தென் ஆப்ரிக்காவில் தனுஷ் நடிக்கும் மரியான் - படப்பிடிப்பு தொடங்கியது!

Danush S Mariyaan Shooting Africa   
3 படத்துக்குப் பிறகு தனுஷ் நடிக்கும் படம் குறித்து பல்வேறு செய்திகள் வந்தன. அவர் இந்திப் படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது. வெற்றிமாறன் படம்தான் அடுத்து என செய்திகள் வந்தன.

இந்த நிலையில், சத்தமின்றி அவரது அடுத்த படம் தொடங்கிவிட்டது. இந்தப் படத்துக்கு மரியான் என்று தலைப்பிட்டுள்ளனர்.

பரத்பாலா இயக்கும் இந்தப் படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். தனுஷ் படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசை தருவது இது முதல்முறை. ஏற்கெனவே இரண்டு பாடல்களை முடித்துக் கொடுத்துவிட்டாராம் ரஹ்மான்.

தென் ஆப்ரிக்காவில் இதுவரை எந்த தமிழ்ப் படமும் படமாக்கப்படாத இடங்களில் மரியான் படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது.

கோடை விடுமுறை என்பதால்படப்பிடிப்புக்கு தன்னுடன் மனைவி ஐஸ்வர்யா, மகன்கள் யாத்ரா, லிங்காவையும் அழைத்துச் சென்றுள்ளார் தனுஷ்.

இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல் முடிந்த பிறகு, இந்தியில் 3 படத்தை வெளியிடவிருக்கிறார் தனுஷ்!
 

என் மகள் நடிகையாகவதை விரும்பவில்லை: ஸ்ரீதேவி

I Don T Want Jahnavi Become An Actor Sridevi
தனது மகள் ஜானவி நடிகையாவதை தான் விரும்பவில்லை என்று ஸ்ரீதேவி தெரிவி்த்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு,

நான் 4 வயதில் இருந்து படங்களில் நடிக்கிறேன். என் வாழ்க்கை ஷூட்டிங், ஸ்டுடியோ என்றே ஆகிவிட்டது. திருமணம், குழந்தைகள் என்று செட்டிலாகும் முன்பு படங்களில் முழுக் கவனம் செலுத்தினேன். தற்போது மனைவியாக, தாயாக எனது கடமையை விரும்பி செய்கிறேன்.

எனது மூத்த மகள் ஜானவி படங்களில் நடிக்கப்போவதாகவும், ஒரு குறிப்பிட்ட ஹீரோவின் மகனுடன் நடிக்கப் போவதாகவும் வந்த செய்தியைப் பார்த்து சிரிப்பு தான் வந்தது. நான் நடிகை என்பதால் என் மகளையும் நடிகையாக்க வேண்டும் என்றும், உடம்பை குறைக்க வேண்டும் என்றும் நான் கட்டாயப்படுத்துவதாக மக்கள் நினைப்பது வருத்தமாக உள்ளது. என் மகள் ஜானவிக்கு 15 வயது தான் ஆகிறது.

அவள் நன்றாகப் படிக்கிறாள். நான் தான் சிறு வயதிலேயே நடிக்க வந்தததால் படிக்க முடியாமல் போனது. எனது மகள்களாவது நன்றாக படிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஜானவி நடிகையாவதை நான் விரும்பவில்லை என்றார்.

ஆனால் ஸ்ரீதேவி தனது மகளை 16 வயதில் திரையுலகில் அறிமுகப்படுத்த முயல்வதாகவும், நாகர்ஜுனாவின் இளைய மகன் அகிலுடன் முதல் படம் என்றும் செய்திகள் வெளிவந்தன. அதிலும் ஜானவியை தெலுங்கில் அறிமுகப்படுத்துவதில் ஸ்ரீதேவி முனைப்பாக இருப்பதாக கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நீண்ட காலமாக திரையுலகில் இருந்து விலகி இருந்த ஸ்ரீதேவி இங்கிலிஷ் விங்கிலிஷ் என்ற படம் மூலம் மீண்டும் பெரிய திரையில் தோன்றவிருக்கிறார்.
 

இயக்குநரை அதிரவைத்த 'மிரட்டல்' ஹீரோயின் ஷர்மிளா!

Madhesh S Come Back Movie Mirattal
இந்த மடம் இல்லன்னா சந்த மடம் என்பது தமிழ் சினிமாவில் வழக்கமான வழக்குச் சொல். ஒரு புது நடிகை அதை மாற்றியிருக்கிறார்.

இயக்குநர் மாதேஷ் சொன்னார் என்பதற்காக இரு ஆண்டுகள் உடற்பயிற்சி செய்து, இயக்குநர் சொன்ன மாதிரி படுபிட்டாக வந்து நிற்க, ஆச்சர்யம் அதிர்ச்சியுடன் வாய்ப்பை வழங்கினாராம் மாதேஷ்.

அந்த நடிகை பெயர் ஷர்மிளா. மும்பைப் பொண்ணு. பல இடங்களில் வாய்ப்புக் கேட்பது போலத்தான் மாதேஷிடமும் கேட்டாராம்.

"நான் அந்தப் பொண்ணு போட்டோவப் பாத்ததும் முடிவு பண்ணிட்டேன். உடனே ஷர்மிளாவைக் கூப்பிட்டு, இரண்டு உடற்பயிற்சிகளைச் சொல்லி, செஞ்சுட்டு வான்னு அனுப்பினேன். திரும்ப வரமாட்டங்கன்னுதான் நினைச்சேன். ஆனால், இரண்டு வருஷம் கழிச்சி வந்து நின்னாங்க. எனக்கு ஆச்சர்யமா இருந்துச்சி. உடனே வாய்ப்புக் கொடுத்தேன்.

இது ஆக்ஷன் மற்றும் காமெடி கலந்த படம். வினய்தான் இதுக்கு சரியா இருப்பாருன்னு முதலிலேயே முடிவு செய்து அவரை நடிக்க வச்சேன்," என்றார் மாதேஷ்.

மிரட்டல் படத்தில் இதுவரை பார்த்திராத பல லொகேஷன்கள் உள்ளனவாம். முக்கியமானது லண்டன் பார்லிமெண்ட் கட்டடம். நடிகர் திலகம் சிவாஜி வீட்டிலும் ஷூட் செய்துள்ளாராம்.
 

வசந்த் - சேரன் - விமல் இணையும் மூன்று பேர் மூன்று காதல்!

Vasanth S Moondru Per Moondru Kaadhal
கொஞ்ச நாள் இடைவெளிக்குப் பிறகு இயக்குநர் வசந்த் தொடங்கியுள்ள புதிய படம் மூன்றுபேர் மூன்று காதல்!

இதில் அர்ஜுன், சேரன், விமல் ஆகிய மூவரும் நாயகர்களாக நடிக்கின்றனர். ஹீரோயினாக பானு நடிக்கிறார்.

