... இது ராஜபக்சேவுக்கான பாட்டு அல்ல!

அப்பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது :-

வாலுப் பையன்...

நான் செமத்தியான வாலுப் பையன். நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் வியாசர்பாடி. ஒன்பதாம் கிளாஸ் வரைக்கும் படிச்சேன். அப்புறம் ஸ்கூல்ல இருந்து நின்னுட்டேன்.

எக்கச்சக்க வார்த்தைகள் கற்றேன்...

அப்போ என் பிரண்ட்ஸ் கூட சுத்துனதுல கிடைச்ச அனுபவத்துல எக்கச்சக்க வார்த்தைகளைக் கத்துக்கிட்டேன். அதை அடிக்கடி பேசும்போது யூஸ் பண்ணுவேன்.

கானா ஆல்பம்...

வேலைனு ஒண்ணு பார்க்கலைனா மதிக்க மாட்டாங்களே? பிரிண்டிங் பிரஸ்ல வேலைக்குச் சேர்ந்தேன். அப்ப என் பிரண்ட் திலீப்னு ஒருத்தன் என்னைத் தேடி வந்தாம். ‘மச்சி கானா ஆல்பம் பண்ணலாம். நச்சுனு கானா பாட்டு ஒண்ணு எழுதிக் குடு'னு கேட்டான்.

''டங்காமாரி ஊதாரி, புட்டுக்கினே நீ நாறி''... இது ராஜபக்சேவுக்கான பாட்டு அல்ல!

எல்லாமே ஹிட்...

எழுத உட்கார்ந்தா வார்த்தைகள் சரமாரியா வந்து விழுந்தது. ஆல்பம் படா பேமஸ். ஆறேழு ஆல்பம் பண்ணினோம். எல்லாமே ஹிட்.

டங்காமாரி...

நான் போய் நின்னப்ப, கே.வி.ஆனந்த் சார் என்னை நம்மவே இல்லை. ட்யூனுக்கு புதுசா வார்த்தைகள் வேணும்னு கேட்டார். நானும் ‘டங்காமாரி'னு ஆரம்பிச்சு போட்டுத் தாக்கியிருந்தேன்.

ஏமாத்துறவன்...

‘டங்காமாரி'ன்னா ஏமாத்துறவன், சொன்னதைச் செய்ய மாட்டான்னு அர்த்தம். ஹாரிஸ் சாருக்கும், ஆனந்த சாருக்கும் வரிகள் பிடிச்சுப் போச்சு.

ரொம்ப ஹேப்பி....

‘எங்கே பையன் உருப்படாமப் போயிருவானோ?'னு ரொம்பப் பயந்துட்டு இருந்தாங்க. இப்போ நானும் சினிமாக்காரன் ஆனதுல வீட்டுல எல்லாம் ரொம்ப ஹேப்பி' என மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.

ஜிங்கமாரி கேப்மாரி.. ஜெயிச்சுக்கினே நீ மாரி... இது நம்ம பாராட்டு லைன் பாஸ்!

 

யூடியூபில் ஒரே நாளில் 1 லட்சம் பேர் பார்த்த சரிதா நாயர் படம்

கொச்சி: சோலார் பேனல் மோசடி வழக்கில் சிக்கிய சரதா நாயர் நடித்த புதிய படத்தை ஒரு லட்சம் பேருக்கு மேல் பார்த்துள்ளனர்.

சோலார் பேனல் மோசடி விவகாரம் மூலம் கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் சரிதா நாயர். இவர் மீது 50 - க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் உள்ளன. சமீபத்தில் இவரது 7 ஆபாச வீடியோக்கள் வாட்ஸ் ஆப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இணையதளத்தில் அதிகமாக தேடப்படும் நபராகிவிட்டார் சரிதா நாயர்.

யூடியூபில் ஒரே நாளில் 1 லட்சம் பேர் பார்த்த சரிதா நாயர் படம்

இப்போது ஒரு நடிகையாகவும் மாறிவிட்டார் சரிதா நாயர். கிட்டத்தட்ட ஷகிலா ரேஞ்சுக்கு அவரைக் காட்ட ஆரம்பித்துள்ளனர்.

முதல் கட்டமாக அவர் ஒரு குறும்படத்தில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். ‘கல்புகாரன்டே பார்யா' (வளைகுடா நாட்டுக்காரனின் மனைவி) என்ற இந்த படத்தில் அரபு நாட்டில் பணிபுரியம் ஒரு தொழிலாளியின் மனைவியாக இவர் நடித்துள்ளார்.