இவருடன் ஸ்ருதி, சுர்வீனின் ஆகிய இரண்டு மும்பை மாடல்கள் நாயகிகளாக அறிமுகமாகின்றனர்.

சில மாதங்களுக்கு முன்பே சத்தமின்றி இந்தப் படத்தை ஆரம்பித்துவிட்ட வசந்த், இப்போது முக்கால்வாசி படத்தை முடித்துவிட்டாராம்.

மூன்று ஜோடிகளின் காதல் கதைதான் படம் என்றாலும் மூன்றையும் மிக சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறாராம் வசந்த்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் விசேஷம், தேசிய விருது பெற்ற நான்கு கலைஞர்கள் ஒன்றிணைவதுதான். வசந்த், சேரன், தம்பி ராமையா மற்றும் அப்புக்குட்டி ஆகியோர்தான் அந்த நான்கு விருது பெற்ற கலைஞர்கள்.
 

மலையாளத்திலும் நீங்களும் ஆகாலாம் கோடீஸ்வரன்!- சுரேஷ் கோபி நடத்துகிறார்

Suresh Gopi On Hosting Malayalam Version Kbc
தமிழ் தொலைக்காட்சிகளில் என்ன மாதிரி நிகழ்ச்சிகள் டாப்பில் உள்ளனவோ, அதை அப்படியே மலையாளத்துக்கு ஏற்ப மாற்றிக் கொள்வது ரொம்ப நாள் வழக்கம்.

இப்போது எந்த சேனலைத் திறந்தாலும் யாராவது ஒரு பிரபலம் கட்டுக் கட்டாக நோட்டுக்களைத் தூக்கிப் போட்டுக் கொண்டே இருக்கிறார், கேம் ஷோ என்ற பெயரில்.

அந்த ட்ரெண்ட் இப்போது மலையாளத்திலும் தொடர ஆரம்பித்துள்ளது. தமிழில் சூர்யா கோடீஸ்வரன் நிகழ்ச்சி நடத்துவது போல, மலையாளத்தில் நடத்துகிறவர் பிரபல நடிகர் சுரேஷ் கோபி.

ஏசியா நெட்டில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கு நீங்களும் ஆகாம் கோடீஸ்வரன் என்று பெயர் சூட்டியுள்ளனர். இதுவரை 16 எபிசோடுகள் ஒளிபரப்பாகிவிட்டன.

சென்னையில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில்தான் இந்த நிகழ்ச்சியைப் படமாக்குகிறார்கள்.

இதுகுறித்து சுரேஷ் கோபி கூறுகையில், "இந்த நிகழ்ச்சிக்கு ஏக ரெஸ்பான்ஸ். ஆகஸ்ட் 23 வரை இந்த நிகழ்ச்சிக்காக தொடர்ந்து ஷூட்டிங்கில் இருப்பேன். இதன் அடுத்த ரவுண்ட் வரும் ஜனவரியில் ஒளிபரப்பாக இருந்தது. கிடைக்கிற வரவேற்பைப் பார்த்து, இன்னும் முன்பாகவே தொடரச் சொல்லியிருக்கிறேன்," என்றார்.
 

நட்டி குமார் ஒரு ஏமாற்றுப் பேர்வழி - கஸ்தூரிராஜா பாய்ச்சல்

Natti Kumar Is Cheat Kasturi Raja
3 படத்தை விநியோகிப்பதாகக் கூறி வாங்கிய நட்டி குமார் ஒரு மோசடிப் பேர்வழி என்று தயாரிப்பாளர் கஸ்தூரி ராஜா கூறினார்.

தனுஷ் நடிக்க, அவர் மனைவி ஐஸ்வர்யா இயக்கிய படம் 3. இந்தப் படம் கொலைவெறி என்ற பாட்டுக்கு கிடைத்த பிரபலம் காரணமாக ஏக எதிர்ப்பார்ப்புக்கு உள்ளானது. பெரும் விலைக்கு வாங்கி வெளியிட்டனர்.

ஆனால் படம் எதிர்பாராத விதமாக தோல்வியைத் தழுவியது. நஷ்டப்பட்டவர்கள் புலம்ப ஆரம்பித்தனர். ஆனால் அப்போது தனுஷோ, படத்தின் தயாரிப்பாளரான அவர் தந்தையோ எதையும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட, ரஜினி இந்த நஷ்டத்தைக் கொடுப்பார் என செய்தி பரப்ப ஆரம்பித்தனர்.

தெலுங்கில் இந்தப் படத்தை வாங்கி வெளியிட்ட நட்டிகுமார் என்பவர் தனக்கு பெரும் நஷ்டம் வந்துவிட்டதாகவும், இதை ரஜினி கொடுப்பார் என்றும் பேட்டியளிக்க ஆரம்பித்தார்.

இதைத் தொடர்ந்து ரஜினியே மறுப்பு தெரிவிக்க வேண்டி வந்தது. அப்போதும்கூட கஸ்தூரிராஜா அமைதியாக இருந்துவிட்டார். அடுத்து கஸ்தூரிராஜா, தனுஷ், ஐஸ்வர்யா, விமலகீதா என கஸ்தூரிராஜா குடும்பத்தினர் அனைவர் மீதும் ஹைதராபாத் போலீஸில் புகார் கொடுத்துள்ளார் நட்டிகுமார்.

இந்த நிலையில், இப்போது 3 பட நஷ்டம் குறித்துப் பேசியுள்ளார் கஸ்தூரி ராஜா.

நட்டிகுமார் ஒரு ஏமாற்றுப் பேர்வழி என்று கஸ்தூரி ராஜா கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், "3 படத்தின் தெலுங்கு உரிமைக்கு நட்டி குமார் பேசிய விலை ரூ 4.35 கோடி. இதில் ரூ 2.50 கோடியை ஒப்பந்தம் கையெழுத்தானபோது தந்தார். மீதித் தொகைக்கு இரண்டு செக்குகள் கொடுத்தார். ஆனால் இந்த செக்குகள் பணமின்றி ரிடர்ன் ஆகிவிட்டன. எத்தனையோ முறை கேட்டும் அவரிடமிருந்து பதிலே இல்லை. எங்களை ஏமாற்றுவதே அவர் நோக்கமாக இருந்திருக்கிறது.

மேலும் ஒப்பந்தத்தை மீறி, எங்களைக் கேட்காமலே 3 தெலுங்கு சேட்டிலைட் ரைட்ஸை விற்றுவிட்டார் நட்டி குமார். அவர் ஒரு மோசடிக்காரர் என்பது தெரிந்துவிட்டது.

தனது தவறை மறைக்க ரஜினி, ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் ஆகியோரை இழுத்துவிட்டார். இவர்கள் யாருக்கும் இதில் தொடர்பில்லை, என் குடும்பத்தை நீதிமன்றத்துக்கு இழுக்கும் உரிமை நட்டி குமாருக்கு இல்லை.

ஆர்கே புரொடக்ஷன்தான் அனைத்துக்கும் பொறுப்பு. எனவே தேவையின்றி எங்கள் குடும்பத்தினரை அவமதித்த நட்டிகுமாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.
 

நடிகைகளை பிரிக்க சதி செய்கிறார்கள்: திவ்யா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நட்பாக இருக்கும் ஹீரோயின்களை சதி செய்து பிரித்து விடுகின்றனர் என்றார் திவ்யா. கடந்த 2 வருடத்துக்கு முன்புவரை கன்னட படவுலகில் இணைபிரியாத தோழிகளாக இருந்தனர் திவ்யா, ஆண்டிரிட்டா ராய். ஒரு கட்டத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பரம எதிரிகளாகி பிரிந்தனர். பேசுவதையும் நிறுத்தி கொண்டனர். இந்நிலையில் சமீபத்தில் விருது விழா ஒன்றில் இருவரும் பங்கேற்றனர். விருது பெறுவதற்காக திவ்யா வந்திருந்தார். நிகழ்ச்சியில் ஆண்டிரிட்டா ராயின் நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. திவ்யா நடித்த படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றுக்கு ஆண்டிரிட்டா நடனம் ஆடினார். அப்போது உடன் ஆடிய நடன பெண்கள் திவ்யாவை மேடைக்கு அழைத்து வந்து தங்களுடன் ஆடும்படி கேட்டனர். அவரும் அதை ஏற்று நடனம் ஆடினார். பிறகு ஆண்டிரிட்டாவை கட்டித்தழுவி வாழ்த்து கூறினார்.

ஆண்டிரிட்டா பேசும்போது,''எதிர்பாராத வகையில் நாங்கள் இருவரும் மனக்கசப்பினால் பேசாமல் இருந்தோம். தற்போது இணைந்தது மகிழ்ச்சி. இதற்கு மேலும் எங்களை பிரிப்பதற்கு யாரும் கதைகட்டியோ, வதந்தியோ பரப்ப முடியாது'' என்றார். ஆண்டிரிட்டா பேச்சை கேட்டு கண்கலங்கிய திவ்யா,''நட்பாக இருப்பவர்களை திரையுலகில் இருக்கும் சிலர் சதி செய்து பிரிக்கப் பார்க்கிறார்கள். அது சில நேரம் நடந்துவிடுகிறது. ஆண்டிரிட்டாவும் நானும் அவ்வளவு நெருங்கிய தோழிகளாக இருந்தோம். எங்களை பிரித்துவிட்டனர். அவரிடம் பேசி பல நாள் ஆகிவிட்டது. மீண்டும் தோழிகள் ஆகியிருப்பது சந்தோஷம்'' என்றார்.


 

ஷூட்டிங்குக்கு அம்மாவுடன் வருகிறேனா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'கோ' படத்தில் நடித்தவர் கார்த்திகா. நடிகை ராதா மகள். அவர் கூறியதாவது: அம்மா ராதா 150 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். கடின உழைப்பால் வெற்றிகரமான ஹீரோயினாக வலம் வந்தார். முன்னணி இடத்தில் இருக்கும் ஒரு நடிகை திடீரென்று நடிப்பிலிருந்து விலகுவது எளிதான விஷயம் இல்லை. ஆனால் எனது அம்மா குடும்பத்துக்காக நடிப்புக்கு முழுக்கு போட்டார். இதற்காக அவர் எப்போதும் வருத்தப்பட்டதில்லை. திரையுலகில் எனது அம்மா நல்ல மதிப்பை பெற்று வைத்திருக்கிறார். ஆனால் என்னுடைய வேலையில் ஒருநாளும் தலையிட்டது கிடையாது. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு என்னுடன் வருகிறாரா, எனது பட விவகாரத்தில் தலையிடுகிறாரா என கேட்கிறார்கள். அவர் ஒருபோதும் என்னுடன் ஷூட்டிங்குக்கு வந்ததில்லை. எனது பட விஷயத்திலும் தலையிடுவதில்லை. சினிமாவில் நான் நடிக்க வந்தபிறகு ராதாவின் மகள் என்பதைவிட இயக்குனர்களின் மகளாகிவிட்டேன் என்றுதான் கூற வேண்டும். இதுபற்றி ராதா கூறும்போது, 'Ôஎன் மகளுக்கு வழிகாட்டவோ, குருவாக இருக்கவோ எனக்கு அவசியம் இல்லை. இப்போது காலம் மாறிவிட்டது. இளம் பெண்கள் தங்கள் வாழ்க்கைபற்றி அவர்களே முடிவெடுக்கிறார்கள். என்னுடைய சினிமா பின்னணி அவருக்கு உதவியாக இருக்கிறது. ஆனால் திரையுலகில் நிலைத்திருப்பது அவளது பொறுப்பு. அவள் திரையுலகில் முன்னணி இடத்தை பிடிப்பார்" என்றார்.


 

என் மகளை நடிகை ஆக்கமாட்டேன் : ஸ்ரீதேவி முடிவு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
என் மகளை நடிகை ஆக்கும் எண்ணம் இல்லை என்றார் ஸ்ரீதேவி. தமிழில் 1980களில் கொடி கட்டி பறந்த ஸ்ரீதேவி பின்னர் பாலிவுட்டில் நம்பர் ஒன் நடிகையானார். போனி கபூரை மணந்தபிறகு நடிப்பதை நிறுத்திவிட்டார். 15 வருட இடைவெளிக்கு பிறகு 'இங்லிஷ் விங்லிஷ் படம் மூலம் சினிமாவில் ரீ என்டரி ஆகிறார். அவர் கூறியதாவது: 4 வயது முதலே நான் நடித்துக்கொண்டிருக்கிறேன். ஸ்டுடியோவை விட்டால் வீடு, வீட்டை விட்டால் ஸ்டுடியோ என்றுதான் வாழ்க்கை கழிந்தது. நடிப்புக்காக எனது வாழ்க்கையை அர்ப்பணித் திருந்தேன். மற்ற பெண்களைப் போல் திருமணத்துக்கு பிறகு குழந்தைகளுடன் வாழ்க்கையில் செட்டில் ஆக எண்ணினேன். அது நடந்தது. இல்லற வாழ்க்கை முற்றிலும் வித்தியாசமான அனுபவம். அதை ஒவ்வொரு நொடியும் அனுபவிக்க விரும்பினேன். என் மகள் ஜானவி, குஷி இருவரையும் பள்ளிக்கு அழைத்து சென்று விடும்போதும் அவர்கள் 'மம்மிÕ என்று என்னை அழைத்தபோதும் அடைந்த மகிழ்ச்சி அளவிட முடியாது. அந்த தருணத்தை இழக்க விரும்பவில்லை. அதனால் சின¤மாவிலிருந்து விலகியே இருந்தேன். கடவுள் பக்தி,