கேரளாவில் தனிமையில் வசித்து வரும் அரபு நாட்டு தொழிலாளியின் மனைவி சந்திக்கும் பிரச்சினைகள் தான் இந்த படத்தின் கருவாகும். 15 நிமிடங்கள் மட்டும் ஓடும் இந்த படம் நேற்று முன்தினம் யூ-டியூபில் வெளியானது.

முதல் நாளிலேயே இந்தப் படத்தை 1.5 லட்சம் பேருக்கு மேல் பார்த்து ஹிட்டாக்கியுள்ளனர்.

 

ஐ படம் அறிவித்தபடி வெளிவரும்... சிக்கல் தீர்ந்துவிடும் - தயாரிப்பாளர்

ஐ படம் அறிவித்தபடி பொங்கலுக்கு வரும் என்றும், சிக்கல்களை விரைவில் தீர்த்துவிடுவோம் என்றும் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ஐ படம் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ளது. வரும் ஜனவரி 14-ம் தேதி பொங்கலையொட்டி இந்தப் படம் வெளியாகும் என்று அறிவித்து, வெளியாகும் தியேட்டர்கள் விவரமும் வெளியிடப்பட்டது.

ஐ படம் அறிவித்தபடி வெளிவரும்... சிக்கல் தீர்ந்துவிடும் - தயாரிப்பாளர்

இந்த நிலையில் பிக்சர் ஹவுஸ் மீடியா நிறுவனத்திடம் ஆஸ்கர் ரவிச்சந்திரன் கடன் வாங்கியுள்ளதாகவும் தங்களுக்கு கடனாக செலுத்த வேண்டிய பணத்தை இன்னும் தரவில்லை. அதனால் அவர் தயாரிப்பில் வெளிவர இருக்கும் 'ஐ' படத்தை தடை செய்ய வேண்டும்'' என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.

இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, 'ஐ' படம் வெளியிடுவதற்கு 3 வாரங்கள் தடை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.

இது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன், இந்த வழக்கை சுமூகமாக முடித்துக் கொள்ள பேசி வருவதாகவும், நிச்சயம் படத்தை திட்டமிட்டபடி பொங்கலன்று வெளியிடுவோம் என்று தெரிவித்துள்ளார்.

 

லிங்கா விவகாரம்... ரஜினிக்கு நடிகர் சங்கம் ஆதரவு.. சரத்குமார் அறிக்கை

சென்னை: லிங்கா படத்தின் லாப நஷ்டம் குறித்து அதன் தயாரிப்பாளர்களிடம்தான் பேச வேண்டுமே தவிர, உடல் உழைப்பைத் தந்து படத்தை முடித்துக் கொடுத்துவிட்ட ரஜினியிடம் விவாதிக்க முயற்சிப்பது தவறு, என்று நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நடிகர் சங்கத் தலைவர் ஆர் சரத்குமார், செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

லிங்கா விவகாரம்... ரஜினிக்கு நடிகர் சங்கம் ஆதரவு.. சரத்குமார் அறிக்கை

லிங்கா பட வசூல் குறைவாக உள்ளதாகக் கூறி, அதை ஈடு செய்திட நடிகர் ரஜினிகாந்த் தலையிடவேண்டும் என்று கூறி சில விநியோகஸ்தர்கள் கோரிக்கை எழுப்பி வருகிறார்கள். ஒரு திரைப்படம் வெற்றி பெறுவதும் வசூல் குறைவதும் ரசிகர்கள் கையில்தான் இருக்கிறது.

ஆனால் அதற்கு முன்பாக அந்த திரைப்படம் யூகத்தின் அடிப்படையில் விலைபேசி முடிவு செய்த பிறகே திரையிடப்படுகிறது. எந்த ஒரு தொழிலிலும் லாப நஷ்டம் உண்டு. இதை யாரும் வெளியில் சொல்வதில்லை.

அது போன்றுதான், லிங்கா படத்தின் மூலம் அதிக லாபம் வரும் என்று எதிர்ப்பார்த்து செய்த வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது என்று சொன்னால், அந்த நஷ்டத்தை படத்தில் நடித்த நடிகரிடம் கேட்பதைவிட, தயாரிப்பாளரை அணுகி கோரிக்கையைச் சொல்லலாம்.

ஏனென்றால் தங்கள் படத்தில் இவ்வளவு இழப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து தங்கள் விநியோகத்தில் சலுகை செய்து இழப்பை ஈடுகட்ட வேண்டும் என்று வணிக ரீதியாக அணுகலாம் அதில் தவறில்லை. அதேசமயம் அந்த படத்தின் நடிகரிடம் கேட்பதில் நியாயம் இருக்க முடியாது. ஒவ்வொரு நடிகர் படமும் ஏற்ற இறக்கத்துடன் வசூல் செய்கிறது. அதை யாரும் முன்கூட்டி சரியாக கணக்கிட முடியாது.