பிரார்த்தனைகளைதான் என் மகள்களுக்கு கற்பித்திருக்கிறேன். அந்த வழியில்தான் நான் வளர்க்கப்பட்டேன். பெரியவர்களுக்கு மரியாதை தர வேண்டும். அவர்கள் காலை தொட்டு வணங்க வேண்டும் என்று அறிவுரை சொல்லி இருக்கிறேன். 'ஜானவியை நடிகையாக்க விரும்புகிறீர்களா? என்கிறார்கள். ஒருபோதும் அப்படி எண்ணியதில்லை. நடிகையின் மகள் என்பதால் அவரும் நடிகையாவார் என்று எண்ணுகிறார்கள். இன்னும் ஒருபடி மேலே சென்று பிரபல நடிகர்களுடன் அவரது பெயரை இணைத்துபோட்டு ஜோடியாக நடிப்பதாக எழுதுகிறார்கள். அதையெல்லாம் பார்த்து சிரிப்பேன். சிறுவயது முதல் நடித்ததால் என்னால் படிப்பை தொடர முடியாமல் போனது. அந்த கல்வியை மகள்களுக்கு அளிக்க விரும்புகிறேன். ஜானவி ந¤ச்சயம் நடிக்க வரமாட்டார்.



 

ஹன்சிகாவுக்கு நான் சிபாரிசு செய்யவில்லை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தொடர்ச்சியாக என் படங்களில் நடிக்க ஹன்சிகாவுக்கு நான் சிபாரிசு செய்யவில்லை என்கிறார் சிம்பு. சிம்பு நடிக்கும் 'வேட்டை மன்னன்' படத்தை தொடர்ந்து 'வாலுÕ படத்திலும் ஹீரோயினாக நடிக்கிறார் ஹன்சிகா மோத்வானி. சிம்புவின் சிபாரிசால் மீண்டும் ஹன்சிகா தேர்வு செய்யப்பட்டார் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது. இது பற்றி சிம்பு கூறியதாவது: இப்போதெல்லாம் சந்தோஷமாக இருக்கிறீர்களே... யாரையாவது காதலிக்கிறீர்களா? என்கிறார்கள். நான் சந்தோஷமாக இருந்தால் மற்றவர்களுக்கு சங்கடமாக இருக்கிறதோ என்னவோ? இந்த உலகத்தில் எனக்காக ஒருத்தி பிறந்திருப்பாள். அவரை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. அவரை கண்டுபிடிக்கும்வரை எனது தேடல் தொடரும். இப்போதைக்கு நடிப்பு, நடிப்பு, நடிப்புதான். 'போடா போடிÕ படம், பெரும்பகுதி முடிந்துவிட்டது.

பாடல் மற்றும் சில விடுபட்ட காட்சிகள் படமாக்க வேண்டி உள்ளது. அடுத்து 'வாலு' படம் தொடங்குகிறது. சமீபத்தில் இப்படத்திற்காக ஹன்சிகா, சந்தானத்துடன் பங்கேற்ற போட்டோ ஷூட்டும், சிறிய டிரெய்லரும் தயாரானது. விரைவில் அது வெளியிடப்படும். 'வேட்டை மன்னன்Õ படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. வெளிநாட்டில் படமாக்க வேண்டிய நீண்ட ஷூட்டிங் பாக்கி இருக்கிறது. வாலு படத்தில் ஹன்சிகா மீண்டும் ஹீரோயினாக நடிக்க சிபாரிசு செய்தது ஏன் என்கிறார்கள். அவருக்கு நான் சிபாரிசு செய்யவில்லை. அதற்கு எனக்கு அவச¤யமில்லை. இயக்குனர்தான் ஹன்சிகாவை தேர்வு செய்தார். வாலு படம் காமெடி மற்றும் யூத்தை மையமாக வைத்து உருவாகிறது. இப்படத்திற்கு ஹன்சிகா பொருத்தமாக இருப்பார் என்று இயக்குனர் தீர்மானித்து தேர்வு செய்தார். இவ்வாறு சிம்பு கூறினார்.


 

பிரசன்னா , சினேகா தம்பதி கரூர் கோயிலில் நேர்த்தி கடன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நடிகை சினேகா , பிரசன்னா ஜோடி கரூர் தாந்தோணிமலை கோயிலில் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். நடிகை சினேகாவுக்கும் நடிகர் பிரசன்னாவுக்கும் கடந்த வாரம் சென்னையில் திருமணம் நடைபெற்றது. பிரசன்னாவுக்கு சொந்த ஊர் திருச்சி மாவட்டம் பொய்யாமணி. இவரது தாய் கரூர் மகாதானபுரத்தை சேர்ந்தவர். கரூர் தாந்தோணிமலையில் பிரசன்னாவின் உறவினர் வீடு உள்ளது. நேற்று பிற்பகல் பிரசன்னா , சினேகா தம்பதியினர் தாந்தோணிமலை வெங்கடரமண சுவாமி கோயிலுக்கு வந்தனர். அவர்களை அர்ச்சகர் கிருஷ்ணன், ரேவதி மற்றும் நண்பர்கள் வரவேற்றனர். பின்னர் தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சாமி கோயிலில் இருவரும் சாமி தரிசனம் செய்தனர். சிறிது நேரத்தில் இருவரும் காரில் புறப்பட்டு சென்றனர்.

பிரசன்னா, சினேகா வந்திருப்பது அப்பகுதியினருக்கு தெரிய வந்ததால், அவர்கள் இருந்த வீட்டுக்குமுன்பு நு£ற்றுக்கணக்கான ரசிகர்கள் கூடிவிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே பக்கவாட்டில் உள்ள வாசல் வழியாக இருவரும் காரில் ஏறி சென்று விட்டனர். பிரசன்னாவின் உறவினர்கள் கூறும்போது, திருமணம் முடிந்ததும் தம்பதியாக வந்து சாமி கும்பிடுவதாக பிரசன்னா வேண்டியிருந்தார். அந்த நேர்த்திக்கடனை நிறைவேற்ற வந்தனர் என்று தெரிவித்தனர்.


 

கோடையை கொண்டாடும் ஜெயா டிவியின் "சவால்"!

Jaya Tv Savaal Summer Special
கேம் ஷோ என்றாலே அது ஸ்டூடியோவுக்குள் மட்டும்தான் என்று இருந்த ட்ரெண்டை மாற்றி வெளியிடங்களிலும் வெற்றிகரமாக நடத்த முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர் பிருத்விராஜ். ஜெயா டிவியில் கடந்த 13 வருடங்களாக தொடர்ந்து ஒளிபரப்பாகி வரும் "சவால்'' நிகழ்ச்சி பலதரப்பட்ட மக்களை கவர்ந்துள்ளது.

கோடையை கொண்டாடும் விதமாக மே மாதம் முழுவதும் இந்நிகழ்ச்சி `வி.ஜி.பி. யுனிவர்சல் கிங்டம்' அரங்கில் நடைபெற்று வருகிறது.

நடிகர் பிருத்விராஜ் கலக்கலாக தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி, பல சவால்களை பலதரப்பட்டவர்களுக்கும் கொடுத்து வெற்றிவாகை சூடி வருகிறது. கோடை சிறப்பு நிகழ்ச்சியில் தமிழர்கள் மட்டுமின்றி அண்டை மாநில மக்களும் வெளிநாட்டினரும் சவாலை ஏற்க முன்வந்து வெற்றி பெற்றனர்.

சிறுவர் முதல் பெரிய வர் வரை அனைவரும் ஆர்வமாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பல்வேறு சாதனைகளை செய்தனர்.

இந்நிகழ்ச்சி வரும் ஞாயிறு தோறும் காலை 10 மணிக்கு ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிவருகிறது.
 

என்.டி.டி.வி- இந்து சேனல் தமிழகம் முழுவதும் ஒளிபரப்பு!

Ndtv Hindu Channel Telecast Dth
சென்னையில் மெட்ரோ சேனலாக ஒளிபரப்பாகிவந்த என்.டி.டிவி – இந்து தொலைக்காட்சி இனி தமிழ்நாடு முழுவதும் ஒளிபரப்பாகும் என்று அந்த தொலைக்காட்சியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

என்.டி.டி.வி. இந்து சேனல் இதுவரை சென்னையில் மட்டுமே ஒளிபரப்பாகி வந்தது. இப்போது அரசு கேபிள், எஸ்.சி.வி. கேபிள் மற்றும் டி.டி.எச். மூலமாக தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் என்.டி.டி.வி. இந்து சேனலை பார்க்கும் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இதுவரை ஆங்கிலத்தில் ஒளிபரப்பாகி வந்த இந்த சேனல், இப்போது தமிழிலும் செய்திகளையும், நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகிறது.

தமிழ் செய்திகள் காலை 7.30 மணிக்கு தொடங்கி, 8.30, 9.30, முற்பகல் 11 மணி, மதியம் 12 மணி, 1.30, பிற்பகல் 3 மணி, மாலை 6.30, இரவு 7.30, 8.30 ஆகிய நேரங்களில் ஒளிபரப்பாகின்றன. என்.டி.டி.வி இந்து தொலைக்காட்சியில் செய்தி தவிர பல சுவாரசிய நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகி வருகின்றன. அதில் `கோடம்பாக்கம் அக்கம்பக்கம்' நிகழ்ச்சி குறிப்பிடத்தக்க ஒன்று. இதில்

தமிழ்த்திரை உலகின் படவிழாக்கள், சிறப்பு நிகழ்வுகள் மற்றும் திரை பிரபலங்கள் பற்றி இந்த நிகழ்ச்சியில் ரசிக்கலாம். ரேவதி ஞானமுருகன் தொகுத்து வழங்குகிறார்.
 

சத்யம் டிவியில் காமெடி கலாட்டா : சேதி கேளு ரெட்டை வாலு

Sathyam Television S Sethi Kelu With Rettai Valu
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நையாண்டி கலந்த நிகழ்ச்சிகளுக்கு எப்போமுதுமே வரவேற்பு உண்டு. அந்த வகையில் தொலைக்காட்சியின் புதிய வரவான சத்யம் தொலைக்காட்சியில் தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் `சேதி கேளு வித் ரெட்ட வாலு' நையாண்டி நக்கள் கலந்த நிகழ்ச்சி நேயர்களிடையே வரவேற்பினை பெற்றுள்ளது.

தினசரி செய்திகள், செய்தியின் நடுவே இருக்கும் சூட்சுமங்களையும் செய்தியை உருவாக்கும் மனிதர்களின் சுவாரஸ்யங்களையும் உலகுக்கு கொண்டு வந்து, வயிறு குலுங்க வைக்கும் காமெடி கலாட்டா நிகழ்ச்சி இது. அதில் ஒரு குட்டி வெடி, குறும்பு ஜோடியின் கடி... என நிகழ்ச்சி முழுக்க குலுங்கிச் சிரிக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியை நடத்தும் தொகுப்பாளர்களின் உடல்மொழியும் நன்றாக பொருந்தி வருவது நிகழ்ச்சியின் வெற்றிக்கு ஒரு காரணமாக இருக்கிறது.

வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பதை நினைவுபடுத்தும் இந்த நிகழ்ச்சியை மறுஒளிபரப்பில் மறுநாள் காலை 11 மணிக்கும் காணலாம். கண்டு ரசித்து சிரியுங்களேன்.
 

துபாயில் நமீதா பங்கேற்கும் நம்பிக்கை ஸ்வரங்கள் 2012

Uts Nambikkai Swarangal 2012 Dubai May 24   
துபாய்: அமீரக தமிழ்ச் சங்கம் நடத்தும் நம்பிக்கை ஸ்வரங்கள் 2012 வரும் 24ம் தேதி துபாயில் நடக்கிறது.

அமீரகத் தமிழ் சங்கம் கடந்த 2010ல் இருந்து ஆண்டு தோறும் மாற்றுத்திறனாளிகளுக்காக நம்பிக்கை ஸ்வரங்கள் என்ற கலை நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி வரும் மே மாதம் 24ம் தேதி மாலை 7 மணிக்கு துபாயில் உள்ள இந்தியனை ஹை ஸ்கூலில் உள்ள ஷேக் ராஷித் அரங்கில் நடக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் கோலிவுட் நடிகை நமீதா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். மாற்றுத்திறனாளிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறுகிறது. மேலும் சூப்பர் சிங்கர்ஸ் அஜேஷ், சந்தோஷ், சத்ய பிரகாஷ், பூஜா, பிரசன்னா, பார்வையற்ற திருமதி சுசீலா ஆகியோர் இன்னிசை நிகழ்ச்சியும், மானாட மயிலாட கோகுல்நாத்தின் வெரைட்டி நிகழ்ச்சியும் நடக்கிறது.

நிகழ்ச்சிகளை இப்படிக்கு ரோஸ் தொகுத்து வழங்குகிறார்.

இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் வரும் 17,18 ஆகிய தேதிகள் வழங்கப்படும். நுழைவுச் சீட்டுக்கு http://www.uaetamilsangam.com/upcomingevent.asp என்ற இணையதளத்தில் சென்று பார்க்கவும்.
 