லாபம் கிடைக்கும்போது சந்தோஷப்பட்டுவிட்டு, வருவாய் இழப்பு ஏற்படுகிறபோது மட்டும் அந்த படத்தின் நடிகர் தலையிட்டு சரி செய்ய வேண்டும் என்றால் எந்த ஒரு நடிகரும் அதை பின்பற்ற முடியாது.

எனவே திரைப்பட விநியோகஸ்தர்கள் ‘லிங்கா' திரைப்பட தயாரிப்பாளரை அணுகி தங்கள் குறைகளை முறையிட வேண்டுமே தவிர, தன் உழைப்பை தந்து படத்தை முடித்து கொடுத்த நடிகரை (ரஜினிகாந்த்) அணுகி நஷ்டத்தை பற்றி விவாதிப்பது தவறான முன் உதாரணமாக அமைந்துவிடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.."

-இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

 

உலகெங்கும் 521 திரையரங்குகளில் லிங்கா ஓடுகிறது! - இது இன்றைய விளம்பரம்!!

சென்னை: ரஜினியின் லிங்கா திரைப்படம் உலகெங்கும் இன்னும் 521 அரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதாக இன்று விளம்பரம் வெளியாகியுள்ளது.

லிங்கா படம் ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி உலகெங்கும் 3000-க்கும் அதிகமான அரங்குகளில் வெளியானது.

தமிழகத்தில் மட்டும் 650 அரங்குகளுக்கும் மேல் வெளியானது. முதல் மூன்று நாட்களில் ரூ 104.6 கோடியைக் குவித்து சாதனையைப் படைத்த லிங்கா, இதுவரை ரூ 180 கோடி வரை வசூலித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் அதிகபட்சமாக ரூ 73 கோடியை வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

உலகெங்கும் 521 திரையரங்குகளில் லிங்கா ஓடுகிறது! - இது இன்றைய விளம்பரம்!!

இப்படி ஒருபக்கம் தகவல்கள் வந்தாலும், படம் வெளியான நான்காவது நாளே லிங்காவால் நஷ்டம் என்று ஒரு கோஷ்டி கிளம்பிவிட்டது. குறிப்பாக திருச்சி - தஞ்சை மாவட்ட விநியோகஸ்தர் என்று கூறிக் கொண்ட சிங்கார வேலன் என்பவர் இதனை ஒரு பிரச்சாரமாகவே முன்னெடுத்தார்.

'லிங்கா நஷ்டம். படம் சரியில்லை. கர்நாடகத் தயாரிப்பாளருக்கு ஏன் படம் செய்தார் ரஜினி? ரஜினிக்கு வயதாகிவிட்டது. ரஜினி ரசிகர்கள் படம் பார்க்க வரவில்லை...' இந்த ரீதியில் அமைந்தது அவரது பிரச்சாரம். இது படத்துக்கு நஷ்ட ஈடு கேட்பது போல இல்லையே என்ற சந்தேகம் வலுக்க ஆரம்பித்தது. நேற்று அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலும் இந்தக் கேள்வியே பிரதானமாகக் கேட்கப்பட்டது.

லிங்கா படத்தின் நஷ்ட ஈட்டைக் கேட்பதாகக் கூறும் நீங்கள், தமிழ்நாடு - கர்நாடகா என இன ரீதியாகப் பிரச்சினை கிளப்புவது ஏன் என்ற கேள்விக்கு அவரிடம் சரியான பதில் இல்லை. மேலும் தங்களின் உண்ணாவிரதத்துக்கு தமிழ் அமைப்புகள் சிலவற்றின் ஆதரவு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சினிமா வியாபாரத்தின் லாப நஷ்டத்தில் தமிழ் அமைப்புகளுக்கு என்ன வேலை? படத்தை வாங்கியபோது தெரியாதா, தயாரிப்பாளர் கர்நாடகத்தைச் சேர்ந்தவர் என்பது? முதல் மூன்று நாட்களில் ரூ 1000, 500 என டிக்கெட் போட்டு சிறப்புக் காட்சிகளில் வசூலித்த தொகையெல்லாம் எங்கே?

-இந்தக் கேள்விகளுக்கெல்லாம் இந்த உண்ணாவிரத குழு நேற்று எந்த தெளிவான பதிலையும் சொல்லவில்லை. மழுப்பலாக சொல்லி வைத்தார்கள்.