விஜய் டிவியில் 7சி இனி 7 மணிக்கு: 9 மணிக்கு நீங்களும் வெல்லலாம் ஒரு கோட

Star Vijay Tv Schedule Program Time Change
விஜய் டிவியின் நிகழ்ச்சிகள் இனி புதிய நேரங்களில் ஒளிபரப்பாக உள்ளன. 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிவந்த நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சி இனி 9 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று விஜய் டிவி நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வித்தியாசமான நிகழ்ச்சிகளையும், நெடுந்தொடர்களையும் ஒளிபரப்பி தொலைக்காட்சி நேயர்களிடையே தனக்கென தனி இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளது விஜய் டிவி.

விஜய் டிவியில் தற்போது ஆஹா, 7 சி போன்ற புதிய தொடர்கள் ஒளிபரப்பாகின்றன. இது ரசிகர்களிடையே அதிக வரவேற்பினை பெற்றுள்ளதால் பிரைம் டைமில் ஒளிபரப்பாக உள்ளது.

இன்று முதல் 6 மணிக்கு உறவுகள் தொடர்கதை, 6.30 மணிக்கு அவள், 7 மணிக்கு 7 சி, 7.30 மணிக்கு ஆஹா, 8 மணிக்கு கனா காணும் காலங்கள், 8.30 மணிக்கு சரவணன் மீனாட்சி, 9 மணிக்கு நீங்களும் வெல்லலாம் ஒருகோடி நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என விஜய் டிவி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

கடனில்லாத ஒரு வீடு.. கனவு காணும் 'இதயம் திரையரங்கம்'!

Idhayam Thiraiyarangam Movie Middle Class Dreamers
இதயம் திரையரங்கம்... இந்தப் பெயரில் ஒரு படம் வெளியாகவிருக்கிறது.

பெயரே வித்தியாசமாக இருக்கிறதல்லவா... ஏன் இந்தத் தலைப்பு? படத்தை இயக்கும் ராம்கி ராமகிருஷ்ணனிடமோ கேட்டோம்.

"மனிதனின் மனசே ஒரு தியேட்டர்தான். அதில் அவன் தன் கனவுகளை படமாகப் பார்க்கிறான். அப்படியொரு கனவைத்தான் இந்தக் கதையில் சொல்கிறேன்.

சென்னை போன்ற நகரங்களில் பெரும்பாலானோர் வாடகை வீடுகளில்தான் குடியிருக்கிறார்கள். அப்படிக் குடியிருப்போர், கடன் பெற்றோ, வேறு சொத்தை அடமானம் வைத்தோ தங்களுக்கென ஒரு வீட்டை வாங்குகிறார்கள்.

ஆனால், கடனே பெறாமல், சொந்த உழைப்பு - கையில் கிடைக்கும் பணத்தை மட்டும் வைத்து தனக்கென ஒரு சிறிய வீட்டை வாங்க முயற்சிக்கிறது ஒரு குடும்பம். அவர்களின் கனவை என் இதயத் திரையரங்கில் ஓடவிட்டேன். இப்போது படமாக்கிக் கொண்டிருக்கிறேன்.

ஒவ்வொரு நடுத்தரவாசியின் கனவையும் இந்த இதயம் திரையரங்கில் நீங்கள் பார்க்கலாம்.." என்றார்.

சோதிடத்தை நம்பி மோசம் போகும் நபர்களையும் இதில் ஹைலைட் செய்திருக்கிறாராம்.

எஸ் ஏ சந்திரசேகரன், ஏ வெங்கடேஷ் போன்ற இயக்குநர்களிடம் 20 படங்களுக்கு மேல் பணியாற்றியவர் ராம்கி ராமகிருஷ்ணன்.

ஹீரோவாக ஆனந்த் என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். மீராவுடன் கிருஷ்ணா, கம்பன் கழகம் படங்களில் நடித்த ஸ்வேதாதான் ஹீரோயின். இரண்டாவது நாயகியாக வேலன்டினா நடிக்கிறார் (விண்ணைத்தாண்டி வருவாயாவில் நடித்தவர்).

வில்லியாக வருபவர் கவிதா. இன்னொரு வில்லனாக கஜினி ராஜேஷ் நடிக்கிறார்.

என் ரவி ஒளிப்பதிவு செய்ய, மரியா மனோகர் இசையமைக்கிறார். எஸ் ஏ சந்திரசேகரன் மனைவி ஷோபா இதில் ஒரு நாட்டுப்புறப் பாடலைப் பாடியுள்ளாராம்.

இயக்குநர் சொல்வதைப் பார்த்தால் இந்தக் கனவு பலருக்கும் ஆறுதலாகத்தான் இருக்கும்!
 

ஆண் துணையை நம்பி வாழ வேண்டிய அவசியமில்லை - நயன்தாரா 'தெளிவு'

Nayanthara Vows Live Without Male Support   
இனி ஆணின் துணை அவசியம் என்ற நிலை இல்லை. பொருளாதார கஷ்டம் நீங்கிவிட்டது, என் தோற்றமும் புதுப் பொலிவுக்கு வந்துவிட்டது, சினிமாவில் புதிய உயரத்துக்குப் போவேன், என்று பேட்டி கொடுத்துள்ளார் நயன்தாரா.

முன்பெல்லாம் பத்திரிகையாளர்கள் என்றாலே ஒளிந்து கொள்ளும் நயன்தாரா, இப்போது கூப்பிட்டுப் பேட்டி கொடுக்கும் நிலைக்கு வந்துள்ளார்.

அப்படி அவர் கொடுத்த பேட்டியொன்றில், "சினிமாவுக்கு வந்தது என் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்வேன்.

சினிமாவுக்கு வராமல் போயிருந்தால் நான் இவ்வளவு சம்பாதித்திருக்கவோ, அதில் பல நல்ல காரியங்கள் செய்யவோ முடியாமல் போயிருக்கும்.

இப்போது ஒவ்வொரு நாளும் எனக்கு புதிய அனுபவமாய் உள்ளது. நானும் தவறுகள் செய்துவிட்டேன். தவறுகளிலிருந்துதானே பாடம் கற்கிறோம்.

நான் கற்ற பாடங்கள் என்னை மேம்பட்ட வாழ்க்கைக்கு தூண்டியுள்ளன.

முன்பெல்லாம் பெண்கள் சிறு விஷயங்களுக்கு கூட ஆண்களை சார்ந்தே இருந்தனர். அன்றாட தேவைகளை நிறைவேற்றுவதற்கு கூட வீட்டில் உள்ள ஆண்களையே நம்பி வாழ்ந்தார்கள்.

ஆனால் இப்போது அப்படி இல்லை பெண்கள் பொருளாதார சுதந்திரம் அடைந்துள்ளனர். ஆண்களை நம்பி வாழ வேண்டிய அவசியம் இல்லை. சொந்தமாக முடிவெடுக்க முடிகிறது. அந்த மாறுதல்களை என் சொந்த வாழ்க்கையிலேயே நான் உணர்ந்திருக்கிறேன்.

இப்போது சந்தோஷமாகவும் சுதந்திரமாகவும் உணர்கிறேன்," என்றார்.
 

எம்.எஸ்.விஸ்வநாதன் மனைவி மரணம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பிரபல சினிமா இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனின் மனைவி ஜானகி அம்மாள், சென்னையில் நேற்று மாலை நமரணம் அடைந்தார். அவருக்கு வயது 73. ஜானகி அம்மாள் சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்தார். வீட்டிலிருந்தே சிகிச்சைப் பெ கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவருடைய உடல்நிலை மிகவும் மோசமானது. உடனடியாக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மாலை 4 மணிக்கு அவர் மரணம் அடைந்தார்.


 

பிரித்விராஜ், பிரியாமணியுடன் நடித்த குழந்தை நட்சத்திரம் நேபாள் விமான விபத்தில் பலி

Paa Child Actor Taruni Sachdev Dies Nepal Plane Crash
காத்மாண்டு:  நேபாளில் நேற்று காலை நடந்த விமான விபத்தில் அமிதாபின் 'பா' படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் தருணி சச்தேவ் பலியானார்.

ரஸ்னா விளம்பரம் உள்பட 50 விளம்பரப் படங்களில் நடித்த குழந்தை நட்சத்திரம் தருணி சச்தேவ்(14). அமிதாப் பச்சன் நடித்த 'பா' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் தருணி பிரித்விராஜ் மற்றும் பிரியாமணியுடன் வெள்ளிநட்சத்திரம் மற்றும் சத்யம் ஆகிய மலையாளப் படங்களில் நடித்துள்ளார். இது தவிர ஷாருக்கானின் ரியாலிட்டி வினாடிவினா நிகழ்ச்சியிலும் தோன்றியுள்ளார். அவரும், அவரது தாயும் நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து பிரபல சுற்றுலாத்தளமான ஜோம்சோமுக்கு சிறிய ரக விமானத்தில் சென்றனர். அந்த விமானத்தில் 21 பேர் இருந்தனர்.

நேற்று காலை 9.45 மணிக்கு ஜோம்சோம் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது அந்த விமானம் விபத்துக்குள்ளானது. இதில் அதில் பயணம் செய்த 15 பேர் பலியாகினர். பலியானவர்களில் 13 பேர் இந்தியர்கள். இந்த கோர விபத்தில் தருணி மற்றும் அவரது தாயும் பலியாகினர்.

இந்த விபத்தில் விமானம் நொருங்கிப் போனது ஆனால் தீப்பிடிக்கவில்லை. விமானிகள் பிரபு ஷரண் பதக் மற்றும் ஜே.டி. மகாராஜன் ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இறந்தவர்களின் முகங்கள் படுமோசமாக சேதமைடந்துள்ளதால் அடையாளம் காண்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
 

தி நகர் வீட்டில் சினேகா - பிரசன்னா தனிக்குடித்தனம்!

Sneha Prasanna Start New Life New House
கடந்த வாரம் முழுக்க அமர்க்களப்பட்டு வந்த சினேகா - பிரசன்னா திருமண கொண்டாட்டங்கள் முடிவுக்கு வந்துவிட்டன.

ஏற்கெனவே இருவரும் முடிவு செய்தபடி, இப்போதைக்கு கொஞ்ச நாள் இருவரும் தனிக்குடித்தனம் இருக்கப் போகிறார்களாம். பின்னர் பிரசன்னா குடும்பத்தினருடன் சேர்ந்து வசிக்க திட்டமிட்டுள்ளார்களாம்.

ஹனிமூனுக்கு வெளிநாடு பறக்கும் திட்டம் இருந்தாலும், அது இப்போதைக்கில்லையாம். காரணம்?

ஏற்கெனவே சினேகாவும் பிரசன்னாவும் ஒப்புக் கொண்ட படங்கள். இந்தப் படங்களை முடித்துக் கொடுத்துவிட்டுத்தான் ஹனிமூன் செல்லவிருக்கிறார்களாம்.

இதில் ஜிஎன்ஆர் குமாரவேல் இயக்கும் ஹரிதாஸ் முக்கியமான படம். இந்தப் படத்தின் ஷூட்டிங் சென்னையில் விரைவில் தொடங்குகிறது. இதில் முடித்த பிறகுதான் தேனிலவுப் பயணத்தை வைத்துக் கொள்ளலாம் என சினேகா கூற, மறுபேச்சின்றி ஒப்புக் கொண்டாராம் பிரசன்னா!

கையில் உள்ள படங்களை முடித்துக் கொண்ட பிறகு, தொடர்ந்து நடிப்பதா வேண்டாமா என்பதையும் சினேகா முடிவுக்கே விட்டுவிட்டாராம் பிரசன்னா!
 

விஜய் படத்தில் முக்கிய வேடத்தில் சரத் குமார்!

Actor Sarath Signs Vijay S Multi Starrer Thuppakki
துப்பாக்கி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சுப்ரீம் ஸ்டார் சரத் குமார் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தில் தென்னிந்திய நடிகர் சங்க தலைவரும், நடிகருமான சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.

நடிகர் சரத் குமார் பல ஹீரோக்கள் நடிக்கும் படங்களில் நடித்து ஒரு புதிய டிரெண்டை உருவாக்கி வருகிறார். மலையாளம் சூப்பர் ஸ்டார் மம்மூட்டி நடித்த பழசி ராஜா, ராகவா லாரன்ஸின் காஞ்சனா, கன்னடா படமான மைனா, ரஜினிகாந்தின் கோச்சடையான் ஆகிய படங்களில் சரத்குமாரும் முக்கிய பங்கு வகிக்கிறார். இந்நிலையில் விஜயின் துப்பாக்கி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

துப்பாக்கி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சரத்குமாரை அணுகியபோது அவர் கதையைக் கேட்டு விட்டு சந்தோஷமாக ஒப்புக் கொண்டார் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

விஜய் கேட்டுக் கொண்டதால் துப்பாக்கி படத்தில் ஒரு சின்ன ரோலில் இயக்குனர் முருகதாஸ் நடிக்கிறார். அவர் நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
 

கரூரில் குலதெய்வ கோயிலில் பிரசன்னா - சினேகா

Sneha Prasanna Visit Karur Temple
தனிக்குடித்தனம் போகும் முன், கரூரில் உள்ள குலதெய்வம் கோயிலுக்குச் சென்றுள்ளனர் பிரசன்னாவும் சினேகாவும்.

கரூர் மாவட்டம் மகாதானபுரம் அருகே உள்ள பொய்யாமணி கிராமம்தான் பிரசன்னாவின் பூர்வீகம். இவரது தாய் வழி குலதெய்வ கோவிலான செல்லாண்டி அம்மன் கோவில் மாயனூரில் மதுக்கரை காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

நடிகர் பிரசன்னா குலதெய்வ கோவிலுக்கு அடிக்கடி வந்து செல்வாராம். முக்கிய காரியங்கள் செய்யும் முன் இங்கு வருவது அவர் வழக்கமாம்.