இந்த நிலையில்தான், இன்று படத்தின் தயாரிப்பாளர்கள் ஒரு விளம்பரம் வெளியிட்டுள்ளனர். லிங்கா வெளியாகி 30 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இன்னும் 521 அரங்குகளில் இந்தப் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதாக விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

படம் நஷ்டம் என்று கூறப்படும் திருச்சி - தஞ்சையில் இன்றும் 12 அரங்குகளில் லிங்கா ஓடுகிறது. இந்தப் பகுதியில் ஒரு புதிய படம் வெளியானால் கூட இத்தனை அரங்குகளில் ஓட்ட முடியாது.

கோவை - ஈரோடு - திருப்பூர் பகுதிகளில் இன்றும் 35 அரங்குகளில் லிங்கா ஓடிக் கொண்டுள்ளது. மக்களே வராத ஒரு படத்தை இத்தனை அரங்குகளில் ஓட்ட முடியுமா... சிங்கார வேலன்களுக்கே வெளிச்சம்!

 

நான் பாத்ரூம் சிங்கர்தான்... இளையராஜா எதிரில் பாட முடியவில்லை... - அமிதாப்

இளையராஜா என்ற இசை மேதைக்கு முன்னாள் பாட பயமாக இருந்தது. அதனால் வீட்டில் வைத்து ஒத்திகை பார்த்த பிறகே பாடினேன், என்று திரையுலக ஜாம்பவான் அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.

ஷமிதாப் படத்தில் இளையராஜா இசையில் பிட்லி சே.. என்ற பாடலை அமிதாப் பாடியுள்ளார். இந்தப் பாடல் பெரிய ஹிட்டாகியுள்ளது.

நான் பாத்ரூம் சிங்கர்தான்... இளையராஜா எதிரில் பாட முடியவில்லை... - அமிதாப்

இந்தப் பாடல் பாடிய அனுபவம் குறித்து அமிதாப் கூறுகையில், "பொதுவாக பாத்ரூமில் ஷவரைத் திறந்ததும் எனக்குள் இருக்கும் பாடகன் விழித்துக் கொள்வான்.

நான் பாத்ரூம் சிங்கர்தான். முறையாக இசை பயின்றவன் இல்லை. ஆனால் இளையராஜா போன்ற இசை மேதையின் இசையில் பாடியது ஒரு ஆசீர்வாதம்தான். உண்மையில் பெரிய ஆசீர்வாதம். ஆனாலும் அவர் முன் பாட எனக்கு பெரிய தயக்கமும் பயமும் இருந்தது. அதனால் முதலில் பாடலை எனக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டேன். என் பாத்ரூமில்தான் பிராக்டீஸ் செய்தேன். அதன் பிறகுதான் ரெக்கார்டிங் செய்யப்பட்டது," என்றார்.

சரி... பிட்லி சே.. என்பதற்கு என்னதான் அர்த்தம்... 'அது இயற்கையை நோக்கிய அழைப்பு..' என்றார் அமிதாப்.

 

'மூணே மூணு வார்த்தை'.. ஒற்றைப் பாடல் வெளியீடு

மூணே மூணு வார்த்தை... இந்தப் பெயரில் ஒரு புதிய படம் தயாராகிறது. தயாரிப்பவர் எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்பி சரண்.

மதுமிதா இயக்கும் இந்தப் படத்தின் முதல் ஒற்றைப் பாடலை எஸ் பி பாலசுப்பிரமணியம் வெளியிட்டார்.

பின்னர் ‘மூணே மூணு வார்த்தை' திரைபடத்திலிருந்து ஒரு பாடலை பாட ஆரம்பித்தவர், இசை வெளியீட்டு அரங்கை தன் காந்தகுரலால் கவர்ந்திழுத்தார்.

'மூணே மூணு வார்த்தை'.. ஒற்றைப் பாடல் வெளியீடு

பின்னர் தனது மகனை வாழ்த்திய எஸ்பிபி, இப்படத்தின் மூலம் அறிமுகமாகும் அத்தனை கலைஞர்களின் பெற்றோர்களையும் மேடையேற்றி பெருமைபடுத்தினார்.

'அறிமுக இசையமைப்பாளர் கார்த்திகேய மூர்த்தி அச்சு-அசல் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரகுமான் போல் உள்ளதை கண்டு மலைத்து போனேன். இந்த இளைஞனும் அவரைப் போல் பல சாதனைகள் புரிய வாழ்த்துகிறேன்' என்றார் எஸ்பிபி.

"ரசிகர்கள் முன்னிலையில் பாடலை வெளியிட்டது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. அவர்களின் வரவேற்பும்,ஆரவாரமும் மிகுந்த உற்சாகத்தையும் தருகிறது," என்றார் இயக்குநர் மதுமிதா.