தற்போது திருமணம் முடிந்த கையோடு இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நடிகர் பிரசன்னா, தனது பெற்றோர், சகோதரர் மற்றும் மனைவி சினேகாவுடன் கோவிலுக்கு வந்தார்.

மிகுந்த பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்த அவர் பின்னர் கரூர் தாந்தோணிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலிலும் அவர்கள் தரிசனம் செய்தனர்.

அதன் பிறகு சென்னை திரும்பினர். அப்புறம்தான் தனிக்குடித்தனம் போனார்களாம்.

இதுகுறித்து பிரசன்னா கூறுகையில், "இந்தக் கோயிலுக்குப் போய் வந்தபிறகுதான் நான் எந்த விஷயத்தையும் தொடங்குவேன். அது ரொம்ப நாள் சென்டிமென்ட். இப்போதும் நானும் சினேகாவும் எங்கள் வாழ்க்கையை எங்கள் குல தெய்வ ஆசியுடன் தொடங்குகிறோம்," என்றார்.
 

புதிய தலைமுறையின் கொஞ்சம் சோறு…. கொஞ்சம் வரலாறு….

Koncham Soru Koncham Varalaru
எந்த ஒரு நிகழ்ச்சியுமே அதை சொல்லும் விதத்தில் பாதி வெற்றி பெறுகிறது. மக்களிடம் அது சென்று சேரும் விதத்தில் மீதி வெற்றியடைகிறது.

சமையல் நிகழ்ச்சிகள் பல விதம். தொலைக்காட்சியில் சமையல் கலை வல்லுநர் ஒரு உணவை செய்து காட்டி அதற்கான செயல்விளக்கத்தை அளிப்பார். ஆனால் உணவு பற்றிய புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கொஞ்சம் சோறு… கொஞ்சம் வரலாறு சற்றே வித்தியாசமான நிகழ்ச்சி.

அல்வாவோ, ஐஸ்கிரீமோ எதுவென்றாலும் அது உயிரோட்டமுள்ளதாக அதன் வரலாறோடு தொடர்புடையதாக இருக்கும். எந்த ஊரில் என்ன விசேஷமோ அங்கு நேரடியாக சென்று அந்த உணவின் சிறப்பு அதன் வரலாறு குறித்து பதிவு செய்து ஒளிபரப்புகின்றனர். அந்த உணவு எவ்விதம் இந்தியாவிற்கு வந்தது? பண்டைய காலத்தில் இருந்து மக்கள் அதனை எவ்வாறு ஏற்றுக்கொண்டார்கள் என்பது வரை விளக்கமளிக்கின்றனர்.

இன்றைக்கு ஊடகம் இருக்கிறது. அதனால் விளம்பரம் மூலம் எதையும் எளிதாக விற்றுவிடுகிறார். 20 வருடங்களுக்கு முன்பு வரை நூடுல்ஸ், பாஸ்தா, பீட்ஸா, பர்கர், ஓட்ஸ் என எதுவுமே தமிழ்நாட்டிற்குள் எட்டிப்பார்த்ததில்லை. இன்றைக்கு அனைத்து உணவுப்பொருளும் பட்டி தொட்டி எங்கும் கிடைக்க காரணம் தொலைக்காட்சி ஊடகங்களில் செய்யப்படும் விளம்பரம்தான். அந்த அளவிற்கு ஊடகங்களின் வருகையினால் ஒரு உணவு மக்களிடம் எளிதில் சென்று சேர்கிறது.

உணவுகளின் பழமை, வரலாற்றினை உணர்த்தும் இந்த நிகழ்ச்சியில் நான் பார்த்து ரசித்தது பல உண்டு. அதில் இறால் மீன் ஊறுகாய் செய்து காட்டிய விதம் நாவில் நீர் ஊறச் செய்தது. வாரம்தோறும் சனி இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு. இரவில் பார்க்கத் தவறியவர்களுக்காக இந்த நிகழ்ச்சி மறுநாள் காலை 8.30 மணிக்கு மறு ஒளிபரப்பாகிறது.
 

இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் மனைவி மரணம்

Ms Vishwananthan S Wife Janaki Passes Away
சென்னை: பிரபல சினிமா இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனின் மனைவி ஜானகி அம்மாள், சென்னையில் நேற்று மாலை நமரணம் அடைந்தார். அவருக்கு வயது 73.

ஜானகி அம்மாள் சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்தார். வீட்டிலிருந்தே சிகிச்சைப் பெ கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவருடைய உடல்நிலை மிகவும் மோசமானது. உடனடியாக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மாலை 4 மணிக்கு அவர் மரணம் அடைந்தார்.

அவருடைய உடல் தகனம் பெசன்ட்நகரில் உள்ள மின்சார மயானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு நடக்கிறது.

ஜானகி அம்மாள் உடலுக்கு தமிழ் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மரணம் அடைந்த ஜானகி அம்மாளுக்கு, கோபி, முரளி, பிரகாஷ், அரிதாஸ் ஆகிய 4 மகன்களும், லதா, மது, சாந்தி ஆகிய 3 மகள்களும் இருக்கிறார்கள்.
 

அஜீத் அடுத்த படம் - ஆர்யா- நயன் - டாப்ஸியுடன் இணைகிறார்: மே 31-ல் படப்பிடிப்பு!

Ajith S Next Movie Officially Announced
தன் அடுத்த படம் யாருக்கு என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் அஜீத்.

ஏ எம் ரத்னம் மேற்பார்வையில், ஸ்ரீசத்யசாய் மூவீஸ் சார்பில் ரகுராம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.

முதல் முறையாக இந்தப் படத்தில் அஜீத்துடன் இணைகிறார் ஆர்யா.

அஜீத்துக்கு ஜோடியாக நயன்தாராவும், ஆர்யாவுக்கு ஜோடியாக டாப்ஸியும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து இன்று வெளியிடப்பட்டுள்ள பத்திரிகைக் குறிப்பில், "வெற்றிப் பட கூட்டணியான அஜீத் - விஷ்ணுவர்தன்-யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இந்தப் படத்தில் கைகோர்த்துள்ளனர்.

கதை திரைக்கதையை விஷ்ணுவர்தனுடன் இணைந்து எழுதியுள்ளனர் எழுத்தாளர்கள் சுபா. பி எஸ் வினோத் ஒளிப்பதிவு செய்கிறார். சுபா வசனம் எழுதுகிறார்கள். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங்கை கவனிக்கிறார்.

முதல்கட்ட படப்பிடிப்பு வரும் மே 31-ம் தேதி மும்பையில் தொடங்குகிறது," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் படம் முடிந்த பிறகு, விஜயா நிறுவனத்தின் படம் தொடங்கும் எனத் தெரிகிறது.